ஊட்டி டூர்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 2,681 
 
 

போலீஸ் மாப்பிள்ளை- யா வேனவே வேனாம், பேர பாருங்க சக்தி. சுத்தமா பிடிக்கல.

இப்ப யாரூ உங்கள மாப்பிள பாக்க சொன்னது. போனை கட் செய்து விட்டு காலேஜ் கேன்டினில் கோபத்தோடு இருந்தாள் மீனா.

“ஹய் டி மீனு, என்ன வந்து ரொம்ப நேரம் ஆச்சா?”

“வாங்கடி, எவ்ளோ நேரம் வெயிட் பன்னீட்டு இருக்கேன்” ஜோசி, ரியா-வை முறைத்தாள்.

“சரி டி விடு, இப்போ நம்ம பிளான் என்னாச்சு? முதல பையன் கிட்ட பேசி பொண்ணு பாக்க வர வேனானு சொல்லனும்”. மீனா கால் செய்தாள்.

காலை எடுக்காததால் வாய்ஸ் ரெக்கார்டு அனுப்பினாள். “மீனா பேசரேன், நீங்க என்ன பொண்ணு பாக்க வரதா சொன்னாங்க, எனக்கு இப்போ கல்யாணத்துல விருப்பம் இல்ல, உங்களுக்கு எல்லாம் புரியுனு நினைக்கிறேன். ரொம்ப சொல்ல வேனா நினைக்கிறேன்” என்றாள்.

அவள் பேசி முடித்த அந்த நிமிடமே மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அதை அடுத்து பேச தொடங்கினாள் ரியா.

“இந்த ஊசி, மாத்ர, டிரிட்மன்ட் இது எல்லாம் என் மண்டைக்குள்ள சுத்தீட்டே இருக்கு, முதல நம்ம பிளான் படி எல்லாம் நடக்கனும்” மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.

அதற்க்கு ஜோசி தலையாட்டிக்கொண்டே “ஆமாம் மெடிக்கல் காலேஜ் வந்ததில இருந்து ஜெயில் வாழ்க்கடா சாமி” என்று சலித்துக் கொண்டாள்.

“அப்போ ஒரு வாரம் நம்ம கையிலனு சொல்லு” என்று கேட்ட ரியாவிடம், அது அப்றம் பாத்துக்கலாம், இப்போ சிக்ரம் கிளம்பலாம் என்று நக்கலாக பதில் சொல்லி எழுந்து போனால்…” அம்மா சரியாவே கேக்கலமா, சொல்லு, இங்க பாரும்மா கேம்ப் ஒன் பிசியா இருந்தா கால் பண்ண முடியாது. அப்பா ட சொல்லு நானே கூப்படறேன், சரி மா.

“என்னடி ஜோசி பொய் சொல்லும்போது உன் முகத்துல வர சந்தோசம் இருக்கே, உன்னால மட்டும் தான் டீ முடியும்” என்ற மீனாவிடம் “ஆமா, நீ என்ன டி சொன்ன? நாங்களா யாரு, நான் சொன்னா வீட்ல மறு வார்த்த இல்ல தெரியும் ல ?.

ஓ.. தெரியுமே, நீ வீட்ல சொல்லாம டேரக்டா மாப்ளைக்கு பேசும் போதே”.

நக்கலாக பதில் சொன்னாள் ஜோசி. பேசிக்கொண்டே மேலே பார்த்தனர்.

சோகமாக இறங்கி வந்தாள் ரியா. “என்னடி என்னாச்சு?” என்று கேட்ட மீனாவிடம் “இல்லடி வீட்ல பொய் சொல்லிடனா அதா” மீனாவும் ஜோசி-யும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “உன்ன பத்தி தெரியாதவங்க கிட்ட போய் சொல்லு, அது எப்டி டி பிளான் பண்ணது நீதா, ஆனா இவ்ளோ நல்லவளா நடிக்கறயே”.

“இவளோட சீன் லா கேட்ட தாண்ட வரைக்கும் தான், நீ முதல சங்கர் அண்ணா – வ கூப்டு டி” என்றாள் மீனா.

இதோ அவங்கள தான் கூப்படறேன் ரியா பதிலளித்தாள் ஜோசி.

“ஹலோ, அண்ணா எங்க இருக்கீங்க? பத்து நிமிஷம் ஆகுமா, சரி அண்ணா வாங்க, அப்றோ ஹாஸ்டல் பக்கத்துல வேணாம், கொஞ்சம் தள்ளி நில்லுங்க வரோம்” மெதுவாக பேசி முடித்தாள் ஜோசி.

மூவரும் பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்தனர். அப்போது அங்கே ஒரு கார் வந்தது.

அக்கம் பக்கம் பார்த்து விட்டு காரீல் ஏறினர். “என்னம்மா எப்டி இருக்கீங்க ? பேச தொடங்கினார் டிரைவர்.” கேம்ப் எந்தன நாளுமா? ஏன் ஒரு வாரம் ? சாப்பாடு லா எப்டி?

கேள்வியை அடுக்கிக் கொண்டே போனார். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்…

என்னம்மா ஒன்னு பேசாம வரிங்க. ஜோசி மெதுவான குரலில் ஆரம்பித்தாள், “அண்ணா அது வந்து என்னனா… நாங்க ஊட்டீல கேம்ப் எதுவும் இல்லணா” இதை கேட்டவுடன் டிரைவர் அண்ணா வண்டியை நிறுத்தினார்.

“என்னம்மா சொல்றீங்க?” ஆமா அண்ணா ஜோசி சொல்றது உண்ம தான்.

“அப்றோ எதுக்குமா மீனா போறீங்க ?. அது ஒரு பெரிய கதைணா, ரியா ஆரம்பித்தாள்.”

நான் சொல்லலடி ஜோசி, எல்லாம் ஹாஸ்டல தாண்ட வரைக்கும் தான், ஆரம்பிச்சிட்டா பாத்தியா “ஜொசியும் மீனாவும் ரியா வை பேசி கேலி செய்தனர், அதைப் பார்த்தும் பார்க்காமல் பேசி கொண்டிருந்தாள் ரியா.”

அண்ணா பெண்களுக்கு சுதந்திரம் எப்பவோ கிடச்சிசுனு சொல்றாங்க. ஆனா எங்கள மாதிரி பொண்ணுகளுக்கு இன்னும் கிடைக்கலலேன்தா சொல்லனும்.

நீங்களே சொல்லுங்க, ஸ்கூல் படிச்ச வரைக்கு எப்போடா காலேஜ் போனும் இருந்தது. வீட்ல எல்லார்க்கும் கனவு இருக்கும்ல, அடுச்சு புடிச்சு மெடிக்கல் காலேஜ் வந்தாச்சு, வந்ததுக்கு அப்றோ தெரியுது, ஸ்கூல கூட அவ்ளோ என்சாய் பண்ணோம்.

ஜெயில் வாழ்க்க அண்ணா. நா மட்டும் தான் அப்டி நெனக்கிறனு பாத்த, இவங்க ரெண்டு பேரும் அப்டியே என்ன மாதிரி.

இல்ல இல்ல நாங்க மூனு பேருமே ஒரே மாதிரி தான். “இருடி”.

கிடைத்த கேப்பில் பேச தொடங்கினால் மீனா. வீ டூ, ஹாஸ்டல், காலேஜ் இப்டியே ஓடிருச்சுணா. அப்றோ தான் நாங்க முடிவு பண்ணோம்.

இனிமேல் பன்ற சின்ன சின்ன விஷயத்த கூட சந்ஷோசமா நமக்கு பிடிச்ச மாதிரி இருக்கனும் நெனச்சோம். அப்போதா இப்டி ஒரு ஐடியா தோனிச்சு, அதான் சரியான நேரம் பாத்து கிளம்பியாச்சு.

“நல்ல பொண்ணுங்கமா!”.

சிரித்துக் கொண்டே காரை நிறுத்தினார் டிரைவர். என்னாச்சு அண்ணா ? இல்லமா ரியா ரொம்ப நேரம் ஆச்சு, இனி நம்ம போகும்போது இருட்டீடும். இங்க காபி, டீ எதாச்சி சாப்பிடலாம்.

சரிங்க அண்ணா.. “அப்போ மூனு டீ மட்டும் சொல்லுங்க”. நீங்க டீ குடிங்க, நான் இப்போ வரே மா.

சிறிது நிமிடத்திற்கு பிறகு “கிளம்பலாம்மா”.

சமயம் இரவு நேரத்தை நெருங்கியது.

காரை எடுத்தவடன் ரியா பேச தொடங்கினாள், “ஆமா அண்ணா உங்க சொந்த ஊரூ கூட மேட்டுபாளையம் தானே?”.

ஆமா-மா, ஆனா பொள்ளாச்சி வந்து பத்து வருஷம் ஆச்சு, எப்போவாது இங்க வருவேன்.” ம்ம்… “என்ன இங்க பஸ் எல்லாம் ஸ்டாப் பண்ணி வச்சிருக்காங்க”.

“பஸ் மட்டும் இல்லமா, எல்லா வண்டியும் இருக்கே. இருங்க, என்னனு போய் பாத்துட்டு வரேன்”. மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“எப்படி போவோம், தூக்கமா வருது, ஆமா பிரியாக்கு கால் பண்ணி சொல்லியாச்சா ? ஓ…அப்பவே சொல்லிடேன். நம்ம ரீச் ஆனதும் கூப்டலாம்”.

அம்மா…அம்மா….குரல் கேட்டதும் திரும்பி பார்த்தனர்.

மீனா கேட்டால் “யாருக்கா நீங்க ? என்ன வேனும் ?. எங்க ஊர் ஊட்டி பக்கத்துலமா, வேலைக்காக வந்தேன். நா வந்த வண்டி தான் விபத்தாயிருச்சு. கையில காசு கூட இல்ல… நீங்க பணம்-லா ஒன்னு கூடுக்க வேணாம், என்ன போற வழிய விட்ரீங்களா ?”.

மூன்று பேரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர். “பாக்கவே ரொம்ப பாவமா இருக்குடி, பேசாம கூட்டீட்டு போலாமா?”.

ரியா பேசுவதை கேட்டு, கோவமாக சொன்னாள் ஜோசி… “யாருனு தெரியாம எப்டி டீ கூப்பிட்டு போக முடியும் ?.’

ஆமா ஜோசி ரியா சொல்லற மாதிரி பாவம் போல இருக்கு.. இருக்கட்டும் டி”.

என்னம்மா யாரு இவங்க?.

டிரைவர் அண்ணா வந்தார். “டிராபிக் கிளியர் பண்ண ரொம்ப நேரம் ஆகும்னு தோனுது”.

“அய்யோ..! சரி அண்ணா வெயிட் பண்ணுவோம். அப்றோ இவங்க வேலைக்கு வந்தாங்களாம், போக முடியாம மாட்டி கிட்டாங்க.. உதவி கேட்டாங்க, அதா அண்ணா அவங்க போர வழியில எங்க போகனும்-னு கேட்டு விட்ரலாம்”.

ஜோசியும் சம்மதித்தாள். “உள்ள போய் உக்காரு-மா”.

அந்த பெண்ணும் உள்ளே போனாள். இரண்டு மணி நேரத்தை கடந்தது, அனைவரும் கலைப்பாக இருந்தனர். முன்னாள் இருக்கும் வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கின. டிரைவர் அண்ணாவும் காரை நகர்த்தினார்.

“இப்டி போயிட்டு இருந்தா, நம்ம போயி சேர ரொம்ப நேரம் ஆகிடும். அன் டைம்-ல அவங்க வீட்டுக்கு போனா நல்லாவா இருக்கும் ?. திருப்பி நான் எப்டி கிளம்பறது?”.

அண்ணா பேசாம போற வழில ஏதாது ஹோட்டல் இருந்தா

ஸ்டே பண்ணீட்டு காலைலே போலாமா?.

சும்மா இரு மீனா, அதல்லாம் ஒன்னு வேனா, நம்ம அங்கேயே போகல அண்ணா.

ஜோசி பதட்டமாக சொன்னாள்.

“எப்வுமே இவ இப்டி தா”.

ரியா முனு முனுத்தாள். பாத்துக்கலாம் என்று கூறி விட்டு, தொடர்ந்து வண்டி ஓட்டினார்.

ஜோசி அருகில் இருந்த பெண்ணை பார்த்து “அக்கா உங்க பெயர் என்ன ?” என்றாள்.

“ஏய் சும்மா இருடி, அவங்களே ரொம்ம டயர்டா இருக்காங்க” மீனா சொன்னதர்க்கு ரியாவும் தலையாட்டீனாள்.

சிறிது நேரத்திற்க்கு பிறகு, “மணி 12 ஆக போது, இந்த டிராபிக்-ல மேல போறதும் கொஞ்சம் கஷ்டம் தானு நினைக்கறேன்.”

அண்ணா அப்போ பக்கத்துல ஹோட்டல் இருந்தா பாக்கலாமா ?. என்று கேட்ட ஜோசியை பார்த்து, மீனா சொன்னாள். இது தானே முன்னாடியே சொன்னோம்.

அக்கா நீங்க எங்க இறங்கனும் ?.

“நான் இன்னும் ரொம்ப தூரம் போனுமே”. “பேசாம நீங்களும் எங்க கூட தங்கீட்டு, காலையில போலாமா?” என்று கேட்ட மீனாவின் முகத்தை பார்த்தாள் ஜோசி.

“இல்லடி நமக்கும் துணையா இருப்பாங்கல…’

29

காரை நிறுத்தினார் டிரைவர். “இந்த ஹோட்டல் எனக்கு நல்லா தெரியும், நானும் இங்க தான் வருவேன். ரூம் இருக்கானு கேட்டு பாக்கலாமா?”

இருங்க அண்ணா, நாங்களும் வரோம். எல்லாரும் இறங்கி ஹோட்டலுக்கு உள்ளே சென்றனர்.

“மேனேஜர் சார் இல்லையா தம்பி ?”.

10 ||

ஊட்டி டூர் – சிறுகதை

“அவங்க இப்போ தான் வீட்டுக்கு போனாங்க. சொல்லுங்க?”.

“ரூம் இருக்கா ?”.

கொஞ்சம் உக்காருங்க இப்போ வரேன்.

“நம்ம கூட வந்த அக்கா எங்க ?. இருங்க நான் பாத்துட்டு வரேன்”.

மீனா போனாள்.

வெளியே நின்று போனில் பேசிக் கோண்டிருந்த அந்த பெண்ணிடம், “அக்கா உள்ள வாங்க”.

மீனா அழைத்தாள்.

உடனே அந்த பெண் போனை கட் செய்து விட்டு, உள்ளே சென்றாள். “சார் மேல ரூம் இருக்கு, ஆனா கேமரா வோர்க் காலையில சீக்கரமா பாக்க சொல்றேன்”.

ஆகல,

“பரவாயில்ல தம்பி, நாங்க காலையில சீக்கரமாவே கிளம்பிடுவோம், ரெண்டு ரூமா குடுங்க”. டிரைவர் கூறினார்.

“அப்போ வாங்க சார், ரூம் போகலாம்”.

முதலாவதாக இருந்த ரூமில் டிரைவர் நுழைந்தார். அதற்க்கு அடுத்த ரூமில் நான்கு பேரும் சென்றனர். மிகவும் களைப்பாக இருந்ததால், படுக்க தயாராகினர். அவர்களுடன் வந்த பெண் வெளியே நின்று கொண்டிருந்தாள்.

“அக்கா நீங்க தூங்கலயா?”. என்று ஜோசி கேட்டதும், அந்த பெண் உள்ளே வந்து படுக்கத் தொடங்கினாள்.

தூங்கி முடித்த சில மணி நேரத்திற்க்கு பிறகு தண்ணீர் குடிப்பதற்க்காக எழுந்தாள் ரியா. தண்ணீர் குடித்து விட்டு கடிகாரத்தை பார்த்தாள், நான்கு மணி ஆனது. மீண்டும் உறங்குவதற்க்கு தயாரானாள்.

சில நிமிடத்தில் மீனாவின் போன் அடித்தது. “இந்த நேரத்தில யாரு கால் பண்றது? இவ வேற நல்லா தூக்கத்தில இருக்கா, சரி பாக்கலாம்”.

எழுந்து போனை எடுத்தாள் ரியா.

“டிரைவர் அண்ணாவா? இப்போ எதுக்கு கால் பண்றாங்க?” ஷலோ… ஷலோ… கேக்குதாமா?.

“கேக்குது அண்ணா, சொல்லுங்க? என்னாச்சு? ஏன் இப்டி பேசரீங்க ?.”

“ஆமா… என்ன யாரோ கொல பண்ண வராங்க, நான் தப்பிச்சு வந்து ஹோட்டலுக்கு கீழதான் இருக்கேன்.

என்னோட…

‘அண்ணா…அண்ணா…என்னாச்சு? ஜோசி, மீனா சீக்கரம் வாங்க டீ”.

உறக்கத்தில் இருந்த இருவரும் பதறிப்போய் எழுந்தனர். ரியா நடந்ததை கூறினாள்.

“வாங்க கீழ போகலாம்”.

வேகமாக எழுந்தனர். “நம்ம கூட இருந்த அக்காவ காணோம்?’

இப்போ அத பாக்க நேரமில்ல, வாங்க கீழ போய் பாக்கலாம்.

மீனா சொல்லிக் கொண்டே கீழ இறங்க, இருவரும் பின்னால் ஓடினார். வெளியே சென்று பார்த்தபோது அந்த இடத்தில் யாரையும் காணவில்லை.

மூன்றுபேரும் ஹோட்டலை சுற்றி தேடிக்கொண்டிருந்தனர். கால் பண்ணி பார்த்தும் கிடைக்கவில்லை.

மூன்றுபேரும் ஹோட்டல் முன்பு வந்தனர்.

“பேசாமா போலிஸ்கு கால் பண்ணலாம்”. சொல்லிக்

கொண்டே ஜோசி போனை எடுத்தால்.

“ஏய் அங்க பாருங்க, கார் அங்கதான் இருக்கு”.

மூன்று பேரும் காரை நோக்கி ஓடினர். அதற்க்குள் அங்கிருந்த கார் நகர்ந்தது. மூன்று பேரும் காரில் பின்னால் ஓடினர்.

அவர்களால் தொடர்ந்து ஓட முடியவில்லை.

சில மணி நிமிடத்திற்க்கு பின் ஹோட்டலுக்கு நடந்து வந்தனர். ஹோட்டல் முன்பு போலீஸ் நின்றுகொண்டிருப்பதை பார்த்தனர்.

வெளியே நின்றுகொண்டு அந்த ஹோட்டலில் வேலை பார்த்த பையனிடம் விசாரித்தனர். அதற்க்கு அவன் முதல் மாடியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்ததாகவும், ரூமில் தங்கி இருப்வர்களைப் பற்றி போலீஸ் விசாரித்து கொண்டிருப்பதாகவும் கூறினான்.

அதை கேட்டதும் மூன்று பேரூம் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடத்தை விட்டு சிறிது தூரம் நகர்ந்து சென்றனர்.

“என்னடி இப்டி ஆச்சி? டிரைவர் அண்ணாவ கொல பண்ணீடாங்க”.

மீனா அழுது கொண்டே இருந்தாள்.

‘அவரு நம்மள் தான் தேடி வந்திருக்காரு. அப்போ கார்ல போனது யாரு ? என்ன நடந்ததுனு ஒன்னு புரியல”. ரியா புலம்பினாள்.

“இப்போ என்னடி பண்றது ? பேசாமா போலீஸ் கிட்ட போய் நடந்தத சொல்லிறலாமா?.

மீனா கேட்டதற்க்கு பதில் சொல்லாமால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

“இல்ல நம்ம இப்போ போய் என்ன சொன்னாலும் அவங்க கேக்கமாட்டாங்க. விசாரனைக்காக நம்மல ஸ்டேசன் கூப்டூ போவாங்க. அது இல்லாம இங்க மீடியா இருக்கு. பேப்பர்ல போட்டாங்கனா அவ்ளோ தான்”.

ஜோசி பேசிக்கொண்டே போனாள். “அப்டீனா நம்ம அங்க போக வேண்டாம்”.

மீனா சொன்னதை அடுத்து ரியா கேட்டாள் “அங்க போகாம நம்ம பேக்லா எப்டி எடுக்கறது. பேசாம அந்த பையன் கிட்ட கெல்ப் கேக்கலாமா?.”

“அப்டியே செய்யாலாம்”.

ரியா தூரத்தில் இருந்து கொண்டே சைகையால் அவனை அழைத்தாள். அவனும் வந்தான்.

ரியா தயக்கத்தோடு அவனிடம் பேச தொடங்கினாள்.

“தம்பி இத பத்தி உனக்கு எதாது தெரியுமா ? போலீஸ் என்ன சொல்லறாங்க ?” தெரியல அக்கா, நான் லீவு முடிஞ்சு இன்னைக்கு தான் வேலைக்கு வந்தேன்.

எதோ நேத்து இருந்து ஹோட்டல எந்த கேமராவுமே வோர்க் ஆகலயாம். ஆதா என்ன காரணம் ? யாரேல்லாம் வந்தாங்கனு கேட்டுட்டு இருக்காங்க.

“அது வந்து…நாங்களும் இதே ஹோட்டல தான் தங்கி இருக்கோம்”.

“என்ன சொல்றீங்க?”

“ஆமா”.

“அப்பறோம் ஏன் இங்க இருக்கீங்க?”.

இப்போ அங்க வர முடியாது, அது இல்லாம நிறய பேர் அங்க இருக்காங்க,ப ாக்கவே பயமா இருக்கு அதான். எங்களுக்கு ஒரு உதவி மட்டும் பண்றீயா?.

“நீங்க சொல்லறத பாத்தா நம்மலாமா? வேண்டாமானு இருக்கு. ஆனா உங்கள பாத்தா பாவமா இருக்கு. சொல்லுங்க என்ன பண்ண?”.

“ஒன்னு இல்ல எங்க பேக் எல்லாம் ரூம்ல இருக்கு, அத மட்டும் கொஞ்சம் எடுத்து குடுக்குறீயா?”.

“இப்போ போலீஸ் இருக்காங்க, எப்டி முடியும்?”. நாங்க ஹோட்டலுக்கு பின்னாடி வந்து நிக்கறோம். நீ அந்த வழி கொண்டு வரியா ?

‘அது ரொம்ப கஷ்டம் ஆச்சே. உங்க ரூம் காலி பண்ணல சொல்றீங்க?. சரி நீங்க பணம் குடுங்க, நானே டைம் போட்டு குளோஸ் பண்ணிகரேன். ஆனா மேனேஜர் உள்ள. இருந்தா, என்னால ஒன்னு பண்ண முடியாது”.

“ரொம்ப தாங்ஸ்டா”.

வேக வேகமாக பணத்தை கொடுத்து விட்டு, பின்னால் இருந்த வழியில் சென்றனர். அரைமணி நேரம் முடிந்தது.

மூன்று பேரும் பயத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

சொன்னதைப் போலவே எல்லாம் முடித்து விட்டு, அவன் பின்னால் வந்தான்.

“இந்தாங்க, சீக்கரம் போங்க”.

“மீனா அதை வாங்கி கொண்டு” பணத்தை எடுத்து நீட்டினாள்.

“இதலாம் ஒன்னு வேணாம், என்ன மாட்டிவிடாம இருந்தா

போதும்”.

நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து வேகமாக நடந்து, ஒரு ஆட்டோவில் ஏறினர்.

என்னடி இப்டி ஆச்சு, நம்மல எதும் பண்ண மாட்டாங்கள ?”.

மீனா கேட்டதும்….

“அதலாம் ஒன்னு இல்ல, நீ சும்மா இரு”. மீனாவை கோபத்துடன் பார்த்த ரியா “இப்போ நம்ம பிரியா வீட்டுக்கு போகலாம். அப்றோம் போய் பேசிக்கலாம்”.

சிறிது நேரத்தில் பிரியா வீட்டீற்க்குச் சென்றனர். வீட்டிற்க்குள் சென்றனர்.

“யாருமா நீங்க ?. பிரியாவின் அத்தை கேட்க” நாங்க பிரியாவோட… “வாங்க வாங்க, நேத்து வருவீங்கனு சொன்னா, சரி உட்காருங்க, பிரியா வெளிய போய்ருக்கா, இப்போ வந்துருவா. நான் குடிக்க எதாது கொண்டு வரேன்”.

மூன்று பேரும் அங்கிருந்த ஷோபவில் அமர்ந்தனர்.

பக்கத்தில் இருந்த நீயுஸ் பேப்பரை எடுத்து படிக்கத் தொடங்கினாள் ரியா.

பார்த்தவுடன் படிக்காமலே மீனாவிடம் நீட்டினாள். அவளும் பார்த்துவிட்டு அதை ரியாவிடம் நீட்டினாள்.

தங்களுடன் காரீல் வந்து, ஹோட்டலில் தங்கிய பெண் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும், அவர் ஒரு பெண் காவலர் என்பதும் தெரியவந்தது.

அதை படித்த அவர்கள் குழப்பத்தில் இருந்தனர். பிரியாவின் அத்தை காபியுடன் வந்து அவர்களை தேடினார். அப்போது அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

அருகில் இருந்த பூங்கா ஒன்றில் அமர்ந்தனர்.

“நம்ம கூட எதுக்கு போலீஸ் வரனும் ? என்னமோ நடக்குது ஆனா ஒன்னு புரியல. இப்போ நம்ம போய் அந்த அந்த அக்காவ பாத்தாதான் என்ன நடந்ததுனு தெரியும்”.

”என்ன ஜோசி சொல்ற? அவங்க ஒரு போலீஸ். அதுவும் நம்ம ஹாஸ்பிட்டல் போய் எப்டி பாக்க முடியும்?”. மீனா கவலையுடன் பேசினாள்.

“இவ்லோ நடந்திருக்கு, ஆனா நம்ம மேல யாருக்கும் டவுட் வரல? என்ன ஆனாலும் பரவாயில்ல, கண்டிப்பா நம்ம இத பத்தி தெரிஞ்சிக்கனும்”.

ரியா பேசியதை கேட்டு, மருத்துவமணைக்குச் செல்ல முடிவு செய்தனர். அப்போதே மருத்துவணை சென்றனர்.

நேராக பெண் போலீஸ் தங்கியிருக்கும் ரூமின் அருகில் சென்றனர்.

ரியா வெளியே நின்றாள். ஜோசியும் மீனாவும் உள்ளே சென்றனர்.

அந்த பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அப்போது ரியா கதவை தட்டினாள். யாரோ வருவதாக எண்ணி ஜோசி கதவின் பின்னால் ஒளிந்தாள்.

அதற்க்குள் யாரோ வந்ததால், மீனா மாட்டிக் கொண்டாள். ஆனால் உறவினர் எனவும், பார்க்க வந்ததாக கூறி வெளியேறினாள்.

மீனாவும் ரியாவும் மருத்தவமணை வாசலில் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்க்கு பின் ஜோசி உள்ளே இருந்து வந்தாள்.

“என்னடி என்னாச்சு? பேசனியா?”.

கேள்வியை அடுக்கிக் கொண்டே போனாள் மீனா. “இல்லடி அவங்க கூட பேச முடியல”.

“திரும்ப எப்போ போறது?” “போகலாம் அந்த ஹோட்டலுக்கு”. “என்ன சொல்ற ஜோசி, அங்க இருந்து தான் தப்பிச்சு வந்தோம்?”.

“நம்ம எந்த தப்பும் பண்ணல, நம்ம அங்க திருப்பி போனா தான் எதாது நமக்கு தெரியும். அதுக்கு முன்னாடி நம்ம பேக்ஸ் எங்க?”.

இங்க தான் இருக்கு. ரியாவிடம் இருந்த பேக்கை வாங்கி திறந்து பர்த்தாள். “சரி வாங்க கிளம்பலாம்”.

ஹோட்டலுக்கு சென்று அதே ரூமை எடுத்தனர் .மேலே சென்றதும் மீனாவும் ரியாவும் பேசிக்கொண்டனர்.

“நேத்து வரைக்கும் நம்மல சுத்தி என்ன நடக்குதுனு தெரியாமா இருந்தது, இன்னைக்கு நமக்கு பக்கத்துல என்ன நடக்குதுனு புரியல. உனக்கு எதாது புரியுதா?”.

‘அதுனால நானும்அமைதியா இருக்கேன்”. “பேசாமா இருங்க இரண்டு பேரும், இப்போ மணி என்ன?”.

“5மணி ஆச்சே”.

“சரி வாங்க போலாம்”.

மீனாவும் ரியாவும் ஒன்றும் புரியாமல் பார்த்துக்

கொண்டனர்.

“என்னடி ஆச்சு இவளுக்கு? காலையில ஹோட்டல் போலாம் சொன்னா, இப்போ வெளிய போலாம் சொல்றா”.

“சரி வா பாக்கலாம்”.

மூன்று பேரும் வெளியே வந்து சிறிது தூரம் நடந்தனர்.

அப்போது அங்கிருந்த ஒரு கார் வந்தது. அவர்களை பார்த்ததும் அந்த கார் நின்றது.

அவர்கள் மூன்று பேரையும் கடத்திச் சென்றனர்.

மயக்கத்திலிருந்து அவர்கள் எழுந்தபோது ஒரு ரூமில் வாயும் கையும் கட்டப்பட்டிருந்தது. அந்த அறையில் அவர்களைத் தவிர வேறு யாரையும் காணவில்லை. அந்த நேரத்தில் தான் அவர்களை காப்பாற்ற போலீஸ் வந்தது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து, பாதுகாப்பாக அழைத்துச்சென்று ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்தது.

இரவு உணவிற்க்கு பின் மீனாவும், ரியாவும் பேச தொடங்கினர். “இப்போ தான் தெளிவா இருக்க மாறி இருக்கு, நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கு. என்ன தான் நடந்தது”.

ஆமா மீனா, போலீஸ் எதுக்கு நமக்கு நன்றி சொல்லனும் ?”. ஜோசி பேச ஆரம்பித்தாள்.

“எல்லாம் எனக்கு தெரியும் டி. நம்ம ஹாஸ்பிடல் போனப்போ நான் அந்த அக்கா கூட நான் பேசனேன்”.

“என்ன சொல்ற?”.

ஆமா மீனா அப்போ தான் அவங்க சொன்னாங்க. கொஞ்ச நாள் முன்னாடி ஊட்டில நிறைய பேருக்கு பேங்க் அக்கவுண்ட்ல பணம் காணம போயிருக்கு. அப்போ போலீஸ் அவன புடிக்க போகும்போது தான் அவனுக்கு விபத்து ஒரு கால் போயிருச்சு. ஆனாலும் அவன புடிக்க முடில.

ஒரு வருஷத்துக்கு அப்றோம் பொள்ளாச்சில தங்கச்சிக்கு கணவரால ஆபத்துனு சொல்லி நம்ம கூட வந்த டிரைவர் அண்ணா புகார் குடுத்திட்டு அவர்கிட்ட இருந்த ஆதரம் எல்லாம் போலீஸ் கிட்ட குடுக்க போறாதா சொல்லி அவன்கிட்ட இருந்து பணம் கேட்டிருக்காரு. அவனும் சரினு சொல்லி வர சொல்லிருக்கான்.

இந்த கேஸ்ல போலீஸ்க்கு சந்தேகம் வந்திருக்கு. அதான் நம்ம கூட பொய் சொல்லி வந்திருக்காங்க. அன்னைக்கு நைட் அவன் தான் கொல பண்ண வந்திருக்கான்.

நமக்கு முன்னாடியே நம்ம கூட இருந்த அக்கா கீழ போய்ட்டாங்க. அவங்க தான் அந்த கார் எடுத்திட்டு அவன தூரத்தீட்டு போய்ருக்காங்க.

அதுக்கு முன்னாடியே டிரைவர் அண்ணா நம்ம கிட்ட குடுத்த பைய தேடி வந்திருக்காங்க.

அப்போ தான் அவன் கொல பண்ணிருக்கான். நம்மல பத்தி போலீஸ்கு தெரிஞ்சனாலதான் நம்மள எதுவும் பண்ணல.

ஆனா அவன் நம்ம வந்த அவனுக்கு தெரியபடுத்தனும் சொல்லி ஹோட்டல இருக்க ஒருத்தருக்கு பணம் குடுத்திருக்கான். அப்போ தான் சொன்னே டிரைவர் அண்ணா பேக் நம்மகிட்ட இருக்கறதா.

நம்ம கிட்ட இருக்க பேக் தேடி கண்டிப்பா வருவான் சொன்னாங்க. அதான் அவன புடிக்க நம்ம கிட்ட உதவி கேட்டாங்க.

நானும் என் மொமைல. அந்த பேக்ல வச்சிட்டேன். அத டிரேஸ் பண்ணி தான் அவன புடிச்சாங்க.

“ரியாவும் மீனாவும் இதை கேட்டு விட்டு பெருமூச்சு விட்டனர்.”

“இதலா ஏன் எங்க கிட்ட சொல்லல?”.

“உங்கள பத்தி எனக்கு தெரியாதா? அதான் சொல்லல. அப்றோ நாளைக்கு நம்ம ஊட்டி சுத்தி பாக்க அவங்களே உதவி பண்றதா சொல்லீருக்காங்க”.

“செமல?” பேசிக்கொண்டே படுத்துக்கத் தொடங்கினர்.

“நம்ம எதுக்காக வந்தோம்னு மறந்தே போச்சு” ஆமாரியா இத மறக்கவே மாட்டோம்”.

காலையில் வேகமாக கிளம்பி வெளியே போக தயாராகினர். அப்போது பிரியாவின் கால் வந்தது. “ஷலோ, சாரி பிரியா. சொல்லமா வந்திட்டோம்”.

“அதெல்லாம் இருக்கட்டும். உங்க போட்டோ பேப்பர்ல வந்திருக்கு. இதலா எப்டி?”.

“அது வந்து…”

மீனா தொடங்கினாள். அவர்களின் ஊட்டி பயணமும் இனிதே தொடங்கியது…

Print Friendly, PDF & Email

1 thought on “ஊட்டி டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *