பேராசை சொந்தங்களும் கை கொடுத்த நண்பர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 7,934 
 
 

மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள், உங்கள் கணவன் இறந்துவிட்டார் என்று. இனி கணவன் உடலை எடுத்துச்செல்ல வேண்டும். கையில் இருப்பதோ இருபத்தி எட்டு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும். அந்த வேதனையான கட்டத்திலும் சி¡¢ப்பு வந்தது வந்தனாவுக்கு மாதம் இருபதாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசாங்க ஊழியைக்கு இறந்த கணவனை வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூட வசதியில்லை.கைபேசியை பார்த்தாள்,”சுத்தமாக கணக்கில் இல்லை”எங்காவது தொலைபேசி வசதி இருக்குமா என தேடினாள்.

தொலைபேசியை எடுத்த முஸ்தபாவுக்கு பெண்ணின் விசும்பல் மட்டுமே கேட்டது. ஒரு நிமிடம் அதை கேட்டவர் அழுகாதே இப்பொழுது எங்கிருக்கிறாய்? என்று மட்டுமே கேட்டார், அதற்குள் அவரருகில் சுவாமினாதன்,வத்சலா, ஸ்டீபன், மாலா,குமார் அனைவரும் அவரைச்சுற்றி வந்து நின்று கொண்டனர். போனை வைத்த முஸ்தபா சுற்றியுள்ளவர்களைப்பார்த்து சுவாமியும், ஸ்டீபனும் முதல்ல ஆஸ்பத்தி¡¢க்கு போங்க, அங்க வந்தனா நின்னுட்டிருப்பா, அவ வீட்டுக்காரர் உடம்ப வேன்ல ஏத்திட்டு நேரா அவங்க வீட்டுக்கு கொண்டு வந்துடுங்க, நானும் மத்தவங்களும் மத்த ஏற்பாடுகளை எல்லாம் செஞ்சுட்டு எல்லாரும் வீட்டுக்கு வந்துடறோம். முதல்ல ஆளாளுக்கு எவ்வளவு கையில வச்சிருக்கறீங்க, அதை ஸ்டீபன்கிட்ட கொடுங்க, “சுவாமி கொஞ்சம் என் கூட வா என்று அழைத்து வெளியே வந்தவர் பக்கத்தில் உள்ள “காசு வழங்கும் இயந்திரத்தில்”கார்டை விட்டு பத்தாயிரம் எடுத்து சுவாமியின் கையில் கொடுத்து ஆஸ்பத்தி¡¢க்கும், மத்த கா¡¢யத்துக்கும் செலவுக்கு கையில வச்சுக்க, என்று சொல்லிவிட்டு கா¡¢யாலத்துக்குள் நுழைந்தார்.

சுவாமியையும், ஸ்டீபனையும் பார்த்த பின் அவள் தன்னை மறந்து வாய்விட்டு கதறினாள். அழுகாதே, அடுத்து நடப்பதை பார்க்கலாம், தோளைத்தட்டி ஆறுதல் சொன்ன ஸ்டீபன் வா உள்ளே என்று மருத்துவ மனைக்குக்குள் நுழைந்து வந்தனாவின் கணவன் படுத்திருந்த அறைக்குள் சென்றான். இறந்த உடலை பக்குவமாய் கட்டி வைத்திருந்தனர். அதற்குள் சுவாமினாதன் உடலை எடுத்துச்செல்ல வாகனத்தையும் தயாராக்கி, மருத்துமனைக்கு கட்ட வேண்டிய தொகைகளை கட்டிவிட்டு, அங்கு வந்துவிட்டான்.

உடல் வந்தனாவின் வீட்டுக்கு வந்துவிட்டது.வந்தனாவின் உறவினர்கள் அதற்குள் செய்தி கேள்விப்பட்டு வீட்டில் வந்து குவிந்து விட்டனர். இறந்தவா¢ன் சகோதா¢ வேக வேகமாக வந்தவள் உடல் வருமுன் உள்ளே இருந்த அலமா¡¢யை இழுத்து எதையோ தேடினாள்.

அவள் தேடியது கிடைக்காத ஏமாற்றத்தில் அவள் முகம் மாற்றமடைந்த்து. அதற்குள் உடல் வீட்டுக்கு வர அவள் வெளியே வரவேண்டியதாயிற்று.

இறப்புக்கு வந்த உறவினர்களில் ஒரு சிலர் மட்டுமே ஈடுபாட்டுடன் கா¡¢யங்கள் செய்தனர். மற்றபடி செலவுகள் அனைத்தையும் ஸ்டீபனும், சுவாமியும் பார்த்துக்கொண்டனர்.

அதனால் வந்தனாவின் கணவன் இறுதியாத்திரை நல்ல வசதியுடன்தான் சென்றது. வந்தனா எதுவும் பேச முடியாமல் உடலும், மனமும் களைத்து கீழே உட்கார்ந்து கொண்டு இருந்தாள்.

அனைத்து கா¡¢யங்களும் முடிவு பெற மாலை மணி ஐந்து ஆகிவிட்டது. உறவினர்கள் அனைவரும் சென்று விட, இறந்தவனின் சகோதா¢, உடன் அவள் கணவன் மற்றும் அவன் உறவினர்கள் சிலர், மெல்ல வந்தனாவின் அருகில் வந்து இங்க பாரும்மா உன் புருசன் இந்த வீட்டை எங்க கிட்ட அட்மானம் வச்சு இருபது லட்ச ரூபாய்க்கு மேல வாங்கியிருக்கான். அதனால நீ இப்ப இந்த வீட்டை விட்டு காலி பண்ணிடு என்று மிரட்டினர்.

மெல்ல எழுந்த வந்தனா, நான் பதினாறு நாள் கழிச்சு இந்த வீட்டை விட்டு போயிடறேன், அதுவரைக்கும் இங்க இருக்கேன் என்று மெல்லிய குரலில் சொல்ல, அப்படீன்னா இந்த வீட்டோட பத்திரம் எங்க இருக்கு, அதை எங்க கிட்ட கொடுத்துட்டு தாராளமா பதினாறு நாள் இருந்துட்டு போ, என்றனர். “பத்திரத்த” பத்தி எனக்கு ஒண்ணும் தொ¢யாது என்று பதில் சொன்ன வந்தனாவை நம்பிக்கையில்லாமல் பார்த்தனர்.அதற்குள் சொல்லிவிட்டு செல்லலாம் என வந்த மாலாவும், வத்சலாவும், வந்தனாவின் அருகில் வந்து இறந்தவனின் சகோதா¢யை பார்த்து “என்னம்மா நீ “அவளே புருசன் செத்த துக்கத்துல் இருக்கா, இப்ப போயி பத்திரம், அது இதுன்னுட்டு மிரட்டிகிட்டிருக்க, என்று குரலை உயர்த்தி கேட்கவும், “இங்க பாருங்க இது எங்க குடும்ப சமாச்சாரம் இதுல நீங்க தலையிடறதுக்கு உ¡¢மையில்ல என்று அவள் கணவன் வக்காலத்துக்கு வந்தான். அதற்குள் சுவாமியும், ஸ்டீபனும் அங்கே வந்து எதுய்யா குடும்ப சமாச்சாரம், செத்த மறு நிமிசமே வீட்டை விட்டு போக சொல்றதும், பத்திரத்த கொண்டான்னு மிரட்டுறதுமா, குரல் உயர்த்தி கேட்க இறந்தவனின் சகோதா¢யும், அவள் கணவனும் மெல்ல பின்வாங்கினர். நீ எதுக்கும் கவலைப்பாடாதே வந்தனா “இவங்க ஏதாவது உன்னை தொந்தரவு பண்ணினாங்கண்ணா சொல்லு, பேசாம போலீசுக்கு போயிடலாம் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழவேண்டும் என்று சொன்னார்கள்.

வந்தனா கல்யாணத்தைப்பற்றியே நினைக்காமல் அந்த அலுவலகத்துக்கு வந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் தகப்பன் இறந்த பின்னால் கருணை அடிப்படையில் அவளுக்கு அதே அலுவலக்த்தில் பணி கிடைத்து இந்த அலுவலகத்திலேயே பதினைந்து வருடங்களை ஓட்டியும் விட்டாள். இந்த அலுவலக நண்பர்கள்தான் அவளை வ்ற்புறுத்தி “இப்படியே இருந்தால் கடைசிகாலத்துக்கு நமக்கு துணையில்லாமல்” போய்விடும் என்று அவளை வற்புறுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தனர்.அதே போல் சகோதரன் திருமணம் செய்திவிட்டால் அவனால் வரும் வசதிகள் போய்விடும் என அவனை கல்யாணம் என்னும் பந்தத்தில் சிக்க விடாமல் பார்த்துக்கொண்ட அவன் சகோதா¢களையும் மீறி அவனை கல்யாணம் என்னும் பந்தத்தில் சிக்க வைத்து, வந்தனாவின் அலுவலக நண்பர்கள் எப்படியோ கல்யானத்தை முடித்து வைத்தனர்.

இருவருக்குமே காலம் கடந்த கல்யாணம் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. என்றாலும், இவள் கணவனிடம் இது அதிகமாகவே இருந்தது. மேலும் அவன் சகோதா¢கள் இவன் கல்யாணத்தால் தங்கள் வசதிகள் போய்விட்டதே என்ற கொதிப்பில் இருந்ததால் அவளைப்பற்றி மேலும் மேலும் அவனிடம் தூண்டிவிட்டனர்.”வந்தனாவுக்கு ஏன் கல்யாணம் செய்துகொண்டோம் என்று நினைக்கும் அளவுக்கு அவன் கொடுமைகள் செய்யத்தொடங்கிவிட்டான்.வந்தனாவின் அலுவலக நண்பர்களுக்கு “தேவையில்லாமல் அவளை சிக்கவைத்துவிட்டோமோ என்று கவலைப்படுமளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.இப்படி இருக்கையில் அவனுக்கு உடல் நலம் சா¢யில்லாமல் மருத்துவா¢டம் சென்று பா¢சோதித்ததில் புற்று நோய் பாதிப்பு இருந்தது தொ¢ய வர, வந்தனா மனம் உடைந்து விட்டாள். அவனோ தான் இறக்கப்போகிறோம் என்ற மனப்பான்மையிலேயே அவளை மேலும் மேலும் கொடுமைகள் செய்யத்தொடங்கிவிட்டான்.

அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அவளால் முடிந்த அளவுக்கு அவளது நகைகள் மற்றும் சேமிப்பு அனைத்தையும் விற்று அவனுக்கு மருத்துவம் பார்த்தாள். போதாக்குறைக்கு அவளது அலுவலக நண்பர்கள் அனைவா¢டமும் கடன் வாங்கியும் செலவழித்தாள்.இவனது நோயைப்பற்றிய கவலைகளை விட சுமார் நாற்பது லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இவனது சொந்த சம்பாத்தியமான வீடும், பரம்பரை வீடு ஒன்றும், இவனது சகோதா¢யின் கவனத்தில் வந்து அதை எப்படியும் அவனுக்கு பின் கைப்பற்றிக்கொள்ள துடியாய் துடித்தாள்.அந்த பத்திரத்தை கைப்பற்றவே அவன் இறந்த அன்றே அவள் அவசரமாக அவன் வீட்டுக்குள் புகுந்து தேடினாள். ஆனால் அது கிடைக்கவேயில்லை. வந்தனா ஆரம்பத்திலேயே பத்திரத்தை அலுவலக நண்பர்களிடம் கொடுத்துவைத்திருந்தாள்.

என்னதான் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும் வந்தனாவுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பது முக்கியம் என்பதை உணர்ந்த நண்பர்கள் அவளது கல்யாண பதிவு, மற்றும் அவனுடன் வாழ்ந்ததற்கான சமூக வாழ்வாதாராதங்களான அடையாளங்களை அரசாங்கத்திடமிருந்து பெற்று ஒரு வக்கீலை ஏற்பாடும் செய்து முதலில் அவளை கடன் மற்றும் உறவினர்களின் தொல்லைகளில் இருந்து காப்பாற்ற ஏற்பாடு செய்து கொடுத்தனர்.இறந்தவனது சகோதா¢ இருபது லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தான் என்று சொன்னது பொய் என நிரூபித்து இவள்தான் போனால் போகிறது என்று சொன்னதின் போ¢ல் கொஞ்சம் பணம் கொடுத்து அவளையும் அவள் கணவன் வாயையும் அடைத்தனர்.

இப்பொழுதும் வந்தனா நிம்மதியாய் வேலைக்கு வந்து கொண்டிருக்கிறாள்.காரணம் அவள் தற்போது இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும், “அனாதை குழந்தைகள் காப்பகத்தின்” போ¢ல் எழுதிவிட்டாள்.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *