கேசவன் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிட்டு, சட்டைப் பையில் சினிமா டிக்கெட் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தன் பையை எடுத்துக்கொண்டு மேனேஜரின் அறைக்குச் சென்றான்.
”சார்! ஹாஃப் டே லீவு வேணும். என் வொய்ஃபுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. அவளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போகணும்!” என்றான்.
அவனை சில விநாடி நேரம் உற்றுப் பார்த்த மேனேஜர், ”ஸாரி கேசவன், உங்க லீவை சாங்ஷன் பண்ண முடியாது! போய் உங்க வேலையைப் பாருங்க!” என்றார்.
”ஏன் சார்?”
”நீங்க பொய் சொல்றீங்க! கொஞ்சம் முன்னாலதான் நீங்க இருக்கீங்களான்னு கேட்டு, உங்க வொய்ஃப் பேசினாங்க. நல்லா, தெளிவாதான் பேசினாங்க. அவங்க பேசினதை வெச்சுப் பார்க்கிறப்போ, அவங்களுக்கு உடம்பு சரியில்லேன்னு நீங்க சொன்னது நம்புற மாதிரி இல்லே! இன்னொரு முறை இப்படிப் பொய் சொல்லாதீங்க. பொய்யர்களை எனக்கு அறவே பிடிக்காது!”
”ஸாரி சார்!” என்ற கேசவன் திரும்பி நடந்தான். அறைக் கதவருகில் வந்து நின்றவன், மேனேஜரைப் பார்த்து, ”அப்படீன்னா, இந்த ஆபீஸ்ல ரெண்டு பேரை உங்களுக்குப் பிடிக்காதா சார்?” என்றான்.
”ரெண்டு பேரா?”
”ஆமாம் சார், ரெண்டு பொய்யர்கள். ஒண்ணு நான்! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே!”
– 21st மே 2008