தலைமுறை இடைவெளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 1,329 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன சிவா பின்னடிக்கிறீர். கொஞ்சம் எட்டிப்போட்டு நடவுமன். ஏதாவது பேசிக்கொண்டு பக்கத்தில் நடந்து வருவீர். 

இண்டைக்கு என்ன ஆச்சுது. என்ன செய்யிறது ஐம்பது வயசுக்குமேல் நமக்கு சுகரும், டயபிட்டிக்சும் இருக்குது என்று டாக்டர் சொல்லிப்போட்டார். 

ஒரு ஊர்ப்பட்ட குழிசைகளையும் தந்து, காலையில ஒவ்வொருநாளும் ஒரு மணித்தியாலம் நடவுங்க என்றும் சொல்லிப்போட்டார். ம்..என்ன பண்ணுறது, இன்னும் நமக்கு செய்யவேண்டிய கடமைகள் பாக்கி இருக்கே சிவா, என்ன நான் சொல்லுறது 

என்று திரும்பிப் பார்த்த தணிகாசலம், சிவா இரண்டு யார் பின்னால் சோர்ந்து போய் வருவதை பார்த்து நின்றுகொண்டார். 

என்ன சிவா களைக்குதே, ஸுகர் குறைஞ்சிபோச்சுதோ. சரி வா அந்த சீமன்ட் பெஞ்சில் இருந்து ஒரு வாழைப்பழம் சாப்பிடுவோம்.” என்ற தணிகாசலம் காலிமுக திடலில் உள்ள ஒரு சீமன்ட் பெஞ்சை நோக்கி நடந்தார். சிவாவும் பின்தொடர்ந்தார். 

சிவராசா கொழும்பில் உள்ள நில அளவைத் திணைக்களத்தில் சிரேஷ்ட லிகிதர். தணிகாசலம் இலங்கை வங்கி முகாமையாளர். இருவரும் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் வடமராச்சி. மற்றவர் வலிகாமம். கால் நூற்றாண்டுகளுக்கு மேல் தொழில் நிமித்தம் கொழும்பு 

வந்தவர்கள் இங்கேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். இவர்களின் மனைவி மாரும் அரச பணியில் இருக்கிறார்கள். சிவாவுக்கு ஒரு மகள். உயர்தரம் படிக்கிறாள். தணிகாசலத்துக்கு 

ஒரு ஆண் குழந்தை அதுவும் பிந்தியே கிடைத்தது.. 

இருவருக்கும் ஒரே டாக்டர். டாக்டரிடம் அடிக்கடி வந்துபோனதால் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். 

அத்தோடு ஒவ்வொவருக்கும் சொன்னமாதிரி ஒரே விதமான நோய்கள் இருந்தன. டாக்டரின் அறிவுறுத்தலின் படியே அவர்கள் காலையில் காலிமுகத் திடலுக்கு நடைப் பயிற்சிக்கு வருவார்கள். இன்றும் 

அப்படிதான் வந்தவர்கள். ஆனால் சிவா,தணிகாசலத்தோடு ஈடுகொடுத்து நடக்கமுடியாது போகவே சிவா நடைப் பயிற்சியை இடைநிறுத்திவிட்டார். 

-110- 

“என்ன சிவா உடம்புக்கு முடியல்லையே, அப்படியானால் தொடர்ந்து நடக்கவேணாம், இண்டைக்கு இத்தோடு நிறுத்திக்கொள்வோம். ஓக்கேயா” 

‘எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லடா தணி, மனசுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கிறது.” 

“என்ன வீட்டில் நளினிக்கும் உனக்கும் ஏதும் பிரச்சினையே. அவ,அப்படி பிரச்சினைப் படுற ஆளில்லையே” 

“சேச்சே அவவால எனக்கு ஏதும் பிரச்சினை இல்லை.” 

“அப்பபின்ன மகள் அர்ச்சனா ஏதும்?” என்ற தணிகாசலம் பேச்சை 

நிறுத்தி சிவராசாவைப் பார்த்தார்

சிவராசா குனிந்தபடி கையைப் பிசைந்துகொண்டு இருந்தார். தொடர்ந்தார் தணிகாசலம். 

என்ன சிவா, அவளுக்கு பள்ளிகூடத்தில் ஏதும் பிரச்சினையே. அவள் பயங்கரக் கெட்டிக்காரிதானே. 

ஓ லெவலில் ஒன்பது “ஏ” ஒரு “பி” எடுத்தவள். உயர்தரத்திலும் திறமாக பாஸ் பண்ணுவாள்.” 

அர்ச்சனாவில் தணிகாசலம் கொண்டு இருந்த மதிப்பு அவரை அப்படிப் பேசவைத்தது. 

“அதில எனக்கு எந்தவிதமான டவுட்டும் இல்லைக்கண்டியோ 

அப்ப பின்ன வேற எதில உனக்கு டவுட் வந்தது. பள்ளிக்கூடத்தில ஏதும் அப்பிடி இப்பிடி” 

‘என்ன காதல் கீதல் என்றே கேட்கவாறீர். தணி, அவள் அதற்குள் போகமாட்டாள் என்பது எனக்கும் தெரியும்.அவள் தாய்க்கும் தெரியும். ஏன் நீ அறிந்தவகையில் உனக்கும் தெரியும் இல்லையே” 

“அதுதான் கேட்கிறேன். அவளுக்கு படிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது என்று எனக்கும் தெரியும்தானே. வேறு என்னதான் பிரச்சினை சொல்லுமன்” சற்று உரத்து கேட்டார் தணிகாசலம். 

-111- 

” 

“அது ஒண்டுமில்லடாப்பா, ராத்திரி சனாவை பேசிப்போட்டன் கண்டியோ.அவள் கோவிச்சுக்கொண்டு சாப்பிடாமல் படுத்திட்டாள். தாய்க்காரி எவ்வளவு சொல்லியும் அவள் எழும்பி சாப்பிடவே இல்ல. 

இன்று சனிகிழமை என்றபடியால் அவள் அறையை விட்டு நான் வரும் வரைக்கும் எழுந்திருக்கல்ல.” 

‘என்னத்துக்கு சிவா அவளை பேசின நீ. அவள் ஏதும் தப்பு தண்டா செய்திட்டாளே. அப்படி செய்தாலும் அதை தாயிட்ட சொல்லி கண்டித்திருக்கலாமே. நீ என்னத்துக்கு பேசப் போனாய். நளினியை 

பேசவிட்டு இருக்கலாம்தானே.’ 

” 

“தணி, உனக்கு தெரியாது. இரண்டுபேருக்கும் சேர்த்துத்தான் நான் பேசினனான்.’ 

“என்னடா சொல்லவாறாய். இரண்டுபேருக்கும் சேர்த்து பேசின நீயோ” 

‘ஓமடாப்பா. உனக்குத் தெரியும்தானே நான் வீட்டில் இன்டெர் நெட். கொம்பியூட்டர் கூட இன்னும் எடுத்துக் கொடுக்கவில்லை. காரணம் இந்த சமூக வலைத்தளங்கள் எல்லாம் 

கன்னாபின்னா என்று இருக்கின்றன. நான் பத்திரிகைகைகளிலும் பல செய்திகள் படிக்கிறேன். 

இந்த பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் வரும் பிரச்சினைகள் எல்லாம் நாளுக்கு நாள் பயங்கரமாய் வருகின்றன. அதனால் இப்போதைக்கு வேண்டாம் என்று, 

மகளுக்கு ஒரு சாதாரண மொபைல் போன்தான் வாங்கி கொடுத்து இருக்கிறேன். அதுவும் தாயுடன் பேசுவதற்கு மட்டும்.” 

சரி .அது அவசியம்தானே. ஏதும் அவசரத்துக்கு தொடர்பு கொள்வதற்கு. கண்டிப்பாக தேவை.” 

ஓம் அதுதான் அவளுக்கு வாங்கி கொடுத்தேன். இப்ப பிரச்சினை என்ன என்னென்றால் அவளுக்கு நல்ல ஸ்மார்ட் போன் ஒன்றும், ஒரு லாப்டாப்பும், வாங்கிக் தரட்டாம். இன்டெர் நெட் இணைப்பும் 

தேவையாம்” 

“எடே சிவா. இன்டர்நெட் இணைப்பு இருந்தால்த்தான் ஸ்மார்ட் போன், லாப்டாப் எல்லாம் பார்க்கமுடியும்” 

-112- 

“அது எனக்கு தெரியாமலே சீனியர் கிளாக்காக இருக்கிறன். விசர்க்கதை கதைக்கிறீர். அதெல்லாம் இருந்தால் அர்ச்சனா படிப்பில் கவனம் செலுத்த மாட்டாள். அத்தோடு இந்த பேஸ் புக், வாட்சப், 

வைபர் என்றும், யூடியூப் என்றும் மினக்கெட்டுப் படிப்பை கோட்டை விட்டுவிடுவாளோ என்ற பயம். 

அத்தோடு இந்த சாமான்கள கையாள்வதால் வரும் பிரச்சினைகளை பத்திரிகைகளில் பார்த்துப் படித்து பயந்துபோய் இருக்கிறான்” 

“சிவா உன்னுடைய பயம் நியாயமானதுதான். அண்மையில் தமிழ் நாட்டில் முகநூலில், சிநேகமான ஒரு பையனும், பெண் பிள்ளையும் நேரில் சந்தித்தபோது, அந்தபிள்ளைக்கு பையனை பிடிக்காமல் போக 

அவள் அவனை இக்னோர் பண்ணியுள்ளாள் ஆனால் அந்த பையன் அவளை தொடர்ந்து தொந்தரவு செய்து தன்னை காதலிக்கும்படி கேட்டுத் திரிந்திருக்கிறான். அவள் மறுக்க, அவளை கழுத்தை வெட்டிக் கொன்றுபோட்டான். மற்றது இன்னுமொரு செய்தி. முகநூலில் 

ஒரு பொண்ணு தன் படத்தை போட, அந்த படத்தை மோபக் செய்து ஒரு நிர்வாண முண்டதுடன் இணைத்து ஒருவன் வெளியிட, அந்த அவமான தாங்காமல் அந்த பிள்ளை தற்கொலை செய்துகொண்டது. இதில் கடும் வேதனை என்ன தெரியுமே. அந்த பிள்ளையின் பெற்றோர் கூட அந்த பிள்ளையை நம்பவில்லை. 

பொலிஸ் கூட குற்றவாளியை பிடிக்க அந்த பொண்ணிடம் மொபைல் போன் ஒன்றை லஞ்சமாக கேட்டு இருக்கிறது. 

என்ன கொடுமை பார்த்தியா சிவா இதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்குது” 

‘இதைத்தானே நான் நேற்று இரவு முழுதும் தாய்க்கும் மகளுக்கும் சொன்னனான். இந்த பிரச்சினைகள் இருக்கின்றன. உனக்கு இப்போது வேண்டாம். முதலில் படிப்பை கவனமாக பார். ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் எந்தநேரமும் அதை நொண்டிக்கொண்டே இருக்க தோன்றும். லாப்டாப் இருந்தால் அதில் முழுநாளும் இருக்க வேண்டி மனசு விரும்பும் என்று” 

இந்த ஸ்மார்ட் போன், லப்டப் எல்லாம் இன்று தவிர்க்கமுடியாத அறிவியல் சாதனங்களாக மக்கள் மத்தியில் ஆகிவிட்டன. ஸ்மார்ட்போன் கையில் இல்லாதவர்கள் இன்று உலகில் மிக குறைவு.நீர் 

பார்க்கையில்லையே.பஸ்ஸில், ட்ரையில் பிரயாணம் செய்பவர்கள் எல்லோரும் கையில் ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டுதானே நோண்டுகிறார்கள்.பக்கத்தில் இருப்பவர்களை கூட அவர்கள் 

-113- 

நிமிர்ந்து பார்ப்பது கிடையாது. என்ன செய்வது காலம் அந்த மாதிரி ஆயிப்போச்சி. சரி நீ சொன்ன விசயத்திற்கே அவள் சாப்பிடாமல் படுத்தவள். 

இல்ல இல்ல. அதற்கு மேலயும் நடந்தது. தாய்க்காரியும் மகளுக்கு வக்காலத்து வாங்கினா. ‘அவள் ஏஎல் அல்லவே படிக்கிறாள். பெரிய வகுப்பு பிள்ளைகளுக்கு படிக்கிறதுக்கும். தங்கட ப்ரொஜெக்ட்டுகள் 

தயார் பண்ணுவதற்கும் லாப்டாப் தேவைப்படுகிறது. நீங்க கண்டிப்பாக சனாவுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றல்லோ நளினியும் சொல்லுறா 

” 

சிவா ஒரு விசயத்தை நீ புரிஞ்சிக்கோடாப்பா. நாம படிச்ச காலம்மாதிரி இப்ப இல்ல. இப்ப எல்லாமே வித்தியாசம். முழுதும் கம்பியூட்டர் மூலம் படிக்கிற காலமல்லே இது.. ஆய்வு கூடம் போகாமல் அனைத்து 

பரிசோதனைகளும் லாப்டாப்பிலே பார்க்கலாம். கொம்பியூட்டர்களில் எல்லாமே இருக்கின்றன.உயர்வகுப்பு பிள்ளைகளுக்கு நளினி சொல்வதுபோல் கண்டிப்பாக இது இருந்தால் கூடுதல் நன்மை இருக்கிறது. 

மற்றது அவள் இவ்வளவு நாளும் உன்னைக் கெட்டவளே. தேவை என்று வரும்போதுதானே கேட்கிறாள். 

இன்னும் சொல்லப்போனால் நளினி,தன் மகளுக்கு சும்மா வக்காலத்து வாங்கமாட்டாள்.அவளும் அவளின்ர ஸ்கூலுக்கு போய் நாலு பேரிட்ட விசாரிச்சுப் போட்டுதான் வந்திருப்பாள் இல்லையா” 

ஓமடாப்பா அவள் ஸ்கூலில் ப்ரின்யிெல் தொடக்கம் சனாவின் கிளாஸ் 

டீச்சர் வரையும் கேட்டு விசாரிச்சு இருக்கிறாள். அவர்கள் எல்லோரும் அதன் அவசியத்தை சொல்லி இருக்கினம்.” 

பார்த்தியே நான் சொன்னன் நளினி கறாராய் எதுவும் செய்பவள்.நீ என்ன கண்டபடி பேசிப்போட்டியே.” 

“எனக்கு இந்த பத்திரிகை செய்திகள் மூலம் தெரியவந்த கொலை, சமூக சீரழிவு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மைகள் எல்லாம் இந்த கருமம் புடிச்ச சாமானுகளால்தான் வருகிறது என்ற கொதி கண்டியோ, 

அதுதான் கொஞ்சம் காரசாரமாக பேசிப்போட்டன். அவள் போய் அறைக்குள்ள கதவை சாத்திப்போட்டாள். 

பேந்து நளினி என்னை பிரிச்சு மேஞ்சா. அவ்வளவுதான்.அவவுக்கும் நான் நல்ல பாட்டுக் கொடுத்தன்.” 

-114- 

“அப்ப நீயும் இரவு பட்டினிதான் என்று சொல்லு. எடே விசரா, நீ டயபிட்டீக்ஸ்காரன் என்பதை அடிக்கடி மறந்து போறா கண்டியோ. மற்றது டென்சன் கூடினால் பிரசர் கூடும் உனக்கு தெரயும்தானே. அதுதான் உன்னால இன்று நடக்க முடியாமல் போயிட்டு. சரி இந்தா இந்த பழத்தை சாப்பிடு” என்று தன் கைப்பையிலிருந்து ஒரு பழத்தை சிவாவுக்கு கொடுத்து விட்டு.தானும் ஒரு பழம் எடுத்துக் கொன்ன்டார் தணிகாசலம். பழம் சாப்பிட்டு முடிந்ததும். சிவா பேசினார். 

“தணி, நான்தான் இரவு அவசரப்பட்டு கண்டபடி திட்டிப் பேசிப்போட்டேன் என்று இப்ப பீல் பண்ணுறன். 

அவர்கள் இருவரும் சொன்ன கருத்துகளையும், நியாயத்தையும் நான் கொஞ்சம் அமைதியாக கேட்டிருக்கலாம் இல்லையோ” 

“இல்லையே பின்ன. சிவா. கெட்டுப்போறதுகள் எப்படியும் கெட்டுப்போகும் கண்டியோ. நாம எப்படித்தான் கண்ணைக்கட்டி வச்சிருந்தாலும் அதற்கு மாற்று வழி அவர்களிடம் இருக்கும். ஆனா ஒன்று, ஒரு தகப்பனா நல்லது கெட்டது என்ன என்பதை பிள்ளைகளுக்கு கண்டிப்பாக சொல்ல வேண்டும். தாய் இரண்டு மடங்கு கவனம் எடுக்க வேண்டும். நளினியைப் பொறுத்தவரையில் நீ பயப்பட வேண்டிய தேவையே கிடையாது. ஒரு தாயாக அவள் சரியான நிலைப்பாட்டைத்தான் எடுத்திருப்பாள். இன்னும் ஒன்று சொல்லுறன். நம்மட தலைமுறை, நமக்கு முதல் இருந்த தலைமுறை எல்லாம் வேறடாப்பா. அதை புரிஞ்சுகொள்ளு. நாங்க குப்பி விளக்கு, 

சிமினி விளக்கிலதான் படிச்சனாங்க. இப்ப அப்பிடியே. ஒரு மணித்தியாலம் கரண்ட் கட்டாப்போச்சுதென்றால் நமக்கே இப்போ கஷ்டமாக இருக்குதல்லே. இந்த தலைமுறைக்கு எப்படி இருக்கும். நம்மட தலைமுறையில் உள்ளவர்கள் பத்து வயசுவரைக்கும் அம்மா,அப்பாவுடன் படுத்து உறங்கினவை. இப்ப அவர்களுக்கு தனி அறை வேண்டும். ஓமோ இல்லையோ.” 

“ஓமடா, அதிலும் அவர்கள் விரும்பிய படிதான் எல்லாம் ஒழுங்கு செய்கிறார்கள். தாயோ, தகப்பனோ அவர்கள் ரூமிற்குள் போய் எதுவும் செய்ய முடியாது” 

“புரியுதல்ல…அதுதான் தலைமுறை இடைவெளி. இந்த தலைமுறைக்கு பல இழப்புகளும் இருக்கிடா சிவா” 

“இழப்புகளோ. நினைச்ச சாமான்கள் வாங்கித்தர கேட்குதுகள். பிடிச்ச சாப்பாடுதான் சாப்பிடுதுகள். 

-115- 

விருப்பமான உடுப்புகள்தான் உடுத்துதுகள். என்ன இழப்புகள் அவர்களுக்கு இருக்குது” 

“சிவா நிறைய இருக்கிடாப்பா. சொல்லுறன் கேளு. அந்தக் காலத்துல நாங்க விளையாடின விளையாட்டுக்கள் இவர்கள் இப்போ விளையாட முடியுமே. கிட்டிப்பொல்லு, பச்சைக்குதிரை, கள்ளன்பொலிஸ், கிளித்தட்டு, கெந்திமிதித்தல், குண்டடித்தல், வாரோட்டம், என்று எத்தனை கிராமத்து விளையாட்டுகள் விளையாடி இருப்பம். இவர்கள் அறைக்குள்ளேதான் அடைபட்டு கிடக்கினம். நமக்கு இவ்வளவு பெரிய படிப்பு சுமை இருந்ததே. பள்ளியால வந்தால் புத்தகங்களை மூலையில் போட்டுவிட்டு முன்வளவுகளுக்குள் ஓடி விளையாடிவிட்டு சாயங்கலாம்தான் மேல்கழுவி வந்து படிக்கத் தொடங்குவோம். இப்பெல்லாம் இவர்கள் அப்படி செய்யமுடியுதே. 

பள்ளிகூடங்களில் பயங்கர கொம்பிடிசன் இருக்கு. எல்லோரும் கெட்டித்தனமாக படிக்கிதுகள்.ஏதோ உன்ர மகள் கொஞ்சம் கெட்டிக்காரி என்றபடியால் மற்றவர்களுடன் போட்டி போட்டு படிக்கிறாள். அவளுக்கு படிக்க இன்னும் நீ வசதி செய்து கொடுக்கவேண்டும். நீ உன்னோட காலத்தை நினைச்சிக் கொண்டு அவளோட காலத்தோட விளையாடாத கண்டியோ. பேந்து பிழையாக போயிடும் சொல்லிப்போட்டன் ஓ. 

மற்றது அவர்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் எல்லாம் இன்றைய அறிவியல் சார்ந்தது. ஒரு தாய் தன் மகளின் நலனில் அதிக அக்கறை எடுப்பாள். நளினி நல்ல தாய் என்பது எனக்கு தெரியும்” 

“நீர் சொல்வது உண்மைதான் தணி, ஒரு தகப்பனைவிட தாய்க்கு பிள்ளைமீது அதீத அக்கறையும் கவனமும் இருக்கு. அர்ச்சனாவில், நளினி அதிக கவனம் எடுப்பவள்.அவளை எடுத்து எறிஞ்சு பேசி இருக்கத் தேவையில்லை. என்னை நினைச்சால் வெட்கமாகவும் என்மேல் கோபமாகவும் வருகுதிடாப்பா.” 

“நீ ஒன்றுக்கும் யோசிக்காத கண்டியோ. எல்லாம் நல்லபடியா நடக்கும். கிளம்பு வீட்ட போ.. போய் நளினியோடும்,அர்ச்சனாவோடும் நல்லமாதிரி பேசு.. அவள் விரும்பியதை இன்றைக்கே வாங்கிக் 

கொடு சரியே.’ என்று சொன்ன தணிகாசலம் எழுந்து நடக்க தொடங்கினார். 

ஒரு மனப்பாரம் இறக்கி வைக்கப்பட்ட உணர்வில் சிவராசா தன் நண்பனை பின் தொடர்ந்தார். 

தன் மகளை கட்டி அணைத்து இரவு கடுமையாக நடந்து கொண்டமைக்கு வருத்தம் தெரிவித்து அவளைக் கூட்டிக் கொண்டு கடைக்குபோய் அவள் 

-116- 

கேட்டபடி,லாப்டாப்பும், ஸ்மாட் போனும் வாங்கிக் 

கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ள அவரது நடையில் வேகம் கூடியது.

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *