துருவ சந்தி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 12,847 
 
 

வைதேஹி எங்கேடி போயிட்டேடூ எத்தனை நாழியா கூப்பிடிண்டு இருக்கேன், காதில விழறதா இல்லையாடூ என்னோட அவசரம் அவளுக்குப் புரியவேமாட்டேங்கறது.? என்ன பண்ண? ஆக வேண்டியதெல்லாம் காலா காலத்தில் ஆகியிருந்தா இப்படி இருக்கமாட்டா,,,,,ம்,,,,,,,(மனசுக்குள் கடைசி மு்ன்று வரிகளை முஹணுமுஹணுத்தாள் விசாலம்)

“என்னம்மா. ஏதோ தலை போகிற அவசரம் மாதிரிக் கூப்பாடு போடுறே? கடைக்குப் போகத்தானே?”

“அதென்ன அப்படிக் கேட்கறே? கடைக்குப் போகத்தானே என்று. இன்னும் பதினஞ்சு நாள்கூட இல்ல. வாங்கித் தைக்கக் குடுத்தாத்தானே அவன் கடைக்கு நாயாப் பேயா அலைஞ்சு வாங்க முடியும். நீ என்னடான்னா என்ன அவசரம்கறயே?”

வைதேஹிக்கு அம்மாவின் பேச்சு சற்று எரிச்சலைத் தந்தது. என்ன மனுஉக்ஷp இவள்? இப்பொழுதுதான் கல்யாணம்ஆகப்போகிற சின்னப்பெண் மாதிரி? என்ன ஒரு குஉக்ஷp? என்ன ஒரு துள்ளல்? கல்யாணமாகி முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகி விட்டன, ஆசைக்கொண்ஹணும் ஆஸ்திக்கொண்ஹணுமாக நானும.; தம்பி முகுந்தனும் தான், அவனும் பள்ளியிறுதி முடித்து பிட்ஸ் பிலானியில்; படிக்கப் போனவன் அப்படியே வேலை கிடைத்து அமொpக்காவில் செட்டில் ஆகி விட்டான். திருமணமாகி மு்ன்று வயதில் குழந்தையும் இருக்கிறது, அப்பாவும் ஃபோர்டில் ஜெனரல் மேனேஜராக இருந்து ஓய்வும் பெற்று விட்டார், வசதிக்குக் குறைவில்லை, எல்லாம் ஆண்டு அனுபவித்தாகி விட்டது, இன்னும் பதினெட்டு வயது டீன் ஏஜ; மாதிரியே அம்மா. ஏனோ இன்றுதான் புதிதாய்ப் பிறந்தவள் போல? சே…சே…கொஞ்சம் கூட லஜ;iஜயே இல்லாமல்….

அம்மாவின் குதூகலத்தையும் துள்ளலையும் தாங்கமுடியவில்லை, ஏன்? இத்தனைக்கும் பெற்ற தாய். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக அம்மாவுடன்தான் இருக்கிறேன், ஏன்? ஏன் இப்படி? மணிரத்னம் படம் போல ஒரே கேள்வியைப் பல முறை கேட்டும் விடையை வெளிக்கொணறுமளவுக்கு மனதில் துணிச்சல் இல்லையோ? அல்லது வெளிக்கொணர்ந்தால் தன்னைப் பற்றி மிகவும் வேறுவிதமாக நினைப்பார்களோ? இத்தனை வருடங்களாக திருமணத்தைப் பற்றியும் கணவன் மு்லமாக ஏற்படும் குடும்ப உறவு பற்றியும் தனக்கிருந்த அபிப்ராயங்களும் உலகத்தோடு ஒத்துப் போகாத மாற்றுக்கருத்துக்களும் கொண்டு திருமண பந்தத்தை ஒரு வியாபாரமாகவும் இல்லற சுகமென்பதை அங்கீகரிக்கப்பட்ட விபசாரமாகவும் எண்ணிக்கொண்டிருக்கும் என் போன்ற சுபாவமுடையவளுக்கு அம்மாவின் இந்தப் போக்கு சற்று அருவருப்பாகக் கூட இருக்கிறது. அதெப்படி கணவன் மனைவி தீடீரென்று காரசாரமாக ஒருவரை ஒருவர் ஏசுவதும் பேசுவதும் மனைவி கணவனை “ஆமா இத்தனை வருஉக்ஷமாக ஒங்குடும்பம் மொத்தத்துக்கும் உழைச்சுக் கொட்டினேனே அதுக்கு நீ என்ன செஞ்ச? உன்னைக் கட்டிகிட்டு ஒரு சுகத்தையும் காணல, சமையல்காரி மாதிரி சமைக்கிறதும். வேலைக்காரி மாதிரி பத்துத் தேய்ப்பதும். துணி தோய்ப்பதும். கக்கூஸ் கழுவுறதும். டோபி மாதிரி துணிகளுக்கு இஸ்திரி போடுறதும். குழந்தைகளை வளர்ப்பதும் இதெல்லாம் பத்தாதுன்னு அப்பப்ப நீங்க விரும்புற போதெல்லாம் நாங்க விரும்பாவிட்டாலும் இணங்குறதும் இவ்வளவு தியாகம் செஞ்சும் என்ன பிரயோசனம்? ஒரு நாளைக்காவது அன்பா “ஏம்மா தினமும் நீதானே எனக்கும் குழந்தைகளுக்கும் தேவையானதெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்யறே? மனசுல இன்னைக்கு நான் இந்தப் பலகாரம் சாப்பிடஹணும்னு நினைச்சாக் கூட அது அன்னைக்கு தட்டுல வந்து விழறது. இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நீ காலங்கார்த்தாலே எழுந்திரிக்க வேணாம். நான்தான் வீட்டு வேலையெல்லாம் செய்யப்போகிறேன். இப்படி என்னிக்கானம் ஒரு நாளானம் சொல்லியிருக்கேளா? இல்ல நினைச்சாவது பாத்திருக்கேளா?ஆண்கள் எல்லோருமே சுயநலவாதிகள், என்ன பெண்கள் எல்லாவற்றையும் வெளியே கொட்டிவிடுகிறேhம், அதனால் நாங்கள் கெட்ட பெயர் வாங்குகிறேhம், அதுமட்டுமா அடங்காப்பிடாரி. ராட்சசி. திமிர் பிடிச்சவ. யாரையும் மதிக்கவே மாட்டா இப்படியெல்லாம், ஆனா கமுக்கமா இருந்துகிட்டு “பாவம்டா அவன் பொண்டாட்டிகிட்ட என்ன பாடு படறான் தொpயுமா? அவன் படற வேதனை சொல்லி மாளாது என்று பரிதாபப்படுவார்கள், இதில் என்ன விசேஉக்ஷம்னா பொம்பளைங்கதான் அதிகமா ஃபீல் பண்ஹணுகிறார்கள், இந்த மாதிரி ஒரு Nழல்ல கல்யாணம் என்பது ஒரு கண்ணாமு்ச்சி விளையாட்டா போய்விட்டது, மனைவி கோபப்படும்போது கணவன் அடங்கிப் போவதும் மற்றெhரு சந்தர்பத்தில் கணவன் கோபப்பட்டு மனைவி அடங்குவதும் மிக இயல்பாகப் போய் விடுகிறதே

இப்படி எதிரெதிர் துருவங்களாக இருந்து கொண்டு எதுவுமே நடக்காத மாதிரி திட்டுவதும் கூடுவதும், எப்படி சாத்தியமாகிறது? அந்த காலத்தில்தான் சரி பெண்கள் படிக்கவுமில்லை, வீட்டை விட்டு வெளியே தனியாகச் செல்லவும் இல்லை, இப்பொழுது அப்படி அல்லவே எல்லாப் பெண்களுமே படித்திருக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள், குழந்தை வளர்ப்பில் ஆண்களை விடவும் பொறுப்பாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்கிறார்கள், ஆனாலும் நிலைமை மாறவில்லையே? இத்தனைக்கும் நீதிபதி பிரபா_தேவன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்தைப் பேஹணுவதற்காக ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு தொகையை நிர்ணயித்து அவர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஒரு வழக்கில் அருமையான நீதியும் வழங்கியிருக்கிறார்களே ஆனாலும் இந்த இந்தியப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? தன்னுடைய பலம் தொpயாமல் ஏன் இப்படித் தடுமாறுகிறார்கள், இவர்களுக்கெல்லாம் யார் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கப் போகிறார்கள்? அவள் சிந்தனையை அம்மாவின் குரல் கலைத்தது,்என்னடி வைதேஹி இன்னுமா கிளம்பல?
“அ,,,,,,,து,,,,,,,,,அது வந்து இதோ வந்துட்டேன்மா,,,,,,,

இருவரும் சென்னை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மேனகை சில்க்ஸுக்குக் கிளம்பினார்கள், காரில் ஏறி உட்கார்ந்ததுதான் தாமதம் , அம்மா ஆரம்பித்து விட்டாள், ்ஏண்டி வைதேஹி முகூர்த்தப் புடவை மாந்துளிர் கலாpல் எடுக்கலாமா? இல்லை எம்,எஸ் ப்ளுPவில் மரு்ன் பார்டரா? இல்லை நல்ல மஞ்சளில் அரக்கு பார்டரா? ஒண்ஹணும் புரியலையே? எது எனக்கு நன்னாயிருக்கும்?

வைதேஹிக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை, ்அம்மா இன்னும் கடைக்கே போகவில்லை அதற்குள் ஏம்மா அவசரப் படறே?

அதில்லேடி,,,, நாம முதல்ல ஒரு ஐடியா பண்ணி வச்சுண்டாதான் கடைக்காரன் சொல்ற கலர்ல கன்வின்ஸ் ஆகாம இருப்போம், நாம வாங்கப்போகுமுன்பே நாலு காம்பினேஉக்ஷன்ல திடமா போனாத்தான் அங்கே போய் செலக்ட் பண்ஹணும் போது ஈஸியாஇருக்கும்? சொல்லுடி இந்தக் காம்பினேஉக்ஷன் ஓ.கே தானே?

அவளுக்குச் சிரிப்புதான்வந்தது, சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள், முந்தாநாள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பழி சண்டை, அதுவும் உப்புப் பெறாத விஉக்ஷயத்திற்கு. உண்மைதான் முட்டைக்கோஸ் கறி பயத்தம்பருப்புடன் தேங்காய் பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி துருவிசேர்த்து வெள்ளை வெளேர் என்று பண்ணியிருந்தாள் அம்மா, முட்டைகோஸ் அதிகம் உப்பு தாங்காது என்பதால் அளவாக உப்பைப்போட்டுச் சமைப்பாள் , அம்மா சமைக்கும் முட்டைகோஸ் மிக மிக ஸ்பெஉக்ஷலானது, எல்லோருமே சிலாகித்துப் பேசுவார்கள், என்ன இருந்தாலும் சாலி மாமி பண்ற கோஸீக்கு ஈடாகுமா ? வெள்ளை வெளேரென்று தும்பை;பூவைப்போல ஏன் தும்பைப் பூ என்றால் நறுக்குவதிலும் அத்தனைநேர்த்தி, ஆனால் அப்பாவுக்கு அதை வெங்காயத்தோடு வதக்கி கொஞ்சம் மிளகாய்ப்பொடி போட்டு சற்றே காரமாகதேங்காய் இல்லாமல் பண்ணினால்தான் பிடிக்கும், அதில் சற்று உப்பும் குறைவாகவே இருக்க வேண்டும், அதனால்தான் உப்புப்பெறாத விஉக்ஷயமென்றேன்,, கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் இதை வைத்துக்கொண்டு ஒரு மகாபாரத யுத்தமே நடந்தது வீட்டில், கோஸிலிருந்து தொடங்கி கோயமுத்தூரில் இருந்த இப்பொழுது இல்லை மாமனார் வீட்டில் மறுவீடு போயிருந்த போது தனக்குப் பிடிக்காத பாணியில் என் பாட்டி சமைத்த முட்டைகோஸ் வரை நீண்டது, அதுமட்டுமா ஆமா நான் ஏற்கனவே பல முறை சொல்லியிருந்தும் அப்பொழுதுதான் கல்யாணமாகி இரண்டாம் முறை முதல் முறை கல்யாணம் முடிந்து கிரஉறப் பிரவேசத்திற்கு பாலும்பழமும் கொடுக்க) அப்பா மாமனார் வீடு சென்றிருக்கிறார், உங்கம்மா எனக்குப் பிடிக்காத வகையில் முட்டைக்கோஸ் கறி பண்ணி “மாப்பிள்ளை கறி நன்னாயிருக்கு இன்னும் கொஞ்சம் போடட்டுமா என்று உபசாரம் வேற,சே,,,சே,, எத்தனை முறை சகித்துக்கொண்டிருப்பேன், அம்மாவும் சளைத்தவளா என்ன,,,ஆமா உங்கம்மா யோக்யதை எனக்குத் தொpயாதா என்ன? தலை தீபாவளிக்குப் பட்டுபுடவைதான் எடுக்கஹணும் என்பதில்லை, எனக்கெல்லாம் என் மாமியார் வீட்டிலிருந்து எதுவுமே செய்ததில்லை, ஒரு குந்துமணி தங்கம் கூடப் போட்டதில்லை, ஆனாலும் நான் உனக்கு 250ரு்பாய்கள் தருகிறேன், அதற்குள் நல்ல சரிகை போட்ட புடவையாக எடுத்துக்கொள் என்றாரே. மறந்து விட முடியுமா என்ன? அதே வருஉக்ஷம் எங்கண்ணாவுக்கும்தான் தலைதீபாவளி என் அம்மா என் மன்னிக்கு 1000ரு்பாயில் பட்டுப்புடவை எடுத்துக் கொள், அப்படியே 100 200 கூடப்போனாலும் பரவாயில்லை, மனதுக்குப் பிடித்ததை வாங்கிக் கொள், ஏனென்றால் தலை தீபாவளி என்பது ஒருமுறைதான், எனக்கெல்லாம் எதுவும் கிடைக்கக் கொடுப்பினையில்லை, அதனால் நீ உன் மனதுக்குப் பிடிக்கிறாற்போல் நல்;ல புடவையாக வாங்கிக்கொள் என்றார், தனக்கு வாங்கினதோட சும்மா இருந்தாளா என் மன்னி. ஏன் சாலி ஏன் சரிகையே இல்லாமல் இந்த மாதிரி லைட் ரோஸ்ல செல்ப் பார்டர் வைத்த புடவை எடுத்திருக்கே நீ ஃபேர் ஆகத்தானே இருக்க டார்க் கலர்ல கான்ட்ராஸ்ட் பார்டர் போட்டு இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியாக எடுத்திருக்கலாம் இல்லையா என்று உசுப்பேத்தி வேறு விட்டாள், அவள் சிலை கருப்புதான் என்றாலும் சேலை முழுவதும் கட்டம் போட்ட புடவை அதுவும் மல்டிகலாpல் அதற்கு சாண் அளவு சரிகை வேறு, அவளுக்குச் சகிக்கலை, என்ன செய்வது? அழகா இருக்கறவாளுக்கு பகவான் அள்ளிக் கொடுக்கறான்,

ஐயையோ அம்மா ட்ரேக் மாறுகிறாளே? இது என் பாட்டியின் பாட்டியுடைய ப்ளு் ஜhக்கர் வைரத்தோடு வரை போகுமே? இவ்வளவு அக்கப்போர்களையும் எப்படித்தான் மு்ன்று தலைமுறைகளைத் தாண்டியும் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்களோ? சே,,,, என்ன கல்யாண வாழ்க்கை? எப்பப்பாரு அவர்கள் இதைச் செய்தார்கள் இவர்கள இதைச் செய்தார்கள் என்று இதில்அவ்வப்போது அந்தக்காலத்தில்தான் 5 வயதிலேயும் 7 வயதிலேயும் வாழைப்பழத்தையும் பட்சணத்தையும் கொடுத்துக் கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள், பெண் பொpயவளாகும் வரை பிறந்த வீட்டில் தான் இருப்பாள், பிறகு திரண்டு குளியல் முடித்து (மேளதாளத்தோடும்சீர்வரிசையோடும் புக்ககத்தில் கொண்டு விடுவார்கள், என் பெண் உனக்கு வாரிசுகளைப் பெற்றெடுக்கத் தயார் என்பது போல, நானெல்லாம் காலேஜ; படிச்சிண்டு இருக்கும்போது ஐயோ நான் தவறிட்டா கண்ணான குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? (அம்மாவுக்கு அடுத்து இரண்டு தங்கை ஒருதம்பி )மு்த்த குழந்தைகளுக்கு பாரமாக விட்டு விட்டுப் போயிடக்கூடாதே என்ற புலம்பலோடு கல்லு}ரிப் படிப்பை நிறுத்தி எனக்குக் கல்யாணம் செய்து வைத்து என் கோpயரையே கெடுத்து விட்டார்கள், ஒரு வகையில்பார்த்தா நம்ம வைதேஹி என்னை விட சந்தோஉக்ஷமாகத்தான் இருக்கிறாள் என்று தோன்றுகிறது, இரண்டு பட்டம் வாங்குனா நல்ல வேலை, நல்ல சம்பளம் எவ்வளவு இன்டிபெண்டன்டா இருக்கா, நீ ஏன் அதைப் பண்ண ஏன் இப்படி டிரஸ் பண்ணிக்கிற? இவ்வளவு விலை குடுத்து நாலு புடவை ஒரே நேரத்தில் வாங்கஹணுமா? மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் ஏன்போற? என்ன பண்ணினாலும் இருக்கிறதுதான் இருக்கும், இந்த மாதிரி நொச்சு நொச்சு கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியதில்லையல்லவா? இது மட்டுமா? அவளுக்குப் பிடித்ததைச் சுதந்திரமாகச் செய்யமுடிகிறதே. பாட்டுக் கேட்கிறாள், சினிமா. கோயில். அவ்வப்பொழுது அலுவலகத் தோழிகளுடன் சுற்றுலா செல்கிறாள், பாரதி ஆசைப்பட்ட பெண் சுதந்திரம் இதுதானோ?
கேட்ட வைதேஹிக்குப் புல்லாpக்கிறது, ஆஉறா அம்மாவா இப்படிப் பேசுகிறாள்,

ஏண்டி வந்த வரனையெல்லாம் ஏதோ ஒரு காரணம் காட்டி தட்டிக் கழித்துவருகிறாய், சில சமயங்களில் நீ உண்மையிலேயே பையனைப் பிடிக்காததினால் வேண்டாம் என்கிறாயா? இல்லை கல்யாணத்திலேயே உனக்கு விருப்பம் இல்லையா? என்பதே புரியவில்லை, பார்ப்பவர்கள் எல்லாம் ஏன் இன்னும் வைதேஹிக்குக் கல்யாணம் பண்ணலை? அந்த _ராமசந்திரமு்ர்த்தி மாதிரிதேடறேளா? அதற்கு அவசியமே இல்லை, ஏனென்றால் உங்கள் வைதேஹி அந்த சீதா போல ராமன டிபெண்ட் பண்ணியிருக்க வேண்டாம், படித்தவள், நல்ல உத்யோகத்தில் இருக்கிறாள், அவள் ஒரு ஃப்ரி பேர்ட் என்றெல்லாம் விமர்சனம் பண்ஹணுகிறார்கள், நீ என்னடான்னா எல்லாத்துக்கும் சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்?

தனக்குள்ளே க்ளுக் என்று சிரித்துக்கொண்டாள் வைதேஹி, அது மட்டுமல்ல, முந்தாநாள் முட்டைக்கோஸ் சண்டைக்கு அப்புறம் இன்னொருசுவாரஸ்யமும் நிகழ்ந்தது, சண்டைவந்த மதியம் ஞாயிற்றுக்கிழமை, நான் வங்கியின் ஏ,டி,எம்மிலிருந்து பணம் எடுக்கச் சென்றிருந்தேன், எப்படியும் அரைமணி நேரமாகும், எனவே அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுச் சென்றேன், ஆனால் நடப்பதற்குப்பதில் ஆட்டோவில் சென்றேன், அங்கு ஏ,டி,எம் வேலை செய்யவில்லை, உடனே அதே ஆட்டோவில் திரும்பிவிட்டேன், கதவு தாள் போடவில்லை, மெதுவாகத் திறந்துஉள்ளே நுழைந்தேன், அங்கே அப்பா அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தார், அம்மா அவரின் தலையைக்கோதியபடியே “ஏன்னா காலம்பற உங்களைதிட்டிடேன்னு கோபமா

சே சே அதெல்லாம் ஒன்றுமில்லை.

நீங்க என்னை மட்டும் திட்டியிருந்தாக்கூடப் பரவாயில்லை. எங்க பிறந்தவீட்டை இழுத்து எங்கம்மாவைப் பத்திப் பேசினதைத்தான் என்னால் தாங்க முடியல

அதென்னமோ தொpயல எனக்கு உங்க வீட்டைப் பத்திப் பேசலன்ன தூக்கமே வரமாட்டேங்குது. சொல்லிவிட்டுக் கண்ணடித்துச் சிரித்தார்,

எழுந்திருங்கோ,,,,,,,, இந்த மாதிரி கிண்டல்தான் என்னை இரிடேட் பண்ஹணுது,வேளா வேளைக்கு எல்லாம் பண்ணிப் போடறேன்ல அதான் ஐயாவுக்குக் கொலஸ்ட்ரால் தலைக்கு மேல ஏறிக்கிடக்கு!

“க்ளுக்” என்று சிரித்து விட்டேன், அச்சச்சோ,,,,,, மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதோ,,,ஏதோ எதிர்பார்த்தபடி அந்தக் காட்சியை அசை போட்டபடி மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தேன், கல்யாணம் என்பது என்ன,.?சடங்கா சம்ப்ரதாயமா? உடல் இன்பத்திற்காக இருவருக்குக் கொடுக்கின்ற அங்கீகாரமா? இருபது இருபத்தைந்து வருடங்கள் முன்பு வரை கணவன் மனைவி என்கிற கோட்பாடு சரியான ஒரு நேர்க்கோட்டில் தடம் பிறழாமல் சென்று வந்திருந்தது போல, அங்கங்கே பாதை மாறினாலும் உறவுகள் என்னும் டிராஃபிக் போலீஸ் அதை அவ்வப்போது ஒழுங்கு செய்தது, அதனால் பூசல்களும் சண்டைகளும் பாஸிங் கிளெவுஸ் போல் மறைந்து விட்டன, பெண் படித்து வேலைக்குச்; சென்றாலும் தான் ஒரு குடும்பத்தலைவி என்னுடைய பங்களிப்பும் பொறுப்பும் வீட்டை நடத்துவதில் மட்டுமல்லாமல் என் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவும்தான் என்ற நோக்கில் இருந்தது, இப்பொழுது என்னுடையது எனக்கு. என் தேவைகளே எனக்கு முக்கியம். நான் சம்பாம்பாதிப்பது என் தேவைகளை முதலில் பூர்த்திசெய்யவே பின்;புதான் எல்லாம் என்கிற மனோபாவம் வளர்ந்து கொண்டிருக்கிறது, எனவே எல்லாவற்றிலும் ஒரு சுயநலத்திரை. அதுஅவர்களை ஒரு இயந்திரத்தைப் போல ஆக்கி ஆசை என்னும் ரிமோட் கன்ட்ரோலால் இயக்குகிறது, வாழ்க்கையின் பருவங்கள் போல பொருளாதார அடிப்படையில் படிப்பு. வேலை.சொத்து. வங்கிச்சேமிப்பு திருமணம் திட்டமிடுதல்.குழந்தைபிறப்பு. அதன் வளர்ப்பு எதிர்காலம் என நீ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ண்ட ஐந்தாண்டுத்திட்டங்கள் என்று வாழ்க்கை கூறு போட்ட பட்ஜெட் ஆக மாறிவிட்டது, இதற்கு நடுவில் நாம் முழுமையாக வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற பிரக்ஞை யாருக்குமே இல்லை,

ஆமா சாலி எனக்கொரு ரகசியம் தொpஞ்சுக்கஹணும்?

அதென்ன ரகசியம்?

சொல்றேன். ;அதெப்படி நீ உன்திருமாங்கல்யச் சரடை எப்பொழுதுமே மஞ்சள் மசேலென்று நேற்றுதான் கட்டியது போல ப்ரெஉக்ஷ;உக்ஷhக வைத்துக்கொண்டிருக்கிறாய்? எப்படி முடிகிறது? 35 வருஉக்ஷமாக? ஏன்கேக்கறேன்ன இப்பல்லாம் கல்யாணம்ஆனவங்க யாரு ஆகாதவங்கயாருன்னு கண்டுபிடிக்கவே முடியல. அதோட யாருமே மஞ்சள் சரடு அணிவதில்லை, போட்டுக்கொண்டிருக்கும் செயின்லேயே கோர்த்துக்கொள்வார்கள் போல.,,,,,, அதான்,,,,

சரி நான் கேட்டதுக்கு பதில்?,அந்த மஞ்சள் சரடா இது? கேட்டு கிண்டலாகச் சிரிக்க,,,

என்ன இந்தக் குசும்புதானே வேண்டாங்கறது,,,,,,,இருந்தாலும் நீங்க ஆசைப்பட்டுக் கேட்டதனால் சொல்கிறேன், குளிக்கும் பொழுது இரண்டு மு்ன்று நாட்களுக்கு ஒரு முறை நகத்தால் சரடில் படிந்திருக்கும் அழுக்கை அகற்றிவிட்டு நல்ல பூசு மஞ்சளைக் குழைத்துப் பூசினால் சட்டென்று மஞ்சள் அப்படியே ஒட்டிக்கொள்ளும், ஈரக் கயிற்றில் மஞ்சள் அவ்வளவாக ஒட்டாது,இதுவே மஞ்சள் சரடின் மஞ்சள் ரகசியம்1 அதை மஞ்சளாக வைத்திருப்பதே அதன் மகிமை போதுமா?

சொல்லும்போதே அவள்கண்களில் ஒரு விதப் பெருமிதம். ஆனந்தம். மேலும் தொடர்கிறாள்.

உங்களுக்கு இன்னொரு ரகசியமும் சொல்ல ஆசைப்படுகிறேன், என் அம்மாஅடிக்கடி சொல்லுவார், திருமண வாழ்க்கையில் எத்தனையோஇடர்ப்பாடுகளைக் கணவனும் மனைவியும் சந்திக்கக் கூடும், அப்பொழுதெல்லாம் கழுத்தில் கையில் கிடைக்கும் நகைகளை விற்றேh அடகு வைத்தோ சமாளிப்போம், ஆனால் இந்த மஞ்சள் சரடிருக்கே அது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது,அதை யாரும் பறிக்க முடியாது, கல்யாணம் என்பதே இந்த மஞ்சள் சரடிற்காகத்தானே1 அது மட்டுமல்ல என் அம்மா அப்பா காலமாகும் வரை அணிந்திருந்த சரடு ஒரு நாளும் நிறம் வெளுத்தோ பச்சை படிந்தோ நான் பார்த்ததே இல்லை, எனக்கு தொpந்து மஞ்சள்சரடிற்கான சென்டிமென்ட் இன்னும் அங்கங்கே பரவலாக இருந்து கொண்டுதான் இருக்கிறது, தங்கத்தில் தாலி அணிபவர்கள் கூட திருமாங்கல்யத்தை மஞ்சள் சரடில் தான் கோர்த்து அணிந்து கொள்கிறார்கள்,
தாலிச் சரடை ஒரு காப்புக் கயிறு போலும் கணவனின் உயிரைக் காக்கும் கயிறு போலவும். தான் இன்னாருக்குரியவள் என்ற பெருமிதத்தோடும்அடையாளத்தோடும் பெண்கள் இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது, ஃபேன்ஸி டிரெஸ் காம்படீஉக்ஷனில் போட்டி முடிந்தவுடன் வேஉக்ஷத்தைக் கலைத்து விடுவதைப் போல, கல்யாணம் முடிந்த உடனேயே தாலிச்சரடை கழற்றி வைக்கும் காலமாக இருக்கிறது, எதையும் சொன்னால் புரிந்து கொள்ளும் நிலையில் இன்றைய பெண்கள் இல்லை, எதைச் சொன்னாலும் வியாக்யானம் செய்யாதே ஃபூலிஉக்ஷ;உக்ஷh பேசாதே என்கிறார்கள்,

அதெல்லாம் சரி சாலி. நம் பெண்ஹணுக்கு இதெல்லாம் பற்றி எடுத்துச்சொன்னாயோ? கல்யாணம் பற்றி அவளுடைய எண்ணங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

க்கும்……..நீங்க வேற ,,,,,,,,அவ ஒண்ஹணும் மாறுகிறாற்போல இல்லை, எனக்கும் இன்னும் எப்படிச்சொல்வதென்றும் புரியவில்லை,,,,,,,

ஏண்டி சாலி,,,,,நாம இரண்டுபேரும் எப்பப்பாரு எலியும் பூனையுமாக இருப்பதைப் பார்த்துட்டுதான் சாலி கல்யாணத்திற்குப் பிடிகொடுக்காமல் பேசுகிறாளோ?

சே,,,,,,,,,சே,,,,,,,,அதெல்லாம் ஒண்ஹணுமில்லை,,,,நாம கம்யூட்டரும் மவுசும் போல என்பது அவளுக்கு நன்றாகவே தொpயும், ஆனா ஒரு விஉக்ஷயம் எனக்குள்ளே உறுத்திண்டே இருக்கு அதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னுதான் தொpயல?

எதுவாயிருந்தாலும் சொல்லு சாலி,,,,,தயங்காதே…….

இல்லை,,,,, இப்படி ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு உங்களுக்கு உக்ஷஉக்ஷ;டிஅப்த பூர்த்தி நடத்த இருக்கிறேhமே ,,,,,,,அதைப் பற்றி அவள்மனதிற்குள் ஏதாவது,,,,,,,,

அவள் முடிக்கும் முன் குறுக்கிட்டார்,,,,சே,,,,,சே,,,,,,, அதெல்லாம் இருக்காது சாலி நீ ஒண்ஹணு படித்திருப்பியே ஆப்போஸிட் போல்ஸ் அட்ரேக்ட் ஈச் அதர் என்று அதுபோல்தான் கணவன் மனைவி உறவும்…..நீ முதல்ல ஒண்ணை நன்னாப்புரிஞ்சுக்கஹணும்,,அவரவர் வாழ்க்கை அவரவருடையது, அதை அவரவர் இஉக்ஷ;டப்படி வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கிறது, நம்மைப் பொறுத்த வரையில் திருமணமாகி இத்தனை ஆண்டுகள் கழித்து அந்தஇனிமையான சந்தோஉக்ஷ நினைவுகளையும் நிகழ்வுகளையும் அவ்வப்போது நடந்த சிறு சிறு பூசல்களையும் நினைத்து சிரித்து மகிழ்ந்து.நெகிழந்து அனுபவத்தோணியில் ஏறி வலம் வந்து கரை சேர்ந்து அவைகளை நினைவு கூறும் விதமாக இந்த மாதிரி மணிவிழாக்கள் கொண்டாடப்படுகிறது, திருமணவாழ்க்கையில் வெற்றியாளர்கள் வரிசையில் இந்தத் தம்பதியும் வருகிறார்கள் என்று அங்கீகரிப்பதற்காகவே இந்த மாதிரி விழாக்கள். சடங்குகள். சம்பிரதாயங்கள், எங்கோ புதுமை புரட்சி என்றெல்லாம் சென்று கொண்டிருக்கும் உலகத்தில் இது போன்ற விழாக்கள் நிச்சயமாக இளைய தலைமுறையினரைச் சிந்திக்க வைக்கும், அவர்கள் மனதிலே பதியன் போட்டு வைத்திருக்கிற சில தாறுமாறான அபிப்ராயங்கள் மாறும். வாழ்க்கை உண்மையிலேயே என்ன என்று புரிய வைக்கும், அதனால் இதற்கெல்லாம் நீ போட்டுமனசைக் குழப்பிக் கொள்ளாமல் ஜhலியாக இரு, என்ன சரியா? என்று அவள் வலது கன்னத்தை லேசாகத் தட்டி ஒரு செல்லக் கிள்ளும் கிள்ளினார்,

ஆ,,,, வலிக்கறதுன்னா,,,,,செல்லமாகக் கோபித்தபடி விசாலம் அறையை விட்டு வெளியே வர அங்கே வைதேஹி.

1 thought on “துருவ சந்தி

  1. தாம்பத்ய வாழ்க்கை மற்றும் அதன் மகிழ்ச்சி, துன்பம், வெற்றி, பிணைப்பு பற்றி மிக அருமையாக எழுதிஉள்ளார் கதை ஆசிரியர். தாய் தந்தையென் உரையாடலை கேட்டு மகள் என்ன முடுவு எடுத்தால் என்று சொல்லவில்லை. மகளின் முடிவை வாசகர் கையில் கொடுத்துவிட்டார்கள். நான் நினைக்கிறன் படித்த மகள் சமுகத்தை குறை கூறாது வாழ்கை முறையை அமைத்து கொள்வது தன்னை சார்ந்தது என்று அறிந்து செயல்படுவாள் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *