(1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நவாஸுக்கு கடிதம் எழுதிய ஆரிபாவின் நெஞ்சு கனத்தது. உரித்தான பெரும் பொருளை இழக்கப் போகிறேனே என்ற உணர்ச்சி அவளைப் பிடித்தது. நேராக தனது அறைக்கு ஓடினாள்; அலுமாரியைத் திறந்தாள். அங்கே நவாஸின் புகைப்படம் சிரித்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து நெஞ்சினிலே அணைத்தபடி கட்டிலிலே சாய்கிறாள். எண்ணச் சுமை யாவும் கண்ணீராக வெளியாகியது. விரும்பிய மட்டும் அழுதாள்
யா அல்லாஹ்….. இந்த வேதனையில் புழுவாக துடித்து மாளவா என்னை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறாய்? நான் என்ன செய்வேன்? அவள் நெஞ்சு கனமாகியது. சுவரை வெறித்துப் பார்க்கிறாள். அங்கே அவளுடைய திருமணப் புகைப்படம் காற்றினில் ஆடிக்கொண்டிருந்தது. அந்தப் புகைப்படத்தினூடே கடந்த கால நினைவலைகள் ராகம் இசைக்கின்றன.
ஆரிபா, வசதிகள் படைத்த குடும்பத்தில் பிறக்கவில்லை . நான் கூலி வாங்கும் பாட்டாளியின் மகள். உம்மா சபீதா, வாப்பா சம்சுதீன், நாநா பாசி. இவர்கள்தான் அவள் சொத்து. சிறுவயது முதல் வறுமையில் உழன்று வாழ்ந்தவள்.
ஆரிபா, இவ்வுலகைக் கண்ட பத்து வருடங்களில் வாப்பா சம்சுதீன் வபாத்தாகிவிட்டார். குடும்பப் பாரம் அவள் தாய் சபீதா உம்மாவின் தலையில் வீழ்ந்தது. பாசி, குடும்பப் பொறுப்பை அறியாது ஊர் சுற்றினான். வீண் வம்புகளை விலைக்கு வாங்கினான். சபீதா உம்மா என்ன செய்வாள்? அப்பம், இடியப்பம் முதலியவை சமைத்து விற்று ஆரிபாவைப் படிக்க வைத்தாள். சி அது வீண்போகவில்லை. ஆரிபாவுக்கு டிச்சர் வேலை கிடைத்தது.
ஆரிபாவுக்கு டீச்சர் வேலை கிடைத்த பின்னர்தான் நவாஸும் அவளும் காதல் என்னும் பூங்காவின் உச்ச வரம்பில் பாடித் திரிந்தனர். எதிலும் அவர்கள் கட்டுப்பாட்டை மீறிக் காதலிக்கவில்லை. தயிரைக் கடைய வரும் வெண்ணெயின் வடிவம்போல் அவர்களின் காதல் நாளுக்கு நாள் அதிகரித்து தெளிவோடு காட்சி தந்தது.
எல்லாவித உணர்ச்சிகளுக்கும் வழிகாட்டி – உலகில் சத்துள்ள பொருள் – அன்பு ஒன்றுதான். அந்த அன்பின் தரத்தில் நவாஸை நோக்கினாள் ஆரிபா. அவனிடம் காணப்பட்டது அவள் எதிர்பார்ப்பதை விட மேலாக இருந்தது. அவன் நற்பண்புகள் அவன் தகுதிக்கு பெருமைக்கு எண்ணித் திளைக்கும் இன்ப நினைவுகளாய் அவள் இதயத்தைச் சூழந்து கொண்டன.
இந்த அன்புத் தொடர்பை பாசி விரும்பவில்லை. பாசியும் நவாஸும் சிறுவயதில் ஒன்றாகப் படித்தவர்கள். பாசி, வீட்டுக்கும். ஊருக்கும் அடக்கமில்லாமல் இருக்கும் நேரத்தில் நவாஸ் படித்து ஊருக்கு நல்லவனாக கௌரவமான தொழில் செய்வது அவனுக்கு வெறுப்பையும் துவேஷத்தையும் கொடுத்தது.
நவாஸ் – ஆரிபாவின் தொடர்பை துண்டிக்க இன்னொரு காணரமும் பாசிக்கு இருந்தது. ஊரில் உள்ள பெண்கள் அவனுடன் சிரித்தால் போதும் அன்று அவனுக்கும் பசி எடுக்காது. அவனை அவர்கள் காதலிப்பதாக அடுத்தவர்களிடம் சவால் விடுவான். ன் இப்படியானவன் ஒருவளை நிரந்தரமாகக் காதலித்தான். அவள்தான் அசீனா.
அசீனா, ரேஸ்புக்கி முதலாளி ரோஸானின் தங்கை. ரோஸான் அப்பகுதியில் பணத்தில் செல்வாக்குள்ளவன். இவன் தன் தங்கையை பாசி காதலிப்பதை விரும்பினான். ம ஆரிபாவின் அழகில் அவனுக்கு புது உத்வேகம். பால் வண்ணப் பருவமும், பரவசப்படுத்தும் இடையும், வேல் வண்ண விழியும் அவனை இஞ்சி தின்ற குரங்காக்கியது. 11 அடைந்தால் ஆரிபாவையே தன் இல்லக்கிழத்தியாக அடைய வேண்டும் என திடசங்கற்பம் பூண்டான்.
ரோஸான், பாசியை தன் கருவியாகப் பயன்படுத்தத் தவறவில்லை . வயிறு காய்ந்தவன் செய்யும் ரேஸ் தொழிலை(?) பழக்கினான். நாளுக்கு நாள் டெரலின், நைலோன் சட்டைகளில் பச்சைத்தாள் மினுங்க தலைகால் புரியாமல் நடந்தான் – பாசி. இடையிடையே – தன் எண்ணத்தை வெளிப்படுத்திய ரோஸான் வெற்றியும் பெற்றான்.
ரோஸான் போட்ட தூபம், பாசியின் மனதில் புகையைப் படரவிட்டது. – நேரடியாக ஆரிபாவின் உம்மாவிடம் போய் கூறினான். சபீதா உம்மாவுக்கு தலை கால் புரியவில்லை . பணம் படைத்தவன் இடத்திலிருந்து வரும் சம்பந்தம்! பெரிய வீட்டில் குடியேற வேண்டும், ஊருக்குள்ளே காரில் பவனி வரவேண்டும் என்ற நீண்ட நாட்கனவுகள் பலிக்கப் போகின்றன. உடனே தன் சம்மதத்தையும் கொடுத்துவிட்டாள்.
ஆனால் ஆரிபாவுக்கு நெஞ்சில் துளிர்த்த புதுப் பிறவியின் தூய்மை சுடர்விட முன் அணைந்தது போல் இருந்தது. கதறினாள்; கலங்கினாள், கண்ணீர் விட்டாள். அவள் உள்ளத்தே தகித்துக் கொண்டிருந்தது எரிமலை. தன் நிலைமைகளை விளக்கி துன்பராகங்களை இசைத்து அனுப்பினாள் நவாஸுக்கு. அந்த ராகங்கள் இசைபாடமுன் கைப்பற்றிக் கொண்டான் பாசி.
செல்வாக்கைப் பிரயோகித்து கைப்பற்றிக் கொண்டான். இதை அறியாத ஆரிபா, நவாஸின் பதிலை எதிர்பார்த்து ஏமாந்தாள்.
திருமணம் முடிந்தது.
சீ….. எவ்வளவு கீழ்ப் பிறவிகள்! அவள் இருளிலிருந்து ஒளியைத் தேடும் பொழுது, ஒளியிலிருந்து இருளைத் தேடுகிறார்களே. ஆரிபாவுக்கு நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. சுயசிந்தனையை இழந்தாள். புது சக்தி அவளைத் தழுவும் பொழுது அவள் வயிற்றில் புது ஜீவன் உற்பத்தியாகிக் கொண்டிருந்தது. சபீதா உம்மா கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். ஆமாம்….. பணத்துக்கு ஆசைப்பட்டு தான் பெற்றெடுத்த பச்சைக் கிளியை கருடனின் கையில் கொடுத்துவிட்டேனே என்று ஏங்கினாள். ரோஸான், பாசி, அசீனாவின் போக்குதான் சபீதா உம்மாவுக்கு தீராத ஏக்கத்தைக் கொடுத்தது. ஊரை கொள்ளையடித்த ரேஸ் பணம், குடி, சூது என அழிந்து கொண்டிருந்தது. கடைசியில் ஆரிபாவின் சம்பளத்தில் காலம் தள்ளும் நிலை எல்லாருக்கும் ஏற்பட்டது. ரோஸான் ஆஸ்துமா வியாதிக்கு இரையானான். பணத்தில் விளையாடிய ரோஸானின் தங்கை அசீனாவுக்கு வறுமையைத் தாங்க முடியவில்லை . புது மைனருடன் சிநேகம் பூண்டு எங்கேயோ ஓடிவிட்டாள். இது பாசிக்குப் பைத்தியத்தைக் கொடுத்தது. அவன் “அசீனா… அசீனா…” என்றவாறு வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிக்கொண்டிருக்கிறான். இந்த இடிகள் சபீதா உம்மாவுக்கு மாரடைப்பைக் கொடுத்தது. அவளும் கண்களை மூடினாள்.
ஆரிபா மட்டும் இவ்வளவு பெரிய பூகம்பத்திலும் ஒரு சொட்டுக் கண்ணீரேனும் விடவில்லை. துயரமோ துன்பமோ படவில்லை. ஆனாள் இன்று அழுகிறாள்; நவாஸின் புகைப்படத்தையும், கடிதத்தையும் வைத்துக்கொண்டு அழுகிறாள்…… ‘நவாஸ், என் இருதயமே, நான் களங்கடைந்தவள். பாவி…என் இலட்சிய வீரரே, வாழ்க்கைத் தரையிலிருந்து இருவராக அல்ல; ஒருவராகப் பறப்போம் எனக் கனவு கண்டோம். இன்று நான் சிறகொடிந்த பறவை. இந்த நிலைமையிலும் இத்துரோகியை விரும்புகிறீர்களே. a நிலை தெரியாமல், திசைபுரியாமல் தறிகெட்டு ஓடும் இவ்வுலகிலே தூய்மை அன்பைக் காட்டும் உங்கள் முன், நான் சின்னஞ்சிறிய ஈனப்பிறவி. விதவைக்கு வாழ்வளிக்கும் இலட்சிய, மெய்ஞ்ஞானம் நிரம்பிய மதத்தில் நாம் பிறந்தோம். ஆனால் உங்களுக்கு நான் துரோகஞ் செய்து விட்டேன். உங்களையன்றி வேறொருவன் என் உடலைத் தீண்டிவிட்டான். அந்த நாள் முதல் நான் இறந்துவிட்டேன். உங்கள் தூய்மையான கரம் என் உடலில் படவேண்டாம். நான் வஞ்சகி. என்னை விட மேலாக உங்களை தன் நெஞ்சில் வைத்துப் பூஜிக்கும் ஜெஸ்மீனை ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை ம…து…விடு…ங்…!
பழைய நினைவலைகள் அலை மோத, தனக்கு கிடைக்காத பெரும் பொருள் பிறருக்கு கிடைக்கப் போகிறதே என்ற புதிய நினைவுடன் பிதற்றினாள். அதே நேரம் “உம்மா…பசி…உம்மா…பசி” என அவள் குழந்தை முந்தானையைப் பிடித்து இழுக்கிறது.
ஆரிபா ஒரு நிமிஷம் திகைப்புற்று சமைந்து போனாள்! பிறகு குழந்தையைத் தூக்கி முத்தமிட்டாள். கண்களில் பூத்து விரிந்த கண்ணீர் முத்தாக திரள்கிறது. புகைப்படத்துடன் கடிதத்தை மடித்து அலுமாரியில் வைக்கிறாள். அங்கே ஊமையின் மௌனம், காவியமாக துன்பராகம் இசைக்கிறது.
– இன்ஸான் – 1969 – ஜனவரி, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.