சரவணனுக்கு தலை கிறு கிறுவென சுற்றுவது போலவிருந்தது.பசி மயக்கம் வேறு, களைத்து விட்டதாக இருக்கலாம்.4 ரைவிங் கிளாஸ் எடுப்பதுக்குள்ளே சோர்ந்து போனான்.ஒரு கிளாஸை கட் பண்ணி விட்டு”நாளைக்கு பார்க்கலாம்”என்று விட்டு, வீட்டுக்கு வந்திருந்தான்.தலைக்குள் ஒரு யுத்தம் நடப்பது போலவிருந்தது.தலையை …பிய்ப்பது போல இடித்தது.அவன் சலரோகப்..பிறவி..,( பரம்பரை)அது 40 வயதிலேயே வந்து விட்டது. பிரசர் வேறு,.சமன்நிலை தப்பிய நிலை.தையனோல் 2 யை எடுத்து தேத்தண்ணியோடு விழுங்கினான்.
‘மனுசன்’ சனிக்கிழமையும் பாராமல் வேலைப்பார்க்கிறதில் .. வசந்திக்கு அவன் மேல் கவலைதான்.அது அன்பாகவும் சமயத்தில் பிரவாகிக்கச் செய்தது.கல்யாணம் கட்டியபிறகு,நடத்தைகளை மாறி விடுகிறது தவிர்க்க முடியாதாகி விடுகிறதே!. உடம்பை வருத்தி, வருத்தி உழைக்க தோன்றிவிடுகிறது.மனைவி,பிள்ளைகள் ..நினைப்புகளே, சதா துரத்துகிறன. ..வெறும் டபிள் டபிள் கோப்பியோடு.. இன்னும் 2-3 கிளாஸ்களை எடுத்து பழக்கி விட்டே வருகிறான். ஆனால்,இந்தவாழ்க்கை முறை, நண்பர்களை அறவே..தூரத்தி விட்டிருக்கின்றன. பெருமூச்சு விட்டான்.பெண்களால் புரிந்து கொள்ள முடியாத பல விசயங்கள் கிடக்கின்றன.சுபாவங்களும்,தனிப்பட்ட உரிமைகளும் பின்னி பிணைந்து சிக்கலாகி போய் விட்டிருக்கின்றன. பெண் மனைவியான பிறகு, அவளின் சாதாரண நடத்தைகள் அசாதாரணமாக மாறிவிடுகிறன.அவனிலும்..கூடத்தான்.ஊரிலே ,திரிந்த.. வாசு, திலகன்..எல்லோரும் கனடாவில் தான் இருக்கிறார்கள்.அவர்களுடனும் வசந்தி முறை கிறைகளோடு தான் பழகணும் என்று அவனை கட்டுப்படுத்துகிறாள்.நண்பர்கள் அவனைப்பார்க்க வருகிறபோது வெறும் கையோடு வருவதை அவள் மட்டுமல்ல,பிள்ளைகளும் விரும்புகிறார்களில்லை.
வாசுவை,திலகனை அவனும் கூட போய் பார்ப்பதில்லை.அவர்கள் வீட்டிலும் முறை கிறை புகுந்து விட்டது .இவனுக்கும்..அங்கே சிரிப்புக்கு இடமாகியிருக்கிறது. கனடாவில்.. நட்புக்கு..குட் பை தான் ;இடமில்லை.கோப்பிக்கடையில்,வீதியில், பஸ்சில் சந்தித்தால் உண்டு.அல்லது புதிய சாதிகளாக உருவெடுத்து இருக்கிற ‘மதரீதி’யான பழைய மாணவர் குழுக்களில்(இந்துக் க்ல்லூரி,சென் ஜோன்ஸ்..), ஊர்க்குழுக்களில் சந்தித்தால் உண்டு. கார் வாங்கியபிறகு ,அது கூட குறைந்து.. வேற அலுவல்கள் கூடி விட்டன.
ஒவ்வொருகுளிர் காலம் வருகிறபோதும் புதிய தலையிடிகளும்..வருத்தங்களும் கூட கூட வருகின்றன.வந்து 14-15 வருசங்களாகிவிட்டன.அவனுக்கு இன்னமும் குளிர் பிடிக்கவில்லை;பழகவில்லை. அப்பரின் டி.என்.எ இலே தான் பிரச்சனை இருக்கவேண்டும் என்று படுகிறது.ஆனால், வசந்தியிலே.. ஆச்சரியம்!அவள் தாக்குப்பிடிக்கிறாள். குளிரை கரைக்கக்கூடிய ஒரு ஓமோன் சுரக்கிறதாகப் படுகிறது.சதுரங்கம் விளையாடுகிற இக்‘காலநிலை’களால் நாரி, முதுகு,தோளில் குளிர் பிடிக்காமல் இருக்க கவனமாக பார்க்க வேண்டியிருக்கிறது.இல்லாவிட்டால்,அங்கே வலி, இங்கே வலி என வாட்டி எடுத்து விடுகிறது. பேய்க்குளிராக கிடக்கிறது; நாளை இப்படியே கிடக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது.கனடியனைப்போல வாழ முடியவில்லை. வெப்ப உடையணிவதால்,உடம்பு அவிகிறது,கழற்றி எறிய..,குளிர் பிடிக்கிறது.இப்படி அவன் பலதடவை உடம்புப்பிடிப்புகளால்அவஸ்தைப்பட்டிருக்கிறான்.
கடும் குளிரில் சாதாரணமாக யன்னலை சிறிது திறந்து விட்டு கூட அவனால் படுக்க முடிவதில்லை.ஆனால்,அப்படிப் படுத்தால் தொண்டையைப் புண்ணாக்கிவிடும்.அதனால் காற்று ஈரப்படுத்தி ஒவ்வொரு வீடுகளுக்கும் அவசியம் வேண்டும். அதை இயக்கிவிட்டால்,காற்றை ஈரப்படுத்திக் கொண்டிருக்கும். இம்முறையும், எப்படியோ பிடிப்பு பிடித்து விட்டது.அது,
வழக்கத்திற்கு மாறாக, தாடையோடு கழுத்து வரை நீள…ஓடி ஒருவேளை இல்லை,பலவேளை ‘ஸ்ரோக்’காகவிருக்குமோ ?பயந்துதான் விட்டான்.தலையில்சூடு ஏற வாய்ப்பகுதியில்( மேல்,கீழ் அண்ணப்பகுதியெல்லாம்) ‘நோ’வது அவனுக்கு சாதாரணம்.இது வேற மாதிரியாக ..!வசந்தி அவன் படுகிற அவதியைப் பார்த்து விட்டு,”நான் பஸ்சில் போகிறேன்”சொல்லி விட்டு போய்யிருந்தாள்.வழமையாக அவன் தான் காரிலே கொண்டு போய் விடுகிறவன்.இங்கே,அவளைப் போல எத்தனையோ.. பேர் குறைஞ்ச சம்பளம் என்றாலும்,வேலைக்குப் போறார்கள்.எவ்வளவு முன்னேறிய நாடாகவிருந்தாலும்,பொது வேலையாளர்களைப் பொறுத்தவரையில்…(நிறைய) அநீதிகளே நிலவுகின்றன! பெண்களுக்கு..என்றால் இன்னும் கொஞ்சம் கூட எனலாம்.சமத்துவம் அளிக்கப்படுவதென்பதெல்லாம் வெறும் பேச்சுக்களில், மீடியாக்களில் மட்டுமே .கனடா அரசு, மினிமம் சம்பளம் இவ்வளவு.. என நிர்ணயித்திருக்கிறது.மாகாண அரசு அதை 6$,7$,7.50$… என அறிவிப்பதோடு சரி. மற்றைய விசயங்களில் எல்லாம் நுழைந்து பார்ப்பதில்லை.அவை எல்லாம் யூனியன் வேலைகள் என்கிறது.சிறிய கொம்பனிகளில் 80%மானவைகளில் யூனியன்களே இல்லை.அரச கட்டாயம் அவர்களுக்கு கிடையாது.எமக்கு மலையக தமிழர்களை ஒத்த ஒரு அரை அடிமை- வாழ்க்கை கிடைக்கிறது,ஆனால் அவர்களுக்கில்லாத சில (கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ) வசதிகள், வாய்ப்புகள் வேலையால்கிடைக்கின்றனஎன்பது தான் ச்¢றிய முன்னேற்றம். பற்களுக்கான செலவுகள் இங்கே,பொலிஸ் காரர் தார டிக்கற்றுக்களைப் போலவே.. அதிகமானவை. பொதுவாக வங்கிகளின் காப்புறுதிகளில் பற்செலவுகளில் 85% த்தை அவர்கள் பொறுப்பேற்கின்றன .அங்கேயே குடும்ப காப்புறுதியை பதிந்திருக்கிறான்.அதற்காக அவனுடைய சம்பளத்திலிருந்து சிறிய தொகை கழிக்கப்படுகிறது.வங்கி குறிப்பிட்ட ஒரு தொகையை அவனுக்காக கட்டுகிறது.இப்படி காப்புறுதிச் சமாச்சாரங்கள். சலுகையளிப்பவர்களுக்கு.. எப்பையுமே வாங்குகிறவர்கள் விசுவாசமாகவிருப்பது கர்ணன் காலத்தில் இருந்து தொடர்கிற ஒரு தர்மசங்கடமான நிலை.எனவே,நம்மவர்கள் வேலைக்கு அடிமையாகிப் போய்யிருக்கிறார்கள்.இங்கத்தைய தொழில் தார கடவுள்கள் நல்ல சக்திகளாகவிருந்து விட்டால்.. பிரச்சனைகள் இல்லை.,. லாபம் சம்பாதிக்கிற சக்திகளாகவிருந்து விட்டால்..நிரந்தரமாக குறைஞ்ச சம்பளம் தான்.பணக்கார நாட்டு ஏழைகளாக வாழ்கிறோம்.வாழ்க்கைச்செலவு கூடக், கூட இங்கே,வீடுகள் அற்ற ஆட்கள் தொகையும் கூடிக்கொண்டு போகிறது.அதற்கான ‘எதிர்ப்பு ஊர்வலங்கள்’ அடிக்கடி நகரத்திற் கூடாக வந்து, பார்ளிமெண்ட்க்கு முன்னால் கூடுகின்றன.மற்றைய…, விடுமுறைப்பணம்,லாபத்தில் 1% (போனஸ்)பகிர்ந்தளிக்கப்படுவது எல்லாம் வெறும் கண்துடைப்புக்களே.ந்¢றைய தொழிச்சாலையை நம்பியிருக்கிற எல்லா அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் குறைஞ்ச சம்பளத்தில் வேளையாளர்கள் தேவைப்படுகிறார்கள்.ஆனால் அவர்களுக்கு குடியுரிமையை அளிக்க.. விரும்புவதில்லை.காரணம்.. அரசியலில்,நுழைந்து விடுவார்களோ; அரசியல் கைமாறுவதற்கு இடம் கொடுப்பதாகிவிடுமோ என்ற பயங்கள்.மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பு,தமிழ் மக்களின் 2ம் பிரஜாவுரிமை விசயங்கள் எல்லாம்…இலங்கையைப் பொறுத்த..வரையில் அரசியல் விவகாரங்களே!கனடா கொஞ்சம் மனிதாபிமானமாக…குடியுரிமையை அளித்திருக்கிறது என்பது உண்மை தான்.ஆனால்,அதற்குள்ளும் ஒரு பிடி வைத்திருக்கிறது.கிரிமினல் என்று எவரையும் புறூப் பண்ணுறபட்சத்தில்’அதை’ அவர்களால்பறித்துக்கொள்ளவும் முடியும். திருப்பி அனுப்பி விடவும் முடியும்.மக்களோடு நெருங்கியிருக்கிற மாகாணப்பொலிஸ் பகுதியில் நிறபேதம் நிலவுறதாக பிரபல பத்திரிக்கை ஒன்று இங்கே, இலேசாக ‘குற்றம்’ சாட்டியிருக்கிறது.இதே மாதிரியாட்களே எல்லா அரசியல் அமைப்புகளிலும் இருப்பார்கள். நிறவாதம் எப்பையும்,எந்த நாட்டிற்கும்.. நேர்மையான ஒன்றில்லையே!.கணக்குகளின் கூட்டல்களை(பாதிப்புக்களை) சின்னப் பிள்ளைகள் கூட..போட்டுப்பார்க்க முடியும்.இலங்கையும், இவர்களை கொப்பியடிக்கிற நாடுகளில் ஒன்றுதான்.
6$கூலியில், வேலையில் சேர்ந்தவள், 5 வருசங்கள் ஓடி விட்டன.8$சம்பளமே பெறுகிறாள்.பெண் என்பதாலும்,வருசத்தில், மில்லியன் லாபம் பெறதுடிக்கிற தொழில் அதிபர்கள் என்பதாலும் ..முன்னேற்றமற்ற தனிப்பட்ட நிலமைகள்.ஆண்ணுக்கும் கூட அதே நிலை தான்.வசந்தி உழைக்கிற காசை.. ,அவன் தொடுவதில்லை. வீட்டு வாடகை கட்டுப்பாடற்று உயர்ந்து கொண்டு போனாலும்..தன் செலவிலே சமாளிக்கப் பார்க்கிறான்..அப்படி,பல்லைக் கடித்துக் கொண்டு இருந்ததால் தான்,அவளால் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு ஒரு தடவையாவது யாழ்ப்பாணத்துக்கு போய் வரக்கூடியதாகவிருந்தது.அதோட ,அவளின்5 வருசசேமிப்பும்…அவுட்!இப்ப,”ரதிக்கு சீதனம் சேர்க்கணும்” என்கிறாள்.அவனுக்கு சிரிப்பு வருகிறது.இங்கே’அகதி’யின் சுறுசுறுப்பில் எறும்பு கூட தோற்றுப்போய் விடுகிறது.
சரவணன் பெரிதாக படித்தவன் இல்லை.வசந்தியைகைப்பிடித்த பிறகு, சித்திரலேக்கா மாமி,’தான் வேலை செய்கிற வங்க’யிலே … வேலைக்கு இடமிருக்கிறது என்று விண்ணப்பிக்கச் செய்திருந்தார்.மெயில் பகுதியில் பின்னேர வேலையில் தற்காலிகமாக சேர்ந்து,இப்ப,நிரந்தமாகி … ஒரளவு பரவாய்யில்லையாயிருக்கிறான்.தற்போதைய சம்பாதியத்தில் 2 அறை அப்பார்ட்மெண்ட் ஒன்றும் வாங்கி, மாசத்தில் மோர்க்கேஜ் கட்டக்கூடியவனாக..உயர்ந்திருக்கிறான்.குளிர்ப்பிடிப்பால், இண்டைக்கு வங்கியிலே வேலை செய்வது கூட கஸ்டமாகவிருக்கப் போவதாகப்பட்டது.’யாழ்ப்பாண வெய்யிலுக்கு பழக்கப்பட்டுப் போன உடம்பு’ கனடாவுக்கு பழக்கப்படுகிறதேயில்லை,என்ன சனியனோ!’வெறுத்துக்கொண்டான். வேலையால் வந்த வசந்தி”இன்றைக்கு வேலைக்கு போகவேண்டாம் டாக்டரிடம் காட்டுங்களன்”என்றாள்.அவர்கள் தார மருந்து, மாத்திரைகளால் இந்த பிடிப்புக்களை ஒன்றும் செய்யமுடிவதில்லை.அவளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.”டாக்டர் குடுக்கிற மருந்தால் தான் மாறுகிறதுது”என்று அடம் பிடிப்பவள்.வெளிய,அலைய பஞ்சியாய்யுமிருந்தது.ஏதாவது சொன்னால்,”நீங்க படிக்கயில்லை ,அதனாலே தான் ஒன்றும் புரியுதுயில்லை”என்று எரிந்து விழுவாள்.அவளின் குத்தல் பேச்சில்.. பிரியமும் இருக்கத்தான் செய்கிறது.ஆண்,பெண் உறவை என்னவென்று சொல்வது?இருவரின் அடையாளங்களும்… சமத்துவமானவைதானே!அப்படி நினைப்பது தான் ஆரோக்கியமாக இருக்கிறது. அவனும் வசந்தியின் மேல் பித்தாகித்தானிருக்கிறான்.ஆனால்,அவளின் முக முறிப்பு அவனை அப்செட்டாக்கி தான் விடுகிறது.
சேர்ட்டை மாட்டிக்கொண்டு வெளிக்கிட்டான்.டாக்டர் வெறும் ‘அட்வில்’ மட்டுமே ‘எடுக்கச்சொன்னார்.”எப்படியப்பா இருக்கிறது”நெற்றியில் கை வைத்து கேட்டபோதுஅந்த அன்பில் கிறங்கிப் போய்யிருந்தான்.”தேத்தண்ணி போட்டா கொண்டு வாருமன்”என்றான்.அவனுக்கு அந்தப்பிடிப்பை விட நேற்று வாங்கிய கார் டிக்கற்றுக்கள் தான் அதிகமாக தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.அதை அவளிடம் சொல்லவில்லை.பருந்துகள் கோழிக்குஞ்சைப் பிடிப்பது போல, இங்கே,அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் டிக்கற் கொடுக்க ஒளிந்து காத்து நிற்பார்கள்.பொலிசாய்யிருக்கட்டும், பாக்கிங் பிடிக்கிற ஆளாய்யிருக்கட்டும், ரைவிங் பழக்கிறபோது பிடிக்கிற லைசென்ஸ் கொமிசனர் ஆளாகவிருக்கட்டும்..எல்லாருமே பருந்துகள் தான்.பொலிஸ் கையில், ரேடார் கருவி வைத்திருக்கும்.இவனுடைய ஆள்,பிடித்த போது,’ பழக்கிற காரில்..அது பிழை..இது பிழை .’.என்று இரக்கமற்று எழுதி பல டிக்கற்றுக்களைத் தந்து விட்டு போய்யிருந்தான். மனிதாபிமான ஒபிசர் என்றால் ’ முக்கியமானது’க்கு மட்டும் ஒரு டிக்கற்றைத் தந்து விட்டு மற்றவற்றுக்கு …கவனி.. என்று எச்சரித்து விட்டுப்போய்யிருப்பார்.இவன் வேலைக்கு புதியவன்..போலும்…!.இவன் எழுதியது( பலமடங்கு) ஓவராகவிருந்தது தான் தலையிடியைக் கொடுத்துக்கொண்டுயிருந்தது.சுமார் 500$ மட்டிலே!.நாமோ அகதியாய் வந்தவர்கள்.ஒன்றும் செய்ய முடியாவிட்டா கொஞ்சம் எங்களுக்குள்ளே ஒப்பாரி வைக்கவும் தெரியும்;இவங்களை கொஞ்சம் உய்க்கவும் பழகியிருக்கிறோம்.கோட்டிலே, ஒபிசர்,ஜட்ஜ் எல்லோரும் ஒரு டீம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.கோர்ட் தொடங்க முதல்,டிக்கற் தந்தவர்,” குற்றம் என்று ஒப்புக்கொள்,பைன் மட்டும் கட்ட வரும்”என்று ஆலோசனை வேறு தெரிவிப்பார்.ஜட்ஜ் ,”குற்றமா? இல்லையா ? “என்று கேட்பார்.’ஓம்!’ என்றால், சரி(F)“பைன்னைக் கட்டி விட்டுப் போ”என்பார்.அது, அரைவாசித்தொகைக்கு மேல வரும்.அதையும் தவிர்ப்பதற்கு முயல்கிறவன்.அவன்,2-3 மொழிபெயர்ப்பாளர்களுக்கு பழக்கியதில்,.. .நண்பர்களாகியிருந்தார்கள்.அடிக்கடி,ஆச்சியிட பேச்சுக்களை கேட்டதாலே.. மற்றவர்களை கவரக்கூடியவனாகவிருக்கிறான்.அவர் கொள்கைகளை கடைப்பிடிப்பவனாக இருக்கிறான்._ ..,’வயதில், சிறியவனாகவிருந்தாலும்,வயசானவர்களாகவிருந்தாலும்..கூட தனக்கு கீழானவனாக பார்ப்பதில்லை.உதவி என வருகிறவர்களுக்கு..குறுகிய-கொச்சைத்தனமான நினைப்புக்களை தள்ளி விட்டு உதவவே முயல்கிறவன்.கடன் வாங்கிய நண்பர்களிடமும் கறாகக்கேட்பதில்லை’.இவை எல்லாம் வாழ்க்கையை செம்மைப் படுத்த உதவுகின்றன.ஆச்சி நிய வாழ்வில் வறுமையோடு போராடியவர்.எங்க அப்பாவோடு.,.அவருக்கு பல பிள்ளைகள்.இருந்த போதும் அயல் அட்டைகளோடு பிழங்கிய விதத்தால்.அன்பால் வென்றவர்.அவர்களின் பல பிள்ளைகள் இப்ப, கொழும்பில் நல்லாய் இருக்கிறார்கள்-
முந்தியும்,பெரிய டிக்கற் ஒன்று கிடைத்த போது, மொழி பெயர்ப்பாளர்களே, வழிமுறைகளைக் கூறி, கைகொடுத்தார்கள்.எந்த டிக்கற்றாகவிருந்தாலும் முதலில் கோட்டில், கேசை பையில் பண்ணவேண்டும்.எந்த கோர்ட்டையும் நாம் தெரிவு செய்யலாம்.அவர்கள் தெரிவிக்கிறதில்..தாக்கல் செய்யிற போது”ஜயா,எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது.மொழிபெயர்ப்பாளர் வேண்டும்”என்று சொல்ல வேண்டும்.அச்சேவை எல்லா இடங்களிலும் இலவசம்.ஒவ்வொருகோர்ட்டும் 2-3 மொழிபெயர்ப்பாளர்களையே வைத்திருக்கிறார்கள்.பல்லின நாடாகவிருந்ததால், கன மொழிபெயர்ப்பாளர்களை அவர்களால் தெரியமுடியவில்லையோ?.அவர்களிடமும், குறிப்பிட்ட வீத நிற பேதமும், உணர்ச்சியில், ரத்ததில் கலந்து போயே இருக்கிறனவோ ஏதோ ஒன்று. அவர்கள் தெரிந்த திகதியிற்கு ..இவர்களில் ஒருவர் புக் பண்ணப்படுவார்.அந்த நாளில், இவர் போன் பண்ணுவார்.. “புள்ளைக்கு சுகமில்லை, வர முடியாமல் இருக்கிறது ”என்று.குறைஞ்ச சம்பளத்தில் 2-3 மணி நேரத்துக்காக கூப்பிடுறதால்…,அவர்களாலும்.”இல்லை வந்து தான் ஆகணும் “ என்று கட்டுப்படுத்த முடிவதில்லை போலும்.பிறகு,என்ன.?.கேஸ் திரும்ப, பின்னுக்கு போகும்.இப்படியே 3 தடவைக்கு மேல.. வந்தது என்றால்..,ஜட்ஜ்,’கேஸ் தள்ளப்பட்டு விட்டது’என்று போகச் சொல்லி விடுவார்.அவர்களுக்கும் தெரியும் .இது ஒரு சிறிய (சதுரங்க) விளையாட்டு என்று.என்ன,அவனுக்கு கொஞ்சம்.. பேய் ..அலைச்சல்!இந்த முறையும்..விசுவாசிகளைச் சந்திக்க வேண்டும்.அலைய வேண்டியிருக்கிறது.விஸ்கியை கொஞ்சம் கிளாஸிலே எடுத்து, பால்கனியில் நின்று குடித்தான்.
“விட்டிட்டேன்,என்றீர்!என்ன திரும்ப தொடங்கிட்டீர்”திறந்த வெளி வாராந்தாவிலே ,புகைக்கிறதுக்கு போறமாதிரி களவாய் போய், குடித்ததையும் கண்டுவிட்டு பின்னாலே வந்து விட்டாள்.கனடாவிலே, குடியை விடவா முடியும்!இம்மாதிரி நாடுகளில், ரத்ததிற்குப் பதிலாக குடியை உடம்பிலே ஏற்றிக்கொண்டால் தான் வாழவே முடிகிறது.அது எங்கே, ஊரவர்களுக்கோ-வசந்திக்கோ.. புரியப்போகிறது!”இனிம குடிக்கேலையப்பா இது தான் கடைசி”பொய்ச் சத்தியம் பண்ணினான்.பக்கத்தில் இருக்கிற விண் உயர்ந்த கொண்டோக்களைப் பார்த்தான்.கொஞ்ச நேரம், சுதந்திரப் பாதையில்( கைவேயில்)பறக்கிற கார்களையும் வேடிக்கைப்பார்த்தான்.சின்ன மனிதர்களாக திரியும் உயிர்ப்பான தரையையும் பார்த்தான்.ஊரிலே, இருப்பது..போல திரிகிற..ஆடு, மாடு..,கோழிகளை..மற்றும் கிளி,பிலாக்கொட்டைக்குருவி,மாம்பிலத்திகளை..இங்கே காண முடியாது.புறாக்களையே அதிகமாக..பார்க்கமுடிகிறது.விரல் நுனியை சிகரட் சூடு சுடுறபோது ஆஸ்ரேயில் அணைத்துவிட்டு உள்ளே வந்தான்.சமூகவாழ்க்கையைத் தொளைத்து விட்டு வாழ்கிற அகதிமனிதர்களை இங்கே,அதிகமாக நோய்யும்,தனிமையுமே சூழ்ந்து கொள்கின்றன.
அவன்,கனடாவில் கால் வைத்த போது ,அகதி அந்தஸ்து..கிடைப்பதில்,பல..பிரச்சனைகள் நிலவியிருந்தன.விண்ணப்பங்கள் அதிகமானதலோ அல்லது மாகாண அரசின் அசமந்தப்போக்காலோ..சரிவரப்பார்க்கப்படாது (முதல் வந்தவர்களுடையதுகளே..)பேப்பர்கள் தேங்கிப்போய்க் கிடந்தன.லாண்டட்பேப்பரும் கிடைக்காமல்,தற்காலிக அனுமதிப்பத்திரமும் கிடைக்காமல்..சோம்பித்திரிந்ததில்..மூளை குழம்பிப்போயிடும் போலவிருந்தது.அகதி, 2ம் பிரஜை வாழ்க்கை எப்பவுமே சில்லெடுப்பானவை தான்.அவனுடைய தூரத்து மாமா ஒருத்தர் ஸ்பொன்சர் பண்ணின பிறகே,வெளிநாட்டுக்காரனின் இடியப்பச்சிக்கலான ஸ்ரெஸ்சிலிருந்து ஒரளவு விடுபட முடிந்தது.இருந்தாலும்,கனடா மற்றைய நாடுகளை விட கொஞ்சம் பரவாய்யில்லைதான்.ஆச்சியை ஒரு தடவை நினைத்துக்கொண்டு,வேலை தேடும் முயற்சியில் இறங்கினான்.கோப்பையடி வேலையில் 2 வருசம் ஓடின பிறகு,கார் ஓடும் அனுபவமும் இருந்ததால்,இத்தாலிய கேட்டரிங் கொம்பனியில்.. பரவாய்யில்லை மாதிரியான வேலைக் கிடைத்தது.ஆனால், காலநேரம் தெரியாத வேலை.கோப்பையடியும் இருக்கத்தான் செய்தது.அதோடு..உணவுகள்-அங்கிருந்த இத்தாலியக்கிழவர்களுடன் சேர்ந்து தயாரித்தல்,வானில் ஏற்றி பல பார்ட்டிகளுக்கு கொண்டு செல்லல்,கிழவர்களோடு சேர்ந்து… உணவை பரிமாறல்,முடிய இருந்து கிளின் பண்ணிக்கொடுத்தல்,இவர்களின் சாமான்களை திரும்ப வானில் ஏற்றி வருதல்…என பல வேலைகள் இருந்தன.அவனோடு கூட,இன்னொரு தமிழ்ப்பெடியன் -சிவாவும் வேலைச் செய்தான்.சமயத்தில்,அவர்களுக்கு கூட வேலையாட்கள் தேவைப்படும்.முதலாளி,”யாரையாவது கூட்டி வாருங்கடா”என்பார்.அகதி நிவாரணப்பணம் பெறுகிற -கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கிற பல ‘பெடியள்’களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர் இருவரையும் நம்பி முடியிற நேரம் …திறப்பையும் கொடுத்து விட்டே போய் விடுவார்.பகலில் ,அவர்களோடு சேர்ந்து பகலில் முதலாளியும் வேலைசெய்வதால் நட்பானவராகவிருந்தார்.பகிடியும் விடுவார். அவருக்கு வளர்ந்த மகளும்,மகனும் இருந்தார்கள்.முதலாளியைப் பார்க்க அங்கே வருவார்கள்.தயாரித்த உணவுகளையும் ஒரு கை பார்த்து விட்டு பாராட்டி விட்டுச் செல்வார்கள்.அவர்களுக்கு தமிழ்ப் பெடியளான-அவர்களை பிடித்து இருந்தது.அன்புடன் பழகினார்கள்.வேலை எல்லாம் முடிந்து வர, காலை..2 -3 மணியாகிவிடும்.விடியும் விடியாப்பொழுதிலே,2 பியர்ரை அடித்து விட்டுப் படுக்க என்னடா வாழ்க்கை என்றிருக்கும்.சுமார் 12 -13 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.10$படி தருகிறான்.120-130$படி நாளைக்கு, உழைத்தாலும்…உடம்பு ஆடிப்போய் விடுகிறது.சிவாஅடிக்கடி சலித்துக்கொள்வான்.”டேய், வேற வேலை தேடிக்கொள்வோமடா”
“பேயா,இதை விட யார் நல்லபடி ‘பே’ பண்ணப்போறான்ரா”சரவணன்.
“குடும்ப சந்தோசம் இல்லாமல் போகிறதடா”சிவா.அது பிரச்சனை தான்.4 -5 வருசங்கள் ஓடினதே தெரியாமல் போய் விட்டதே!.’கல்யாணம் செய்யணும் …என்ற யோசனையே வரவில்லையே’!டி.வி ஓடிக்கொண்டிருக்க …கவுச்சிலேயே(சோபாவில்)அடிக்கடி தூங்கிப்போய் விடுவான்.நல்ல காலம் யாழ்ப்பாணத்திலே,அப்பாவும்,அம்மாவும் இருந்தார்கள்.அவனுக்காக பெண் பார்த்திருப்பதாக கடிதம் வந்தது.அவன் எந்தப் பெண்ணையும் வெறுப்பவனில்லை.படம் சுமாராகவிருந்தது.பிடித்து விட்டது.அவளுக்கு அவனைப் பிடிக்க வேண்டுமே… என்றே… யோசனையாயிருந்தது.யாழ்ப்பாணம் வரச் சொல்லி போனிலே,கதைத்தார்கள்.ஆச்சி உயிருடன் தானிருந்தார்.அவரைப் பார்க்கவும் ஆசையாகவிருந்தது.அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்ட்டிலே டிக்கற்றுக்களை எடுத்தான்.விசா, மாஸ்ரர் கார்ட்டுகளில் எல்லாம் கடை கடையாய் ஏறி,தேடி தேடி 2 சூட்கேசூகளை நிரப்பினான்.’கனடா மாப்பிள்ளை’யாக போய் இறங்கினான்.அங்கே, இருப்பவர்களுக்கு அவன் லட்சாதிபதியாகவே.. தெரிந்தான்.எல்லோரும் வலு மரியாதையாகப் பிழங்கினார்கள்.கனடாவின் ஒரு டொலர் அங்கே 35-40 ரூபா.பராவாய்யில்லையே!அங்கத்தைய கள்ளு, தென்னை,பனைஞ் சாராயம் எல்லாம் மலிவு.சிறிது குடித்து ஆசையை தீர்ததான்.கைவிட்டு எண்ணக்கூடியளவு சிறியதொகையில் இருந்த நண்பர்களை திருவடி நிலை கடற்கரைக்கு கூட்டிச் சென்று குடி ,டேஸ்ட் என விருந்து வைத்தான்.அவர்கள் எல்லோரும் தேவலோகத்தில் மிதப்பதாக நினைத்தார்கள்.அவர்களின் ஒரிரு தம்பிமாருக்கும்… முதல் தடவையாக தண்ணீர் தெளிப்பதும்,சிறிது குடிப்பதும் நடந்தன.பெண்ணுக்கு அவனைப்பிடித்துப் போய் விட்டிருந்தது.அவன் கொண்டுப்போன 5000 டொலர் கல்யாணத்தை நடத்த,வீடியோ எடுக்க,தன்னை கொடுத்து வைத்தவள் என்று நினைக்க வைக்க ,’தம்பி,இன்னமும் எங்களை மறக்கவில்லை’என உறவுகளை கண் கலங்க வைக்க எல்லாம்… போதியதாகவிருந்தன.ஆச்சியும் “பேரன் பரவாய்யில்லை”என ஆசிர்வதித்தார்.அவனுடைய அப்பா நல்ல’ரலி’சைக்கிள் வைத்திருந்தவர்,அது களவு போய், பழைய சைக்கள் …ஒன்றை வைத்திருந்தார்.காண்டிலில் சிறிது’ கறள்’காணப்பட்டது.”ஏன்னப்பா,நல்ல சைக்கிளாய். வைத்திருக்கக்கூடாதா?”. “வீண் செலவு!,திரும்பவும்..யாராவது களவெடுப்பான்,எனக்கும் வயசாகிப் போட்டுதுடா”.போர்ச் சூழல்.!.அவர் பேச்சிலும் நியாயம் இருந்தது.அப்பாவைப் பார்க்க பாவமாக இருந்தது.இவர்களால்..எப்படி’ தங்கள் செலவுகளை சுருக்கிக்கொண்டு..பிள்ளைகளே உலகம்’ என வாழமுடிகிறது..’நம்மாலே ஏன்?,அப்படி வாழமுடியவில்லை.’இம் முறையும் அப்பாவும்,அம்மாவும் வெளிய வர மறுத்து விட்டார்கள்.அப்பாவுக்கு ரேடியோவில், கர்நாடக இசையை கேட்பதில் பிரியம்.அப்படியே தான் இருந்தார்.
‘அவளை’யும் ஸ்பொன்ஸர் பண்ணி விட்டு கனடா திரும்பினான்.அவள் வருவதில் குடிவரவு திணைக்களம் பிரச்சனைகள் கொடுக்கவில்லை.6 மாசத்திலே வந்து விட்டாள்.குளிர் காலமாகவிருந்ததால் அப்பார்ட்மெண்டிலே அடைந்து கிடக்க வேண்டியிருந்தது.உண்மையிலே,’வயசானவர்களுக்கு கனடா நல்ல நாடு இல்லை’ தான்.என்னச் செய்வது?, போர்ச் சூழல்..,அவர்களை பெயர்த்துக்கொண்டு வந்தாலும்,…இங்கே, அவர்கள் வாழ்வதில்லை.பிள்ளைகளுக்கும் ஒட்டாத நிலை போகப்போக ஏற்பட்டுவிடுகிறது.ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிக்கவில்லை என்று சொல்வதை விட விளங்கிக்கொள்ள முடிவதில்லை என்பதே உண்மை. சிறைத்தண்டனையையே அனுபவிக்கிறார்கள்.கூடவே,தள்ளாமை,வருத்தங்கள்.இங்கே,இவர்களுக்கு சாகப்போறது தெரிந்து விடுகிறது.அது அங்கே வாழ்றதை விட மோசமானது.இனவாதம் என்பது எந்த நாட்டுக்கும் கான்சர் போன்றதே,அது சிறும்பான்மை இனத்தை மட்டும் துரத்துவதில்லை,அங்கே இருக்கிற மனிதத் தனத்தையையே இறுதியில் அழித்து விடுகிறது.வசந்தி வந்து ,ஒரு வருசத்திற்குள்ளே..2-3 சோகமான செய்திகள் நடந்து விட்டன.’கடமை முடிந்து விட்டன’என்பது போல..அப்பரின்,அம்மாவின் சாவுகள்.இருவருக்குமே சலரோகம் இருந்தன.கறள் சைக்கிளால் கையில் ஏற்பட்ட காயத்தால்.அப்பரின் கை பாதிக்கப்பட்டது. விரல்களை எடுக்க வேண்டியேற்பட்டது.அவருக்கு அதில் விருப்பம் இல்லை.ஒரு வகை தற்கொலை போல..அவர் மருந்துகளை சரி வர எடுக்காது..மரணத்தை தழுவிக்கொண்டார்.அவனால் திரும்ப போக முடியவில்லை.”ஒன்றுக்கும் கவலைப் படாதை”என்று கடிதம் எழுதிய அம்மா அடுத்த மாசமே ‘அப்பா’வோடு சேர்ந்து விட்டார்.அங்கே,சாதாரண வாழ்வு குழம்பிப்போய் இருந்ததால்..,கவனிப்பாடுகள் குறைவாக இருந்ததாலும்,மருந்து வசதிகள் அற்றதாலும்..தவிர்க்க முடியாத சாக்கள்.அவனால் அப்பவும் போகமுடிய வில்லை.அப்பாட தங்கச்சியான பர்வதம் மாமியே எல்லாவற்றையும் முன் நின்று பார்த்தார்.அப்பா தான் மூத்தவர்.அது ஆச்சியை.. பாதித்து விட்டது.இரும்பு மனுசியாய் இருந்த அவர்,பிறகு 2-3 மாசத்திற்குள்ளேயே, இறந்து விட்டார். அழகான தீவு,ரத்தச் சேறாகவிருப்பதற்கும்,குழப்பமாகயிருப்பதற்கும்..‘மனிதர்களில் நல்ல மனமில்லாதே.’. பெரிதும் காரணம்.தவிர,பழைய காலானி நாடுகளின் இன்னமும் மாற்றமில்லாத அதே அரசியல் கொள்கைகள்..சமாதானக்கொடியை பல நாடுகளில் பறக்கவிடாது செய்து விட்டிருக்கின்றன.பெரு மூச்சு விட்டான்.பராவாய்யில்லை,சரவணனுக்கு கூட …அரசியல் தெரிகிறது.பகலிலே,அவளைக் கூட்டிச் சென்று, ஒகிப்,சோசல் இன்சூரன்ஸ் கார்ட்ஸ் எல்லாம் எடுக்க வைத்தான்.இங்கே, 2கார்ட்ஸ்ஸ¤ம் முக்கியமானவை.குளிர் காலமாக இருந்ததால், உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளுக்கு கூட்டிச் சென்றதோடு சரி.வேற இடங்களுக்குச் கூட்டிச் செல்ல முடியவில்லை.எல்லாம், அதுவும் ஒரு தடவை மட்டும் தான்..!பிறகு,பிறகு,வசந்தியும் கனடாவை புரிந்து கொண்டு விட்டாள்;வாழ பழகியும் விட்டாள்.நீண்ட காலத்தில், மூத்தவனாக..-மதி பிறந்தான்.இளையவளாக..-ரதியும் பிறந்தாள்.வருசாவருசம் பிறந்த நாட்கள் எல்லாம் குடி வகைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டன.”பிறந்த நாள் ஒன்றில், ரைவிங் பழக்கிறதையும் பழகினால்..பகலும் ஒரு வேலையை தேடிக்கொண்டதாக இருக்கும்.சாமாளிக்க..முடியுமே.”சிவாட தம்பி- மூர்த்தயின் யோசனை பரவாய்யில்லை போலயிருந்தது.அவன் ரைவிங் பழக்கிறவன்.அவன் வழி காட்ட, லைசென்ஸ்ஸையும் எடுத்தான்.இப்ப,அவன் கொஞ்சம் நிமிர்ந்த மனிதன்.ஞாபகத்திற்கு,வசந்தியின் தம்பி-பாபு எடுத்துத்தள்ளிய போட்டோக்களை அல்பத்தில் ,செருக முடியாது.வசந்தி அலுத்துக் கொள்கிறாள்.கழுத்து வரை இருந்த கடன்கள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன.சந்தோசம் வாழ்க்கையில் நிலவுகிறது.மூச்சு…விடுற போது ,40 வயதாகி விட்டது.காலம் எவ்வளவு விரைவாக ஓடி விட்டிருக்கிறது.இந்த வயதில்..மனிதன் கிழவனாகி விடுகிறான்..என்கிறார்கள்.இனி என்ன? கிழவன் தானே!ஆனால்,மனிதவியலாளர்களோ..’அது,ஒழுங்கில்லாமல் வாழ்வதால் தான் அப்படி நிகழ்கிறது’என்கிறார்கள்.குடி,சிகரட்,உடற்பயிற்சியற்ற-(மெசின் தனமான-) வேலைமுறை,சரி வர சாப்பிடாமை..குடும்ப,அரசியல்,(இங்கே வீட்டுப் பிரச்சனைகள்..) பிரசர்கள்..இவற்றால் தான் ஏற்படுகிறன என்கிறார்கள்.மனிதன் ‘ஸ்மார்ட்’டாகிறது உண்மையிலே’ 40 வயதிற்குப் பிறகே நிகழ்கிறது என அடித்துச் சொல்கிறார்கள்.வெளிநாடுகளில்..,அதிகமாக கிழ அரசியல் வாதிகளே அரசியலை நடத்துகிறார்கள்.அவர்கள் போர்ப் பிரியர்களாய்யிருப்பது தான்.. தலை கீழ் விகிதமாய் இருக்கின்றன.புத்தர் கண்டுப்பிடித்த ஆசைகள் தான் எல்லாம் குழப்பத்திற்கு ..காரணமோ?. ‘நானும் ஒரு தத்துவவாதி’சிரிப்பு வருகிறது.
‘நாம் சிரிக்கிறோம்.. என்றால், அழவும் தயாராகவிருக்க வேண்டும்’என்பது போல..,ஞாற்றுக்கிழமை போல..ரைவிங் பழக்கிக் கொண்டிருக்கும் போது,நெஞ்சு,தோள் மாட்டில்,எல்லாம் திடீரென வலி ஏற்பட்டது. மூச்சு விடுறதே கஸ்டமாகவிருந்தது.”ஏழாமல் இருக்கிறது..விமல்,காரை வீட்டை விடு”என்றான்.விமலன்,கைத்தாங்கலாக..கூட்டி வர அப்பார்ட்மெண்ட் சென்றான். வசந்தி,உடனேயே,பாபுவை போனில் கூப்பிட்டாள்.’ஏதோ,பயங்கரமாக உள்ளுக்கே நடந்து விட்டது’போலப்பட்டது.ஸ்ரோக்காய் இருக்குமோ? செட்டியில்,படுத்துக் கண்ணை மூடிக் கொண்டான்.நினைப்பும்,மயக்கமாகவும் இருந்த அவனை,காரில் ஏற்றி ..ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனது..எல்லாம் சாடையான நினைவுகள்.பிள்ளைகளை அதே,கட்டிடத்திலே இருந்த விஜயா வீட்டிலே,விட்டு விட்டு வசந்தியும் அவனோட வந்திருந்தாள்.நல்ல காலத்திற்கு டாக்டர்கள் உடனே கவனித்தார்கள்.மோசமான ‘கார்ட்டடாக்’என்பதை அறிந்து கொண்டு அவனை அம்புலன்ஸில் சனிபுறூக்கிற்கு அனுப்பினார்கள்.பிரச்சனையான கேசூகளை அந்த ஆஸ்பத்திரிக்கே அங்கே அனுப்புவது வழக்கம். பாபு பிறகு வாரதாகச் சொல்லி விடைப்பெற,அவள் கலங்கியபடியே அவனோடு இருந்தாள்.அவளுள்,எழுந்த பயங்கள்…?.மயங்கி விடுவேனோ?என்று பயந்தாள்.அவள்,யாழ்ப்பாணத்தில் டெலோ பெடியள் கொல்லப்பட்டு தொகை தொகையாய் போடப்பட்டதில் ஒரு பகுதியை ,தோழி வீட்டைப் போனபோது- சங்கரத்தைப்பகுதியில் இருந்த காம் வீட்டில் ,தற்செயலாய் பார்த்திருந்தாள்.கொஞ்ச நஞ்சமில்லை. 20 க்கு மேற்ப்பட்ட பெடியள்கள்.தம்பி வயசும், கிழ்ப்பட்ட வயசுமாக ..,.பலர் முகங்களில்..பாலகப்பருவம் கடக்கவில்லை.அவர்களின் ரத்த வெடில் மணமும்..நெஞ்சில் எழுந்த கேவல்களும்..இப்ப.. நினைவில் வந்தன.மனதை திடப்படுத்திக் கொண்டு கடவுளைக் கும்பிட்டுக் கொண்டாள்.இங்கே,வந்த பிறகு கூட இயக்கத்திலே..,இருந்த பெடியள் யாரையும் பார்த்தால்..’சாவை தலையில் காவிக்கொண்டு திரிகிறவர்கள்’என்ற நினைப்பே வருகிறது.இப்ப என்ர மனுசனுக்கு..”கடவுளே நீதான் காப்பாற்ற வேண்டும்”.சரவணன் மயங்கியே கிடந்தான்.’கொஞ்சம் குடியையும்,சிகரட்டையும் குறைத்திருக்கலாம்..’அனுதாபத்தோடு தலையை தடவி விட்டாள்.சனி புறூக்கிலும்..அவனின் ரத்த நாளங்களில் இருந்த 2-3 ரத்தக் கட்டிகளை கரைக்க கஸ்டப்பட்டார்கள். 3 நாட்கள் வரை,ஒட்சிசன் மாஸ்க்கோடு, ‘செலயின்’ செழுத்தப்பட்டவாறு அப்படியே கிடந்தான். கட்டிகளை கரைத்த பிறகு, அவனின் இதயத்தசைகளில் 10 வீதம் பாதிக்கப்பட்டு விட்டிருந்தன.சரவணன் கண்ணைத் திறந்த பிறகே,வசந்தியின் பதற்றம் சிறிது தணிந்தது.அவன் எதையும் தாங்கும் மன வலிமை உடையவன்.பழைய மாதிரியே மாறி பகிடியாக ..பார்க்க வாரவயள்களோடு.. கதைத்துக் கொண்டிருந்தான்..’நிலையாமை’ உண்மையை பெரும்பாலான மனிதர்கள் உணர்வதில்லை தான்.அவனும் என்ன விதி விலக்கா?.இருப்பவர்கள் மட்டும் பெரிதாக என்னத்தை சாதித்து விடப்போகிறார்?,ம்!. .எவருக்கும் சாகிறதுக்கு ஏதாவது..ஒரு காரணம் வர வேண்டி இருக்கிறது.ஒவ்வொரு ஆட்களுக்கு ஒவ்வொரு மாதிரி.அவனுக்கு இப்படி ஒரு வருத்தம்.கடவுளின் கிருபை இருந்தால்..அவனால்,பிள்ளைகளின் நல் வாழ்வைக் கூட பார்க்க முடியும்.அதற்காக.. தொடர்ந்து அழுது கொண்டிருப்பதா?.தேற்றிக் கொண்டாள்.பிறகு,அவனுள் ‘பேஸ் மேக்கர்’ வைக்கிறது நடந்தது.அச்சிறிய கருவி,இறந்த தசைகளின் வேலையை..மற்ற தசைகளுக்கு பகிர்ந்து இயங்க வைப்பதன் மூலம் சம நிலையை பேணியது.வீட்டை வந்து சேர 20 நாட்களாகி விட்டன.ஆஸ்பத்தியில்..அப்படி நீள இருந்தது,அவனைப் பொறுத்த வரையில்… ஒரு ரெக்கோர்ட் தான்.அங்கே, தொடர்ந்தும் சில பயிற்சிகளை வாழ் நாள் முழுதும் செய்யவேண்டும் என பயிற்றுவித்தார்கள்.அந்த நாட்களுக்குள்,வசந்தி …வேலை,பிள்ளை,அவன்..என நிறையவே கஸ்டப்பட்டு விட்டிருந்தாள்.அவனும் ,பழைய உற்சாகத்தில்,குறிப்பிட்ட வீதத்தை இழந்தது இழந்தது தானே!. இனி, ,இதோடேயே,வாழப்பழகிக் கொள்ளவேண்டும்.ம்!,”கடவுள் ‘ஒவ்வொரு தீமையான விசயங்களிலும் ஏதோவொரு நன்மையை ஒளித்து வைத்திருக்கிறான் ..’ என்னிலே,என்னத்தை.. வைத்திருக்கிறானோ?”சரவணன் தேடலுக்குள்ளாகி இருந்தான்.
– ஏப்ரில் 2003