பணக்கார சிநேகிதி

 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவசரமாய் டிபனுக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தேன். நேரத்துக்கு எல்லாம் முடிந்தால் தான் அவர் வீடு திரும்பியதும் கோயிலுக்குப் போகலாம்.

என் மகன் கண்ணனுக்கு இன்றைக்கு நான்கு முடிந்து ஐந்து வயதாகிறது.

இவருடைய சம்பளத்துக்குத் தகுந்த வீக்கமாய்க் குறைந்த விலையில் துணி எடுத்து எதிர்க் கடை விட்டல் ராவ் கைவண்ணத்தில் அவனுக்கு டிராயர் தைத்திருந்தேன்.

வாசலில் நின்று கொண்டு அப்பாவுக்காகக் காத்திருந்த கண்ணன், பெரிய குரலில் இரைந்தான்.

“அம்மா, லதா மாமி வந்திருக்காங்க!”

அவன் குரலைத் தொடர்ந்து ஒலித்தது லதாவின் குரல்.

“டேய்…. டேய்! என்ன மாமின்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? அழகா ஆண்டின்னு கூப்பிடேன்”

“சரி லதா மாமி!” – லதா சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

எப்படித்தான் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வருகிறாளோ? பிறந்த நாள் மட்டுமா? எங்களுடைய திருமண விழா! பண்டிகை நாட்கள்! எல்லா நாட்களிலும் தான்.

“கண்ணனுக்குப் பிறந்த நாள்” என்று நினைவுபடுத்த ஒரு செகரட்டரி போட்டிருப்பாள். அவளுக்கென்ன பெரிய பணக்காரி! மிலியனரான மில் முதலாளியின் மனைவி!

லதா கண்ணைப் பறிப்பது போல் தள தளவென்றிருந்தாள். அப்போது தான் டென்னிஸ் ஆடிவிட்டு வருகிறாள் போலும்! ரூஜ் போடாமலேயே மிகவும் சிவந்த கன்னங்கள். அவள் குடிக்கும் ஆப்பிள் ஜூஸ் நேரே கன்னங்களுக்கே போய் விட்டனவோ!

ஆனி ஃப்ரெஞ்சின் கைவண்ணத்தில் மிளிர்ந்த கால்கள். டைட்டாக அணிந்திருந்த வெள்ளை டென்னிஸ் உடை. கையில் மட்டையைச் சுழற்றிக் கொண்டு அவள் தானாய்ச் சமையலறைக்கும் வந்துவிட்டாள்

“அம்மா அம்மா… லதா மாமி எனக்குப் பிறந்த நாள் பரிசு கொடுத்தாளே!” – கண்ணனின் கையில் சின்னதாய் ஒரு பார்ஸல். அதன் மேல் குட்டியாய் ஒரு ரிப்பன் பூ! அவன் அதை அவசரமாய்த் திறக்க முயன்றான்.

எனக்கு ஆயாசமாய் வந்தது. எப்போதும் போல் சீப்பாய் ஒரு பரிசு கொணர்ந்திருப்பாள், பணக்காரச் சிநேகிதியாய் இருந்தால் என்ன? மனசு வந்து கை நிறையப் பணம் செலவழித்துக் குழந்தைக்குப் பரிசு கொடுத்தால் அவள் ஆஸ்தி கரைந்து விடுமா என்ன?

நான் நினைத்தது சரிதான்!

மிகச் சாதாரண ரெடிமேட் ஆடை!

இவளை யார் பரிசு கொடுக்கச் சொன்னார்கள்?

நான் அவளிடம் ஒன்றும் சொல்லாமல், காப்பியைக் கொடுத்தேன்.

அவள் சடசடவென்று பேசிவிட்டுப் போய் விட்டாள்.

அவள் அந்த மேனாட்டு இடதுபுற ஸ்டீயரிங் காரை ஓயிலாய் ஒடித்துக்கொண்டு ஓட்டியதைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

பணம் இருக்கும் இடத்தில் நல்ல மனம் இல்லையே!

நான் ஏழைதான்! அதைச் சுட்டிக் காட்டவே இப்படிச் செய்கிறாளோ? என் கல்யாணத்துக்கு ஒரு சின்ன வாழ்த்துக் கடிதம் தான் கொண்டு வந்தாள். கண்ணனின் முதல் ஆண்டு நிறைவுக்கும் எளியதாய், சீப்பாய் ஒரு பரிசு! எனக்கும் அவளுக்கும் எத்தன் நாள் – வருடப் பழக்கம். கல்லூரியில் பி. ஏ. படித்த நாட்களில் அவள் தான் “மிஸ் ப்ரின்னஸ்”. தினம் ஒரு காரில் வருவாள், தினம் ஒரு உடையில் வருவாள். டெனிம் ஜீன்ஸ், ஒரு நாள் வாயில் புடவை, ஒரு நாள் குட்டி ஸ்கர்ட், ஒரு நாள் மாக்ஸி என்று அவளைப் பார்க்க ஒரு கூட்டமே காத்திருக்கும். அதில் நான் மட்டும் என்ன ஒசத்தி? என்னை மட்டுமே அவன் சிநேகிதியாய் ஏற்றுக் கொண்டாள் என்று எத்தனை சக மாணவிகளுக்குப் பொறாமை?.

இருந்தாலும் இப்படி ஒரு பரிசு கொடுத்தாளே என்று எனக்குக் கோபம் ஆறவில்லை.

என் கணவர் வீடு திரும்பியபோது பொரித்து கொட்டினேன்.

அவர் எப்போதும் போல் மாறாத புன்னகையில் காட்சி தந்தார்.

“இதோ பார்! உன் சிநேகதி டென்னிஸ் மட்டையை இங்கேயே விட்டுட்டுப் போய் விட்டாள், நாளைக்கு இதைக் கொடுக்கிற சாக்கிலே நேரேயே கேட்டுடேன்.”

கேட்கத்தான் போறேன் மனத்துக்குள் சவால் விட்டுக் கொண்டேன்.

மறுநாள் இவர் ஆபீசுக்குப் போன உடனேயே கண்ணனைத் தூக்கிக் கொண்டு லதாவின் பங்களாவுக்குப் போனேன்.

அது என்ன பங்களாவா! ஏதோ அரண்மனை மாதிய இருந்தது. ஒவ்வொரு அறையிலிருந்தும் மூக்கை நீட்டிக் கொண்டிருத்த ஏர் கண்டிஷன் பெட்டிகள்.

வேலைக்கார முத்துவுக்கு என்னைத் தெரிவுமாதலால், “வாங்கம்மா உட்காரும் கம்மா!” என்று என்னை வரவேற்பறையில் உட்கார வைத்தான்.

மாடியிலிருந்து பில நிமிடங்களில் வனதேவதை மாதிரி இறங்கி வந்தாள் லதா.

“மாடிக்கு வாயேன் கீதா! என் ரூமுக்குப் போய் உட்கார்ந்து பேசலாம். எத்தனை நாள் கழிச்சி வந்திருக்கே. முத்து, எல்லாருக்கும் காப்பி கொண்டாயேன்!”

சுவாதீனமாய் என்னைத் தன் அறைக்கு அழைத்துப் போனாள் லதா.

என் மனம் அந்தக் கேள்வியைக் கேட்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.

அவள் கண்ணடி எதிரே உட்கார்ந்து தன் குட்டையான கூந்தலை பிரஷ் செய்து கொண்டே சொன்னாள்:

“நேத்திக்கு நானே அப்புறம் உங்க வீட்டுக்கு வரணும்னு இருந்தேன்.”

அவள் கை விரைவாய் பிரஷ் பண்ணியது.

“பாரேன் கீதா! உன் கிட்டே ஒரு விஷயம் சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டிருக்கேன்.சொல்லட்டுமா?”

இப்போது அவள் முகத்தில் மாக்ஸ்-ஃபேக் டரை ஒற்றிக் கொண்டிருந்தாள்.

என்ன சொல்லப் போகிறாள்?

“எனக்கு நெருங்கிய சிநேகிதி ஒருத்தி, பேரைச் சொல்ல மாட்டேன். எனக்கு மனகக்கு ரொம்பப் பிடிச்சவ, ஆனா பாவம் அவகிட்டே எங்களை மாதிரி பணம் கிடையாது. இல்லாட்டா என்ன? மனசு மட்டும் தங்கம். அவ வீட்டு ஃபங்க்ஷன் எல்லாத்துக்கும் நான் போவேன், பரிசுக் கொடுப்பேன், ஆனா சீப்பாத்தான் வாங்குவேன், ஏன் தெரியுமா? அதே மாதிரி என் வீட்டுக் கல்யாணத்துக்கும். பிறந்த நாளுக்கும் அவ வரனும், நான் ஏகப்பட்டதா பணத்தைக் கொட்டி அவ குழந்தைக்குத் தொட்டில்லும் அவளுக்குப் பட்டுப் புடவைன்னும் வாங்கித் தரலாம். ஆனா அதுவே நாளைக்கு எனக்குப் பரிசு கொடுக்கணும்னு அவளாலே அப்படிச் செலவழிக்க முடியுமா? லதா அவ்வளவு பெரிசாப் பரிசு கொடுத்தாளே நம்மாலே முடியலையேன்னு மனசு வருத்தப்படும், அல்லது கடன் வாங்கியாவது பரிசு கொடுக்கனும்னு தோணும். நான் என்சிநேகிதிக்கு நிறையக் கோபத்னதக் கொடுத்திருப்பேன், ஆனா அவளோட சினேகிதம் எனக்கு இல்லாது போகக் கூடாதுன்னுதான்…”

அவளை நான் மேலே பேச விடவில்லை..

“ஐ ஆம் ஸாரி லதா! உன்னைத் தப்பா நினைச்சதுக்கு என்னை மன்னிச்சுடு!”

என் கண்களில் நீர் நிறைந்தது.

“ஆமாம் கீதா! நேத்திக்கு என் டென்னிஸ் ராக்கெட்டை எடுக்க வந்தபோது நீ உன் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன், நான் உன் கல்யாணத்துக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் மட்டும் கொடுக்காமல், ஆயிரம் ரூபாய்க்குப் பரிசு கொடுத்து இருந்தால் நீயும் என் கல்யாணத்துக்கு ஆயிரம் ரூபாய்க்குப் பரிசு கொடுக்கனும்னு நினைக்க மாட்டியா? அதுதானே முறை! என்னோட பணக்கார சர்க்கிள் சிநேகிதர் களை விட உன் சிநேகிதத்தைத்தான் நான் ரொம்ப உயர்வாய் மதிக்கிறேன் கீதா!”

அவள் தான் எவ்வளவு உயர்ந்த சிநேகிதி!

- 19-10-1980 

தொடர்புடைய சிறுகதைகள்
பெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள். உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. அம்பயர் கைகள் இரண்டையுமே மேலே தூக்கி, 'அவுட்' கொடுக்க, ரசிகர்களின் கூச்சல் காதைப் பிளந்தது. காமிரா மெல்ல நகர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
என் அவசரத்துக்கு லாஸ் ஏஞ்சலீஸ் ‘ஃப்ரீ வே’ நகரவில்லை. 70 மைல் வேகத்தில் போக வேண்டிய பத்தாம் எண் ராஜபாட்டை நத்தையாக ஊர்ந்து, இன்னும் படுத்தியது. என் பிள்ளை அர்ஜுன் வழி மேல் விழி வைத்து எனக்காகக் காத்திருப்பான். அவனைவிட அவனைக் ...
மேலும் கதையை படிக்க...
டைனிங் அறையிலிருந்து ஏகப்பட்ட சத்தம். தட்டு 'ணங்'கென்று தலையைத் தொடும் ஒலி. அதைத் தொடர்ந்து பாமாவின் உச்சஸ்தாயி கத்தல். மாடியில் ஏதோ வேலையாய் இருந்த சீதா வேகமாய் கீழே இறங்கி வந்தாள். பாமா பத்ரகாளி போல் கத்த, அவள் எதிரில் ஒடுங்கிய பூனைக்குட்டியாய் நின்றிருந்தாள் ...
மேலும் கதையை படிக்க...
நாளைக்கு மதியம் பயணம். அதற்கு முன், வழக்கம் போல் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு, ‘பயணத்தை நல்லபடியாக நடத்திக் கொடப்பா!’ என்று வேண்டிக்கொண்டு வர வேண்டும். காரை ஓட்டியபடி அந்தத் தெருவுக்குள் நுழைந்தபோதே, சிலீரென்று மனசுக்குள் ஒரு தென்றல். ...
மேலும் கதையை படிக்க...
ஏற்காடு ஏரி! பனி காலமானதால் குளிரில் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்துக் கொண்டது. சீசனாக இல்லாத போதும் தமிழைத் தவிர அவ்வப்போது தெலுங்கும் இந்தியும் ஆங்கிலமும் காதில் விழுந்தது. ஜனார்த்தனன் கழுத்தை சுற்றியிருந்த ம·ப்ளரை இன்னும் இழுத்து விட்டுக் கொண்டார். கம்பளி குல்லாயைத் ...
மேலும் கதையை படிக்க...
சற்றே பெரிய சிறுகதை சின்ன தவறு-தான். செய்தது, திரு--வாளர் நீலகண்டன் சுப்ரமணியன். ஆனால், அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது. ஆறு டிஜிட் டாலர் சம்பளம் கொடுத்தும், அவனுடைய வக்கீ-லால் ஜெயிக்க முடியவில்லை. பத்து மாதங்களுக்கு முன்னால்... கலிபோர்னியாவில், பெரும் பணக்கார ஹாலிவுட் நட்சத்-திரங்கள் ...
மேலும் கதையை படிக்க...
'அருள் அமுதைப் பருக அம்மா அம்மா என்று...' மேடையின் நடுவே நின்று அபிநயம் செய்துகொண்டு இருக்கும் என் மேல் மஞ்சள் ஒளி வட்டம். என் வலது புறம் அமர்ந்து பாபநாசம் சிவனின் பாடல் வரியை எடுத்து நிரவி, மிக உருக்கமாகப் பாடுபவள் ...
மேலும் கதையை படிக்க...
வெள்ளிக் கிழமை மாலை. நியூயார்க் சப்வேயில் 5:40 ரயிலைப் பிடிக்கக் காத்திருந்தபோது, அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. ‘ஒயிட் லைஸ்!’ ஏதோ அமெச்சூர் குழுவின் ப்ளே- நாடகம். அதை முழுவதும் படிப்பதற்குள் ரயில் வந்துவிட்டது. அதிசய மாக உட்காரவும் இடம் கிடைத்துவிட்டது. நிம்மதியாக ...
மேலும் கதையை படிக்க...
மோனோ ஆக்டிங்
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மியூஸிக் அகாடமி திரை கீழே விழுந்த போது, அதுவரை அமைதியாய் இருந்த ஆடியன்ஸ் கூட்டம் பலமாய்க் கைதட்டியது. கௌரி மேடையை வீட்டுக் கீழே இறங்காமல் பணிவான கைகூப்பலுடன் தன் ...
மேலும் கதையை படிக்க...
அதையும் தாண்டி புனிதமானது
அர்ஜுன் S/O ராஜலட்சுமி
சிண்டரெல்லா கனவுகள்!
வேலி
வித்தியாசம்
ஒரு சின்ன தவறு!
ஆனால், அது காதல் இல்லை!
வெள்ளைப் பொய்கள்
மோனோ ஆக்டிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)