பிரியமானவனே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2023
பார்வையிட்டோர்: 2,048 
 
 

மிகவும் சோர்வாக இருந்த மகன் அஷோக் கோபமாகவும் இருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டாள் மீனாட்சி.. 

ஆம் கழட்டி எறிந்த காலணிகள் மூலைக்கொன்று போய் விழுந்தன.. கார் கதவை படாரென அறைந்து சாத்தினான்..

அஷோக்..வாப்பா… என்ற தாயின் குரலை பொருட்படுத்தாமல் மாடி ஏறி தனது ரூமிற்கு செல்ல, மீனாட்சி பின் தொடர்ந்தாள்..

என்னப்பா ஆச்சி? ஏன் இவ்வளவு கோவமா இருக்க? ஆஃபீஸ்ல எதாவது பிரச்சனையா.. கீர்த்தி கால் பண்ணி பேசினாளா??

உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லணுமா இப்போ.. ஆபீஸ் பிரச்சனை சொன்னா புரியுமா உனக்கு.. எந்த நாயும் எங்கிட்ட பேசல. பேசவும் தேவையில்ல..

சரி காஃபி எடுத்துட்டு வரவா என்று ஆசையாய் தலை கோத வந்தவளின் கையை தட்டி விட்டான். 

என்ன தனியா இருக்க விடு. வெளிய போறியா என்று மூடிய கதவை திறந்து விட்டான்.. 

டேய் நான் என்ன சொல்லிட்டேன்..நான் உன் அம்மாடா..வா.. வந்து சாப்டு படு..

ஒரு மண்ணும் வேண்டாம்.. கெட் அவுட்.. 

கவிழ்ந்த முகத்துடன் வெளியே வந்தாள் மீனாட்சி..

மறுநாள் காலை.. 

அஷோக் எழுந்தான்..எப்பவும் கதவை தட்டி வரும் பெட் காஃபி இன்று இல்லை..மாடியில் இருந்து கீழே வந்தான்.. கதவு grill gate வெளியில் பூட்டப்பட்டிருந்தது..

மூலைக்கொன்றாய் கிடந்த செருப்புகளை மாட்டினான்..பைக்கை அம்மா வழக்கமாக செல்லும் கோயின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்..

அம்மா..அம்மா.. என்றான் தழுதழுத்த குரலில்.. 

மீனாட்சி திரும்பி்ப் பார்த்தாள்.. இரவு முழுதும் தூங்கவில்லை என்பதை கண்கள் நிரூபித்தன.. 

அஷோக்..ஏண்டா கண் கலங்கிருக்கு..காப்பித்தூள் காலியாயிடிச்சி. அதான் காஃபி தரல என்று சமாளித்தாள்.  உன்ன disturb பண்ண வேண்டாம்னு கோயிலுக்கு வரலாம்னுதான்..

தடாலென அம்மா மடியில் படுத்துக் கொண்டு சிறுபிள்ளை போல் அழுதான். சாரி..சாரி என்றவனை பார்த்து மீனாட்சி கேட்டாள்..

நீ எவ்வளோ சொன்னாலும் அம்மா நான் தாங்கிப்பேன்.. வாழ வந்த பொண்ண போய் கெட் அவுட் சொல்லலாமா.. நல்ல குடும்பம்னு நெனைச்சி தானே அவங்க பொண்ணு குடுத்திருக்காங்க.. உன்னை பத்தி அவங்க வீட்ல சொன்னா உனக்கும் எனக்கும் என்ன மரியாதை இருக்கும்..

அம்மா..சாரிமா.. புது G.M. எதுக்கெடுத்தாலும் எல்லாரையும் கெட் அவுட் கெட்அவுட்டுன்னு திட்றாரு. Performance சரியில்லைன்னு increment ல கை வெக்கறாருமா. உனக்கே தெரியும் நான் எவ்வளோ hard work பண்றேன்னு. அதுவும் இல்லாம.. கீர்த்தி இல்லாதது எனக்கு கோவம் கோவமா வருதுமா..

சரி கண்ண தொடச்சிக்கோ கெளம்பலாம்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..சம்மந்தியம்மா எனக்கு கால் பண்ணாங்க.. கீர்த்தி முழுகாம இருக்காளாம்..

ஹைய்யா.. நான் அப்பாவாகப் போறேன் என்று சந்தோஷத்தில் கோயில் என்றும் பாராமல் அம்மாவை அப்படியே தூக்கினான்.. 

ஹேய் படவா.. கீழே இறக்கு எனக்கு வெட்கமா இருக்கு..வீட்டுக்கு போய்ட்டு எதாவது ஸ்வீட் செஞ்சி எடுத்துகிட்டு அவள போய் பார்க்கலாம்..

டபுள் ஓக்கே என்பது போல குழந்தையை போல் தலையாட்டினான்..

கிளம்ப வீட்டின் கதவை பூட்ட.. சம்மந்தியும் கீர்த்தியும் ஆட்டோவில் உள்ளே நுழைய… 

வாங்க சம்மந்தி.. ஏன் கீர்த்தி ஆட்டோவிலேயே உட்க்கார்ந்திருக்கா..

கெட் அவுட்டுன்னு சொன்ன மாப்பிள்ளையே கூப்பிட்டால்தான் கீழே இறங்குவாளாம்..

இதை கேட்ட அஷோக் ஓடிப்போய் கீர்த்தியை கட்டிப்பிடித்து சாரி சொல்லிய படி ஆட்டோவில் இருந்தவளை அலேக்காக தூக்க.. டேய் டேய் கீழ இறக்கு அவளை.. இப்படி எல்லாம் தூக்கக் கூடாது இப்போ.. 

வாம்மா கீர்த்தி.. உள்ளவா. இப்பக்கூட இந்த செய்தி கேட்ட உடனே என்னையும் கோயில்ல இப்படித் தான் தூக்கினான்.. படவா..கோவம், சந்தோஷம் ரெண்டையுமே ஒழுங்கா காட்டத் தெரியாது அவனுக்கு.. ஆனா என் பிள்ளை ரொம்ப பிரியமானவன் தாம்மா.. உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்..புரியுதா..

சரியா சொன்னீங்க சம்மந்தி.

சாரி அத்தை என்றாள் கீர்த்தி மீனாட்சியிடம்..

சாரி அத்தை என்றான் அஷோக் சம்மந்தி அம்மாவிடம்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *