“படுத்துக்க மட்டும் வசதி. பெத்துக்க வசதியில்லையா?” ரமா மெளனமானாள்.
ரமா- வித்யா, நெருங்கிய நண்பிகள். ரமா, காதல் திருமணமானவள்.
டாக்டரான வித்யாவிடமே, ரமா போய் நின்றாள். கன்சல்ட் செய்ய அல்ல..? அபார்ஷனுக்காக..!
ஒரு குழந்தைக்காக தவமா தவமிருக்காங்கடி..? முதல் பிள்ளையையே கலைக்கறேங்கற…?
”வேற டாக்டரையாவது ரெகமண்ட் செய் ப்ளீஸ்…”
ஒரு துளி பாசமில்லா பேசறியேடி..?
டாக்டர் வித்யா எரிந்தாள்.
ரமா சிரித்தாள்
”பக்கவத்துல சொல்றேன்..! காதல்னு நான் அவசரப்பட்டது தப்பு. தப்பான புருஷன்கிட்டே ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டா மகா தப்பு..! இப்ப கலைச்சா, ஒரு நிமிஷ வலி, பொறந்தா எப்பவும் வலி. புரியுதா..”
வித்யா விக்கித்தாள்.
– ச.பிரசன்னா (1-12-10)