மடக் கழுதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 3,445 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு ராசா. அந்த ராசாவுக்கு ஒரு மந்திரி இருந்தா. காலப் போக்ல, ராசா, ரொம்ப ஏளயாப் போயிட்டாரு. இருந்தாலும், மந்திரிக்கு, எந்தவி தமான கொறையும் இருக்கக்கூடாதுண்டு நம்மளோட கஷ்டம் நம்மளோடவே இருக்கட்டும். மந்திரிக்கு எதயும் கொறையில்லாமச் செய்யணும்ண்டு ராசாவும் ராசா பொஞ்சாதியும் பேசிக்கிட்டாங்க. இவங்க பேசுனத, மந்திரி கேட்டுக்கிட்டுப் போயிட்டாரு. இத மனசுல வச்ச மந்திரி, ஒரு திட்டம் போட்டு, மறுநா காலைல – ஊருக்குப் போகணும்ண்டு, ராசாகிட்ட வந்து கேட்டாரு. ராசாவும் அதுக்கு சம்மதிச்சுட்டாரு.

மந்திரி . ஊருக்குப் போகயில, ராசாவே! இதுநா வரைக்கும் என்னக் காப்பாத்துனீங்க. இப்ப: ஒங்களக் காப்பாத்துறது, என்னோட கடமை. அதுனால, நீங்க ரெண்டு வேரும் என்னோட வாங்க. ஒங்களுக்கு எந்தக் கொறையும் இல்லாம நா பாத்துக்கறேண்டு சொன்னாரு.

ராசா! ஓசிச்சுப் பாத்தாரு. பாத்திட்டு, சரி பெண்ணே ! மந்திரி வீட்டுக்குப் போவமாண்டு ஓசன கேட்டாரு. அப்ப ராணி-மொதல்ல நீங்க போங்க. போகும்போது ரெண்டு பூவுத் தாரே. அதுல ஒரு பூவ, நீங்க கொண்டு போங்க. ஒரு பூவ நர் வச்சிக்கிறே. ஒங்களுக்கோ, எனக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டா, மடியில இருக்கிற பூ வாடிப் போகும். இதுதர் நம்மளுக்குள்ள அறிகுறி. நீங்க மந்திரி வீட்டுக்குப் போங்க. நானு இங்கேயே இருக்கேண்டு சொல்றா. ஆளுக்கொரு பூவ வச்சுக்கிட்டாங்க.

பூவ மடியில வச்சுக்கிட்டு, ராசா, மந்திரி வீட்டுக்குப் போறாரு. மந்திரி நல்லா வரவேத்து, ராசாவுக்கு வேண்டியதெல்லாஞ் செய்றாரு. செய்யயில, வசதியா கொஞ்ச நா இருக்றாரு.

இதுக்கெடையில மந்திரி, ராசாவே நீங்க இங்க இருங்க, நானு வட நாட்டுக்கு ஏவாரத்துக்குப் போறேண்டு சொல்லிட்டு, மந்திரி, நேரா ராசா வீட்டுக்கு வாராரு.

அரமணயில, ராணியும் – தோழிப் பெண்களும் இருக்காங்க. மந்திரி வந்துட்டாருண்ட்டு , ஏகத் தடபுடலா வரவேற்புச் செஞ்சு, மந்திரிக்குத் தனியா ஒரு அரமணய ஒதுக்கி, அதுல தங்கச் சொல்றாங்க.

அப்ப: மந்திரி சொல்றாரு, பெண்ணே ! நா தனியாப் படுக்கமாட்டே என்னோட தங்குறதுக்கு, ராணிய வரச் சொல்லுங்கண்டு சொல்ராரு. சொல்லவும், தோழிப் பொண்ணுக, ராணிகிட்டப் போயிச் சொல்றாங்க. சொல்லவும், ராணி! அப்டியே ஓசிச்சுப் பாத்திட்டு, சரி! ராணி வருவாண்டு, போயி – மந்திரிகிட்ட சொல்லச் சொல்லிட்டா. அவங்களும் ராணி வருவாண்டு மந்திரிகிட்டப் போயிச் சொல்லிட்டாங்க.

மந்திரி, ராணிய எதுரு பாத்து, பள்ளியரையில காத்துக்கிட்டு இருக்காரு. இதுக்கெடையில், இந்த ராணி தோழியக் கூப்பிட்டு, ராணி துணிமணி நககிகையெல்லாம் தோழிக்குப் போட்டு, பள்ளியறைக்கு அனுப்றா. மந்திரியோட விருப்பம் போல நடந்துக்கிறம்ணும்ண்டு சொல்லி அனுப்றா.

தோழிய, மந்திரி இருக்ற பள்ளியறைக்கு அனுப்பிச்சுட்டு, ராசாவுக்கு ஓல எழுதுறா, எப்டி எழுதுராண்டா!

கடல தொவர கடஞ்செடுத்த கணக்கர் வடக்கிருக்க, கடல

திங்க வந்த மடக்கழுத தொவர திண்டுட்டுப் போயிருச்சுண்டு

எழுதிட்டா. ஓலய பாத்த ராசாவுக்கு ஒண்ணுமே புரியல. ராசா மடியில இருக்ற பூவு வாடுது. என்னடா! ராணிகிட்ட இருந்து ஓலயும் வந்திருக்கு. ராணி குடுத்த பூவும் வாடுது. என்னமோ நடந்து போச்சுண்ட்டு, பெறப்பட்டு வேகு… வேகுண்டு வாராரு.

ராணிய விரும்பி வந்த மந்திரி, ரவ்வெல்லாம் தோழிகூட இருந்துட்டு, ராணி கூடத்தா ரவ்வெல்லாம் இருந்தோம்ண்ட நெனப்ல விடியவும் போயிட்டாரு. ராசா இங்க வர, மந்திரி அங்க போயிட்டாரு.

ராசா வந்தாரு. ராணியப் பாத்து என்னா பெண்ணே! என்னா நடந்ததுண்டு கேட்டாரு. அப்ப: ராணி நடந்ததெல்லாம் சொன்னா. ராசாவுக்குப் புத்தி வந்து, ராணியப் பாராட்டினாரு. அப்ப இருந்து – எப்பயும் ராணியப் பிரியாம வாந்தாங்களாம். பொண்டாட்டியத் தனியா வீட்டுல விட்டுட்டுப் போனா இப்டித்தா.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *