குட்டையில் ஊறிய மட்டைகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2022
பார்வையிட்டோர்: 6,688 
 

தீவிரவாதிகளின் ஊடுருவலாலும், அவர்களின் சதித் திட்டங்களாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரத்த பூமியாக மாறி இருந்தது. ஒருபுறம் சதித் திட்டங்களை முறியடிக்க அரசு முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில், மற்றொருபுறம் எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்து வந்தன.

இந்தச் செய்தியை வெளியிடுவதை இந்திய ஊடகங்கள் ஒரு சடங்காகவே பின்பற்றி வந்தன. ஆனால் தமிழகத்தில் ஒரு அரசியல் பத்திரிகை மட்டும் எப்போதாவது இந்த செய்தியை வெளியிட்டது. பத்திரிகை விற்பனையும் குறைந்து போனதால் பத்திரிகைக்குச் சொந்தக்காரரான எதிர்க்கட்சித் தலைவர், ஜம்மு காஷமீர் செய்தியை இருட்ட்டிப்புச் செய்ய வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்து விட்டார்.

கட்சிப்பத்திரிகையும் ஒவ்வொரு நாளும் இந்தச் செய்தியை வெளியிடத் தொடங்கியது. ஒருநாள் காலை ஆறு மணிக்கு பத்திரிகை அலுவலகத்தின் போன் அலறிக் கொண்டிருந்தது. அப்போது ஒருவர் போனை எடுத்தார்

“ஹலோ அந்தப்பக்கம் யாரு….”

“…நான் உதவி ஆசிரியர் சார். நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா…?

“..பத்திரிகை முதலாளியையே தெரியலையா…”

“…அய்யா சொல்லுங்கய்யா…!

“…நம்ம பேப்பரை இன்னைக்குப் பாத்தியா…?’

“…கையிலதாயா இருக்கு…”

“…தலைப்புல என்ன போட்ருக்கீங்க? படிங்க கேட்கலாம்….”

“..ஜம்மு காஷமீரில்…..கு..க்கு.. குண்டி வெடித்து நூறு பேர் சாவு…”

“…ஏயா அவ்வளவு பெருசாவாயா இருந்துச்சு அது… எங்கய்யா எடிட்ரு பஷீரு..?”

“அவரு கிளம்பிட்டாருய்யா..”

“…வந்தா பேசச்சொல்லு.. என்று போன் அணைக்கப்பட்டது.

10 மணிவாக்கில் பஷீர் வந்ததும் தலைவர் லைளில் வந்தது பற்றி சொல்லப்பட்டது. உடனடியாக அவரது பி.ஏ நம்பருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தலைவரிடம் போனைக் கொடுத்ததும் “…என்னய்யா பஷீரு நியூசெல்லாம் பரபரப்பா போய்ட்டு இருக்குபோல…இன்னைக்கு காலைல காஷ்மீர் செய்தியைப் பாத்து திகைச்சுப் போய்ட்டேன்யா…இப்படிலாமா சதி பண்ணுவாங்க..”

“…ஆமாங்கய்யா தொடர்ந்து இது நடந்துட்டு வருதுய்யா… கொஞ்சம் பரபரப்பா இருக்கட்டுமேன்னு நாந்தான்யா அந்தச் செய்தியை எழுதுனேன்…”

“..அதுசரி இன்னைக்குப் பேப்பர் கையிலெ இருக்கா..”

“…இருக்கியா..” என்று தனது டேபிளில் மடித்து வைக்கப்பட்ட பேப்பரை எடுத்துப்பார்த்தார், எழுதியவருக்கே அதிர்ச்சி தாங்க முடியவில்லை…

“…ஏன்யா இப்படிலாமா சதி பண்றாங்க… குண்டி வெடிச்சு நூறு பேர் செத்துருக்காங்கண்ணா அவ்வளவு பெருசாவாயா இருந்துச்சு…எனக்கே நம்ப முடியலேயா… நீ வேற எழுதுனேனு சொன்னியா… இன்னும் அந்த சோகத்தை ஜீரணிக்க முடியலேயா…”

“…சரி எதுல பாத்து நியூசு எழுதுனே…”

“…அய்யா பிடிஐ டேக்கைப் பாத்துத்தாயா எழுதுனே. அதுலெ கரெக்டா இருக்குயா…ஏதோ பிரிண்டிங்ல தப்பாயிடுச்சு போலயா…”

“..தப்புனா ஒண்ணு சப் எடிட்டர சொல்வீங்க… இல்லேனா பிரிண்டிங் மிஷினா…? ஏதோ நடத்துங்க…..”

இந்த செய்தி விவகாரம் எல்லோருக்கும் தெரிந்து விட்டதால் அவமானத்தால் குறுகிப் போனார் எடிட்டர்.அன்று அலுவலகத்தில் இருந்து சென்றவர் சென்றவராகவே தங்கி விட்டார்போல. நாட்கள் மட்டும் எல்லோருக்கும் பொதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு கலைச் செல்வம் என்ற நபர் எடிட்டராகப் பொறுப்பேற்றார்
இங்கிலீஸ் டிரான்ஸ்லேசனில் தன்னை மிஞ்ச எவனும் இல்லை என்கிற அளவுக்கு ஒரே பீத்தாக பீத்திக் கொண்டிருந்தார்.

இதனால் கொஞ்ச நாட்களுக்கு சப் எடிட்டர்சிடம் பீதி நிலவியது என்னவோ உண்மைதான்.இந்த சமயத்தில் ஒருநாள் ஆங்கிய டெலிவிஷன் ஒன்றில் crores ofmoney smuggled by hawala rocket என்று பிரேக்கிங் நியூஸ் போய்க் கொண்டிருந்தது.

பலகோடி ருபாய் பணம் ஹவாலா ராக்கெட் மூலம் கடத்தல். காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை என்று செய்தி பிரிண்டாகி கொண்டிருந்தது.

நிர்வாகத்தில் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. இங்கிலிபீஸ் எடிட்டருக்கு ஆட்டம் கண்டு விட்டது. அப்போதுதானு சப் எடிட்டர்ஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். எடிட்டர்ஸே இப்படி நியூஸ் அடிக்கும்போது நாம் அடித்தால் என்ன என்ற தைரியம்தான். அப்போதும்கூட அரசியல்வாதிகள் இந்த செய்திகளை மேற்கோள் காட்டித்தான் எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட தகவல்கள் அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படும்போது எடிட்டர்ஸ் அப்படி இருந்தால் என்ன என்ற பேச்சு வேறு.

“…..இருக்காதோ பின்னே….”

Print Friendly, PDF & Email

1 thought on “குட்டையில் ஊறிய மட்டைகள்

  1. நான் இதுபற்றி கேள்விப்பட்டதுண்டு.ஆனால் தினந்தோறும் பத்திரிகை படிக்கும் பழக்கம் உள்ளவன் என்பதால் நான் நம்பவில்லை. சிறுகதைத் தளத்தில் யதார்த்தமாக இந்தக் கதையை படித்த பின்னர் நம்புகிறேன். நல்ல கதை. அந்த சம்பவத்தின் நடந்த உரையாடல்கள் என்னை நம்ப வைத்து விட்டது. இதுபோன்ற கதைகளை கேட்டு வெளியிடுங்கள்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *