கோபாலும் ராதாவும் ஒருவரை ஒருவர் காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.கோபால் ஒரு டயர் தயாரிக்கும் கம்பனியில் ‘சூப்ரவைசர்’ ஆக வேலை செய்து வந்தான்.ராதா பட்டப் படிப்பு படித்திருந்தும் வேலை எதற்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்தாள்.
ஐந்து வருஷம் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இருவருக்கும் கவலை அதிகமாகியது.சித்த வைத்தியம்,யுனானி வைத்தியம்,ஹோமியோபதி வைத்தியம், இங்கிலிஷ் வைத்தியம், என்று எல்லா வைத்தியமும் இவர்கள் செய்து வந்தனர்.நிறைய கோவில்களுக்குச் சென்று பலவிதமான பிரார்த்தணைகள் எல்லாம் இவர்கள் செய்து வந்தார்கள்.கடவுள் இவர்கள் பங்கில் இருந்து பத்து வருஷங்கள் கழித்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இவர்கள் வாழ்வில் ‘ஒளி’ கொண்டு வந்த அந்த குழந்தைக்கு ‘ஜோதி’ என்று ஆசையாகப் பேர் சூட்டி இருபத்தினாலு மணி நேரமும் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தார்கள்.ஜோதிக்கு ‘இல்லை’ ‘முடியாது’ ‘கிடையாது’ ‘வேணாம்’ போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாமல் வளர்த்து வந்தனர் அவர்கள் பெற்றோர்கள்.
ஜோதிக்குப் பிறகு அவர்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை.கோபால் ராதாவுக்கு ஆறுதல் சொல்லி “ராதா, நாம் இனிமே இதைப் பத்தி கவலைப் படாம ஜோதியை நல்லா வளர்த்து,நல்லா படிக்க வச்சு,முன்னுக்கு கொண்டு வரலாம்” என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தி வந்தான்.நாளடைவில் ராதாவும் இந்த கவலையை மறந்து ஜோதியின் பேரில் தன் ஆசையைக் கொட்டி அவளை வளர்த்து வந்தாள். ஜோதியை ‘கம்ப்யூட்டர் இஞ்சினியரிங்க்’ பட்டப் படிப்பு படிக்க வைத்தார் கோபால்.பட்டப் படிப்பு படித்தவுடன் ஜோதி இஷடப்பட்டது போல் ஒரு ஹைஸ்கூலில் கம்ப்யூட்டர் வாத்தியார் வேலையில் சேர்ந்தார்.
மணி ஐந்து அடிக்க இன்னும் பதினைந்து நிமிஷம் பாக்கி இருந்தது.
“ராதா எல்லாம் சரியாக எடுத்து வச்சு இருக்கியா.பலகாரம் எல்லாம் தயாரா? .ஒரு தடவைக்கு இரண்டு தடவை கவனி.அப்புறம் மாப்பிள்ளை வீட்டார் முன்னால் நான் ‘இதை மறந்துட்டேங்க’ ‘அதை மறந்து விட்டேங்க’,ன்னு அசடு வழியக் கூடாது தெரிறதா” என்று சொல்லி அதட்டினார் கோபால்.”எல்லாம் சரியாத்தான் எடுத்து வச்சிருக்கேன் ஜோதிக்கு நல்லா அலங்காரம் பண்ணி எல்லா நகைகளையும் சரியா போட்டு இருக்கேனுங்க.வீணா கவலைப் படாம தீங்க”என்று சொல்லி அவரை சமாதானப் படுத்தினாள் ராதா.
மணி ஐந்து முப்பது ஆகி விட்டது.மாப்பிள்ளை வீட்டார் இன்னும் வரவில்லை.உள்ளுக்கும் வாசலுக்கும் குட்டி போட்ட பூனைப் போல் ஓடிக் கொண்டு இருந்தார் கோபால்.“ராதா, அவங்க ஏன் இன்னும் வரலைன்னு போன் பண்ணி கேக்கட்டுமா “ என்று கவலையோடு கேட்டார் கோபால்.“அவசரப் படாதீங்க.அவங்க ஒரு வேளை ‘டிரா·பிக் ஜாம்லே’ மாட்டிக்கிட்டு இருப்பாங்க.இந்த சாயங்கால நேரத்துலேதான் எவ்வளவு ‘டிரா·பிக்’ இருக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமேங்க” என்று சொல்லி கணவனை அமைதிப் படுத்தினாள் ராதா.கோபாலுக்கு நேரம் ஆக, ஆக, ‘டென்ஷன்’ அதிகமாகி அவருக்கு வேர்த்து, வேர்த்துக் கொட்டியது. தன் கைக்குட்டையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டே இருந்தார்.பிள்ளை வீட்டார் இன்னும் வந்த பாடில்லை.கோபாலுக்கு பொறுமை எல்லை தாண்டிப் போய் விட்டது.“உன் பேச்சைக் கேட்டா குட்டிச் சுவர் தான்.என்ன தான் ’டிரா·பிக் ஜாம்மா’ இருந்தா அவங்க இன்னேரம் போன் பண்ணி சொல்லி இருப்பாங்க.எனக்கு கவலையா இருக்கு ராதா.நான் அவங்களுக்கு போன் பண்ணி விசாரிக்கறேன் ராதா” என்று தன் கோபத்தை கொட்டினார் கோபால்.
“மிஸ்டர் மாணிக்கம் சாரா,நான் தான் கோபால் பேசறேன்.நீங்க இன்னும் வரலையா……” என்று கோபால் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “உங்களுக்கு என்ன தைரியம் இருந்தா ‘கெட்டுப்’ போன உங்கள் பெண்ணை திருட்டுத் தனமாக ஏமாத்தி எங்கள் தலையில் கட்ட பார்திருப்பீங்க. நல்ல வேலை, கடவுள் தான் எங்களை காப்பாதினார்.வையுங்க போனை” என்று கோபமாக சொல்லி செல் போனை ‘கட்’ பண்ணினார் மாணிக்கம்.
கோபாலுக்கு உலகமே சுத்துவது போல் இருந்தது.”ஏங்க அவங்க என்ன சொன்னாங்க” என்று கேட்டாள் ராதா.இடிந்து போய் சோபாவில் பொத்தென்று விழுந்தார் கோபால்.“ஏங்க உங்களுக்கு என்ன ஆச்சுங்க, அவங்க என்ன சொன்னாங்க,நீங்க இப்படி இடிஞ்சிப் போய் உக்காந்து இருக்கீங்க” என்று கவலையோடு கேட்டாள் ராதா.தன்னை மெல்ல சுதாரித்துக் கொண்டு ”என்ன ராதா இது,நம்ப பெண்ணை ‘கெட்டுப்’ போன பொண்ணுன்னு சொல்லி போனை ‘கட்’ பண்ணிட்டார் அந்த ஆள்.எனக்கு உலகமே சுத்துவது போல் இருக்குது ராதா.இது என்ன விபாரீதம் ராதா…..” என்று சொல்லி கோபால் தலையில் கையை வைத்துக் கொண்டார்.“அப்படிங்களா சொன்னார் அவரு. எவனோ ஒரு காலிப் பய அவருக்கு இந்த மாதிரி ‘தகவல்’ சொல்லி இருப்பதை அந்த ஆள் தீர விசாரிக்காம முடிவு பண்ணி இருக்காருங்க. முட்டாள்ங்க அவர்.சுத்த முட்டாள்ங்க அவர்.நீங்க கவலைப் படதீங்க.நாம மேலே ஆக வேண்டியதை கவனிக்கலாம்ங்க” என்று சொல்லி விட்டு ஹாலில் இருந்தவற்றை எல்லாம் உள்ளே கொண்டு போய் வைத்தாள் ராதா.
ஐந்து நிமிஷம் தான் ஆகி இருக்கும்.“ராதா, யார் அவர்களுக்கு இந்த மாதிரி சொல்லி இருப்பாங்க.நாம கண்டு பிடிச்சாகணும் ராதா.இல்லாவிட்டா நாம் அடுத்து பார்க்கும் பையன் வீட்டாருக்கும் இந்த ‘கயவாளி’ப் பய இந்த மாதிரி சொல்லி அவர்கள் பெண் பார்க்க வருவதைத் தடுத்து விடுவான்.உனக்கு யார் பேரிலே சந்தேகம் வருது ராதா” என்று கவலையோடு கேட்டார் கோபால்.ராதாவும் யோஜனைப் பண்ணினாள்.“எனக்கு என்னவோ உன் தம்பி சேகர் பேரிலே தான் சந்தேகம் வருது ராதா.அவங்க வீட்டிலே தான் ஜோதியை பொண்ணு கேட்டப்போ நான் தான் உறவிலே நம்ப பொண்ணை கொடுக்க வேணா¡ம்ன்னு நினைச்சு முடியாதுன்னு சொன்னது உனக்கு நல்லாத் தெரியுமே.அவன் தான் கோபப்பட்டு இந்த ‘விஷம வேலையை’ செஞ்சிருப்பான்னு எனக்கு தோணுது. நீ என்ன சொல்றே ராதா” என்று கேட்டு ராதாவைக் கூர்ந்து கவனித்தார் கோபால்.”இருக்கலாம்ங்க. நீங்க அவசரப் படாம நிதானமா கண்டு பிடியுங்க. நாம எல்லாம் ஒன்னுக்குள் ஒன்னு உறவுங்க.அவசரப் பட்டு அவனை சொல்லி அது உண்மை இல்லாம ஆயிடுச்சி ன்னா,என் அம்மா,என் அப்பா, சேகர்,எல்லாரும் நம்மை தப்பா நினைப்பாங்க.ஜாக்கிறதையா விசாரியுங்க. நிதானமாக அவங்களை கேளுங்க “ என்று எச்சரித்தாள் ராதா.
அன்று ஞாயிற்றுக் கிழமை.தன் மாமனார், மாமியார், மச்சினன் சேகர் மூவரையும் மதியம் சாப்பிட அழைத்தார் கோபால்.ஆச்சரியமாய் இருந்தது ரவி தம்பதிகளுக்கு.“என்ன மாப்பிள்ளை நம்மளே சாப்பிட கூப்பிட்டு இருக்காறு. கிழக்கே உதிக்கிற சூரியன் இன்னைக்கு மேற்கே உதிச்சிட்டாரா என்ன” என்று கிண்டல் பண்ணினார் ரவி.பிறகு மூவரையும் அழைத்துக் கொண்டு சாப்பிட கிளம்பினார்.மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் விருந்து சாப்பாடு சாப்பிட்டார்கள்.அவர்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டு கிளம்பி போகும் போது “சேகர், உனக்கு டயம் கிடைக்கும் போது என் ஆ·பீஸ் பக்கம் வாயேன்.உன் ஆ·பீஸ்,என் ஆபீசுக்கு கிட்டத் தானே இருக்கு” என்று வாஞ்சையோடு கூப்பிட்டார் கோபால்.” சரி மாமா, நான் நிச்சியமா வறேன்” என்று சொல்லி விட்டு தன் அப்பா அம்மாவோடு கிளம்பினான் சேகர்.மாமா சொன்னது போல் இரண்டு நாள் கழித்து கோபால் ஆ·பீஸ்க்கு வந்தான் சேகர்.அவனிடம் நிறைய விஷயங்களை பேசிக் கொண்டு இருந்து விட்டு அவன் மூடை தன் பக்கம் இழுத்தார் கோபால்.சேகரும் தன் மாமா மிகவும் மாறி இருப்பதை கவனித்து அவா¢டம் மனம் விட்டு பழகினான்.கோபால் தன் மனதை அரித்துக் கொண்டு இருக்கும் சந்தேகத்தை மெல்ல சேகா¢டம் கேட்க ஆரம்பித்தார்.“சேகர் நம்ப ஜோதிக்கு நிச்சியம் பண்ணி இருந்தோம்.பையன் வீட்டார் கடைசி நிமிஷத்தில் போன் பண்ணி நம் ஜோதியைப் பத்தி தாறு மாறாகப் பேசி பெண் பார்க்க வாரம ஏமாத்தி விட்டாங்க” என்று சொல்லும் போதே கோபால் கண்களில் கண்ணீர் முட்டியது.கண்ணீரை துடைத்துக் கொண்டு “கோபால்,உனக்கு நாங்க ஜோதியை கல்யாணம் கட்டிக் குடுக்காததாலே,நீ அவ யாருக்கும் கிடைக்காம பண்ணிடாதேப்பா.அவ வாழ்க்கையை கெடுத்து விடாதேப்பா. உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன்……” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “என்ன மாமா என்னை இவ்வளவு கேவலமா நினைச்சிடீங்க.நான் அப்படி எல்லாம் பண்ணலீங்க.பண்ணவும் மாட்டேன்.எங்க அப்பா அம்மா காதில் இந்த விஷயம் விழுந்தா ரொம்ப கோபப் படுவாங்க.நல்ல வேளை என்னை தனியாக வச்சு கேட்டீங்க.மாமா என் அப்பா அம்மா தான் ஜோதியை எனக்கு பெண் கேட்டாங்க.உண்மையிலே நான் ஜோதியை விரும்பவே இல்லை நான் வேறு ஒரு பெண்ணை நான் காதலிக்கிறேன் மாமா.நீங்க ஜோதியை எனக்கு தர மாட்டேன்னு சொன்னது எனக்கு நல்லதாய் போச்சு.அந்த மாதிரி தப்பு காரியம் எல்லாம் நான் பண்ண மாட்டேன் மாமா,என்னை நம்புங்க” என்று நிதானமாகச் சொன்னான்.
“அப்படியா தம்பி,என்னை மன்னிச்சுடப்பா.ரொம்ப ரொம்ப சாரி தம்பி.எனக்கு எப்படித்தான் இப்படி மூளை இப்படி கெட்டுப் போச்சுனு தெரியலே.ரொம்ப சாரிப்பா. நீ எதையும் மனசிலே வச்ச்சுக்காதேப்பா.முக்கியமா நான் சொன்ன இந்த விஷயத்தை உன் அப்பா, அம்மா, கிட்டே சொல்லாதேப்பா.உன் அக்கா கிட்டேயும் சொல்லாதேப்பா” என்று சொல்லி அவன் கையை பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார் கோபால்.“நீங்க என் கிட்டே கேட்டதை நான் நிச்சியமா யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் மாமா கவலைப் படாதீங்க.உங்க கஷ்டம் எனக்கு புரியுது மாமா” என்று சொல்லி அவர் கையை விலக்கக் கொண்டு, ஒரு அரை மணி நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு கிளம்பினான் சேகர்.கோபாலுக்கு ஒரு பக்கம் நிம்மதியாய் இருந்தாலும் நம் பெண் கல்யாணத்தை நிறுத்தியவன் யாராய் இருக்கும் என்று யோஜனைப் பண்ணினார்.
ஒரு வருஷம் கல்யாண பேச்சை தள்ளிப் போட்டு விட்டார்கள் கோபால் தம்பதிகள்.ஒரு வேளை இந்த ஒரு வருஷத்துக்குள் அந்த ‘கயவாளி’ப் பையனுக்கு கல்யாணம் ஆகி விட்டு இருக்கும் என்று எண்ணி தன் பெண் ஜோதிக்கு ஒரு பையணை தேடி பெண் பார்க்க ஏற்பாடு பண்ணினார் கோபால்.
ஒரு வருஷம் கழிச்சு பிள்ளை வீட்டார் வந்து பெண் பார்த்து விட்டு ‘பெண் பிடிச்சு இருக்குது’ன்னு சொ¡ல்லி பேச்சு வார்த்தைகளை தொடங்கினர்கள்.பையனுக்கு வரதக்ஷணை, ‘ஸ்கூட்டர்’, பொண்ணுக்கு நாப்பது சவரன் நகை என்றெல்லாம் அவர்கள் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே ஜோதி ரூமை விட்டு வெளியில் வந்து “எங்களால் அவ்வளவு செலவு பண்ணி எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது.நீங்கள் போவலாம்” என்று பட்டென்று சொல்லி விட்டாள்.எல்லோரும் திடுக்கிட்டார்கள்.ஜோதி சொன்னதை கேட்டதும் பையன் வீட்டாருக்கு கோபம் வரவே, அவர்களும் விருட்டென்று எழுந்து கிளம்பி விட்டார்கள். பெண்ணையும் கோபித்துக் கொள்ள முடியாமல் மனம் வருத்தப் பட்டார்கள் கோபாலும் ராதாவும்.
சற்று நேரம் கழித்து “ஏம்மா அவசரப் பட்டு இப்படி சொல்லிட்டே.அவங்க கிட்டே நாம மெதுவாகப் பேசி கொஞ்சம் குறைச்சுக் கொள்ளச் சொல்லி இருக்கலாமேம்மா. பையன் நல்ல வேலையில் இருக்கான்.பார்க்க நல்லா இருக்கான்….” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “ஆமாம் ஜோதி நாங்க பெரியவங்க இருக்கோம். அதை எல்லாம் பேசி முடிக்க.நீ ஏன் முந்திரிக் கொட்டைப் போல் வந்து பேசினே?” என்று சொல்லி பெண்ணை கோபித்துக் கொண்டாள் ராதா.”இந்த மாதிரி பணம் பிடுங்கும் பிசாசுகளிடம் நான் போய் குடுத்தனம் பண்ணமாட்டேம்மா. இவன் இல்லேன்னா என்னம்மா.நாம வேறு பையனை நாம பாத்தாப் போச்சும்மா” என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள் ஜோதி.அடுத்து வந்துப் பெண் பார்த்த பையனை ஜோதி ”பையன் கருப்பா இருக்கான் எனக்கு வேணாம்ன்னு ” சொல்லி நிராகரித்து விட்டாள்.
அடுத்து ஒரு பையன் ஜோதியை பெண் பார்த்து பிடிச்சு இருக்குதுன்னு சொல்லவே அவனுடன் கொஞ்ச நேரம் தனியாகப் பேசினாள் ஜோதி.ஒரு அரை மணி நேரம் கழித்து இருவரும் வெளியில் வந்தார்கள். “பையன் பெண்ணுக்கு மனம் ஒத்துப் போகலீங்க.இந்த சம்பந்தம் வேண்டாங்க “என்று சொல்லி கிளம்பிப் போய் விட்டார்கள் பையன் வீட்டார்.மனம் ஒடிந்து போனார்கள் கோபாலும் ராதாவும்.மெல்ல தன் பெண்ணைக் கேட்டார் கோபால்.ஜோதி “ஆமாம்ப்பா,அவர் சொன்ன ‘கண்டிஷன்கள்’ எனக்கு பிடிக்கலே.அதே போல் நான் சொன்ன ‘கண்டிஷங்கள்’ அவருக்குப் பிடில்லலேப்பா “ என்று மொட்டையாகச் சொல்லி விட்டாள் ஜோதி.அதற்கு அப்புறம் பார்த்த பையன்கள் ஒவ்வொறுவரையும் ‘பையன் அழகால்லே’ ‘குணாதிசயம் சரி இல்லை’ ‘நல்ல வேலையில் இல்லே’ ‘பையனுக்கு தனக்குப் பிடிக்காத பழக்க வழக்கங்கள் இருக்கு’ என்று இப்படி ஏதோ காரணம் காட்டி ஜோதி கல்யாணத்தை தட்டி கழித்தாள்.கோபால் ராதா தம்பதிகளுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.பெண்ணுக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற கவலை வந்து விட்டது அவர்களுக்கு.ஒரு வேளை ஜோதி தனக்குப் பிடிச்ச யாராவது ஒரு பையனை காதலிக்கிறாளோ என்னவோ, நம்மிடம் சொல்ல பயப் படறாளோ’ என்று வேதனைப் பட்டார்கள் கோபாலும் ராதாவும்.
மிகவும் கவலை அடைந்த கோபால் ஒரு நாள் “இதோ பாரம்மா ஜோதி உனக்கு வயசு ஏறிக்கிட்டே போவுது.நாங்க பார்க்கிற எந்த பையனும் உனக்குப் பிடிக்கலே. நீயே ஒரு நல்ல பையனா பார்த்து,உனக்கு பிடிச்சவனா ‘செலக்ட்’ பண்ணேம்மா.நானும் அம்மாவும் நீ எந்த பையணைப் பார்த்து பிடிக்குதுன்னு சொல்றயோ அந்த பையணையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்மா.உனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா போதும்மா” என்று அழுது கொண்டே கோரஸாகச் சொன்னார்கள் ராதாவும் கோபாலும்.ஜோதி “சரிம்மா” என்று சொல்லி சிரித்து விட்டு வெளியில் போய் விட்டாள்.ஜோதி தனது கம்ப்யூட்டர்,தன் பள்ளி வாழ்க்கை, தனது ‘ட்யூஷன் பிள்ளைகள்’, இவற்றிலேயே தனது நேரத்தை செலவு செய்து வந்து சந்தோஷமாக இருந்து வந்தாள்.
“என்ன ராதா நம்ம பொண்ணு ஜோதிக்கு கல்யாணம் ஒன்னு ஆகுமான்னே எனக்கு கவலையா இருக்கு.நாம பார்த்த பிள்ளை ஒருவரும் அவளுக்கு அமையலேயே.ஏதோ காரணத்தாலே கல்யாணம் நடக்காம இருக்கே.இவளை நீ உனக்கு பிடிச்ச பையனா ஒருவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னோம்.ஆனா இவ என்னடான் னா தன் பள்ளி உலகத்திலேயே மூழ்கி இருந்துக் கிட்டு வறா.இந்த ஆடி வந்தா அவளுக்கு முப்பத்து மூனு முடிஞ்சு முப்பத்து நாலு ஆரம்பிக்கப் போவுதே. நீ பேசாம இருக்கேயே ராதா” என்று தன் கவலையை சொன்னார் கோபால். “எனக்கும் தினமும் இதே கவலை தானுங்க.நீங்க புலம்புறீங்க.நான் மனசிலே வெந்து சாகறேங்க.நானும் ஜாடை மாடையாக சொல்லிக் கிட்டு தாங்க வறேங்க.எனக்கு என்ன பண்றதேன்னு தெரியலேங்க” என்று அழமாட்டாத குரலில் சொன்னாள் ராதா.நீங்க வீணா கவலைப் படறீங்க.அவளுக்கு மனசுக்குப் பிடிச்சவனா ஒருவன் அவளுக்கு கிடைக்க வேணாங்களா.நாம கடவுளைத் தாங்க வேண்டி வரணும்.எனக்கு வேறு ஒரு வழியும் தெரியலீங்களே” என்று தன் வருத்ததை சொன்னாள் ராதா.“.இதை எல்லாம் நினைச்சா எனக்கு தலையே சுத்துது ராதா” என்று கண்ணை மூடிக் கொண்டே.சொன்னார் கோபால்.
ஜோதியைப் பற்ற்¢ய கவலையே நாளுக்கு நாள் கோபாலை மனதை அரித்துக் கொண்டு வந்தது.வழி தெரியாமல் மன வேதனைப் பட்டுக் கொண்டு வந்தார்.நாளாக நாளாக அவர் மனம் இன்னும் வேதனைப் பட்டது. கோபாலுக்கு வயதும் ஐம்பத்து ஐந்தை நிர்வாகம் இவரை VRS வாங்கிக் கொள்ளச் சொல்லி விட்டார்கள்.ஓடியாடி வேலை பண்ணிக் கொண்டு இருந்த கோபாலுக்கு ஒய்வு வாங்கி கொண்டு வீட்டில் இருந்து வருவது நரகத்தில் இருப்பது போல் இருந்தது.கூடவே பெண் ஜோதிக்கு கல்யாணமே நடக்கவில்லையே என்ற கவலை, ஏக்கம் எல்லாம் ஒன்று சேர்ந்து அவருக்கு ரத்தக் கொதிப்பை அதிகப் படுத்தியது.ஒரு நாள் அவர் எதோ ஒன்றை குனிந்து எடுத்து விட்டு சடாலென்று நிமிர்ந்த போது அவர் தலை சுற்றி கீழே விழுந்து அவர் தலையில் அடிப்பட்டது.ராதா உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு ‘ஆம்புலன்ஸில்’ அழைத்துக் கொண்டு ஓடினாள்.அவரை பா¢சோதித்த டாக்டர் அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகினதால் தான் இந்த மயக்கம் ஏற்பட்டது என்று சொல்லி அவரை ICU வில் சேர்த்து வைத்தியம் செய்ய ஆரம்பித்தார்கள்.மூன்று நாட்கள் வைத்தியத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்த கோபாலுக்கு மண்டையில் அடிப்பட்டதால் தலையில் ரத்தம் கட்டி விட்டதால் அவருக்கு வலது கையும் வலது காலும் செயல் இழந்து விட்டது.ராதா எவ்வளவு ஆறுதல் சொல்லியும் அவர் சமாதானம் அடையவில்லை.தன் விதியை எண்ணி கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தார் கோபால்.ஒரு நாள் அவர் ரத்தக் கொதிப்பு அதிகமாகி அவரை ஹாஸ்பிடலில் சேர்த்தாள் ராதா.இரண்டு நாள் வைத்தியம் செய்தும் பலன் இல்லாமல் கோபால் மரணம் அடைந்துவிட்டார்.இந்த இடி செய்தி கேட்டதும் துக்கம் தாங்காமல் மாரடைப்பால் ராதாவும் ஹாஸ்பிடலிலேயே மயக்கம் கோபால் மேலே விழுந்து விட்டாள்.விழுந்தவள் மயக்கம் தெளியாமலே இறந்து விட்டாள்.ஒரே நாளில் தனி மரமானாள் ஜோதி.தனி மரமான ஜோதி தன் வாழ்க்கையை மரக் கட்டை போல் வாழ்ந்து வந்தாள். தன் பெற்றோர்களின் பிரிவுக்குப் பிறகு ஜோதி பள்ளிக்கூடமே போகவில்லை.’இனிமே நாம யாருக்காக உயிர் வாழணும்’ என்று எண்ணி வருந்தினாள்.மிகவும் கவலைப் பட்டாள்.உடனே தான் தினமும் எழுதி வரும் டைரியில் தான் இது வரை தன் வாழ்க்கையில் மறைத்து வந்த உண்மைகளை எழுத ஆரம்பித்தாள் ஜோதி.
“அம்மா,அப்பா,நான் வயசுக்கு வந்த சில மாசங்க தான் ஆகி இருக்கும்.அதன் பிறகு எனக்கு மாத விடாயே வராம இருந்துச்சு.நான் கவலைப் பட்டேன்.எதற்கும் ஒரு லேடி டாக்டா¢டம் காட்டி இதுக்கு மருந்து வாங்கி சாப்பிடலாம்ன்னு எண்ணி டாக்டா¢டம் போய் என்னை காட்டினேன்.என் உடலை பரிசோதித்த லேடி டாக்டர் என் கருப்பையே வளரவில்லை என்றும், இனி எனக்கு மாத விடாயே வராது என்றும்,எனக்கு குழந்தையும் பிறக்க வாய்ப்பே இல்லேன்னு சொல்லி விட்டார்.நான் இடிந்து போனேன்.அதுக்கு அப்புறமா நான் முனு டாக்டரை என்னை சொதிக்கப் சொன்னேன்.அந்த மூனு டாக்டர்களும் இதே பதிலைத் தான் சொன்னார்கள் .இந்த ‘துர்பாக்கியமான’ செய்தியை உங்களுக்கு நான் சொல்லி உங்களை நான் துக்கத்தில் ஆழ்த்த எனக்கு ¨தா¢யம் இல்லை.இன்னொரு ஆண் மகனை நான் மணந்து அவர் வாழ்க்கையையும் காலம் பூராவும் கசப்பாக நான் விரும்பவில்லை.எல்லோரும் என்னை ‘மலடி’ ‘மலடி’ என்று பேர் கட்டுவதையும் நான் விரும்பவில்லை.நான் யோஜனைப் பண்ணினேன்.இதை காலம் பூராவும் நான் மறைத்து வந்து வாழ முடிவு பண்ணி வாழ்ந்து வந்தேன்.’இந்த ஜென்மத்தில் நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது’ என்று தீர்மானமான முடிவை எடுத்தேன்.உங்களுக்கு எனக்கு பிறகு ஒரு ஆண் பிள்ளை பொறந்து இருந்தா, அவன் உங்களுடன் காலம் பூராவும் இருந்து வந்து உங்களை நன்றாக கவனிச்சு கிட்டு வந்து கிட்டு இருப்பான். அதனால் தான் நான் உங்க கூட காலம் பூராவும் இருந்துக் கிட்டு,உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணாகவும்,ஒரு நல்ல துணையாகவும் இருந்து வந்தேன்.என் உடல் ஊனம் எனக்கு உங்களுடன் நான் காலம் பூராவும் இருந்து வரும் பாக்கியத்தைக் குடுத்திச்சு.நான் இன்ன்னிக்கு காலையில் தான் அறுபது தூக்க மாத்திரைகள் போட்டுக் கிட்டு இருக்கேன்.இன்னும் கொஞ்ச நேரத்திலே என் உயிர் பிரிஞ்சு விடும்.நான் பறந்தோடி வந்து உங்க கிட்டேநான் இந்த நாள் வரைக்கும் மறைச்ச இந்த உண்மையை சொல்லி உங்க மன்னிப்பு கேக்க துடிக்கறேன்…..” ஜோதி கடிதத்தை முடிக்கும் முன்னமே அவள் உயிர் பிரிந்து விட்டது.
‘ரொம்ப நாளா ஜோதி பள்ளிக்கூடத்துக்கு வரலையே,அவளை நாம நேரே போய் பார்த்துட்டு வருவோம்’ என்று நினைத்து குரல் கொடுத்துக் கொண்டே திறந்து இருக்கும் வாசல் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ஜோதியின் தோழி டீச்சர் சரளா.ஜோதி தரையில் விழுந்துக் கிடந்தாள் திடுக்கிட்டுப் போனாள் சரளா.ஜோதியின் ஒரு கையில் ¨டா¢யும் மற்றொரு கையில் பேனாவும் இருந்தது. ஜோதியை தொட்டு எழுப்ப அவள் உடலை தொட்டாள் சரளா.ஜோதியின் உடல் ஜில்லென்று இருந்தது. டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் சரளா.
ஜோதியின் உயிர் அவள் பெற்றோர்களை நோக்கி பறந்து போய்க் கொண்டு இருந்தது. உண்மையைச் அவர்களிடம் சொல்லி,அவர்களின் மன்னிப்பைப் பெற.