கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 11,051 
 
 

ப்ரியாவிற்கு நான் அத்தை முந்த வேண்டும். என் பெரியப்பா மகனின் ஒரே பெண் அவள். எங்கள் இருவருக்குமிடையே பெரிய வயது வித்தியாசமில்லாததால், அவ்வப்போது போட்டி எட்டிப் பார்க்கும்.

நான் வாங்கிய ராங்க்கை என் அம்மா சிலாகித்துக்கொண்டிருக்க, ப்ரியாவின் அம்மா வித்யா, அவள் டேபிள் டென்னிஸ்ஸில் வாங்கிய ஷீல்டைப் பற்றி பேசுவாள்.

வித்யா அண்ணி சென் பிகு, “”எதுக்கு நீ அவகிட்ட இதெல்லாம் சொல்லிட்டிருக்கே. அவ உடனே ப்ரியா பத்தி பீத்திக்கா” என்று அம்மாவிடம் கடுகடுப்பேன். ஆனால் ப்ரியாவை நேரில் பார்க்கும்போது இருவரும் சகஜமாகவே பழகுவோம். புத்தகங்கள் பரிமாறிக்கொள்வோம். வெகு ஜாக்கிரதையாக கொடுத்த புத்தகத்தை சில நாட்களுக்குள் திரும்பி வாங்கி விடுவோம்.

நான் கலைக்கல்லூரியில் சேர்ந்த அடுத்த வருடம் அவள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள். அண்ணனின் வேலை நிமித்தமாக அவளும் அண்ணியும் இங்கேயே இருக்க, ப்ரியா மட்டும் திருச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தாள். அவள் லீவில் வரும்போது எப்போதாவது ஒருநாள் வீட்டிற்கு வருவாள். “”நீ ஏன் வரலை?” என்பாள் என்னிடம். உடனே “”அடுத்த வாட்டி வரேன்” என்பேன் உண்மையாக. ஆனால் அடுத்த முறை லீவில் அவள் வரும்போது “”அவளே வரட்டுமே” என்று தோன்றும். அவளும் வரவில்லை.

அதற்கு அடுத்த வருடம் அவள் விடுமுûயில் வந்தபோது எதேச்சையாக வழியில் சந்தித்தோம். “”உனக்கு கல்யாணமாமே கங்கிராட்ஸ்” என்றாள். அந்த முறை அவளிடம் சந்தோஷமாக சிறிது நேரம் பேசினேன். “”கண்டிப்பாக வீட்டுக்கு வரேன். நீயும் வா,” என்பேன். ஆனால் கல்யாணச் சந்தடியில் நானும் போகவில்லை. அவளும் வராதது என் நிலையை நியாயப்படுத்தியது.

என் திருமணத்திற்கு வந்தவள், என் கணவரிடம் அதிக நேரம் பேசியதுபோல் பட்டது. அவரிடம் மட்டும் பேசி என்னை கண்டுகொள்ளாதது வேறு எரிச்சலூட்டியது. அவள் நகர்ந்ததும், “”சரியான அல்டாப்” என்று என் கணவரின் காதைக் கடித்தேன். அவர் மெல்லச் சிரித்தார். என் திருமணத்தில்தான் நான் அவளை கடைசியாகப் பார்த்தது. என் அம்மாவின் மூலம் அவ்வப்போது அவளைப் பற்றிய சேதிகள்தான் வந்தன.

“”ப்ரியாக்கு பெரிய வேலை கிடைச்சிருக்காம். எடுத்தவுடனேயே 12,000 ரூபாய் சம்பளமாம்.” “”ப்ரியாக்கு கல்யாணம் நிச்சயமாயிடுத்து தெரியுமா? கல்யாணத்தன்னிக்கு சாயங்காலமே அவளுக்கும் அவள் மாமியாருக்கும் ஏதோ சண்டை” இப்படி நியூஸ் வந்து கொண்டேயிருந்தது. அவள் கல்யாணத்தின்போது என் கணவர்கூட ஊரில்தான் இருந்தார். ஆனால் ஆபீஸில் ஏதோ முக்கிய வேலை என்றிருந்தார். கொஞ்சம் வற்புறுத்தியிருந்தால் அழைத்துப் போயிருப்பார். ஆனால் நான் வற்புறுத்தவில்லை. “”உங்க வேலைதாம்பா முக்கியம்,” என்று பெருந்தன்மையாக கூறிவிட்டேன். அம்மா, “”வந்தா அவரோட வா” என்று வேறு சொல்லிவிட்டது சௌகரியமாகயிருந்தது.

இப்பொழுது நினைத்துப் பார்த்தால் கூட ப்ரியாவின் திருமணத்தை ஏன் தவிர்த்தோம் என்று என்னால் சரியாக கூமுடியவில்லை. “என் கணவரை விட அவள் கணவன் அழகாயிருப்பானோ? என்னுதைவிட பெரிய இடமோ!’ போன் எண்ணங்கள்தான் காரணமோ?

எப்படியோ! “”உன் கிட்டேயிருந்து “நியூஸ் இல்லை. ஆனா ப்ரியா பாரு அதுக்குள்ளே மூணு மாசம்,” என்று அம்மா ஒரு நாள் ஃபோனில் சொன்னபோது, நான் அவள் திருமணத்திற்கு செல்லாதது நல்லதிற்கெனப்பட்டது.

ப்ரியா பிரசவத்திற்காக இங்கேயே வந்திருந்தாள். அப்போதுதான் ஒருமுறை வித்யா அண்ணியை கடைத் தெருவில் பார்த்தேன். இருவருமே நேருக்கு நேர் பார்த்துவிட்டதால் தவிர்க்க முடியாமல் பேசினோம். “”ப்ரியா எப்படியிருக்கா? கேட்டேன்னு சொல்லுங்க” என்று நானும், “”என்ன? வீட்டுப் பக்கமே வரக்கூடாதா?” என்று செல்லமாக வித்யா அண்ணி கடிந்து கொள்ளவும் மிக தோழமையுடன் பேசிக்கொண்டோம்.

அடுத்தநாள் அம்மா ஃபோன் பண்ணியபோதுதான் சொன்னாள், “”ப்ரியா திரும்பி புருஷன் வீட்டுக்கு போகப்போதில்லையாமே. அவளும் இவ திரும்பி வரவேண்டாம்னுட்டாளாமே.” வித்யா அதை சொன்னாளா !” என்றாள்.

“”என்னவாம் ?” என்பேன். “”ஏதோ அவாளுக்குள்ளே சண்டை. மாமியார்காரி புருஷனோட சேர்ந்தே வாழவிட மாட்டேங்கான்னு இவளுக்கு குû. புள்ளைய பிரிக்காள்னு அவா குத்தம் சொல்றா,” என்பார் .

இவர் வந்ததும் ஞாபகமாக இந்த நியூûஸச் சொன்னேன். “”யாரு ப்ரியா?” என்தும் சப்பென்னாகிவிட்டது.

ப்ரியாவுக்கு ஆண் குழந்தை பிந்த செய்தி கிடைத்த கொஞ்ச நாட்களிலேயே அம்மா திடுமென ஃபோன் செய்து ஒரு அதிர்ச்சித் தகவலைக் கொடுத்தாள். “”ப்ரியாவுக்கு ப்ரெயின் ட்யூமராண்டி. அப்போலோவுல சேர்த்திருக்கா” என்றாள். “என்னம்மா உளர்ற ‘ என்பேன். “”நிஜந்தாண்டி. அதுனாலதான் போலயிருக்கு மாமியார், கணவர்கிட்டேயெல்லாம் ஹிஸ்டெரிக்கலா கத்தியிருக்கா பாவம்” என்றாள்.

ப்ரியாவுக்கு ஆபரேஷன் நடந்த அன்று நான்குமுû அம்மாவுக்கு ஃபோன் செய்து விசாரித்தேன். “”ஆபரேஷன் முடிஞ்சிடுத்து. ஆனா டாக்டர் எல்லாரும் எப்ப வேண்ணா திரும்பி கட்டி முளைக்கலாம். இனிமே ஒண்ணும் சொல்துக்கில்லைன்னுட்டாளாம்” என்றாள். தொண்டையை துக்கம் அடைத்தது.

“”ஏன் என்னவோ போலிருக்கே?” என்று இரவு இவர் விசாரித்தபோது, “”ப்ரியாவுக்கு ட்யூமராம். எப்ப வேணும்னாலும் திரும்ப கட்டி வரலாமாம். இரண்டாவது முறை ஆபரேஷன் எவ்வளவு தூரம் சக்ஸஸ் ஆகும்ன்னு தெரியலைன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்கா,” என விவரம் சொன்னேன். “ஓ’ என்வர் நியூஸ் பார்க்க போய்விட்டார்.

ப்ரியா அடிக்கடி கண்முன் வந்து நின்றாள். அலட்டலாய்ச் சிரித்தாள். அவளைத் தொடவேண்டும்போல் இருந்தது.

ஒருநாள் ப்ரியாவைப் பார்த்துவிட்டு அம்மா திரும்பியவுடன் நான் ஃபோன் பேசினேன். “”ரொம்ப மோசமாயிருக்கா. இப்பவோ, அப்பவோ” என்றாள். “”நான் போய் ஒரு வாட்டி பார்க்கட்டுமாம்மா” என்றேன் தயங்கி. “”நீ பார்த்தா பயப்படுவே. தலையெல்லாம் வீங்கி போய், உடம்பு நாராப் போய் கண்ணு இடுங்கி… வேண்டாம்மா. கொடுமை. வித்யாவைப் பார்த்தாலும் கன்ராவியா இருக்கு.” என்றாள். கடைசிவரை நான் ப்ரியாவைப் போய் பார்க்கவில்லை. ஒருநாள் அவள் போய் சேர்ந்தாள் என் செய்தியும் வந்தது.

இப்பொழுதும் அடிக்கடி ப்ரியா மனக்கண்முன் தோன்றுகிாள். “நமக்குள்ளே ஒரு விரோதமும் இல்லியே. அப்படியும் நான் ஏன் காலம் தாழ்த்திட்டேன்?’ என்று நான் அவளைக் கேட்பேன். அலட்டலாய்ச் சிரிப்பாள். அவள் இதைப் படித்தால் எனக்கு ஆறுதலாயிருக்கும்.

– நவம்பர் 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *