இவ்வளவு வைராக்கியமா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 4,194 
 

நான் கணக்கில் பெயில் ஆனதால் மறுபடியும் ‘ட்வெல்த்’ படிக்க அந்த பள்ளி கூடத்தி லேயே சேந்தேன்.

ஒரு நல்ல பணக்கார குடும்பத்தை நான் சேவந்தவனான இருந்ததாலே எங்க குடும்பத்துக்கு அது பாரமாக தொ¢யலே.அந்த வருஷம் என் பள்ளிகூடத்தில் ரவி என்கிற பையன் புதிசா சேந்தான்.நான் அவன் கிட்டேநெருங்கி விசாரிச்ச போது அவன் பததாவதிலே கணக்கில் நுத்துக்கு நுறு மார்க் வாங்கி,மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’ செஞ்சு விட்டு,எங்க பள்ளிக் கூட கணக்கு வாத்தியார் சிபாரிசிலும், அவர் பண உதவியாலும் படிக்க வந்து இருப்பதாகவும் தொ¢ஞ்சது.

அவன் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்றும்,அவனுக்கு மூனு தங்கைகள் இருப்பதாகவும் என்னிடம் சொன்னான்.நான் அவன் சொன்னதைக் கேட்டு மிவும் வருத்த பட்டேன். பள்ளிக்கூடம் திறந்து ஒரு மாசம் தான் ஆகி இருக்கும்.கணக்கு வாத்தியார் கரும் பலகையில் ஒரு புது கணக்கை எழுதும் போதே அவன் தன் நோட்டில் அந்த கணக்கைப் போட்டு முடித்து இருப்பான்.கணக்கில் அவன் நிச்சியமாக ஒரு புலியாக இருந்தான்.நான் மெல்ல ஒரு நாள்அவனிடம் போய் ‘எனக்கு கணக்கு கத்து கொடுக்க முடியுமா’ன்னு கேட்டேன் முதலில் முடியாதுன்னு ரவி சொன்னான்

அப்புறமா அவன் தன் முடிவை மாத்தி கிட்டு எனக்கு கத்து கொடுக்க ஒத்துக் கிட்டான்.எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. நான் அவன் கையைப் பிடித்துக் கொண்டு நன்றி சொன்னேன்.சாயங்காலம் பள்ளி கூடம் விட்டவுடன்,நான்அவனை என் காரிலே, என் பங்களாவுக்கு அழைச்சு வந்து கணக்கு கத்துக்க ஆரம்பித்தேன்.என் அம்மா அப்பாவும் ரொம்ப சந்தோஷப் பட்டு அவனுக்கு ‘தாங்க்ஸ்’ சொன்னார்கள்.எனக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க நாங்க ‘·பீஸ்’ கொடுப்பதாக சொன்னதுக்கு,அவன் மிகவும் பணிவாக “நான் வரதனுக்கு ‘·பீஸ்’ ஒன்னும் வாங்கிக்காம கணக்கு சொல்லித் தரேன்” என்று சொல்லி விட்டான்.

மிகவும் ஏழைக் குடும்பத்திலே பொறந்து இருந்தும் ‘·பீஸ்’ ஒன்னும் வாங்கிக்க மாட்டேன்’னு சொன்னதைக் கேட்டு அசந்து நாங்க முனு பேரும் அசந்து போய் விட்டோம்.
கணக்கு ‘க்ளாஸ்’ நடத்தும் போது கணக்கு வாத்தியார் சொல்லிக் கொடுப்பதை விட மிகவும் சுலபமா எனக்கு கணக்குகளை எல்லாம் சொல்லி புரிய வச்சான்.’க்ளாஸ்’ முடிஞ்சதும் என் அம்மாவும் அப்பாவும் மிகவும் வற்புருத்தி சொன்னதாலே எங்க சமையல் கார அம்மா கொடுத்த ஒரே ஒரு மசால் தோசையை மட்டும் சாப்பிட்டான்.

பிறகு,நான் அவனை என் காரிலே அவன் வசிச்சு வந்த குடிசைக்கு பக்கத்திலே விட்டேன்.

ரவி தயவாலே நான் பன்னா¡டவாதிலே அறுபது மார்க் வாங்கி பாஸ் செஞ்சேன். அதுக்கு கைம்மாறா என் அமமா,அப்பா ரவிக்கு ஒரு பா¢சைக் குடுத்தாரகள்.அவன் அதை வாங்கிக்காம மிகவும் பவ்யமாக “நான் சொல்லிக் குடுத்ததை கத்து கிட்டு வரதன் பன்னாட வதில் அறுபது மார்க் வாங்கி பாஸ் பண்ணி,எனக்கு’ பா¢சு’ குடுத்து இருக்கான். அதுவே எனக்குப் போதும்” என்று சொன்னதும் நாங்க மூனு பேரும் வாயடைத்து போனோம்.பிறகு நான் அவனை என் காரிலே அவன் குடிசைக்கு பக்கத்தில் விட்டு விட்டு என் பங்களாவுக்கு வந்து சேந்தேன்.
அப்புறமா நான் B.E.சேந்து படித்து ‘பாஸ்’ பண்ணி விட்டு,மேல் படிப்புக்காக அமொ¢ க்கா போய் அங்கே என் படிப்பை முடிச்சு கிட்டு, அங்கேயே ஒரு அமொ¢க்கா பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொண்டேன்.எங்களுகு ஒரு பையனும் பெண்ணும் பிறந்தார்கள். அவங்க படிப்பு முடிஞ்சதும்,அமொ¢க்கா வழக்கப் படி அவங்களுக்குப் பிடிச்சவரை அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள்.

முப்பத்தி ஐந்து வருஷங்கள் ஓடி விட்டது.

எனக்கு வயசு அறுபதை தாண்டிடனதும்,நான் என் அப்பா,அம்மா,விட்டு விட்டு போன பங்களாவையும், சொத்தையும் அனுபவிக்கவும், அவங்க ’திதி’யை பக்தியா செஞ்சு,என் கடமையை நிறைவேத்தவும் நினைச்சு,என் சம்சாரத்துடன் அமொ¢க்காவை விட்டுட்டு நிரந்தரமா சென்னைக்கு வந்து விட்டேன்.

சென்னைக்கு வந்த நாங்க வசித்து வர அடையாரிலே ஒரு பெரிய பங்களாவை வாங்கிக் கொண்டோம். க்ரேஸியுடன் சந்தோஷமாக இருந்து வந்தேன்.

அன்று ஞாயித்து கிழமை. பீச்சுக்குப் போய் சாயங்கால பொழுதை கழித்து விட்டு அப்படியே ஒரு பெரிய நஷத்திர ஹோட்ட்லிலே இரவு உணவை முடித்து கொண்டு வரலாம் என்று நினைத்து,படகு போல காரை என் டிரைவர் ஓட்டி வர, பீச்சுக்கு வந்தோம்.காரிலே இருந்து இறங்கி,நான் என் சம்சாரத்தை அழைத்து கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு முப்பது அடி கூட நான் நடந்து இருக்க மாட்டோம்.அங்கே போட்டு இருந்த ஒரு சிமெண்ட் பென்ச்சில் தாடியும் மீசையுடன் உட்கார்ந்துக் கிட்டு இருந்த ஒரு பெரியவரைப் பார்த்தேன். நான் அப்படியே கொஞ்ச நேரம் நின்று விட்டேன்.என் கண்களே என்னால் நம்ப முடியவில்லை.அசப்பில் அந்த பெரியவர் என் பள்ளிகூட நண்பன்,என் கணக்கு குரு ரவியை போலவே இருந்தார்.மிகவும் மெலிஞ்சு,ஒரு கதர் சட்டை,ஒரு பழைய வேஷ்டியுடன், கண்ணை மூடிக் கிட்டு உகார்ந்துக் கொண்டு இருந்தார்.

‘இவர் என் கணக்கு குரு ரவி தானா இல்லை,அவர் சாயலிலே வேறு யாராச்சும் இருக்குமா’ என்று எனக்கு சந்தேகம் வரவே,நான் அவர் கிட்டே மெதுவாக போய் அவரைப் பாத்து “மிஸ்டர் ரவி என்னை தொ¢தா.நான் தான் நீங்க எனக்கு கணக்கு சொல்லி குடுத்து, என்னை ‘ட்வெல்த’ ‘பாஸ்’ பண்ண வச்ச வரதன்’ ன்னு சொன்னதும் அவர் மெல்ல தன் கண்களைத் திறந்து பாக்க ஆரம்பித்தார்.

கண்களை சுறுக்கிக் கொண்டு,கொஞ்ச நேரம் என்னை அவர் உற்று பாத்தார்.பிறகு நிதானமா ”எனக்கு சாயங்காலம் ஆனா கண் பார்வை அவ்வளா தொ¢ரதில்லே.ஆனா உன் குரலை என்னாலே நல்லா கண்டு பிடிக்க முடிது.நான் அந்த ரவி தான்” என்று சொன்னதும் எனக்கு இறக்கைகள் முளைச்சு நான் ஆகாசத்தில் பறப்பது போல சந்தோஷப் பட்டேன்.
மெல்ல அவர் பக்கத்திலே என் அமொ¢க்கா சம்சாரத்துடன் உகார்ந்து கிட்டேன். “உன்னை பார்த்ததிலே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ரவி.இது என் அமொ¢க்கா சம்சாரம் க்ரேஸி” ன்னு சொல்லிட்டு நான் ரவியின் கைகளைப் பிடித்து கொண்டு சொன்னேன்.

ரவியின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிஞ்சு கொண்டு இருந்தது.அவன் தன் தோள் மேலெ போட்டுக் கிட்டு இருந்த துண்டினாலே துடைத்து கொண்டு இருந்தான்.

நான் என் சம்சாரத்து கிட்டே எனக்கும் ரவிக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பில் இருந்து, நான் ‘ட்வெல்த்’ வகுப்பில் கணக்கிலே நல்ல மார்க் வாங்கி B.E சேர்ந்த வரைக்கும் எல்லா விவரத்தையும் சொன்னேன்.

க்ரேஸி மிகவும் சந்தோஷப் பட்டு ரவியின் கைகளை பிடிச்சு கிட்டு, ரவி பண்ண பெரிய உதவிக்கு நன்றி சொன்னாள்.

அப்புறமா ரவி கிட்டே நான் ‘ட்வெல்த் பாஸ்’ பண்ண பிறகு என் வாழ்கையிலே ஏற்பட்ட எல்லாவத்தையும் விவரமா சொன்னேன்.நான் சொன்னதைக் கேட்டு ரவி மிகவும் சந்தோஷப் பட்டு என்னை புகழ்ந்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் நான் ரவி கைகளைப் பிடித்து கொண்டு “என்ன ரவி,நீ இவ்வளவு மெலிஞ்சு இருக்கே.உனக்கு உடம்பு ஏதாச்சும்….” ன்னு கேட்டு முடிக்கலே ரவி உடனே “என் உடம்பு 25 % காரணம்.மீதி 75 % என் குடும்ப வாழ்க்கை காரணம்ப்பா” என்று சொல்லி மறுபடியும் அவர் தன் கண்களைத் துடைத்து கொண்டான்.

“எனக்கு கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு ரவி.If you don’t mind எனக்கு உன் கஷ்டங்களே எங்களுக்கு கொஞ்ச விவரமா சொல்ல முடியுமா” என்று ஆதங்கமாக கேட்டு விட்டு ரவியின் வாயையேப் பார்த்து கொண்டு இருந்தேன்.

ரவி தன் கதையை சொல்ல ஆரம்பித்தான். “நான் ‘ட்வெல்த’ ‘பாஸ்’ பண்ணவுடனே ரெண்டு மாசத்துக்குள்ளாற என் அப்பாவுக்கு ஒரு விபத்து ஆகி,அவர் வலது காலை இழந்துட்டாரு.அவர் வேலை செஞ்சு வந்த கமபனி அவருக்கு சேர வேண்டிய மொத்த பணத்தையும் கொடுத்துட்டு ‘மறுபடியும் வேலைக்கு வர வேணாம்’ன்னு என்று சொல்லிட்டா ங்க.அவர் விபத்து செலவுக்கும்,அப்புறமா ‘ஆர்டி·பிஷியல்’ கால் செய்யறதுக்கும், ‘பிஸியோ’ செலவுக்கும், கம்பனி கொடுத்த மொத்த பணமும் செலவழிஞ்சு போச்சு.என் முதல் தங்கை ராதா எட்டாவதும்,இரண்டாவது தங்கை மீரா ஆறாவதும்,கடைசி தங்கை சுமதி ஒன்னாவ திலும்,படிச்சு கிட்டு இருந்தாங்க.என அப்பா ‘தன் வைத்திய செலவுக்கு எல்லா பணமும் குடுத்த பிறகு கையிலே காலணா கூட இல்லையே’ன்னு நினைச்சு,தினமும் அழுது,அழுது அவர் உடம்பு மோசமாகி ,ரத்த கொதிப்பு வந்து கஷ்டப் பட்டு வந்தாரு.குடும்ப சூழ் நிலையை சமாளிக்க நான் ஒரு கம்பனியிலே ஒரு சாதாரண வேலைக்கு சேந்து அதிலே வந்த சம்பளத் திலே என் குடும்பத்தை நடத்தி வந்து,என் தங்கைகளையும் படிக்க வச்சு கிட்டு இருந்தேன். நாங்க ஆறு பேரும் அரை வயிறு தான் சாப்பிட்டுக் கிட்டு வந்தோம்” என்று சொல்லி விட்டு, கொஞ்சம் இருமி விட்டு,தன் தொண்டையை கனைத்துக் கொண்டு மறுபடியும் சொல்ல ஆரம்பிசச்¡ன்.
“என் அம்மா நகைகங்களே எல்லாம் வித்து ராதாவுக்கு நகைங்க செஞ்சி,கொஞ்சம் கடன் வாங்கி ஒரு வழியா அவ கல்யாணத்தை செஞ்சு முடிச்சேன்.அவ புருஷன் வீட்டுக்கு போய் ரெண்டு வருஷம் கூட ஆகி இருக்காது,ஒரு நாள் அவ ஒரு பெண் குழந்தையோட, எங்க வீட்டுக்கு திரும்பி வந்து ‘அப்பா அவர் என்னை விவாக ரத்து பண்ணி விட்டார்ப்பா’ ன்னு அழுதுக் கிட்டே சொன்னா.நான் உடனே ‘போனாப் போவுதும்மா.நீ எங்க கூட இருந்து வா. நாங்க சாப்பிடற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு எங்களோடவே இருந்து வாம்மா’ ன்னு சொல்லி எங்க கூட இருக்க வச்சுக் கிட்டேன்.மீரா ‘ட்வெல்த்’ ‘·பாஸ்’ பண்ணினவுடனே,ஒரு சூப்பர் மார்கெட்டில் ‘சேல்ஸ் கர்ளாக’ வேலைக்கு சேர்ந்தா” என்று சொல்லி விட்டு தன் பக்கத்தில் இருந்த ஒரு துணிப் பையில் வச்சு கிட்டு இருந்த ஒரு பாட்டிலில் இருந்து தண்ணியை கொஞ்சம் குடித்து விட்டு மறுபடியும் தொடர்ந்தான்.

“எனக்கு வயசு இருபத்தி எட்டு எட்டி விட்டதாலே,எனனை என அம்மா ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக் கொள்ள சொன்னாங்க.நானும் ‘சா¢’ன்னு சொல்லிட்டு எங்க குடும்பத்துக்கு ஏத்த ஒரு பொண்ணா பாத்தேன்.நான் பாத்த எல்லா பெண்களும் கல்யணம் ஆன பிறவு,நான் தனி குடித்தனம் வந்தா தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்ன்னு சொன்னாங்க.நான் யோசனைப் பண்ணேன்.நான் கல்யாணம் பண்ணிக் கிட்ட பிறகு என் சுய சந்தோஷத்தாகவும்,வரப் போகும் பெண்ணின் சந்தோஷத்தாகவும்,உடல் நலம் இல்லாத என் வயசான அப்பாவையும்,அம்மாவையும்,ஒரு பெண் குழந்தையுடன் வாழ்கையை இழந்து நிக்கும் ராதாவையும்,வாழக்கையை வாழ தயராக இருக்கும் மீராவையும்,சுமதியையும் தனியாக தவிக்க விட்டுட்டு போக என் மனசு இடம் கொடுக்கலே.நான் என் கல்யாணத்தை தள்ளிப் போட நினைச்சு,அப்போதைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கலே” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்.

“என் அம்மாவுக்கு ரத்த கொதிப்பு அதிகமாகி,ஒரு ஞாயித்துக் கிழமை காலையிலே மயக்கமா விழுந்துட்டாங்க.நான் அருகிலே இருந்த இருதய நோய் ஆஸ்பத்திரியிலே சேத்தேன்.அங்கு இருந்த டாக்டர் என் அம்மாவுக்கு ‘ஆஞ்சியோ’ செஞ்சு ரத்தத்தில் அடைப்பு இருந்திச்சுன்னா ஆபரேஷன் பண்ண ஒரு லக்ஷ ரூபாய் ஆவும்ன்னு சொல்லிட்டார்.நான் ஆடிப் போயிட்டேன்.பிறகு மெல்ல ¨தா¢யத்தை வர வழிச்சு கிட்டு டாக்டரைப் பார்த்து என் குடும்ப நிலைமை விவரமாக சொல்லி பணத்தை கணிசமாக குறைச்சுக் கொள்ள சொன்னேன். அவர் கொஞ்ச நேரம் யோஜனை பண்ணி விட்டு, ‘நான் என் ‘·பீஸை’ கொஞ்சம் குறைச்சுக றேன்.ஆனா நீங்க எண்பதாயிரம் ரூபாய் கட்டியே ஆவணும்’ ன்னு சொல்லி விட்டாரு.நான் வேறு வழி இல்லாம ஒத்துக் கிட்டு,சம்பளத்தில் சேர்த்து வச்சு இருந்த பணம்,என் ரெண்டாவது தங்கை சம்பள பண செமிப்பு,கொஞ்சம் இங்கேயும்,அங்கேயும்,கடன் வாங்கி ஒரு வழியாக எண்பதாயிரம் ரூபாயை சேத்து ஆஸ்பத்திரியில் கட்டி,என அம்மாவுக்கு இருதய ஆபரேஷன் பண்ணீ வீட்டுக்கு அழைச்சு கிட்டு வந்தேன்” என்று சொல்லி விட்டு கொஞ்சம் இருமி விட்டு,தன் கண்களை மறுபடியும் துடைத்துக் கொண்டான்.

”அம்மாவை வீட்டுக்கு அழைச்சு கிட்டு வந்து ஒரு வருஷம் கூட ஆவலே,என அப்பா உடம்பு ரொம்ப மோசமாகி ஒரு நாள் அவர் செத்துப் போனார்.என் அப்பா காரியங்களை செல்லாம் செஞ்சு முடிச்சேன்.என் தங்கை மீரா,அவ வேலை செஞ்சு வந்த சூப்ப்ர் மார்கெட்டி லே கூட வேலை செஞ்சு கிட்டு வந்த ஒருத்தருடன் நெருக்கா பழகி,வயித்துலெ ஒரு குழந்தை யை வரவழிச்சு கிட்டா.அவளுக்கு வயிறு தொ¢ய ஆரம்பிச்சப்போ அழுது கிட்டே, அவ தன் கற்பை அந்த ‘ஆள்’ கிட்டே இழந்து விட்ட சமாசாரத்தை சொல்லி கதறிஅழுதா.எனக்கும் அம்மாவுக்கும் என்ன பண்ணுவதுன்னே தொ¢யாம முழிச்சோம்.மீரா கூட பழகின அவ தோழிங்க வேணுமானா மீராவும் அந்த ஆளும் பழகி வந்த விவரத்தைதை சொல்லுவாங்க. ஆனா மீரா வயத்திலே வளரும் குழந்தைக்கு அந்த ஆள் தான் காரணம் என்கிறதே சொல்ல முன் வர மாட்டாங்களே.இந்த ‘விஷயம்’ வெறும் மீராவுக்கும்,அந்த ஆளுக்கும் மட்டும் தானே தொ¢யும்.எந்த ஆதாரத்தே வச்சுகிட்டு நாங்க அந்த ‘ஆளீன்’ அப்பா அம்மா கிட்டேயோ, போலீஸ் கிட்டேயோ சொல்லி நியாயம் கேக்க முடியும்.அதனால்லே நாங்க மீராவை ஒன்னும் சொல்லாம,அவ விதியை நொந்துக் கிட்டு இருந்து வந்தோம்” என்று சொல்லும் போது அவனுக்கு அழுகை வரவே அவர் மறுபடியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
”மெல்ல ¨தா¢யத்தை வர வழிச்சு கிட்டு நான் அந்த ‘ஆள்’ அம்மா அப்பா கிட்டே வெக்கத்தை விட்டு ‘என் தங்கை மீராவை உங்க பையனோடு கல்யாணம் கட்டி வச்சு அவளுக்கு வாழ்க்கையை குடுங்க ‘ன்னு கெஞ்சிக் கேட்டேன். அவங்க ‘மீராவை கல்யாணம் கட்டிக்கிட முடியாது’ன்னு என்று கண்டிப்பாக சொல்லிட்டார்ங்க.மீரா பிரசவத்திலும் அந்த கடவுள் எங்களை சோதிச்சுட்டாரு,அவளுக்கு பொறந்த குழந்தை ஒரு பெண் குழந்தை. அந்த குழந்தைக்கு வலது கை குட்டையாகவும்,வலது கால் குட்டையாகவும்,மிகவும் வீக்காக ‘அங்க ஹீனத்துடன்’ பொறந்தது.பிரசவம் பார்த்த டாக்டர் என்னைப் பார்த்து ‘சார்,இந்த பொண்ணுக்கு கற்ப காலத்தில் சா¢யான போஷாக்கு இல்லாததாலே தான் இப்படி அங்க ஹீனமான குழந்தை பொறந்து இருக்கு.இந்த அங்கஹீனத்தை எங்களாலே சா¢ செய்ய முடியாது அந்த குழந்தை காலம் பூராவும் இந்த உடம்போடு தான் இருந்து வரணும்’ ன்னு சொல்லிட்டாங்க.
இந்த சமயம் பாத்து என் அம்மா ‘ஏண்டா ரவி, உனக்கு வயசு முப்பத்தி நாலு ஆவுதே. இப்பவாவது ஒரு கல்யாணம் கட்டி கிட்டு,இந்த வூட்ல விளக்கு ஏத்த ஒரு மருமவளை கொண்டு வாயேன்பா.எனக்கும் ரொம்ப வயசு ஆயிகிட்டெ போவுது. நான் என் கண்னை மூடறதுக்கு முன்னாலே உனக்கு பொறக்கற ஒரு குழந்தையை பாத்துட்டு போறேன்ப்பா’ என்று சொல்லி நச்சா¢க்க ஆரம்பிச்சா ங்க.நானும் ‘சா¢’ன்னு சம்மதிச்சு ஒரு பெண்ணை தேடினேன்.என்னுடைய வயசுக்கு கல்யாணம் ஆவாத பொண்ணே கிடைக்கலே.ஏற்கெனவே கல்யாணம் ஆகி,கணவனை இழந்து, ஒரு குழந்தையோ, ரெண்டு குழந்தையோ, இருந்த பெண்ங்க தான் எனக்கு கிடைச்சாங்க.இதில் யாராவது ஒருவரை கல்யாணம் பண்ணிகிடலாம் ன்னு யோசனை பண்ணினேன்.ஏற்கெனவே என் வூட்லே இத்தனை ஜீவன் சாப்பிட இருக்கு. நான் அப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு வந்தா,என் வூட்லே மொத்த பேர் சாப்பாட்டுக்கு நான் என்ன பண்ணுவேன.ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ கழிச்சு எங்களுக்கு ஒரு குழந்தை பொறந்து விட்டா,நிலைமை இன்னும் மோசமா தானே ஆவும். நான் ரொம்ப நேரம் யோஜனை பண்ணினேன்.பிறகு நான் கலயாணம் பண்ணிக் கொள்ற ஆசையை அறவே விட்டுட்டு இப்போ நான் ஒரு பிரம்மசாரியாவே இருந்து வறேன்”ன்னு சொல்லிட்டு ரவி மறுபடியும் கொஞ்சம் இருமி விட்டு தோண்டையை கனைத்துக் கொண்டான்.

“எனக்கு வந்துக் கொண்டு இருந்த சொற்ப சமபளம் எங்களுக்கு போதாம நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு கிட்டு வந்தோம்.நான் யோஜனைப் பண்ணினேன்.’ஒரு நாளில் பத்து மணி நேரம் ஓடா வேலை செஞ்சு வந்து, ஆ·பீஸ்க்கு போய் வர பஸ் செலவு பண்ணி வருவதை விட, என் வீட்டிலே நாங்க எல்லோரும் ஒன்னா வேலை செஞ்சு வந்தா என்ன’ ன்னு நினைச்சு நான் வேலையே விட்டுட்டு எங்க வீட்டுக்கு அடுத்து இருந்த ஒரு சின்ன இடத்தை வாடகைக்கு எடுத்து நான்,என் அம்மா, ராதா,மீரா,சுமதி,எல்லாம் ஒன்னா சேந்து ஒரு ‘மெஸ்’ ஆரம்பிச்சு இப்போ நடத்தி வரோம்.ஒரு நாளைக்கு எண்பதோ நூரோ ரூபாய்க்கு வியாபாரம் ஆவுது. கடையிலே என்ன மீறுதோ அதை நாங்க எல்லாரும் சாப்பிட்டு விட்டு படுக்க போவோம். போராத குறைக்கு எனக்கு காச நோய் வேறே வந்து இருக்கு.இந்த உடம்போடு நான் கஷ்டப் பட்டு வந்து கிட்டு இருக்கேன்.எனக்கு இந்த ஜென்மத்திலே ஒரே ஒரு ஆசை தான் வரதன் என மூச்சு நிக்கறத்துக்கு முன்னடி என் அம்மாவுக்கு நான் அவங்க காரியம் பண்ணி முடிக்கணும்.அதுக்கு அப்புறமா என் மூச்சு நின்னா நான் கவலைப் பட மாட்டேன்.இந்த ஜென்மத்திலே எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கிற பாக்கியம் எனக்கு இல்லாம போயிடுச்சி. நான் இந்த ஜென்மத்திலே நேர்மையா வாழ்ந்தாலாவது, என் அடுத்த ஜென்மத்திலே எனக்கு அடிபடை சந்தோஷம் இருக்கும் ஒரு வாழ்க்கை அமையும் என்கிற நம்பிக்கையிலே தான் என் நாளை கழிச்சு வரேன்” ன்னு சொல்லும் போது ரவி மறுபடியும் இருமி விட்டு,கண்களில் கண்களில் வழிஞ்ச கண்ணீரை துடைத்து கொண்டான்.

ரவி கதையை கேட்டவுடன் நானும் அழுது விட்டேன்.என் பாண்ட் பாக்கேட்டில் இருந்து கை குட்டையை எடுத்து துடைத்து கொண்டேன்.

நான் அழுவதைப் பார்த்த க்ரேஸி ஒன்னும் புரியாம முழித்து கொண்டு இருந்தா. நான் அழுவதைப் பாத்த க்ரேஸி என் கையை பிடிச்சு கிட்டு “what’s the matter darling you are crying” என்று கவலை யோடு கேட்டாள்.

நான் உடனே “க்ரேஸி கொஞ்சம் பொறுமையா இரு.நான் உனக்கு எல்லா விஷயமும் நிதானமா சொல்றேன்” என்று ஆங்கிலத்தில் அவ கையை பிடித்து கொண்டு சொன்னேன்
கொஞ்ச நேரம் ஆனதும் நான் ரவியைப் பாத்து” ரவி,நீ தான் ஒரு கணக்கு புலியச்சுசே.நீ ஏன் நிறைய பிள்ளைங்களுக்கு கணக்கு ‘ட்யுஷன்’ எடுக்கக் கூடாது” என்று ஆதங்கமாக கேட்டேன்.
அத்தனை கஷ்டத்திலும் ரவி சிரிச்சு கிட்டு “வரதா,என் மெஸ்ஸ¤க்கு ‘சண்டே’ லீவு விட்டு இருக்கோம்.அன்னைக்கு நான் ஏழை பிள்ளைககளுக்கு காத்தாலே எட்டில் இருந்து பத்து மணி வரைக்கும் ஒரு ’க்ளாஸ¤ம்’, பத்தில் இருந்து பன்னனடு மணி வரைக்கும் ஒரு க்ளாஸ¤ம், மத்தியானம் சாப்பிட்டு விட்டு ஒரு மணி ‘ரெஸ்ட்’ எடுத்துகிட்டு, மறுபடியும் ரெண்டு மணியில் இருந்து நாலு மணி வரைக்கும் கணக்கு ‘க்ளாஸ்’ இலவசமா எடுத்து வந்துக் கிட்டு இருக்கேன். மூனு ‘க்ளாசிலும்’ மொத்தம் முப்பது பசங்க கணக்கு கத்து கிட்டு வராங்க. கணக்கு ‘க்லாஸ்’ முடிஞ்சதும் என் விதியை நொந்துகிட்டு, பீச்சுக்கு வந்து கொஞ்ச நேரம் உக்காந்துக் கிட்டு இருப்பேன்” என்று அமைதியாக சொன்னான்.

ரவி சொன்னதை கேட்டு நான் அசந்துப் போனேன்.நான் உடனே ரவியை பார்த்து “ஏன்ன ரவி சொல்றே.ஒரு பையனு க்கு நுறு ரூபா ‘ட்யூஷன் ·பீஸ்’ வாங்கினா கூட உனக்கு மாசம் முப்பதாயிரம் சுலபமா கிடைக்குமே.அந்த பணம் உன் குடும்ப செலவுக்கு ரொம்ப உதவியா இருக்குமே” என்று கேட்டேன்.

உடனே ரவி கொஞ்சம் கூட யோஜனை பண்ணாம “இதோ பார் வரதா, உன் கிட்டே ‘தன லஷ்மி’ இருக்கா.நீ அந்த ‘தன லக்ஷ்மியை’ வச்சு வியாபாரம் பண்ணலாம்.அந்த ‘தன லக்ஷ்மியை இன்னும் பெறுக்கலாம்.ஆனா என் கிட்டே இருப்பது ‘சரஸ்வதி’.அவ பிறப்பில் இருந்து இன்னை வரைக்கும் என் உடம்போடு இருந்து வறா.நான் அந்த சரஸ்வதியை வச்சு எந்த காரணம் கொண்டும் வியபாரம் பண்ண மாட்டேன்.தவிர நான் கணக்கு சொல்லிக் குடுக்கும் எல்லா பிள்ளங்களும் ரொம்ப ஏழை பிள்ளைங்க.அவங்க கிட்டே நான் எப்படி ’பீஸ்’ வாங்கறது சொல்லு.அதுக்கு என் மனசு இடம் கொடுக்கலே”என்று அமைதியா சொல்லி விட்டு தன் மணிக்கட்டில் கட்டி இருந்த கடிகாரத்தை தன் கண்களுக்கு பக்கத்திலே வச்சு பாத்து விட்டு “வரதா, மணி ஒன்பது அடிச்சிடுச்சி.நான் இப்போ கிளம்பினா தான் கடைசி பஸ்ஸைப் பிடிச்சு வீட்டுக்கு போவ முடியும்.நான் வரட்டுமா.உன்னையும் உன் சம்சாரம் க்ரேஸியையும் சந்திச்சதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லிட்டு எழுந்து கொண்டான்.

உடனே நானும் க்ரேஸியும் ரவியுடன் எழுந்துக் கிட்டோம்.

நான் ரவியை பாத்து “ரவி நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே ‘ப்லீஸ்’. இன்ன தேதியிலே எனக்கு பாங்கிலே கோடி கோடியா பணம் இருக்கு. என் பையனும், பொண்ணும், அமொ¢க்காவிலே மில்லியன் மில்லியனா டாலர் வச்சுக் கிட்டு இருகாங்க.என் பணம் அவங்களுக்கு அவசியமே இல்லை.எல்லாத்துக்கும் மேலே எனக்கு இந்த வாழக்கைக்கு அஸ்திவாரம் போட்டவனே நீதானே.நான் நாளைக்கே உனக்கு பத்தோ,இருதோ லக்ஷ ரூபாய் தரேன்.நீ அந்த பணத்தை வச்சு கிட்டு,உன் கண்களுக்கு ‘காட்ராக்ட்’ ஆபரேஷன் பண்ணி கொண்டு நீ பழையபடி உன் கண்களே ஒளி வர வழிச்சு கிட்டு,உன் குடும்பத்தோடு சந்தோஷமா இருந்து வாயேன்.நீ இது வரைக்கும் வாழ்ந்து வந்த ஏழை வாழ்க்கைக்கு ஒரு முடிவு வச்சு விட்டு,மீதி இருக்கிற கொஞ்ச வருஷமாவது சந்தோஷமா இருந்து வாயேன். இப்போ நானும் க்ரேஸியும் உன்னை உன் வீட்டுகிட்டே ‘ட்ராப்’ பண்ணிட்டு அப்புறமா நாங்க எங்க பங்களாவுக்கு போறோம் ”என்று கண்களில் கண்ணீர் பெருக ரவி கையைப் பிடித்து கொண்டு கெஞ்சினேன்.

ரவி மெல்ல சிரிச்ச்சு கிட்டு “வரதா, நீ சொன்னதுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’ நீ ஒன்னை நல்லா ஞாபகம் வச்சுக்கணும்.இப்போ நான் உன் கிட்டே பணத்தை கை நீட்டி வாங்கி கிட்டா,அது உனக்கு நான் அன்னைக்கு கணக்கு சொல்லிக் கொடுத்ததுக்கு வாங்கிற ‘·பீஸ்க்கு’ மாதிரி தானே ஆவும்.நான் உனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னே சொன்னது போல எனக்குள்ளே இருக்கிற சரஸ்வதியை எந்த காரணம் கொண்டும் நான் விக்க மாட்டேன். சாரி” என்று பொறுமையாக ச் சொன்னான்.

ரவி சொன்னதைக் கேட்டதும் நான் மறுபடி யும் அசந்து போனேன்.

’ஏதாவது சொல்லி ரவியை பணம் வாங்கிக்க பண்ணனும்ன்னு நினைச்சு,நான் விடாம “ரவி,நீ சொல்றது சா¢யே இல்லே.பள்ளிக் கூடங்களிலே கூட கணக்கு வாத்தியார் பள்ளி பசங்களுக்கு கணக்கு சொல்லிக் குடுத்துட்டு மாசம் பொறந்தா சம்பளத்தை கை நீட்டி வாங்கிக்காரு.அது அவங்க சரஸ்வதியை விக்கற மாதிரி தானே.இல்லையா சொல்லு” என்று விடாமல் கேட்டு ரவியின் வாயையையே பாத்து கிட்டு இருந்தேன்.

ரவி மிகவும் நிதானமா “இல்லே வரதா,அந்த கணக்கு வாத்தியார் பள்ளி பசங்களுக்கு கணக்கு சொல்லி குடுத்து விட்டு,அவர் மணைவி குழந்தைங்களை காப்பாத்த வேண்டிய நிர்பத்தம் அவருக்கு இருக்கு.அது அவர் செய்யற ‘ப்ர·பஷன்’.அவர் மாச சம்பளம் வாங்கற தலே தப்பு இல்லே.நான் ஒரு ‘ப்ர·பஷனல்’ இல்லே.ஒரு ‘ப்ர·ப்ஷன்’ பண்ணா தான் அந்த மாதிரி மாச சம்பளம் வாங்கிக்கலாம்.நான் ஒரு ‘அமெச்சூர்’ தானே.நான் ‘·பீஸ்’ வாங்குவது தப்பு.நான் உன்னோடு உன் காரிலே, என் வீட்டு கிட்டெ இறங்கிகறேன்னு வச்சுக்க.எனக்கு இந்த ‘சௌகரியம்’ எல்லா சண்டேயும் கிடைக்காதே.எல்லா சண்டேயும் எனக்கு நிரந்தரமா கிடைக்கிற ‘சௌகா¢யத்தை’ தான் நான் அணுபவிச்சு வரணும்.அதனாலே நான் பஸ்லே என் வீட்டுக்கு போறேன்”என்று சொல்லி விட்டு, தள்ளாடி தள்ளாடிக் கிட்டே பஸ் ஸ்டாண்டை நோக்கி போய்க் கிட்டு இருந்தான் ரவி.

ரவி உருவம் வெளிச்சத்தில் தொ¢யும் வரை அவனையேப் பார்த்துகிட்டு நின்று கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து அவன் உருவம் தெரு விளக்கு இல்லாத பகுதிக்கு போன பிறகு

அவன் மொத்த உருவம் மறைந்து விட்டது.

நான் என் கண்களைத் துடைத்து கொண்டேன்.

நான் யோஜனைப் பண்ணினேன்.

’அந்த காலத்தில் வாழ்ந்த கணக்கு புலி ராமானுஜம் இப்படி தான் உடம்பு வந்து, ஏழ்மையிலெ வாழ்ந்து,ஏழ்மையிலேயே ஒரு நாள் அவர் உயிர் பிரிஞ்சு விட்டது என்று நாம படிச்சு இருக்கோமே.இப்போ கண்கூடா நான் என் நண்பன்,என் கணக்கு குரு ரவியை பார்க்கிறேனே’ என்று நினைத்தேன்.ரவி சோக கதையும், அவன் ஏழ்மை நிலைமையும்,அவன் அடுத்த ஜென்மத்திலே வச்சு இருக்கிற நம்பிக்கையும் நினைச்சு என் கண்களில் வழிந்த கண்ணீரின் ரெண்டு சொட்டு தரையில் விழுந்தது.

என் வாழ்க்கையை வகுத்து கொடுத்த அந்த ‘தெய்வத்துக்கு’ நான் வேறே எந்த கைமாறும் பண்ண முடியவில்லையேன் என்று வருத்தப் பட்டு கிட்டு நின்று கொண்டு இருந்தேன்.
திடீரென்று ‘ஏன் நாம் ரவி கூட போய் அவனை பஸ்ஸாவது ஏத்தி விட்டு வரக் கூடாது.ரவிக்கு கண் பார்வை வேறு சரி இல்லையே.உடம்பும் வேறே சா¢ இல்லயே’ என்று நினைத்து நான் க்ரேஸியை அழைத்து கொண்டு வேகமாக பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினேன்.

”ரவி,உன் கண் பார்வை சா¢ இல்லயே உன்னை பஸ் ஏத்திவிடலாம்ன்னு நினைச்சு, நானும் க்ரேஸியும் வந்து இருக்கோம்”என்று சொல்லி ரவி பக்கத்தில் நின்று அவன் கையைப் பிடிச்சு சொன்னேன்.

ரவி வீட்டூக்குப் போகும் பஸ் காலியாக வந்து நின்று கொண்டு இருந்தது.

நான் ரவியின் கையைப் பிடிச்சு மெல்ல பஸ்லே மெல்ல ஏத்தி,முதல்லே காலியா இருந்த ஒரு சீட்லே உக்கார வைத்து விட்டு,என் தலையை நிமிர்ந்து பார்த்தேன்.

பஸ் வெளிச்சத்திலே “என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்,உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்க்கு” என்று திருவள்ளுவர் எழுதி இருந்த குறளைப் படிச்சேன்.
எனக்கு பத்து தேள்கள் கொட்டியது போல இருந்தது.மனம் மிகவும் வருத்தப் பட்டது.

என் தலையை சாய்ச்சு கிட்டே பஸ்ஸை விட்டு வெளியே வந்தேன்.

ரவியின் வைராக்கியதை எண்ணிய போது,என் மெய் சிலிர்த்தது.

க்ரேஸியை அழைச்சு கிட்டு காரிலே ஏறி பங்களாவுக்கு வந்துக் கிட்டு இருந்தேன். வர வழிலே க்ரேசிக்குஇடம் என் ‘கணக்கு குரு ரவியின்’ முழு சோக கதையையும் விவரமாக சொல்லி கொண்டு வந்தேன்.ரவியின் முழு சோக கதையை கேட்டதும்,எந்த கண்டத்திலோ பொறந்து,எந்த கலாசாரத்தையோ தழுவிய வரும் க்ரேஸி உடனே “What a great,and noble soul.What a great determination in life” என்று சொல்லி விட்டு,தன் கையில் வச்சுக் கிட்டு இருந்த கைகுட்டையாலே தன் கண்களைத் துடைத்து கொண்டு இருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *