அத்தியாயம்-25 | அத்தியாயம்-26
ஆனந்த் உடனே “வேணாம் வாத்தியார்,நானே சந்தோஷ்க்கு எல்லா மந்திரங்களை சொல்லி அவனை சந்தியாவந்தனம் பண்ண வக்கிறேன்.நான் அமொ¢க்காவிலே இருந்தப்ப ரெண்டு வேளை யும் தவறாம சந்தியாவந்தனம் பண்ணிண்டு இருந்தேன்”என்று சொன்னதும், உடனே வாத்தியார் “நீ ஒரு வாத்தியார் ஆயிட்டாயா,பரவாயில்லையே.சுரேஷ் உன் பையன் உன்னை விட மிஞ்சிடுவான் போல இருக்கே”என்று சொல்லி சிரித்தார்.வாத்தியார்கள் கிளம்பினதும் ரமேஷ் அவர்கள் கூட கீழே போய் அவர்களை வழி அனுப்பி விட்டு வந்தான்.அடுத்த நாளில் இருந்து ஆனந்த் சந்தியாவந்த னம் பண்ணும் போதெல்லாம்,சந்தோஷூம் அவன் கூட உட்கார்ந்துக் கொண்டு அவன் சொல்லும் மந்திரங் களை எல்லாம் சொல்லி வந்து,அவனுடன் சந்தியாவந்தனத்தைப் பண்ணினான்.
ஒரு நாள் சமையல் கார மாமாவும், மாமியும் ரமேஷைப் பார்த்து “எங்க ரெண்டு பேருக்கும் வயசாறது.தவிர காரியம் பண்ணும் போது ரெண்டு கண்ணும் மறைக்கற்து.எங்க பையனும் மாட்டுப் பொண்ணும் சொற்ப சம்பளத்துக்கு சமையல் வேலை ஒரு ‘மெஸ்’லெ வேலை செஞ்சுண்டு வறா.எங்க இடத்லெ நீங்க அவாளை வேலைக்கு வச்சுக்க முடியுமா”என்று தயங்கி தயங்கி கேட்டார்கள்.உடனே ரமேஷ் “எங்களுக்கு ஒரு ஆக்ஷபணையும் இல்லே.நீங்க ரெண்டு பேரும் இந்த ஆத்லே ரொம்ப நன் னா சமையல் பண்ணிண்டு வந்தேள்.உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’.அவாளை அந்த ‘மெஸ்’ வேலை யே விட்டுட்டு நாளையிலே இருந்து இங்கே சமையல் வேலைக்கு வரச் சொல்லுங்கோ.நான் உங்க ரெண்டு பேருக்கும் தலா பத்து லக்ஷம் ரூபாய் தறேன்.நீங்க ரெண்டு பேரும் உங்க கண்களை ஆபரே ஷன் பண்ணிண்டு வந்து உங்க ஆத்லே ரெஸ்ட் எடுத்துண்டு வாங்கோ.மீதி பணத்தை உங்க செலவு க்கு வச்சுக்குங்கோ” என்று சொல்லி இருபது லக்ஷ ரூபாய்க்கு ஒரு செக் எழுதி சமையல்கார மாமாவிடம் கொடுத்தான்.அவர்கள் ரெண்டு பேரும் கண்ணீர் மல்க அந்த செக்கை வாங்கிக் கொண்டு “உங்க குடும்பம் ரொம்ப வருஷத்துக்கு க்ஷமமா இருக்கணும்ன்னு நாங்க ரெண்டு பேரும் பகவனை பிரார்த்த ணை பண்ணீண்டு இருப்போம்”என்று சொன்னார்கள் .காயத்திரியும் லதாவும் ஆச்சரியமாக ரமேஷப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.அடுத்த நாளில் இருந்து சமையல் கார மாமாவின் பையணும் மாட்டு பொண்ணும் ‘ப்லாட்’லே சமையல் வேலைக்கு வந்தார்கள்.
ஆனந்த அமொ¢க்காவில் திரும்பி வந்து ரெண்டு மாசம் ஆனதும் ரமேஷ் குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு,கோவிலுக்குப் போய் சுவாமிக்கு அர்ச்சனைப் பண்ணி விட்டு விபூதி குங்குமப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’ வந்தான்.ஆனந்த் ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ரெடியாக இருந்தான்.ரமேஷ் அவன் பக்கத்தில் வந்து அவன் நெத்தியில் சுவாமி விபூதியை யும் கொஞ்சம் குங்குமத்தையும் இட்டு விட்டான்.ரமேஷூம் ஆனந்தும் சமையல்கார மாமா க் கொடுத்த ‘டிபனை’ச் சாப்பிட்டு விட்டு காப்பியையும் குடித்து விட்டு எழுந்தார்கள்.ரமேஷ் ஆனந் தைப் பார்த்து “ஆனந்த்,அம்மா கால்லேயும்,பாட்டியின் கால்லேயும் நமஸ்காரம் பண்ணிட்டு சுவாமி க்கும் நமஸ்காரம் பண்ணிட்டு என் கூடவா.நான் உன்னை ‘பாக்டரிக்கு’ அழைச்சு போய் எல்லா ‘சீனியர் ஆபீஸர்கள்’ கிட்டேயும் உன்னை ‘இன்ட்ரடியூஸ்’ பண்ணீ வக்கிறேன்”என்று சொன்னான். உடனே ஆனந்த் “அப்பா,நான் சுவாமிக்கு நமஸ்காரம் காத்தாலேயே தினந்தோறும் பண்ணுவது போல பண்ணீட்டேன். இப்போ அம்மாவுக்கும் பாட்டிக்கும் உங்களுக்கும் நமஸ்காரம் பண்றேன்.நீங்களும் வந்து நில்லுங்க”என்று சொன்னான்.ரமேஷ்,லதா,காயத்திரி சேர்ந்து நின்றான்.ஆனந்த் சேர்ந்தார் போல் மூன்று பேருக்கும் நமஸ்காரம் பண்ணி விட்டு எழுந்தான்.ஆனந்தை அழைத்துக் கொண்டு கீழே போனான்.லதா அவர்கள் கூட கீழே போய் “ஆனந்த் நீ அப்பா கூட ‘பக்டரிக்கு’ப் போய்,அவர் கிட்டே இருந்து ‘பாக்டரியை’ப் பத்தின எல்லா விஷயங்க ளையும் நிதானமா கத்துக்கோ. ’பெஸ்ட் ஆப் லக்’”என்று சொல்லி விட்டு அவர்களுக்கு ‘டா’’டா’ச் சொல்லி விட்டு ‘ப்லாட்டுக்குள் வந்தாள்.
ரமேஷ் கிண்டி ‘பாக்டரிக்கு’ வந்து தன் ரூமுக்கு வந்து ஆனந்தையும் தன் ரூமில் உட்கார வைத்தான்.கொஞ்ச நேரம் ஆனந்த் ரமேஷ் எல்லா ‘சீனியர் ஆபீஸர்க¨ளையும்’ ‘மீட்டிங்க் ரூமுக்கு’ வர சொன்னான்.அவர்கள் ‘மீட்டிங்க் ரூமுக்கு’வந்ததும், ரமேஷ் ஆனந்தை முதலில் ‘பாக்டரி மானே ஜிங்க் டைரக்டரிடமும்’,அதன் பிறகு மத்த ‘சீனியர் ஆபீஸர்களிடமும்’ அறிமுகப்படுத்தினான். பிறகு ரமேஷ் அவர்களைப் பார்த்து “இன்னும் கொஞ்ச மாசத்லே ஆனந்த் இந்த ‘பாக்டரியை’ ‘மானேஜ்’ பண்ணிண்டு வருவான்” என்று சொன்னான்.எல்லோரும் சந்தோஷத்தில் தங்கள் கையை ‘டேபில்’ மேல் தட்டி ரமேஷ் சொன்னதை வரவேற்றார்கள்.பிறகு பியூன் எல்லோருக்கும் ‘ஸ்னாக்ஸ்ஸையும்’ காப்பியையும் கொண்டு வந்து வைத்தான்.எல்லோரும் அதை சாப்பிட்டு விட்டு காப்பியைக் குடித்து விட்டு ‘மீட்டிங்க்’ முடிந்ததும் எழுந்து போனார்கள்.அடுத்த நாள் முதல் ஆனந்த் ‘பாக்டரியின்’ ஒவ் வொரு ‘செக்ஷனாக’ப் போய் அங்கே நடக்கும் எல்லா வேலைகளையும் கவனித்து வந்து தன் ‘¨டரியி ல்’ எழுதிக் கொண்டு வந்தான்.அங்கே வேலை செய்து வரும் ‘சார்ஜ்மன்’’,போர்மன்’கள் இடத்திலே யும் ரொம்ப சகஜமாக பழகி வந்தான்.சீக்கிரமாகவே ஆனந்த ‘பாக்டரி’யின் எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டு வந்தான்.
சந்தோஷ்க்கு அன்று ‘டென்த்’ ரிசல்ட் வந்தது.அவன் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ பாஸ் பண்ணி இருந் தான்.ரமேஷ்,லதா,ஆனந்த்,காயத்திரி ,எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்.சந்தோஷை கட்டிக் கொ ண்டு அவனுக்கு ‘கன்கிராஜுலேஷன்ஸ்’ சொன்னார்கள்.ரமேஷ் ஆனந்துக்கு பண்ணா மாதிரி எல் லோரையும் ஒரு பொ¢ய ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய் ‘ட்ரீட்’ கொடுத்தான்.பிறகு ரமே ஷ் சந்தோஷைப் பார்த்து “சந்தோஷ்,நீ ‘ட்வெல்த்’ ‘பாஸ்’ பண்ணிட்டு,அண்ணாவைப் போல I.I.T. சேர்ந்து படிக்கணும்ன்னு நான் ரொம்ப ஆசைப்படறேன்.அதனலே,நான் உன்னை I.I.T.‘கோச்சிங்க் ‘க்லாஸி’லே’சேக்கறேன்” என்று சொல்லி சந்தோஷை அந்த’ கோர்ஸிலே’ சேர்த்து விட்டான்.ரமேஷ் சந்தோஷ்க்கு எல்லா பாடங்களுக்கும் ’ட்யூஷன்’ வைத்தான்.சதோஷூம் க்லாஸ்’ பாடங்களுக்கு நடுவிலே,I.I.T.‘கோச்சிங்க் ‘க்லாஸ் பாடங்களையும் மிகவும் கஷ்டப் பட்டு படித்து வந்தான்.
ஒரு வருஷம் போனதும் ரமேஷ் கிண்டி’பாக்டரி’யின் முழு பொருப்பையும் ஆனந்திடம் ஒப்படைத்து விட்டு, அவன் அம்பத்தூர் ‘பாக்டரி’யை மட்டும் கவனித்து வந்தான்.
சந்தோஷ்க்கு அன்று ‘ட்வெல்த்’ ரிஸல்ட் வர வேண்டிய நாள்.ரமேஷ் காத்தாலேயே எழுந்து குளித்து விட்டு சுவாமி கோவில்லுப் போய் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு குங்குமம் விபூதிப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ப்லாட்டுக்கு வந்து ஆனந்துக்கும் சந்தோஷ்க்கு ம் இட்டு விட்டான். எல் லோரும் காப்பி ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு பத்மா சேஷாத்ரி ஸ்கூலுக்குக் கிளம்பினார்கள்.மணி பத்தடித்ததும் பிரின்ஸிபால் வெளியே வந்து “இந்த வருஷம் சந்தோஷ் ‘ஸ்டேட் பஸ்ட்டா வந்து இரு க்கான்”என்று சொல்லி சந்தோஷ் கையைப் பிடித்து குலுக்கினார்.பிரின்சிபால் போனதும் ரமேஷூம், லதாவும்,காயத்திரியும்,சந்தோஷ்க்கு கையை கொடுத்து “கங்கிராஜுலேஷன்ஸ்’ சந்தோஷ்” சொல்லி சந்தோஷ் கையை பிடித்து குலுக்கினார்கள்.சந்தோஷ் ‘க்லாஸ்’ வாத்தியார்கள் எல்லோரும் ஓடி வந்து சந்தோஷின் கையைப் பிடித்து குலுக்கி ‘கங்கிராஜுலேஷன்ஸ்’ சந்தோஷ்” என்று சொன்னார்கள்.ரமே எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்துப் போய் சந்தோஷ் ‘ட்வெல்த்தில்’ ஸ்டேட் பஸ்ட்ராங்க்’ வாங்கின சந்தோஷதைக் கொண்டாடினான்.
அடுத்த நாளே ரமேஷ் அமொ¢க்காவில் இருக்கும் மிக நல்ல ‘யூனிவர்ஸிட்டிக்கு எழுதி சந்தோ ஷ்க்கு ‘அட்மிஷனுக்கு அப்ளை’ பண்ணீனான்.நெட்டில் அமொ¢க்கா விசாவுக்கு புக்’ பண்ணீனான். குறிப்பிட தினைத்தில் ரமேஷ் கோவிலுக்கு போய் விட்டு,வந்து கோவில் விபூதி குங்குமப் பிரசாதத் தை சந்தோஷ்க்கு இட்டு விட்டு,அவனையும் லதாவையும் அழைத்துக் கொண்டு அமொ¢க்கா ‘கான்சு லேட்டுக்கு’ப் போய் சுவாமியை வேண்டிக் கொண்டு,அவனை ‘எம்பஸீக்குள்’ அனுப்பினான் ரமேஷ். சந்தோஷ் மூனு மணி நேரம் கழித்து ‘விசா’வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.ரொம்ப பதட்டத்து டன் இருந்த ரமேஷூக்கு ஆனந்தம் தாங்கவில்லை.சந்தோஷைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். ரமேஷ் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.அவன் தன் ‘பான்ட் பாக்கெட்டில் இருந்து கைக் குட்டையை எடுத்து கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.ரமேஷ் சந்தோ ஷூக்கு அமொ¢க்கா ‘விசா’ கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட நினைத்து ப்லாட்டுக்கு’ வந்து, எல்லா ‘ரெகார்ட்டுகளையும்’ வைத்து விட்டு,எல்லோரையும் அழைத்து கொண்டு ஒரு பொ¢ய ஹோட்டலுக்கு ப் போய் ‘ஸ்பெஷல் லன்ச்’ சாப்பிட்டு விட்டு ப்லாட்டுக்கு வந்தான்.
அடுத்த நாள் ரமேஷ் சந்தோஷூக்கு ஆனந்துக்கு சொன்னது போல அமொ¢க்காவாவை பத் தின எல்லா நல்ல விவரத்தையும்,கெட்ட விவரத்தையும் விவரமாக சொல்லி “சந்தோஷ் நீ படிப்பிலே ரொம்ப ‘போகஸ்ட்டா’ இருந்து வரணும்”என்று சொல்லும் போது ரமேஷ் குரல் தழு தழுத்தது.அப்பா குரல் தழு தழுப்பதைக் கவனித்தான் சந்தோஷ். அவன் உடனே “அப்பா,நீங்க சொல்றது எனக்கு நன் னா புரியறது.நீங்க கவலைப்படாம இருந்து வாங்க.நான் எந்த கெட்ட பழக்கத்துக்கும் போகாம வெறு மனே படிப்பில் மட்டும் ‘போகஸ்ட்டா’ இருந்து படிச்சு வருவேன்.எனக்கு இந்த ‘விஷயத்தே’ பத்தி அண்ணா ரொம்ப விவரமா சொன்னார்”என்று சொன்ன பிறகு தான் ரமேஷ் சந்தோஷப் பட்டான். வாத்தியாரை கேட்டு சந்தோஷ் அமொ¢க்கா போக ஒரு நல்ல நாள் பார் த்து அமொ¢க்கா போக ‘ஏர் டிக்கட்’ வாங்கினான் ரமேஷ்.சந்தோஷை அழைத்துக் கொண்டு அவன் அமொ¢க்கா போக அவனுக்கு நல்ல ‘பாரின்’பெட்டிகளையும்,நிறைய டிரஸ்களையும்,அவனுக்கு வேண்டிய மற்ற எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தான்.வாத்தியார் சொன்ன நல்ல நாள் அன்று ரமேஷ் எல்லோரையும் அழைத்து கொண்டு ‘ஏர்போர்ட்டுக்கு போய் சந்தோஷை ‘ப்லேயின்’ ஏற்றீவிட்டு வந்தான்.
அடுத்த நாள் காத்தாலே வழக்கம் போல் ரமேஷ் எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு சமையல் கார மாமா கொடுத்த் காப்பியைக் குடித்து விட்டு கோவிலுக்கு கிளம்பினான்.வழி நெடுக அவனுக்கு சந்தோஷ் ஞாபகமாகவே இருந்தது.சந்தோஷ் அமொ¢க்கா போ ய் சேர்ந்ததும் ‘ஏர் போர்ட்டில்’ ஒரு சீனியர் பையன் சந்தோஷை ‘ரிஸீவ்’ பண்ணீ,அவனுக்கு சாப்பிட வாங்கிக் கொடுத்து அவனை தன் காரில் அழைத்துக் கொண்டு போய் சந்தோஷ் தங்கி இருக்க வேண்டிய ரூமைக் காட்டினான்.சந்தோஷூடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு அந்த சீனி யர் பையன் கிளம்பிப் போகும் போது “சந்தோஷ்,உனக்கு என்ன ‘ஹெல்ப்’ வேணுனாலும் என்னை தயக்கம் இல்லாம கேளு.என் செல் போன் நம்பரை எழுதிக்கோ” என்று சொல்லி விட்டு அவன் செல் போன் நம்பரைக் சந்தோஷூக்கு கொடுத்து விட்டுப் போனான்.அவன் கிளம்பிப் போ னதும் சந்தோஷ் சென்னையில் தன் அப்பாவை ‘போனில்’ கூப்பிட்டு எல்லாவற்றையும் விவரமாக சொன்னான். ரமே ஷூம்,லதாவும்,காயத்திரியும்,ஆனந்தும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.
சந்தோஷ் தன் யூனிவர்சிட்டி படிப்பை நன்றாக படித்து வந்தான்.அடிக்கடி எல்லோருடனும் தான் நன்றாக படித்து வருவதை சொல்லி வந்தான் சந்தோஷ்.ரமேஷ் கிள்ம்பிப் போனதும் லதா அம் மாவிடம் வந்து “அம்மா,ஆனந்தைப் போல சந்தோஷூம் அமொ¢க்கா படிக்கப் போய் இருக்கான்.அந்த அம்பாள் அனுக்கிஹத்தாலே சந்தோஷூம் அமொ¢க்காப் படிப்பை நன்னா படிச்சுட்டு வரணும்”என்று சொன்னவுடன் காயத்திரி உடனே ”ஆமாம் லதா,அந்த அம்பாள் கடாக்ஷத்தாலே சந்தோஷூம் நன்னா படிச்சு வருவான்.நீ கவலைப் படாம இருந்து வா”என்று சொல்லி லதாவுக்கு தேத்தறவு சொன்னாள்.
ரெண்டு வருஷம் ஆனதும் சந்தோஷ் அமொ¢க்காவில் MS படிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்தான்.ரமேஷ்,லதா,காயத்திரி,ஆனந்த் எல்லோரும் சென்னை ஏர்போர்ட்டுக்குப் போய் சந்தோஷூக்கு மாலைப் போட்டு ‘பொக்கேயும்’ கொடுத்து அவனை வரவேற்றார்கள்.‘ஏர் போர் ட்டில்’ சந்தோஷ் அப்பாவிடம் “அப்பா நீங்க சொன்னா மாதிரியே அமொ¢க்காவில் இருக்கும் போது நான் படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்தி மத்த எந்த கெட்ட பழக்கத்துக்கும் போகாம, இங்கே எப்படி இருந்தேனோ,அப்படியே திரும்பி வந்து இருக்கேன்” என்று சொன்னதும் ரமேஷ் கண்களில் நீர் வழிந்தது.பாக்கெட்டில் இருந்து கைக் குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “ரொம்ப தாங்க்ஸ் சந்தோஷ்.ஐ ஆம் ரியலி வொ¢ ப்ரௌட் ஆப் யூ’.எனக்கு ரொம்ப பெருமையா இரு க்கு” என்று சொல்லி சந்தோஷை கட்டிப் பிடித்துக் கொண்டான் ரமேஷ்.எல்லோரையும் அப்படியே நேரே ஹோட் டல் தாஜ்க்குப் அழைத்து போய் சந்தோஷ் அமொ¢க்காப் போய் MS ‘டிகிரீ’ வாங்கி வந்த சந்தோஷ சமாசாரத்தைக் கொண்டாடினார்கள்.
பிறகு ரமேஷ் எல்லோரையும் அழைத்து கொண்டு வந்து ‘ப்லாட்டில்’ விட்டு விட்டு “சந்தோஷ் உனக்கு அமெரிக்காலே இருந்து திரும்பி வந்த ‘ஜெட் லாக்’ இருக்கும். நீ ஒரு வாரம் நன்னா ‘ரெஸ்ட்’ எடுத்துக்கோ.முடிஞ்ச போது உன் ‘ப்ரெண்ட்ஸை’ எல்லாம் போய் பாத்துட்டு வா.சென்னை I.I.T. க்குப் போய் உன் ‘புரப்சர்களை’ எல்லாம் ‘மீட்’ பண் ணிட்டு வா.நான் ரெண்டு மாசம் போனதும் உன்னை என்னோடு அமபத்தூர் ‘பாக்டரிக்கு’ அழைச்சுப் போய் உன்னை பாக்டரியில் ‘இன்ட்ரட் யூஸ்’ பண்ணீ விடறேன்.நீ பாக்டரி வேலையை கொஞ்சம் கொஞ்சமா கத்துண்டு வா.நீ ஓ.கே.ன்னு எப்ப சொல்றயோ.அப்ப உன் கிட்ட‘பாக்டரியின்’முழு பொருப்பையும் ஒப்படைக்கிறேன்”என்று சொ ன்னான்.உடனே சந்தோஷ் ”ரொம்ப தாங்க்ஸ்ப்பா.நீங்க சொன்னா மாதிரியே நான என் ‘ப்ரெண்ட் ஸை’ எல்லாம் போய் பாத்துட்டு வரேன்.நான் சென்னை I.I.T.க்கு போய் என் ‘புரப்சர்களை’ எல்லா ரையும் ‘மீட்’ பண்ணிட்டு வரேன்”என்று சொன்னான்.
சந்தோஷ் அமொ¢க்காவில் இருந்து ரெண்டு மாசம் ஆனதும் ரமேஷ் குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு,கோவிலுக்குப் போய் சுவாமிக்கு அர்ச்சனைப் பண்ணி விட்டு விபூதி குங்குமப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’ வந்தான்.சந்தோஷ் ‘டிரஸ்’ பண் ணிக் கொண்டு ரெடியாக இருந்தான்.ரமேஷ் அவன் பக்கத்தில் வந்து அவன் நெத்தியில் சுவாமி விபூதியை யும் கொஞ்சம் குங்குமத்தையும் இட்டு விட்டான்.ரமேஷூம் சந்தோஷூம் சமையல்கார மாமாக் கொடுத்த ‘டிபனை’ச் சாப்பிட்டு விட்டு காப்பியையும் குடித்து விட்டு எழுந்தார்கள்.ரமேஷ் சந்தோஷைப் பார்த்து சந்தோஷ் சுவாமிக்கும் நமஸ்காரம் பண்ணிட்டு,அம்மா,பாட்டி.ஆனந்த், நாலு பேருக்கும் நமஸ்காரம் பண்ணிட்டு என் கூடவா.நான் உன்னை ‘பாக்டரிக்கு’அழைச்சு போய் எல் லா ‘சீனியர் ஆபீஸர்கள்’ கிட்டேயும் உன்னை ‘இன்ட்ரடியூஸ்’ பண்ணீ வக்கிறேன்”என்று சொன்னா ன்.உடனே சந்தோஷ் நாலு பேருக்கும் சேர்ந்தார் போல் நமஸ்காரம் பண்ணினான்.லதா ரமேஷ்,சந்தோ ஷ் கூட ‘ப்லாட்டுக்கு’ கீழே போய் “சந்தோஷ்,நீ அப்பா கூட‘பாக்டரிக்கு’ப் போய் அண்ணாவைப் போல அவர் கிட்டே இருந்து ‘பாக்டரியை’ப் பத்தின எல்லா விஷயங்களையும் நிதானமா கத்துக்கோ. ’பெஸ்ட் ஆப் லக்’”என்று சொல்லி விட்டு அவர்களுக்கு ‘டா’’டா’ச் சொல்லி விட்டு வந்தாள்.
ரமேஷ் அம்பத்தூர் ‘பாக்டரியில் தன் ரூமுக்கு வந்து சந்தோஷையும் தன் ரூமில் உட்கார வைத்தான்.கொஞ்ச நேரம் ஆனந்த் ரமேஷ் எல்லா ‘சீனியர் ஆபீஸர்க¨ளையும்’ ‘மீட்டிங்க் ரூமுக்கு’ வர சொன்னான்.அவர்கள் ‘மீட்டிங்க் ரூமுக்கு’வந்ததும், ரமேஷ் சந்தோஷை முதலில் ‘பாக்டரி ‘மா னேஜிங்க் டைரக்டரிடமும்’,அதன் பிறகு மத்த ‘சீனியர் ஆபீஸர்களிடமும்’ அறிமுகப்படுத்தினான். ரமேஷ் அவர்களைப் பார்த்து “இன்னும் கொஞ்ச மாசத்லே சந்தோஷ் இந்த ‘பாக்டரியை’ ‘மானேஜ்’ பண்ணிண்டு வருவான்” என்று சொன்னான்.எல்லோரும் சந்தோஷத்தில் தங்கள் கையை தட்டி ரமே ஷ் சொன்னதை வரவேற்றார்கள்.பிறகு பியூன் எல்லோருக்கும் ‘ஸ்னாக்ஸ்ஸையும்’ காப்பியையும் கொண்டு வந்து வைத்தான்.எல்லோரும் அதை சாப்பிட்டு விட்டு காப்பியைக் குடித்து விட்டு ‘மீட்டி ங்க்’ முடிந்ததும் எழுந்து போனார்கள்.
அடுத்த நாள் முதல் ஆனந்த் ‘பாக்டரியின்’ ஒவ்வொரு ‘செக்ஷனாக’ப் போய் அங்கே நடக்கும் எல்லா வேலைகளையும் கவனித்து வந்து தன் ‘¨டரியில்’ எழுதிக் கொண்டு வந்தான்.அங்கே வேலை செய்து வரும் ‘சார்ஜ்மன்’’,போர்மன்’கள் இடத்திலே யும் ரொம்ப சகஜமாக பழகி வந்தான். சந்தோ ஷூம் எல்லா ‘செக்ஷன்’ வேலைகளையும் சீக்கிரமாக கற்றுக் கொண்டு வந்தான்.
ரமேஷ் ஆனந்துக்கு பண்ணது போல ஒரு வருஷம் ஆனதும் அம்பபதூர் ‘பாகடரி’யின் முழு பொருப்பையும் சதோஷிடம் குடுத்து விட்டு நிம்மதியாக ‘ப்லாட்டி’லேஇருந்து வந்தான்.அவனுக்கு இப்போது சந்தோஷமாக் இருந்தது.ரமேஷ் தினமும் ‘ப்லாட்’டில் நிதானமாக எழுந்து குளித்து விட் டு,சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு, டிபன்,காபி சாப்பிட்டு விட்டு,தினம் ஒரு கோவ ¢லாகப் போய் சுவாமியை வேண்டிக் கொண்டு வந்தான்.அவன் ஆசைப் பட்டது போல கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீக வாழ்க்கைக்கு வர ஆரம்பித்தான்.நேரம் கிடைக்கும் போது வாரத்தில் நாலு நாள் ரெண்டு ‘பாக்டரி’க்கும் போய் ரெண்டு பிள்ளைகள் ‘பாக்டரி’யை எப்படி நடத்தி வருகிறார்கள் என் று கண் காணித்து வந்தான்.ரமேஷ் ஒரு ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு,நேரம் கிடைக்கும் போது ரெண்டு பாக்டரிகளை கண்காணித்து வருவதை நினைத்து லதாவும், காயத்திரியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.
ரமேஷ் கோவில் போய் இருந்த போது காயத்திரி லதாவிடம் “லதா,’அவர்’உன்னை கல்யாணம் பண்ணீண்டு,உன்னையும் என்னையும் சந்தோஷமா வச்சுண்டு வந்து,அப்புறமா உனக்கும் ‘அவரு’ க்கும் பொறந்த குழந்தையையும்,ஆனந்தையும் அமொ¢க்கா அனுப்பி படிக்க வச்சுட்டு,அவா ரெண்டு பேரும் MS ‘டிகிரி’ வாங்கிண்டு வந்தப்புறம்.அவர் கிட்டே இருந்த ‘பாக்டரிளே’ குடுத்துட்டு,நம்ம ரெண்டு பேருக்கும் இந்த ராஜ போக வாழ்க்கையை குடுத்துண்டு,அவர் ஆசைப் பட்ட ஆன்மீக வாழ் க்கையை வாழ்துண்டு வறார்.இதை எல்லாம் நினைச்சு பாத்தா,எனக்கு எல்லாமே ஒரு கனவு போல இருக்கு.இது எல்லாம் அந்த அம்பாள் கடாக்ஷத்தால் தான் கிடைச்சு இருக்கு” என்று சொல்லி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டு அவள் தினம் வேண்டி வரும் அம்பாளுக்கு தன் நன்றிகளை சொன் னாள்.லதா அம்மாவைக் கட்டிக் கொண்டு “அது மட்டும் இல்லேம்மா அவர் எனக்கு இங்கிலீஷ் ‘டியூ ஷன்’ வச்சு,என்னை இங்கிலீஷ் நன்னா படிக்க வச்சு,என்னை BA, MA, படிக்க ‘கரெஸ்பாண்டன்ஸ்’ ‘கோர்ஸிலே’ சேத்து இன்னைக்கு ஒரு MA ஆகி இருக்கார்.எல்லார் எதிரிலேயும் ஒரு மதிக்க தக்க பொம்ம்னாட்டியா ஆக்கி இருக்கார்.தனக்கு பொறக்காத ஆனந்தையும் வெறுக்காம தன் சொந்த குழந் தை போல இன்னி வரைக்கும் நினைச்சுண்ண்டு வறாரேம்மா.எவ்வளவு பெரும் தன்மைம்மா அவ ருக்கு.நானும் நீயும் ஈறேழு ஜென்மத்துக்கும் அவருக்கு செருப்பா உழைச்சா லும் போறாதும்மா” என் று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண் டாள்.
ரமேஷ் ஒரு நாள் எல்லோரும் ‘ப்லாட்’டில் இருந்த போது “லதா,ஆனந்துக்கு வயசாகிண்டு வறது.நான் இந்த வாரம் ‘ஹிண்டு மாட்ரிமோனியல்’ஆனந்துக்கு ஒரு நல்ல பொண்ணு வேணும்ன்னு ‘அட் வர்ட் தரலாம்ன்னு இருக்கேன்.நீஎன்ன சொல்றே”என்று கேட்டான்.”ரொம்ப கரெக்ட்.இந்த சுப காரியத்தே உடனே பண்ணுங்க”என்று சொன்னாள்.உடனே காயத்திரி “நானே உங்க கிட்ட இதை ஞா பகப் படுத்த ரெண்டு தடவை லதா கீட்டே சொன்னேன்.அவளும் உங்க கிட்ட சொல்றேன்னு சொல் லிண்டு இருந்தா”என்று சொன்னதும்,“ஆமாம்.அம்மா என் கிட்டே ரெண்டு தடவை இந்த சமசார த்தை உங்க கீட்ட ஞாபகப் படுத்த சொன்னா.நான் தான் உங்க கிட்ட அதைச் சொல்ல சரியான டயத் தைப் பாத்துண்டு இருந்தேன்.இன்னைக்கு நீங்களே சொல்லிட்டேள்”என்று பதில் சொன்னாள் லதா.
அடுத்த நாளே ரமேஷ் ‘ஹிண்டு மாட்ரிமோனியலில்’ ஆனந்த் பத்தின ‘டீடேல்ஸ்’ எல்லாவற் றையும் அந்த விளம்பரத்தில் கொடுத்தான்.லதா உடனே “ஆனந்துக்கு நல்ல பொண்ணா கிடைக்கணு ம்”என்று சொல்லும் போது அவள் கண்களில் நீர் வழிந்தது.ரமேஷ் “கவலைப்படாதே லதா.ஆனந்துக் கு நிச்சியமா ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா” என்று சொன்னான்.ரமேஷ் செல் ‘போன்’ அடித்தது. செல் பொனை ஆன் பண்ணி விட்டு ரமேஷ் போனில் “சுரேஷ் ஹியர்”என்று சொன்னதும் அந்தப் பக் கத்தில் இருந்து “குட் மார்னிங்க் மிஸ்டர் சுரேஷ்,நான் மார்க்கபந்து பேசறேன்.நான் இண்டியா சிமென் ட்ஸ் கம்பனி CMD.இன்னைக்கு வந்த ‘ஹிண்டு’ பேப்பர்லே உங்க சன் ‘மாட்ரிமோனியல் ‘அட்வ்ரட்’ பாத்தேன்.எனக்கு ஒரே பொண்ணு.பேர் வசந்தி.அவ இந்த வருஷம் அமொ¢க்காவில் MBA ‘பைனா ன்ஸ்’ பண்ணிட்டு வந்து இருக்கா.சென்னை வந்து நாலு மாசம் தான் ஆறது.என்னுடன் கம்பனிக்கு சும்மா வந்துப் போய்ண்டு இருக்கா.’ஷீ இஸ் ட்வென்டி போர் யிரஸ் ஓல்ட்’.உங்க ‘சன்’ னுக்கு நான் அவளை பாக்கலாம்ன்னு இருக்கேன்.நான் ஞாயித்துக் கிழமை சாயங்காலமா ஒரு நாலு மணிக்கு ஜாதகப் பா¢வர்த்தணைக்கு உங்க ப்லாட்டுக்கு வரலாமா”என்று கேட்டார்.
ரமேஷ் தன்னை சுதாரித்துக் கொண்டு ”ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் மார்க்கபந்து.நீங்க ஞயா யித்துக் கிழமைசாயங் காலம் நாலு மணிக்கு என் ‘ப்லாட்டுக்கு’ வாங்கோ.’வீ வில் பி வெயிடிங்க் பார் யூ’”என்று சொல்லி போனைக் ‘கட்’ பண்ணீனான்.லதா ஆசையை அடக்க முடியாமல் “யாரு போனலே. ஆனந்துக்கு இடமா.யாரு பேசினா”என்று மூச்சு விடாமல் கேட்டாள்.ரமேஷ் “யாரோ மிஸ்டர் மார்க்கபந்துவாம்.அவர் இண்டியா சிமென்ட்ஸ் கம்பனிலே CMDயா இருக்காராம்.அவருக்கு ஒரே பொண்ணாம் பேரு வசந்தியாம்.வயசு இருபத்தி நாலு ஆறதாம்.இந்த வருஷம் தான் அமொ¢க்கா லே MBA ‘பைனான்ஸ்’ பாஸ் பண்ணிட்டு வந்து இருக்காளாம்.ஞாயித்துக் கிழமை சாயங்காலம் நாலு மணிக்கு அவர் ஜாதக பா¢வர்த்தணைக்கு வறாராம்.நான் அவரை வாங்கோன்னு சொன்னேன் லதா”என்று எல்லா விவரத்தையும் சொன்னான்.லதாவும் காயத்திரியும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
ஞாயிற்றுக் கிழமை மணி நாலு அடித்தது.’காலிங்க் பெல்’ அடித்ததும் லதா வாசல் கதவைத் திறந்து,வாசலில் நின்றுக் கொண்டு இருந்த மார்க்கபந்துவையும் அவர் ‘வைப்பையும்’ “வாங்கோ, உள்ளே வாங்கோ”என்று சொல்லி கையைக் கூப்பிச் சொல்லி உள்ளே வர சொன்னாள்.மார்க்கபந்துவும் அவர் ‘வைபும் உள்ளே வந்தார்கள்.ரமேஷை பார்த்து “நமஸ்காரம் சார்.என் பேர் மார்க்கபந்து.இவ என் ‘வைப்’ மரகதம்”என்று சொல்லி தன்னையும் தன் மணைவியையும் அறிமுகப்படுத்தினார் மார்க்கபந்து.மரகதம் தான் வாங்கி வந்த தேங்காய், வெத்திலை, பாக்கு பழங்கள், பூ,ரவிக்கை துண்டு எல்லாவற்றையும் லதாவிடம் கொடுத்தாள்.லதா அவைகளை வாங்கிக் கொண்டு போய் பூஜை ரூமில் வைத்து விட்டு வந்தாள்.ரமேஷ் சோபாவைக் காட்டி அவர்களை “உக்காருங்கோ” என்று சொன்னான். மார்க்ககபந்துவும் அவர் ‘வைபும்’ மரகதமும் ரமேஷ் காட்டிய சோபாவில் உட்கார்ந்தார்கள்.
பிறகு ரமேஷ் “இவ என் ‘வைப்’ லதா.இவா என் மாமியார்.இது என் பொ¢ய ‘சன்’ ஆனந்த். இவன் என் ‘செகண்ட் சன்’ சந்தோஷ்”என்று சொல்லி தன் குடும்பத்தை அறிமுகப் படுத்தினான். ரெண்டு நிமிஷம் ஆனதும் ”மிஸ்டர் சுரேஷ்,நான் சென்னை IITல் ‘பாஸ்’ பண்ண பிறகு ‘இண்டியா சிமெண்ட்ஸ் கம்பனியிலே வேலைக்கு சேந்து,படிபடியா ஒசந்து,இப்போ CMD ஆ வேலை பாத்து வரே ன்.என் ‘வைப்’ மரகதம், BEபாஸ் பண்ணிட்டு,Chennai Telephonesலே வேலைக்கு சேந்து படிப் படியா ஒசந்து இப்போ Deputy General Manager ஆ வேலை பண்ணிண்டு வறா.என் பெண் வசந்தி இங்கே M.Com.பாஸ் பண்ணிட்டு,அமொ¢க்காப் போய் MBA ‘பைனாஸ்’ பண்ணிட்டு,இந்த வருஷம் மார்ச்சில் தான் சென்னைக்கு திரும்பி வந்தா.இப்ப என் கூட வந்து என் கம்பனியில் ‘பை னான்ஸ்’ செக்ஷனைப் பார்த்துண்டு இருக்கா” என்று சொன்னார்.
உடனே ரமேஷ்” நான் சென்னை I.I.Tயில் கெமிக்க்ல இஞ்சினியா¢ங்க் பாஸ் பண்ணிட்டு அமெ ரிக்கா போய் MS பண்ணிட்டு,எங்களுக்கு இருந்த ரெண்டு ‘ப்லாஸ்டிக்’ கம்பனிகளை கவனிச்சுண்டு வந்துண்டு இருந்தேன்.ஆனந்த் சென்னை I.I.T.யில் கெமிக்கல் இஞ்சினியா¢ங்க் பாஸ் பண்ணி¢ட்டு அமொ¢க்கா போய் MS பண்ணிட்டு வந்து ஏழு வருஷம் ஆறது.இப்ப ஆனந்த் கிண்டி ‘பாக்டரியை’ கவனிச்சுண்டு வரான்.என் ‘செகண்ட் சன்’ சந்தோஷூம் I I T யில் கெமிக்கல் இஞ்சினியா¢ங்க் பாஸ் பண்ணிட்டு அமொ¢க்கா போய் MS பண்ணிட்டு சென்னைக்கு வந்தான்.அவன் இப்போ அம்பத்தூர் பாக்டரியை கவனிச்சுண்டு வறான்.எனக்கு ‘டைம்’ கிடைக்கும் போது ரெண்டு பாக்டரிகளையும் போய் கவனிச்சுண்டு வறேன்.லதா M.A.History பாஸ் பண்ணி ட்டு,ஆத்தை கவனி¢ச்சுண்டு வறா” என்று சொன்னான்.
உடனே “ரெண்டு சன்ஸ்ஸ¤ம் I.I.T.யில் கெமிக்கல் இஞ்சினியா¢ங்க் பாஸ் பண்ணிட்டு அமொ¢ க்கா போய் MS பாஸ் பண்ணீ வந்து இருக்காளா” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மார்க்கபந்து. ரமேஷ்” ஆமாம்”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சமையல்கார மாமா ரெண்டு ஸ்வீட், ரெ ண்டு காரத்தை ‘ப்லேட்டிகளில்’ வைத்து எல்லோர் முன்னாலேயும் கொண்டு வந்து வைத்தார்.கொஞ்ச் நேரம் ஆனதும் மார்க்கபந்து ”நான் கேக்கறேன்னு தப்பா எடுத்துகாதீங்கோ,உங்க கால்…” என்று கே ட்டு முடிக்கவில்லை,ரமேஷ் தன் ‘பாமிலி ட்ராஜடியை’ சுருக்கமாக சொன்னான்.உடனே மார்க்கபந்து வும் மரகதமும் “கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு”என்று சொன்னார்கள்.பிறகு பேருக்கு கொஞ்சம் டிபனை எடுத்துக் கொண்டு காபியைக் குடித்தார்கள்.மார்க்கபந்து “காபி ரொம்ப நன்னா இருந்தது மாமா”என்று சொல்லி சமையல் கார மாமாவை புகழந்தார்.
கொஞ்ச நேரம் ஆனதும் மார்க்கபந்து தன் ‘ப்ரீப்’ கேசைத் திறந்து தன் பெண் வசந்தியின் ஜா தகத்தையும்,போட்டோ ஒன்றையும் ரமேஷிடம் கொடுத்தார்.பெண்ணின் ஜாதகத்தையும் போடோவை யும் வாங்கிக் கொண்ட ரமேஷ் “இந்தாங்கோ என் பையன் ஆனந்தின் ஜாதகம்”என்று சொல்லி ஆனந் தின் ஜாதகத்தை மார்க்கபந்துவிடம் கொடுத்தான்.லதாவைப் பார்த்து லதா”இந்த ஜாதகத்தை சுவாமி படத்துக் கிட்டே வச்சுட்டு,போட்டோவை எல்லோரும் பாருங்க”என்று சொன்னான் ரமேஷ்.ஜாகத்தை வாங்கிக் கொ¡ண்ட மார்க்கபந்து “சார்,நான் ரெண்டு ஜாதகத்தையும் எங்க ஜோஸ்யர் கிட்டே காட்டி ஜாதகப் பொருத்தம் பார்த்துட்டு உங்களுக்கு போன் பண்றேன்”என்று சொன்னார்.ரமேஷ் ”நானும் ஜாதகப் பொருத்தம் பாக்கறேன்”என்று சொன்னான்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு மார்க்கபந்து “அப்போ நாங்க போயிட்டு வரோம்”என்று சொல்லி எழுந்தார்.லதா மரகத்திற்கு தேங்காய், வெத்திலை,பாக்கு,ரவிக்கைத் துண்டு,ரெண்டு ஆப்பிள் எல்லாம் வைத்து ‘வெத்திலை பாக்கு’ கொடு த்தாள்.மரகதமும் லதா கொடுத்த ‘வெத்திலை பாக்கை’ வாங்கிக் கொண்டாள்.
ரமேஷூம் லதாவும் அவர்கள் கூட ‘லிப்ட்டில்’ கீழே போய் அவர்களை வழி அனுப்பி விட்டு ‘ப்லாட்’டுக்கு வந்தார்கள்.உள்ளே வந்த ரமேஷ்” பொண்ணு போட்டோவ பாத்தேளா,எப்படி இருக் கா.முக்கியமா ஆனந்துக்குப் பிடிச்சு இருக்கா” என்று கேட்டுக் கொண்டே வந்து சோபாவில் உட்கார்ந் தான்.லதா”பொண்ணு பார்க்க ‘ஹோம்லியா’த் தான் இருக்கா.ஆனந்த் உனக்கு பொண்ணை ப் பிடிச்சு இருக்கா.சந்தோஷ் நீ என்ன சொல்றே”என்று கேட்டாள்.ரெண்டு பேரும் போட்டோவைப் பார்த்து “பொண்ணு நன்னா இருக்கா”என்று சொல்லி விட்டு வெளீயே போய் விட்டார்கள்.அவர்கள் போனதும் “லதா,ஆனந்த வசந்தி மனப் பொருத்தம் தான் ரொம்ப முக்கியம்.ஆனந்துக்கு கல்யாணம் ஆகி,அவா ரெண்டு பேரும் தனியா சந்தோஷமா இருந்து வரட்டும்.நான் ஆனந்துக்கு ஒரு பொ¢ய ‘ப்லாட்’ வாங் கி அவாளைத் தனி குடித்தனம் வச்சு விடப் போறேன்”என்று ரமேஷ் சொல்லி முடிக்க வில்லை,லதா ஆச்சரியத்துடன் ”என்ன சொல்றேள்.கல்யாணம் ஆனப்புறம் ஆனந்தையும் அந்தப் பொண்ணையும் நீங்க தனி குடித்தனம் வச்சு விடப் போறேளா.இங்கே ஆனந்தும்,அந்தப் பொண்ணும்,என்னோடவும், அம்மாவோடவும்,உங்களோடவும் இருக்க போறது இல்லையா”என்று ஏக்கத்துடன் கேட்டாள்.
ரமேஷ் சிரித்துக் கொண்டே”அந்த காலத்து பொண்ணு மாதிரி வசந்தி மாமியாருக்கும், மாமனா ருக்கும்,மாமியாரின் அம்மாவுக்கும் ‘சிஸ்ரூஷை ‘பண்ணிண்டு இருக்கிற காலம் இல்லே.அவா ரெண் டு பேரும் நிறைய படிச்சவா.அவா உலகமே தனி.நம்ம உலகமே தனி லதா.வீணா ஆசையை மனசிலே வளத்துண்டு வந்து,அப்புறமா கஷ்டப்படாதே.உன் மனசை இப்போ பிடிச்சே பக்குவப்படுத்திகோ” என்று சொல்லி விட்டு எழுந்து ‘பெட் ரூமுக்கு’ப் போனான்.லதாயும்,காயத்திரியும் ரமேஷ் இப்படி சொல்லி விட்டுப் போவனதை நினைத்து யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.
அடுத்த நாள் காத்தாலே ரமேஷ் எழுந்து குளித்து விட்டு கோவிலுக்குப் போய் விட்டு விபூதி குங்குமப் பிரசாத்ததை எடுத்துக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’வந்தான்.செல் போனை எடுத்து ஆத்து ஜோஸ்யரை ஆத்துக்கு வரச் சொல்லி ரெண்டு ஜாதகத்தையும் காட்டினான்.அவர் ரெண்டு ஜாதகத் தையும் பார்த்து ரெண்டு ஜாதகமும் நன்றாக பொருந்தி இருக்கு என்று சொல்லி விட்டு ரமேஷ் கொ டுத்த ஆயிரம் ருபாயை வாங்கி கொண்டு போனார்.ரமேஷ் செல் போன் அடித்தது.செல் போனை ஆன் பண்ணி பேச ஆரம்பித்தான் ரமேஷ்.”மிஸ்டர் சுரேஷ்,நான் மார்க்கபந்து பேசறேன்.எங்க ஆத்து ஜோஸ்யர் நேத்து ஆத்துக்கு வந்தார்.ரெண்டு ஜாதகத்தையும் பாத்துட்டு ரெண்டு ஜாதகங்களும் ரொ ம்ப நன்னா பொருந்தி இருக்குன்னு சொன்னார்” என்று சொன்னார்.உடனே ரமேஷ்” எங்க ஆத்து வா த்தியார் கூட ரெண்டு ஜாதகமும் பொருந்தி இருக்குன்னு சொல்லிட்டார்”என்று சொன்னான்.மார்க்க பந்து ரமேஷிடம் “மிஸ்டர் சுரேஷ்,நமப ரெண்டு குடும்பமும் ‘மீட்’ பண்ணி ஆயிடுத்து.இப்போ ஆன ந்த், வசந்தி ரெண்டு பேருடைய மனப் பொருத்தம் தான் ரொம்ப முக்கியம.நான் வர ‘சண்டே’ ‘லன்சு க்கு’ ஹோட்டல் தாஜ்லே ரெண்டு பேர் உக்காற ஒரு ‘சீட் புக்’ பண்ணி இருக்கேன்.நீங்க உங்க ‘சன்’ ஆனந்தை அங்கே அனுப்ப முடியுமா”என்று கேட்டதும் ரமேஷ் “ஓ.கே.நான் ஆனந்தை சண்டே ‘லன்சுக்கு’ ஹோட்டல் தாஜ்க்கு அனுப்பி வக்கிறேன்”என்று சொல்லி போனை ‘கட்’ பண்ணினான். ரமேஷ் மார்கபந்து சொன்னதை எல்லோரிடமும் சொன்னான்.
ஞாயித்துக் கிழமை ரமேஷ் காலையிலே எழுந்து குளித்து விட்டு.கருமாரி அம்மன் கோவிலுக் குப் போய் விட்டு விபூதி குங்குமப் பிரசாதத்தைக் வாங்கிக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’ வந்தான்.உள் ளே வந்ததும் ரமேஷ் ஆனந்தையும்சந்தோஷையும் கூப்பிட்டு அவர்களுக்கு நெத்தில் கொஞ்ச விபூதி யையும் குங்குமத்தையும் இட்டு விட்டான்.ஆனநத நன்றாக ‘டிரஸ்’பண்ணிக் கொண்டு எல்லார் கிட் டேயும் சொல்லிக் கொண்டு ஹோட்டல் தாஜ்க்கு கிளம்பிப் போனான்.ஹோட்டல் தாஜில் வசந்தியை ‘மீட்’ பண்ணி,இருவரும் ‘லன்ச் ‘சாப்பிட்டுக்கொண்டே நிறைய பேசி வந்தார்கள்.இருவருக்கும் ஒருவ ரை ஒருவருக்கு ரொம்ப பிடித்து இருந்ததால்,அவர்கள் பெற்றோர்களுக்கு போன் பண்ணீ சொன்னார் கள்.ரெண்டு பெற்றோர்களுக்கும் மிகவும் சந்தோஷம்.உடனே ரமேஷ் மார்கபந்துவுக்கு போன் பண்ணி “நாங்க ஆனந்த் வசந்திக்கு ஒரு மூனு பெட் ரூம் ‘லக்சரி ப்லாட்’ வாங்கித் தரலாம்ன்னு இருக்கோம்” என்று சொன்னான்.உடனே மார்க்கபந்து” ரொம்ப தாங்க்ஸ்.நாங்க அந்த ப்லாட்டுக்கு ‘இன்டிரீயர் டெகரேஷனை’ பண்ணி விடறோம்”என்று சொன்னதும் ரமேஷ் அவரை ‘தாங்க்’ பண்ணி விட்டு போனை கட் பண்ணினான்.
அடுத்த நாளே ரமேஷ் ‘பாஷ்’ ஏரியாவில் ஒரு மூனு ரூம் ‘லக்சரி ப்லாட்’ ஒன்றுக்கு 90% ‘பேமண்ட்டை பண்ணினான்.ப்லாட் விஷயத்தை மார்க்கபந்துவிடம் சொன்னவுடன் அவர் தனக்குத் தொ¢ந்த ஒரு ‘இன்டீரியர் டெகரேட்டரை’ போனில் கூப்பிட்டு அவர் விரும்பிய ‘எல்லாற்றையும்’ அந்த ‘பலாட்டில்’ பண்ணும் படி சொல்லி ‘ப்லாட் அட்ரஸ்ஸையும்’ அவா¢டம் போனில் சொன்னார்.
ரமேஷ் வாத்தியாரைக் கூப்பீட்டு ஆனந்த வசந்தி நிச்சியதார்தத்துக்கு ஒரு நல்ல நாள் பார்க்கச் சொன்னான்.வாத்தியார் பஞ்சாங்கத்தைப் பார்த்து நிச்சியதார்த்ததுக்கு ஒரு நல்ல நாளை சொன்னார். ரமேஷ் அந்த வார கடைசியிலே எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் ஆனந்த் நிச்சியதார்த்த துக்கு எல்லோருக்கும் ‘காஸ்ட்லியான டிரஸ்களை’ வாங்கினான். ஹோட்டல் Green Park ஐ போனில் கூப்பிட்டு வாத்தியார் சொன்ன நாளில் ஒரு ஹாலை புக் பண்ணி விட்டு ‘டின்னரு’க்கும் ஏற்பாடு பண்ணி மார்க்கபந்துக்கு போனில் நிச்சியதார்த்த நாளையும்,மற்ற ஏற்பாடுகளையும் சொன்னான். மார்க்கபந்து தம்பதிகள் வசந்தி நிச்சியதார்த்ததுக்கு ‘காஸ்ட்லியான’ ‘டிரஸ்களை’ வாங்கினார்கள்.
– தொடரும்…