சமூகத்தின் தாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 6,766 
 
 

டேய் அங்க மேளம் இல்லாம சும்மாவே சாமி ஊர்வலம் போய்ட்டிருக்கு இன்னும் வரமா என்னடா பண்ணிட்டிருங்கீங்க?

ஐயா இதோ வந்துட்டோம்! உங்க மச்சான் தான் எங்கள சாப்பிட போக சொன்னாருங்க அதான் வந்தோம்ங்க ஒரு ஐஞ்சி நிமிஷத்துல வந்தறோம் சாமி

ஒ அப்படியா நான் கூட உங்கள சாப்பிட சொல்ல மறந்துட்டேன் மணி வேற 11ஆகிடிச்சா அப்போ சரி சரி சீகரமா சாப்ட்டு வந்துருங்க டா

இதோ சாப்ட்டு முடிச்சிட்டோம் நீங்க போங்க நாங்களும் வந்துறோம்

ம்ம்ம்ம்ம்!!! என்றார் ஊரின் தலைவர்

முனுசாமியும் அவரின் நண்பர்களும் பேசிக் கொண்டார்கள்

ஊரில் சாவு விழுந்தாலும் சரி கோயில் திருவிழா என்றாலும் சரி நம்ம தான் மேளத்தை வாசிக்க போறோம்! இதையே நம்ம தலைமுறையோட போகட்டும் நம்ம புள்ளைங்கள நல்ல படிக்க வைக்கனும் அதுங்க நல்லா படிச்சி நம்ம ஊர் பேர வெளிய சொல்ல வைக்கனும்..!!

நம்ம ஊர்ல நம்மட்டுமில்ல இந்திய முழுக்க இருக்கிற எல்லா கிராமத்திலும் சரி ஊர் சேரி இரண்டும் தனித்தனியா தான் இருக்கும்.!! அது ஏனு தெரியமா?

அட அது என்னவோ இப்போத்துல இருந்து தான் ஆரம்பிச்சா மாதிரியே பேசுற இது காலங்காலமாக வழக்கத்துல இருக்கிறது தானே.

ஆமாம் டா குப்பா நீ சொல்றதும் உண்மை தான் ஆனா இது நாலு ஐந்து தலைமுறை தான்டி வந்துனு இருக்கே!?

நம்ம எல்லாரும் எந்த வயசுல இருந்து இந்த தொழிலுக்கு வந்தோம்னு ஞாபகம் இருக்கா?

அது நம்ம தாத்தன் அப்பனும் தான் நம்மள கூட்டிட்டு வருவானுங்க கோயில் கூழ் ஊத்தினா போதும் சட்டி சட்டியா கூழ வாங்கி நம்ம தலைமேல வச்சி குடிசைக்கு எடுத்துனு ஒடுவோம் நல்லாவே ஞாபகம் இருக்குடா

அந்த நாள்ல ஊர் மக்களுக்கு தேவையான வேலைய செய்ய தான் நம்மள மாதிரியான சேரி மக்கள வீட்டு வேலைக்கும் பண்ணை கூலி தொழிலுக்கும் செங்கல் அறுக்கவும் குப்பை சாக்கடை அள்ளவும் தான் வச்சிட்டு இருக்காங்க. நாமக்கும் இந்த தொழில விட்டா வேற தெரியாது இதையே தான் நீயும் நானும் மட்டுமல்ல நம்ம தலைமுறைத் தலைமுறையாக செய்றோம்.

அவ்வளவு ஏன் நம்ம சேரிலேயே நம்மள என்னனு கூப்பிடுறாங்க?

தோட்டி வீட்டானுங்கனு தானே சொல்றானுங்க?

ஆமாம் டா

அதுக்கு என்ன காரணம் தெரியுமா?

நம்ம குலத்தொழிலே சாவுக்கு மெளம் அடிக்கிறதும் ஊர்ல போய் கால்வாய சுத்தம் செய்றதும் மாடு செத்தா அத தூக்கிட்டு வரதும் பொனத்த எரிக்கிறதும் தானே நாம செய்றோம்! இவங்க கிட்ட ஐஞ்சிக்கும் பத்துக்கும் கையெந்தி நிற்கிறோம் சின்ன பசங்கள இருந்து பெரியவங்க வரைக்கும் நம்மள போடா வா டானு தான் கூப்பிடுறானுங்க.

இதே வார்த்தையும் மரியாதையும் தான் நாளைக்கு நம்ம புள்ளைங்களுக்கும் கிடைக்கும் டா குப்பா…!!

தாத்தா காலத்துல இருந்து நமனுக்கு பழகப்பட்ட ஊர் சனம் தானே ஆனாலும் குடிக்க ஒரு வாய் தண்ணிய அவங்க பாத்திரத்துல கொடுத்திருக்காங்களா என்ன? நாமளே தானே ஒரு சொம்ப கைலேயே எடுத்துனு வரோம். ஒரு வேளை நம்ம கிட்ட சொம்பு இல்தலாம போனா அவங்க என்ன பண்றாங்க? எதாவது பழைய சொம்புல தண்ணிய எடுத்துனு வந்து கையில் ஊத்துவாங்க அத நாமளும் கையெந்தி தான்அந்த தண்ணி வாங்கிக் குடிக்க வேண்டியதாயிருக்கு.

ஊர் சனங்க என்ன சொன்னாலும் சரி அதை நமளும் நம்ம சேரி சனங்களும் கட்டுப்பட்டிருக்கனும்.

ஏனா அவங்களோட வாழ்க்கை முறை வேற நம்ம வாழ்க்கைய முறை வேற அதவாது சுத்தமில்லாதவர்கள் எதிலும் சுத்தமானவர்கள்

நான் நினைக்றது ஒன்னு தான் இந்த தொழில் நம்மளோடவே முடியட்டும் சேரியில இனி யாரும் பறை மேளம் அடிக்கவும் குப்பை சாக்கடை அள்ளவும் போகவிடக்டாது இதையெல்லாத்தையும் மாத்தனும் அதுக்கு நீங்களும் ஒன்னா என்கூட துணைக்கு நிக்கனும்

நம்ம பசங்களை நல்லா படிக்க வச்சி அரசு வேலையில நல்ல தொழில் செய்யனும் நமக்கும் தகுதி இருக்குனு காட்டனும்ய்யா

எத்தன வருஷமா நாம இருக்கோம் இது வரைக்குமாவது ஊர் சனங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கா நம்ம கோயில் திருவிழானு பொய் கூப்டாலும் வந்து போயிடுவாங்க ஆனா நம்ம வீட்ல ஒரு வாய் தண்ணியோ டீயோ குடிக்க மாட்டாங்க ஏன நாம சுத்தமில்லாதவங்க. நல்லது கேட்டதுனு நாள் பார்க்காம மாட்டுக்கறி சாப்பிடுற கூட்டம் அவ்வளவு தான் நாம!
ஊர்ல பாரு சாக்கடை போக கால்வாய் இருக்கு அரசாங்க காரவீடு கட்டிருக்கும் சுத்தமா மண்ணே கால்ல ஒட்டாத மாதிரி தார் ரோடு போட்டிருக்கும் அவ்வளவு ஏன் காலையில ஒதுங்கறதுக் கூட நாம ஏரி கரைக்கும் குளத்தக்கரைக்கும் ஒடனும் ஆனா அவங்களுக்கு அப்படியில்ல பள்ளிக்கூடம் வரைக்கும் பக்கத்துலேயே இருக்கு!

நம்ம சேரி சனங்கலுக்கும் சலுகை கிடைக்கனும்னா நம்மாளுங்கள ஒருத்தன் முன்னேறனும் அப்போதான் அதை பார்த்து எல்லாம் நாம மவனையும் இதே மாதிரி படிக்க வைக்கனும்னு நெனப்பு வரும் அந்த மாற்றத்தை தான் உருவாக்கனும்.

சனங்க எழுத படிக்க தெரியாம விட்டதோட விளைவு தான் இன்னைக்கு மேளம் அடிச்சிட்டு சுத்துறோம். நமக்குனு இருந்த நிலத்தையும் 50க்கும் 100க்கும் வித்துட்டு மூனு சென்ட் குடிசையோடு எந்த வசதியும் இல்லாம நாறிட்டு கேடக்கோம்!

நம்ம அப்பனுங்க தான் இந்த வேலைய வாழையடி வாழையா சிவனேனு செய்துட்டானுங்க ! கஞ்சிக்கும் கூழுக்கும் கையெந்திய காலம் அது..!! ஆனால் இப்போ அப்படியில்லையே காலம் வேகமாக மாறிட்டே போகுது அதுக்கேத்தாமாதிரி நாமளும் நம்மள மாத்திக்கனுன் அதான் அடுத்த தலைமுறைக்கு நல்லது.

இதலாம் மாறனும்னா பள்ளிக்கூடம் ஒன்னால தான் முடியும்!

எப்படியாவது நம்ம சேரிக்குள்ள ஒரு பள்ளிக்கூடத்த கட்டவச்சிடனும் ஒன்னாம் வகுப்புல இருந்து ஐஞ்சாம் வகுப்பு வரைக்குமாவது படிக்க வைக்கனும் அப்பறம் பசங்களாவே பள்ளிக்கூடத்துக்கு போயிடும்

யோவ் முனுசாமி நீ சொல்றது வாஸ்த்துவம் தான் ஆனா எவன் சேரியுள்ள பள்ளிக்கூடத்த கட்ட வருவான் அப்படியும் பள்ளிக்கூடத்த கட்டிமுடிச்சிட்டாலும் எந்த வாத்தியார் வந்து புள்ளைங்களுக்கு பாடம் நடத்துவான் சொல்லு? அது மட்டுமா ஊர் சனங்கள எப்படி சமாளிக்க முடியும் ? அவங்கள பகைச்சினு நாம வாழ முடியாதுயா நல்லா யோச்சி பேசுயா
நமக்கு அவங்க நல்லது செய்யனும்னு நெனைச்சிருந்தா எப்போவ செஞ்சிருப்பாங்கய்யா ஆனா அத அவங்க பண்ணலையே. எல்லாத்துக்கும் தீட்டு பார்கறவங்க எப்படி நல்லது பண்ணுவாங்க நமக்கு தர தண்ணில இருந்து டீ வரைக்கும் அதுமட்டுமா அவங்க வீட்டு வாசப்படியக் கூட மீதிக்கக் கூடாது அப்படி ஒரு வேளை தெரியமா உள்ள போனா அவ்வளவுதான் தெண்ண மரத்துல கட்டி வச்சி அடிப்பாங்க இந்த தீண்டாமைய தான் முதல்ல ஒழிக்கனும்.

இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இவர்களுக்கு பயந்து குழந்தைங்கள பள்ளிக்கூடம் அனுப்பாம விடறது! இதுக்கொரு வழி பண்ணிடலாம் எல்லோரும் என்ன சொல்றீங்க?
சரி முனுசாமி இதலாம் நடக்குமா?

நடக்கும் நடத்திக் காட்டனும்! ஊர் தலைவரிட்ட காலையில நாம எல்லோரும் கும்பளா போய் பேசுவோம் எங்க புள்ளைங்களுக்கும் ஒரு பள்ளிக்கூடத்த கட்டிக் கொடுங்க அப்படியில்லைனா இங்கிருக்கிற பள்ளிக்கூடத்திலேயே சேர்த்துக்கோங்கனு கேட்கலாம் என்ன சொல்றீங்க?

அட போங்கப்பா நம்ம புள்ளைங்க தானே அந்த பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டங்கிறாங்க?

நீங்க சொல்றதும் சரிதான் ஆனா நாம தானே அவங்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்கனும் நம்ம புள்ளைங்க முன்னாடியே பிடி புடிக்கிறது சாராயத்த குடிகிறத கத்துக் கொடுக்கிறதுக்கு புத்தகத்துல இருக்கிற பாடத்த கத்துக்க சொல்லலாம்ய்யா

நம்ம கஷ்டப்படுறத பார்க்குதுங்கள கண்டிப்பா பள்ளிக்கூடம் போகும் வருங்காலத்துலையாவது சேரி சனங்களும் எதற்கும் சளச்சவங்க இல்லையினு காட்டட்டுமே
அப்போ சரி நாளைக்கே இதுக்கான முடிவு கேட்டுக்கலாம் ஆமாம் இவ்வளவு தெளிவா பேசுறீயே யார் இது உனக்கு சொல்லிக் கொடுத்ததுய்யா

எல்லாம் நம்ம ஊருக்கு புதுசா வந்த வாத்தியார் தான்யா சொன்னாரு

எது செஞ்சாலும் சட்டத்தோட வழியில தான் செய்யனும் சட்டம் நமக்கு வழி காட்டும் அதுக்கு நம்ம புள்ளைங்கள புத்தக ஏட்டுகள புரட்ட சொல்லனும் அப்போதான் வரலாறு நம்மள பத்தி பேசும்

பெரியார் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு தெஞிச்சாவே போதும் இந்த சமூக மாற்றத்திற்கான தாகம் தான்னால வரும்

நாளை புதிய விடியலை பார்க்கலாம்!! போலாம் வாங்க நேரமாச்சி அப்புறம் எல்லாம் நம்மள தேடினு வந்துருவாங்க போகலாம் வாங்க

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *