பால் வியாபாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 9,125 
 

அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன.

அந்த மாட்டிடம் இருந்து பால் கறந்து ஊருக்கெல்லாம் அளந்து கொடுத்து தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வது அவனது வாடிக்கை.

அப்படி வியாபாரம் செய்து வீட்டினை நல்ல வசதியாய் கட்டிக்கொண்டான்.

வசதி வந்தவுடன் பசுபதிக்கு பெண் தர அந்த ஊரில் உள்ளவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் பெண்ணை தர முன்வந்தார்கள். ஆனால் பசுபதிக்கு உள்ளுர் பெண்களை ஏனோ பிடிக்கவில்லை.

ஏனென்றால் அவன் பால் கறந்து வீடுவீடாய் கொடுக்கும் போது ! அம்மா! பால்காரன் வந்திருக்கேன்” என்று குரல் கொடுத்தால்…. உள்ளிருந்து…”அம்மா! பால்காரன் வந்திருக்கான்…. பாலை நீயே போய் வாங்கிக்கோ! வீட்டுக்காரம்மாவின் மகளின் குரலாய் அது இருக்கும்.

ஆதலால்… நம்மை பால்காரன் வந்திருக்கான் என்று ஏகவசனத்தில் பேசுவதால் நாளைக்கு திருமணமாகி வீட்டிற்கு வந்தாலும்… நம்மை பால்காரன் என்ற தோரணையிலே பார்ப்பார்கள். மரியாதை இருக்காது என்று வெளியூர் பெண்ணைப் பார்த்து திருமணமும் முடித்து கொண்டான்.

அந்த பெண் புத்திசாலி பெண்… திருமணமாகி வந்த பத்தாவது நாளே! பசுபதியின் குணங்களைப் படித்து விட்டது.

பால் கறந்து வீடுகளுக்கு விற்றாலும் தனது வீட்டிற்கு சிறிதளவே பாலே வைத்துக் கொள்வான். அந்தப் பால் கூட தேவையில்லை. விற்றால் ”காசு” தேறுமே என்று கணக்கு பார்த்தான்.

அதற்கு பசுபதியின் புத்திசாலி பெண் ”நம்ம வீட்டுக்குன்னு பால் கொஞ்சம் வைச்சாதான் என்ன?” என்ற கேள்வி எழுப்பினாள்.

அதெல்லாம் ஒனக்கு தெரியாது… இன்னைக்கு கொஞ்சம் பால் வையுன்னு சொல்வே..நாளைக்கு மொத்த பாலையும் நாமளே வைச்சுக்கலாம் சொல்வே” என்று மறுப்பு தெரிவித்து மனதுக்குள் ஆரம்பத்திலேயே இவன் பேச்சைக் கேட்டா…. ”ஊருக்குள்ளாற ”பொண்டாட்டிதாசன்”ன்னு பட்டம் கட்டிடுவாங்க என்று நினைத்துக் கொண்டான்.

அவளும் அந்தநேரத்திற்கு அமைதியாகி விட்டாள். சிறிது நாள் கழித்து…… பசுபதியின் மாமனார்… மாமியார்” தங்கள் பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க வருவதாக சேதி வந்தது.

அதைப் பார்த்த பசுபதியின் மனைவி கோமதி மகிழ்ச்சியில் மூழ்கினாள்.

பெற்றோர்கள் வந்தவுடன் அவர்களை உபசரித்து வரவேற்றனர். அவர்களுக்கு நல்ல விருந்து சமைத்து பரிமாற வேண்டுமென்று திட்டமிட்டு தடபுடலாக சமைத்தாள்.

விருந்துக்கு தேவையான காய்கறிகள் இனிப்பு வகைகள் எல்லாவற்றையும் வாங்கி விட்டாள். எல்லாம் வாங்கி விட்டோமா? என்று யோசிக்கும் போது ”அட! தயிர் இல்லையே! அப்பாவுக்கு தயிர்ன்னா ரொம்பவே பிடிக்குமே! அதுவும் பசுந்தயிர்ன்னா இன்னும் கொஞ்சம் சோறு கேட்டு சாப்பிடுவாரே” என்று நினைத்தாள்.

நினைத்தவுடன் ”இன்னாங்க! ஒங்க மாமியார் மாமானார் ரொம்ப நாள் கழித்து பார்க்க வந்திருக்காங்க. ஆதனால அவங்க திருப்தியா சாப்பிடறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். ஒரே ஒரு குறை. அது நம்ம வீட்டுல தயிர் இல்லாத துதான். அந்த தயிரை வாங்கிட்டு வந்திட்டுங்கின்னா… நீங்களும் அவங்க கூட சேர்ந்து சாப்பிடலாம்” என்றாள் கோமதி.

”அப்படியா! இதோ ஒரு அரைமணி நேரத்தில வாங்கி வந்திடறேன் என்று பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தயிர் வாங்க போனான்.

ஊருக்குள் கடைகளில் கேட்டான்.. கடைக்கார்ர்கள்..” தயிர் விற்று தீர்ந்து போச்சே” என்றார்கள். சரி எல்லா வீடுகளுக்கும் நாம்தானே பால் ஊற்றுகிறோம். வீடுகளில் கேட்டுப் பார்ப்போமே என்று ”அம்மா! நான் பால்காரன் வந்திருக்கேன் என்று குரல் கொடுத்தான்…. உள்ளிருந்து “அம்மா! காலைல வர்றவேண்டிய பால்காரன் மத்தியானம் வந்திருக்கான் என்ன்ன்னு நீயே போய் கேளு! என்றது ஒரு வயசுப் பெண்ணின் குரல்.

பெண்ணின் தாயார் அடியே நான் வேலையா இருக்கேன்! நீயே போய் என் ன்ன்னு கேளு” என்று சொல்ல வெளியே வந்தவள் ”இன்னா பால்கார்ரே என்ன வேணும் என்று கேட்டாள்.

” ஊரிலேயிருந்து மாமானார் மாமியார் வந்திருக்காங்க…. விருந்துக்கு ஏற்பாடு பண்ணிட்டோம்…. தயிர் மட்டும் இல்லே அதுதான் குறை அதனால கொஞ்சம் தயிர் கொடுத்தா நல்லா இருக்கும்” என்று கேட்டான்.

அதற்கு ”ஏன்யா ஊருக்கெல்லாம் பால் அளந்து கொடுக்குற… ஒன் வீட்டுல தயிருக்கு பாலை மிச்சம் வைச்சிக்க மாட்டியா! இந்த ஊரு பொண்ணு வேணாம்… எங்க ஊட்டு தயிர் மட்டும் வேணுமா” என்று சிலிப்பி கொண்டு உள்ளே போன அந்த பெண் பசுபதியை நேசித்தவள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *