மூனுரோத சைக்கிள் வண்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 11,432 
 

ஆரிபா வீட்டில் அன்று காலையில் இருந்தே சலசலப்பு சந்தோசம் களை கட்டிக் கொண்டிருந்தது. ஆரிபாவின் இளைய மகன், மூத்த மகள் குடும்பத்தார்களும் அங்கு சமூகமாயிருந்தனர்.

இதற்குக் காரணம் ஆரிபாவின் மூத்த மகன் கபில் தனது குடும்ப சகிதமாக 12 வருசங்களுக்குப் பிறகு மலேசியாவிலிருந்து வருகை தருவதேயாகும். அங்கு அவர் இன்ஜினியராக கடமை செய்து வருகின்றார்.

இன்று காலை 6 மணிக்கெல்லாம் கட்டு நாயக்கா விமான நிலையம் வந்து ஒரு மாத விடுமுறையை சந்தோசமாக கழித்துச் செல்ல வாடகைக் காருடன் வருவதாகவும் தகவல் கிடைத்ததால் எல்லோரும் ஆவலுடன் அவர்களை எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

காலை 10 மணியைத் தாண்டும் வேளையில் ஆரிபாவின் வீட்டின் முன்னால் காரின் ஹோர்ன் சப்தம் கேட்டதால் ஆவலுடன் ஓடி வந்து வந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

கபீலுக்கு 10 வயதில் பயீஸா என்ற மகளும் 6 வயதில் பமிர் என்ற மகனும் இருந்தார்கள். மனைவி நாஜிலா சொந்த மாமி மகள். இவளின் தாய் தந்தைக்கு ஒரே மகள். இருவரும் இப்போது உயிருடன் இல்லை. பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்பவர்களாம். ஆனால் வீட்டில் தமிழ் தான் பேசிக் கொள்வார்களாம்.

ஆரிபா தன் பேரன் பேத்தி இருவரையும் அன்போடு இறுக அணைத்து முத்தமிட்டாள். கபீல் சொல்லியிருந்தவாறு டெடிம்மா என்று ஆரிபாவை அழைத்தார்கள். மனைவி நஜீலாவும் மாமி, மாமி நாங்கள் தங்கியிருக்கும் ஒரு மாதத்திற்கும் நீங்க எந்த வேலையும் செய்யக் கூடாது என்று அன்புக் கட்டளையிட்டார்.

இவர்கள் வந்த இரண்டாம் நாள் காலையில் பேத்தி வீட்டின் முன்னாலுள்ள கட்டு ஒன்றில் அமர்ந்து சித்திரம் ஒன்று வரைந்து கொண்டிருந்தாள். அப்போது வீட்டின் கேட்டிலிருந்து திடீரென்று “பாண்காரன் வந்திருக்கேன் வாங்கோ வாங்கோ„ என்று உரக்கச் சத்தமிட்டான்.

இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பயீஸா பயந்த நிலையில் டெடிம்மா, டெடிம்மா என்று சத்தமிட்டவாறு உள்ளே ஓடினாள். பதை பதைக்க ஓடிவந்த ஆரிபா அவளை அணைத்துக் கொண்டு என்னம்மா நடந்திச்சி என்று கேட்கும் போதே கபீலும், நாஜிலாவும் வந்துவிட்டார்கள்.

கேட்டடியில் யாரோ எதையோ சொல்லி என்னை பயமுறுத்துராங்க டெடிம்மா என்றதும் ஆரிபாவுக்கு ஒரே சிரிப்பு, இரும்மா வாரேன் என்று கூறிவிட்டு வழமை போன்று வாங்கும் பணிஸ், கேக், றோஸ்பாண் என்பவைகளை வாங்கிக் கொடுத்தாள் ஆரிபா.

அதன் பின்னர் அவன் வருகை பழக்கமாகி விட்டது. பயீஸாவுக்கு. இது நடந்து 3 நாட்ளுக்குப் பின்னர். வலது தொடைக்குக் கீழே காலை இழந்த ஒருவன் யாசகம் கேட்டு வலது பக்க கக்கத்தில் ஊன்று கோலை வைத்து கஸ்டப்பட்டு வந்துகொண்டிருந்தான்.

பயீஸா வழமை போன்று சித்திரம் வரைந்து கொண்டிருந்தால். நே நேம்மா என்று குரல் கொடுத்தாள் பின்னர் தான் பாயிஸா நிமிர்ந்து பார்த்தாள். கால் ஊனமானவனைக் கண்டதும் நீ யார்? உனக்கு என்ன வேணும்? என்ற பாயிஸாவிடம், நீ யரம்மா? புதுப் பெண்ணாய் இருக்கிறாய்.
அப்போது அங்கே ஆரிபா வந்து ஆ.. பக்கீர் குட்டியா வா.. வா.. ஆமா இது யாரம்மா? புதுக் குட்டி. இதுதாம்மா என் பேத்தி மலேசியாவில் இருக்கும் என் மகனின் பொண்ணு. குடும்ப சகிதமாக வந்திருக்காங்க பக்கீர் குட்டி. ஒரு மாசம் அளவில் இங்கு தங்கியிருப்பாங்க.

அப்படியாம்மா… ரொம்பச் சந்தோசம். இரு இரு வர்ரேன் என்று உள்ளே சென்றவள் ஒரு 50 ரூபா நோட்டுடன் வந்து அவனிடம் கொடுத்தாள். இது என்னம்மா இன்டைக்கு கொஞ்சம் ஜாஸ’தியாய் இருக்கு. இது என்ட மகன், மருமகள் வந்த சந்தோசம்பா, போய்டு வா.

வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த பயீஸா கொஞ்சம் இருப்பா, நீ எப்போவும் இங்கு வருவீயா… இல்ல தாயே கெழமையிலே ஒரு நாளைக்கு தாம்மா வருவேன். இன்று வெள்ளிக் கெழம, இனி அடுத்த வெள்ளிக் கெழம தான்.

அப்போ மற்ற நாளெல்லாம் சனி, ஞாயிறு நாளையிலே கடைகளுக்கு பேவேம்மா, மற்ற நாளையிலே போனா, பணகாரண்ட கடையிலே கூட ஏசித் துரத்திடுவாங்க. அதனாலே பஸ் ஏறி அடுத்தடுத்த ஊர்களுக்கும் போவேனும்மா. நடந்து நடந்து கஸ்டத்துடன் யாசகம் செய்வேம்மா என்றான்.
பயீஸாவுக்கு ஏதோ பக்க்Pர் குட்;டிக்குகு உதவனும் போலவே தோன்றியது. அவன் அங்கிருந்து சென்றதும் ஆரிபா டெடிம்மாவிடம், ஏன் டெடிம்மா, இந்தப் பக்கீர் குட்டிக்கு பொறக்கும் போதே கால் இப்படித்தானா டெடிம்மா?

இல்லேம்மா ஒரு கார் விபத்திலே அகப்பட்டுத்தாம்மா இப்படி வந்திச்சி அவனுக்கு, அவனாலே யாருக்கும் எந்தத் தொந்தரவுமே இல்லே. மற்றவர்களிடம் ஏதும் கேட்டு இல்லையென்று சொன்னாலும், சந்தோசமா முகம் கோணாமல் போய் விடுவான். என்னம்மா செய்வான் அவனும் மூனு பிள்ளைங்களையும், பெண்டாட்டியையும் வெச்சி காப்பாத்தணுமே.

அன்று முழுக்க பாயிஸாவுக்கு பக்கீர் குட்டியை பற்றிய சிந்தனைதான். மலேசியாவுக்கு போகு முன் அவனுக்கு ஏதாவது உதவி செய்து விட்டுத் தான் போக வேண்டும் என்று திடசங்கற்பம் கொண்டாள்.

இரண்டு நாள் சென்றதும் திடீரென காலை நேரத்தில் பயீஸாவின் முன் பக்கீர் குட்டி காட்சியளித்தான். அவள் அவனை எதிர்பார்க்கவே இல்லை. நான் இன்டைக்கு ஏதும் கேட்டு வரலேம்மா. அடுத்த ஊருக்கு போரேன். ஏதோ ஒன்னை பாத்துட்டுப் போகலாமுனு நெனைச்சேன் அதாம்மா. நான் ஒன்ன சும்மா அனுப்பப் போரல்ல. ஆனா, நீ கொஞ்ச நேரம் அப்படியே நிக்கனும், நான் ஒன்னை வரையப் போறேன் என்றாள்.

சரிம்மா. என்று பாயிஸா சொன்னது போல் அவள் முன் நின்றான் பக்கீர் குட்டி. தலையைச் சாய்த்து சாய்த்து பென்சிலால் இலேசாகக் கீறினாள். சரி இதை நான் தெளிவாகக் கீறிக் கொள்வேன். இந்த இதை வெச்சிக் கொள் என்று தான்வைத்திருந்த நூறு ரூபா நோட்டைக் கொடுத்தாள்.

வேணாம்மா, உன் செலவுக்கு வெச்சிருந்த பணம், பரவாயில்ல பக்கீர் குட்டி நான் டெடியில்லாட்டி மம்மியிடம் வேங்கிக் கொள்வேன் நீ கொண்டு போ என்றதும் அங்கிருந்து சென்றான் அவன். எப்படியும் அவன் உருவத்தை நிறம் தீட்டிப் பார்க்க வேண்டும் என்று அதிலேயே ஈடுபட்டாள்.

சிறிது நேரம் சென்றதும் டெடிம்மா டெடிம்மா இதப் பாருங்களேன் என்று அவள் வரைந்த படத்தைக் காட்டினாள். என்னம்மா உனக்கு இவ்வளவு திறமையா இருக்கு. அப்போது அங்கு வந்த மகன் கபீலும் நாஜிலா மருமகளும் இதென்ன அங்கே மலேசியாவில் பாடசாலை விட்டு வந்தாலும் விடுமுறை நாளிலும் வரைஞ்சி வரைஞ்சிட்டே இருப்பாள் நாங்களும் எல்லாம் வேங்கி வேங்கிக் குடுத்திட்டே இருப்போம் மாமி என்றாள் நாஜிலா.

அப்போது ஆரிபாவின் மூத்த மகளின் மகன், சா… அருமையாக இருக்கு, இந்த ஊர்ல சாகித்திய விழா நடைபெற இருக்கு அங்கிள். அதில் 10 – 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான வரைதல் போட்டியும் இருப்பதனால், பாயிஸாவை இதில் பங்குபற்ற வைக்கலாமே? அங்கிள். முதல் பரிசு 10 ஆயிரம்.

சீச்சி இதெல்லாம் வேண்டாம். அவ விடுமுறையைக் கழிக்க வந்தவ, ஏதோ ஒரு எண்ணம் தோன்றவே டெடி டெடி நான் அதில் பங்கு பற்றி என் திறமையைக் காட்டப்போறன் ஒரு சான்ஸ் தாங்க டெடி. ஓக்கே நீ விரும்புகின்ற படியால் பங்குபற்றிப்பார், தாங்ஸ் டெடி, என்று மனம் குளிர்ந்தாள் பயீஸா.

பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏனைய சில போட்டி நிகழ்வுகள் நடைபெற்ற பின்னர்அன்றைய தினத்தில் 10 – 12 வயதினருக்கான வரைதல் போட்டி நடைபெற்றது. 6 தலைப்புக்களில் ஒன்றைத் தெரிவு செய்து வரையும் படி கேட்கப்பட்டிருந்து.

அவைகளில் ஒன்று ஊனமான பிச்சைக்காரனனொருவரின் தோற்றம் என இருந்தது. பயீஸாவுக்கு ஒரே உற்சாகம். பக்கீர் குட்டியின் தோற்றத்தில் ஏற்கெனவே வரைந்த அனுபவத்தை வைத்து கையை நீட்டி யாசகம் கேட்பது போல் வரைந்து, பசியின் களையை காட்டும் முகபாவத்தையும் அருமையாகவும் அமைத்துக் கொடுத்து விட்டு வந்தாள் பயீஸா.

பத்து நாட்கள் செல்ல ஆரிபா வீட்டு விலாசத்திற்கு கபீல்-பாயீஸா எனப் பெயரிடப்பட்ட கடிதம் ஒன்று வரவே, கபீல் தான் அதனைப் பிரித்துப் பார்த்தார் என்ன ஆச்சரியம் பயீஸாவுக்குத்தான் முதல் பரிசு மூன்று தினங்களுக்குப் பிறகு நடைபெறும் சாகித்திய விழாவில் பரிசிலைப் பெற்றுச் செல்லுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்று பிரதேச செயலகம் கோலாகலமாக காட்சியளித்தது. ஆம் அன்றைய தினம் சாகித்திய பரிசளிப்பு விழா. பயீஸா தன் குடும்பத்தார்கள் சகிதம் அங்கு சமூகமளித்திருந்தாள். தான் நினைத்த காரியம் நிறைவேறப் போவதை எண்ணி உள்ளார்ந்த மகிழ்ச்சி அடைந்தாள் அவள்.

சாகித்திய விழாவின் ஏனைய போட்டிகளில் பங்கு கொண்ட நிகழ்ச்சிக்கான பரிசில்களை சமுகமளித்த அதிதிகளைக் கொண்டு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. 10 – 12 வயது சிறுவர்களின் வரைதலுக்கான பரிசளிப்பு அடுத்து இடம் பெறப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் பிரதேச செயலாளர் அவர்களே முன்வந்து பரிசில்களை வழங்க ஆயத்தமானார். இந்த வரைதல் போட்டியில் முதல் இடத்தை வகி;ப்பவர் மலேசியாவில் இருந்து தனது பாட்டியார் வீட்டிலே விடுமுறையைக் கழிக்க வந்த சிறுமி கபீல் பயீஸாவாகும். இதற்கான பரிசு 10 ஆயிரம் ரூபா என்றாலும் எனது பாராட்டுப் பரிசாக 5 ஆயிரத்தையும் சேர்த்து 15 ஆயிரமாக் கொடுக்கவிருக்கிறேன்.

நாங்கள் ஊனமான ஒரு பிச்சைகாரனுடன் மேலும் 5 தலைப்புக்கள் கொடுத்து வரையுமாறு கேட்டிருந்தோம் இச்சிறுமி வரைந்திருந்த சித்திரம் ஒர் ஊனமான பிச்சைக்காரன். அதைப் பார்த்த போது என்னையே கண்கலங்க வைத்துவிட்டது அச்சித்திரம.; தன் ஏழ்மையால் சாப்பிடாமல் இருந்த முகத்தோற்றம், அதற்காக யாசகம் கேட்கும் வகையின் தோற்றம.; இதனைக் காண்பிக்கவே ஒளிப்பதிவு திரையை இங்கு ஓழுங்கு செய்திருக்கேன் பாருங்கள்.

அதனை இயக்குபவன் அச்சித்திரத்தை பெரிதாக திரையிட்டான். அந்த மண்டபம் ஒரே அமைதி அச்சித்திரத்தை பார்த்தவர்கள் சிலர் கண்கலங்கினார்கள். அத்திரை நிறுத்தப்பட்டது. கரகோசங்கள் மண்டபத்தை அதிரச் செய்தது. அதிதிகளிடமிருந்தும் குசுகுசுப்புக்கள், பார்வையாளர்களிடமிருந்தும் சலசலப்புக்கள்

5 அதீதிகளும் 2 ஆயிரம் வீதம் 10 ஆயிரத்தை வழங்கினார்கள். பார்வையாளர்களில் ஒருவன் வந்து வசூல் செய்யப்பட்ட தொகையென 5 ஆயிரத்தைக் கொடுத்தான். இப்போது பயீஸாவுக்கு 30 ஆயிரம் வழங்கப்பட இருந்தது. பாராட்டுக்குரிய சிறுமி கபீல்-பயீஸாவை மேடைக்கு அழைக்கின்றேன் என்றதும் இரண்டாம், மூன்றாம் பரிசில்களை கொடுத்த பின்னர் மேடைக்கு வருகிறேன் என்றாள் பயீஸா.

நடந்து சென்று மேடை செல்லும் வரை வந்திருந்த அத்தனை ஜீவன்களின் கண்களும் பயீஸாவையே படம் பிடித்தன. மேடைக்கு வந்ததம், பயீஸாவின் கையைக் குலுக்கிவிட்டு 30 ஆயிரம் கொண்ட உறையை அன்பளித்தார் செயலாளர். அதனை வாங்கும் போது எத்தனையோ கெமராக்கள் கண்சிமிட்டிய வண்ணமிருந்தன.

உடனே பயீஸா செயலாளரை நோக்கி, சேர் என்னைப் புகழ்ந்தீர்கள், பாராட்டினீர்கள், அன்பளித்தீர்கள் சந்தோசம். ஆனால், எனது வேண்டுகோள் ஒன்றை நிறைவேற்றனும் சேர், நிச்சயமாக சொல்லும்மா உன் வேண்டுகோளை, சொல்றேன் நான் இங்கே வந்த மூன்றாம் நாள் டெடிம்மா வீட்டில் பக்கீர் குட்டி என்ற பெயருடைய காலூனமான பிச்சை எடுக்கும் ஒருவனைக் கண்டேன், அதற்கென்னம்மா செய்யனும்.

சொல்றேன் சேர், ஒரு கார் விபத்தில் வலது காலை இழந்த அவன் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறான் சேர், அவனுக்காகவே இந்த போட்டியில் பங்குபற்றினேன், இதில் கிடைத்த இந்த 30 ஆயிரமும் அவனுக்கே உரியது சேர், நீங்கள் செய்ய வேண்டியது அவனுக்கு மூனுரோதை சைக்கிள் வண்டியொன்றை வாங்க்pக் கொடுத்து, அதிலேயே அவனை நடமாட விடவேணும்.

சேர், அந்த வண்டி வாங்கிய மிஞ்சிய பணத்தில் இந்த{ர் கடற்கரையிலே சிறுபெட்டிக் கடையொன்றை அமைத்து சிறு பிள்ளைகளுக்கான விளையாட்டுச் சாமான்களை வாங்கிக் கொடுத்தால் அவன் எப்படியும் கஷ்டப்படாம வாழ்ந்து கொள்வான் சேர், நாங்க அடுத்த வாரமட்டில் மலேசியா சென்று விடுவோம் இதற்கிடையில் மூனுரோத சைக்கிள் வண்டியில் அவன் சென்று வருவதை நான் பார்க்கவேணும் சேர் இதுதான் எனது வேண்டுகோள்.

தனது கைக்குட்டையை எடுத்து கண்களை துடைத்து விட்டு, அச்சிறுமியை இறுக அணைத்து இந்த ஊரில் எவருக்குமே, ஏன் எனக்குக் கூட இல்லாத உணர்வு, உனக் வந்துவிட்டதே தாயே, நீ ஒரு அதிசயப் பிறவியம்மா, இந்த வயதில் இப்படியொரு சிந்தனையா உனக்கு. நீ வாழும் வரைக்கும் நல்லாவே இருப்பேம்மா என்று உச்சி மோந்து, உன்வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும்மா அந்தப்பக்கீர் குட்டியை மூனுரோத சைக்கிளில் நீ பார்த்து விட்டுத்தாம்மா மலேசியா செல்லப்போறே.

மிக்க நன்றி சேர், இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்ந பயீஸாவின் தாய், தந்தை, பாட்டி ஆரிபா எல்லோரினதும் கண்கள் கலங்கின. எங்களிடம் எதுவும் சொல்லாமல் இப்படியொரு எண்ணத்தை தன் மனதில் அடக்கி வெச்சி இப்போ வெளியிட்டு இருக்காளே… என்று குசுகுசுத்தார்கள்.

அப்போது சிற்றூழியர் ஒருவரிடம் செயலாளர் ஏதோ சொல்ல அவனும் தலையை ஆட்விட்டு விரைந்தான். சிற்றூழியன் சிறு பொட்டலத்தடன் வந்து பிரதேச செயலாளரிடம் கொடுத்ததும், இங்கே வாம்மா பயீஸா, முதல் பரிசு பெற்ற உன்னை வெறுங் கையுடன் அனுப்ப நான் விரும்பலம்மா, சித்திரங்கள் வரைவதற்கான உபரணங்கள் சில அடங்கிய இப்பொட்டலத்தை உனக்கு அன்பளிக்கிறேம்மா, ரொம்ப நன்றி சேர் என்று அப்பொட்டலத்தை முத்தமிட்டுச் சென்றாள் பயீஸா.
சந்தோசமாக இருந்த காலங்கள் போல் அன்று ஆரிபாவின் முகத்தில் சிறிது வாட்டம் இருக்கத்தான் செய்தது. இன்று காலையில் இருந்தே மலேசியா செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள் கபீல் குடும்பத்தினர். என்றாலும் பயீஸா அந்த பக்கீர் குட்டியைதான் எதிர்பார்த்த வண்ணமிருந்தாள்.

அவனை மூனுரோத சைக்கிளில் காணாமல் சென்றிடுவேன் போல் தான் இருக்கும் என்றெண்ணினாள்.

கொழும்பு செல்ல வேண்டிய காரில் சாமான்கலெல்லாம் ஏற்றப்பட்டாச்சு. கபீல’ பயீஸாவையும், பமீரையும் ஏறி அமரும் படி வேண்ட, டெடிம்மா மற்றும் உறவினர்களையெல்லாம் அணைத்து முத்தமிட்டு கண்ணீர் கலங்கியவாறு காரில் ஏறும் வேளையில், பின்னாடி நோக்கிய போது மூனுரோத சைக்கிள் வண்டியில் ஒருவன் இடது கையை மேலே உயர்த்தி போக வேண்டாம் என்று அசைத்து அசைத்து வந்து கொண்டிருந்தான்.

ஆம், அவன் பக்கீர் குட்டியேதான் என்று ஊகித்து டெடி, மம்மி பக்கீர் குட்டி மூனுரோத சைக்கிளில் வாரான் என்று சத்தமிட்டு கத்தியே விட்டாள். எல்லோரும் அவன் வார திக்கையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிட்ட வந்ததும் பெருமூச்சு விட்டவாறு எங்கேம்மா என்னைக் காணாமல் போய்விடுவீங்களோ என்று தான் இப்படி வேகமாக வந்தேன்.

என் குட்டிச் செல்லமே அந்த செயலாளர் ஐயா எல்லா விபரங்களும் சொன்னாரம்மா, உன்னைப் போல நல்ல உள்ளம் எவருக்குமே வராதும்மா, நீ எந்தக் கொறையும் இல்லாமல் நல்லா இருப்பேம்மா, என்னை நடக்க விடாமல் செய்திட்டு கடற்கரையில் ஒரு பெட்டிக் கடைக்கும் ஒழுங்கு செய்திட்டியே தாயே. நீங்க சந்தோசமாக போய்ட்டு வாங்க நேநேம்மாவிடம் ஒங்க சுகம் சுவாத்தியத்தை என்னிடமும் சொல்லச் சொல்லுங்கம்மா.

இப்போதான் பக்கீர் குட்டி எனக்கும் சந்தோசமாக இருக்கு, நீ இனி எந்நாளும் நடக்காம இந்த வண்டியிலேயே நடமாடனும், உன் கடையையும் நன்றாக செய்து கொள். சரி சரி பயீஸா நேரமாகுது பக்கீர் குட்டியை நீ குடுத்த மூனுரோத சைக்கிளில் பார்த்துவிட்டாய் தானே… தொர, தொரசானி எல்லாரும் சந்தோசமாக போய்ட்டு வாங்கம்மா.

அவ்வண்டியைத் தடவியவாறு இது மூனுரோத சைக்கிள் வண்டி இல்லேம்மா, நீ தாம்மா இது. என்னோடு இருக்கும் வரைக்கும் இது எனக்கு நீயாத்தான் தெரியும். எல்லோரும் காரில் ஏறி அமர அது புறப்பட்டுச் செல்கிறது. அதுமறையும் வரை பார்த்து விட்டு, அந்த மூனுரோத சைக்கிள் வண்டியை நன்கு தடவி தன்நெஞ்சில் ஒற்றிக்; கொண்டு, வலது கையினால் அவ்வண்டியை சுழற்றுகின்றான் பக்கீர் குட்டி. கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்தவாறு…

– ஜூன் 2012

“சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதை செய்யாமல் இருப்பதற்கு பெயர்தான் கோழைத்தனம்”

(ஓய்வு பெற்ற அதிபர்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *