ரோஸி, என்னே…மன்னிச்சிடு…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 5,221 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

“எனக்கு இப்போ பசி இல்லே.நான்அதிகமா சாப்பிடலே”என்று சொல்லி விட்டு,வில்லியமும் அவன் அம்மாவும் குழந்தையும் டின்னர் சாப்பிட பிறகு ,ஜென்னி மெல்ல தான் எடுத்து இருந்த முடிவை சொல்ல ஆரம்பித்தாள்.

“இதோ பார் வில்லியம்.நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதிச்சதுக்கு ஒரே காரணம் எனக்கு ஒரு குழந்தை வேணும் என்பதற்காகத் தான்.ஆனா உன் மூலமா எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கலே.எனக்கு வயசு இப்போ ஐம்பத்து நாலு ஆயிடிச்சி.இனிமே எனக்கு குழந்தை பொறக்காது.என்னை மன்னிச்சு விடு.நான் உன்னை ‘டைவர்ஸ்’ பண்ணி விட தீர்மானித்து இருக்கேன்.உனக்கும்,உன் அம்மாவுக்கும் நான் சொன்னது ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்.ஆனா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.’வொ¢ சாரி டு போத் ஆப் யூ’ “ என்று சொல்லி விட்டு தன் ‘கிரெடிட் கார்ட்டை’ ‘பேரா¢டம்’ கொடுத்து டின்னருக்கு ‘பே’ பண்ணினாள்.

வில்லியத்துக்கும்,அவன் அம்மாவுக்கும் என்ன சொல்வது என்று பு¡¢யாமல் முழித்துக் கொண்டு இருந்தார்கள்.’பேரர்’ பில்லுக்கு பணத்தை எடுத்து கிட்டு ‘கிரெடிட் கார்ட்டை’ ஜென்னி யிடம் கொடுத்தான்.ஜென்னி அதை வாங்கி தன் ‘பர்ஸில்’ வைத்துக் கொண்டு சீட்டை விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.வேறே வழி இல்லாமல் வில்லியமும்,அவன் அம்மாவும் ஜென்னியை பின் தொடர்ந்து காருக்குப் போய் அதில் ஏறிக் கொண்டார்கள்.

அடுத்த நாளே வில்லியம் அவன் துணி மணிகளையும்,அவன் அம்மா,குழந்தை துணி மணிகளையும் மூனு ‘சூட் கேஸில்’ ‘பாக்’ செய்துக் கொண்டு ரூமை விட்டு வெளியே வந்து “என்னால் உன் ஆசையை தீர்த்து வக்க முடியலே.கர்த்தர் நமக்கு அந்த பாக்கியத்தை தரலே.இத்தனை வருஷம் இந்த பணக்கார வாழ்க்கையை நீ எங்களுக்கு கொடுத்ததுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’” என்று கண்களில் கண்ணீர் மல்க சொல்லி விட்டு,தன் அம்மாவையும், குழந்தையையும்,அழைத்துக் கொண்டு ஜென்னி யின் மாளிகையை விட்டு விட்டு வெளியே வந்து தன் பழைய வாழ்க்கைக்கு வந்து விட்டான்.

மூன்று நாட்களுக்கு ஜென்னி ஆபீஸ் போகவிலை.

மூன்று நாட்களுக்கு பிறகு கம்பனியில் தன் பொறுப்பை உணர்ந்து ஜென்னி மீண்டும் தன் கம்பனிக்கு வேலைக்குப் போக ஆரம்பித்தாள். ஜென்னிக்கு 62 வயசு ஆகும் போது, அவளுக்கு கம்பனியின் CEO ஆக பதவி உயர்வு கொடுத்தார்கள்.ஜென்னக்கு சந்தோஷமாக இருந்தாலும் தனிமை அவளை மிகவும் வாட்டி வந்தது.

அவள் ஏங்கி வந்தாள்.அவள் ஏக்கம் நாளுக்கு நாள் அதிகமாகியது.அவள் தன் ஏக்கத்தை எண்ணமிட்ட வாறே அந்த ஏக்கத்தை மறக்க குடியில் முழுகினாள்.முதலில் கொஞ்சம் குடித்து வந்த அவள் நாளடைவில் அதிகம் குடித்து,குடிக்கு அடிமை ஆனாள்.மறுபடியும் அவள் உடம்பு பருமனா கிக் கொண்டு வந்தது.

கண்ணாடி முன் தன்னை பார்க்கவே அவளுக்கு பிடிக்கவில்லை.அவளுக்கு அவள் மேலேயே கோபம் கோபமாக வந்தது.தனக்கு 65 வயசு ஆனதும்,வேலை பண்ணது போதும் என்று நினைத்து கம்பனியில் இருந்து ‘¡¢டையர்’ ஆகி விட்டாள் ஜென்னி.¡¢டையர் ஆகி வந்த பணத்தில் ஜென்னி தான் இருந்து வந்த மாளிகையை கம்பனிக்கு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டாள்.

தன் மாளிகையில் பொழுது போகாதால் ஏதோ தோன்றியவளாய் திடீரென்று கம்ப்யூட்டரை log in பண்ணி Face book ல்,தன்னை பற்றியும்,தன் ஏக்கத்தையும் விவரமா எழுதி, ’தனக்கு இந்த வயசி லே “கம்பனி’ கொடுக்க தன் வயசிலெ இருக்கிற ஒரு ஆணோ,இல்லை பெண்மணியோ கிடைச்சா, நான் என் கடைசி காலத்தே சந்தோஷமாக கழிக்க முடியும்.யாராவது முன் வருவீங்களா’ ப்ளீஸ்”என்று எழுதி,தன் செல் போன் நம்பரையும் கொடுத்து இருந்தாள்.

ஜென்னிக்கு ஆச்சா¢யம் தாங்கவில்லை.

அடுத்த நாள்ளே அவள் ‘செல்’ போன் அடித்தது.அதை ஆன் பண்ணி “ஜென்னி ஹியர்” என்று சொன்னதும் “ஹை ஜென்னி,என்னைத் தொ¢யுதா. நான் தான் உன் முதல் கணவன் ஜான்” என்று சொல்லி வழக்கம் போல அவன் சி¡¢த்தான்.

உடனே ஜென்னி “’வாட் எ சர்ப்ரைஸ்’ ஜான்.நீ எங்கே இருக்கே.இப்போ என்ன பண்ணிக் கிட்டு இருக்கே.உன் குரலைக் கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜான்.நீயும் ரோசியும் சௌக்கிய மா.ரோஸி உன்னுடன் தான் இருந்து வறாளா.இல்லே அவ கல்யாணம் பண்ணிக் கிட்டு எங்காவது போயிட்டாளா” என்று கேள்வி மேலே கேள்வி கேட்டாள்.
ஜான் நிதானமாக ‘ஹை ஜென்னி.நீ face bookல் எழுதி இருந்ததை நான் படிச்சேன்.எனக்கு மிகவும் ரொம்ப சந்தோஷமாக இருந்திச்சு.ரோஸி என் கூடத்தான் இருந்து வறா.ஜென்னி நான் ஒரு கார் விபத்திலே என் வலது காலை இழந்துட்டேன்.இபோது நான் வீட்டுக்குள்ளே ஒரு ‘வீல் சோ¢ல்’ தான் இருந்து வறேன்.நீ என்னை தப்பாக எடுத்துக்காம இருந்தா,நீ ஒரு தடவை நியூயார்க வந்து என்னையும் ரோஸியையும் பாத்துட்டு போக முடியுமா.உன்னை நோ¢ல் பார்க்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.என் விலாசம் 5674, Forest Avenue Drive.West New York.என் டெலிபோன் நம்பர் 156-678-456. ரொம்ப தாங்க்ஸ் ஜென்னி.Take Care” என்று சொல்லி விட்டு ‘போனை’’ கட்’ பண்ணினான்.

உடனே ஜென்னி “என்ன சொல்றே ஜான்.கார் விபத்திலே உன் வலது காலை நீ இழந்து ‘வீல் சோ¢ல்’ தான் இருந்து வறயா.கேக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஜான்.நான் நிச்சியமா நியூயார்க் வந்து உன்னையும் ரோஸியையும் நோ¢லே சந்திக்கறேன்.நான் நாளைக்கே கிளம்பி வறேன் ஜான்”என்று சொல்லி விட்டு தன் ‘டிராவல் ஏஜன்ட்டை’ கூப்பிட்டு தனக்கு நாளைக்கு நியூயார்க்க்கு ‘பிஸனஸ் க்ளாசில்’ ஒரு சீட் போடச் சொன்னான்.

அடுத்த நாளே நியூயார்க்குக்கு கிளம்பிப் போனாள் ஜென்னி.

‘நியூயார்க் ஏர் போர்ட்டை’ வந்து அடைந்ததும் ஜென்னி ஒரு சொகுஸ¤ காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு GPS ஐ ஆன் பண்ணி, ஜான் வீட்டுக்கு போகும் வழியில் போக ஆரம்பித்தாள்.

ஜான் வசித்து வந்த பகுதி மிகவும் நொ¢சலாக இருந்தது.மெல்ல GPS காட்டிய வழியில் வந்தாள் ஜென்னி.ஜான் வீடு மிகவும் சின்னதாகவும் பழையதாகவும் இருந்தது.காரை வெளியே நிறுத்தி விட்டு அதை பூட்டினாள்.காரை விட்டு கீழே இறங்கி ஜான் வீட்டின் முன்னால் வந்து ‘காலிங்க் பெல்லை’ அடித்தவுடன் ஒரு நடத்தர வயது பெண் தான் வந்து கதவை திறந்தாள்.

“ப்ளீஸ் கம் இன்”என்று சொல்லி ஜென்னியை வரவேற்றாள் ரோஸி.

ஹாலில் ‘வீல் சோ¢ல்’ உட்கார்ந்துக் கொண்டு இருந்தான் ஜான்.ஜெனியைப் பார்த்ததும் “ஹை ஜென்னி,’கம் இன்.தாங்க்ஸ் பார் கம்மிங்க் ஆல் தெ வே டு நியூயாக் டு சீ மி’ “என்று குரல் கொடுத்து கொண்டே தன் வீல் சேரை தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்தான்.“ப்ளீஸ் பி சீடட் “ என்று சொ ல்லி ஹாலில் இருந்த ‘சோபா’வைக் காட்டினான் ஜான்.

மிக பழையதாகவும், ஒரு ஒரத்தில் கொஞ்சம் கிழிந்தும் இருந்தது அந்த ‘சோபா’.

ஜென்னிக்கு அந்த சோபாவில் உட்காரவே பிடிக்கவில்லை.வேண்டா வெறுப்பாக அதில் உட்கார்ந்துக் கொண்டாள்.ஹாலில் இரண்டு குழந்தைகள் நிறைய ‘டாய்ஸ்’ வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.ஒன்றைப் போலவே மற்றொன்றும் காணப்பட்டது. இரண்டு க்கும் ஒரே வயது இருக்கும் போல் இருந்தது.இந்தக் குழந்தைகள் ரெட்டை குழந்தைகளாய் இருக்கும் என்று யூகித்துக் கொண்டாள் ஜென்னி.

அதில் ஒரு குழந்தை இவளிடம் ஓடி வந்து இவள் மடியில் உட்கார்ந்துக் கொண்டது.ஜென்னி அந்த குழந்தையை எடுத்து முத்தம் கொடுத்தாள்.“உன் பேர் என்ன” என்று கேட்டாள் ஜென்னி. பட்டென்று “என் பேர் கீத் ராஜர்” என்று பதில் சொல்லியது அந்த குழந்தை.கொஞ்ச நேரம் அந்த குழந்தையை வைத்துக் கொண்டு இருந்து விட்டு,அந்த குழந்தையை கீழே இறக்கி விட்டாள் ஜென்னி.

தன்னையும்,தன் குழந்தையையும்,ஆசைஅப்பாவையும் தனியாய் தவிக்க விட்டு விட்டுப் போன ஜென்னியுடன் அப்பா பேசுவதைப் பார்த்த ரோஸிக்கு கோபம் கோபமாக வந்தது.

தன்னை அடக்கிக் கொண்டாள்.

கொஞ்சம் பிஸ்கட்டும் ஒரு ‘கோக்’ பாட்டிலையும் கொண்டு வந்து எதிரே இருந்த ‘டீ பாயில்’ வைத்து விட்டு ஜென்னியைப் பார்த்து ‘ஹாய்’ என்று கூட சொல்லாமல்,முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக ஏதோ வேலையாய் கிச்சனுக்குப் போய் விட்டாள் ரோஸி.

ஜென்னி அதைப் பற்றி கவலைப் படவில்லை.

ஜென்னியும் ஜானும் ஒரு மணி நேரம் மனம் விட்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்.இருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான சமாசாரங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

ஆனால் ரோஸி ‘கிச்சனை’ விட்டே வெளியே வரவே இல்லை.அவளுக்கு தன் அம்மாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை.

“ஜென்னி,நான் இருக்கும் இந்த நிலையில் உனக்கு நான் எந்த வித சசுகமும் குடுக்க முடியாது.எனக்கே ஒரு ஆள் எப்போதும் வேண்டியதா இருக்கு.என் பெண் ரோஸி,சாரி நமக்கு பிறந்த பெண் ரோஸி,ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை செஞ்சு வந்தா.ரெண்டு மாசத்துக்கு முன் அந்த கம்பனி அவளை ‘லே ஆப்’ பண்ணிடிச்சு.இவ குழந்தைகள் தான் இந்த ரெட்டைக் குழந்தைகள். இந்த குழந்தைகள் பொறந்தவுடன் இவ ‘ஹஸ்பெண்ட்’ இவளை ‘டைவர்ஸ்’ பண்ணிட்டு வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கிட்டு போய் விட்டான்….” என்று சொல்லும் போது ஜான் கண்களில் கண்ணீர் தளும்பியது.

தன் கதையை தங்களை ‘வேண்டாம்’ என்று விட்டு விட்டுப் போன தன் ‘மாஜி அம்மா’ ஜென்னிக்கு அப்பா சொன்னது ரோஸிக்குத் துளி கூடப் பிடிக்கவில்லை.அவள் தன் ‘மாஜி அம்மா’வை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கண்ணீரை அடக்கி கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.“எங்க பழைய வீட்டை ரொம்ப குறைவான விலைக்கு நான் வித்துட்டு இங்கே சொற்ப வாடகைக்கு நாங்க தங்கி இருக்கோம்.என் ‘பென்ஷன்’ தான் எங்க ஜீவனத்துக்கு உதவி வருது …..” என்று ஜான் சொல்லிக் கொண்டு இருக் கும் போது சமையல் ரூமில் இருந்து வெளியே வந்து ரோஸி “என்னையும்,என் அப்பா ஜானையும், ‘வேணாம்’ன்னு சொல்லிட்டு அவரை ‘டைவர்ஸ்’ பண்ணிட்டுப் போன லேடி நீங்க தானா.உங்க முகத் தையே எனக்கு பார்க்க பிடிக்கலே.அந்த லேடி நீங்க தான்னு தொ¢ஞ்சு இருந்தா,நான் வாசல் கதவை யே திறந்து இருக்க மாட்டேன்” என்று கோபமாக சொல்லி விட்டு மறுபடியும் சமையல் ‘ரூமு’க்குப் போய் விட்டாள்.

உடனே ஜான் “ஜென்னி,’வொ¢ சாரி’.தயவு செஞ்சி அவ பேசினதே நீ ‘mind’ பண்னாதே. நான் உன்கிட்ட அவள் பேசினதுக்கு மன்னிப்பு கேக்கறேன்.நான் தான் உன்னைப் பார்க்க ஆசைப் படறேன்னு கூப்பிட்டேன்.அதனாலே தான் நீ என்னைப் பார்க்க இங்கே வந்தே”என்று சொல்லி ஜான் மன்னிப்பு கேட்டான்.

“இட்ஸ் ஒகே ஜான்.ஐ டோன்ட் ‘mind’ தட்” என்று சொல்லி கொஞ்சம் சி¡¢ப்பை தன் முகத்தில் வரவழைத்துக் கொண்டாள்.இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொன்டு இருந்து விட்டு பிஸ்கட்டையும் கோக்கையும் குடித்து விட்டு ஜென்னி ஜானிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்து தன் சொகுஸ¤ கா¡¢ல் ஏறிக் கொண்டு காரை ‘ஸ்டார்ட்’ பண்ணி விட்டு ஜானுக்கு ‘பை’ ‘பை’ காட்டிவிட்டு ஓட்ட ஆரம்பித்தாள்.

ரோஸி சமையல் ரூமை விட்டு வெளியே கூட வரவில்லை.ஜென்னிக்கு ‘பை’யும் சொல்ல வில்லை.இதைப் பார்த்த ஜான் மிகவும் வருத்தப் பட்டான்.அவன் ரோஸியைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை.

ரோஸியின் கோவம் நியாயமானது தான் அவன் எண்ணினான்.

மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டு இருந்தாள் ஜென்னி.

இரண்டு மைல் தூரம் காரை ஓட்டி இருப்பாள் ஜென்னி.

ஒரு ‘ரெஸ்டாரெண்ட்’ முன்னால் காரை நிறுத்தினாள்.’பேரா¢டம்’ அவள் சாப்பிட ஆர்டர் கொடுத்தாள்.அவள் மனம் யோஜனை பண்ண ஆரம்பித்தது.ரோஸி அவளை திட்டின சூடான வார்த்தைகள் அவளை ரொம்ப வாட்டியது.ஜென்னி மறுபடியும் யோஜனைப் பண்ணினாள்.அவள் மனம் எண்ணமிட்டது ‘பேரர்’ வந்து ‘டேபிளி’ல் அவள் ஆர்டர் பண்ணினதை கொண்டு வந்து வைத்தான்.

அவசர அவசரமாக அவைகளை சாப்பிட்டு விட்டு பில்லுக்கு ‘கிரெடிட் கார்ட்டில்’பணத்தை கொடுத்து விட்டு அவள் வெளியே வந்து தன் காரை ‘ஸ்டார்ட்’ பண்ணி மறுபடியும் ஜான் வீட்டுக்கே வந்தாள் ஜென்னி.

ஜான் வீட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினாள் ஜென்னி.ரோஸி தான் வந்து கதவை திறந்தாள்.அவள் முகத்தில் இன்னும் கோபம் தொ¢ந்தது.

ஜென்னி வீட்டுக்கு உள்ளே ஓடிப் போய்,கதவைத் திறந்து விட்டு உள்ளே போய்க் கொண்டு இருந்த ரோஸியின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் முன்னால் மண்டி இட்டுக் கொண்டு “என்னை மன்னிச்சுடு ரோஸி.என்னை மன்னிச்சுடு ரோஸி.நான் ரொம்ப பொ¢ய தப்பை பண்ணி ட்டேன்.நான் அந்த சின்ன வயசிலே உன்னையும்,ஜானையும் விட்டுட்டு போய் இருக்கக் கூடாது. என் பைத்தியக்கார பதவி ஆசையும்,பண ஆசையும்,தான் என்னை அப்படி பண்ணத் தூண்டியது. என் உடம்பில் இருந்த இளமை என்னை ஆட்டிப் படைச்சது.அது எவ்வளவு முட்டாள் தனமான கா¡¢யம்ன்னு எனக்கு அப்ப தோனலே.நான் அப்படி பண்ணி இருக்க கூடாது” என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதாள்.
பிறகு தன்னை சுதா¡¢த்துக் கொண்டு “என் கிட்டே இப்போ மில்லியன் மில்லியனா பணம் இருக்கு.ஆனா மன நிம்மதி தான் எனக்கு இல்லே.நான் அப்போ பண்ணின தப்பை இப்போது திருத்தி கொள்ள எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு ரோஸி.உன்னை நான் வளக்க தவறி விட்டேன். உன்னை தவிக்க விட்டுட்டு,எங்கோ போயிட்டேன்.இப்போ என் பேரக் குழந்தைகளான, உன் குழந்தைகள் ரெண்டு பேரையுமாவது வளத்து வர எனக்கு ஒரு ‘சான்ஸ்’ குடு. I’ll be greatful to you daarling.நான் ஜானையும் என்னுடன் கூட வச்சு கிட்டு அவனை ஒரு நல்ல டாக்டர் கிட்டே காட்டி அவன் கால்களுக்கு artificial legs வச்சு,அவனை ரெண்டு crutch வச்சு கிட்டு மறுபடியும் நடக்க வக்கிறேன்.நான் பண்ண என் பாவத்தை கழுவ ஆசை படறேன்.என் கிட்டே இப்போ மில்லியன் மில்லியனா பணம் இருக்கு.எனக்கு உங்க ஆசையும் அன்பும் தான் இப்போ வேணும்.எனக்கு என் தனிமை போய் நான் உங்க கூட எல்லாம் சந்தோஷமா வாழ்ந்துக் கிட்டு வரணும்.தயவு செஞ்சு மறுக் காதே ரோஸி ‘ப்ளீஸ்’ ”என்று சொல்லி விட்டு ரோஸியின் கைகளை பிடித்துக் கொண்டு கதறி அழு தாள் ஜென்னி.

ஜென்னி விக்கி விக்கி அழுவதை பார்க்கப் பொறுக்காதவனாய் ஜான் “அழாதே ஜென்னி, எழுந்திரு ஜென்னி” என்று சொல்லிக் கொண்டே தன் ‘வீல் சேரை’ தள்ளிக் கொண்டு ஜென்னி அருகில் வந்தான் ஜான்.ஜென்னியின் கையை பிடித்துக் கொண்டான்.அவன் கண்ணில் கண்ணீர் தாரை தாரை வந்துக் கொண்டு இருந்ததை கவனித்தாள் ரோஸி.
தன் தந்தை இப்படி அழுவதை ஒரு நாளும் அவள் பார்த்ததில்லே.

அவள் மனம் மாறியது.

“ஓகே, மம்மி,எழுந்தா¢ங்க” என்று சொல்லி ஜெனியின் தோளைத் தொட்டு மெல்ல எழுப்பினாள் ரோஸீ.

உடனே ஜென்னி ரோஸியை கட்டி கிட்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ ரோஸி.ரொம்ப ‘தாங்க்ஸ்’ “என்று சொல்லி விட்டு எதி¡¢ல் இருந்த இரண்டு குழந்தைகளையும் இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு சந்தோஷத்தில் ‘டான்ஸ்’ பண்ணினாள் ஜென்னி.ஜான் கண்கள் சந்தோஷத்தில் மிதந்தது.

உடனே அவனும் ரோஸியைப் பார்த்து “ரொம்ப ‘தாங்க்ஸ்’ ரோஸி,ரொம்ப ‘தாங்க்ஸ்” என்று சொல்லி ‘தாங்க்’ பண்ணினான்.

அன்று இரவு அங்கேயே தங்கி இருந்து விட்டு,இரண்டு நாளில் அந்த வீட்டை காலி பண்ணி விட்டு,எல்லா சாமான்களையும் விற்று விட்டு,ஜானையும்,ரோஸியையும்,அவள் ரெட்டை குழந்தை களையும் ஒரு பொ¢ய ஐந்து நக்ஷத்திர ஹோட்டலுக்கு அழைத்து கிட்டு போய் ஒரு ‘ரூமில்’ தங்க வைத்தாள் ஜென்னி.

ஜென்னி பக்கத்திலெ இருந்த ரூமில் தங்கினாள்.எல்லோருக்கும் நிறைய சாப்பிட வாங்கிக் கொடுத்து அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டாள்.ஜானுக்கும்,ரோஸிக்கும் அவர்கள் வாழ்க்கையில் இது போன்ற ஒரு பணக்கார வாழ்க்கை தங்களுக்கு வரும் என்று சிறிதும் எதிர் பார்க்க வில்லை.இருவரும் சந்தோஷப் பட்டு ஜென்னியைப் பார்த்து “இது போல ஒரு பணக்கார வாழ்க்கை எங்களுக்கு வரும் என்று நாங்க நினைக்கவே இல்லே.ரொம்ப தாங்க்ஸ் உனக்கு ஜென்னி”என்று சொல்லி ஜென்னியை ‘தாங்க்’ பண்ணீனார்கள்.

ஜென்னி அவர்கள் கூட அந்த பொ¢ய ஐந்து நக்ஷத்திர ஹோட்டலில் நாலு நாள் தங்கினாள்.

அடுத்த நாள் ஜென்னி தன் ‘டிராவல் ஏஜண்டை’க் கூப்பிட்டு, தனக்கும்,ஜானுக்கும், ரோஸி க்கும்,அவள் ரெட்டை குழந்தைகளுக்கும் ‘சாண்டியாகோ’வுக்கு ’பிஸினஸ் க்ளாசில் ஏர் டிக்கட் புக்’ பண்ணச் சொன்னாள்.

ரெண்டு மணி நேரம் கழித்து ‘ட்ராவல் ஏஜண்ட்’ ‘ஏர் டிக்கட் புக்’ பண்ணின விவரத்தை சொன்னவுடன் ஜென்னி எல்லோ¡ரையும் அழைத்துக் கொண்டு ‘சான்டியோகா ஏர் போர்ட்டுக்கு’ வந்து ஒரு டாக்ஸியை வைத்துக் கொண்டு தன் மாளிகைக்கு வந்து சேர்ந்தாள்.

ஜானுக்கும் ரோஸிக்கும் அந்த மாளிகையை பார்த்து அசந்து போய் விட்டார்கள்.அடுத்த வார மே தன் நண்பன் ஒருவனுக்கு போனில் பேசி ரோஸிக்கு அவன் வேலை பண்ணும் கம்ப்யூட்டர் கம் பனியில் ஒரு வேலை வாங்கி கொடுத்தாள் ஜென்னி.

ரோஸி சந்தோஷமாக அந்த வேலைக்குப் போய் வந்தாள்.

அடுத்த மூன்று மாதத்திற்குள்ளேயே ஜென்னி ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து ஜானுக்கு ‘artificial legs’ வைத்து,இரண்டு crutch களுடன் அவனை நன்றாக நடக்க பழக ஒரு ‘பிஸியோ தெராபிஸ்ட்டை’ ஏற்பாடு பண்ணனாள்.

ஜானும் ரெண்டு crutch களுடன் ஒரு மாசத்திலேயே நன்றாக நடக்க ஆரம்பித்து விட்டான்.

ரோஸியின் ரெண்டு குழந்தைகளையும் பக்கத்தில் இருந்த ஒரு பணக்கார குழந்தைகள் படிக்கும் ‘நர்ஸா¢’ பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தாள் ஜென்னி.
ஜானும்,ரோஸியும்,ரெண்டு குழந்தைகளும் அந்த பணகார வாழ்க்கையை மிகவும் விரும்பி வாழ்ந்து வந்தார்கள்.

அன்று ஜென்னி தன் கணவர் ஜான்,தன் பெண் ரோஸி,தன் பேரக் குழந்தைகளுடன் ஒன்றாக கா¡¢ல் ஏறிப் போய் அவள் வழக்கமாக போய் வரும் ‘சர்ச்சில் Mass’ ‘அடெண்ட்’ பண்ணப் போனாள்.

அங்கு இருந்த தன் நண்பர்களிடம் ஜென்னி சந்தோஷமா “இவர் தான் ஜான்.என் ‘ex husband’,இவ என் பெண் ரோஸி,இவங்க ரெண்டு பேரும் என் பேரக் குழந்தைங்க” என்று மிகவும் பெருமையாக சொல்லி அறிமுகம் பண்ணினாள்.ஜென்னியின் நண்பர்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ரோஸியையும்,ஜானையும் ரெண்டு குழந்தைகளையும் பாத்து” இனிமே நீங்க ஜென்னியோடு சந்தோஷமாக இருந்து வாங்க” என்று சொல்லி வரவேற்றார்கள்

ஜென்னி சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ‘Mass’ ‘முடிந்ததும் ‘பாதர் சுபி¡£யா¢டமும்’ எல்லோரையும் அறிமுகப் படுத்தினாள் ஜென்னி.‘பாதர் சுபீ¡¢யர்’ மீண்டும் ஒன்று சேர்ந்த அவர்க எல்லோரையும் எல்லாம் வாழ்த்தி அருளினார்.

“கர்த்தர் தான் உனக்கு இந்த புதிய வாழ்க்கையை மீண்டும் அமைச்சு கொடுத்து இருக்கார் ஜென்னி.இனி மேலாவது நீ உன் வாழ்க்கையை சந்தோஷமாக கழிச்சு வா.நீயும் இனிமே குடியை விட்டு விட்டு கர்த்தரை தினமும் வேண்டிக் கிட்டு வா.உனக்கு விடிவு காலம் வந்துடுச்சி ஜென்னி. Your bad days are over once and for ever” என்று சொல்லி அவளை வாழ்த்தினார்.

உடனே ஜென்னி “‘ஹோலி பாதர்’,என் பழைய கணவர்,என் பெண் ரோஸி,என் பேரக் குழந்தைங்க எனக்குக் கிடைச்சவுடன்,நான் குடியை அறவே விட்டு விட முடிவு பண்ணிட்டேன். நீங்க சொன்னா மாதி¡¢ நான் இனிமே தினமும் ‘சர்ச்சுக்கு’ வந்து கர்த்தரை வேண்டி வறேன்” என்று சந்தோஷத்தில் சொன்னாள்.

ஜென்னி ஜானையும்,ரோஸியையும்,அவ ரெட்டை குழந்தைகளையும்,தவறாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுக்கு அழைத்துப் போய் கர்த்தரை நண்றாக வேண்டிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள்.

பல வருஷங்களுக்குப் பிறகு ஜென்னி தனிமை போய்,மீண்டும் தன் பழைய கணவன், தன் பெண்,தன் பேரக் குழந்தைகளுடன் புது வாழ்க்கையை சந்தோஷமாக வாழத் தொடங்கினாள்.

தனக்கு இது போல ஒரு சந்தோஷ வாழக்கை கிடைக்கும் மறுபடியும் கிடைக்கும் என்று ஜென்னி கனவிலும் நினைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *