வார்த்தைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 4,415 
 
 

காலை ஐந்து மணி குமுதினி மெதுவாக எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள்,தூக்கம் வரவில்லை பக்கத்தில் அவளின் பேரக் குழந்தை ஐஸ்வரியா தூங்கி கொண்டு இருந்தாள்,அவள் தலையை மெதுவாக தடவி விட்டாள் குமுதினி,மாநிறம் அடர்த்தியான முடியை இருக்கமாக பின்னி போட்டிருந்தாள் ஐஸ்வரியா,ஒரு கையை பாட்டி மேல் போட்டு படுத்து கிடந்தாள் அவள்,எவ்வளவு அன்பான குழந்தை காதம்பரிக்கு இப்படி ஒரு மகளா என்று நினைக்கும் போது குமுதினிக்கு ஆச்சிரியமாக தான் இருந்தது,காதம்பரி ரமேஷின் மனைவி,குமுதினி மகாலிங்கத்தின் ஒரே மகன் ரமேஷ்,அவன் படிப்பை முடித்து ஐடி கம்பனியில் வேலைக்கு சேர்ந்தவன்,காதம்பரியை காதலிப்பதாக வந்து நின்றான் குமுதினியும் மகாலிங்கமும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை,ரமேஷ் காதம்பரியின் திருமணத்தை ஆடம்பரமாகவே நடத்தி வைத்தார்கள்,திருமணத்திற்கு பிறகும் காதம்பரி வேலைக்குப் போய் கொண்டு இருந்தாள்,குமுதினி அனைத்து வேலைகளையும் செய்து வைத்து விடுவாள்,மகாலிங்கம் சில நேரம் குமுதினியிடம் சொல்வார் நீ மட்டும் எந்த நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க,காதம்பரியையும் கொஞ்சம் செய்ய சொல்வது தானே என்பார்,இல்லீங்க அவள் வேலைக்கு போகிறாள்,எங்களுக்கு காதம்பரி மகள் மாதிரி ஏன் அவளை தொல்லைப் படுத்த,அவளாக எதுவும் செய்தால் செய்யட்டும் இல்லை என்றால் நானே செய்து விடுவேன் என்பாள் குமுதினி

நாட்கள் ஓடியது காதம்பரி தாய்மை அடைந்தாள்,முதலாவதாக மகன் ஐங்கரன் பிறந்தான் மூன்று மாதங்கள் மட்டும் வீட்டில் இருந்தாள் காதம்பரி அப்போதும் குமுதினியிடம் அதிகாரமாக தான் பேசுவாள் அவள்,தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பும், தலைக்கணமும்,வேலை செய்யும் திமிரும் கொஞ்சம் இருக்கவே செய்தது காதம்பரிக்கு,மகாலிங்கத்திற்கு அது பிடிக்காது எங்கடி உன் மகன் போய் பிடித்தான் இப்படி ஒரு அடாங்கா பிடாரியை என்பார் அவர்,சத்தம் போடாதீங்கள்,அவள் காதில் விழுந்தால்,மனம் கஷ்டப்படும் என்று கணவனை அதட்டுவாள் குமுதினி,இப்படியே மற்றவர்கள் மனம் கஷ்டப் படும் என்று நீ அமைதியாகவே இருந்தால் பிறகு நீ தான் கஷ்டப் படுவ என்பார் அவர்,மூன்று மாதங்களுக்குப் பிறகு வேலைக்கு போக ஆரம்பித்து விட்டாள் காதம்பரி,காலை நேரத்தில் மட்டும் வீட்டு வேலைகளை செய்வதற்கு ஒரு ஆள் ஏற்பாடு பன்னிக் கொண்டார்கள்,மிகுதி நேரங்களில் குமுதினி தான் பேரக் குழந்தையை பார்த்துக் கொண்டாள்,வேலை முடிந்து வந்தப் பிறகு சிறிது நேரம் ஐங்கரனுடன் விளையாடுவாள் காதம்பரி,ரமேஷ் அதுவும் கிடையாது மகாலிங்கம் வேலை முடிந்து வந்தப் பிறகு பேரக் குழந்தையுடன் கொஞ்சி கொண்டே இருப்பார்,அவன் செய்யும் ஒவ்வொன்றையும் ரமேஷ் பாரேன் உன் பையன் இப்படி பன்னுறான்,அப்படி பன்னுறான் என்றால் ரமேஷுக்கு கோபம் வரும்,அப்பா எனக்கு வேலை இருக்கு ஆபிஸில் முடிக்காத வேலையெல்லாம் நாளைக்குள் செய்து முடிக்கனும் இல்லை என்றால் பொஸ் கத்துவார் என்பான்,என்னடா நீ பிள்ளையை பெத்துப் போட்டு விட்டால் போதுமா? ஆசையாக வளர்க்கனும் என்பார் மகாலிங்கம்,அது தான் விளையாட்டு பொருள் எல்லாம் வாங்கி போட்டு இருக்கேன் அதில் விளையாடுவான் எனக்கு நேரம் இல்லை என்பான் ரமேஷ்,உனக்கு எதுக்குடா பிள்ளை என்று கேட்கத் தோன்றும் அமைதியாக இருந்து விடுவார் அவர்

ஐங்கரனும் வளர்ந்தான் அவனுக்கு தாத்தா பாட்டி இருந்தால் போதும் காதம்பரி ரமேஷ் இருவரையும் தேடுவதே இல்லை,காதம்பரி ஐஸ்வரியாவையும் பெற்றெடுத்தாள்,பார்துக் கொள்வதற்கு தான் ரமேஷ் பெற்றோர்கள் வேலையாட்கள் போல் இருக்கார்களே பிறகு என்ன கவலை காதம்பரிக்கு,ஐஸ்வரியாவும் வளர்ந்தாள்,ஐங்கரனுக்கு பன்னிரண்டு வயது ஆகிவிட்டது,மகாலிங்கம் ஒரு நாள் ஆபிஸ் போய் வரும் வழியில் தலை சுற்றி கீழே விழுந்துவிட்டார்,அவருடைய ஆபிஸ் நண்பர்கள் வீட்டிக்கு போன் பன்னி விஷயத்தை கூறிவிட்டு அவரை ஆஸ்பிடலில் சேர்த்து விட்டார்கள்,அதன் பிறகு பதறி அடித்துக் கொண்டு ஆஸ்பிட்டல் ஓடிய குமுதினிக்கு டாக்டர் சொன்ன விடயம் பேரிடியாக இருந்தது,அவருக்கு மூளைக்கு போகும் நரம்பில் இரத்தம் உறைந்து போய் விட்டது ஆப்ரேஷன் செய்தாலும் நம்பிக்கை இல்லை என்றதும் அதை கேட்ட குமுதினி துவண்டு போய் விட்டாள்,எவ்வளவு பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை என் கணவரை காப்பாத்தி விடுங்கள் என்று கதறினாள் குமுதினி,ரமேஷ் காதம்பரியும் வந்து சேர்ந்தார்கள்,மகனை கட்டிப் பிடித்து கத்தி விட்டாள் குமுதினி,அப்பாவை காப்பாத்தி விடு என்று அவனும் டாக்டரை போய் பார்த்தான் செலவு செய்து ஆப்ரேஷன் செய்ய தயாரானப் போது யாருக்கும் செலவு வைக்காமல் மகாலிங்கம் கண் மூடிவிட்டார்,அதன் பிறகு குமுதினி ஆகவும் ஒடிந்து போய்விட்டாள்,எப்போதும் தனிமையில் உட்கார்ந்து இருந்தாள், காதம்பரி ரமேஷிடம் சொன்னாள்,உங்கள் அம்மா ஒரு மாதிரி இருக்கார்கள், பிள்ளைகள் எதுவும் கேட்டால் கூட சில நேரம் பதில் சொல்வது இல்லை என்றதும்,ரமேஷ் குடும்ப டாக்டரிடம் அழைத்துப் போனான்,அவர் சொன்னது மனதளவில் பாதிக்கப் பட்டு விட்டதாகவும்,இப்படியே இருந்தால் பைத்தியமாக கூட ஆகிவிடலாம்,இனிமேல் நீங்கள் தான் கவனமாக அம்மாவை பார்த்துக் கொள்ளனும் என்றார் அவர்,அதன் பிறகு நிறைய மாற்றங்கள் குமுதினி வாழ்க்கையில்

ஐங்கரன் ஐஸ்வரியாவிற்கு தாத்தா இல்லை என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது காதம்பரி வேலையை விடவேண்டிய சூழ்நிலை,பிள்ளைகளை பாரத்துக்கனும் போதாக் குறைக்கு குமுதினியையும் சேர்த்து பார்த்துக்கனும் என்றவுடன் காதம்பரிக்கு அது கோபமாக மாறியது,அதன் விளைவு எந்த நேரமும் வீட்டில் கத்த தொடங்கினாள்,குமுதினி கணவன் நினைவில் இருந்து மெதுவாக மீண்டு வந்தாள்,அப்போது தான் காதம்பரியின் உண்மையான சுயரூபம் தெரிய தொடங்கியது குமுதினிக்கு,கணவனை இழந்த கவலை ஒரு பக்கம்,காதம்பரியின் வார்த்தைகள் மறுப் பக்கம் குமுதினி தவித்து தான் போனாள்,ரமேஷ் எதிலும் தலையிடுவது இல்லை,ஐஸ்வரியாவும்,ஐங்கரனும் பாட்டியை திட்டாதீங்கள் அம்மா என்பார்கள்,அதை காதம்பரி காதில் வாங்கி கொள்ளவே மாட்டாள் வீட்டு வேலைகள் செய்வதற்கு அவ்வளவு சோம்பேறித் தனம் காதம்பரிக்கு,வேலை செய்யும் போது கையில் எப்போதும் பணம் இருக்கும் அவளிடம் தற்போது அதுவும் இல்லை என்றவுடன் அந்த கோபத்தை எல்லாம் குமுதினியிடம் காட்ட ஆரம்பித்தாள், ஐஸ்வரியா எந்த நேரமும் குமுதினியிடம் அன்பாக நடந்துக் கொள்வாள்,நான் இருக்கேன் பாட்டி நீங்கள் எதற்கும் கவலைப் படாதீங்கள் என்ற வார்த்தைகள் இன்னும் அவள் காதுக்குள் கேட்ப்பது போல் இருக்கு குமுதினிக்கு,காதம்பரிக்கு இப்படி ஒரு மகளா என்று ஆச்சிரியமாக தான் இருக்கும் அவளுக்கு,கோபமே படாத ஐஸ்வரியா,எதற்கெடுத்தாலும் கோப பட்டு பிள்ளைகளை அடிக்கும் காதம்பரி,குமுதினிக்கு அது பிடிக்காது,ஏன் எதற்கெடுத்தாலும் அடிக்கிற அன்பாக சொன்னால் அவர்கள் கேட்ப்பார்கள் தானே என்றதும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது அத்தை,அந்த காலம் போல் இந்தக் காலம் இல்லை,பிள்ளைகளை செல்லம் கொடுத்து வளர்த்தால் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்துக் கொள்வார்கள் அது எல்லாம் நமக்கு சரி வராது என்று வெடுக்கென்று கூறுவாள் காதம்பரி

ஐஸ்வர்யாவிற்கு பாட்டியை பிடிக்கும்,அவளுடன் தான் படுத்துக் கொள்வதும்,அவளின் அன்பான பேச்சி குமுதினிக்கு ஆறுதலாக இருக்கும்,மகன் ரமேஷை விட்டால் வேறு யாரும் இல்லை குமுதினிக்கு,அதனால் தான் இவர்களுடன் இருக்காள்,ஐஸ்வரியாவின் ஆறுதலான வார்த்தைகள் மட்டும் இல்லை என்றால் குமுதினி எங்கையாவது போய் இருப்பாள் மனம் வெறுத்துப் போய் இவர்களுடன் இன்னும் ஒட்டிக் கொண்டு இருப்பதற்கு காரணமே ஐஸ்வரியா தான் என்பதை தைரியமாக சொல்லலாம்,மெதுவாக ஐஸ்வரியாவின் தலையை தடவி விட்டாள் குமுதினி,அவள் சட்டென்று விளித்து விட்டாள்,என்ன பாட்டி எதுவும் வேண்டுமா என்று பதட்டமாகவே எழுந்து கேட்டாள் ஐஸ்வரியா,இல்லை எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ தூங்கு என்று அவளை அனைத்துக் கொண்டாள் குமுதினி,ஏன் உட்கார்ந்து இருக்கீங்கள் தூக்கம் வரவில்லையா பாட்டி என்றாள் ஐஸ்வரியா,இல்லை என்றாள் குமுதினி,நான் காப்பி போட்டு கொண்டு வந்து தரட்டுமா என்றாள் ஐஸ்வரியா வேண்டாம் தங்ககட்டி நீ தூங்கு என்று அவளின் தலையை தடவி விட்டாள் குமுதினி நீங்களும் படுத்துக் கொள்ளுங்கள் பாட்டி என்று அவளையும் படுக்க வைத்து கட்டிப் பிடித்துக் கொண்டாள் ஐஸ்வரியா,சற்று நேரத்தில் ஐஸ்வரியா தூங்கி போனாள்,அவளின் அன்பான பேச்சி,அரவணைப்பு,கவனிப்பு என்று குமுதினியை நன்றாகவே பார்த்துக் கொண்டாள் ஐஸ்வரியா இத்தனைக்கும் பத்து வயது தான் ஆகின்றது

ரமேஷ் எப்போதும் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பவன்,காதம்பரிக்கு தற்போது எல்லாம் குமுதினியை பிடிக்காது,எந்த மருமகளுக்கு மாமியாரை பிடித்து இருக்கு காதம்பரிக்கு மட்டும் பிடிக்க எந்த நேரமும் ஏதற்காவது சண்டை பிடிப்பவள் தான் காதம்பரி,அவளின் படபடப்பான பேச்சி குமுதினையை காயப் படுத்தும்,வார்த்தைகள் ஒவ்வொன்றும் அப்படி வந்து விழும் அதற்கு இவள் இரண்டு அடியே அடித்து விடலாம் என்று நினைப்பாள் குமுதினி,மெதுவாக பேசி பழக்கம் இல்லாதவள் காதம்பரி,கத்தி பேசியே பழக்கப் பட்டவள்,அப்படி பேசினால் தான் மற்றவர்கள் அடங்கி போவார்கள் என்ற நினைப்பில் வாய்க்கு வந்தது எல்லாம் கத்துவாள்,குமுதினி பொறுமையாக இருப்பாள்,என்னம்மா செய்து தொலைத்த காதம்பரி கத்தும் அளவிற்கு என்று அம்மாவை அதட்டுவான் ரமேஷ்,நான் எதுவும் செய்யவில்லை காப்பி போட்டேன் போடும் போது கொஞ்சம் கீழே கொட்டி விட்டது அதற்கு தான் என்பாள் பாவமாக குமுதினி,உனக்கு ஏன் தேவையில்லாத வேலை கை காலை வைத்துக் கொண்டு பேசாமல் இருக்க மாட்ட வயது போன காலத்தில் என்பான் ரமேஷ்,ஐஸ்வரியா அம்மாவிடம் ஏன் அம்மா பாட்டிய திட்டுற பாவம் வயது போன காலத்தில் என்று கூறி விட்டு கீழே கொட்டி கிடக்கும் காப்பியை ஒரு ஈரத் துணியால் துடைத்து விடுவாள் அவள் பாட்டிக்கு கீழே குனிய முடியாது இடுப்பு வலி இல்லை என்றால் அவர்களே துடைத்து விட்டு போய் இருப்பார்கள் என்பாள் ஐஸ்வரியா ஏன் நான் போடுவேன் தானே அதற்கிடையில் என்ன அவசரம் என்பாள் காதம்பரி,நான் எழும்பியே இரண்டு மணித்தியாலம் ஆகப் போகுது எனக்கே இன்னும் நீ காப்பி போட்டுத் தரவில்லை என்றவுடன் காதம்பரிக்கு கோபம் வரும் பெரிய மகாராணி எழுந்தவுடன் காப்பி போட்டு வைக்க என்று குமுதினிக்கும் பட வேண்டும் என்பதற்காகவே கத்துவாள் காதம்பரி

ஏன் அதற்கு இவ்வளவு சத்தமாக கத்துற எனக்கு நீ காப்பி போட்டு தரவே வேண்டாம் என்று ஐஸ்வரியா உள்ளே போய் விடுவாள் இது வழமையாக நடப்பது தான் அவர்கள் வீட்டில் குமுதினி எழுந்து பல் தேய்ச்சி சாமி கும்பிட்டவுடன் காப்பி குடிக்க வேண்டும் இல்லை என்றால் குடலை பிரட்டுகின்ற மாதிரி இருக்கும் என்பது ஐஸ்வரியாவிற்கு தெரியும் அதனால் தான் அவள் காப்பி போட்டு தரவா என்று பாட்டியிடம் கேட்ப்பதுவும் ஐஸ்வரியாவுற்கு பத்து வயது என்றாலும் குமுதினி காப்பி போட்டு தர சொல்ல மாட்டாள் தற்செயலாக கொட்டிக் கொல்வாள் என்ற பயத்தில்,காதம்பரி ஆறஅமர தான் காப்பி போட்டு தருவாள் அந்த காப்பியும் கடமைக்காக போட்டது என்று நன்றாகவே தெரியும் குமுதினி எதுவும் வாய் திறக்க மாட்டாள் பிறகு இந்த காப்பியும் கிடைக்காது வயது போன காலத்தில் வாய்க்கு ருசி தேவையில்லை என்று அமைதியாக இருந்து விடுவாள் பழைய சாதம்,மிஞ்சிய குழம்பு இதுவெல்லாம் குமுதினிக்கே என்று ஒதிக்கி விடுவாள் காதம்பரி அதையும் ஒழுங்காக சூடு பன்னாமல் வைத்து விடுவாள்,குமுதினிக்கு ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது தற்போது பழக்கமாகி விட்டது ஐஸ்வரியா வீட்டில் இருக்கும் போது பாட்டி சாப்பிடும் போது தான் அவளும் சாப்பிடுவாள்,அம்மா பாட்டிக்கு ஏன் அந்த பாத்திரத்தில் உள்ள சாதத்தை போடுற?எனக்கு இந்த பாத்திரத்தில் உள்ள சாத்த்தை போடுற என்பாள் வெகுளித் தனமாக ஐஸ்வரியா,நீ வாயை மூடிகிட்டு சாப்பிடு எனக்கு தெரியும் யார் யாருக்கு எதை போடனும் என்று மகளை அதட்டுவாள் காதம்பரி,ஐங்கரனுக்கும் தெரியும் அம்மாவின் குணம்,எதுவும் அவன் வாய் திறக்க மாட்டான்,ஐஸ்வரியா பாட்டிக்காக ஏதாவது பரிந்து பேசிவிட்டுகாதம்பரியிடம் வாங்கிகட்டிக் கொள்வாள்,அதற்காக பேசாமலும் இருக்க மாட்டாள்,ரமேஷ் எதையும் கண்டுக் கொள்வது இல்லை,முன்பு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்,தற்போது எல்லாம் குமுதினிக்கு முதலில் சாப்பாட்டை கொடுத்து விடுவாள் காதம்பரி,பிறகு தான் மற்றவர்கள் சாப்பிடுவார்கள்

ஐஸ்வரியா ரமேஷ் முன்னுக்கு எதுவும் கேட்டு விடுவாள் என்ற பயம் காதம்பரிக்கு,ரமேஷ் எதுவும் கேட்க்க மாட்டான்,சில நேரம் எதுவும் கேட்டாள் சமாளிக்க முடியாதே,பாட்டிக்கு அந்த குழம்பு போடவில்லையா,இந்த குழம்பு போடவில்லையா என்று ஐஸ்வரியா கேட்க்கும் போது தடுமாற வேண்டி வரும் என்பதற்காகவே குமுதினிக்கு முதலில் சாப்பாட்டை கொடுப்பதை வழமையாக்கி கொண்டாள் காதம்பரி,ஐஸ்வரியா சாப்பிட போகும் போது மட்டும் பாட்டியிடம் சாப்பிட்டீங்களா பாட்டி என்ற கேள்வி வரும்,ரமேஷ் எதுவும் கேட்ப்பது இல்லை பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளை இப்படி இருக்கான் என்று குமுதினி நினைத்துக் கொள்வாள்,காதம்பரியின் நண்பர்கள் போன் பன்னுவார்கள் மறுப்படியும் வேலைக்கு வா என்று சொல்லும் போது,காதம்பரி அது தான் வீட்டில் ஒன்னு இருக்கே என் உயிரை வாங்குவதற்கே பிறகு எப்படி நான் விட்டு விட்டு வேலைக்கு வருவது, எனக்கும் ஆசை தான் தற்போது பிள்ளைகள் பெரிதாகி விட்டார்கள்,அவர்களை கவனித்துக் கொள்ள அவர்களுக்கே முடியும்,ஆனால் இந்த கிழவியை தனியாக விட முடியாதே கட்டாயம் நான் வீட்டில் இருந்து தான் தொலைக்கனும் என்று கூறுவது குமுதினிக்கு கேட்க்கும்,கண் கலங்கி விடும்,கணவனை நினைத்துக் கொள்வாள்,என்னை இப்படி அந்தரத்தில் விட்டுட்டு போய்டிங்களே என்று மனம் படபடக்கும்,காதம்பரிக்கு சொந்தம் என்று சொல்வதற்கு அத்தை மாமா மட்டுமே தற்போதைக்கு உள்ளனர், அத்தை மகள் தட்சணா அடிக்கடி போன் பன்னுவதும் காதம்பரி வீட்டுக்கு வந்து போவதுமாக இருப்பாள்,அவளிடம் காதம்பரி பேசும் போது குமுதினியை குறையாக சொல்வாள்

வயது போன காலத்தில் செத்தும் தொலையாமல் இன்னும் இருந்து நம் உயிரை வாங்குது அநாதை மடத்தில் தள்ளிவிடலாம் ரமேஷிடம் சொல்வதற்கு பயமாக உள்ளது ஏதாவது சொல்லி ரமேஷை சம்மதிக்க வைத்து விடலாம்,ஆனால் என் பொண்ணு ஐஸ்வரியா இருக்காளே அவள் விடவே மாட்டாள்,என்ன மாயம் மந்திரம் செய்து தொலைத்து அவளை தன் கைக்குள் போட்டுக் கொண்டதோ தெரியவில்லை இந்த கிழவி, ஐஸ்வரியா இந்த கிழவி என்றால் உருகி தான் போகிறாள் என்ன செய்வது நான் பெத்தது எனக்கே எதிரி என்று அலுத்துக் கொள்வாள் காதம்பரி சரி விட்டுத் தள்ளு ஏதோ ஒரு மூலையில் அடக்கி வைத்து விடு என்பாள் தட்சணா,உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கு அது நினைவு இல்லாமல் இப்படி கதைப்பதற்கு ஒரு காலத்தில் அநுபவைப்பீங்கள் நான் சாபம் விடவில்லை தற்போது நாங்கள் செய்யும் நல்லது கெட்டதிற்கு உடனுக்குடன் பலன்கள் கிடைத்து விடுகிறது என்று மனதில் குமுதினி நினைத்துக்கொள்வாள்,குமுதினிக்கு ஒரு நிமிடம் ஆகாது காதம்பரியிடம் எதிர்த்து கதைப்பதற்கு அதை எப்போதும் அவள் விரும்புவது இல்லை யாருடைய மனதும் நோகும்படி அவள் வார்த்தைகளை கொட்டுவது இல்லை,நிதானமாகவே பேசி பழக்கப்பட்டவள்,வார்த்தைகளின் மதிப்பை நனாறாகவே அறிந்து வைத்திருப்பவள் காதம்பரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *