கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,269 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஐராங்கனி கமலா சொன்னதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள். எந்த வித சலனமும் இல்லாமல் தான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ராசசேகர னால் எப்படி அவ்வளவு பொறு மையாக தனக்கு புத்திமதியும் சொல்ல முடிந்தது என்பதை நினைத்தபோது அவளுக்கு வினோதமாகவும் இருந்தது. மனதிலுள்ளே தன்மீதே எரிச்ச லும் ஊர்வதினை அவள் உணர்ந்தாள்.

தொலைபேசி மணி அடித் தது. எடுத்துபோது எந்தத் தொடர்பு மில்லாமல் ஒருவன் அடிக்குரலில் பேசினான். இன் னும் எரிச்சல் மிளகாய்த் தூளாய் நெஞ்செங்கும் கொட் டிற்று. கோபத்தோடு தொலை பேசியை வைத்தாள். மீண்டும் தொலைபேசி நாகரிகமாக அனுங்கிற்று. கோபம் நாக்கு நுனியில் வார்த்தைகளால் சவுக்கைக் கட்டி விசிறிட முனைப் புற்றபோது மறுமுனை யில் ராசசேகரனின் கம்பீரமான குரல். அதிகாரமும் கனிவும் இழைந்திட்ட அழைப்பு.

“எனது அறைக்கு வரவும்…”

ஐராங்கனி எழுந்து பம்பரமானாள்.

“எனக்கு எல்லாவேலையிலும் ஒழுங்குதான் முக்கியம்… நிர்வாகப் பணி சம்பந்தமான எல்லாப் பொறுப்புமே எனது கைகளுக்குத்தான் தரப்பட்டுள்ளது. இங்கே கோப்பு முறைகள் ஒழுங்காயில்லை. இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி கொம்ப்யூட்டருக்குக் கொண்டு வர வேண்டும். உங்களுக்குக் கொம்ப்யூட்டர் அறிவு?…”

அவளது கண்களினூடாக அந்தக் கேள்வியை அவன் கேட்டபோது மன ஆழத்தில் குமிழிகளாய் பரவிற்று எரிச்சல். சட்டென்று சொன்னாள்:

“நான் முறைப்படி படித்தவள்…”

வார்த்தைகளிலே கமழ்ந்தது புன்னகை: “நல்லது…” “உங்கள் ஆங்கிலம் எப்படி?’

படித்த கொன்வென்ரின் பெயரைச் சொன்னாள்.

“இலங்கையிலே சிறந்த ஆங்கிலக் கல்வி அங்கேதான் கற்பிக்கப்படுகிறது என்பதை நான் அறிவேன். இதையிட்டு நான் மிகுந்த ஆனந்தமடைகிறேன்…”

மிகவும் செம்மையான அவனது ஆங்கில உச்சரிப்பு அவளுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று, அவளை அறியாமலே. எரிச்சலை முகத்திலிருந்து முற்றிலுமாய் உரித்தெடுத்துவிட்டு மௌனமாய் சலனமற்று அவனையே பார்த்துக் கொண்டிருந் தாள்.

பிறகு புதிய சில கோப்புகளை எடுத்தான்.

“ஒவ்வொரு கோப்பிற்கும் முதல் இரண்டு எழுத்தும் கம்பனியின் அடையாள எழுத்து, பிறகு குத்தாக ஒரு கோடு. அடுத்து என்ன பொருள் என்பது பற்றிய அடையாள எண். கடைசியில் ஆங்கில ஒற்றை எழுத்தில் அதற்கு இடப்பட்ட தொடர் எண்…”

ஐராங்கனிக்கு எரிச்சல், நேற்றைய மழைபோல அடித்துப் பெய்தது. இது அரிச்சுவடிப் பாடம். எப்பவோ நாம் கற்றுக் கொண்டது என்ற சொற்கள் எகிறியே பாய்ந்து கரைந்துபோயின மனதினுள்ளே.

“அதெல்லாவற்றையும் விட சிங்களம் உட்பட நான்கு, பாஷைகள் எனக்கு நன்றாகத் தெரியும். நேற்று என்னைப் பற்றி நீங்கள் சிங்களத்தில் முணுமுணுத்த கேலியை உடனே நான் விளங்கிக் கொண்டேன். இனிமேல் அப்படிச் செய்யவே வேண்டாம். எதுவானாலும் நேருக்கு நேராகப் பேசிக்கொள்ள வேண்டும். சரியா?’

தன்னையறியாமலே தலையைக் குனிந்து கொண்டாள் ஐராங்கனி. மனம் குழம்பிப் போயிற்று.

“சரி… இனி நீங்கள் போகலாம்…”

அவனது முகத்தைப் பார்க்கவே சங்கடமாயிருந்தது. என்றாலும் அவளையறியாத எரிச்சலும் கோபமும் அவன் மீது அறுகம்புல்லினைப் போல கல்விப் படர்ந்தன.

நேற்று சூழலையே அதிர்ந்து பதறிக் கலங்கிட வைக்கும் வெறித்தனத்தோடு மழை பெய்தது. இடியும் மின்னலும் மழையினால் எகிறிக் குதித்தன. அலுவலகத்தின் ஒரு ஜன்னல் பூட்டப் படாதிருந்ததால், மழை குடம் குடமாய் உள்ளே தண்ணீரை எற்றி எற்றிக் கொட்டிற்று. பல கோப்புகள் நனைந்து, தண்ணீரில் மைக்கறைகள் மிதந்தன. இதையிட்டுத்தான் நிர்வாக இயக்குநராக அங்கு சென்றவாரம் நியமனம் பெற்று வந்திருந்த ராசசேகரன் ஐராங்கனியிடம் விசாரித்தான்.

அப்போது அங்கே கமலாவும் நின்றாள்.

அவன் கேட்டு முடிந்து கணப்பொழுது கரைந்து போகமுன்,

“வடக்கிலை இருந்து வந்து ஏழு நாளாக முதல் இவர் என்ன அதட்டு அதட்டுகிறார். நான் என்ன மழை பெய்தால் இந்த பைல்களுக்குப் பக்கத்திலை வந்து நின்று குடைபிடிக்க வேணுமென்றா இவர் நினைக்கிறார்?” என்று சிங்களத்தில் கமலாவைப் பார்த்துச் சொன்னாள் ஐராங்கனி.

அந்த வார்த்தைகள் கமலாவின் முகத்தில் அச்சத்தைக் கீறின. மௌனத்தில் வார்த்தைகள் பொறிகளாகத் தெறித்தன. வெளியே வந்த கணங்களில் மௌனம் நொருங்கிடப் பரபரப்போடு கேட்டாள் கமலா:

“ஈ.டிக்கு முன்னாலே கொஞ்சமும் யோசனையில்லாமல் இப்படி நீ பேசியது சரியா?”

புன்னகையோடு அவளைப் பார்த்தாள் ஐராங்கனி.

“நான் உனக்கு சிங்களத்தில்தானே சொன்னேன்…”

கமலா ஏளனமாக அவளைப் பார்த்தாள்:

“ஈ.டிக்கு சிங்களம் தெரியுமென்று முந்தாநாள் சோபனா எனக்குச் சொன்னாள்…”

தன்னையறியாமலே “அப்படியா?’ என்று அதிர்ந்தாள்

செ.யோகநாதன் 26

ஐராங்கனி. மறுகணமே சமாளித்துக் கொண்டாள். “என்னால் இதைச் சமாளிக்க முடியும்… இதைப்பற்றி ஈ.டியால் என்னை என்ன செய்ய முடியுமென்று பார்க்கலாமே…”

கமலா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

தனது இருக்கையில் உட்கார்ந்து கோப்பொன்றைப் படிப்பதுபோலப் பாவனை செய்தவாறே ஐராங்கனியை கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா.

ஐராங்கனி யோசனையிலே ஆழ்ந்து போயிருந்தாள். அடிக்கடி தன்னை அறியாமலே விரல்களால் நெற்றியை அடித்துவிட்டு, கோப்புக்களை அடுக்க முயன்று முடியாமல் வெறுமையாக எதிரே பார்வையினைச் செலுத்தினாள்.

கமலா நேரத்தைப் பார்த்தாள். ஒரு மணியாகப் பத்து நிமிஷங்களே இருந்தன.

விமலாவும் ஜானகியும் சாப்பாட்டுப் பெட்டியுடன் சாப்பிடும் அறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து வேறுசிலர்.

கமலா எழுந்து ஐராங்கனி இருந்த பக்கமாகச் சென்றாள், இப்போதும் ஐராங்கனி யோசனையில் தனித்திருந்தாள்.

அவளைப் பார்க்கவே பயமாக இருந்தது கமலாவுக்கு,

“ஐரா…”

கமலாவின் மென்மையான குரல் ஐராங்கனியின் தோளைத் தொட்டு அவள் பக்கமாகத்திருப்பிற்று. நிமிர்ந்தாள். கனிவும் பரிவுமாய்த் தொட்ட கண்களால் இதமடைந்தாள். மெல்லிய பெருமூச்சு இரகசியமாய் உதிர்ந்து கரைந்தது.

“என்ன ஒரே யோசனை….?”

கமலாவின் கேள்வி, சட்டென்று ஐராங்கனியின் முகத்திலே மாறுதலைக் கொண்டு வந்தது. எரிச்சலும் கோபமுமாகக் கண்கள் சிவந்தன.

“யோசனை ஒன்றுமில்லை. தலைவலி, தலையைப் பிளக்கிற மோசமான வலி… விடிய விடிய நித்திரையே இல்லை …”

நெற்றிப் பொருத்துக்களை, இரண்டு கைகளின் ஆட்காட்டி விரல்களாலும் இறுக்கி அழுத்தினாள் ஐராங்கனி. கண்களிலே நோவின் வலி துள்ளிக்குதித்தது. மூக்கை உறிஞ்சியவளின் இயல்பின்மை அழுகையாய்ப் பிரவகிக்கும் தன்மையை எட்டிற்று கமலா பரிவு மேலோங்க ஐராங்கனியின் தோளைத் தொட்டாள். கருணையோடு, “ஏதாவது தைலம் அல்லது மாத்திரை வாங்கித் தரட்டுமா?” என்றாள்.

மூக்கை உறிஞ்சியவாறே “வேண்டாம்…” என்றாள் ஐராங்கனி கரகரத்த குரலில். பிறகு தானே தொடர்ந்தாள்:

“எங்களின்ரை வீட்டுக்கு எதிரிலை ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருக்கிறது. அதில் பிள்ளைகள் விளையாடுகிறது. வருஷத்திலை ஐந்து நாட்களும் இல்லை. ஆனால் அரசியல் கட்சிக்கூட்டங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே நடைபெறும். சில கூட்டங்கள் விடிய விடிய நடக்கும். இந்த ஒரு கிழமையாக அதுதான் நடக்குது. நித்திரையே கொள்ள முடியவில்லை . திட்டு… விடிய விடியத்திட்டு…”

கமலா புன்னகையோடு அவளைப் பார்த்தாள்.

“காதுக்குள்ளை பஞ்சை அடைத்துக் கொண்டு நித்திரை கொள்ள வேண்டியதுதானே. எங்களின்ரை பக்கத்திலை கூட்டம் நடந்தால் நாங்கள் அதைத்தான் செய்வோம்…”

ஐராங்கனி நெற்றியைத் தடவிக் கொண்டாள்.

“என்ன தலைவலி இருந்தாலும் அவர்கள் சொல்லுறதிலை சில நியாயங்களும் இருப்பதாக எனக்குப்படுகிறது…”

கமலாவின் வட்டமுகத்தில் வினாக்கள் வடிவமிட்டன. ஐராங்கனியை உற்றுப் பார்த்தாள்.

“என்ன நியாயம்?’

“இலங்கைப் பிரச்சினை சகலவற்றுக்குமே தமிழர்தான் காரணம் என்று போன கிழமை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் பேசினார். சிங்கள இனம் உலகத்தில், இலங்கையிலை மட்டுந்தான் இருக்குது. அது சுதந்திரமாக பிரச்சினை ஏதும் இல்லாமல் இருக்க விரும்புகிறதிலை என்ன பிழை என்று அவர் கேட்டார். அதோடு இன்னொரு சம்பவத்தையும் அவர் சொன்னார். துட்டகைமுனு இளம் பராயத்திலை இருக்கிற போது ஒருநாள் கைகால்களை முடக்கிக் கொண்டு கிடந்தானாம். ஏன் அப்படி அவஸ்தைப்பட்டுக் கிடக்கிறாய் என்று யாரோ கேட்டபோது, ஒரு பக்கத்தில் தமிழர், மற்றப் பக்கத்தில் சமுத்திரம். இந்த நிலையில் என்னால் எப்படி நீட்டி நிமிர்ந்துபடுக்க முடியும் என்றானாம். இது இன்றைக்கும் அப்படியே பொருந்தி நிற்கிறதல்லவா? என்று அந்தப் பேராசிரியர் கேட்ட கேள்வி எனது ஞாபகத்துள் நிற்கிறது… அது சரியாகவும் படுகிறது”

கமலா மௌனமாக இருந்தாள், “என்ன நான் சொன்னது சரிதானே?”

தயக்கமாக ஐராங்கனியை ஏறிட்டாள் கமலா.

“அப்படியானால் இங்குள்ள தமிழர்களை என்ன செய்வது? இங்கேயே பிறந்து வளர்ந்த அவர்கள் எங்கே போவார்கள்?’

ஐராங்கனி அந்தக் கேள்விக்கு எந்தப் பதிலையுமே சொல்லாமல் விறுக்கென்று எழுந்தாள்: “சரி… நாங்கள் இனிச் சாப்பிடப் போகலாம்”

– சாப்பாட்டு அறையில் ஒருவரை ஒருவர் வியப்பாகவும், வேடிக்கையாகவும், மனநிறைவோடும் பார்த்தவாறே சென்றனர். கைகழுவுவதற்காக குழாயடிக்குச் சென்றவள், குழாய்க்கு மேலே சிங்களத்தில் எழுதி மாட்டப்பட்டிருந்த அட்டையைக் கண்டதும் தன்னையறியாத எரிச்சலுக்கு உள்ளானாள். கோபம் தீயெனத் தகித்தது கண்களில்.

அறிக்கையின் கீழே ராசசேகரன் ஒப்பமிட்டிருந்தான்.

“என்ன இந்த ஆள், எல்லாவற்றிலுமே அதிகாரம் பண்ணுகிறான். சாப்பிட்டு விட்டு இதே குழாயில் தானே கைகழுவி வாய் கொப்பளிப்போம். இனிமேல் இந்தக் குழாய்த் தொட்டியில் வாய் கொப்பளித்துத் துப்பக் கூடாதென்று கட்டளை போட்டிருக்கிறேனே. இப்படியாக எங்களை அடிமைபோல நடத்துகிற துணிவை எங்களினுடைய ஆட்கள்தானே இவனுக்கு கொடுத்திருக்கிறார்கள்..”

படபடவென்று பொரிந்து தள்ளினாள் ஐராங்கனி.

அவளருகே நின்ற சாதனா, அடைத்த குரலிலே சட்டென்று சொன்னாள்:

“தண்ணீர் எடுத்துக் குடிக்கிற குழாய்த் தொட்டியில் தட்டு அலம்புவதும் வாய் கொப்புளித்துத் துப்புவதும் அருவருப்பா கவும் சுகாதாரக் கேடாகவும் இருக்கிறது என்றுதானே சொல்லிக் கொண்டிருந்தோம். யாருமே கேட்கவில்லை. அது இப்போதுதான் நடந்திருப்பது சந்தோஷந்தானே.. ஆனால் ஐரா, நீ இப்படிப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது…”

கமலா சாதனாவை மரியாதையும் பெருமையும் கலந்திடப் பார்த்தாள். இதழோரத்தைப் புன்னகை செழுமையாகத் தொட்டிருந்தது.

ஐராங்கனி கையை உதறிக் கொண்டாள். பிறகு அலட்சியமும் சீற்றமும் தொனிக்க அவர்களைப் பார்த்தாள்:

“நீங்க ஏன் அந்தாளுக்காக இப்பிடி வால் பிடிக்கிறீங்கள்? உங்களுக்கு இது வெட்கமாக இல்லையோ?…”

கமலாவும் சாதனாவும் எதையும் பேச விரும்பவில்லை . அப்படிப் பேசினால் அது எங்கே போய் முடியுமென்பதை அவர்கள் மிகவும் தெளிவாகவே அறிந்திருந்தார்கள். எதிரே ஒன்றோடொன்று துள்ளி விளையாடிக் கொண்டிருந்த அணிற் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா.

தன் அருகே பதறியவாறு ஓடி வந்த ஐராங்கனியைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து போய் விட்டாள் கமலா. எதற்கும் கலங்கித் துவண்டிடாத ஐராங்கனியின் முகம் இப்படி சிதைந்து போனது கமலாவின் மனதுள் அக்கினித் திரவத்தை வீசிற்று.

“ஐரா.. என்ன… என்னது?”

ஐராங்கனியின் கைகளைப் பற்றியவாறு குலுங்கிக் குலுங்கி அழுதாள் ஐராங்கனி. நெஞ்சைச் சுரண்டி நொந்திடச் செய்தது அந்த விம்மல். பரிதாபமாகத் தோன்றினாள்.

அவளது கண்களைத் துடைத்தாள் கமலா. மென்மையாக முதுகை வருடினாள். கைகளில் ஐராங்கனியின் நெஞ்சத் துடிப்பு துல்லியமாக அடையாளம் காட்டிற்று.

“என்னடா என்ன நடந்தது?”- அவசரமாகக் கேட்டாள்.

வார்த்தைகள் சட்டென்று கொட்டின:

“அம்மா செத்துப் போயிட்டா…”

“என்ன?’

பிடரியில் யாரோ ஓங்கி அடித்தாற் போல அதிர்ந்து சில்லுச் சில்லாக உடைந்துபோனாள் கமலா. ஐராங்கனியின் ஒரே ஆதாரம் அவளது அன்னை குசுமலதா.

மகளைப் பற்றி எண்ணற்ற கனவுகளை நெஞ்சினுள்ளே குவியல் குவியலாக நிறைத்து வைத்திருந்த தாய். அன்பு நிறைந்த தாய். பல சந்தர்ப்பங்களில் ஐராங்கனியை குசுமலதா தேடி வந்த போது அவளோடு கதைத்திருக்கிறாள் கமலா. ஆரோக்கியம் நிறைந்த அந்தத் தாய்க்கு எப்படிச் சம்பவித்தது இந்த அகால மரணம்.

திகைத்துப் போய் பேச்சற்று நின்றாள் கமலா.

அவர்களை இப்போது பல யுவதிகள் சூழ்ந்து நின்றனர். கவலையான முகங்கள். கொஞ்சத் தூரம்தள்ளிராசசேகரனின் முகம் தெரிந்தது. குழுமி நின்றவர்கள் மெல்ல மெல்ல அங்கிருந்து நழுவத் தொடங்கினர்.

கமலாவை நோக்கினான் ராசசேகரன், சிங்களத்தில் கேட்டான்:

“என்ன நடந்தது?”

இரக்கம் கனிந்திருந்தது குரலில்.

கமலா சொன்னாள்.

சொல்லி முடியமுன் ராசசேகரன் கூறினான்:

“ஐராங்கனியை கம்பெனி வாகனம் ஒன்றில் உடனே வீட்டுக்கு கூட்டிச் செல்லுங்கள்… உங்களால் முடியுந்தானே…”

சில கணங்கள் பேசாமல் நின்றுவிட்டு அவன் கனிவான குரலிலே, “தாயை இழப்பதென்பது பெரிய துயரம். ஐராங்கனி, எமது அனுதாபங்கள். காலம்தான் – இத்தகைய வேதனைகளைத் தீர்த்து வைக்கக் கூடியது…” என்றான் சிங்களத்தில்.

கமலா ஐராங்கனியைப் பார்த்தாள்.

முகத்தை விரல்களால் மூடியபடி விம்மி விம்மி அழுதாள் ஐராங்கனி.

ராசசேகரன் அங்கிருந்து விறுவிறுவென்று உள்ளே போய்க் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தான்.

“கமலா, ஐராங்கனியின் வீட்டு மரணச் செலவுக்காக ‘எக்கவுண்டன்ற்’ ஐந்தாயிரம் ரூபா தருவார். வாங்குங்கள்…

அதோ வாகனமும் வருகிறது. புறப்படுங்கள்…”

வாகனத்தில் ஐராங்கனி எதையுமே பாராமல் யோசனையில் இருந்தாள். அவளைப் பார்த்த கமலாவின் மனதில் இரக்கம் உண்டாயிற்று. தன்னையறியாது பெருமூச்செறிந்தாள். பிறகு வெளியே பார்வையை விட்டாள் அவள்.

– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *