தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 6,081 
 
 

அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19

காயத்திரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நீ, இப்ப பணம் குடுத்து அதிலே நாங்க சந் தோஷமா இருந்துட்டு,அப்புறமா நீ ‘நான் இனிமே பணம் தர முடியாதுன்னு’ சொல்லும் போது வேலை தேடி போய்,வேலை கிடைக்காட்டா,நாங்க என்ன பண்ணுவோம்.அதனால்லெ நாங்க இப்பவே ஏதா வது வழி பண்ணி கொள்றோம்.எங்களை தயவு செஞ்சி தடுக்காதே”என்று சொன்னாள்.ரமேஷ் உட னே “எல்லோரும் என் கூட வாங்க“என்று சொல்லி அவர்களை ஹாஸ்பிடல் போர்ட்டிகோவுக்கு எதிரே இருந்த வினாயகர் கோவிலுக்கு அழைத்து போனான்.“மாமி,இதோ எதிரே தெரியறாரே வினாயகர் அவர் சாட்சியா நான் சொல்றேன்.என் உயிர் என் உடம்பிலே இருக்கிற வரைக்கும் நான் உங்களு க்கு மாசா மாசம் பணம் தந்து வருவேன்.எனக்கு வாழ்க்கையிலே என்ன இருக்கு.எனக்குன்னு யார் இரு க்கா.எனக்கு என்ன பெண்டாட்டியா,பிள்ளையா குடும்பமா இருக்கு சொல்லுங்கோ.என்னை தயவு செஞ்சி நம்புங்க”என்று சொல்லும் போது அவன் கண்கள் ஈரம் ஆகியது.காயத்திரியால் ஒன்னும் சொல்ல முடியவில்லை.அவள் கம்மென்று இருந்தாள்.லதா ரமேஷை பா¢தாபமாக பார்த்து கொண்டு இருந்தாள்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் “மாமி,மணி ஏழரை ஆறது வாங்க.நாம எல்லாம் உங்க கால் நன்னா ஆனதை கொண்டாட ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம்” என்று கூப்பிட்டான். காயத்திரியால் மறுப்பு சொல்ல முடியலே.”நாம போகலாம்” என்று சொன்னவுடன் ரமேஷ் கார் டிரைவரை காரை எடுத்து கொண்டு வர சொன்னான்.கார் போர்ட்டிகோவிற்கு வந்ததும்,லதா,காயத்திரி, ஆன ந்த மூன்று பேரும் பின்னால் ஏறிக் கொண்டார்கள். டிரைவர் முன் கதவைத் திறந்ததும் ரமேஷ் முன்னால் ஏறிக் கொண்டான்.

ஹோட்டல் வாசலில் நின்றுக் கொண்டு இருந்த பெரிய மீசையுடன் கூடிய ஆஜானுபாகுவான ஒரு ஆள் ஓடி வந்து கார் கதவைத் திறந்து ரமேஷூக்கு ஒரு பெரிய ‘சல்யூட்’ அடித்தான்.ரமேஷ் மெல்ல காரை விட்டு கீழே இறங்கினான்.லதா அம்மாவை மெல்ல பிடித்து கீழே இறக்கினாள். ஆனந்தும் கீழே இறங்கிக் கொண்டான்.அந்த ஆள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு ‘லிப்டில்’ ஏற்றி பண்ணனாடாவது மாடிக்கு அழைத்து போய் ஒரு பெரிய சாப்பாடு சாப்பிடும் ஹாலுக்கு பணி வாக காட்டினான்.லதாவுக்கு தன் கண்னையே நமப முடியவில்லை.அந்த ஹாலில் எல்லா பக் கமும் கண்ணாடி பொருத்தப் பட்டு இருந்தது.அந்த ஹாலில் இருந்து பார்த்தா சென்னை நகரமே மின் ஒளி விளக்கில் பிரகாசித்து கொண்டு இருந்தது.இவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்தா அவளுக்கு எல்லா வீடுகளுமே ரொம்ப சின்னதாக தெரிந்தது.ஆனந்தும் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டு இருந்தான். ஹாலில் நிறைய வெளி நாட்டுக்காரர்கள் ஸ்பூனில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள் ஒரு கோட் சூட் போட்ட ஒரு மானேஜர் ஓடி வந்து “வெல் கம்’ சார்” என்று கூப்பிட்டு எல்லோரையும் அழை த்து போய் ஒரு பெரிய டேபிலில் உட்கார வைத்தான்.அவர் உடனே ரமேஷ் அக்குள் கட்டையை சுவா தீனமாக வாங்கி கொண்டு போய் ஒரு ஓரமாக வைத்து ஒரு சேரை பின்னுக்கு இழுத்து ரமேஷை மெல்ல உட்கார வைத்தான்.
ரமேஷ் நிதானமாக உட்கார்ந்துக் கொண்டு சர்வரைப் பார்த்து “நீங்க சர்வ் பண்ண ஆரம்பிக்க லாம்” என்று சொன்னான்.சர்வர் எல்லோருக்கும் தக்காளி ‘சூப்’பும், பொக்கடாவும் சிப்ஸூம்,வடகத்திய அப்பளமும் கொண்டு வந்து வைத்தான்.கூடவே அவன் நெய்யில் பொரித்த ‘பிரெட்’ துண்டுகளையும் கொண்டு வந்து வைத்தான்.ரமேஷ் எல்லோர் கிட்டேயும் “இந்த ‘பிரெட்’ துண்டுகளை சூப்பில் போட் டுக் கொண்டு சாப்பிடுங்கோ” என்று அவர்களுக்கு விளக்கினான்.எல்லோரும் ரமேஷ் சொன்னனா மாதிரி ‘பிரெட்’ துண்டுகளை ‘சூப்பில்’ போட்டு கொண்டு ‘சூப்பை’ சாப்பிட்டார்கள்.ரமேஷ் ‘சூப்பை’ சாப்பிட்டு கொண்டே “மாமி, இந்த ஹோட்டல்லே சாப்பிட கிடைக்காத ஐயிட்டமே கிடையாது.நீங்க உங்களுக்கு என்ன வேணுமோ,அதை ஆர்டர் பண்ணினா இவா உடனே அந்த ஐட்டத்தை சூடா பண்ணித் தருவா” என்று சொன்னான்.எல்லோரும் ‘சூப்’ சாபிட்ட பிறகு அவரவர்களுக்கு வேண்டிய தை ஆர்டர் பண்ணி சாப்பிட்டர்கள்.சீக்கிரமாவே சாப்பிட்டு விட்ட காயத்திரி ரமேஷைப் பார்த்து “எங் கேகையை அலம்பறது” என்று கேட்டாள்.உடனே ரமேஷ் “மாமி,நீங்க எங்கேயும் போக வேணாம். கையை அலம்ப அவாளே தருவா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு ஆள் ஒரு பெரிய செப்பு கிண்ணத்தில் ஒரு துண்டு எலிமிச்சம் பழத்துடன் வென்னீரைக் கொண்டு வந்து காயத்திரி முன்னா ல் வைத்தான்.ரமேஷ் காயத்திரி மாமியைப் பார்த்து “மாமி,நீங்க இதிலே உங்க கையை நன்னா அலம்பி ண்டு டேபிள் மேலே இருக்கிற இந்த மாதிரி துணியாயாலே துடைச்சுக்க்கோங்கோ” என்று சொல்லி டேபிள் மேலே இருந்த துணியை எடுத்துக் காட்டினான்.எல்லோரும் ரமேஷ் சொன்னா மாதிரி அந்த வென்னீரில் தங்கள் கைகளை கழுவிக் கொண்டு,அந்த துணீயில் துடைத்து கொண்டார்கள்.

சாப்பிட்டு முடிந்ததும் எல்லோரும் எழுந்துக் கொண்டார்கள்.அந்த கோட் சூட் போட்ட மானே ஜர் ஓடி வந்து ரமேஷ் அக்குள் கட்டையைக் கொண்டு வந்து ரமேஷூடம் கொடுத்தார்.அதை வைத் துக் கொண்டு ரமேஷ் மெல்ல நடந்து ‘லிப்டுக்கு வந்தான்.

பிறகு எல்லோரும் லிப்டில் கீழே வந்து காரில் ஏறி லதா வீட்டுக்கு வந்தார்கள்.லதா அம்மாவை மெல்ல காரில் இருந்து கீழே இறக்கினாள்.ரமேஷூம் கீழே இறங்கிக் கொண்டு “மாமி,நீங்க ஜாக்பகிற தையா இருந்து வாங்கோ டாக்டர் சொன்னதை நன்னா ஞாபகம் வச்சுக்கோங்கோ.டாக்டர் கொடுத்த ‘ஜெல்லை’ ஞாபகமா தினமும் ரெண்டு தடவைக் காலில் நன்னா தடவி கொஞ்ச நேரம் ஊறினப்புறமா வென்னீர் விட்டுக்கோங்கோ.நான் இப்படியே என் பங்களாவுக்கு கிளம்பறேன்”என்று சொல்லி விட்டு லதாவும்,காயத்திரியும்,ஆனந்தும் இறங்கிப் போன பிறகு மறுபடியும் காரில் ஏறிக் கொண்டான்.பங்க ளாவுக்கு வந்த ரமேஷ் மனது ரொம்ப நிம்மதியாக இருந்தது.ஆத்துக்குள் நுழைந்ததும் நுழையாததும் காயத்திரி “லதா,இந்த டாக்டரோ எனக்கு மறுபடியும் ஏதாவது எலும்பு முறிவு வந்தா நான் படுத்த படு க்கையா ஆயிவிடுவேன்னு பயமுறுத்தரார்.நான் வேலைக்கு இனிமே போக முடியாது.இனிமே அந்தப் பையன் குடுக்கற பணத்லே வாழ்ந்து வரணும்ன்னு ஆயிடுத்தே.என்ன பண்ணலாம்..நினைச்சா என க்கு ரொம்ப பயமா இருக்கு.நீ என்ன நினைக்கிறே லதா” என்று கேட்டாள்.லதா நிதானமா ”எல்லாம் நல்லதுக்குத்தான்.அவர் தான் வினாயகர் சுவாமி முன்னாலே நின்னுண்டு நமக்கு சத்தியம் பண்ணிக் குடுத்து இருக்காரேம்மா.அவர் குடுக்கிற பணத்தில் நாம சந்தோஷமா இருந்து வரலாமேம்மா.நீயும் அந்த நெருப்படியில் வெந்து சாக வேண்டாம்மா.என்னை கேட்டா பேசாம இவர் நமக்கு மாசா மாசம் பத்தாயிரம் ரூபாய் தரேன்னு சொல்லி இருக்கார்.நாம அதை வாங்கிண்டு வந்து கஷடம் இல்லாம வாழ் ழ்ந்துண்டு வரலாம்மா.நீ வீணா பயபடறே” என்று சொல்லி விட்டு தன் புடவையை மாற்றிக் கொள்ளப் போனாள்
அந்த ஞாயித்துக் கிழமை ரமேஷ் காத்தாலேயே எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு கருமாரி அம்மன் கோவிலுக்குப் போய் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு குங்குமம் விபூதி பிரசாதத்தை வாங்கிக் கொண்டு லதா வீட்டுக்குப் போனான்.ரமேஷ் காலிங்க் பெல்லை அழுத்தி விட்டு நின்றுக் கொண்டு இருந்தான்.லதா தான் வந்து வாசல் கதவைத் திறந்தாள். ”வாங்கோ”என்று சொல்லி ரமேஷ் வழக்கமாக உட்காரும் சேரை அவன் கிட்டே தள்ளினாள் லதா. ரமேஷூம் தன் அக்குள் கட்டைடை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு அவன் லதா போட்ட சோ¢ல் மெல்ல உட்கார்ந்துக் கொண்டான்.டிரைவர் வந்து ‘கேக்’ பாக்கெட்டையும் சாக்லெட்டையும் ரமேஷிடம் கொடுத்து விட்டுப் போனான்.ரமேஷ் அந்த பாகெட்டுக¨ளை ஆனந்திடம் கொடுத்தான்.ஆனந்த் அந்த பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு ரமேஷூக்கு ‘தாங்க்ஸ்’ சொன்னான்.காயத்திரியும் ரமே ஷைப் பார்த்ததும் “வாங்கோ” என்று சொல்லி ரமேஷை வரவேற்றாள்.ஆனந்த் ஏதோ நோட் புக்கில் எழுதிக் கொண்டு இருந்தான்.ரமேஷ் அவனைப் பார்த்து “என்ன எழுதிண்டு இருக்கே ஆனந்த்”என்று கேட்டான்.அவன் உடனே ஓடி வந்து “நான் ஒன், டூ, திரீ எழுதிண்டு இருக்கேன் அங்கீள்” என்று சொல்லி விட்டு மறுபடியும் எழுதப் போய் விட்டான்.

கொஞ்ச நேரம் ஆனதும் “மாமி,உங்க கால் இப்ப எப்படி இருக்கு.நீங்க காலுக்கு டாக்டர் குடுத்த ‘ஜெல்லை’த் தடவி வென்னீர் விட்டுண்டு வரேளா.மாத்திரை எல்லாம் தவறாம சாப்பிட்டுண்டு வரே ளா” என்று விசாரித்தான்.காயத்திரி “நான் ‘ஜெல்லை’த் தடவி வென்னீர் விட்டு வரேம்பா. மாத்திரைக ளை தவறாம சாப்பிட்டுண்டு வறேன்.எனக்கு என்னமோ என் கால் நன்னா ஆயிட்டா மாதிரி தான் தோன்றது. நான் மறுபடியும் சமையல் வேலைக்குப் போய் வரலாம்ன்னு தான் நினைக்கிறேன்” என்று சொன்னாள்.ரமேஷ் உடனே “மாமி, அந்தப் தப்பை மட்டும் மறுபடியும் பண்ணாதீங்கோ..தயவு செஞ் சி நீங்க இனிமே வேலைக்கு எல்லாம் போகாதீங்கோ”என்று கெஞ்சும் குரலில் சொன்னான. ரமேஷ் கொஞ்ச நெரம் சும்மா இருந்தான்.பிறகு ”மாமி,கடைக்கு போய் உங்களுக்கும், லதாவுக்கும், புடவை களையும்,ஆனந்துக்கு டிரஸ்ஸூம் வாங்கி வரலாம் அப்படியே மத்தியானம் சாப்பாட்டை நாம ஹோட்ல் லே சாப்பிடுட்டு வரலாம்” என்று சொல்லி கூப்பிட்டான்.உடனே காயத்திரி “இப்போ எங்களுக்கு எது க்கு புடவை டிரஸ் எல்லாம் இப்ப உனக்கு எதுக்கு இந்த வீண் செலவு”என்று சொன்னாள்.ரமேஷ் உடனே “வீண் செலவு இல்லை மாமி.நான் யார் யாரோக்கோ எல்லாம் நிறைய செலவு பண்றேன் உங் களுக்கு வாங்கி குடுத்தா என்ன.எனக்கு ஆசையா இருக்கு.வாங்கோ”என்று கூப்பிட்டான் ரமேஷ். காயத்திரி பிடிவாதமா “அதெல்லாம் ஒன்னும் வேணாம்” என்று சொன்னதும் ரமேஷூக்கு ரொம்ப வரு த்தமாக இருந்தது.அவன் தலையை தொங்க போட்டு கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தான். ஆனந்த் ஓடி வந்து “அங்கிள் பாட்டி என்னமோ தனக்கு புடவை வேண்டாம்ன்னு சொல்றா.ஆனா எனக்கு ‘டிரஸ்’ வேணும்.எனக்கு நீங்க வாங்கிக் குடுங்க”என்று சொல்லி ரமேஷ் பக்கத்தில் வந்து நின்றான். ரமேஷ் விடாமல் ”நீங்களும் லதாவும் வாங்கோ நான் வாங்கி குடுக்கிறதை வேண்டாம்ன்னு சொல்லாதீங்கோ” என்று மறுபடியும் கேட்டான்.காயத்திரி ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள் இதைப் பார்த்த லதா “அவர் தான் எனக்கு ஆசையா இருக்குன்னு சொல்றார்.வாயேம்மா. நாம போய் வரலாம்”என்று சொன்னதும் காயத்திரி பாடு சங்கடமாக போய் விட்டது.

லதா,காயத்திரி,ஆனந்த் மூன்று பெரும் ரெடி ஆன பிறகு ரமேஷ் “நாம போகலாமா” என்று கேட்டுக் கொண்டு மெல்ல எழுந்தான்.பிறகு தன் அக்குள் கட்டையை எடுத்து வைத்துக் கொண்டு வாசலுக்குப் போனான்.லதா தன் அம்மா, ஆனந்த்,ரெண்டு பெரும் வெளியே வந்ததும் கதவை சாத்தி பூட்டினாள்.ரமேஷ் கார் டிரைவரை போனில் கூப்பிட்டு வீட்டு வாசலுக்கு வரச் சொன்னான்.கார் வந் ததும் லதா காயத்திரி,ஆனந்த் மூவரும் பின்னால் ஏறிக் கொண்டார்கள்.ரமேஷ் முன்னால் ஏறிக் கொண்டதும் ரமேஷ் டிரைவரை பார்த்து “டிரைவர் ‘நல்லி சில்க்ஸ்’ கடைக்கு போ” என்று சொன்னான் ’நல்லி சில்க்ஸ் கடை’ வந்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு வெளியே வந்து ரமேஷ் உட்கார்ந்துக் கொண்டு இருந்த முன் கதவை திறந்தான்.ரமேஷ் இறங்கியதும் டிரைவர் பின் கதவைத் திறந்தான்.

லதாவும்,காயத்திரியும்,ஆனந்தும் கீழே இறங்கினார்கள்.ரமேஷ் எல்லோரையும் அழைத்துக் கொண்டு நல்ல விலை உயர்ந்த புடவைகள் இருக்கும் இடத்திற்குப் போனான்.மூவரும் அவன் பின்னாலேயே போய்க் கொண்டு இருந்தார்கள்.ரமேஷ் அங்கே இருந்தவா¢டம் “இவங்களுக்கு நல்ல விலை உயர்ந்த புடவைகளை கொஞ்சம் காட்டுங்க”என்று சொல்லி விட்டு உட்கார நினைத்த போது அங்கே இருந்த ஒரு மானேஜர் உடனே ஓடி வந்து ரமேஷ் அக்குள் கட்டையை வாங்கி ஒரு ஓரமாக வைத்தார்.கடை க்கார ஆள் ரமேஷ் சொன்னா மாதிரி நல்ல விலை உயர்ந்த புடவைகளை எல்லாம் லதா காயத்திரி முன்னால் எடுத்து போட்டார்.காயத்திரி புடவைகளின் விலையை பார்த்தாள்.அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.உடனே அவள் “நான் சொல்றேன்னு நீ தப்பா எடுத்துகாதே.எங்களுக்கு இவ்வளவு விலை ஒசந்த புடவை எல்லாம் வேணாம்.சாதாரண விலைலே இருக்கிற புடவையா வாங்கி குடு.போறும்” என்று சொன்ன்னாள்.ரமேஷ் “இல்லை மாமி,நீங்க ரெண்டு பேரும் இனிமே இந்த விலை ஒசந்த புட வைகளை தான் கட்டிண்டு வரணும்.பேசாம அவர் போடற புடவைகளில் உங்களுக்கு பிடிச்ச புடவையா நீங்க நாலு பட்டுப் புடவையும்,லதாவுக்கு பிடிச்ச மாதிரி நாலு பட்டுப் புடவைகயும்,எடுத்து க்கோங்கோ.அதை தவிர ஆத்துக்கு கட்டிக்கிற மாதிரி நீங்க பிடிச்ச மாதிரி ஐஞ்சு புடவையும் லதா வுக்கு பிடிச்ச மாதிரி ஐஞ்சு புடவையும் வாங்கிகோங்கோ.அப்புறமா அவைகளுக்கு ‘மாட்சிங்க் பிலவு ஸூம்’ வாங்கிகோங்கோ.இனிமே நீங்களும் லதாவும் எல்லா பழைய புடவைகளையும் பிச்சைக்காரனு க்கு போட்டுட்டு இப்போ வாங்கி குடுக்கிற புடவைக¨ளை கட்டிண்டு வாங்கோ.இது தான் என் ஆசை.தயவு செஞ்சி மறுக்காதீங்கோ”என்று காயத்திரியை பார்த்து சொன்னான்.

பிறகு கடைகாரரை பார்த்து “நீங்க முதல்லெ பட்டு புடவைகளை காட்டுங்க.அப்புறமா சாதரண புடவைகளை காட்டுங்க”என்று சொல்லி விட்டு சும்மா இருந்தான்.காயத்திரிக்கு என்ன சொல்வது என்றே புரியாமல் தவித்தாள்.அவள் யோஜனை பண்ணீனாள். கொஞ்ச நேரம் கழித்து காயத்திரி ‘சரி, இனிமே இந்த பெரிய கடையில் நாம் வெறுமனே அவனிடம் பேசி தர்க்கம் பண்ணிண்டு இருக்க வே ணாம்’ என்று நினைத்து கடைக்காரர் காட்டிய பட்டு புடவைகளில் நாலு புடவைகளை எடுத்துக் கொண்டாள்.லதாவும் தனக்கு பிடிச்சது போல நாலு பட்டுப் புடவைகளை எடுத்துக் கொண்டாள். அத ற்கு அப்புறமா கடைக்காரர் காயத்திரியையும் லதாவையும் அழைத்துக் கொண்டு போய் சாதாரணமாக வீட்டுக்குக் கட்டிக்கிற மாதிரி புடவைகளை எல்லாம் கட்டினார்.காயத்திரியும் லதாவும் ரமேஷ் சொன் னா மாதிரி ஐஞ்சு புடவைகளைப் பார்த்து எடுத்துக் கொண்டார்ர்கள்.அதே கடைக்காரர் காயத்திரி யையும் லதாவையும் ‘மாட்சிங்க பிலவுஸ்’ செக்ஷனுக்கு அழைத்துப் போய் எல்லா புடவைகளுக்கும் மா ட்சிங்க ‘பிலவுஸ்’ காட்டினார்.காயத்திரியும் லதாவும் எல்லா புடவைகளுக்கும் ‘மாட்சிங்க பிலவுஸ்’ எடுத்து கொண்டார்கள். லதாவுக்கும்,காயத்திரிக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி “நாங்க ரெண்டு பேரும் இவ்வளவு விலை ஒசந்த புடவை களை இது வரைக்கும் கட்டிண்டதே இல்லைப்பா.நீ வாங்கிக் குடுத்து இருக்கே.உனக்கு நாங்க எப்படி நன்றி சொல்றதுன்னெ தெரியலேப்பா” என்று கையை கூப்பி சொன்னாள்.ரமேஷ் உடனே ”மாமி,நீங்க வயசிலே ரொம்ப பெரியவா.என்னை கை எல்லாம் எடுத்து கும்பிடாதீங்கோ” என்று சொல்லிவிட்டு க டைக்காரரை பார்த்து “நாங்க வாங்கி இருக்கிற எல்லா புடவைகளையும் ‘பிலவுஸ்களையும்’ கீழே ‘கா ஷ்கவுண்ட்டருக்கு’ கிட்டே வச்சிடுங்க” என்று சொன்னான்.கடைக்காரரும் ”சரி சார்” என்று சொல்லி விட்டு ஒரு கடை பையனை அனுப்பி ரமேஷ் சொன்னா மாதிரி எல்லா புடவைகளையும் ‘பிலவுஸ் களையும்’ கொண்டு போய் ‘காஷ் கவுண்ட்டர்’ கிட்ட வைத்து விட்டார்.ரமேஷ் ‘காஷ் கவுண்டா¢ல்’ தன் ‘கார்டைக் குடுத்து அவர் பணம் எடுத்துக் கொண்டவுடன் தன் ‘பின் கோடை’ப் போட்டான். அப்புறமா அவன் அந்த கார்ட்டை கொடுத்தவுடன் அந்த வாங்கி தன் ‘பர்ஸ்ஸில்’ வைத்துக் கொண் டான்.ரமேஷ் போன் பண்ணி டிரைவரை காரை கடை வாசலுக்கு கொண்டு வரச் சொன்னான்.கார் வந்ததும் ரமேஷ் கார் டிரைவரை பார்த்து “நீ போய் காஷ் கவுண்ட்டர் கிட்டெ இருக்கிற புடவை பாக் கெட்டை கொண்டு வந்து காரில் வை” என்று சொன்னான்.டிரைவரும் ரமேஷ் வாங்கி இருந்த புடவை ‘பிலவுஸ்’ பாக்கெட்டை கொண்டு வந்து காரில் வைத்தான்.டிரைவர் காரில் புடவை பாக்கெட்டைக் கொண்டு வந்து வைத்தவுடன் எல்லோரும் காரில் ஏறினவுடன் ரமேஷ் டிரைவரைப் பார்த்து “குழந் தைகள் ‘டிரஸ்’ இருக்கிற பெரிய கடையான ‘மாக்ஸ்’ கடைக்குப் போ” என்று சொன்னான்.

டிரைவர் ரமேஷ் சொன்ன கடைக்கு வந்ததும் ரமேஷ் கீழே இறங்கி எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் ஆனந்துக்குப் பிடிச்சா மாதிரி நாலு அரைக்கால் நிஜார்,அரைக்கை ஷர்ட்டும்,நாலு முழு கால் பேண்ட்,நாலு முழுக்கை ஷர்ட்டும் வாங்கிக் கொண்டு வந்து பில்லுக்கு பணம் கொடுத்து விட்டு வாசலுக்கு வந்தான்.உடனே ”ஆனந்த்,அங்கிள் நீங்க எங்க எல்லோருக்கும் டிரஸ் வாங்கி இருக் கேள்.ஆனா நீ£ங்க ஒரு டிரஸ்ஸூம் வாங்கிக்கலயே” என்று கேட்டு முடிக்கவில்லை,காயத்திரியும் லதா வும் “நாங்க கூட கேக்கணுன்னு நினைச்சோம்”என்று கோரசா கேட்டார்கள்.ரமேஷ் நிதானமாக “ஆன ந்த்,எனக்கு மூனு பீரோ டிரஸ் இருக்கு.இதை தவிர தவிர ரமேஷ் டிரஸ் சைஸ்ஸூம், என் சைஸ் தான். அவன் டிரஸ் மூனு பீரோ முழுக்க இருக்கு.தவிர என் அப்பா சைஸ்ஸூம் என் சைஸ் தான்.அவர் டிரஸ் வேறே மூனு பீரோ இருக்கு.நான் ஒரு தடவை போட்ட ஷர்ட், பாண்ட்,மறுபடியும் போட எனக்கு ஆறு மாசத்துக்கு மேலே ஆறது ஆனந்த்” என்று சொன்னான் ரமேஷ்.அவன் கண்களில் நீர் துளித்தது.தன் கைக் குட்டையை பாகெட்டில் இருந்து எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.காயத்தா¢ க்கும் லதாவுக்கும் நாம் ‘ஏன் இவரைக் கேட்டோம்,பாவம் இவர் கன் கலங்கறாறே’ என்று தோன்றியது. ரெண்டு பேரும் வருத்தப் பட்டாகள்.கார் வந்ததும் எல்லோரும் காரில் ஏறிக் கொண்டார்கள்.

ரமேஷ் காரில் ஏறக் கொண்டு “டிரைவர் ஜி.ஆர். டி.கிராண்டுக்கு போ” என்று சொன்னதும் “சரி சார்” என்று சொல்லி விட்டு டிரைவர் காரை ஜி.ஆர். டி. கிராண்டுக்கு போனான்.காரை போர்ட்டிகோ வில் நிறுத்தியவுடன் வாசலில் நின்றுக் கொண்டு இருந்த ஒரு ஆஜானுபாகுவான ஆள் ஓடி வந்து கார் கதவைத் திறந்து ரமேஷூக்கு ஒரு பெரிய சல்யூட் அடித்தான்.ரமேஷின் அக்குள் கட்டையை அவன் பவ்யமாக வாங்கிக் கொண்டான்.ரமேஷ் மெல்ல காரை விட்டு கீழே இறங்கினான்.லதா, காயத்திரி, ஆனந்த் மூவரும் இறங்கின பிறகு ரமேஷ் அவர்களை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக் குள் போனான்.அந்த ஹோட்டல் ஹாலே ஒரு பெரிய அரண்மனைப் போல் இருந்தது. நிறைய சோபா செட்டுகள் போடப் பட்டு இருந்தது.தரை பூராவும் தடித்த கம்பளங்கள் பரப்பப் பட்டு இருந்தது சோ பாவில் நிறைய வெளி நாட்டவர்கள் உட்கார்ந்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள். ஹோட் டலில் ‘கோட், ஷர்ட், டை கட்டிக் கொண்டு இருந்த நிறைய பேர்கள் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.சுவற்றில் நிறைய ஓவியங்கள் தொங்க விடப் பட்டு இருந்தது.பல சிலைகள் வைக்க பட்டு இருந்தது.நிறைய விளக்குகள் மேல் கூரையில் எரிந்துக் கொண்டு இருந்தது. ஹால் பூராவும் ஜில்லென்று ஏ.ஸி.யால் மிகவும் குளிர்ச்சியாய் இருந்தது.ஹாலில் கூரையில் இருந்து நான்கு பெரிய தொங்கும் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் தொங்கி கொண்டு இருந்தது. பெரிய பத்திரங்களில் நிறைய பூக்கள் தண்ணீரில் மிதக்க வைக்கப் பட்டு இருந்தது.கூரை பூராவும் அழகிய வண்ணக் கோலங்கள்,பல வித கலர்களில் போடப்பட்டு இருந்தது.ஆண் பெண் அனைவரும் பாண்ட், ,ஷர்ட்டு,ஷ¥வுடன் இருந்தார்கள்.லதாவுக்கு தானும் அம்மாவும் ஒரு சாயம் போன பழைய புடவை யில் இருந்தது மிகவும் வெட்கமாக இருந்தது.

ரமேஷ் அவன் ‘பிரண்டோடு’ பேசிக் கொண்டு இருக்கும் போது லதா தன் அம்மாவிடம் மெது வாக “அம்மா, நீ இங்கே இருக்கிறவா போட்டு இருக்கிற டிரஸ்ஸையும் பார்.உன் புடவையையும் என் புடவையையும் பார்.இந்த டிரஸ்ஸிலே நாம பரம ஏழை என்கிறதை நம்ம டிரஸ்ஸே காட்டிக் குடுத்து டும் போல இருக்கே.எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு” என்று சொன்னதும் “அதுக்கு நாம என்னடீ பண்றது.நாம வெறுமனே சமையல்கார குடும்பம் தானே.இந்த ஹோட்டல் எல்லாம் பரம்பரை பணக்கா ரா வர இடம் ஆச்சே.நாம சாப்பிட வர இடமா இந்த ஹோட்டல்.இதிலே என்னடி நமக்கு வெக்கம்” என்று சொன்னதும் லதாவுக்கு நாம இதை ஏன் நம்ம அம்மா கிட்ட சொல்லிண்டோம் என்று இருந்தது. வெட்கத்தோடு எல்லோரையும் லதா பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவள் முழுக்கப் பார்த்து முடிக்க வில்லை,அதற்குள் கோட் சூட் போட்ட ஒரு மானேஜர் ஓடி வந்து ரமேஷிடம் ‘வெல் கம்’ சார்” என்று சொல்லி விட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பெரிய ‘டைனிங்க ஹாலுக் குப்’ போய் நாலு பேர் உட்காரும் ஒரு டேபிளைக் காட்டி அங்கே போட்டு இருந்த சேர்களை கொஞ்சம் பின்னால் இழுத்து உட்காரச் சொல்லி விட்டு ரமேஷ் அக்குள் கட்டையை வாங்கிக் கொண்டு போய் தூர வைத்தார்.அவர் போனவுடன் ரமேஷ் “மாமி,இங்கே தென் இந்திய சாப்பாடும்,வட இந்தியா சாப் பாடும் இருக்கும்.நிறைய பழங்களும் இருக்கும்.அதைத் தவிர சுண்டல்,வருவல்,சாலட், கட்லெட், எல் லாம் இருக்கும்.பதினைஞ்சு விதமான ஸ்வீட் இருக்கும்.நிறைய கேக்குகளும் இருக்கும்.வாழை பழ மும்,பீடா,பலவித ஐஸ் க்ரீம்களும் இருக்கும். நாம நிதானமா என்ன வேணுமோ,எது பிடிக்கிறதோ அதை எல்லாம் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு போட்டுண்டு வந்து சாப்பிடலாம்.இப்ப முதல்லெ ‘சூப்’ குடுப்பா.அதை நாம சாபிட்ட பிறகு நாம தட்டை எடுத்துக் கொண்டுப் போய் நமக்கு வேண்டி யதை போட்டுக் கொண்டு வரலாம்”என்று ஒரு பெரிய ‘லெக்சரே’ கொடுத்தான் ரமேஷ்.அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஒரு சர்வர் நாலு பேருக்கும் சூப்பைக் கொண்டு வந்து வைத் தான்.கூடவே டோக்ளா, பஜ்ஜி, பொக்கடா,சிப்ஸ்,அப்பளம் எல்லாம் வைத்து விட்டு போனான்.லதாவு க்கும் காயத்திரிக்கும் ரமேஷ் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது.ஒரு மத்தியான சாப்பாட்டுக்கு இவ்வளவு ஐயிட்டாங்களா பண்ணுவார்கள்.ரெண்டு பேரும் யோஜனைப் பண்ணிக் கொண்டே ‘சூப்பை’ சாப்பிட ஆரம்பித்தார்கள்.

ரமேஷூம் சூப்பை குடித்து முடித்ததும் அவன் மெல்ல எழுந்துப் போய் ஒரு பெரிய பீங்கான் தட்டை எடுத்து அவனுக்கு வேண்டியதைப் போட்டுக் கொண்டான்.லதாவும் காயத்திரியும் எழுந்துக் கொண்டவுடன் ரமேஷ் அவர்களுக்கு சாப்பிட வைத்து இருக்கும் ஐயிட்டங்களை எல்லாம் காட்டி னான்.ரமேஷ் சொன்னபடி எல்லாம் இருந்ததை நினைத்து ‘இவர் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருவார் போல் இருக்கு,அதான் இவர் நமக்கு முதல்லேயே இங்கு சாப்பிட வைத்து இருக்கும் ஐட்ட ங்களை எல்லாம் விவரமாச் சொன்னார்’ என்று நினைத்துக் கொண்டார்கள் லாதாவும் காயத்திரியும். லதா,அம்மாவுக்கு என்ன என்ன பிடிக்குமோ அதை எல்லாம் ஒரு தட்டில் போட்டுக் கொண்டு வந்துக் கொடுத்தாள்.பிறகு தனக்கும் ஆனந்துக்கும் பிடித்த எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு வந்து அம்மா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ரமேஷ் “லதா,தட்டில் இருக்கிறதை நீங்க சாபிட்ட பிறகு அந்தத் தட்டை டேபிலிலே யே வச்சுட்டு,வேறே புது தட்டை எடுத்துண்டு வேண்டியதை போட்டுக்கோ.பழைய தட்டை மறுபடி யும் எடுத்துண்டு போக வேணாம்.பழைய தட்டை இவா உடனே எடுத்து ‘க்லீன்’ பண்ண எடுத்துண்டு போயிடுவா” என்று சொன்னான்.லதாவும்,காயத்திரியும்,ஆனந்தும் வயிறார தங்களுக்கு வேண்டி யதை எல்லாம் போட்டுக் கொண்டு வந்து சாப்பிட்டார்கள்.அப்புறம்,ஐஸ்க்ரீம்,கேக், ஸ்வீட் என்று பிடி த்தவற்றை எல்லாம் வயிறு துள்ள துள்ளச் சாப்பீட்டார்கள்.காயத்திரி மட்டும் பீடா போட்டு கொண் டாள்.லதா பீடா போட்டுக் கொள்ளவில்லை.இதை ரமேஷ் கவனித்தான்.‘பாவம் அவளுக்குத் தான் இன்னும் கல்யாணமே ஆகலையே,அவ எப்படி பீடா போட்டுக்க முடியும்’ என்று நினைத்தான் ரமேஷ்.

‘லதா கல்யாண வயசிலே இருந்தப்ப,நீ ஏழ்மையாலே கல்யாணம் பண்ணீக்கலே.அப்புறமா நா ன் பண்ண ‘துரோகத்தாலே’ நீ ஒரு குழந்தையை பெத்துண்டு கல்யாணம் பண்ணி கொள்ளாம இரு ந்து வறே.நான் பண்ண அந்த ‘பாவச் செயலுக்கு’ பகவான் என அப்பா,அம்மா, என் கூடப் பொறந்த வன் எல்லாரையும் என் கிட்டே இருந்து அழைச்சுண்டு போய்,என் ஒரு காலையும் பறிச்சுண்டுட்டு. என்னை காலம் பூராவும் ஒரு நொண்டியா இருந்து வரும் தண்டனையை குடுத்து இருக்கார்.ஒரு வயசு பொண்ணும் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படமாட்டா.இப்ப நான் இருந்து வரும் மன நிலைலே கன்னியாகவே வாழ்ந்து வரும் உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ளும் ஆசையே எனக்கு இல்லே.எனக்கு இந்த உலக வாழ்க்கையே வேணாம்.நான் ஆன்மீகத்லே பகவானை நிறைய வேண் டிண்டு வந்து எல்லோருக்கும் நல்லது பண்ணிட்டு,இந்த உலகத்தை விட்டு போகணும்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்.நீ என் பையன் ஆனந்தை எனக்காக பெத்து,இத்தனை வருஷமா அவனை வளத்து வந்து இருக்கே.எங்க குடும்பத்துக்கு ஒரு வாரிசை குடுத்து இருக்கே.நீ உன் வாழ்க் கையே ஒரு மெழுகு வர்த்தி போல் எரிச்சுண்டு வந்து ஆனந்துக்கு வெளிச்சம் குடுத்துண்டு இருக்கே அவன் கருவாக இருந்த போது,அவனை கலைச்சுடாம எனக்கு இந்த நன்மையே பண்ணி இருக்கே.ஆனந் தோட,நீ மட்டும் என் கண்ணில் படாம இருந்து இருந்தா,என் வாழக்கை சூன்யமா போயிருக்கு கும்.ஆனந்தை ஒரு கலங்கரை விளக்குன்னு நான் சொன்னா,அந்த கலங்கரை விளைக்கை தாங்கி நிற்கும் தூண் நீ தானே.உனக்கு என் மனமார்ந்த நன்றி’ என்று தன் மனதிலே லதாவுக்கு நன்றி சொல்லி கொண்டு இருந்தான் ரமேஷ்.

எல்லோரும் சாபிட்ட பிறகு ரமேஷ் சர்வர் கொண்டு வந்த பில்லுக்கு தன் ‘கிரெடிட்’கார்ட்டை’க் கொடுத்து அனுப்பினான்.கொஞ்ச நேரம் ஆனதும் அந்த சர்வர் ரமேஷிடம் பில்லையும் அவன் கொடுத்த ‘கிரெடிட் கார்ட்டையும்’ கொடுத்து விட்டு ஓரு பெரிய ‘சலாமை’ப் போட்டு விட்டுப் போனா ன்.ரமேஷ் எழுந்துக் கொண்டு ஆனந்தை பார்த்து “ஆனந்த் நாம இந்த ஹோட்டல்லே தான் பிப்ரவா¢ ஒன்னாம் தேதி உன் ‘பர்த்டே’வைக் கொண்டாடப் போறோம்.நான் அதுக்கு ‘புக்’ பண்ணீ இருக்கேன்” என்று சொன்னதும் ஆனந்த் “இந்த ஹோட்டல்யா அங்கீள்”என்று சந்தோஷத்துடன் கேட்டான் ”ஆ மாம் ஆனந்த்,இந்த ஹோட்டல்லே தான் நான் கொண்டாட போறோம்” என்று சொல்லி விட்டு ரமேஷ் மெல்ல எழுந்தான்.அந்த மானேஜர் உடனே ரமேஷ் அக்குள் கட்டையைக் கொண்டு வந்துக் கொடுத் தார்.கார் வந்ததும் ரமேஷ் எல்லோரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.ஹோட்டலின் வா சலில் நின்றுக் கொண்டு இருந்தவன் ஓடி வந்து காரின் முன் கதவைத் திறந்தான்.அடுத்து பின் கதவையும் திறந்தான்.எல்லோரும் ஏறிக் கொண்ட பிறகு அவன் ரெண்டு கதவுகளையும் மெதுவாக மூடி விட்டு ஒரு பெரிய ‘சலாம்’ அடித்து விட்டு கொஞ்சம் தள்ளி நின்றான்.ரமேஷ் அவனுக்கு ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான்.அவன் பணத்தை வாங்கிக் கொண்டு மறுபடியும் ஒரு ‘சலாம்’ அடித்தான்.

ரமேஷ் லதாவையும்,காயத்திரியையும்,ஆனந்தையும் இறக்கி விட்டு விட்டு “மாமி,நான் இப்படி யே போறேன்.ஹோட்டல்லே என்னோடு பேசி கொண்டு இருந்தவாளுடன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.அவா காத்துண்டு இருப்பா.ஆனந்த், நான் உனக்கு நாளைக்கு கேக்கும்,சாகெட்டும் வாங்கி வரேன்” என்று சொன்னான்.உடனே ஆனந்த் “அங்கிள்,நான் இன்னைக்கு நிறையக் ‘கேக்’ சாப்பிட்டு இருக்கேன்.நீங்க எனக்கு அடுத்த வாரமே ‘கேக்’ வாங்கிண்டு வாங்கோ” என்று சொன்னான்.பிறகு ரமேஷ் கார் டிரைவரைக் கூப்பிட்டு ”நீ போய் இவங்க துணிப் பைகளை எல்லாத்தையும் வீட்டுகுள்ளே வச்சு விட்டு வா”என்று சொன்னதும் டிரைவர் உடனே கீழே இறங்கி கடையில் வாங்கின துணி பை களை எல்லாம் கொண்டு போய் கொடுத்துக் கொண்டு போய் லதா போர்ஷன் கதவைத் திறந்ததும் லதாவிடம் கொடுத்து விட்டு காருக்குப் போனான்.ரமேஷ் காரில் கிளம்பிப் போனான.

‘எப்படா இந்த டிரைவர் துணிப்பைகளை வச்சுட்டு போவான்’ என்று காத்து கொண்டு இருந்த காயத்திரி அவன் போனதும் லதாவைப் பார்த்து ”என்ன லதா,நான் வேணாம்,வேணாம்’ன்னு சொல்லி ண்டு இருந்தாலும் அந்த பையன் நம்ம ரெண்டு பேருக்கும் இவ்வளவு விலை ஒசந்த புடவைகளை எல்லாம் வாங்கிக் குடுத்து இருக்கான்.கூடவே எல்லா புடவைகளுக்கும் ‘மாட்சிங்க்’ ’ப்லவுசும்’ வாங்கி க் குடுத்து இருக்கான்.நம்ம ரெண்டு பேருடைய புடவைகளும் ‘ப்லவுசுமா’ சேர்ந்து மொத்தம் ஒரு லக்ஷம் ரூபாய் ஆகி இருக்கும் போல் இருக்கே. அதுக்கு மேலே ஆனந்த் ‘டிரஸ்களே’ வாங்கி இருக்கா ன்.எல்லாம் சேர்ந்து ஒரு லக்ஷத்து நாப்பாதாயிரம் ரூபாய் ஆகி இருக்கும் இருக்கும் போல் இருக்கே. யாராவது இவ்வளவு புடவைகளும் ‘பிலவுஸ்களுமா’ வாங்குவாளா.ஆனந்த் வளர பையன் லதா.அவ னு க்கு போய் இத்தனை ‘டிரஸ்களை’ யாராவது வாங்குவாளா”என்று சொல்லி அங்கலாய்த்துக் கொண்டாள்.

அம்மா சொல்வதை கேட்டுட்டு லதா நிதானமா “அவர் ரொம்ப பெரிய பணக்காரர்ம்மா.அவர் நம்மைச் சாப்பிட அழைச்சு போன ஹோட்டலை பார்த்தியாம்மா.எவ்வளவு பெரிய ஹோட்டல்மா அது. அதிலே சாப்பிட வருவாளை எல்லாம் பாத்தியாம்மா.நாம ரெண்டு பேர் தான் இந்த மதிரி பழைய புடவைக் கட்டிண்டு இருந்தோம்.அதனால் தான் அவர் நம்மை ரெண்டு பேரையும் இனிமே நீங்க அந்த பழைய புடவைகளை தூர போட்டு விட்டு அவர் வாங்கி குடுத்து இருக்கிற புடவைகளை எல் லாம் கட்டி வர சொல்லி இருக்கார்.நாம் இனிமே அவர் சொன்னா மாதிரியே புது புடவைகளை எல்லா ம் நாம கட்டி வரலாமே.அந்த ஹோட்டல்லே நமக்கு சாப்பிட வச்சு இருந்த ‘ஐயிட்டகளை’ எல்லாம் பா த்தியா.அவர் இந்த மாதிரி ஹோட்டலுக்கு தான் போய் அடிக்கடி சாப்பிடுவார் போல இருக்கு.உன் கால் கட்டு பிரிச்ச அன்னைக்கு அழைச்சுண்டு போன ஹோட்டலும் இது மாதிரி ஒரு பெரிய ஹோட் டல் தான்.நாம போன ஜென்மத்திலே பண்ண புண்ணீயம் தாம்மா நாம இப்ப அனுபவிச்சு வர சுகம்” என்று சொல்லி தன் புடவையை மாத்திக் கொள்ள போனாள் லதா.லதா போனதும் காயத்திரி துணிப் பைகளில் வாங்கிக் கொண்டு வந்த புடவைகளை எல்லாம் ஒன்னு ஒன்னா எடுத்து பிரித்து பார்த்து கொண்டு இருந்தாள்.லதா வந்ததும் காயத்திரி ‘பாத் ரூம்’ போய் விட்டு தன் புடவையை மாத்திக்கொ ண்டு பாயைப் போட்டு படுக்க போனாள்.லதா தனக்கு வாங்கி இருக்கும் புடவைகளையும், ‘பிலவுஸ்’ களையும்,ஆனந்துக்கு வாங்கி இருக்கும் ‘டிரஸ்’களையும் பார்த்து சந்தோஷப் பட்டாள்.பிறகு தனக்கும் ஆனந்துக்கும் பாயை போட்டு அவனையும் படுக்க சொல்லி விட்டு அவளும் படுத்துக் கொண்டாள்.

’நமக்கு இந்த மாதிரி நல்ல வாழ்க்கை அமைந்து இருப்பதை நினைத்து லதாவும் காயத்திரியும் ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்தார்கள்.ரமேஷ் வாங்கிக் கொடுத்து இருக்கும் புடவைகளை நாம இப்பவே கட்டிக் கொள்ள மாட்டோமா என்று இருந்தது லதாவுக்கு.’எல்லா புடவைகளும் நல்ல விலை உயர்ந்த புடவைகள்.எல்லா கலரும் எனக்கு ரொம்ப பிடிச்ச கலர்.எல்லா புடவைகளுக்கும் ‘மாட்சிங்க் பிலவுஸ்’ கூட இருக்கே’ என்று நினைத்து சந்தோஷப்பட்டாள் லதா.அவருக்கு என் மேலே இன்னும் காதல் நிச்ச்சியமா இருக்கும்ன்னு நினைக்கறேன்.அவர் இந்த மாதிரி நிறைய செலவு பண்ணி மெல்ல நம் அம்மா மனசிலே இடம் பிடிச்சுட்டு அப்புறமா அம்மா கீட்டே நம்மை கல்யாணம் பண்ணி கொள் ளும் ஆசையை அவர் நிச்சியமா சொல்ல போறார்.அப்ப அம்மா ஒன்னும் சொல்ல முடியாது.அவரும் நானும் நிச்சியமாக கல்யாணம் பண்ணீண்டு கணவன் மணைவி ஆவோம்.இந்தக் கல்யாணம் நிச்சியமா நடந்தே தீரும்.நாம இந்த பணக்காரின் சொத்துக்கு மனைவி ஆயிடலாம்’என்று கனவு கண்டு கொண்டு இருந்தாள் லதா.இன்ப எண்ணங்களில் மூழ்கி இருந்த அவளுக்குத் தூக்கம் வருமா என்ன!

வழக்கம் போல் ரமேஷ் அந்த ஞாயித்து கிழமை காயத்திரி வீட்டுக்கு வறாம அடுத்த ஞாயித்து கிழமை காயத்திரி ஆத்துக்கு காலிங்க் பெல்லை அழுத்தினான்.லதா தான் வந்து வாசல் கதவைத் திறந்தாள்.லதாவைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.’நான் அடிக்கடி பார்த்து வரும் லதாவா இவ.அவன் கண்களை அகல விரித்து “லதா நீ இந்த புடவைலே ரொம்ப அழக்கா இருக்கே, நீ இனிமே இந்த மாதிரி தான் நல்ல புடவைகளை எல்லாம் கட்டிண்டு அழகா இருக்கணும்” என்று சொல் லிக் கொண்டே உள்ளே வந்து தன் அக்குள் கட்டையை ஒரு ஓரமாக வைத்து விட்டு காயத்திரி மாமி யை பார்த்தான்.காயத்திரியும் அவன் புதிதாக வாங்கிக் கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்டு இரு ந்தாள்.ரமேஷ் “மாமி,இனிமே நீங்களும் லதாவும் இந்த மாதிரி புதுப் புடவைகளைக் கட்டிண்டு வாங் கோ.இந்தப் புடவைகள்ளே நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நன்னா இருக்கேள்.நான் ஒவ்வொரு தட வையும் உங்களையும் லதாவையும் பாக்கும் போது என் மனம் ரொம்ப கஷ்டப் பட்டு வந்தது. ‘நாம நிறைய புது புடவைகளை இவா ரெண்டு பேருக்கும் வாங்கி குடுத்து இவா கட்டிண்டு வரட்டுமே’ என் று ரொம்ப ஆசைப்பட்டேன்.ஆனா நான் உங்க ரெண்டு பேரையும் முதல் முதல்லே பாக்க வந்த போதே இதை சொல்லி இருந்தேனா நீங்க ரெண்டு பேரும் என்னைத் தப்பா எடுத்துண்டு விடுவே ளோன்னு பயந்து தான் சொல்லாம இருந்தேன்.என் மனசு எவ்வளவு வருத்தப்பட்டு வந்ததுன்னு அந்த பகவானுக்கு தான் தெரியும்”என்று சொல்லி தன் கண்களை பாக்கெட்டில் இருந்த ‘கர்சீப்பால்’ துடைத்துக் கொண்டான்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *