ஆள் கடத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 8,585 
 

டீவியில் ஃப்ளாஷ் நியுஸ் ஓடிக் கொண்டுயிருந்தது “இன்று முதுமலைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி குழு ஒன்று தீவிரவாதிகளாள் கடத்தப்பட்டது, இந்த குழுவில் முதலமைச்சரின் பேரனும் அடங்குவர்”.

எதிர்க்கட்சி தலைவரும் முன்னால் முதலமைச்சருமான சபேசன் உடனே தன் பி.ஏவை கூப்பிட்டு “எப்படியும் முதலமைசர் தன் பேரனை காப்பாத்த பேச்சு வார்த்தைக்கு நடத்தி அவங்க கோரிக்கையை நிரைவேத்துவாரு, நாம உடனே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு வச்சி இருக்கு எதிரா அறிக்கை விடுவோம், உடனே ஏற்பாடு பண்ணு” என்று உத்திரவிட்டார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் “எல்லோருக்கும் வணக்கம்! இப்ப நடந்துகிட்டு இருக்க விசயம் எல்லோருக்கும் தெரியும், அதனால் நேரடியாக விசயத்துக்கு வரேன். இந்த அரசாங்கம் இத இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், அது இல்லாம அவங்ககோரிக்கை ஏத்துகிட்டு அது படி நடந்தா இதே மாதிரி சம்பவங்கள் மேலும் தொடரும். எல்லோரும் இந்த மாதிரி கடத்திக்கிட்டு போய் வேற வேற கோரிக்கையை வைப்பாங்க. அது மாதிரி சம்பவங்கள் நடக்காம இருக்க இந்த அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கனும்”.

“ஸார்! இந்த கடத்தலை பத்தி இன்னும் முழுமையாக செய்திகள் வரவில்லை, கடத்தல்காரர்கள் கோரிக்கையையும் என்னனு தெரியலை அதுக்குள்ள நீங்க ஏன் அவங்க கோரிக்கை ஏற்க கூடாதுனு உறுதியாக சொல்றீங்க”.

“அது எந்தளவு சிறிய கோரிக்கையாய் இருந்தாலும் ஏற்க கூடாது, நான் முதலமைச்சராக இருந்திருந்தால் அப்படிதான் உறுதியாக நடவடிக்கை எடுத்து இருப்பேன், மேலும் இந்த விஷயமாக கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன், இப்பொழுதே அவரை சந்திக்க போகிறேன், சந்திப்பு முடிந்தவுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன், நன்றி! வணக்கம்!” என்று முடித்தார்.

உள்ளே சென்றவுடன் தன் பி.ஏவை கூப்பிட்டு “இதை உடனே நம்ம சேனல்ல ஒளிபரப்பு பண்ண சொல்லு, மேலும் உடனே சேனல்ல ஒரு விவாதத்துக்கும் ஏற்பாடு பண்ண சொல்லு, அதுல பேச்சு வார்த்தை மூலமாக பனையகைதியை மீட்க கூடாதுன்னு தீவிரமாக இருக்கரவங்கள மட்டும் பேச சொல்லு, அரசு உடனடியாக உறிதியான நடவடிக்கை எடுக்கனும்னு முடிவு சொல்ல ஏற்பாடு பண்ணு, நம்ம சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாத்தையும் உடனே வர சொல்லு, நாளைக்கு சட்டசபையிலே இதவச்சி மிகப்பேரிய பிரச்சனை பண்ணுவோம்”. “சரிங்க தலைவரே! அப்படியே பண்ணிடுவோம்” என்றான் பி.எ சங்கர்.

“அப்புறம் இந்த முதலமைச்சர் ஒரு வளவள கொழகொழ, கண்டிப்பா பேச்சுவார்த்தை மூலமாக தான் இந்த பிரச்சனையை தீர்க்க பார்ப்பார், அதனால் நம்ம தோழமை கட்சிகள் எல்லாத்தையும் விட்டு போலிஸ் கமெண்டோ நடவடிக்கை மூலமாக தான் முடிக்கனும் பேச சொல்லுங்க, சி.ம் இதுக்கு ஒத்துகிலனா போலிஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு அது மேல ஒரு வருத்தம் வரும் அத வச்சு நாம் பிரச்சனை வளக்களாம்”.

“இந்த பிரச்சனையை வச்சீ, இத பெருசாக்கி சட்டம் ஒழுங்கு சரியில்லைனு சொல்லி, நம்ம கூட்டணி மத்திய அரசை இந்த அரசை கலைச்சிட்டு, நாம ஆட்சிக்கு வந்திரலாம், அதனால எல்லாத்தையும் சீக்கிரம் செய்ங்க”.

“சரிங்க தலைவரே!” என்று விலக்கினான்.

சோபாவில் மகிழ்ச்சியுடன் அமர்ந்தார். முதலமைச்சர் நாற்காலி அவன் கண் முன்னே வந்து வந்து போனது. போன முறைஅவர் ஆட்சியில் இருந்த போது, இதே மாதிரி ஓர் சாதி கலவரத்தை பிரச்சனையாக்கி இவர் ஆட்சியை கவிழ்த்து அவர் முதலமைச்சர் ஆனார். இப்பொழுது “என் முறை! பழிவாங்கும் முறை” என்று சிந்தனையுடன் சாய்ந்தார்.

“தலைவரே! சேனல்ல இப்ப இந்த விவாதம் தான் போய்கிட்டு இருக்கு. நாம நினைச்சத விட இது பெரிசு ஆயிடுச்சி, இப்ப தான் மத்திய மந்திரி கூப்பிட்டா, இந்த அரசு கவிழ்ப்புக்கு எந்த மாதிரி உதவி வேணுமுனாலும் கேட்க சொன்னார்”. இப்ப பத்திரிக்கையாளர் வேற வெளிய வெய்ட் பண்றாங்க மறுபடியும் உங்க கருத்து கேட்க.

சபேசன் “நான் வர வரைக்கும் அவங்ககிட்ட முதலமைச்சர் தான் சொந்தபந்தங்களுக்காக, மக்களின் வரி பணத்தை தவறாக உபயோகபடுத்த கூடாது என்று நம்ம பேச்சாளர்களை விட்டு பத்திரிக்கையாளரிடம் பேச சொல்லு”.

“ஆமாய்யா! கண்டிப்பாக அந்தாள் குடும்பத்தின் அழுத்தத்தின் காரணம சமாதனாமாக தான் போக பார்ப்பார், ஆனா இப்ப நம்ம மக்களிடம் இந்த பிரச்சனை வேற விதமாக கொண்டு போனதால் அவரும் இப்ப குழம்பியிருப்பார்”.

“ஆமாங்க தலைவரே! அவரு இப்ப பதவியா? பாசமா? தெரியாம குழம்பியிருப்பாரு”.

“சூப்பர் தலைவரே! சி.எம்க்கு பல செக்கு வைக்கிரிங்க”

“சரி ஒரு பத்து நிமிசத்துல வரேன், நீ உள்ளே போய் அம்மாவை காபி கொண்டு வர சொல்லு”.

மனைவி காபியுடன் வந்தாள், “ராஜம்! சந்தோசமான விசயம் இப்ப நான் நடத்திக்கிட்டு இருக்க சதுரங்க காய்ங்க சரியா வந்துச்சினா அடுத்த வாரமே நா மறுபடியும் சி.எம்”.

“உங்க அரசியல் எனக்கு எதுக்கு? நீங்க சந்தோசமா இருந்தா சரி”, “சரி! குடும்பத்துல எல்லார்கிட்டயும் சொல்லிடு, எங்க நாலைந்து நாள கிருஷ்ணனை பார்க்க முடியல”.

உங்க பேரன் உங்கள மாதிரிதான், எங்க போறான், எப்ப போறான் ஒண்ணும் தெரியல, எங்கெயோ வெளியூர் போனவன் நேத்து தான் அவங்க அம்மாகிட்ட போன் பண்ணி இன்னும் இரண்டு நாள் ஆகும்னு சொன்னான்”.

“வெளியூரா! எங்க” என்றான் சிறு படபடப்புடன்.

“தெரியல! எங்கயோ ஊட்டியோ, முதுமலையோ சொன்னான்”.

டீ.வியில் ஃப்ளாஷ் நியூஸில் “மேலும் கடத்தபட்ட மற்றவர்களின் விவரம் தெரிந்தது.

1.ராகவ், முதலமைசரின் பேரன்
2.முகேஷ், தொழிலதிபர் ராம்லால் சேட் மகன்
3.கிருஷ்ணன், முன்னாள் முதலமைச்சர் சபேசன் பேரன்
.
.
.
.
.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *