புதிய சுவடுகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 2,194 
 
 

(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

11 – 20 | 21 – 30 | 31 – 40

21

துரைசிஙகம் முதலாளியின் லொறி பேரிரைச்சலுடன் புழுதியை வாரியிறைத்தபடி ஒழுங்கையில் நெளிந்து வளைந்துகொண்டு கோவிந்தனது குடிசையை நோக்கி விரைந்தது. முதலாளிதான் லொறியை ஓட்டிச்சென்றார் செல்லப்பர் இன்னமும் வேலைக்குத் திரும்பவில்லை. அவர் தற்போது இருக்கும் நிலையில் அவரை வேலைக்கு வரும்படி அழைப்பதும் துரைசிங்கம் முதலாளிக்குச் சரியாகப் படவில்லை. இதனால் துரைசிங்கம் முதலாளியினுடைய பல வேலைகள் தடைப்பட்டுக் கிடந்தன. மாணிக்கத்தையும் பார்வதியும் தேடி அலைந்ததில் எவ்வித பலனும் கிடைக்காதும் துரைசிங்கம் முதலாளிக்கு எரிச்லைக் கொடுத்தது. எப்படியும் கோவிந்தனோடு தந்திரமாகக் கதைத்து மாணிக்கம் இருக்கம் இடத்தை அறிந்துவிட வேண்டும் என்பதிலேயே அவரது சிந்தனை முழுவதும் ஓடியது. ஊரில் செய்யும் காரியங்கள் எதுவும் தோல்வியில் முடிந்ததில்லை. ஆனால் ,மாணிக்கத்தைத் தேடுவதில் எடுத்த முயற்சி முடிந்துவிடும் போல் அவருக்குத தோன்றியது.

குடிசை வாசலில் லொறி பலத்த சத்தத்துடன் நின்றபோது கோவிந்தனும, பொன்னியும் பதட்டத்துடன் வெளியே வந்தார்கள். துரைசிங்கம் முதலாளி அங்கு வந்ததைப் பார்த்ததும் அவர்களின் பயம் அதிகமாகியது. மாணிக்கம் பார்வதியைக் கூட்டிச் சென்றதால் ஏதோ ஒரு பயங்கரம் நிகழப் போகிறதென்பதை அவர்கள் எந்நேரமும் எதிர்பார்த்திருந்தார்கள். துரைசிங்கம் முதலாளி அவர்களைத் தேடி வந்தபோது அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த ;பயங்கர நிகழ்ச்சி ஆரம்பமாவதுபோல் அவர்களுக்குத் தோன்றியது. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் துரைசிங்கம் முதலாளி அவர்களைப் பார்த்துப் புன்சிரிப்பு உதிர்த்தபடி லொறியிலிருந்து இறங்கினார்.

”என்ன கமக்காறன், ஒரு சொல்லுச்சொல்லி அனுப்பியிருந்தால் நான் ஓடியந்திருப்பன்தானே. உங்கட வேலையையும் விட்டிட்டு இவ்வளவு தூரம் ஏன் வந்தியள்? “எனப் பணிவுடன் கேட்டான் கோவிந்தன்.

”அதுக்கென்ன கோவிந்தன் நான் ஒரு முக்கியமான விஷயமாய்த்தான் உன்னைத்தேடி வந்தனான். இங்கைதான உன்னைத் தனிப்பட்ட முறையிலை சந்திக்கலாம.; என்ரை இடத்திலை நாலு பத்துப் பேர் வருவினம? எதையும் விபரமாய்க் கதைக்கேலாது“ எனக் கூறியபடி குடிசையை நோக்கி நடந்தார் துரைசிங்கம் முதலாளி. பொன்னியும் கோவிந்தனும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். வேப்ப மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த வாங்கில் துரைசிங்கம் முதலாளி அமர்ந்துகொண்டார்.

”அப்ப கமக்காறனுக்கு ஏதேன் கொண்டு வரட்டுமா……“

”உன்ரை புருஷன் கோவிந்தன் வலு சூரன்தான். எல்லா விஷயத்தையும் கச்சிதமாய் முடிச்சுப் போட்டான“ எனக் கூறி கொடுப்புக்குள் நமுட்டல் சிரிப்புச் சிரித்தார் துரைசிங்கம் முதலாளி.

”எதைச் சொல்லுறியள் கமக்காறன்? எனக்கொண்டும் விளங்கேல்லை“ எனக் குழைந்து கொண்டே பிடரியை ஒரு விரலினால் சொறிந்தான் கோவிந்தன்.

”என்ன கோவிந்தன் ஒண்டும் விளங்காத மாதிரி நடிக்கிறாய.; எனக்குக் கயிறு விடாதை…..“

”சத்தியமாய்க் கமக்காறன் நீங்கள் என்ன சொல்லுறியள் எண்டு எனக்கு விளங்கேல்லை, விபரமாக சொல்லுங்கோ.“

”உன்ரை பெடியன் மாணிக்கன்ரை விஷயத்தைப் பற்றித்தான் சொல்லுறன்.“

”அன்னமாருக்கப் பொதுவாயச்; சொல்லுறன், அவன் எங்கை இருக்கிறானெண்டு எங்களுக்குத் தெரியாது கமக்காறன்“; என்றான் கோவிந்தன் பதட்டத்துடன்.

”அவன் போனதிலையிருந்த அடுப்பிலை உலைகூட வைக்கேல்லைக் கமக்காறன், நாங்கள் இந்த ஊரிலை எவ்வளவு மானம் மரியாதையாய் புழங்கினனாங்கள், கடைசியிலை அவன் உந்த வேலை செய்துபோட்டுப் போட்டான்’ என்றாள் பொன்னி குமுறலுடன்.

”எனக்கொண்டும் தெயாதெண்டு நீங்கள் நினைக்தையுங்கோ, சகல விஷயமும் தெரியும் மாணிக்கன் எங்கை போனான், எப்பிடிப் போனான் இப்ப எங்கை இருக்கிறான் என்ற விபரம் எல்லாஎனக்குத் தெரியும் எனக்கு நம்பிக்கையான ஒரு ஆள்- அதுவும் உங்கடை ஆள் தான் சொன்னவன். அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்லுறியள் எண்டு கேட்டுப் போட்டுப் போகாத்தான் இப்ப வந்தனான். என்றார் துரைசிங்கம்.

”ஐயோ கமக்காறன் கடவுளுக்குப் பொதுவாய் எங்களுக்குத் தெரியாது அவன் எங்கை இருக்கிறான் எண்டதை நீங்களெண்டாலும் எங்களுக்குச் சொல்லுங்கோ ‘ என இரண்டு கைகளையும் குவித்துக் கும்பிட்டபடி கெஞ்சும் குரலில் கூறினான் கோவிஙந்தன்.
”டேய் எனக்கேடா விடுகை விடுகிறாய் எல்லோருஞ் சேர்ந்த திட்டம் போட்டு அவனைச் செல்லப்பற்றைச் மகளோடை அனுப்பி வைச்சிட்டு நாடகமோடா நடிக்கிறியள்? கோபத்துடன் வாங்கிலிரந்து எழுந்த துரைசிங்கம் முதலாளி , கோவிந்தன் அரையில் கட்டியிருந்து வேட்டியைத் தனத கையால் பிடித்து உலுக்கியபடி அவனை அடிப்பதற்காக வலது கையை ஓங்கினார்.

கோவிந்தன் இரு கைகளைப் கூப்பியபடி ஐயோ கமக்காறன் சத்தியமாய் எக்கெண்டாந் எனச் சொல்லி நடுங்கினான்.

பொன்னி பெரிதாக ஓலமிட்டு அழுதபடி நில்த்தில் விழுந்து புரண்டு முதுரைசிங்கம் கால்களைக் கட்டிக்கொண்டு ,”ஐயோ கமக்காறன் அவரை அடிக்காதையுங்கோ“ எனத் கதறினாள்.

”இப்பவே போய் அவன் மாணிக்கனை இரண்டு துண்டாய் வெட்டிப்போட்டுத் தான் நான் மற்றவேலை பாக்கிறது“ எனக் கூறிய துரைசிங்கம் முதலாளி கோபாவேசத்துடன் வேட்டியை மடித்துகச் “சண்டிக்கட்டு ‘ கட்டிக் கொண்டார்.

”கமக்காறன் நாங்கள் மனம் நொந்து போயிருக்கிறன் நேரத்திலை நீங்கள் தான் எங்களுக்கு ஆறுதல் சொல்ல வேணும் நீங்கள் செய்யிறதைச் செய்யுங்கோ என்ரை பிள்ளையை வேணுமெண்டால் துண்டுதுண்டாய் வெட்டிப் போடுங்கோ… அக்கிரமம் கூடினாள் அன்னமார் உங்களைச் சும்மா விடாது எனக் கூறிஒரு பிடி மண்ணைஎடுத்து அன்னமார் கோயில் இருக்கும் திசையை நோக்கி வீசித் திட்டினாள்.

”என்னடி நீ சாபம் போட்டு என்னைப் பயப்பிடுத்தலாம்ட எண்டு நினைக்கிறியோ…. பெரிய பத்தினி … உந்த வெருட்டுகெல்லாம் நான் பய்பிபடமாட்டன் . என்ரை காணியிலை இருந்துக்கொண்டு எனக்கேடி சாபம் போடுறாய்? என்ரை மண்ணையெடுத்து என்னையெல்லோ திட்டுறாய்… ஒரு கிழககுள்ளை மாணிக்கன் இருக்கிற இடத்தைச் சொல்ல வேணும் இல்லையெண்டால் நீங்கள் என்ரை காணியை விட்டுக் குடி எழும்பிப் போக வேணும் , தோட்டம் செய்யிற காணியையும் விட்டுவிட வேணும் எனக் கூறவிட்டு விருடடென லொறியை நோக்கிச் சென்ற துரைசிங்கம் முதலாளி சாரதியின் ஆசனத்தில் ஏறி அமர்ந்துகொண்டார். கோவிந்தணும் பொன்னியும் திகைத்தப்படி அவரையே பார்த்தக்கொண்டு நின்றார்கள், லொறியை “ஸ்ராட’ செய்து கொண்டே கோவிந்தனின் பக்கம் திரும்பி உரத்த குரலில், “டேய் இன்னும் ஒரு கிழமைத் தவனைதான் இருக்கு எண்டதை வேகமாக செலுத்த த் தொடங்கினார்.

லொறி சென்று மறையும் வரை அதனையே பார்த்துக்கொண்டிருந்த கோவிந்தன் ஆத்திரத்துடன் பொன்னியை ஏசினான், ”உன்னாலை தானடி எல்லாம் வாறது கமக்காற னோடை நான் கதைக்கே;கை நீ ஏன் குறுக்கே வந்து கதைச்சனி ? இப்ப கமக்காறன் குடியெழும்ப வேணுமெண்டு நிக்கிறார். இனியென்ன செய்யிறது,?“

”அப்பிடி அவர் எங்களைக் குடி எழுப்பினாள் வேறயாற்றையேன் காணியிலை யெண்டாலும் கெஞ்சி மன்றாடி இருக்கம்தானே.

நீ விசர்க் கதை கதைக்காதையடி உன்ரை மேன் செய்துவிட்ட வேலைக்கு ஒரு கமக்காறரறையும் எங்களுக்குக் காணி தரமாட்னம்“ என எரிந்து விழுந்தான் கோவிந்தன்

பொன்னி மௌனமானாள்.

”தோட்டக் காணியையும் விடச் சொல்லிப்போட்டுப் போட்டார். மிளகாய்க் கண்டுகளெல்லாம் பிஞ்சும் பூவுமாய் நிக்கிதுகள் இந்த நேரத்திலை அவர் காணியைப் பறிச்சால் நாங்கள் பட்;ட கடனை எப்படியடி தீர்க்கிறது ?“ எனக் கூறியபடி தலையில்கை வைத்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்துவிட்டான். கோவிந்தன்.

பொன்னிக்குத் தலையை சுற்றியது.

மாணிக்கத்தைப் பற்றிய கவலையில் மனமுடைந்திருந்த அவளுக்கு இப்போது புதிய கவலைகளும் சேர்ந்துகொண்டன.

22

செங்கமலத்துக்கு உதவியாக மாணிக்கமும் பார்வதியும் மிளகாய்ப் பழங்களைப் பிடுங்கிய பழங்களக் கொட்டிலின் முன் காலையிலிருந்து பிடுங்கிய பழங்களைக் செங்கமலம் குவித்தருந்தள். வேறோரு பகுதியில் முன்னர் பிடுங்கிய பழுங்களைக் காய் விட்டிருந்தாள் , அவற்றையெல்லாம் பார்க்கும் போது பார்வதிக்கும் மாணிக்காத்திற்கும் உற்சாகமாக இருந்தது, ஊரிலே தனது தந்தை கோவிந்தன் செய்கை பண்ணியிருக்கும் மிளகாய்க் கன்றுகளோடு கந்தசாமியின் கன்றுகளைக் அவன் ஒப்பிட்டுப் பார்த்தான் ஊரிலுள்ள கன்றுகளை அதிக பலனை க் கொடுக்கின்றன அதற்குகடகாரணம் அப் பிரதேசத்திலுள்ள மண் வளந்தான் என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது.

ஊரிலே மிளகாய்க் கனக்றுகளை செய்கை பண்ணுவ வதற்க உரத்திற்கும் மருந்து வகைகளுக்கம் அதிக செலவுகள் செய்யவேண்டியிருந்தது. ஆனால் முத்தையன்கட்டில் மண்ணிலே இயற்கையான இருக்கம் பசளையின் காரணமாகச் செலவு குறைவாக இரக்குமென்பதை மாணிக்கம். புரிந்து கொண்டான்.

அடுத்த போகதத்திற்கு நாலாயிரம் மிளாகய்க் கன்றுகளையாவது நடவேண்டுமெனத் தனக்குள்ளேயே திட்டமிட்டான் மாணிக்கம் , கஷ்டப்பட்டு உழைத்துக் கவனமாகக் கமஞ்செய்தால் பத்தாயிருத்துக்குக் குறையாத இலாபத்தை நிச்சயம் பெற்றுவிடலாம் .செலவுக்க வேண்டிய பணத்தை நன்பன் கந்தசாமி கொடுத்து உதவுவான் மண்ணிலே இட்ட பணம் ஒரு நாளும் வீண்போகாது ஒரு நல்ல நிலை ஏற்பட்டதும் முதல் வேலையாக தனது தாய’; தந்தையரை முத்தையன்கட்டுக்குப் அழைத்து வரவேண்டும் சீர் கெட்டுப் போயிருக்கம் சமுதாய அமைப்பிலிருந்து தாய் தந்தையரை விடுவிக்க வேண்டும் அவர்கள் தங்களது இறுதிக் கால்த்திலேயாவது சுதந்திரமாக இருக்க வேண்டும’; என்றெல்லாம் அவன்மனதிலே எண்ணிக்கொண்டான்.

ஊரிலிருந்து அப்போதுதான் கந்தசாமி அங்கு வந்து சேர்ந்தான் அவனைக் கண்டதும் பார்வதியும்செங்கமலமும் அவனைக் சூழ்ந்துகொண்டார்கள்.

”பிரச்சினை ஒண்டும் இல்லை எல்லாம் நல்லபடியாய்த் தான் நடந்து முடிஞ்சிருக்கு என்றான் கந்தசாமி சிரித்த படி,

”கமக்காறரவை எங்கடை ஆக்களுக்கு ஏதேன் கரச்சல் கொடுத்தவையோ உள்ளதைச் சொல்லு மச்சான் ‘எனக் கேட்டான் மாணிக்கம்,

”அங்கை ஒரு கரச்சலும் இல்லை அவையள் இரண்டு நாளாயக் காரிலை ஓடியாடித் திரிஞ்சினம் இப்ப எல்லோருக்கும் அலுத்துப் போய் அவரவரே பேசாமல் இருக்கினம்.“
பார்வதி இடைமறித்து எங்கடை வீட்டிலை அப்புவும் அம்மாவும் எப்பிடி இரக்கினம் ? அம்மாவுக:க ஏதேன் வருத்தம் வந்ததோ ?“ என ஆவலுடன் கேட்டள்.

”நான் இங்கை வாறதுக்கு முன்னுக்கும் உங்கடை வீட்டை போய்க் கதைச்சுப் போட்டுத்தான் வந்தனான். உங்கடை அன்னம்மா மாமிதான் அவையளுக்கு உதவியாய் இருக்கிறா நான் போன நேரத்திலை உங்கடை அப்பு வீட்டிலை இல்லை…. வேலைக்குப் போட்டார். உங்கடை அம்மாதான் நடந்து முடிஞ்ச காரியத்துக்கு இனியென்ன செய்யிறதெண்டு சொன்னவ.“

கந்தசாமி கூறிய வார்த்தைகள் எவற்றையுமே மாணிக்கம் நம்பவிலை. பார்வதியும் தானும் மன அமைதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகக் கந்தசாமி பொய் சொல்லுகிறான். என அவன் நினைத்துக்கொண்டான் ஆனாலும் பார்வதியின் முன்னால் எதையுமே விபரமாக கேட்க கூடாதென எண்ணி அவன் மௌனமானான்.

செங்கமலம் தேநீர் தயாரிப்பதற்காக வீட்டினுள்ளே செனறாள் அவளைத்தொடர்ந்து பார்வதியும் சென்றாள்.

”என்ன மாணிக்கம் சோர்ந்து போயிருக்கிறாய் ? புது மாப்பிள்ளை சந்தோஷமாயெல்லோ இருக்கவேணும் எனக் கூறிக் கொண்டே மாணிக்கத்தின் முதுகில் விளையாட்டாகத் தட்டினான் கந்தசாமி.

”நான் சந்தோஷமாய்த்தான் இருக்கிறன்“ எனச் சிரிப்பைவரவழைத்துக்கொண்டு கூறினான் மாணிக்கம்.

”மாணிக்கம் , உனக்கும் பார்வதிக்கும் இங்கை ஒரு குறையும் இருக்கப்பிடாது என்ன வேணுமெண்டாலும் என்னட்டைத் தயக்கமில்லாமல் சொல்லு,“

”இங்கை எங்களுக்கு ஒரு குறையுமில்லை மச்சான் “ மாணிக்கம் அன்புடன் கந்தசாமியிடம் கைகளைப் பற்றிய வண்ணம் கூறினான்.

அப்போது படலை பக்கம் ஒரு கார் வந்து நிற்கும் சத்தங் கேட்டது காரிவலிருந்து மூவர் இறங்கிக் கந்தசாமியிடம் வந்தார்கள்.

”மிளகாய்ச் செத்தல் இருக்கோ கந்தசாமி…. “ வந்தவர்களில் ஒருவன் கேட்டான்.

”ஓ….. இருக்குத்தான்…. இப்ப என்ன விலை நடக்குது?“

”நல்ல காஞ்ச செத்தலெண்டால் பத்து ரூபாய்க்கு எடுப்பம்.“

“ஏனண்ணை …. கொழும்பிலை இப்ப பதின்னாலு பதினைஞ்ச்சு , நடக்குதுதாம் . நீங்கள் ஆகக் குறைச்சப் கேக்றியள்“ என்றான் கந்தசாமி .

”போன கிழமைதான் அந்த விலை இப்ப விழுந்து போச்சு நொச்சிகாமம் செத்தலும் கொழும்புக்குப் போகுதாம்.“

”அண்ணைபதினெரு ரூபாயெண்டாலும் போடுங்கோஎன்னட்டை நாலு அந்தர் மட்டிலை இருக்கு.“

”தம்பி எங்களுக்கு கட்டாது பத்தரையெண்டால் சொல்ல முழுக்க எடுக்கிறம்.“
அவர்களது சம்பாஷனையிலிருந்து வந்தவர்கள் மிளகாய் வியாபாரிகள் என்பதை மாணிக்கம் புரிந்துகொண்டான் அப்போதுசெங்கமலமும் பார்வதியும் வந்தார்கள்.
கையிலே தராசுடன் நின்றவன் பார்வதியை உற்று நோக்கினான் பார்வதியும் அவனைப் பார்த்தாள், முன்னர் எங்கையோ அவனைப் பார்த்து அவளுக்கு நினைவில் வந்தது. ஆனால் எங்கே எப்போது பார்த்திருக்கக் கூடுமென்பதை அவளாள் நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை பார்வதி மீண்டும் மெதுவாக வீட்டினுள்ளே சென்று விட்டாள்,

வந்தவர்கள் மிளகாயை விலைக்குப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அவர்கள் போன பின் கந்தசாமியும் மாணிக்கமும் வெளியேயிருந்து தேநீர் அருந்திய படி எதைப்பற்றியோ கதைத்துக்கொண்டிருந்தார்கள்.

செங்கமலம் சமையல் செய்வதில் ஈடுபட்டிருந்தாள். பார்வதி மட்டும் தனியாக ஓர் அறையிலிருந்து ஆழ்ந்துயோசித்து கொண்டிருந்தாள்.

23

லொறியின் கீழே படுத்திருந்து அதன் இயந்திரத்தைப் போட்டு குடைந்து கொண்டிருந்தார் துரைசிங்கம் முதலாளி, காலையில் எழுந்ததிருந்து ஒரு மணி நேரமாக இயநிதிரத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறைக் கண்டு பிடிப்பதில முனைந்திருந்த போதும். அதனை அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. வழக்கமாக லொறியில் ஏதாவது சிறிய பிழைகள் ஏற்பட்டால் அதனைச் சரி படுத்தி விடுவார். இப்போது செல்லப்பர் வேலைக்குவராதினால் துரைசிங்கம் முதலாளிக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டு இருந்தன அவரது வேலைகள் பல தடைப்படடு வருவாயும் குறைந்து போயிருந்தன.

செல்லப்பர் அவரிடம் வேலைக்குச் சேருவதற்கு முன்புபலர் அவரிடம் லொறிச் சாரதியாக வேலை பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் ஒருவராது அந்த வேளையில் நிரந்தரமாக நின்று பிடிக்கவில்லை. உண்மையில் துரைசிங்கம் முதலாளியிடம் வேலை செய்வது மிகவும் சிரமான காரியம் அவரிடம் லொறிச் சாரதிகளாக இருப்பவர்கள் அவருக்குப் பல வேளைகளில் ஒத்தாசை புரிய வேண்டும் ஊரில் அவர் செய்யும் சண்டித்தனஙக்ளுக்கும் அட்டகாச செயல்களுக்கும் லொறிச் சாரதியும் உடந்தையாக இருக்க வேண்டுமென அவர் எதிர்பார்ப்பார் அவருக்க இருக்கும் எதிரிகள் யாவரோடும் லொறிச் சாரதியும் எதிரியாக இருக்கவேண்டும் அவர் யாரையாவது அடித்துவிட்டுவரும்படி கூறினால் அதனைக் தட்டாது சிரமேற் கொண்டு சாரதி அதனைச் செய்து விட்டுவர வேண்டும்.

முன்பு ஒரதடவை சினிமா பார்த்து விட்டு சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த தனது எதிரியை அப்போது தன்னிடம் வேலை செய்த லொறி ச் சாரதியைக் கொண்டு லொறினால் மோதவைத்து ஸ்தலத்திலே மரணமயைச்செய்த சங்கதி ஊருக்குள் பிரபலமடைந்த பரமரகசியம் அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் ஏகப்பட்ட செலவு ஏற்பட்டுத்தனக்குச் சொந்தமான காணிகள் சிலவற்றை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் பலருக்கத் தெரியும்.

இப்படியான காரணங்களாலே தான் துரைசிங்கம் முதல்hளிடம் வேலைக்கு வருவதற்கு பயப்படுகிறார்கள்.

செல்லப்பரைப் பொறுத்த வரையில் முன்பு முதலாளியிடம் வேலை செய்த எவருக்குமே இல்லாத சலுகைகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. அதற்குக் காரணம் ஆரம்ப காலத்தில் செல்லப்பர்தான் துரைசிங்கம் முதலாளிக்கு லொறி ஓட்டுவதற்கு க் கற்றுக் கொடுத்தவர் அத்தோடு இருவுரும் வெகுகாலமாக அந்நியோன்னியமாகப் பழுகுகிறார்கள்.

செல்லப்பரின் வயது காரணமாக முதலாளி அவரைத் தனது சண்டித்தன வேலைகளுக்குப் பயன்படுத்தும் மிகவும் குறைவு அதனாலேதான் செல்லப்பர் சில் வருடங்களாகத் துரைசிங்கம் முதலாளியிடம் லொறிச் சாரதியாக நின்று பிடிக்கிறார். செல்லப்பரை விட்டால் வேறு ஒரு வரும் தன்னிடம் சாரதியாக நின்று பிடிக்கமாட்டார்கள் என்பதும் துரைசிங்கம் முதலாளழக்கு தெரியும்.

இரண்டு மூன்று நாட்களாக துரைசிங்கம் முதலாளியின் மனதைப் பல விஷயங்கள் குடைந்து கொண்டிருந்தன அவரது மகளுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன சீதனம் கொடுப்பதற்கும் ஊருக்கு சொல்லித் தனது பவிசு குறையாமல் கலியாணத்தை நடத்தி வைப்பத்ற்கும் அவருக்குப் பெருந்தொகையான பணம் தேவைப்பட்டது.

அந்தப் பணத்தைப் பெறுவதற்கு அவர் தனது காணியையோ காரையோ அல்லது லொறியோ விற்கவேண்டும் வேறு எந்த வழியும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. அவர் தனது பரம்பரைச் சொத்;தாக இருந்த பல காணிகளை விற்று விட்டார் தற்போது கோவிந்தன் குhயிருக்கும் காணியும்,தோட்டஞ் செய்யும் பகுதியும், அன்னமார் கோயிலிருக்கம் காணியும் அவரது வீடுவளவும் மட்டுமே மீயாக இருக்கிறது.
துரைசிங்கம் முதலாளியின் மனைவி இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன அவரது மனைவி இரக்கும் வரை தனக்குச் சொந்தமான ஒரு காணியையாவது துரைசிங்கம் முதலாளியால் விற்க முடியவில்லை. காணி விற்பதைப் பற்றிக் கதைத்தாலே அவள் பெரிதாக அவரிடம் சண்டை பிடித்துத் தடுத்து விடுவாள் .அவள் இறந்திருந்து அவர் செய்யும் எங்தக் காரியத்தையும் தடுக்க ஆள் இலல்hமல் போய்விட்டது, அவர்தனது ஒரே மகளைச் செல்லமாக வளர்த்து வந்ததினால் அவளுக்கும் போதிய அனுபவம் இருக்கவில்லை .அதனால் அவள் தந்தையை ஒரு போதும் கண்டிப்பதில்லை இப்போது துரைசிங்கம் முதலாளி பெருந்தொகையான கடனுக்கு மத்தியில் தனக்கள்ள பகட்டினை விட்டுக்கnhடுக்காமல் வாழ்ந்து வருகிறார்.

”என்னதுரைசிங்கண்ணை லொறியிலை ஏதோ பழுது போலை கிடக்கு.?
லொறியின் அடியில் படுத்திருந்த துரைசிங்கம் முதலாளியால் பக்கத்தில் வந்து நிற்பது யாரென்பதைப் பார்க்க முடியவில்லை. கால்களை மட்டுமே பார்க்க கூடியதாக இரந்தது. அவை யாருக்ணுகுச் சொந்தமான கால்கள் என்பதையும் துரைசிங்கம் முதலாளியால் ஊகிக்க முடியவில்லை அதனால் அவர் நிலத்தி;லே அரைந்தபடி லொயியின் அடியிலிருந்து வெளியே புறப்பட்டு வந்தவர் தரகர் ஆறுமுகமென்பது அவுருக்க தெரிந்தது.

”என்ன ஆறுமுகம் … கனகாலமாய் இந்தப் பக்கம் காணேல்லை. என்ன சங்கதி ….?“

”இப்பதானண்ணை கொஞ்ச வருவாய் வாற காலம் மிளகாய் விலையும் கொஞ்சம் சூடாய் இருக்கிது அதுதான் மிளகாய் கட்டுறதிலை திரியிறன்“

”அப்ப ஆறுமுகம் இந்த முறை உனக்கு பிழையிலைப்போலை ….“ எனக் கூறிய துரைசிங்கம் முதுலாளி முதுகுப் பக்கம் படிந்திரந்த மண்ணைத் தனது சால்வையால் துடைத்துக் கொண்டார்.

”போனமுறை உவ்விடம் முழுதும் தரிஞ்சு வெங்காயம் கட்டின னான். கொழும்பில் திடீரெண்டு விலை விழுந்தாலை எனக்கு ஆறாயிரம் நட்டம். இப்பாதாண்ணை அதைக் கொஞ்சம் நிரவியிருக்கிறேன்.“

”ஓ… வியாபாரம் எண்டால் அப்பிடித்தானே ஒண்டிலை விழுந்தால் ஒண்டிலைதாணே எடுக்க வேணும்……“

”அது சரி ஆறுமுகம், என்ன சங்கதி இப்ப விடிஞ்சதும் விடியாததுமாய் வந்திருக்கிறாய்.?“

”இல்லையண்ணை உங்கடை செல்ல்ப்பர் வீட்டுவிசயங்கள் எல்லாம் கேள்விபப்பட்டன்… அது தான் ஒருக்கா கதைப்பம் எண்டு வந்தனான்…“

”அது ஆறுமுகம் செல்லப்பற்றை பிழைதான் மகளை அவனோடை பழகவிட்டிப் இப்ப யோசிச்சு என்ன பிரயோசணம் அவனை வைக்க வேண்டிய இடத்திலை வைச்சிருக்கவேணும்.“

”ஓ….. அது சரிதாண்ணை, ஆனால் செல்லப்பர் தான் பாவம் நல்லமனிசன் எதோ நடந்தது நடந்து போச்சு, அவரை நீங்கள் கைவிடக்கூடாது.“

”ஓ…. நானும் உவ்விடம் முழுதும் தேடிப்பாத்திட்டன், அவனும் கண்டு பிடிக்க முடியேல்லை .அவங்கோடை சாதியாக்கள் எல்லோரும் ஒத்து நிண்டு விஷயத்தை மறைக்கிறாங்கள்.

”எல்லாம் விஷயமும் நான் கேள்விப்பட்டனான். நீ தானண்ணை மும்மரமாய் ஓடியாடித் திரிஞ்சனியெண்டும் அறிஞ்சன் அதுதான் உன்னட்டை ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தனான்“ எனக் கூறினார் ஆறுமுகம்

”அப்பிடியென்ன ., நீ கதைக்கிறதைப் பார்த்தால் உனக்கு ஏதோ தெரியும் போலை கிடக்கு “

”ஓமண்ணை சில பல விஷயங்கள் தெரியுந்தான், நான் அதை வெளியிலை கதைக்கிறது நல்லாயில்லைத் துஐரசிங்கம்கண்ணை என்ரை தொழிலுக்கு நான் பலரோடும் புழங்குகிறவன் பல இடத்திற்கும் பொறனான் என்ரை வாயாலை உதுகளைச் சொல்லி பிறக ஏதேன் பிரச்சினை வந்தால் எனக்குத்தான் வீண்கரச்சல்.“

”இல்லை ஆறுமுகம் , நீ தெரிஞ்சதைச் சொல்லு , நீ சொன்னதாய் நான் ஒருத்தருக்கும் சொலலமாட்டன்.“

”இப்ப இரண்டு மூண்டு நாளைக்கு முன்னம் நான் முத்தையன் னட்டிலை மிளகாய் கட்டினனான் அப்ப தான் செல்லப்பற்றை மகளை ஒர வீட்டிலை பாத்தன் அங்கே அவளோடை வேறை ஒரு பெடியனும் நிண்டவன் அவனை ஆரெண்டுமு என்க்குச் சரியாத் தெரியேல்லை.“

”என்ன முத்தையன்கட்டிலையோ…. ஆர் , அவன் கந்தசாமி வீட்டிலையோ அவையள் இருக்கினம்.?“

”ஓமண்ணை உன்ககும் கந்தசாமியைத் தெரியுமோ ? “ என ஆச்சரியத்துடன் கேட்டார் ஆறுமுகம்.

”என்ன விசர்க் கதை கதைக்கிறாய் .அவன் எயங்கடை ஊர்ப் பெடியன்தானே,“

”அப்பிடிளே சங்கதி எனக்கு உண்மையிலை தெரியாது .அவன் ஒரு இந்தியாக்காற மனுசியைக் கலியாணம் செய்திருக்கிறான் அவனம் ஒரு இந்தியாக்காறப் பெடியன்னெண்டுதான் நான் இவ்வளவு காலமும் நினைச்சுக்கொண்டிருக்கிறன்.“

”என்ன ஆறுமுகம் அப்பிடி எங்கடை ஊர்ப் பெடியன்களை உனக்கு தெரியாமல் போச்சோ?“

”இந்த ஊரிலை அண்ணை எனக்கு உங்களையும் செல்லப்பரையும் வேறை நாலைஞ்சு பேரையும் நல்லாய்த் தெரியும் உங்கடை லொறியிலை சில நேரங்களிலை சாமான் ஏத்திர படியாலை உங்கள் இரண்டு பேரையும் நல்லாய்த் தெரியும் வேறையும் ஒரு நாலைஞ்சு பேரை மட்தடியிலை கண்டு பழக்கம் இந்த ஊரிலை இருக்கிற மற்றப் பகுதி ஆக்களை உனக்கு அவ்லவளவு தெரியாது.“

”ஓகோ….. இவங்கள் திட்டம் போட்டுத்தான் எங்களை ஏமாத்தியிருக்கிறாங்கள் நான் உவையளை லேசிலை விடமாட்டன் “ எனக் கறுவிக் கொண்டார் துரைசிங்கம் முதலாளி.

”அண்ணை இந்த ஊரிலை இப்பிடியொரு விஷயம் நடந்துதுதெண்டு பேப்பரிலெ வாசிச்சனான். முத்தையன் கட்டிலை செல்லப்பபற்றை மகளைக் கண்டதும்தான் எனக்குச் சந்தேகம் வந்தது நேற்றுப் பின்னேரம் உங்கடை மடத்தடியிலை வந்து பொழுதுதான் முழு விபரமும் அறிஞ்சன் ஆனால் ஒருத்தரிட்டையும் எனக்கு விஷயம் தெரிஞ்சதாய்க் காட்டிகொள்ளேல்லை.“

”ஆறுமுகம் இப்ப உடனே வெளிக்கிட்டுப் போனால் ஆக்களைப் பிடிக்கலாமோ? “ எனக் கேட்டார் துரைசிங்கம் முதலாளி.

”முத்தையன் கட்டிலை பிள்ளையார் கோயில் வீதியோடை இருக்கிற நாலாவது காணியிலை தான் அவையள் இருக்கினம் . அதுசரி கூட்டிக்ககொண்டு போனது குறைஞ்ச பகுதிப் பெடியனெண்டால் பிறகு ஏனண்ணை உதிலை தமினக்கிடுறியள், கை கழவி விட வேண்டியது தானே “ எனக் கூறினார் ஆறுமுகம்.

”ஆறுமுகம் உனக்கு உதுகளொண்டம் விளஙகாது, செல்ப்பர் என்ரை ஆள் அவற்றை எனக்கும் பயப்பிடேல்லைத்தனே இதுக்கு நான் ஒரு நல்லமுடீவு எடுக்காட்டில் இந்த ஊரில் நான் ஒரு மனிசனெண்டு இருக்கிறதிலை வேலைல்லை.“

”அண்ணை ஏதோ நாலையும் யோசிச்சு செய்யுங்கோ என்னாலை இந்த விஷயம் கிளம்பின தெண்டு ஒருத்தருக்கும் தெரியப்பிடாது,“

”அதுக்கு நீ யோசிக்காதை ஆறுமுகம் அப்படி ஏதேன் பிரச்சனை வந்தாலும் எல்லாதத்துக்கம் நான் இருக்கிறேன்.

”அப்ப நான் வரப்போறண்ணை , என்னோடை கூட வந்தவையை மடத்தடியிலை விட்டிட்டு வந்தனான் சுண்கேலாது“ எனக் கூறிவிட்டு புறப்பட்டார் ஆறுமுகம்.

”அப்ப சரி ஆறுமுகம் எனக்கும் கொஞ்சவேலைஇருக்கு நீ போட்டு வா எனக் கூறி ஆறுமுகத்தை அனுப்பி வைத்தார் துரைசிங்கம் முதலாளி.

தொடர்ந்தும் லொறியில் பழுது பார்பதற்கு துரை சிங்கம் முதலாளியின் மனம் இடங்கொடுக்கவில்லை அப்படியே போட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தார் மகளிடம் ”பிள்ளை எனக்குக் கொஞ்சம் தேதண்ணி தா, நான் அவசரமாய் வெளியிலை போக வேணும் “ எனக் கூறிக் கொண்டே முன் விறாந்தையில் சுவரோரமாகச் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்து முற்றத்தில் வைத்தார்.

24

படலையடியில் துரைசிங்கம் முதலாளி சைக்கிளிலிருந்து இறங்குவதைக் கண்டதும் செல்லப்பர் சார்மனைக் கதிரையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த துரைசிங்கம் முதலாளி சைக்கிளை உருட்டிகொண்டு வந்து முருங்கை மரத்தடியில் சாத்திவிட்டு செல்லப்பரின் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்தார்.

”என்னண்ணை காலைமை வந்திருக்கிறியள். ஏதேன் அவசரமோ ?“ என வினாவினார் செல்லப்பர்,

”ஓ…… அவசரமான விஷயமாய்த்தான் வந்திருக்கிறன். உன்ரை மகளும் மாணிக்கனும் இப்ப முத்தையன்கட்டிலை இருக்கினமாம்“

”என்ன முத்தையன் கட்டிலையோ…. எப்பிடியண்ணை உனக்குத் தெரியும்?“

அவர்களது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த சின்னத்தங்கம் வெளியே வந்தாள். குசினியில் வேலையாய் இருந்த அன்னம்மாவும் இப்போது மேலும் விபரம் அறியும் ஆவலுடன் அஙகு வந்தாள் துரைசிங்கம் முதலாளியின் முன்பாக அன்னம்மாவும், சின்னத்தங்கமும் உட்கார்ந்து கொண்டார்கள்.

”இண்டைக்கு காலமைதான் எனக்கு ஒரு ஆள் சொன்னது, அவன் கந்தசாமியின்ரை வீட்டிலைதான் இப்ப அவையள் இருக்கினமாம.“;

”அவள் எங்கையிருந்தாலும் என்ன, இனி அவளை நாங்கள் கைகழு
விடவேண்டியது.“

செல்லப்பர் இப்படிக் கூறுவாரென அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை

”என்ன செல்லப்பர் விசர்க்கதை பேசிறாய். பிள்ளையை கீழ்சாதிக்காரன் கொண்டு போய் வைச்சிருக்க நாங்கள் பார்த்துக்கொண்;டு இருக்கிறதோ?“ எனக் கேட்டார் துரைசிங்கம் முதலாளி.

”அப்ப, ஓடிப் போனவளைக் கூட்டியந்து நாங்கள் வீட்டிலை வைச்சிருக்கிறதோ?“ என்றார் செல்லப்பர் வெறுப்பான குரலில்.; செல்லப்பர் இப்படிக் கூறியதைக்கேட்டதும் அன்னம்மாவும் சின்னத்;தங்கமும் திகைத்துப்போனார்கள்.

”செல்லப்பர் நீ இப்ப மனக்குழப்பதிலை இருக்கிறாய். அதுதான் உப்பிடியெல்லாம் கதைக்கிறாய். நான் உன்ரை நன்மைக்குத்தான் சொல்லுறன். இப்பவே போய் உன்ரை மகளைக் கூட்டியாறதுதான் நல்லது.“

”அண்ணை நான் நிதானமாய் யோசிச்சுப் போட்டுத்தான் சொல்லுறன் .இனி நான் அவளை இந்த வீட்டுவாசலுக்கும் அடுக்கமாட்டன்;. அவளைக் கண்டால் வெட்டித் துண்டாக்கிப் போட்டுத்தான் மற்றவேலை பாப்பன்.“ செல்லப்பருக்குக் கோபத்தினால் உடலெல்லாம் ஆடியது? கண்கள் கலங்கிச் சிவந்தன.

”ஐயோ, இங்த மனிசனுக்கு விசர்தான் பிடிச்சிருககு, அவள் பிள்ளை “ எனக் கூறிப் பெரிதாக ஓலமிட்டு அழத்தொடங்கினாள் சின்னத்தங்கம்.

”எடியேய்…. பொத்தடி வாயை? மூச்சுக் காட்டக்கூடாது எல்லாம் உன்னாலைதான்ரி வந்தது“ என ஆக்குரோஷத்துடன் எழுந்த செல்லப்பர் தன்னை மறந்த நிலையில் சின்னத்தங்கத்தின் கையை ஓங்கினார்.

”செல்லப்பர்‰ கொஞ்சம் பொறு உதென்ன வேலை? “எனக் கூறி துரைசிங்கம் முதலாளி சின்னத்தங்கத்தைச் செல்லப்பருடைய பிடியிலிருந்து விலக்கிவிட்டார்.

”என்ரை குடும்ப மானத்தையெல்லாம் இவள் கப்பலேத்திப் போட்டாள். இவள் ஒழுங்காயிருந்தால் அவள் ஒரு நாளும் ஓடியிருக்கமாட்டாள் “ எனக் கூறிய செல்லப்பர் கவலை தாளாது விம்மி விம்மி அழத்தொடங்கினார்.

துரைசிங்கம் முதலாளியின் மனமும் வேதனையடைந்ந்தது.

”செல்லப்பர் நீ கொஞ்சம் அமைதியாயிரு? நடந்து முடிஞ்சதைப்பற்றி யோசிக்கப் பிடாது. இனி நடக்க வேண்டியதைக் கவனிக்கவேணும் “ எனச் செல்லப்பரின் கைகளைப் பற்றியபடி துரைசிங்கம் முதலாளி.

இதுவரை நேரமும் அமைதியாயிருந்த அன்னம்மா செல்லப்பர் கலங்குவதைப் பார்த்ததும் முந்தானையால் முகத்தைப் பொத்தி கொண்டு விம்மினாள். அவர்கள் எல்லோரும் தேறுதல் அடையட்டும் என்பதற்காகத் துரைசிங்கம் முதலாளி சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.

”செல்லப்பா, நான் சொல்லிறதைக் கொஞ்சம் அமைதியாய்க் கேக்கவேணும் . உன்ரை மகளைப் போய் கூட்டியாறதுதான் நல்லது. மாணிக்கனோடை இருக்க விடுகிறது எங்கள் எல்லோருக்கும் மானக்கேடு.“

”அவளைக் கூட்டியந்துதான் என்ன செய்யலாம்?“

”அதுக்கொண்டும் யோசிக்காதை செல்லப்பர். கொஞ்சகக்hலம் அவளுக்கு ஏதேன் ஒரு வழி செய்யலாம். காலப்போக்கில எல்லாம் சரிவரும்“ எனத் தேறுதல் கூறினார் துரைசிங்கம் முதலாளி.

”தம்பி, துரைசிங்கம் சொல்லுறது சரியெண்டுதான் நானும் நிகை;கிறன். பார்வதியை எப்பிடியாவது கூட்டியாறதுதான் நல்லது“ எனச் செல்லப்பரிடம் சொன்னாள் அன்னம்மா.

சகோதரியும் இப்படிக் கூறியபோது செல்லப்பர் சிறிது அமைதியடைந்தார்.

”என்னவோ நீங்களெல்லாம் விரும்பினபடி செய்யுங்கோ. எனக்கெண்டால் அவனைக் கூட்டிக்கொண்டு வாறது விருப்பமில்லை“ எனத் தலையில் கைவைத்தபடி கூறினார் செல்லப்பர்.

”தம்பி, நீ ஒண்டுக்கும் யோசிக்காதை. பார்வதியைக் கூட்டிக்கொண்டு வா. எதுவந்தாலும் அதுக்கு நான் பொறுப்பு.“ அன்னம்மா செல்லப்பரைப் பார்த்துக் கூறினாள்.

”மச்சாள், நான் இன்னும் கனகாலம் இருக்கமாட்டன்.; சாகிறதுக்கு முன்னம் என்ரை பிள்ளையை ஒருக்கா கண்ணாலை பாக்கவேணும் “ எனக் கூறிய சின்னத்தங்கம் மீண்டும் விம்மினாள்.

இப்போது செல்லப்பர் எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருந்தார்.

”செல்லப்பர், பொழுது பட்ட பிறகு நான் கொண்டுவாறன் . நீ ஆயத்தமாயிரு. இண்டைக்கே உன்ரை மேளைக் கூட்டியந்திடவேணும.“

”நாங்கள் போய்க் கூப்பிட அவள் வரமாட்டன்; எண்டு சொன்னால் என்ன செய்யிறது ? மானங் கெட்டெல்லோ திரும்ப வேணும்“ என்றார் செல்லப்பர் யோசித்தபடி.
”என்ன செல்லப்பர் இவ்வளவு காலமும் நீ என்னோடை பழகின பிறகு உப்பிடிச் சொல்லுறாய்? அவள் வரமாட்டன் எண்டு சொன்னால் காரிலை தூக்கிப் போட்டுக்கொண்டு வாறதுதானே.“

”இல்லையண்ணை நாலையும் யோசிச்சுத்தான் செய்யவேணும். போற இட்த்திலை ஏதேன் பிரச்சினை வந்தால் என்ன செய்யிறது?“

”ஒரு பிரச்சனையும் வராது செல்லப்பர். அப்பிடி ஏதேன் வந்தாலும் சமாளிக்கிறதுக்கு நான் ஆயத்தமாய்த்தான் வருவன். நாங்கள் போற விஷயத்தை மட்டும் இப்ப வேறையொருத்தருக்கும் சொல்லிப் போடாதை.“ எனக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார் துரைசிங்கம் முதலாளி.

செல்லப்பர் சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். துரைசிங்கம் முதலாளி ஏதாவது முரட்டுத்தனமாக நடந்து கொள்வாரோ என மனம் கலக்கமடைந்தது.

”தம்பி ஒண்டுக்கும் யோசிக்காதை? எல்லாம் நல்ல படியாய்த்தான் நடக்கும். நீ இப்ப வந்து சாப்பிடு.“ எனக் கூறிவிட்டுப் குசினிப் பக்கம் எழுந்து சென்றாள் அன்னம்மா.
செல்லப்பருக்கு உணவருந்த மனம் வரவில்லை. ஆனாலும் சகோதரியின் பேச்சைத் தட்டாது எழுந்து குசினிப் பக்கம் சென்றார்.

25

ப+ரணச்சந்திரன் நான்கு நாட்களில் மெலிந்து போயிருந்தான். நிலமடந்தையுடன் சல்லாபம் புரிந்ததால் ஏற்பட்ட மெலிவு ‰ நிலமடைந்தை வெறும் மேனியாய்ச் சோர்ந்து கிடந்தாள். சந்திரன் தனது வெண்ணிற ஒளித் துகிலால் அவளது உடலைப் போர்த்தி விட்டான்.

மாணிக்கமும பார்வதியும் வீட்டு முற்றத்திலிருந்து கொட்டிலில் நிலமடந்தையின் மேனியை மூடியிருந்த வெண்ணிற ஒளித்துகிலின் அழகினை இரசித்தப்படி தங்களுக்குள் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். செங்கமலம் அவர்களின் தனிமையைக் கலைக்க விரும்பாது வீட்டினுள்ளே ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாள.

கந்தசாமி பகல் போசனத்துக்குப் பின்பு உரம் வாங்குவதற்குகாக முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தான். இரவு எப்படியும் திரும்பி விடுவதாகக் கூறிச் சென்றவன் இன்னமும் திரும்பவில்லை.

குளத்தைத் தழுவி வந்த குளிர் காற்று சில்லென அவர்களின் உடலைத் தழுவிச் சென்றது. அந்தக் குளிரைப் பொருட்படுத்தக் கூடியதாக மாணிக்கமும் பார்வதியும் இருக்கவில்லை.

சற்று நேரத்திற்கு முன்னர் குழு மாடுகள் சில கூட்டமாக வேலியை உடைததுக் கொண்டு உள்ளே வந்து மிளகாய்க் கன்றுகளில் சிலவற்றைச் சேதப்படுத்துவதற்கு எத்தனித்த போது மாணிக்கம் பாய்ந்து சென்று அவற்றை விரட்டிவிட்டு வந்தான. அதனால் அவனது நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்திருந்தன. பார்வதி, மாணிக்கத்தின் தலையைத் தன் மடியில் சாய்த்து வியர்வைத் துளிகளைத் தனது முந்தானையால் ஒற்றி எடுத்தாள். அந்தச் சுகத்தில் மாணிக்கம் தன்னை மறந்திருந்தான்.

காட்டினுள்ளேயிருந்து பறவைகள் இனிமையாகக் கீதமெழுப்பின. விலங்குகளின் விதம்விதமான ஒலிகளும் இடையிடையே கேட்டுக்கொண்டிருந்தன. இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டுயானை யொன்று பக்கத்துக் கமத்தில் சேதம் விளைவித்ததாகப் பலரும் பேசிக்கொண்டார்கள். அதைக் கேட்ட பார்வதிக்குக் கலக்கமாக இருந்தது. ஒரு வேளை கந்தசாமியின் தோட்டத்துககும் அந்த யானை வந்துவிடுமோ என அவள் பயந்தாள்.

அந்த யானை வந்தால் அதனைத் தூக்கி வேலிக்கு வெளியே ஒரே வீச்சில் வீசி எறியப் போவதாகக் கூறிச் சிரித்தான் மாணிக்கம். அவன் கூறியதைப் பார்வதியும் இரசித்துச் சிரித்தாள்.

பார்வதிக்கு தாய் தந்தையரைப் பிரிந்து வந்தபோது ஏற்பட்டிருந்த பயமும் கலக்கமும் இப்போது ஓரளவு அற்றுப் போயிருந்தன. ஆரம்பத்தில் தாய் தந்தையரின் நினைவுகள் அடிக்கடி வந்து அவளைக் கலக்கிய வண்ணம் இருந்தன. தான் மாணிக்கத்தோடு வந்ததினால் ஊரிலே என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருக்குமோ என நினைத்த அவளது உள்ளம் நடுங்கும். இப்போது மாணிக்கத்தின் அன்பும் ஆதரவும் அவளை ஊர் நினைவுகளிலிருந்து முற்றாக மறக்கச் செய்திருந்தன.

மாணிக்கத்திற்கும் ஆரம்பத்தில் இருந்த மனக்குழம்பங்கள் யாவும் இப்போது நீங்கியிருந்தன. கடந்த பத்து நாட்களில் அவன் பார்வதியினுடைய பெண்மையின் நளினங்களை எல்லாம் பூரணமாக அனுபவித்திருந்தான்.

மாணிக்கத்துடன் அனுபவித்த இன்பத்தினால் பார்வதியின் பெண்மை பூரணத்துவமடைந்திருந்தது. அவள் என்று மில்லாதவாறு இப்போது மலர்ச்சியுடன் இருந்தாள். எந்த நேரமும் மாணிக்கத்தின் அணைப்பிலேயே இருக்க வேண்டுமென அவளது உள்ளம் விரும்பியது. தாய் தந்தையரோடு கழித்த நாட்களைவிட மாணிகத்தோடு கூடிச் களிக்கும் நாட்கள் அவளை மெய்மறக்க செய்தன.

வெளியே படலையடியில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. கந்தசாமிதான் வந்திருக்க வேண்டுமென நினைத்து பார்வதியும் மாணிக்கமும் எழுந்திருந்தார்கள். வீட்டினுள்ளே இருந்த செங்மலம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விறாந்தையில் மாட்டியிருந்த லாந்தரின் திரியைத் தூண்டிவிட்டாள. வெளிச்சம் பளீரென எங்கும் பரவியது. காரிலிருந்து நால்வர் இறங்குவது நிலவு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. சிறிது நேரம் அந்த நால்வரும் காருக்குப் பக்கத்திலிருந்து தங்களுக்குள் ஏதோ பேசிகொண்டார்கள். பின்னர் இருவர்; மட்டும் வீட்டை நோக்கி வந்தார்கள். விளக்கு வெளிச்சம் அவர்கள்மேல் படிந்தபோது அங்கு வந்தவர்கள் துரைசிங்கம் முதலாளியும் செல்லபருந்தான் என்பதை மாணிக்கமும் பார்வதியம் தெரிந்து கொண்டார்கள்.

பார்வதியின் நெஞ்சு “திக் திக்’ கென அடித்துக்கொண்டது. பயத்தினால் அவளது உடல் நடுங்கியது.

மாணிக்கத்தின் மனமும் சிறிது பதட்டம் அடைந்தது. ஆனாலும் எதையும் சமாளிப்பதற்கு அவன் தன்னைத்; தயாராக்கிக் கொண்டான்.

”ஆர் நீங்கள்……? ஆரைப் பாக்க வேணும்? விட்டிலை அவர் இல்லை.. வெளியிலை போயிருக்கிறார்.“ செங்கமலந்தான் இப்படிக் கூறினாள்.

பார்வதி பதட்டமடைவதிலிருந்து மாணிக்கத்தின் முகமாற்றத்திலிருந்தும் வந்திருப்பவர்கள் மாணிக்கத்தையும் பார்வதியையும் தேடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்பதைச் செங்கமலம் ஊகித்துக் கொண்டாள்.

”நாங்கள் இவையளைத் தேடித்தான் வந்திருக்கிறோம்“ மாணிக்கமும் பார்வதியும் நின்ற பக்கம் கையைக் காட்டி கடுமையான குரலில் கூறினார் துரைசிங்கம் முதலாளி.
அப்போது செல்லப்பர் முன்னே வந்து , ”பிள்ளை….. வா பிள்ளை… வீட்டை போவம் “ எனப் பார்வதியைப் பார்த்துக் கூறினார்.

”அப்பு, நான் இனி அங்கே வரமாட்டன்“

”பிள்ளை நான் உன்னை ஓண்டும் செய்யமாட்டன.; அங்க அம்மா வருத்தத்திலை கிடக்கிறா….. அவதான் உன்னைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவ… வா பிள்ளை…. “ செல்லப்பர் அன்பான குரலில் கூறினார்.

”நான் வரமாட்டன ;அப்பு.“ பார்வதி ஏனோ அழத்தொடங்கினாள்.

செல்லப்பர் பார்வதியின் அருகில் சென்று அவளது கைகளைப் பற்றி, வா பிள்ளை வந்து காரிலை ஏறு“ என அவளை இழுத்தார்.

”அப்பு என்ரை கையை விடுங்கள் . நான் வரமாட்டனெண்டால் வரமாட்டன் “ என அழுது கொண்டு செல்லப்பர் பிடித்திருந்த கையை விலக்க முயன்றாள பார்வதி.

செல்லப்பருக்கு இப்போது கோபம் பொங்கியது.

”வாடி நாயே “ என அதட்டியபடி அவளைத் தன் இரு கைகளாளும் வாரித் தூக்கிக் காருக்குக் கொண்டு செல்லமுயன்றார்.

பார்வதி கைகளையும் கால்களையும் உதறி ”ஐயோ அப்பு என்னை விடுங்கோ“ எனக் கதறி அவரது கையைக் கடித்துத் திமிறி , பிடியிலிருந்து விலக முயன்றாள்.
மாணிக்கம், செல்லப்பரின் முன்பக்கமாக வந்து அவரைத் தடுத்து நிறுத்தி;னான. அப்போது துரைசிங்கம் முதலாளி கழுத்தைப் பிடித்துப் பலமாகத் தள்ளினார். ஒருகணம் நிலை தடுமாறிய மாணிக்கம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு துரைசிங்கம் முதலாளியின் மேல் பாய்ந்தான். செங்கமலம் ”ஐயோ“ என அலறியபடி ஓடிவந்து செல்லப்பரைப் பிடித்து இழுத்து அவரைப் போகவிடாது தடுத்தாள்.
”டேய் வாருங்கோடா ,இங்கை இவனை அடிச்சு முறியுங்கோடா“ என பலத்த சத்தமாகக் கூறினாh துரைசிங்கம் முதலாளி.

காரின் அருகில் நின்றவர்கள் திடுமென அங்கு வந்தார்கள். ஒருவனது கையில் துவக்கும் மற்றவனது கையில் ஒரு பலமான இரும்புத் துண்டும் காணப்பட்டன. ஒருவன் ஒடிவந்த வேகத்தில் பாய்ந்து துவக்குப் பிடியினால் மாணிக்கத்தின் பிடரியில் பலமாக அடித்தான். மற்றவன் இரும்புத் துண்டினால் மாணிக்கத்தின் காலில் அடித்தான் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வதி ”ஐயோ அவரை ஒண்டும் செய்யாதையுங்கோ…… ஒண்டும் செய்யாதையுங்கோ…. என அலறினாள்.
செல்லப்பரைத் தடுத்து நின்ற செங்கமலத்தை துரைசிங்கம் முதலாளி ஒரு பக்கம் இழுத்து நிலத்திலே தள்ளி;னாh.; ”ஐயோ…….. ஐயோ……. “ எனச் செங்கமலம் பலமாகக் கத்தினாள். பார்வதியை வாரித் தூக்கிய செல்லப்பர் விரைந்து சென்று காரின் பின்பக்கத்தில் ஏற்றி அவள் வெளியில் பாய்ந்து விடாமல் அமுக்கிப் பிடித்துக்கொண்டாh.; பார்வதியால் எதுவும் செய்யமுடியவில்லை.

செங்கமலத்தின் அலறலும், பார்வதியின் அழுகையும் அந்தப் பிரதேசத்தில் பலமாக ஒலித்தன. மயக்கமுற்று இரத்த வெள்ளத்தில் சாய்ந்திருந்த மாணிக்கத்தைப் புரட்டித் தள்ளிவிட்டு ஓடிவந்து எல்லோரும் காருக்குள் ஏறிக்கொண்டார்கள்.

மறுகணம் கார் உறுமலுடன் வேகமாகக் கிளம்பியது.

கை கால்களை அடித்துப் பலத்த சத்ததுடன் அழுதவண்ணம் இருந்த பார்வதியை செல்லப்பர் அமுக்கிப் பிடித்தபோது வேறொருவன் அவளது கைகளையும் கால்களையும் வரிந்து கடடினான். இப்போது பார்வதியால் அசைக்கக்கூட முடியவில்லை. செல்லப்பர் அவளது வாய்க்குள் தனது சால்வையை திணித்துவிட்டார். பார்வதிக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.

”முதலாளி, நான் அடிச்ச அடியிலை மண்டை பிளந்து போச்சு. இதுவரையிலை அவன்ரை உயிர் போயிருக்கும் என கையில் துவக்கு வைத்திருந்தவன் கூறுவது பார்வதியின் காதிலும் விழுந்தது.

பார்வதியின் இதயத் துடிப்பு ஒருகணம் நின்று துடித்தது. மறுகணம் அவள் மயக்கமுற்றுச் சாய்ந்தாள்.

வேகமாக ஓட்டி வந்த காரை துரைசிங்கம் முதலாளி ஓரிடத்தில் நிறுத்தினார். காரிலிருந்து இருவர் இறங்கினர்.

”முதலாளி நாங்கள் பிறகு ஆறுதலாய் உங்களை வந்து சந்திக்கிறம் “எனக் கூறி அந்த இருவரும் தரைசிங்கம் முதலாளியிடம் விடைபெற்றுக் கொண்டார்கள்.

செல்லப்பருக்கு அவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு வெறுப்பாக இருந்தது. எப்படியிருந்த போதிலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அவர்கள் மாணிக்கனை அடித்திருக்கக் கூடாது என அவர் எண்ணினார்.

மீண்டும் கார் வேகமாகப் புறப்பட்பது. செல்லப்பரும் துரைசிங்கம் முதலாளியும் ஒருவரோடு ஒருவர் கதைக்கவில்லை. பார்வதி மயக்க நிலையிலேயே இருந்தாள். இரவின் நிசப்தத்தினூடே செல்லப்பரின் வீட்டை நோக்கி கார் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

26

இரவின் நிசப்பதத்தை கிழித்துக் கொண்டு எங்கோ சாமக்கோழி கூவியது. அன்னம்மாவும் சின்னத்தங்கமும் வெளி விறாந்தையில் இருந்து செல்லப்பரினதும் துரைசிங்கம் முதலாளியினதும் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். நேரஞ் செல்லச்செல்ல அவர்களின் மனதில்கலக்கம் அதிக மாகியது. பார்வதியை கூட்டிவரச் சென்ற இடத்திலே ஏதும் அசம்பாவிதங்கள் நடந்திருக்குமோ என எண்ணி அவர்கள் பயந்தார்கள்.

வெகு நேரத்தில் பின் படலையடியில் கார் வந்து நிற்கும் சத்தங் கேட்டது சின்னத்தங்கமும் அன்னம்மாவும் அவசர அவசரமாக எழந்து படலையடிக்குச் சென்றார்கள்.

பார்வதிக்கு மயக்கம் இப்போது தெளிந்திருந்தது. செல்லப்பர் காரை விட்டு இறங்கியதும் பார்வதியையும் இறங்கும்படி கூறினார், பார்வதியின் முகம் அழுதழுது வீங்கி இருந்தது. அவளது உடலெல்லாம் வலி எடுத்தது. அவள் எதுவுமே பேசாது மெதுவாகக் காரிலிருந்து இறங்கினாள்.

துரைசிங்கம் முதலாளி அவர்கள் இறங்கியதும் ”செல்லப்பர் நேரமாகுது நான் வாறன் : நாளைக்கு எல்லாம் ஆறுதலாய்க் கதைப்பம் “ எனக் கூறிவிட்டு புறப்பட்டார்.

சின்னத்தங்கம் பார்வதியை கட்டிப்பிடித்துக்கொண்டு பெரிதாக அழத்தொடங்கினாள், செல்லப்பருக்கு அதைப்பார்த்தபோது எரிச்சலாக இருந்தது. பார்வதியும் விம்மத் தொடங்கினாள்.

”ஏனடி , இரண்டு பேரும் அழுகிறியள். நான் செத்தாப் பிறகு கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வையுங்கோடி“ செல்லப்பர் எரிச்சலுடன் கூறினார்.

படலையடியில் நிக்காமல் எல்லோரும் வாருங்கோ வீட்டுக்குப் போவம்“ எனக் கூறி அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் அன்னம்மா.

செல்லப்பர் சார்மனைக் கதிரையில் போய் தொப்பென்று உட்கார்ந்து கொண்டார், அவரது உள்ளம் நிம்மதியற்றுத் தத்தளித்துக் கொண்டிருந்தது.

சின்னத்தங்கத்தின் அழுகை ஒருவாறு ஒய்ந்திருந்தது.பார்வதி மட்டும் அழுத வண்ணம் இருந்தாள்.

”என்ன தம்பி ஒரு மாதிரியிருக்கிறாய்.? போன இடத்திலை ஏதேன் கரச்சலோ?“ எனத் தயங்கிய படியே அன்னம்மா செல்லப்பரிடம் கேட்டாள்.

”எல்லாம் இவள் ஆட்டக்காரியாலை வந்து கரச்சல்தான் “ பல்லை நெருடிக்கொண்டு பார்வதியை முறைத்துக்பார்த்தார் செல்லப்பர்.

ஏன் தம்பி கோவிக்கிறாய், கொஞ்சுமு; விளக்கமாய்ச் சொல்லன் “ என வேண்டினாள் அன்னம்மா.

உவள் …உந்தச்சனியன் ..நான் கூப்பிட வரமாட்ன் எண்டு சொல்லி அடம் பிடிக்கதொடங்கிவிட்டாள். உவளுக்கு அந்தக் கீழ்சாதிக்காரன் அவ்வளவு பெரிசாப்போச்சு“ இப்படிக் கூறியபோது செல்லப்பருக்கு ஆத்திரத்தினால் உடல் நடுங்கியது. கோபவேசத்துடன் எழுந்த செல்லப்பர் பார்வதியின், கோபாவேசத்துடன் எழுந்த செல்லப்பர் பார்வாதியின் பக்கம் பாய்ந்து சென்று ”சீ… நாயே… உனக்கு அவ்வளவு தமிர் பிடிச்சிட்டோடி“ எனக் கூறி அவளைக் காலால் எட்டி உதைத்தார்.

பார்வதி நிலைதடுமாறி நிலத்திலே சாய்ந்தாள்.

அன்னம்மா பதறிப்போறிபோய் ”உனக்கென்ன தம்பி பயித்தியம் பிடிச்சிருக்கோ “ எனக் கூறியபடி செல்லப்பின் கையைப் பிடித்து அவர் மேலும் பார்வதியை எதுவும் செய்து விடாதபடி தடுத்தாள்.

”நீ சும்மா இரக்கா, உன்கொண்டும் தெரியாது உவளை… துண்டு துண்டாய் வெட்டினால்தான் என்ர ஆத்திரத்திரம் தீரும் ·“ செல்லப்பர் பார்வதியை உதைப்பதற்காக மீண்டும் காலை ஓங்கினார்.

ஓவென பெரிதாக அழுதுகொண்டு சின்னத்தங்கம் ஓடிவந்து செல்லப்பரின் கால்களைக் கட்டிக் கொண்டான்.

”எல்லாம் இந்த ஆட்டக்காரியாலை வந்ததுதான் “ எனக்கூறிய செல்ல்பப் சின்னத்தங்கத்தைக் காலால் எத்தித் தள்ளினார்.

சின்னத்தங்கம் சிறது தூரத்திலே போய் விழுந்தாள்.

”தம்பி இதுசக்கோ போய் பார்வதியைக் கூட்டியந்தனி ஆத்திரப்படுத்தி பிரயோசனமில்லை, நீ இப்ப கொஞ்சம் அமைதியாய் இரு “ அன்னம்மா செல்லப்பரைச் சமாதானம் படுத்தினாள்.

”அக்கா நான் கூப்பிட உவள் வரமாட்டன் எண்டு சொல்லி ஆட்டம் போட்டவள் . உவள் அப்பிடி அடம்பிடிச்சதிலை மாணிக்கணுக்கு உசார் வந்து அவன் எங்களை எதிர்க்க தொடங்கிவிட்டான். அவனை அடிச்சு முறிச்சுப்போட்டுத்தான் நாங்கள் இவளைக் கூட்டியந்தனாங்கள், இனி என்னென்ன கரச்சல் வரப்போகுதோ தெரியாது “ செல்லப்பர் மீண்டும் ஆத்திரத்துடன் பார்வதியை முறைத்து பார்த்தார்.

பார்வதி பயத்துடன் நடுங்கிக் கொண்டிரந்தாள்.

”சின்னத்தங்கம் நீ பிள்ளையைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளே போ“ எனக் கூறிய அன்னம்மா சின்னத்தங்கத்தையும் பார்வதியையும் வீட்டினுள்ளே அனுப்பி வைத்தாள்.
செல்லப்பர் தலையில் கைவைத்த வண்ணம் மீண்டும் கதிரையில் அமர்ந்து கொண்டார்.

இப்போது செல்லப்பருடன் கதை கொடுத்தால் திரும்பவம் அவருக்குக் கோபம் வந்து விடுமென நினைத்த அன்னம்மா ஒன்றம் பேசாது வீட்டினுள்ளே சென்றாள் .

”மாமி இந்த வீட்டிலை இனி என்னாலை இருக்க முடியாது“ அப்பு என்னை அடிச்சுக் கொண்டு போடுவர் “ பார்வதி அன்னம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு விம்மினாள்.

”நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை எனக் கூறிய அன்னம்மா பார்வதியின் முதுகை ஆதரவாக தடவினாள்.

”மாமி இனி நான் உயிரோடை இருக்கிறதிலை பிரயோசனமில்லை பார்வதி அழுகையை அடக்க முடியாமல் தேம்பினாள்.

அன்னம்மாவின் உள்ளம் பதைபதைத்தது. பார்வதி இப்போது இருக்கும் நிலையில் சில வளை தனது உயிரை மாய்த்துக் கொள்ளவும் என எண்ணி ள் கலக்க மடைந்தாள்.
பார்வதி நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை , உனக்கு கரச்சல் வராமல் பாக்கிறது என்ரை பொறுப்பு எனப் பார்வதிக்கு ஆறுதல் கூறினால் அன்னம்மா.

”அவர் கோவத்திலை இருக்கிறார் எனக்குப் பயமாயக் கிடக்கு. நீதான் மச்சால் அவரைச் சமாதனப் படுத்த வேணும் “ என அழுதுகொண்டே கூறினாள் சின்னத்தங்கம்.

”இப்ப நீங்கள் இரண்டு பேரும் கொஞ்சம் ஆறுதலாயக் படுத்திருங்கோ நான் தம்பியோடை கதைச்சுச் சமாபதானப்படு;ததிறன். எனக் கூறிய அன்னம்மா வெளியே வந்து செல்லப்பர் படுத்திருந்த சார்மனைக் கதிரையின் அருகெ அமர்ந்த , அவரோடு கதைக்கத் தொடங்கினாள்.

27

காலை நேரத்தில் ஐந்தாறு பேர்தான் வாசிகசாலைக்குப் பேப்பர் வாசிக்க வருவது வழக்கம். ஆனால் அன்று அதிகமானோர் வாசிகசாலையில் கூடியிருந்தனர். செல்லப்பரின் மகளை மீட்டு வந்த செய்தி நேரத்தில் ஊர்முழுவதும் காட்டுத்தீபோல் பரவியிருந்தது. வாசிகசாலைக்கு வந்தால் விபரம் அறியலாம் என்றெண்ணிப் பலர் அங்கு வந்திருந்தார்கள் . செய்தி அறிந்தவுடனேயே சின்னத்தம்பர் முதல் வேலையாகத் துரைசிங்கம் முதலாளியின் வீட்டுக்குப்போய் அவருடன் கதைத்து விட்டுத்தான் வாசிகசாலைக்கு வந்தார். துரைசிங்கம் முதலாளியிடம் தான் கேட்டறிந்த விஷயத்தை அங்கிருந்தவர்களுக்கு அவர் சுவைபடக் கூறிக்கொண்டிருந்தார். அவரைச்சுற்றி எல்லோரும் வட்டமாக அமர்ந்திருந்தனர்.

”என்னதான் இருந்தாலும் துரைசிங்கம் ஆள் ஒரு விண்ணன்தான். செல்லப்பற்றை மகளை எப்படியோ வீட்டை கொண்டு வந்து சேர்த்துப் போட்டார்தானே “ சின்னத்தம்பர் தன்னைச் சூழ்ந்தவர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கூறினார்.

”எப்பிடிச் சின்னத்தம்பர் அவையள் இருந்த இடத்தைத் துரைசிங்கம் கண்டு பிடிச்சவராம்?“ எனக்கேட்டார் அருகிலிருந்த கந்தையா.

”என்ன கந்தையா விசர்க் கேள்வி கேக்கிறாய்?….. அந்த ஆள் ஊரைத் திண்ட புலி. ஒவ்வொரு ஊரிலும் அவருக்கு ஆக்கள் இருக்கினந்தானே.“

”எந்த ஊரிலிருந்து பார்வதியைப் பிடிச்சுக்கொண்டு வந்தவையாம்?

”அதைமட்டும் என்னட்டைக் கேக்காதையுங்கோ… அதுகள் வெளியிலை வந்தால் வீண் கரச்சல்தான் வரும்.“

”அப்ப மாணிக்கன்ரை சங்கதி என்ன மாதிரி?“ ”அவனைத் துரைசிங்கம் சும்மா விட்டிட்டாரோ?“

”எங்களுக்கேன் உந்தக் கதை ? துரைசிங்கம் ஊருக்குள்ளையே அவனைச் சரிக்கட்ட வேணுமெண்டு கறுவிக்கொண்டு திரிஞ்சவர். இப்பிடியொரு சந்தர்ப்பம் கிடைச்சிருந்தால் சும்மாவோ விட்டிட்டு வந்திருப்பார்“ என்றார் சின்னத்தம்பர் சிரித்தபடி.

”என்ன சின்னத்தம்பர் நீ மறைச்சு மறைச்சுப் பேசிறாய் துரைசிங்கம் உன்னட்டை ஒண்டும் சொல்லேல்லையோ?“ எனக் கேட்டார் இதுவரை நேரமும் பேசாதிருந்த அம்பலவாணர்.

”அதுதாண் “ஐஸே’ எனக்கும் சந்தேகமாய்க் கிடக்கு. துரைசிங்கம் என்னட்டை ஒண்டும் விளக்கமாய்ச் சொல்லேல்லை. ஒரு வேளை மாணிக்கனைச் சரிக்கட்டிப் போட்டுத்தான் வந்தாரோ தெரியேல்லை“ என யோசனையுடன் கூறினார் சின்னத்தம்பர்.

”துரைசிங்கம் செய்தது சரியெண்டே நீ நினைக்கிறாய் சின்னத்தம்பர்?

இப்படித் திடீரெனக் கந்தையா கேட்டது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் கந்தையாவைத் திரும்பிப் சின்னத்தம்பர்.

”என்ன கந்தையா திடீரெண்டு உப்பிடிக் கதைக்கிறாய்? உன்ரை கதையைப் பாத்தால் துரைசிங்கம் ஏதோ பிழை செய்த மாதிரியெல்லோ கதைக்கிறாய்“

”அந்த ஆள் செய்தது முழுப்பிழைகாணும்“ என்றார் கந்தையா பக்கத்திலிருந்த மேசையில் குத்தியப்படி.

”அப்ப கந்தையா அண்ணை, நீயும் அவங்களுக்கெல்லாம் “சப்போட்’ பண்ணுறாய் “ என்றார் அம்பலவாணர் கிண்டலான குரலில்.

”நான் ஒண்டும் ‘சப்போட்’ பண்ணிக்கதேக்கேல்லை நீங்கள்தான் துரைசிங்கத்துக்குச் சார்பாய்க் கதைக்கிறியள்.“

”கந்தையா, இண்டைக்கு நாங்கள் மானம் மரியாதையோடை ஊரிலை இருக்கிறதுக்கு காரணம் அந்த மனிசன் துரைசிங்கந்தான். இல்லாட்டில் கீழ் சாதிக்காரன்கள் தலைக்கு மேலை ஏறிவிடுவினம். அந்த ஆள்தானே அவங்களை அடக்கி வைச்சிருக்கு“ என்றார் சின்னத்தம்பர்.

”நான் சொல்லுறது உங்கள் ஒருத்தருக்கும் விளங்கேல்லை … ஒரு கீழ்சாதிக்காரன் கூட்டிக்கொண்டுபோய் வைச்சிருந்த பெட்டையைத் திரும்பி வீட்டை கொணந்ததுதான் பிழையெண்டு சொல்லுறன்“ என்றார் கந்தையா சின்னத்தம்பரைப் பார்த்து.

”அப்ப கீழ்சாதியன்கள் எங்கடை பிள்ளையளைக் கலியாணம் முடிச்சு குடும்பம் நடத்தி, பிள்ளைகுட்டியளும் பெறுவாங்கள், எல்லாத்தையும் நாங்கள்; பாத்துக்கொண்டல்லோ இருக்கவேணும்“ என்றார் சின்னத்தம்பர் காரசாரமாக.

”நீ என்னப்பா விழல்கதை கதைக்கிறாய். அவங்கள் கொண்டுபோய் எச்சில் படுத்தினதை வீட்டுக்குள்ளை கொண்டுவந்து வைச்சிருக்கிறதுதான் சரியெண்டு நீசொல்லுறாய் போலை கிடக்கு“ என்றார் கந்தையா பலமான குரலில்.

” நீ தான் கந்தையா விசர்க்கதை கதைக்கிறாய். துரைசிங்கம் அண்ணை உப்பிடிச் செய்யாமலிருந்தால் நாளைக்கு உன்ரை வீட்டிலும் அவங்கள் நுழைஞ்சிடுவாங்கள் என்டதை நினைச்சுக்கொள், அவங்கள் ஒருத்தருக்கும் பயப்பிடமாட்டாங்கள்“ என்றார் சின்னத்தம்பர் கோபமாக.

”என்ரை வீட்டிலை உப்பிடியொண்டு நடந்தால் நான் அவையளைக் விட்டிடுவன். திரும்பவும் அடிவீட்டுக் குள்ளை கொண்டுவந்து வைக்கமாட்டன்.; நாளைக்கு உங்கடை வீட்டிலை நல்லது கெட்டது நடந்தால் செல்லபரும வருவார்தானே . கீழ்சாதிக்காரன் கூட்டிக்கொண்டு போன மகளைக் கொண்டு வநது வைச்சிருக்கிற செல்லப்பர், வரலா மெண்டால் ஒரு கீழ் சாதிக்காரனும் வரலாந்தானே…. “

கந்தையா … இப்படிக் கூறியதும் அங்கு ஓர் அசாதாரண மௌனம் நிலவியது. ”என்ன, ஏன் எல்லோரும் வாயடைச்சுப்போய் இருக்கிறியள?“;

”………“ ஒருவரும் பதில் பேசவில்லை.

”செல்லப்பர் இப்ப மகளை வீட்டிலை கொணந்து வைச்சிருக்கிறார்.; கொஞ்சக்காலம் போனால் அவளுக்குக் கலியாணமும் பேசிச் செய்து வைப்பர். நீங்கள் எல்லோரும் அந்தக் கலியாணத்தை நிண்டு நடத்தி வைப்பியள் போலை கிடக்கு“ என்றார் கந்தையா தொடர்ந்து.

அப்போதும் ஒருவரும் பேசவில்லை .

”என்ன அண்ணையவை கதைச்சுக்கொண்டு இருக்கிறியள். கடுதாசிக் கூட்டம் விளையாடேல்லையோ?“

எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். நடேசு சிரித்த படி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். கசங்கிக் கிழிந்து போயிருந்த அரைக் காற்சட்டைப்பைக்குள் கையை விட்டுத் துழாவி, கச்சான் கடலையொன்றை எடுத்து வாயில் வைத்துக் கடித்து, அதன் தோலை வெளியே துப்பிவிட்டு ஏதோ முணுமுணுத்தபடி கடலையை வாயில் போட்டுச் சப்பிக்கொண்டு வந்தவன், மடத்; திண்ணையில் போய் அமர்ந்து கொண்டு எல்லோரையும் பார்த்து விகற்பமின்றிச் சிரித்தான்.

”என்ன மச்சான் விசேஷம்?“ சின்னத்தம்பர் தான் கேட்டார்.

நடேசு அவரது கேள்விக்குப் பதில் சொல்லாது அம்பலவாணரின் பக்கந்திரும்பி, ”வாணரண்ணை , பார்வதி மச்சாள் வந்திட்hளெல்லோ, உனக்குத் தெரியாதே? “எனக் கேட்டான்.

தன்னிடம் நடேசு அப்படிக் கேட்டது அம்பலவாணருக்குச் சங்கடமாக இருநதது. ஆனாலும் சமாளித்துக் கொண்டார்.

”இல்லை மச்சான் எனக்குத் தெரியாது. எப்ப வந்தவ?

”இராத்திரித்தான் வந்தவவாம்.“

”இவ்வளவு நாளும் எங்கை போயிருந்தவ“

”முத்தையன் கட்டுக்கு“

”என்ன முத்தையன்கட்டுக்கோ? நடேசுவைப் பார்த்துக் கேட்டார்.

”அப்பிடியெண்டுதான் எங்கடை அம்மாவும் மாமியும் கதைச்சுக் கொண்டிருந்தவை.“
இப்போது அங்கிருந்தவர்களுக்கு செய்தியொன்று புதிதாகக் கிடைத்ததால் ,மேலும் விஷயம் அறிவதற்காக நடேசுவிடம் கதைகொடுத்தார்கள்.

”முத்தையன்கட்டிலையிருந்து எப்பிடி உன்ரை மச்சாள் வீட்டுக்கு வந்தவ?

”அது எப்பிடியெண்டு எனக்குத் தெரியாது அண்ணையவை.“

நடேசு இப்படிக் கூறியதும் அங்;கிருந்தவர்களுக்கு ஏமாறறமாயப்; போய்விட்டது.

”நடேசு நீ உன்ரை மச்சாளைப் போய்ப் பாக்கேல்லையோ? எனக்கேட்டார் கந்தையா.
ஏன் பாக்கேல்லை, இப்ப அவவைப் போய்ப் பாhத்திட்டுத்தான் இங்கைவாறன்.“

”நீ உன்ரை மச்சாளோடை கதைக்கேல்லையோ?“ எனக்கேட்டார் கந்தையா.

”ஏன் பாக்கேல்லை, இப்ப அவவைப் போய்ப் பாத்திட்டுத்தான் இங்கை வாறன்.“

”நீ உன்ரை மச்சாளோடை கதைக் கேல்லையோ?“ என்றார் சின்னத்தம்பர் சிரித்தபடி

”அவவுக்கு இப்ப பெரிய நடப்பு, ஒருதரோடையும் கதைக்கிறேல்லை. நெடுக நெடுக அறைக்குள்ளை போய் இரக்கிறா. நான் கதைகேட்ட பொழுதும் என்னொடை ஒண்டும் பேசேல்லை… ”ஏன் மச்சாள் என்னொடை கோவமோ“ எண்டு கேட்டன் . இல்லையெண்டு தலையை மட்டும் ஆட்டினா…. பதில் சொல்லே;லை“ எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்தான் நடேசு.

”என்ன நடேசு அவசரப் படுகிறாய்? கொஞ்சநேரம் இருந்து கதைச்சிட்டுப் போவன்“ என அவனைத் தடுத்தார்; அம்பலவாணர்.

”அண்ணையவை எனக்கு நேரமில்லை . நான் போகவேணும் உங்கை பிள்ளையார் கோயிலிலை ஒரு கலியாணமாம, கோயிலடியிலை நிறையக் கார் நிற்குது. நான் ஒருக்கா பெம்பிளையை பாக்கவேணும் “ எனக் கூறிய நடேசு அங்கிருந்தவர்களிடம் மேலும் கதைத்துக் கொண்டிராமல் அவ்விடத்தை விட்டகன்றான்.

வாசிகசாலையில் இருந்தவர்களும் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினார்.

28

சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்ட அந்தப் பயங்கர நிகழ்ச்சி செங்கமலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. அதிலிருந்து விடுபட அவளுக்குச் சிறிது நேரம் பிடித்தது. மாணிக்கத்தின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடிய படி இருந்தது. அவன் நினைவிழந்து கிடந்தான். செங்கமலத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மாணிக்கத்தின் மூக்கினருகே விரலை வைத்து மூச்சு வருகிறதா எனக்கவனித்தாள். சிறிதாக மூச்சு வந்துகொண்டிருந்தது.

சற்று முன்னர் அவள் போட்ட சத்தத்தைக் கேட்டு அயலிலுள்ள வர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். செங்கமலத்துக்கு நடந்ததை விளக்கிக் கூறினாள். மாணிக்கத்தை எல்லோருமாகத் தூக்கி ஒரு வாங்கில் படுக்கவைத்துவிட்டு ஈரத் துணியால் அவனது தலையில் கட்டுப்போட்டார்கள.; இரத்தம் வழிந்தோடுவதைக் தடுப்பதறகு அவர்கள் செய்த முயற்சி எதுவுமே பலனளிகவில்லை. மாணிக்கம் மயங்கிய நிலையிலே கிடந்தான்.

மாணிக்கத்தைஉடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் போல் அவர்களுக்கு தோன்றியது. ஒருவன் கார்பிடித்து வருதாகக் கூறிவிட்டு வீட்டு விறாந்தையில் வைக்கப்பட்டிருந்த கந்தசாமியின் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியிலே சென்றான். தனது கணவன் கந்தசாமி அந்த நேரத்தில் அங்கு இல்லாமல் மனம் பதறிய வண்ணம் இருந்தது.
சிறிது நேரத்தின் பின் மாணிக்கத்தைக் கொண்டு செல்வதற்கு கார் வந்து சேர்ந்தது. மாணிக்கத்தை அங்கிருந்தவர்களின் துணையோடு காரில் ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டாள் செங்;கமலம். மாணிக்கத்தின் உயிருக்கு எதுவும் நேரக்கூடாது மனம் பிரார்த்தித்துகொண்டிருந்தது. பார்வதியைப்; பற்றிய எண்ணமும் செங்கமலத்தைப் பெரிதும் வாட்டியது. பார்வதிக்கு என்ன நேர்நதிருககுமோ. அவளை என்ன செய்திருப்பார்களோ என்றெல்லாம் அவள் எண்ணிக் கலங்கினாள்.; ஆஸ்பத்திரியில் மாணிக்கத்தைச் சேர்க்கும்போது அவன் நினைவிழந்த நிலையிலேயே கிடந்தான்.

மாணிக்கம் யாரால் தாக்கப்பட்டானென ஆஸ்பத்திரியிலுள்ளவர்கள் விபரம் கேட்டபோது செங்கமலத்தால் எதுவுமே கூற முடியவில்லை. உண்மையில் யார் மாணிக்கத்தைத் தாக்கினார்கள் என்பது அவளுக்குத் தெரியவில்லை.

அவசர அவசரமாக மாணிக்கத்தைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவனைச் சிகிச்சைக்காக உள்ளே எடுத்துச் சென்றார்கள். மாணிகக்த்தின் நிலைமை மிகவும் மோசமாயிருக்கிறது என்பதை மட்டுந்தான் அவர்கள் செங்கமலத்திடம் கூறினார்கள்.
ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் செங்மலத்தையும் கூடவந்தவர்களையும் ஆஸ்பத்திரியின் உள்ளே அனுமதிக்க மறுத்து மறுநாட் காலையில் வந்து பார்க்கும்படி கூறிவிட்டார்கள்.
மாணிக்கத்தை அநாதரவாக ஆஸ்பத்திரியில் விட்டுச் செல்ல செங்கமலம் விரும்பவில்லை. ஆனாலும் வேறு வழியின்றி அவள் கூட வந்தவர்களோடு வீட்டிற்குப் புறப்பட்டாள.

செங்கமலம் வீட்டை அடைந்து வெகுநேரத்தின் பின்புதான் கந்தசாமி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். முத்தையன்கட்டுக்கு வரும் கடைசி பஸ்ஸையும் தவற விட்டுவிட்டு அவன் வெகு தூரம் நடந்து வீட்டுக்கு வந்ததால் காலதாமதமாகிவிட்டது. செங்கமலம் சகல விஷயங்களையும் அவனிடம் கூறினாள். அதைக் கேட்டபோது கந்தசாமி பதறிப்போனான்.மாணிக்கத்துக்கு ஏற்பட்ட நிலையை நினைத்தபோது அவனது கண்கள் கலங்கின. உடனே ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டுமென அவன் புறப்பட்டான். ஆனால் அந்;த நேரத்தில் மாணிக்கத்தைப் பார்க்க ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனக் கூறிச் செங்கமலம் அவனைத் தடுத்துவிட்டாள்.

அன்று இரவு முழுவதும் செங்கமலமும் கந்தசாமியும் நித்திரை கொள்வேயில்லை. செங்கமலம் கூறியதிலிருந்து செல்லப்பரும் துரைசிங்கமும் அவர்களுடைய கையாட்களுந் தான் மாணிக்கத்தைத் தாக்கியிருக்கிறார்கள் என்பதை கந்தசாமியால் ஊகிக்க முடிந்தது.

”இதெல்லாத்துக்கம் நான்தான் காரணம். என்னாலைதான் மாணிக்கம் பார்வதியை முத்தையனகட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தான். அவன்ரை உயிருக்கு ஏதேன் நடந்தால் அதுக்கு காரணம் நான்தான் என செங்கமலத்திடம் கூறிக் கலங்கிய வண்ணம் இருந்தான் கந்தசாமி.

நன்றாகப் பொழுது புலர்வதற்கு முன்பே செங்கலமும் கந்தசாமியும் ஆஸ்பத்தரிக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் அங்கு சென்றபோது ஆஸ்பத்திரில் கிடைத்த அதிர்ச்சியைக் கொடுத்தது, மாணிக்கத்தின் நிலைமை மோசடைந்திருந்ததினால் அவனை முல்லைத்தீவு பெரியாஸபத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் அவனுக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை என்றும் அறிந்தபோது கந்தசாமியின் நெஞ்சு விறைத்துப் போயிற்று. செங்கலத்தைக் கூட்டிக்கொண்டு முல்லைத்தீவு பெரியாஸ்பத்திரிக்கு புறப்பட்டான்.

29

கோவிந்தனும் பொன்னியும் பெரிதும் கலங்கிப் போயிருந்தனா. துரைசிங்கம் முதலாளி இன்னும் ஒரு கிழமைக்குள் குடியிருக்கும் காணியையும் தோட்டம் செய்யும் நிலத்தையும் விட்டுவிடவேண்டுமெனக் கூறியதிலிருந்து அவர்களுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. துரைசிங்கம் கமக்காறனிடம் சென்று கெஞ்சி மன்றாடியாவது இன்னும் சிறிது காலத்துக்குத் தவணை தரும்படி கேட்கலாமெனக் கோவிந்தன் யோசித்தான.; ஆனால் துரைசிங்கம் கமக்காறன் இப்போது இருக்கும் நிலையயில் தங்களுக்கு இரக்கம் காட்டமாட்டார் என்பதும் அவனக்குத் தெரிந்தது. எல்லாவற்றிக்கும்; மேலாக மாணிக்கம் எங்கே இருக்கிறான் என்ன ஆனான் என்ற விபரங்கள் எதுவும் தெரியாதது அவனுக்கும் பொன்னிக்கும் பெரிதும் கலக்கத்தைக் கொடுத்தது.

கோவிந்தனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. துரைசிங்கம் கமக்காறன் வந்து போனதிலிருந்து ஒரே யோசனையுடனும் கவலையுடனும் எந்த நேரமும் வீட்டிலேயே அடைந்து கிடந்தான்.

”என்ன மச்சான் யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய்?“ குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது, குட்டியன் அங்கே வந்திருப்பதைக் கவனித்தான் கோவிந்தன்.

”ஒண்டுமில்லை குட்டியன், இப்ப இருக்கிற நிலமையிலை எனக்கு விசர் வந்திடும் போலை கிடக்கு. இன்னும் ஒரு கிழமையிலை நாங்கள் தெருவிலை நிக்க வேண்டிவரும்.

”இல்லை மச்சான் நீ அப்பிடியொண்டும் யோசிக்hதை. நான் எல்லாத்துக்கும் துரைசிங்கம் கமக்காறனோடை பேசி ஒரு நல்லமுடிவு எடுத்துக் கொண்டுதான் இங்கை வந்திரக்கிறன்.

அப்போது வீட்டினுள்ளே அடுப்படியில் வேலையாய் இருந்த பொன்னி குட்டியனின் குரல் கேட்டு வெளியே வந்தாள்.

”என்ன தம்பி கமக்காறன் சொன்னவர்….?“

”அக்கா உனக்குச் சங்கதி தெரியாதோ? செல்லப்பர் கமக்காறன்ரை மேளைக் கூட்டிக்கொண்டு வந்திட்டினமாம்.“

”என்ன ..? எப்ப கூட்டியந்தவை ? எங்கையிருந்து கூட்டியந்தவை ? பொன்னி கேள்விமேல் கேள்வியாகக் கேட்டாள்.

”அதுதானக்கா எனக்கும் தெரியேல்லை. நான் இந்தச் சங்கதியைக் கௌவிப்பட்டவுடனே துரைசிங்கம் கமக்காறன்ரை வீட்டுக்குப்போய் கதைச்சுப் போட்டுத்தான் வாறன். அவர் ஒண்டும் சொல்லுறாரில்லை.

“சா, அப்பிடியொண்டும் இருக்காது . ஆனால் துரைசிங்கம் கமக்காறன் ஒண்டையும் எனக்குக் கொஞ்சம் யோசனையாயிருக்கு. எனச் சிந்தனையுடன் கூறினான்; குட்டியன்.
கமக்காறரவை மாணிக்கனைச் சும்மா விட்டிருக்கமாட்டினம் உயிரோடை தன்னும் விட்டு வைச்சிருப்பினமோ தெரியேல்லை“ எனப் பதறினான் கோவிந்தன்.

அதைக்கேட்ட பொன்னி அழத் தொடங்கிவிட்டாள்.

”நீங்கள் இரண்டும் பேரும் மனசைத் தளரவிடாதையுங்கோ. அப்பிடியொண்டும் நடந்திருக்காது“ என அவர்களுக்கு ஆறுதல் கூறினான் குட்டியன்.

”குட்டியன் எல்லாத்தையும் நீ விபரமாய்ச் சொல்லு? அரையும் குறையுமாய்ச் சொல்லி எங்களைக் கலங்க வைக்காதை எனப் படபடத்தான் கோவிந்தான்.

”செல்லப்பர் கமக்காறன் துரைசிங்கம் கமக்காறனோடை போய்த்தான் மேளைக் கூட்டியந்தவராம் நான் எவ்வளவோ கெஞ்சி மன்றாடிக் கேட்டுப்பாத்தன். அந்த விஷயம் உனக்குத் தேவையில்லையெண்டு கமக்காறன் சொல்லிப்போட்டார். மாணிக்கத்துக்கு ஏதேன் உயிருக்கு ஆபத்தோ எண்டு கூடக்கேட்டுப்பாத்தன். அவர் மாணிக்கனைத் தாங்கள் காணவேயில்லை எண்டு சொலலுறார்.

”அப்ப செல்லப்பர் கமக்காறனிட்டையாவது போய்க் கேட்டு வாவன் தம்பி“ என அழுத வண்ணம் கூறினாள் பொன்னி.

”என்னக்கா நீ கதைக்கிறதை அவற்றை மேளைத்தானே மாணி;க்கன் கூட்டிக்கொண்டு போனவன.; நான் எந்த முகத்தோடை போய் அவரோடை கதைக்கிறது“

”துரைசிங்கம் கமக்காறன் வேறையொண்டும் சொல்லேல்லையோ ? என யோசனையடன் கேட்டான் கோவிந்தன்.

”கொஞ்சக் காலத்துக்கு எண்டாலும் உங்களை இந்தக் காணியிலை இருக்கிறதுக்கும் , தோட்டம் செய்யிறதுககும் தவணை குடுக்கச் சொல்லி அவரிட்டைக் கோபம் வந்திட்டுது. தன்னை மண் அள்ளித் திட்டினவையை காணியிலை இருக்க விடுகிறதோ எண்டு கேக்கிறாh. நான் அவரைச் சமாதானப்படுத்த பெரிய கஷ்டமாயப் போச்சு. கடைசியிலை காலிலை விழுந்து கும்பிட்டன. அதுக்குப் பிறகுதான் அவற்றை கோபம் அடங்கிச்சுது. இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்களை இந்தக் காணியிலை இருக்கலாமெண்டு சொல்லி இருக்கிறாh.; என விபரமாகக் கூறினான் குட்டியன்.

”குட்டியன் இதிலை ஏதோ சூழ்ச்சி; இருக்கு? கமக்காறன் ஒண்டு சொன்னால் பிறகு ஆர் என்ன சொன்னாலும் மாத்தமாட்டார்;. அவற்றை குணம் எனக்குத் தெரியும். அவர் மாணிக்கனுககு ஏதோ செய்து போட்டுத்தான் இப்ப எங்களைக் காணியிலை குடியிருக்க தவணை குடுத்திருக்கிறார்“.

கோவிந்தன் கூறுவதும் சைக்கிள் மணியோசை கேட்டது. தட்டிப்படலையடியில் தந்திச் சேவகன் நின்று கொண்டிருந்தான்.

”கோவிந்தன் வீடு இதுதானே?“

கோவிந்தன் எழுந்து தந்திச் சேவகனருகில் சென்றான். அவனைத் தொடர்ந்து குட்டியனும பொன்னியும் சென்றார்கள்.

”அவசரத் தந்தி ஒண்டு வந்திருக்கு “ எனக் கூறிக் கொண்டு கோவிந்தனிடம் கையொப்பம் வாங்கினான் தந்திச்சேவகன்.

”எங்களுக்கு வாசிக்கத் தெரியாது? உந்தத் தந்தியை ஒருக்கா வாசிச்சுக்காட்டுங்கோ தம்பி“ எனப் பதட்டத்துடன் சொன்னான் கோவிந்தன்.

”மாணிக்கம் முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான். உடனே வரவும் “ கந்தசாமி.

தந்தியை வாசித்துக் கூறிய தந்திச் சேவகன், அதனைக் கோவிந்தனது கையில் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.

”என்ரை பிள்ளையை அன்னமார்தான் காப்பாத்த வேணும் “ பொன்னி பெரிதாக ஒப்பாரி வைத்து அழத்தொடங்கி விட்டாள்.

கோவிந்தனுக்கும், குட்டியனுக்கும் அதிர்ச்சியிலிருந்து விடுபட சிறிது நேரம் பிடித்தது. மாணிக்கத்துக்கு கமக்காறர்கள் தான் ஏதோ தீங்கு செய்து விட்டார்கள் என்பது இப்போது அவர்களுக்கு திட்டவட்மாகத் தெரிந்து விட்டது.

கந்தசாமி ஏன் தந்தி கொடுத்திருக்கிறான்? அவனுக்கு எப்படி மாணிக்கம் முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் இருப்பது தெரிய வந்தது? மாணிக்கத்தின் உயிருககு ஏதேன் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ?

எதற்கும் உடனே முல்லைத்தீவு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டுச் செல்வதுதான் சரியெனத் தீர்மாணித்தான் கோவிந்தன்.

”மச்சான் நீயும் அக்காவும் உடனே புறப்படுங்கோ.. நான் ஒருக்கா என்ரை வீட்டை போட்டுவாறன் . எல்லோருமாய் முல்லைத்தீவுக்குப் போவம் “ எனக் கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டான்.

முல்லைத்தீவு அரசினர் ஆஸபத்திரியில் அவசர சிகிச்சைப் பகுதியில் உள்ள பிரத்தியோக அறையொன்றில் மாணிக்கம் படுத்திருந்தான. அவனது உடலைச் சுற்றி எங்கும் போட்டிருந்தார்கள். கையில் ஊசியொன்று பொருத்தப்பட்டு அதன் மூலமாக அவனது உடலில் சிறிது சிறிதாக ஏதோ திரவம் ஏற்ற்பட்டுக் கொண்டிருந்தது. அவனைப் பார்ப்பதற்கோ அல்லது அவனுடன் கதைப்பதற்கோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

அதிகாலையில் அவனுக்கு நினைவு திரும்பி இருந்தது. அப்போது அவன் தன்னை இனம் தெரியாத நான்கு பேர் தாக்கிவிட்டுச் சென்றதாக வைத்தியர்களிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தான். பார்வதியைத் தன்னிடமிருந்;து அவர்கள் பிரித்து சென்ற விபரம் எதையும் அவன் அவர்களிம் கூறவில்லை.

ஆஸ்பத்திரி விறாந்தையில் வாங்கொன்றில் கந்தசாமியும் செங்கமலமும் கவலையே உருவாக அமர்ந்திருந்தனர். வைத்தியர்கள் கூறிய விபரங்கள் பெரிதும் அவர்களைக் கவலைக்குள்ளாக்கியிருந்தது. மாணிக்கத்தின் வலது கால் முறிந்து விட்டதென்றும் தலையில் பலமான அடி விழுந்ததினால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு அவனது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறதென்றும் அவன் பலமான அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறான் எனவும் அவர்கள் கூறினார்கள்.

மாணிக்கம் காலையில் தங்களுடன் சில வார்த்தைகள் பேசியதாகவும் தன்னை அடித்தவர்களை அவனுக்குத் தெரியவில்லை எனவும் வைத்தியர்கள் கூறியபோது கந்தசாமிக்கு பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது.

மாணிக்கம் காலையில் தன்னைத் தாக்கியவர்களை யாரெனத் தனக்குத் தெரியாதெனக் கூறவேண்டும் பார்வதியைக் கடத்திச் சென்ற விபரத்ததை ஏன் மாணிக்கம் அவர்களிடம் கூறவில்லை. ஒருவேளை அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியினால் மூளை தாக்கப்பட்டு எல்லாவற்றையும் மறந்துவிட்டானோ.

கந்தசாமி இப்போது பெரிதும் சோர்வடைந்திருந்தான். ஒவ்வொரு நிமிடமும் அவன் கோவிந்தனது வரவை எதிர்பார்த்த வண்ணம் இருந்தான்.

கோவிந்தனும், குட்டியனும், பொன்னியும் அன்று மாலைதான் ஆஸ்பத்திரியை வந்தடைந்தார்கள். அவர்களைக் கண்டதும்தான் கந்தசாமிக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. அவர்கள் அங்கு வந்தபோது காலந்தாழந்;து விட்டபடியால் ;ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள.; கந்தசாமி பெரும் சிரமப்பட்டு அங்குள்ளவர்களுக்கு நிலைமையையை விளக்கிய பின்புதான் அவர்களை ஐந்து நிமிட நேரம் மாணிக்கத்தைப் பார்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.

மாணிக்கம் கட்டிலில் படுத்திருந்த நிலைமையைப் பார்த்ததும் பொன்னி பெரிதாக ஓலமிட்டு அழத்தொடங்கிவிட்டாள. கோவிந்தனது நெஞ்சு விறைத்துப் போயிற்று. குட்டியனும் ஒருகணம் கலங்கிவிட்டான்.

மாணிக்கம் எதுவுமே பேசவில்லை எல்லோரையும் ஒருகணம் பார்த்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டான். அவனது முகத்தில் வேதனையின் சாயல் படர்ந்திருந்தது.

பொன்னி, மாணிக்கத்தின் அருகே சென்று அவனோடு கதைக்க முயன்றபோது வைத்தியசாலை ஊழியர்கள் அவளைத் தடுத்து எல்லோரையும் வெளியேறும்படி கூறிவிட்டார்கள. பொன்னியைத் தேற்றுவது குட்டியனுக்கும் கந்தசாமிக்கும் பெருஞ்சிரமமாய் போயிற்று. அவள் மாணிணக்கத்தின் அருகேயே தான் இருக்கவேண்டுமெனக் கூறி ஆஸ்பத்திரியை விட்டு வெளியேவர மறுத்துவிட்டாள். பெருஞ் சிரமப்பட்டு கந்தசாமி அவளை வெளியே கூட்டிவந்தான்;. இனி அங்கு இருப்பதில் பிரயோசனமில்லை எனத் தெரிந்த கந்ந்தசாமி மறுநாட்காலை வந்து மாணிக்கத்தைப் பார்க்கலாம் எனக்;கூறி எல்லோரையும் அழைத்துக்கொண்டு முத்தையன்கட்டுக்குப் புறப்பட்டான்.

30

பலவிதமான பிரச்சினைகள் துரைசிங்கம் முதலாளியின் மூளையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தன. செல்லப்பரின் மகள் பார்வதியை மாணிக்கத்திடமிருந்து மீட்டு வராவிடில் தனது மதிப்புக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமென நினைத்த அவர் காரியம் இப்போது விபரீதத்தில்முடிந்திருக்கிறது . மாணிக்கத்தின் திமிரை அடக்குவதறகுச் சென்றவர்கள் அவனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் அவனை அடிப்பார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை மாணிக்கத்தின் உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டால் அதனால் பலகரச்சல்கள் ஏற்படும் என்பதைத் துரைசிங்கம் முதலாளி இப்போது உணர்ந்து கொண்டார்.

அவர் பார்வதியை மீட்டு வந்ததைப் பற்றி பலரும் பல விதமான அபிப்பிராயங்கள் தெரிவித்தனர். பார்வதியை மீட்டுக்கொண்டு வந்திருக்கக் கூடாதென அவரிடம் நேரடியாகச் சிலர் கூறியிருந்தனர். ஒரு கீழ்ச்சாதிக்காரனோடு கூடிச் சென்றவளை மீட்டு வந்ததால் தமது சமூகத்துக்கே இழுக்கு ஏற்பட்டுவிட்டதெனப் பலர் கூறிக்கொண்டார்கள்.

பார்வதியை அழைத்து வந்து ஐந்து நாட்கள் கழிந்துவிட்டன. இந்த ஐந்து நாட்களும் அவர் கலங்கிய வண்ணம் இருந்தார். எந்த நேரமும் பொலிசார் தன்னைத்தேடி வரலாமென அவர் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்தது போல் எதுவுமே நடக்காதது அவருக்குச் சிறிது யோசனையாகவே இருந்தது.

மாணிக்கம் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான என்றும் அவனைப் பார்ப்பதற்காக கோவிந்தன், குட்டியன், பொன்னி முதலானோர் முல்லைத்தீவுககுச் சென்றதாகவும் அறிந்த பொழுது துரைசிங்கம் முதலாளியின் மனம் மேலும் கலக்க மடைந்தது.

செல்லப்பர் வேலைக்கு வராததினால் தாமதமாகியிருந்த வேலைகளை யெல்லாம் அவர் காலந்தாழ்த்தாது கவனிக்கவேண்டியிருந்தது. அதனால் அவர் செல்லப்பரை உடனே வேலைக்கு வரும்படி சொல்லியனுப்பி இருந்தார். செல்லப்பரும் மறுப்புக் கூறாது உடனே வந்து லொறியில் வேலை செய்யத்தொடங்கினார்.

இந்த வேளையில் தான் துரைசிங்கம் முதலாளியின் மகளுக்குத் திருமணம் பொருந்தி வந்திருந்தது. மாணிக்கத்தைத் தாக்கியதால் ஏற்படும் பிரச்சினைகள் தோன்றுமுன் தனது மகளின் திருமணத்தை எப்படியாவது செய்துமுடித்துவிட வேண்டும் என அவர் விரும்பினாh. மாப்பிள்ளை வீட்டார் பெருந்தொகையான சீதனம் கேட்டார்கள.; எப்படியாவது அவர்கள் கேட்டதைக் கொடுத்து மகளின் திருமணத்தை
முடித்துவிட வேண்டுமென் ;பதிலே அவரது எண்ணம் முழுவதும் லயித்திருந்தது. சீதனமாகத் தோட்டக் காணியையும் கோவிந்தன் குடியிருக்கும் காணியையும் கொடுப்தற்காக முடிவாயிற்று. ஆனால், மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பதினையாயிரம் ரூபா பணத்தைக் கொடுப்பதுதான் துரைசிங்கம் முதலாளிக்குப் பெரும் சிரமமாக இருந்தது.

அன்னமார் கோயிலிருக்கும் காணியை விற்று அந்தப் பணத்தைக் கொடுத்து விடலாமென அவரது சிந்தனை ஓடியது. ஆனால் அவர் நினைத்ததுபோல் அது சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஊரிலுள்ள ஒருவராவது அந்தக் காணியை வாங்க முன்வரவில்லை. கோயிலிருக்கும் காணியில் குடியிருக்கவோ அல்லது அதனை அழித்து கமம் செய்யவோ யாருமே விரும்பவில்லை. அந்தக் காணியில் அன்னமார் கோயில்கொண்டிருக்கும் ஒரே காரணத்தினால் ஊரிலுள்ளவர்கள் எல்லோருமே அதனை விலைக்கு வாங்கத் தயங்கினார்கள். அந்தக் காணிக்கு அடைமானமாக பணம் கொடுக்கவும் முன்வரவில்லை. கடைசியில் தனது சொந்த வீட்டை அடைமானம் வைத்துத்தான் துரைசிங்கம் முதலாளி பணத்தைப் பெறவேண்டியிருந்தது. அந்தப் பணம் மகளுக்குச் சீதனம் கொடுப்தற்குமட்டுமே போதக்கூடியதாக இருந்தது. திருமணச் செலவுககு எப்படிப் பணத்தைப் புரட்டுவது எனத் தெரியாமல் யோசித்தவண்ணம் இருந்தார் துரைசிங்கம் முதலாளி.

– தொடரும்…

– புதிய சுவடுகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *