வேலைக்கு ஆள் தேவை – அறிவிப்பைப் பார்த்து உள்ளே நுழையத்
தீர்மானித்தான் சிவா.
கேட்டுக்கு அருகில் புல் செதுக்கியவரிடம் வேலையைப் பற்றி விசாரித்தான்.
‘’இந்த முதலாளி ஒரு மாதிரி, ரொம்பக் கோபக்காரரு’’
‘’அதனாலென்ன, கோபமிருக்கிற எடத்தில குணமிருக்கும்’ சிவா பதில் சொல்ல…
‘முதலாளியம்மா இருக்கே? அது முதலாளி மாதிரி பத்து மடங்கு’’
‘’இருக்கட்டுங்க., அப்பத்தானே நிர்வாகமும் பண்ண முடியும். அம்மாவை இப்பப் பார்க்க முடியுமா?’’ தயங்கியவாறு சிவா கேட்க, ‘’பாரக்க முடியுமாவா? நீ பாத்துக்கிட்டு இருக்கியே அவர்தான் உன் முதலாளி’ தன்னைச் சுட்டிக் காட்டினார், தோட்டக்கார முதலாளியாய் அவதாரமெடுத்திருந்தார்.
‘’உனக்கு சம்பளம் மூவாயிரம். நாளையிலிருந்து வேலையிலே சேர்ந்திரு. நீ எல்லாவற்றிற்கும் எவ்வளவு பணிவான பதில் சொன்னே. தோட்டக்காரன்ட்டேயே இவ்வளவு பணிவா பேசினா, முதலாளியிடம் எப்படி நடப்ப…!! ஆனால் போன வாரம் ரகுன்னு ஒருத்தன் வந்தான். சே…வெறுத்துப் போச்சு’’
..வெளியே வந்து செல்போனில் ரகுவிடம் பேசினான்….’தாங்க்ஸ்டா மச்சி! நீ ரூட் தந்திருக்காட்டா வேலை கிடைச்சிருக்காது!’’
– கே.பாரதிமீனா (2-1-2008)