புத்திமதி – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2023
பார்வையிட்டோர்: 2,044 
 
 

(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முத்துக்குமரன், தம்முடைய அடுக்கு மாடி வீட்டு கூடத்தில் சோபாவில் அமர்ந்து மொபைலில் மூழ்கியிருந்தார்.

பக்கத்து வீட்டு முதிய பெண்மணி வசந்தா வாசலில் வந்து நின்றார். முத்துக்குமரனின் மனைவி வெண்ணிலா, ஓர் அறையிலிருந்து வெளிப்பட்டு வாங்க அம்மா என்று வரவேற்றாள்.

என்னங்க என்று முத்துக்குமரனின் தோளை உலுக்கினாள். முத்துக்குமரன் தலை நிமிர்ந்து வாங்க அம்மா உட்காருங்க என்றார்.

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த வசந்தா, ‘என்னவோ போங்க என் பொண்ணும் மாப்பிள்ளையும் இரட்டை பேரப் பசங்கள என்கிட்ட கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டாங்க. விக்னேஷும் ஜகதீஷும் சதா சர்வ காலமும் இந்த மொபைல்லையே மூழ்கி கிடக்காறங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கறது கூட மெசேஜ் ல தான். நீங்க பெரிய மனுஷர். சார் தான் மொபைலை தாண்டி உலகம் இருக்குனு அவங்களுக்கு சொல்லணும்… சொல்வீங்களா சார்.. ‘என்று நிறுத்தினார் வசந்தா.

முத்துக்குமரன் ‘சொல்றேன் அம்மா’ என்றார்.

வசந்தா ‘சரி நான் வரேன் ‘என்றபடியே மெதுவாக நடந்து வெளியேறினார்.

வெண்ணிலா சிரித்தாள்.

முத்துக்குமரன் சிடுசிடுப்பு காட்டினார் ‘என்னை பெரிய மனுஷர் னு அவங்க சொன்னதுக்கு சிரிக்கறியா’ என்றார்.

வெண்ணிலா சொன்னாள்,

‘நான் அதுக்கு சிரிக்கல.. இராம கிருஷண பரமஹம்சர் கிட்ட ஒரு அம்மா, பையனைக் கூட்டிகிட்டு வந்து சாமி இவன் இனிப்பு நிறைய சாப்பிடறான். சாப்பிடாதேன்னு சொல்லுங்க நீங்க சொன்னால் கேட்பான்னு சொன்னாங்க. சரி ரெண்டு நாள் கழிச்சு வாங்கன்னு சாமி சொன்னாராம். அந்த அம்மா போன பிறகு சிஷ்யர் கேட்டாராம் தம்பி ரொம்ப இனிப்பு சாப்பிடாதே உடம்புக்கு ஆகாது ன்னு இப்பவே சொல்ல வேண்டியதுதானே அது எதுக்கு ரெண்டு நாள் நேரம் னு கேட்டார். சாமி சொன்னாராம் முதல்ல நான் இனிப்பு சாப்பிடறதை நிறுத்தணும் அப்புறம் தான் புத்தி சொல்லணும் அதுக்கு தான் ரெண்டு நாள்.

நீங்க ஒங்க மொபைல் ஸ்க்ரீன் டைமை குறைக்கரப் பாருங்க அப்புறம் பக்கத்து வீட்டு இளைஞர்களுக்கு புத்தி சொல்லுங்க நான் என் வேலையை பார்க்கறேன்’. 

அவள் சமையலறையை நோக்கி நடந்தாள்.

– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *