கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,943 
 

மருத்துவமனையில் தீபா படுத்திருந்தாள். அருகில் குழந்தை.

முகத்தில் பெருமிதம். பிருந்தாவிற்கு பாட்டியாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி.

மருமகளைப் பார்க்க ரேவதி வந்தாள். கூடவே பிரசன்னா.

அவன் முகத்தில் அப்பாவாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி.

குழந்தையை ஆசையாகக் குனிந்து பார்த்தபடி இருந்தான்.

ரேவதியின் முகத்தில் மகிழ்ச்சியில்லை.

“என்ன குழந்தை பெத்துட்டோம்னு சந்தோஷமா? கரு தரித்ததும் கலைச்சுடுன்னு சொன்னேன். என் பேச்சுக்கு மதிப்பில்லை. உன் பிடிவாதத்தால் பிரசன்னா அமெரிக்கா போகும் வாய்ப்பை இழந்தான். இப்பொழுது கைக்குழந்தை, மறுபடியும் அமெரிக்கா வாய்ப்பு வந்தால் எப்படி போவான்? குழந்தையைப் பெற்றுக் கொள்ளாமல் மலடியாக இருந்திருக்கலாம். இப்பொழுது குழந்தையில்லைன்னு யார் அழுதார்கள்?’ வார்த்தைகளால் சுட்டாள் ரேவதி.

ரேவதியின் பேச்சைக் கேட்டு பிருந்தா துடிதுடித்தாள்.”சம்பத்தியம்மா குழந்தையில்லாம் அக்கம் பக்கத்திலும் உறவினர்களிடமும் நான் பட்ட வேதனை உங்களுக்கு எப்படித் தெரியும்? என்னை மலடி மலடின்னு சொல்லும்பொழுது என் காதில் கொதிக்கும் ஈயத்தை ஊற்றியது போல் துடிதுடித்தேன். உங்கள் மருமகளை நான் பெற்றவள் இல்லை. ஒரு அநாதை. என் மலடி பட்டத்தைப் போக்கிய ஒரு தேவதை’ வெளியே சொல்ல முடியாமல் கண்ணீர் விட்டாள்.

– மணியன் (பிப்ரவரி 11, 2012)

Print Friendly, PDF & Email

பார்வை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

தந்தை யாரோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *