வசந்த காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 1,172 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சில்க்ஏர்’ விமானத்தில் ஏறி அமர்ந்தாள் சீதா. விமானம் புறப்பட சற்று நேரம் இருந்தது. பயணிகள் தங்கள் இருக்கை எண்களை சரிபார்த்து அமர்ந்து கொண்டிருந்தனர். விமானப் பணிப்பெண்கள் சில பயணிகளுக்கு உதவிக் கொண்டிருந்தனர்

சீதாவின் மனதிற்குள் பல எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன விமானப் பயணம் சீதாவுக்கு ஒன்றும் புதியதல்ல அவள் இதுவரை பல நாடுகளுக்கு தன் கணவனோடு சென்று வந்திருக்கிறாள். ஆனால், இன்று இந்தப் பயணம், அவள் தன் அன்புக் கணவன் செல்வத்தைக் காண மியான்மர் நாட்டுக் குத்தான் புறப்பட்டுக் கெண்டிருக்கிறள்.

சிங்கப்பூரில் ஒரு உலகப் புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ஒட்டலில் செல்வம் உயர் அதிகாரியாக பணிபுரிந்தான். பதவியில் பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவன் சீதாவின் கணவன் செல்லும். வயது 45.

வேலையில் அதிக பொறுப்புமிக்கவ்ன். பொருளியல் மந்தநிலை அவனையும் விட்டபாடில்லை. குடும்பத்தை விட தன் பணியையே உயர்வாக மதிப்பவன். பதவியில் நீடிப்பதற்காக பல திறன்களை கற்றறிந்து சான்றிதழும் பெற்றவன் செல்வம். ஹோட்டல் நிர்வாகத்தை கரைத்து குடித்தவன்.

உலகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் வியாபாரம், செல்வம் வேலை செய்யும் ஐந்து நட்சத்திர ஹோட்டலையும் ஆட்டம் காண வைத்தது.

செல்வம் வேலை செய்யும் ஹோட்டல் நிர்வாகிகள் எதிர்பார்த்த லாபம் குறையத் தொடங்கியது. செல்வம் முடிந்தவரை எவ்ளவோ இரவு “”ல”க பாடுபட்டான். செல்வத்திற்கு கீழே வேலை செய்யும் முந்நூறு பேரில், நூறு பேரை ஆட்குறைப்பு செய்ய வேண்டிய கட்டாய நிலைமை சிலர் வேலை இழந்தனர்.

சிலர் இந்த வேலை பிடிக்கவில்லை என்று தானே வேலையிலிருந்து விலகிக் கொண்டனர். அதன் விளைவு ஹோட்டலில் வந்து தங்கும் விருந்தினர்கள் குறை கூறத் தொடங்கினர். செல்வத்திற்கு தலையே சுற்றியது. இதற்கு பொறுப்பான செல்வம் சொல்லும் எதையும் கேட்க மேலதிகாரிகளுக்கு பொறுமை இல்லை.

செல்வத்திற்கு உயர் அதிகாரி என்று பெயர்தான். அதிகாலையிலிருந்து நள்ளிரவுவரை வேலைப்பளு அவனைத் தாக்கியது ‘என்ன வேலை இது ‘ என்று மனம் புழுங்கினான் செல்வம். வேலையை விடவும் அவனுக்கு மனமில்லை. அவனை நம்பி மனைவி சீதா, இரண்டு பிள்ளைகள் என்ன செய்வது என்று சிந்தித்தான்.

செல்வத்துடன் வேலை செய்த சிலர் வேலையை விட்டு விட்டனர். சிலர் வேறு வேலைக்கு மாறிக்கொண்டனர். இவன் நிலைதான் திண்டாட்டமாக இருந்தது தற்போது வாங்கியிருக்கும் கார் செலவு வேறு அவனை திக்கு முக்காட வைத்தது.

தன் மனைவியிடம் மனம் திறந்து நிலைமையை விளக்கினான் செல்வம். புத்திசாலிப் பெண்ணான சீதா புரிந்துக் கெர்ண்டாள். நாட்டு நடப்பு நன்றாக தெரிந்ததால் அவள் தன் கணவனுக்கு ஆறுதல் கூறியதுடன் தானும் ஏதாவது வேலைக்குச் செல்ல வேண்டும் . அல்லது வீட்டிலிருந்தபடியே ஏதாவது கைத்தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்’ என்பதற்கேற்ப சீதா சிறுவயதிலேயே நன்கு துணிகளை தைக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். இந்த அவசரக் காலத்திற்கு அந்த கைத்தொழில் அவளுக்கு உதவும் என எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்,

திடீரென்று ஒரு நாள் செல்வம் தன் மனைவி சீதாயிடத்தில் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதிக சம்பளம் என்றும் உடனே சென்று பணியில் சேர வேண்டும் என்றும் கூறியதைக் கேட்ட சீதா, (அதிர்ச்சியுடன்) “என்ன ! வெளிநாட்டிலா? என்னங்க, மற்ற நாட்டிலிருந்து எத்தனையோ பேர் நம்ப நாட்டுக்கு வேலைதேடி வராங்க. நீங்க நம்ப நாட்டை விட்டுட்டு வேற நாட்டுக்கு போறீங்க, இதெல்லாம் சாத்தியமா? நல்ல யோசிங்க” என்றும் கூறினாள்.

செல்வம் தன் மனைவி சீதாவிடம் “இதோ பாரு இந்த மாதிரி நல்ல சந்தர்ப்பம் இனி வருமான்னு தெரியலே, ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ன்னு பெரியவங்க சும்மா சொல்லலே” என்றதும் சீதா ஒரு நிமிடம் பிரேமை அடைந்தாலும் உடனே தன்னை கதாரித்துக் கொண்டு, தன் குடும்ப சூழ்நிலை, பிள்ளைகள் கல்விச் செலவு, இதர செலவுகள் எண்ணிப் பார்த்தவளுக்கு, இதை விட்டால் என்ன செய்வதென்றும் புரியவில்லை.

அப்படியே அவள் படித்த ‘ஒ’ நிலை படிப்புக்கு அவள் வேலைக்குச் சென்றாலும், ஆயிரம் வெள்ளி சம்பளம் கிடைப்பது அரிது. வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் இந்த நேரத்தில்… யோசித்தவள், “சரி, எல்லாம் இறைவன் செயல் என எண்ணி, தன் கணவன் செல்வம் மியான்மார் நாட்டில் வேலை செய்ய வேலைக்குச் செல்ல அரைமனதுடன் சம்மதம் தெரிவித்தாள்.

அவள் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஒரே நேரத்தில் மின்னலாக தோன்றி மறைந்தன.

கணவன் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றால், வீட்டு நிர்வாகம், குடும்பம், பிள்ளைகள், பாதுகாப்பு அனைத்தையும் அவள் ஒருத்தியே நின்று செய்யவேண்டும்.

உறவினர்கள் இருக்கிறார்கள். அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. தன்னால் முடியும்? என சற்று தடுமாறினாலும், தன் மனத்தை திடப்படுத்திக் கொண்டு, தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன், கணவன் செல்வம் வெளிநாடு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை கூடுமான வரை தானும் கூட இருந்து செய்து கொடுத்தாள்.

கணவன் செல்வத்தை வேலைக்காக மியான்மார் நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாள். நாட்கள் நகர்ந்தன. சீதாவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள். தனி ஆளாக நின்று தன்னையும் தன் பிள்ளைகள் ரவி, தேவி இருவரையும் பார்த்துக் கொண்டாள். அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்தாள்.

கணவன் தன்னோடு இல்லை என்றதும் உலகமே அஸ்தமித்தது போல் மூலையில் முடங்கிக் கிடக்காமல் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்து பிள்ளைகளுக்கு பிடித்தபடி சமைத்துக் கொடுத்தாள் பிள்ளைகள் கல்வியை கவனித்தாள். வீட்டுக்கு வரும் கடிதங்கள், தண்ணீர், மின்சாரம், தொலைபேசி ‘பில்’லை சரிபார்த்து குறிப்பிட்ட தேதியில் கட்டணத்தை செலுத்தினாள்.

வங்கிக்கு சென்று வங்கிக் கணக்கிலிருந்து வருமான வரி கணக்கு வரை அனைத்தையும் கவனித்து பூர்த்தி செய்தாள்.

செல்வம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நான்கு நாள் விடுமுறையில் சிங்கப்பூர் வந்து சென்றான். மற்றபடி அடிக்கடி தொலைபேசியில் சீதாவிடமும் பிள்ளைகளிடமும் உரையாடினான்.

தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் இடைவெளியை குறைக்க சீதா தன் பிள்ளைகளிடம் அதிக நெருக்கத்தைக் காட்டி ஆதரித்து வந்தாள். வாழ்க்கையில் வெற்றிபெற இப்படிப்பட்ட சிறிய தியாகங்களை செய்ய வேண்டியது தனது கடமை எர்றே நினைத்தாள் சீதா.

சிலர் சீதாவிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டு அவள் மனதை அலைபாயவிட்டனர். எதற்கும் அஞ்சவில்லை சீதா துணிவே துணை என ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு தன் கடமைகளை செவ்வனே செய்தாள் சீதா.

வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை ஏற்கனவே கடந்து விட்ட சீதாவுக்கு இப்போது இருக்கும் தனிமை, குடும்ப சுமை, பொறுப்பு எதுவுமே மலையாகத் தெரியவில்லை. மாறாக, இந்த ஸ்ரீழ்நிலையை அவள் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு திறமையுடனும், மன நிறைவுடனும் நிர்வகித்து வந்தாள்.

இவள் திறமையுடன் குடும்பத்தை நிர்வகிப்பதைக் கண்ட உறவினர்கள், தெரிந்தவர்கள் இவளிடம் கேள்வி கேட்டு குழப்பத்தை உண்டு பண்ணுவதை விட்டு விட்டு, இவளை மனம் விட்டு பாராட்டினர்.

சிலர் இவளிடம் எந்த பருப்பும் வேகாது என்று ஒதுங்கி இருந்தனர்.

தன் ஐந்து அறை வீட்டை சுத்தமாக, அலங்காரமாக வைத்துக் கொண்டாள் நூல் நிலையத்திற்குச் சென்று நிறைய நூல்களை எடுத்து வந்து படித்து மனப்பசியை ஆற்றிக் கொண்டாள்.

தன் கடமையில் கண்ணாக இருந்த சீதாவுக்கு அவளே மியான்மார் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு வந்து அமைந்தது. அந்த முறை அவள் கணவன் செல்வத்திற்கு அதிக வேலை இருந்ததால் அவன் சிங்கப்பூர் வர இயலவில்லை அதற்கு பதிலாக சீதா சிங்கப்பூரிலிருந்து மியன்மார் நாட்டுக்குச் செல்ல அழைப்பு வந்தது. அந்தச் செலவை நிறுவனமே ஏற்றுக் கொண்டது. இந்த வாய்ப்பை நினைத்து சீதா மனதிற்குள் மகிழ்ந்தாலும், தன் பிள்ளைகள் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருவதை நினைத்தும், பிள்ளைகளையும், வீட்டையும் பார்த்துக் கொள்ள யாரை விட்டுச் செல்வது என்று மலைத்துக் கொண்டிருந்தவளுக்கு, சீதாவின் சற்று வயதான தாய் உதவி செய்ய முன் வந்தது சீதாவுக்கு மன ஆறுதலாக இருந்தது.

ஒரு வார காலம் சீதா மியன்மார் நாட்டுக்குச் செல்வதற்காக, அவள் இங்கு வீட்டுக்குத் தேவையான அரிசியிலிருந்து அனைத்தையும் வாங்கிக் கொடுத்து, அம்மாவிடம் சொல்லி விட்டு, அண்டை வீட்டு ரோஸி மாமியிடம் பார்த்துக் கொள்ளக் கூறினாள். தனக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்துக் கொண்டு, பாஸ்போர்ட், விமான டிக்கட் அனைத்தையும் கவனித்து, சரிபார்த்து அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தாள்.

‘சில்க்ஏர்’ விமானம் புறப்பட்டு நடு வானத்தில் பறந்து கொண்டிருந்தது. சீதா தன் கணவனை நேரில் பார்க்கப் போகிறோம் என ஒரு புறம் மகிழ்ந்தாலும், மறுபுறம் தன் பிள்ளைகளை நினைத்து சற்று கவலைப்பட்டாள். நல்ல வேளையாக அவளின் இரண்டு பிள்ளைகளும் புரிந்துணர்வு மிக்கவர்களாக இருந்தது அவள் செய்த பாக்கியம் என்றே கூறவேண்டும். சீதாவின் மகன் ரவி வீட்டில் பொறுப்பு நிறைந்தவனாக விளங்கினான் ரவி சொல்வதைக் கேட்டு நடக்கும் நல்ல தங்கையாக சீதாவின் மகள் தேவி இருந்ததால், சீதாவின் தாயாருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

சுமார் ழூன்று மணி நேரத்தில் விமானம், மியான்மார் நாட்டின் தலைநகரான யங்கூன் விமான நிலையத்தில் தரை இறங்கியது. சீதா மன உற்சாகத்துடன் காணப்பட்டாள். அவள் கணவன் செல்வம், அங்கே சீதாவை வரவேற்க காரில் வந்து காத்துக் கொண்டிருந்தான். கணவனை நேரில் பார்த்தவளுக்கு மகிழ்ச்சி ஒரு புறம்.

யங்கூன் விமான நிலையத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்களில் செல்வம் வேலை செய்யும் அந்த பிரம்மாண்டமான ஐந்து நட்சத்திர ஒட்டல் வாசலில் வந்து கார் நின்றது. அப்போது இரவு மணி எட்டு.

விளக்குகள் பகல் நிலவு போல் பார்க்க பிரகாசமாக இருந்தது. ஹோட்டல் ஊழியர்கள் சிலர் சீதாவை முகம் மலர வரவேற்றனர்.

ஹோட்டலின் ஏழாவது மாடியில் செல்வத்தின் அறை இருந்தது சீதாவை அழைத்துக் கொண்டு அவன் ‘லிப்டு’ வழியாக சென்று அறைக்குள் சென்ற போது அறை முழுவதும் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, வாசம் மூக்கைத் துளைத்தது. சீதாவை வரவேற்று வாழ்த்து அட்டை ஒன்று பழத்தட்டுடன் இருந்த காட்சியை கண்ட சீதாவுக்கு எல்லாம் பிரமிப்பாக இருந்தது. பூலோகத்திலிருந்து ஏதோ தேவலோகத்துக்குள் வந்து நிற்பது போல மலைத்து நின்றாள்.

அன்று இரவு உணவு பலவகைகளில் உண்ண இருந்தது ஹோட்டலின் கீழ்தளத்தில் ‘லோபி’ மிகப் பெரிய அரண்மனை போல காட்சியளித்தது. அந்த சூழ்நிலையில் சாப்பிடுவது மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது சீதாவுக்கு. மனமும் வயிறும் நிறைந்தது.

அங்கே செல்வத்திற்கு வேலை எளிதாகவும், அதே சமயத்தில் அவனை மரியாதையுடன் நடத்தினர். எல்லோரும் செல்வத்திற்கு மரியாதை கொடுப்பதை நேரில் பார்த்தாள் சீதா. எல்லா ஊழியர்களும் செல்வத்தை பார்த்தால் “ஹலோ ! குட் மார்னிங் சார்” என்று முகம் மலர கூறினர்.

மறுநாள் காலை சுமார் ஒன்பது மணிக்கு செல்வம், மனைவி சீதாவை அழைத்துக் கொண்டு வெளியே காரில் சென்றான். மியான்மார் நாட்டில் இயற்கை அழகுடன் புத்த பிரானின் திருக்கோயில்கள் நிறைய இருப்பதாக தெரிந்து கொண்டாள்.

அங்கே நேரில் சென்று பார்த்த போது, புத்தர் சிலைகளும், கோவில்களும் எழில் கொஞ்சியது நிஜம். அவற்றுள் பல அங்கு வரலாற்றுச் சின்னங்களாக விளங்கின. அங்குள்ள மக்கள் புத்தரை கடவுளாக வணங்கினர்.

பல புத்த வழிபாட்டுத்தலங்கள் எழில் சிந்தும் ஒவியங்கள் கண் கொள்ளாக் காட்சியாக பிரமிக்க வைத்தது. புத்தர் சிலை ஒன்று சுமார் அறுபது அடி உயரத்தில் தங்கத்தால் செதுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது . அந்த நாட்டின் கலைப் பொக்கிஷமாக விளங்கியது கலையழகுடன் விளங்கிய அந்த சிற்பங்களை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என தோன்றியது சீதாவுக்கு.

அதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் பல புத்த வழிபாட்டுத் தளங்கள் இருந்த போதிலும் குறிப்பிட்ட ஒரு புத்தர் ஞானம் பெற்ற அமைதிப் பூங்காவாக விளங்கியது. அந்த புத்தஸ்தலத்திற்கு சென்று திரும்பிய போது, சீதாவுக்கு மனச்ஞ்சலங்கள் மாறி, மனம் அமைதியாகவும் தெளிவாகவும் விளங்கியதை இன்று வரை அவளால் மறக்க இயலவில்லை. இது எப்படி சாத்தியம்? புத்தர் உண்மையிலேயே சக்தி மிக்கவராக விளங்கியதை சீதா தன் உள்ளப்பூர்வமாக உணர்ந்தாள்.

இவ்வுலகில் பல உண்மைகள் ஆதாரப் பூர்வமாகத்தான் உணர்த்தப் பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டாள்.

அத்தனை சந்தோஷங்களுக்கிடையேயும் அவள் மனம் சிங்கப்பூரில் உள்ள அவள் பிள்ளைகளிடம்தான் இருந்தது. அங்கிருந்து தன் பிள்ளைகளிடம் தொலைபேசியில் பேசியதும் அவள் மனம் ஆறுதலாக இருந்தது. அவள் மகள் தேவி “அம்மா கவலைப்படாதீங்க, நீங்க சந்தோசமா இருந்துட்டு வாங்க என்று கூறியதைக் கேட்டு சீதாவுக்கு மனம் இதமாக இருந்தது. சிறுவயதிலேயே பிள்ளைகளை சீதா, ஒழுக்கத்துடனும், அறிவுத் தேர்ச்சியுடனும் வளர்த்து வந்ததால், வளரும் வயதில் அவர்கள் பெற்றோர்களுக்கு எந்தப் பிரச்சனையையும் தராமல் இருந்தார்கள்.

மறுநாள் ஏப்ரல் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சீதாவுக்கு பிறந்தநாள் என்பதைத் தெரிந்துக்கொண்டு அங்குள்ள ஒட்டல் ஊழியர்கள் சிலர் சீதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளையும், ரோஜாக்கள் நிறைந்த சிவப்பு வண்ண பூங்கொத்து ஒன்றையும் அவள் அறைக்கு அனுப்பி வைத்தனர். இதைப் ‘ பெற்றுக் கொண்ட சீதா மன மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள். அன்று அவளின் முப்பத்தி எட்டாவது பிறந்தநாள் மியான்மாரில் சிறப்பாக கொண்டாடியதை நினைத்து இறைவனுக்கு நன்றியை செலுத்தினாள்.

அங்கு தங்கி இருந்தபோது ஒருநாள் சீதாவும், செல்வமும் அங்கிருந்து விமானத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்து மியான்மாரின் மற்றொரு எல்லையில் ‘இன்லே லேக்’ என்று கூறப்படும் ஒரு மிகப் பெரிய ஏரிக்குச் சென்றனர். அந்த ஏரி சுமார் இரண்டாயிரம் அடி நீளமும், இருநூறு அடி அகலமும் உள்ள அந்த ஆற்றில் பயணம் செய்வது புது அனுபவமாக இருந்தது. அலைகள் இல்லாமல் , தெளிந்த நீரோட்டத்துடன், குளிர்ச்சியான தென்றல் காற்றில் மிதமான வேகத்தில் படகில் பயணம் செய்தது அவள் இதுவரை கண்டிராத புது வசந்தமாகவே இருந்தது.

வாழ்க்கையில் கஷ்டங்களையே கண்டு வந்த சீதாவுக்கு இப்படிப்பட்ட பயணம் ம னதிற்கு நிம்மதி யை கொடு த்தது . அவள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் வடிகாலாக அமைந்தது போல இருந்தது. வாழ்க்கை எனும் நாணயத்தின் ஒரு பக்கத்தையே கண்டு வந்த சீதாவின் வாழ்க்கையில் இது ஒரு பொற்காலமாக இருந்தது உண்மை.

நமக்கு வரும் சில கஷ்டங்களை பொறுமையுடன் சமாளித்து, எதிர்நீச்சல் போட்டு, நிதானமாக தெளிவு பெற்று வந்தால் வசந்த காலம் எல்லோருக்குமே காத்திருக்கிறது என்ற தத்துவத்தை சீதா உணர்ந்தாள்.

இன்னும் சில வருடங்கள் சீதாவின் கணவன் செல்வம் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலையில்தான் தற்போது சிங்கப்பூர் நிலவரம் உள்ளது. அதனால் சீதா பொறுமையுடன் தன் குடும்பத்தை தனியாக நிர்வகிக்க தன்னை தயார் படுத்திக் கொண்டாள்.

சில நிஜங்களை நாம் ஏற்றுக் கொண்டு, உண்மையுடன் நடந்துக் கொண்டால் வசந்தங்கள் நம்மைத் தேடி வரும். இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. அவற்றை நாம் ஈஸியாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை ககம் தரும் வசந்த காலமாகவே அமையும் என்பதை நன்கு உணர்ந்த சீதா அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டாள்.

பொறுமையாக இருந்து வாழ்க்கை நடத்தும் யாரும் வாழ்க்கையில் தோற்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை உணர்ந்த சீதா இனி வரும் காலத்தையும் வசந்த காலமாகவே ஆக்க நினைத்தாள்.

மறக்காமல் தன் பிள்ளைகளுக்கும், அன்புத்தாய்க்கும் மியான்மார் நாட்டின் அழகிய கைவினைப் பொருட்களை அன்பளிப்பாக வாங்கிக் கொண்டு மீண்டும் சிங்கப்பூர் திரும்புவதற்காக அன்று காலை பத்து மணிக்கு ‘சில்க்ஏர்’ விமானத்தில் ஏறி சீதா சிங்கப்பூர் வந்தாள்.

இன்னும் எத்தனை காலம் இப்படி தன் வாழ்க்கை அங்கும் இங்குமாக இருக்கும் என்ற எண்ணத்துடன், ஒரு வாரம் பிரிந்திருந்த பிள்ளைகளைக் காண ஆவலுடன் வீட்டுக்குள் வந்தாள்.

அங்கே, பிள்ளைகள் இன்னும் பள்ளியிலிருந்து திரும்பவில்லை என்று அறிந்தாள். தன் தாயிடம் நலம் விசாரித்து விட்டு, சிங்கப்பூரின் எந்திர வாழ்க்கையில் தன்னை அர்ப்பணிக்க காத்திருந்த போது,

டெலிபோன் மணி அடித்தது. சீதா ஓடிச் சென்று டெலிபோனை எடுத்து நிதானமாக ‘ஹலோ !’ என்றாள்.

எதிர்முனையில் அவள் கணவன் செல்வம் உற்சாகத்துடன் பேசினான். “சீதா, ஒரு இனிய செய்தி” சீதாவுக்கு செல்வம் பேசியதைக் கேட்க ஆவலாக மகிழ்ச்சியாக இருந்தது.

ஆம் ! அந்த நல்ல செய்தி !

ஒராண்டு செல்வம் அங்கே உண்மையுடன் உழைத்ததற்கு, அவனுக்கு பதவி உயர்வுடன் சிங்கப்பூர் பிராஞ்சில் உள்ள ‘ராஃபில்ஸ்’ ஐந்து நட்சத்திர ஓட்டலில் அடுத்த மாதத்திலிருந்து வேலை ஆரம்பமாகிறது ஜெனரல் மேனேஜராக.

சீதாவின் வாழ்க்கையில் ‘வசந்த காலம்’ தொடர் கதையாகிவிட்டது.

– ஒலிக்களஞ்சியம் 96.8, 15.04.2002 , தமிழ் முரசு 12.03.2006, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *