தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 4,732 
 
 

அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 | அத்தியாயம்-29

ரமேஷ் தனக்கும் காயத்திரிக்கும் ‘கான்டீனில்’ இருந்து சாப்பாடு ஆர்டர் பண்ணினான்.அந்த சாப்பாடு வந்ததும் ரெண்டு பேரும் ஏதோ முன் பசிக்கு கொஞ்சமாக சாப்பீட்டார்கள்.ரெண்டு பேருக் கும் சாப்பிடவே பிடிக்கவில்லை.லதா மெல்ல கண்ணை திறந்ததும் அங்கு இருந்த ‘நர்ஸ்’ லதாவுக்கு கொஞ்சம் ‘ஆரஞ்ச் ஜூஸை’ கொடுத்தாள்.லதா அந்த ‘ஜூசை’ மெல்ல குடித்தாள்.

ரமேஷ் ஆனந்த்,சந்தோஷ் ரெண்டு பேருக்கும் போன் பண்ணி லதாவின் உடம்பைப் பத்தி சொன்னான்.ஒரு மணி நேரத்திற்குள் ஆனந்த்,வசந்தி,சந்தோஷ்,ரமா தங்கள் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அப்போலோ ஹாஸ்பிடல் வந்து லதாவை பார்க்க வந்தார்கள்.மார்க்கபந்து தம்பதிகளும்,ராமமூர்த்தி தம்பதிகளும் ‘அப்போலோ ஹாஸ்பிடல்’ வந்து லதாவை பார்க்க வந்தார்கள். ரமேஷ் எல்லோருக்கும் லதா உடம்பைப் பத்தி சொல்லி விவரமாச் சொன்னான்.ஆனந்தும், சந்தோ ஷூம் ரொம்ப கவலைப் பட்டு “அம்மா,உங்களுக்கு ‘இந்த’ உடம்பு வந்து இருக்கேம்மா.பகவான் புண் ணீயத்தாலே உங்க ‘பயாப்ஸி’ ஒன்னும் இல்லேன்னு வரணும்மா”என்று அழுதுக் கொன்டேசொன்னார் கள்.மார்க்கபந்து தம்பதிகளும்,ராமமூர்த்தி தம்பதிகளும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

அவர்கள் கிளம்பிப் போன பிறகு ‘நர்ஸ்’ லதாவுக்கு லேசான ஆகாரம் கொடுத்து மாத்திரைகள் எல்லாம் கொடுத்தாள்.ரமேஷ் காயத்திரியை ‘ப்லாட்டுக்கு’அனுப்பி விட்டு அன்று இரவு லதாவுடன் இருந்தான்.காலையில் எழுந்து ரமேஷ் தன் பல்லை கையாலே தேய்த்துக் கொண்டு ரமேஷ் “லதா, நான் கான்டீனுக்குப் போய் ‘ப்ரெக் பாஸ்ட்’ சாப்பிட்டுட்டு வரேன்”என்று சொல்லி விட்டு ‘கான்டீனு’ க்குப் போனான்.அவன் மெல்ல எழுந்து,தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு போவதையே லதா பார்த்துக் கொண்டு இருந்தாள்.மனதில் வருத்ததை சுமந்துக் கொண்டு அக்குள் கட்டையை வை த்துக் கொண்டு ‘கான்டீனு’க்குப் போய் ரமேஷ் ‘ப்ரேக் பாஸ்ட்டை’ச் சாப்பிட்டு விட்டு மறுபடியும் லதாவின் ரூமுக்கு வந்தான்.அவன் காயத்திரிக்கு அடிக்கடி ‘போன்’ பண்ணிக் கொண்டு இருந்தான்.

மனி பதினொன்னு அடித்தது.டாக்டர் லதா ரூமுக்கு வந்து ரமேஷைத் தனியாக அழைத்து “பயாப்ஸி ‘ரிசல்ட்’வந்து விட்டது.அவங்களுக்கு ‘ப்ரெஸ்ட்டில்’ இருபது சதைக் கட்டி இல்லே.அது ‘கான்ஸர்’ கட்டி.அவங்க ரெண்டு ப்ரெஸ்ட்டிலும் ‘கான்சர்’ பரவி இருக்கு.அவங்களுக்கு ‘கான்சர்’ ரொம்ப முத்திப் போய் இருக்கு.அந்த ‘கான்ஸரை’ ‘ரிமூவ்’ பண்ணியாகணும்.அப்புறமா அந்த ‘கான்சர்’ எங்கே எல்லாம் பரவி இருக்குன்னு கண்டு பிடிச்சி ‘கெமியோ தெராபி’ கொடுக்க ஆரம்பிக்கணும்” என் று சொன்னார்.டாகடர் சொன்னதை கேட்டதும் ரமேஷூக்கு தான் அதள பாதாளத்தில் போய் விழுந்த து போல இருந்தது.கம்மென்று தன் மனதில் அழுதுக் கொண்டு இருந்தான்.டாக்டர் போனவுடன் ரமேஷ் லதா ரூமுக்குப் போனான்.அவன் கண்கள் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது. ரமேஷி ன் கண்கள் சிவந்து இருப்பதைப் பார்த்த லதா “ஏன் நீங்க அழுதுண்டு இருக்கேள்”என்று கேட்டாள். ரமேஷ் தொப்பென்று அங்கு இருந்த சோபாவில் உட்கார்ந்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் “லதா,நாம ஏமாந்துப் போயிட்டோம்.டாக்டர் உனக்கு ‘கான்ஸர்’ வந்து இருக்கு.அந்த வியாதி ரொம்ப முத்திப் போய் இருக்குன்னு சொல்லி,உன் ரெண்டு ‘ப்ரெஸ்ஸ்டுகளை யும்’ உடனே ஆபரேஷன் பண்ணி,‘ரிமூவ்’ பண்ணிட்டு,உடனே ‘கான்சர் ‘ட்ரீட்மென்ட்’ ஆரமபிக்கணு ம்ன்னு சொல்லிட்டார்”என்று அழுதுக் கொண்டே சொன்னான்.ரமேஷ் டாக்டர் சொன்ன சமாசாரத்தை ஆனந்துக்கும்,சந்தோஷ்க்கும்,காயத்திரிக்கும் போன்லே சொன்னான்.அவர்கள் மிகவும் வருத்தப் பட்டு அப்பாவுக்கு ஆறுதல் சொன்னார்கள்.காயத்திரி பதறிப் போய் “ஐயையோ,லதாவுக்கு ‘கான்ஸர்’ நோய் வந்து இருக்கா.அந்த நோய் வந்தா பிழைக்கறதே ரொம்ப கஷ்டமாச்சே,பகவானே.நீங்க அவ ளை ஜாக்கிறதையா பாத்துக்கோங்கோ.காரை கொஞ்சம் அனுப்புங்கோ.நான் உடனே ஆஸ்பத்திரிக்கு வறேன்”என்று அழுதுக் கொண்டே சொன்னான்.

கொஞ்ச நேரம் ஆனதும் டாக்டர் ரூமுக்கு வந்து “நாங்க உங்க ‘வைப்புக்கு’ இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு ஆபரேஷன் பண்ண எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி இருக்கோம். உங்களுக்கு ஆபரேஷன் பண்ணிக்கலாம்ன்னு விருப்பம் இருந்தா இந்த ‘பாரத்தில்’ கை எழுத்துப் போட்டுக் குடுங்க”என்று சொன்னார்.தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ரமேஷ் டாக்டர் கொடு த்த ‘பாரத்தில்’கை எழுத்துப் போட்டுக் கொடுத்து அவரை அனுப்பினான்.ரமேஷ் காயத்திரிக்கு போன் பண்ணி ”நான் காரை உங்களுக்கு மத்தியானமா அனுப்பறேன்.நீங்க ஆத்லே ஆகாரம் சாப்பி ட்டுட்டு மூனு மணிக்கா ஹாஸ்பிடல் வாங்கோ”என்று சொல்லி விட்டு,டிரைவரை ‘போனில்’ கூப்பிட் டு சொன்னான்.உடனே காயத்திரியும்” சா¢,நீங்க சொன்னபடியே செய்யறேன்”என்று சொல்லி போ னை வைத்தாள்.காயத்திரி காரை விட்டு கிழே இறங்கி நேரே லதா படுத்து இருந்த பெட்டுக்கு வந்தா ள்.ரூமில் லதா கண்களும் மாப்பிள்ளை கண்களும் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது. லதா தலையணை பூராவும் நனைந்து இருந்தது.காயத்திரிக்கு லதாவைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது.

“ஏண்டீ லதா,உனக்கு இந்த பொல்லத வியாதி வந்து இருக்கே. உன் உடம்பைப் பத்தி நீ முன்னமே மாப்பீள்ளை கிட்டே சொல்லி இருக்கக் கூடாதா.நாம அந்த வியாதி சின்னதா இருக்கும் போதே அதுக்கு வைத்தியம் பண்ணீ வந்து இருக்கலாமே.இப்படி உன் உடம்பை முத்த வச்சுண்டு வந்து இருக்கேயே.அந்தப் பாழும் வியாதி வந்தா பிழைக்கவே முடியாதே.உன் அப்பாவுக்கு இருந்த வியாதி உனக்கும் வந்துட்டதே”என்று சொல்லி அழுதாள்.பத்து நிமிஷம் ஆனதும் ஆனந்த், வசந்தி, சந்தோஷ்,ரமா,மார்க்கபந்து தம்பதிகள்,ராமமூர்த்தி தம்பதிகள் எல்லோரும் அப்போலோ ஹாஸ்பிடலு க்கு வந்து லதாவை பார்த்து விட்டு,ரமேஷூக்கும்,லதாவுக்கும், காயத்திரிக்கும் ஆறுதல் சொல்லி விட் டு கிளம்பிப் போனார்கள்.

மணி நாலடித்ததும்,ரெண்டு ‘நர்ஸ்கள்’ ஒரு ‘வீல்’ செரைக் கொண்டு வந்து வந்து “இவங்களை நாங்க ஆபரேஷன் தியேட்டடுக்கு அழைச்சுப் போகணும்”என்று சொல்லி விட்டு லதாவை மெல்ல எழுப்பி ‘வீல் சோ¢ல்’ உட்கார வைத்து ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துப் போனார்கள்.ரமேஷ் காயத்திரியை அழைத்துக் கொண்டு ‘கான்டீனு’க்குப் போய்,தனக்கும் காயத்திரிக்கும் ‘டிபன்’ காப்பி வாங்கினான்.காப்பி ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு இருவரும்,லதா ரூமுக்கு வந்து உட்கார்ந்துக் கொண் டு இருந்தார்கள்.மணி ஏழடித்ததும் ரமேஷ் காயத்திரியை பார்த்து “நீங்க ப்லாட்டுக்கு போயிட்டு இன்னைக்கு வந்தா மாதிரி நாளைக்கு மத்தியானம் சாப்பிட்டுட்டு ஹாஸ்பிடலுக்கு வாங்கோ”என்று சொல்லி அனுப்பினான்.காயத்திரி அழுதுக் கொண்டே ரூமை விட்டு கிளம்பி ‘ப்லாட்டுக்கு’ப் போனாள். மணி பன்னண்டு அடித்ததும்,ரெண்டு நர்ஸ்களும்,ரெண்டு வார்ட்‘பாய்களும்’ லதாவை ‘ஸ்ட்ரெச்சா¢ல்’வைத்து அழைத்துக் கொண்டு வந்து அவள் பெட்டில் படுக்க வைத்தார்கள்.கூட வந்த ஒரு டாக்டர் ரமேஷைப் பார்த்து “இவங்க ஆபரேஷன் நல்லா முடிஞ்சி இருக்கு.இவங்க ஆபரேஷன் பண்ண இடம் பூரணமா ஆரும் வரை ஹாஸ்பிடல்லே இருந்து வரணும்”என்று சொன்னதும் ரமேஷ் அவரை ‘தாங்க்’ பண்ணினான்.

ரமேஷ் யோஜனைப் பண்ணிக் கொண்டே தன் பெட்டில் படுத்துக் கொண்டான்.அடுத்த நாளில் இருந்து ஆனந்தும்,வசந்தியும்,சந்தோஷூம், ரமாவும்,மார்க்கபந்து தம்பதிகளும்,ராமமூர்த்தி தம்பதிகளும் லதாவை வந்து பார்த்து விட்டு போய் கொண்டு இருந்தார்கள்.காயத்திரி மத்தியானம் வந்து லதாவைப் பார்த்து விட்டு சாயங்காலம் வரை இருந்து விட்டு ‘ப்லாட்டுக்கு’ திரும்பிப் போய்க் கொண்டு இருந்தாள்.ரமேஷ் லதாவோடவே ஹாஸ்பிடலில் இருந்து வந்தான்.’கான்சர்’ மாத்திரைக ளை ‘நர்ஸ்’ தவறாமல் கொடுத்து வந்தாள்.லதா ரொம்ப ‘வீக்’காக இருந்து வந்தாள்.பதினெட்டு நாளு க்கு பிறகு ஆபரேஷன் பண்ண இடங்கள் பூரணமாக ஆறி விட்டு இருந்ததால் டாக்டர்கள் லதாவை ‘டிஸ்சார்ஜ்’ பண்ணினார்கள்.லதாவை ‘டிஸ்சார்ஜ்’ பண்ண டாக்டர் “நீங்க இவங்களே வீட்டுக்கு இட்டு கிட்டு போங்க.இவங்க நான் குடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வரட்டும்.மறுபடியும் நீங்க இவங்களை பதினைஞ்சு நாள் கழிச்சு இங்கே அழைச்சுகிட்டு வாங்க.நாங்க இவங்களுக்கு ‘கெமியோ தெராபி’ கொடுக்க ஆரம்பிக்கறோம்”என்று சொன்னதும் ரமேஷ் “நான் நிச்சியமா இவங்களை பதினைஞ்சு நாள் கழித்து இங்கே அழைச்சுண்டு வறேன்”என்று சொன்னான்.

ரமேஷ் லதா வைத்தியத்திற்கு ஆன பணத்தைக் கட்டி விட்டு டாக்டர்கள் சொன்ன மாத்திரை களை எல்லாம் வாங்கிக் கொண்டு லதாவை அழைத்துக் கொண்டு ‘ப்லாட்டு’க்கு வந்து லதாவை ‘பெட்டில்’படுக்க வைத்தான்.ரமேஷ் சமையல் கார மாமாவைக்கூப்பிட்டு “ மாமா,லதா என்ன,என்ன, கேக்கறாளோ அதை எல்லாம் சாப்பிட பண்ணி கொடுங்கோ”என்று சொன்னான்.தினமும் ஆனந்தும், வசந்தியும்,சந்தோஷூம், ரமாவும்,மார்க்கபந்து தம்பதிகளும்,ராமமூர்த்தி தம்பதிகளும் லதாவை வந்து பார்த்து விட்டு போய் கொண்டு இருந்தார்கள்.லதா ‘ப்லாட்’டுக்கு வந்து சா¢யாக பதினைஞ்சு நாள் ஆனதும்,ரமேஷ் அவளை ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ அழைத்து போய் ‘கெமியோ தெராபி’ கொடு த்து விட்டு அவளை‘ப்லாட்டுக்கு’ அழைத்து வந்தான்.நாள் பூராவும் ரமேஷ் லதாவுடனேயே இருந்து வந்தான்.ரமேஷ் லதா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நிறைய சந்தோஷமான பழைய விஷயங்களை எல்லாம் பேசி வந்து,தனக்குத் தொ¢ந்த ஜோக்குகளையும் எல்லாம் சொல்லி வந்து லதாவை சந்தோஷ மாய் வைத்துக் கொண்டு வர முயற்சி பண்ணி வந்தான்.

லதா உடம்பு நாளுக்கு நாள் மெலிந்து வந்துக் கொண்டு இருந்தது.லதா இரவு பூராவும் தூங் காமல் கஷ்டப் பட்டு வந்தாள்.ரமேஷ் அன்று காலையில் குளித்து விட்டு ‘ப்லாட்டில்’இருக்கும் சுவா மி படத்தின் முன்னால் நின்றுக் கொண்டு மந்திரங்கள் மட்டும் சொல்லி விட்டு ஹாலுக்கு வந்தான். காயத்திரி ஹாலில் இல்லாது இருக்கவே ரமேஷ் சமையல் கார மாமாவைக் கூப்பிட்டு “மாமா,எங்கே மாமியைக் காணோம்”என்று கேட்டான்.அவர் உடனே சமையல் ரூமில் இருந்து வெளியே வந்து “சார்,காத்தாலே இருந்து மாமி ‘பெட் ரூமில்’ இருந்து வெளீயே வரலே.உடம்பு முடியாம படுத்துண்டு இருக்காளோ என்னவோன்னு நான் நினைச்சிண்டு இருந்தேன்”என்று சொன்னார்.உடனே ரமேஷ் காயத்திரி ‘பெட் ரூமுக்கு’ப் போனான்.லேசாகத் திறந்து இருந்த கதவை முழுக்கத் திறந்துக் கொண்டு உள்ளே போய் “அம்மா,அம்மா” என்று குரல் கொடுத்தான்.மூச்சு பேச்சு இல்லாமல் படுத்துக் கொண் டு இருந்தாள் காயத்திரி.ரமேஷூக்கு பயம் வந்து விட்டது.உடனே அவன் லதாவைக் கூப்பிட்டான். “என்ன கூப்பிடறேள்”என்று குரல் கொடுத்துக் கொண்டேலதா மெல்ல ‘பெட் ரூ¨’ம விட்டு வெளியே வந்து அம்மா ‘பெட் ரூமுக்கு’ வந்தாள்.லதா அம்மா மூக்கில் கையை வைத்துப் பார்த்தாள்.அம்மா மூக் கிலே சுவாசமே இல்லை.பயந்துப் போய் லதா “அம்மாவுக்கு சுவாசமே இல்லையே.நீங்க உடனே டாக் டரைக் கூப்பிடுங்கோ”என்று கத்தினாள்.

உடனே ரமேஷ் தன் செல் போனை எடுத்து ‘ப்லாட்டில்’ தனக்குத் தொ¢ந்த ஒரு டாக்டருக்கு போன் பண்ணி தன் மாமியார் ‘கண்டிஷனை’ச் சொல்லி அவரை உடனே அவரை வரச் சொன்னான். ஐஞ்சு நிமிஷத்துக்கு எல்லாம் அந்த டாக்டர் ‘ஸ்டெதஸ்கோப்பை’ எடுத்துக் கொண்டு ரமேஷ் ‘ப்லாட் டுக்கு’வந்தார்.டாக்டர் காயத்திரி¢யை ‘ஸ்டெத்’ வச்சிப் பார்த்து விட்டு “சாரி சார்,இவங்க இறந்து நாலு மணிக்கு மேலே ஆறது.இவங்களுக்கு ‘மாஸிவ் ஹார்ட் அட்டாக்’ வந்து இறந்து போய் இருக்காங்க” என்று சொல்லி விட்டு தன் ‘ஸ்டெத்தை’ எடுத்து தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு ‘ப்லாட்டை’ விட் டுப் போய் விட்டார்.லதாவுக்கும் ரமேஷூக்கும் தூக்கி வாரிப் போட்டது.லதா அம்மா உடம்பு மேல் விழுந்து “அம்மா,இப்படி என்னை தனியாத் தவிக்க விட்டுட்டு போயிட்டயே.என் சாவைப் பார்க்க விரும்பாம நீ முந்திண்டுட்டயே.நீ எவ்வளவு கஷ்டப் பட்டு என்னை வளத்து வந்தேம்மமா” என்று சொல்லி கதறி அழுதாள்.

விஷயம் தொ¢ந்தவுடன் ஆனந்தும்,வசந்தியும்,சந்தோஷூம்,ரமாவும்,மார்க்கபந்து தம்பதிகளும், ராமமூர்த்தி தம்பதிகளும் ரமேஷ் ‘ப்லாட்டுக்கு’ வந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு லதாவையும் ரமேஷையும் பார்த்து விட்டு ரெண்டு பேரையும் ‘துக்கம் விசாரித்து’ விட்டுப் போனார்கள்.பேரன்களை கூட வைத்துக் கொண்டு ரமேஷ் காயத்திரிக்கு ‘அந்திமக் காரியங்களை’ செய்து முடித்தான்.காயத்திரி இறந்துப் போய் பதிமூன்று நாட்கள் ஆனதும்,எல்லா காரியங்களும் முடிந்து,‘ப்லாட்டுக்கு ‘புண்யா வசனம்’ பண்ணினான்.அம்மா போன துக்கத்தில் லதா சதா அழுதுக் கொண்டே இருந்தாள்.ரமேஷ் அவளுக்கு நிறைய ஆறுதல் சொல்லி வந்தான்.லதாவுக்கு அம்மா போன கவலை அதிகமாக வாட்டி யது.சதா ரமேஷிடம் “அம்மா என்னை ஒரு கஷ்டமும் இல்லாம வளத்து வந்தா.அவ வேலை செஞ்சு வர ‘மெஸ்’ஸில் இருந்து கொண்டு வர சாப்பாட்டை முதலில் ஆனந்துக்கு வயிறு நீறைய போட்டுட்டு, மீதி இருக்கிற சாப்பாட்லே ‘லதா,நீ வயசுப் பொண்ணு.உன் வயிறு நிறைய சாப்பிடு’ ன்னு சொல்லி எனக்குப் போட்டுட்டு பிறகு அம்மா மீந்ததை சாப்பிட்டுட்டு படுத்துப்பா.எல்லா நாளும் அவ பாதி, வயிறும்,கால் வயிறும் தான் சாப்பிட்டுண்டு வந்தா”என்று சொல்லி அழுதாள்.

ரமேஷ் மிகுந்த கவலையுன் “அப்படியா லதா” என்று கேட்டான்.லதா சந்தோஷப் படட்டும் என்று நினைத்து ரமேஷ் லதாவை அழைத்து “லதா,நான் அம்மா பேர்லே ‘காயத்திரி அன்னதான ட்ரஸ்ட்’என்கிற ஒரு நிறுவனதை ஆரம்பிச்சு,நிறைய ஏழைகளுக்கு தினமும் அன்னதானம் பண்ண ஏற்பாடு பண்ண போறேன்.தினமும் உன் அம்மா பேரைச் சொல்லி நீறைய ஏழைகள் வயிறார சாப்பி ட்டு வருவா”என்று சொன்னதும் லதா மிகவும் சந்தோஷப் பட்டு “உங்க நல்ல மனசு யாருக்கு வரும். எனக்கும்,என் அம்மாவுக்கும்,ஆனந்துக்கும் இந்த ராஜ போக வாழக்கையை குடுத்து இருக்கேள்.இப்ப அம்மா பேர்லே ஒரு அன்னதான ‘ட்ரஸ்ட்’ ஆரம்பிக்கப் போறேள்.உங்களே புகழ எனக்கு வார்த்தைக ளே இல்லே”என்று சொல்லி அவன் கால்களை தொட்டு கண்களில் ஒற்றீக் கொண்டாள்.ரமேஷ் ‘காயத்திரி அன்னதான ட்ரஸ்ட்’என்கிற போ¢ல் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து,அதற்கு மூனு கோடி ரூபாய் பண ம் போட்டு,அதில் இருந்து மாசம் வரும் வட்டி பணத்தை அன்ன தானத்துக்கு செலவு பண்ணி வர ரெண்டு ‘நிர்வாகிகளை’ வேலைக்கு வைத்தான்.

காயத்திரி இறந்துப் போய் முன்று மாசம் ஆகி விட்டது.லதாவுக்கு ‘கெமியோ’ கொடுத்தும்,அவ ‘பவர்புல்’ ‘கான்சர்’ மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும்,அவள் உடம்பில் எந்த வித முன்னேற்றமும் ஏறபடவில்லை.அவள் நாளுக்கு நாள் ரொம்ப வீக்கா ஆகி வந்தாள்.அவளுக்கு மூச்சு விடுவதே ரொ ம்ப கஷ்டமாக இருந்தது.சாப்பாட்டை முழுக்கவே அவள் கஷ்டப் பட்டு வந்தாள்.தினமும் ரெண்டு வேளையும் லதாவை ‘செக் அப்’ பண்ண,ரெண்டு டாக்டர்களை ஏற்பாடு பண்ணினான் ரமேஷ். ரெண்டு டாக்டர்களையும் பார்த்து ரமேஷ் “லதா உடம்ப்லே ஏதாவது முன்னேத்தம் இருக்கா’ என்று கேட்டு வந்தான்.அவர்கள் சா¢யாக பதில் சொல்லவில்லை.ஒரு நாள் லதாவுக்கு உடம்பு அதிகம் ஆகி அவள் ரமேஷை கூப்பிட்டு “எனக்கு என்னவோ நான் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன்னு தோன்றது.நான் ஆசைப் பட்டு வந்தது போல உங்க மடியிலே படுத்துண்டு இருக்கும் போதே என் உயிர் போயிடணும்”என்று அவன் கையை பிடித்துக் கொண்டு அழுதாள்.

உடனே ரமேஷ் லதாவைப் பார்த்து “லதா அப்படி எல்லாம் சொல்லாதே லதா.நீ என்னை விட்டுப் போயிடாதே.நீ என்னை விட்டுட்டுப் போயிட்டா,நான் தனி மரம் ஆயிடுவேன்.எனக்குன்னு இந்த லோகத்லே யார் இருக்கா”என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழுதுக் கொண்டே சொன்னான்.லதாவும் அழுதுக் கொண்டே“நான் உங்களை விட்டுட்டுப் போவேனா.நீங்க எனக்கு வாழ்க்கை குடுத்த தெய்வம் இல்லையா.நானா உங்களை விட்டுட்டுப் போகணும்ன்னு ஆசைப்படுவே ன்.அந்த பகவானே வந்து என்னைத் தூக்கத்திலே இருந்து எழுப்பிக் கேட்டாலும்,நான் அவரை விட் டுட்டு வர மாட்டேன்னு தானே சொல்லுவேன்.நீங்க எனக்கு என்ன குறை வச்சேள்.உங்களுக்கு நான் செருப்பா உழைச்சாலும்,நீங்க எனக்கும் அம்மாவுக்கும்,ஆனந்துக்கும் பண்ணி இருக்கிற உதவிகளுக் கு ஈடு ஆகாதே.அப்படி இருக்கும் போது நான் உங்களை விட்டுட்டுப் போவேனா.என் வியாதி தான் என்னை உங்க கிட்டே இருந்து பிரிச்சிடப் போறது”என்று சொல்லி விக்கி விக்கி அழுதாள்.ரமேஷ் அவளை சமாதானம் படுத்தி வந்தான்.அவனும் தன் மனதில் அழுதுக் கொண்டு இருந்தான். ரமேஷ் கோவில் போய் வரும் நேரத்தை தவிர,மத்த நேரங்களில் லதாவோடவே ‘டைம்’ ‘ஸ்பெண்ட்’ பண்ணிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான்.

லதா சாப்பிடவே மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தாள்.அவளுக்கு மூச்சு விடுவதே ரொ ம்ப சிரமமாக இருந்தது.லதா சமையல் கார மாமாவைக் கூப்பிட்டு ”மாமா எனக்கு சாப்பாட்டை முழுங் க ரொம்ப கஷ்டமா இருக்கு.அதனாலே நீங்க எனக்கு சாதத்தை நன்னா கரைச்சு குடுங்கோ.நான் அதைக் குடிச்சுடகிறேன்”என்று சொன்னதும் சமையல் கார மாமா லதாவுக்கு சாதத்தை நன்றாக கரை த்துக் கொடுத்தார்.லதா இப்படி சாதத்தை கரைத்துக் குடிப்பதைப் பார்த்து மிகவும் கஷ்டப் பட்டான் ரமேஷ்.அன்று டாக்டர் ‘ப்லாட்டுக்கு’ வந்தபோது ரமேஷ் லதா சொன்ன ‘ப்ராப்லெத்தை’ சொன்னா ன்.அதற்கு அந்த டாக்டர் “ஆமாம் சார்,அவங்களுக்கு ‘கான்சர்’‘ஸ்ப்ரெட்’ ஆகி வருது. அவங்க தொ ண்டை குழாய்லே இந்த ‘கான்ஸர்’ வியாதி வளர்ச்சியாலே நிறைய அடைப்பு இருக்கு” என்று சொல்லி விட்டு லதாவை ‘செக் அப்’ பண்ணினார்.பிறகு அவர் ரமேஷை தனியாகக் கூப்பிட்டு “சாரி சார்,அவங் க ‘லாஸ்ட் டேஸ்’ ரொம்ப தூரம் இல்லே.அவங்க ஆசைப் பட்டதெல்லாம் சீக்கிரமா அவங்களுக்குப் பண்ணி விடுங்க”என்று சொன்னதும் ரமேஷூக்கு உலகமே இருண்டு விட்டது.அதள பாதாளத்திற்கு போய் விழுவது போல் அவனுக்குத் இருந்தது.

மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு லதா ‘பெட் ரூமுக்கு’ வந்து லதா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டான்.லதாவைப் பார்த்து மனதுக்குள் அழுதான் ரமேஷ்.லதா தன் கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தாள்.அன்று வெள்ளீகிழமை.ரமேஷ் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய் விட்டு சுவாமியையும்,அம்மனையும் நன்றாக வேண்டி கொண்டு குங்குமப் பிரசாதத்தை வா ங்கிக் கொண்டு வந்து ‘ப்லாட்டுக்கு’ வந்து லதாவின் நெத்தியில் இட்டு விட்டான்.ரமேஷூக்கு லதாவைப் பார்க்கவே மிகவும் கஷ்டமாய் இருந்தது.லதாவுக்கு படுக்கையை விட்டு எழுந்து உட்காரவே சக்தி இல்லாமல் மிகவும் கஷ்டப் பட்டாள்.’லதா முதல் நாள் ராத்திரி சா¢யா சாப்பிடவே இல்லேயே. கரைச்சு கொடுத்த சாதத்தை அவளால் கொஞ்சம் கூட முழுங்க முடிய வில்லையே’ என்பது ரமே ஷூக்கு ஞாபகம் வந்தது.உடனே அவன் அக்குள் கட்டையை சுவற்றில் சாய்த்து வைத்து விட்டு தன் வலது காலை கீழே வைத்துக் கொண்டு இடது காலை மடக்கி கட்டிலில் உட்கார்ந்தான்.ரமேஷ் லதா வை தன் மடி மேலே வைத்துக் கொண்டு, அவளைத் தாங்கிப் பிடித்து கொண்டு,அவள் நெத்தியில் அவன் கொண்டு வந்து குங்கும பிரசாததை மறுபடியும் இட்டான்.
ரமேஷ் மறுபடியும் தன் நெத்தியிலே குங்குமம் இட்டவுடன் லதா அவனைப் பார்த்து “இப்படி யே…. நான் உங்க….. மடியிலே என் உயிரை நான்…. விட்டு விட மாட்டேனா…. என்று மனது ஏங் கறது.நீங்க என்னை விட்டுட்டு எங்கும் போகாதேள்.என்னை உங்க மடியிலேயே வச்சுண்டு இருங் கோ”என்று மெல்ல தட்டு தடுமாறி சொன்னான்.பேசவே திணறினாள் லதா.அவளுக்கு மூச்சு வாங் கிக் கொண்டு இருந்தது.அவள் தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தாள்.அவள் சுவாசம் கொஞ்சம் வேகமாகவும் குறைவாக வந்துக் கொண்டு இருந்தது.ரமேஷ் “லதா,லதா”என்று குரல் கொடுத்தான். ஆனால் லதா கண் முழிக்கவே இல்லை.ரமேஷ் பயந்து விட்டான்.அவன் உடனே ‘ப்லாட்’ டாக்டரை செல் போனில் கூப்பிட்டான்.‘ப்லாட்’ டாக்டர் வந்து லதாவை ‘எக்ஸாமின்’ பண் ணி விட்டு “சாரி சார்.’ஷி இஸ் நோ மோர்’ என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

“லதா என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டயே. நான் என்ன பண்ணுவேன்” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.சமையல் கார மாமாவும், மாமியும், மணியும், தங்கள வாயைப் பொத்திக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தார்கள்.ஒரு அரை மணி நேரம் ரமேஷ் அழுத பிற்பாடு, அவன் ஒரு ‘ஐஸ் பாக்ஸ்க்கு’ஆர்டர் பண்ணினான்.’ஐஸ் பாக்ஸ் வந்ததும் சமையல் கார மாமாவும்,மணியும் லதாவின் ‘பாடியை’ ரமேஷ் கையில் இருந்து வாங்கி ‘ஐஸ்பாக்ஸில்’ வைத்தார் கள்.ரமேஷ் ஒரு சேரைப் போட்டுக் கொண்டு லதா ’பாடியின்’ தலை மாட்டிலே உட்கார்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தான்.ரமேஷ் அழுதுக் கொண்டே ஆனந்துக்கும் சந்தோஷ்க் கும் போன் பண்ணீ ”அம்மா நம்மை எல்லாம் ஏமாத்தி¢ட்டு கொஞ்ச நேரம் முன்னாடி கண்ணை மூடிட்டா”என்று சொன்னான்.
உடனே ஆனந்தும்,வசந்தியும்,சந்தோஷூம்,ரமாவும்,ரோஜா பூமாலையை வாங்கிக் கொண்டு, ’ப்லாட்டுக்கு’ ஒடி வந்தார்கள்.ஆனந்தும்,சந்தோஷூம் அம்மா ‘ஐஸ்பாக்ஸ்’ மேலே அவர்கள் வாங்கி வந்த ரோஜாப் பூ மாலையை போட்டு விட்டு,தலை மாட்டில் உட்கார்ந்துக் கொண்டு கேவி கேவி அழு துக் கொண்டு இருந்தார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் மார்க்கபந்து தம்பதிகளும், ராமமூர்த்தி தம்பதி களும் ‘ப்லாட்டுக்கு’ வந்து அவர்கள் வாங்கிக் கொண்டு வந்த ரோஜாப் பூ மாலையைப் போட்டார் கள்.அவர்கள் ரமேஷூக்கும்,ஆனந்துக்கும்,சந்தோஷூக்கும்,ஆறுதல் சொன்னார்கள். ‘ப்லாட்டில்’ இருந்தவர்கள் எல்லாரும் வந்து ரமேஷூக்கும்,ஆனந்துக்கும் சந்தோஷ்க்கும் ஆறுதல் சொன்னார்கள்.

வாத்தியாரை ‘ப்லாட்டுக்கு’ வரச் சொல்லி ஆனந்தும்,சந்தோஷூம் லதாவுக்கு எல்லா ‘ஈமக் காரியங்க¨ளையும்’ பண்ணி முடித்தார்கள்.இருவரும் லதாவுக்குஅடுத்த பன்னண்டு நாளைக்கு எல்லா காரியங்களும் செய்து முடித்தார்கள்.பதி மூன்றாவது நாள் வாத்தியார் ‘ப்லாட்டுக்கு’ வந்து ‘புண்யாவசனம்’ செய்து ‘ப்லாட்’ பூராவும் ஜலம் தெளித்து சுத்தம் பண்ணினார்.அம்மாவுக்கு எல்ல காரியங்களும் பண்ணி முடித்த பிறகு ஆனந்தும் வசந்தியும்,குழந்தையும்,சந்தோஷூம் ,ரமாவும் குழ்ந்தையும் ரெண்டு நாள் அப்பா கூட இருந்தார்கள்.

மார்க்கபது த்ம்பதிகளும் ராமமூர்த்தி தம்பதிகளும் ரமேஷைப் பார்க்க வந்தார்கள் ‘ப்லாட்’டை விட்டு கிளம்பிப் போவதற்கு முன்னால் ஆனந்தும், வசந்தியும், ”அப்பா,நீங்க இங்கே தனியா இருந்து வர வேணாம்.என் கூட கொஞ்ச மாசம் சந்தோஷமா இருந்துண்டு வாங்கோ.இனிமே எங்களுக்கு பொ¢ யவான்னு நீங்க ஒருத்தர் தானே இருக்கேள்”என்று சொன்னார்கள்.உடனே சந்தோஷூம் ரமாவும் “ஆமாம்ப்பா,அண்ணா மன்னி சொல்வது தான் சா¢. நீங்க இங்கே தனியா இருந்து வர வேணாம்.எங்க கூட கொஞ்ச மாசமும்,அண்ணா,மன்னியுடனும் கொஞ்ச மாசம் இருந்துண்டு வாங்கோ”என்று சொ ல்லி ரமேஷை ரொம்ப வற்புறுத்தினார்கள். மார்க்கபந்து தம்பதிகளும்,ராமமூர்த்தி தம்பதிகளும் ரமே ஷைப் பார்த்து “உங்க பையன்க சொல்வது தான் சா¢.நீங்க தனியே இனிமே இருக்க வேணாம்.ஒரு பிள்ளை கிட்டே கொஞ்ச மாசமும்,இன்னொரு பிள்ளை கிட்டே கொஞ்ச மாசமும் இருந்துண்டு வாங் கோ.உங்களுக்கு தனிமை இருக்காது ரெண்டு ஆத்லேயும் பேரன் இருக்கான்.அவாளோடநீங்க ‘டைம் ஸ்பெண்ட்’பண்ணி வாங்கோ” என்று சொன்னார்கள்.

ரமேஷ் அவர்கள் சொன்னதற்கு ‘தாங்க்ஸ்’ சொல்லி விட்டு “நான் எங்கே இருந்தாலும்,இந்த ஒரு காலையும்,அக்குள் கட்டையையும் வச்சுண்டு.இருந்து வருவது ரொம்ப சிரமமா இருக்கும்.நீங்க என்னை உங்க கூட வச்சுண்டா நான் உங்களுக்கு பாரமா தான் இருப்பேன்.உதவியா இருக்க முடி யாது.நான் இங்கே கொஞ்ச நாள் இருந்து விட்டு பிறகு உங்களுக்கு எல்லாம் என் ‘ப்லானை சொல் றேன்”என்று சொன்னதும் “சா¢,உங்க இஷ்டபடியே பண்ணிங்கோ”என்று சொல்லி எல்லோரும் கிள ம்பிப் போனார்கள்.

ரமேஷ் மறுபடியும் ஒரு தனி ‘மரம் ஆனான்.

தனக்கு ஆறு டிரஸ்ஸகளை மட்டும் வைத்துக் கொண்டு மீதி ‘ட்ரஸ்களையும்’,லதா துணி மணிகள்,காயத்திரி துணி மணிகள் எல்லாவற்றையும் கொண்டு போய் ‘சேவா சதனில்’கொடுத்து விட்டு வந்தான்.‘லதா மாதிரி எத்தனையோ ஏழைகள் இந்த ‘கான்ஸர்’ வியாதியாலே கஷ்டப்பட்டு ண்டு வறா.அவாளுக்கு வைத்திய செலவு பண்ண நாம ஏன் பண உதவி பண்ணக் கூடாது’ என்று நினைத்து மூனு கோடி ரூபாயை போட்டு,லதா பேர்லே ‘லதா கான்சர் பவுண்டேஷன்’ என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து,அதில் இருந்து மாசா மாசம் வரும் வட்டிப் பணத்தை ‘கான்ஸர்’ பேஷண்ட் டு’களுக்கு கொடுத்து வர ஒரு நிர்வாகியை ஏற்பாடு பண்ணினான் ரமேஷ்.அவன் மனம் சந்தோஷப் பட்டது.’ஆனந்தும் அவன் குடும்பமும்,சந்தோஷூம் அவன் குடும்பமும் சந்தோஷமா இருந்துண்டு வறா.நாம தொட்டு தாலிக் கட்டின லதாவையும்,அவ அம்மாவையும் நன்னா வச்சுண்டு வந்து அவா ‘போன’ பிறகு எல்லா காரியங்களும் கிரமமா பண்ணிட்டோம்.நாம ஏன் காசிக்குப் போய் தினமும் குளிச்சுட்டு,காசி விஸ்வநாதரையும்,விசாலாக்ஷ¢ அம்மனையும் தா¢சனம் பண்ணிண்டு வந்து, ஏழை களுக்கு நிறைய தான தர்மங்கள் எல்லாம் பண்ணிட்டு,ஒரு நாள் என் உடம்பு ரொம்ப முடியாதப்ப, நான் செஞ்ச ‘மஹா பாதகச் செயலுக்கு’ பா¢காரம் தேட கங்கைலே மூழ்கி உயிரை மாய்ச்சிண்டா என் ன.அப்படி பண்ணினா நமக்கு நிச்சியமா ‘பாவவிமோசனம்’ கிடைக்குமே’என்று நினைத்தான் ரமேஷ்.

உடனே தன் ‘ப்லாட்டை’விற்க ஒரு ‘அட்வர்ட்’கொடுத்து.ரெண்டு நாள் ஆனதும் ’ப்லாட் டை’ ஒரு வைர வியாபாரிக்கு நல்ல விலைக்கு விற்று விட்டான்.அவா¢டம் இரண்டு நாள் ‘டைம்’ கே ட்டான்.அவரும் ஒத்துக் கொண்டார்.ரமேஷ் தன் பாங்குக்குப் போய் ஒரு லக்ஷ ருபாயை ‘ட்ரா’ பண்ணிக் கொண்டு,மீதி பணத்தை ஒரு ‘ட்ராப்டா’ வாங்கிக் கொண்டான்.

தன் ‘டிராவல் ஏஜண்ட்டை’கூப்பிட்டு அடுத்த நாள் மூனு மணிக்கு கிளம்பும் ‘ப்லைய்டில்’ காசிக்கு ஒரு ‘டிக்கட் புக்’ பண்ண சொல்லி,ஒரு ‘நாலு ஸ்டார்’ ஹோட்டலில் ஒரு ரூமும் ‘புக்’ பண்ன சொன்னான்.ஒரு மணி நேரம் கழித்து ரமேஷ் தன் ‘ப்லானை’ ஆனந்துக்கும்,சந்தோஷூக்கும், மார்க்கபந்துவுக்கும்,ராமமூர்த்திக்கும் போனில் சொல்லி,முடிந்தால் அவர்களை சென்னை ‘ஏர் போர்ட்’ டில் வந்து பார்க்கும் படி கேட்டுக் கொண்டான்.வேலைகாரனுக்கும்,சமையல் கார மாமாவுக்கும், மாமி க்கும்,ஆறு மாச சம்பளத்தை கொடுத்து வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்ள சொன்னான். அவர்களும் ரமேஷ் கொடுத்த ஆறு மாச சம்பளத்தை அழுது கொண்டே வாங்கிக் கொண்டு “நீங்க எங்கே இருந் தாலும் சந்தோஷமா இருந்து வரணும்”என்று சொன்னார்கள்.ரமேஷ் அவர்களை’தாங்க்’ பண்ணினான்.அடுத்த நாள் சமையல்கார மாமாவும் மாமியும் பண்ண சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு ”என் கூட இருந்த வந்தா எல்லாம் என்னை தனியா விட்டுட்டுப் போயிட்டா.நான் காசிலே என் கடைசி காலத்தை கழிச்சு வர முடிவு பண்ணி இருக்கேன்”என்று சொன்னான்.ரமேஷ் சொன்ன தைக் கேட்டு மூவரும் அழுது கொண்டு இருந்தார்கள் .

ரமேஷ் வைர வியாபா¢யின் செகரட்டரியை ப்லாட்டுக்கு வரச் சொல்லி,கார் டிரைவர் தன் ‘சூட் கேஸை’ காரில் ஏற்றீய பிறகு,அவா¢டம் ‘ப்லாட்’டை பூட்டி சாவியைக் கொடுத்தான்.டிரைவரை சென்னை ‘ஏர் போர்ட்டுக்கு’ போக சொன்னான்.’ஏர் போர்ர்டில்’ இறங்கி தன் சூட் கேஸை ஒரு ‘ட்ராலி யில்’ ஏற்றிக் கொண்டவுடன் ரமேஷ் டிரைவரைப் பார்த்து “நீ,ஆனந்த் கிட்டேயும்,சந்தோஷ் கிட்டேயும் இந்த காரை ஓட்டி வா”என்று சொன்னவுடன் அந்த டிரைவர் அது ‘ஏர் போர்ட்’என்று கூட பார்க்காமல் ரமேஷ் காலைத் தொட்டு அழுதுக் கொண்டே”நீங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருந்து வரணு ங்க” என்று சொன்னான்.ரமேஷ் அவனை ‘தாங்க்’ பண்ணி விட்டு,ஒரு ஆளை கூப்பிட்டு ‘ட்ராலியை’ தன்னுடன் கொண்டு வருமாறு சொல்லி விட்டு, ‘ட்ராலி’கூட தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு நடந்து போனான்.’ஏர் போர்ட்டில்’ காத்துக் கொண்டு இருந்த ஆனந்தும், வசந்தியும்,அவர் கள் குழந்தையும்,சந்தோஷூம்,ரமாவும்,அவர்கள் குழந்தையும்,மார்க்கபந்து தம்பதிகளும்,ராமமூர்த்தி தம்பதிகளும் அழுது கொண்டே ரமேஷூக்கு ‘டா’’டா’காட்டினார்கள்.ரமேஷ் உருவம் மறைந்ததும் அவர்கள் கிளம்பிப் போனார்கள்.

ரமேஷ் ஹோட்டலுக்கு வந்து ‘ரிஸ்ப்ஷன்’கவுண்டரில் “நான் இந்த ‘ரூமில்’ கொஞ்ச நாள் தங்க போறேன்.எனக்கு உங்க ஹோட்டல் கார் ஒன்னும் வேணும்.ரெண்டுத்துக்கும் நான் ‘அடவான்ஸா’ ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் இப்போ தறேன்.நான் இங்கே ஒரு பாங்கில் ஒரு ‘அக்கவுண்ட் ’ஓபன’ பண் ணின பிறகு,உங்களுக்கு நான் காலி பண்ற அன்னைக்கு,மொத்த ‘பேமண்ட்டையும்’ ஒரு ‘செக்கா’ குடுத்து செட்டில் பண்ணி விடறேன்” என்று ஆங்கிலத்தில் சொல்லி,தன் ‘ப்ரீப்’ கேஸைத் திறந்து ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுத்தான்.அந்த ‘ரிஸப்ஷனிஸ்ட்’ ரமேஷ் சொன்னதை ஒத்துக் கொண்டு ரூம் சாவியை ‘ரூம் பாயிடம்’ கொடுத்தார்.அவன் ரமேஷ் ‘சூட் கேஸை’ எடுத்துக் கொண்டு ரூமில் விட்டு விட்டுப் போனான்.

ரமேஷ் ரூமுக்குள் வந்ததும் அவன் கொண்டு வந்து இருந்த சுவாமி படத் தையும்,லதா பட த்தையும் டேபிள் மேலே வைத்தான்.இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அந்த ரூமில் படுத்துக் கொண்டான்.’இனிமே நாம இங்கே இருந்து ‘பாங்க்லே’ இருக்கிற பணம் எல்லாம் தீந்து போறப்ப நாம கங்கையிலே போய் விழுந்துடணும்’என்று தன் மனதில் சொல்லிக் கொண்டான்.

அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு,காரில் ஏறி,காசி விஸ்வநாதரையும்,விசாலாக்ஷ¢ அம்மனையும் கண் குளிர தா¢சனம் பண்ணினான்.பிறகு கங்கை கரைக்குப் போனான். கடைசி படி வரை மெல்ல இறங்கினான்.கங்கா மாதாவைப் பார்த்து “இந்த காலை வச்சுண்டு என்னாலே கங்கை யிலே குளிக்க முடியாதே.என்னை மன்னிச்சிடும்மா” என்று சொல்லி ஆரத்தி காட்டினான்.பிறகு ஹோட்டலுக்கு பககத்திலே இருக்கிற ஒரு ‘பாங்கு’க்குப் போய் தன் பேர்லே ஒரு ‘அக்கவுண்ட் ஓபன்’ பண்ணி,அவன் கொண்டு வந்த ‘ட்ராப்ட்’ பணத்தை அதிலே போட்டு விட்டு,ஒரு ‘செக் புக்’கையும் வாங்கிக் கொண்டான்.ஹோட்டலுக்கு வரும் போது நிறைய ஏழைகளுக்கு பணம் போட்டு வந்தான். கார் டிரைவா¢டம் பணத்தை கொடுத்து புடவைகள்,வேஷ்டிகள் வாங்கி வரச் சொல்லி,ஏழைகளுக்கு ‘வஸ்திர தானம்’ பண்ணினான்.வழியிலே ரெண்டு ரோஜாப் பூ மாலைகளை வாங்கிக் கொண்டு வந்து,ஒரு மாலையை சுவாமி படத்துக்கும்,ஒரு மாலையை லதா படத்துக்கும் போட்டான்.பிறகு ஹோட்டலில் காபி டிபன் சாப்பீட்டான்.ஒரு பத்து நாள் இதைப் போலவே செய்து வந்தான்.அவன் மனம் சந்தோஷப் பட்டது.

ரமேஷ் தன அப்பா அம்மா,கூடப் பிறந்தவன், இவாளுக்கு ‘ஸ்ராத்ததம்’ பண்ண வேண்டிய வேலை ஞாபகம் வரவே அவன் ஒரு நாள் சாயங்காலம் சங்கர மடத்திற்குப் போய் விசாரித்தான்.அங்கு இருந்த ஒரு வாத்தியார் ரமேஷூக்கு அதை எல்லாம் பண்ணிக் கொடுக்க ஒத்துக் கொண்டார்.ரமேஷ் அந்த வாத்தியாருடன் கூடப் போய் தன் அப்பா,அம்மா கூடப் பிறந்தவன்,எல்லோருக்கும் காசியிலும், கயாவிலும்,‘ஸ்ராத்ததை’க் கிரமாக மிகவும் கஷ்டப் பட்டு பன்ணி முடித்தான்.’ஸ்ராத்தம்’ பண்ணி வைத்த இடத்தில் இருந்த ஐம்பது பிராமணர்களுக்கு எல்லாம் ரெட்டை ஜதை வேஷ்டியும்,ஒன்பது கஜம் புடவையையும் வாங்கிக் கொடுத்தான்.அந்த வாத்தியாருக்கு ரமேஷ் மொத்த ‘ஸ்ராத்தத்துக்கும் தாராளமா தக்ஷணைப் பணத்தையும் கொடுத்து,அவருக்கும் ஒரு ரெட்டை ஜதை வேஷ்டியும், அவர் சம்சாரத்துக்கு ஒன்பது கஜம் புடவையையும் வாங்கிக் கொடுத்தான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *