செல்லாக்காசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 7,215 
 
 

மகன் ராஜேஷ் இவர்கள் காணவில்லை என்று பத்திரிகையில் போட்டா கொடுத்ததோட நிறுத்திக் கொண்டான்.

ராஜேஷ் தனது பெற்றோர்கள் காணவில்லையே என்ற கவலை இல்லாமல் இருந்தான்….

அந்த ஊர்கள் இவர்களை பற்றி கேட்டால் அவன் சொல்வது ஒன்று மட்டும் தான்… அவர்கள் பொங்களூரில் இருக்கிறார்கலாம் என் மாமா வீட்டில் இருவரும் பத்திரமாக இருக்கிறார்கள் நீங்கள் உங்களின் வேலையை செய்யுங்கள் என்றே அவனிடமிருந்து பதில் வரும்..

கல்லை வயிற்றில் கட்டிக்கொண்டு தண்ணீரில் முழுகினால் முழுநிலவு தெரியுமாம் என்பது போல் பிள்ளைகளிட மிருந்து பதில் வருகிறது..

மகனுக்கு தெரியாமல் எதற்கோ

பத்தாயிரம் ரூவாய் சேர்த்து வைத்தார்கள் அவை தான் இப்போது அவர்களுக்கு துணையாக நின்றது…

இதுவரை வீட்டின் திண்ணையில் படுத்தவர்கள் இப்போது பிளாட்பாரங்களில்சரியான தூங்க வேண்டுமே என்ற மனம்நெருப்பாய் கொதித்தது ஆனால் வேறுவழியில்லையே சாலையோரம் தங்கினார்கள்..

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தான் இப்படி நாடோடி வாழ்க்கையை தள்ள முடியும் டி அப்படி என்ன தான் சொன்னான் உன் மவன் எனக்காச்சும் சொல்லுடி என்று முனுசாமி கேட்டான்..

சாந்தி சற்று யோசித்து அது ஒன்னுமில்ய்யா விடு..

நா மட்டும் தனியா தான் வந்துடலாம்னு நெனைச்சேன் ஆனா உன்ன அவன் கிட்ட பிச்சை எடுக்க விட எனக்கு தான் மனசு வரல அதான் உன்னை சேர்த்து கூட்டியாந்துட்டேன் என்றாள்.

அப்படியா டி ம்ம்ம்ம்… சரி உன் மவன் சொன்னத சொல்லுடி சாந்தி இல்லனா நா காலையிலேயே மோத வண்டிய புடிச்சி அவங்கிட்டையே நேரா போய் கேப்பேன் பாத்துக்கோ என்றான் முனுசாமி….

அதற்கு சாந்தியோ இல்லைய்யா இல்லை வேணா போவேணா நானே சொல்றேன்ய்யா

நம்ம மருமவ சொல்றா உங்க அம்மா அப்பாவும் சம்பாதிங்கிற பணத்த அப்படியே சேர்த்து வச்சி உங்க அக்காக்கு போய் கொடுக்குது இங்க நான் தானே அதுங்களுக்கு சோத்த போடுறேன் உனக்கு எதாச்சும் தருதுங்களா பாருங்க இனிமே நான் அதுங்களுக்கு நா சோத்த போட மாட்டேன் அதுங்கள அப்படி அவங்க பொண்ணு வீட்டுக்கே போக சொல்லுனு சொல்றா…

இத என் காதால கேட்டேன் எதுக்கு நீ இப்படி பேசுற டி உன்ன போய் என் மவனுக்கு கட்டிவச்சேன் பாரு இப்படி குடும்பத்தபிரிக்கிறியே டி…

என் மவனு உன்ன கட்டாம இருந்திருந்தான நீ என்னேரம் எங்க எப்படி இருந்திருப்பியோடி என்று வார்த்தையை தவற விட்டேன்ய்யா..

அதுக்கு நம்ம மவன் வந்து என்கிட்ட சொல்றான் நாயே உனக்கு சோத்த நான் போட்டா நீ திருட்டுத்தனமா பணத்த உன்பொண்ணுக்கு தறியா நீ….

போ போ நீயும் உன் புருஷனும் போய் உன் பொண்ணு வீட்ல எச்ச சாப்பாடு போடுவாங்க அங்க போய் திண்ணு இல்லாடி.. அப்படி போய் சாவுங்க…!

நீயும் உன் புருஷனும் இனிமே என் விட்டிக்கே வராதீங்க போய் ரோட்ல படுங்க ஊர்ல கேட்டாங்கனா சொல்லுங்க என் மவனுக்கு பணம் கொடுக்கமா என் மவளுக்கு கொடுத்தோம் அதுவும் இல்லாம என் மருமவள திட்டினோம்னு…

அதுக்கு எங்கள ரோட்ல விட்டானு சொல்லு

நேரத்துக்கு வந்து ரோட்லையே சோத்த போடுறேன் வந்து ரெண்டு பேரும் சாப்ட்டு போங்கனு கேவலமா பேசிட்டான்ய்யா என அழுதால் சாந்தி…

அதாய்ய நா உன்னையும் சேர்த்து கூட்டியாந்துட்டேன் என்றதும் முனுசாமிக்கும் மன வேதனை தாங்க முடியாமல் அழுதார்..

சாந்தியும் அட யோய் நீ ஏன்ய்யா அழுவுற நாம பாத்துக்கலாம்.. நம்ம சம்பாதியம் இருக்குல. அத வச்சி காலைல ஒரு வாடகை வீடு பாத்து போயிடலாம் என்று ஆருதல் சொன்னாள் சாந்தி.

முனுசாமி கேட்டார் அதில்ல டி சாந்தி கிராமத்துல ஏதோ கூலி வேலை செய்து பொழப்ப நடத்திட்டோம் இங்கையும் அதே மாதிரி நம்மளால பண்ண முடியாதே டி இங்க போய் எந்த வேலையினு செய்வ சொல்லு..?

சாந்தி சொன்னால் இந்த ஒரு வாரத்திலேயே கையிருப்பு உப்பு மாதிரிகரையுது மீதம் இருக்கும் பணத்த வைச்சிஏதாச்சும் பண்ணலாம்ய்யா.. இல்லைனாவேறா எதாவது ஒரு கிராமத்துக்குபோயிடலாம் என்றாள்..

பிறகு மீண்டும் பேச்சை தொடர்ந்தால் சாந்தி யோய்

நம்ம ரெண்டு பேரும் பிச்சையெடுக்கும் நிலைமைக்கு மட்டும் போகவேக்கூடாது அப்படி நிலைமை வந்தா செத்துப்புடலாம்ய்யா யோசிக்காதையா நான் சொல்றத கேளு… என கணவனிடம் அழுதால் சாந்தி..

முனுசாமியும் சரிடி நீ அழாத காலையில மோத வேலையே வீட்ட பிடிக்கிறது தான் வேலையே சரியா நீ தூங்கு பாக்கி காலையில பேசிங்கலாம் என்றான் முனுசாமி…

இருவரும் பேசிய படியே சென்னையில் வீடி பிடிக்க தொடங்கினார்கள் அப்படி வாடகை வீடு தேடி போகும் போது ஒருவரிடம் வாடகை வீடு கிடைக்குமா என்று கேட்டார்கள்…

அதற்கு அவனும் இங்கு ரொம்ப வீடு வாடகைக்கு இருக்கு என்று சொல்லி அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்த பணத்தை பிடிங்கிக் கொண்டு ஓடிவிட்டான்..

தனியாக சொல்பவர்களையே விடமாட்டார்கள் வயதானவர்கள் வேறு என்ன செய்ய முடியும் அவர்கள்..

சாந்தி எது நடக்கக்கூடாது என்று நினைத்தாலோ அதுவே நடந்தது… பணம் பறிக்கொடுத்து இரண்டு நாட்களுக்கு எதுவுமே சாப்பிடாமல் இருந்தார்கள்..

முனுசாமி சாந்தியை ஒரு இடத்தில் நான் வரும் வரையில் நீ இந்த இடத்தை விட்டு எங்கையும் போகக்கூடாது என சொல்லிட்டு வந்தான்…

நம் வயதுக்கு யாரும் வேலை தரமாட்டார்கள் பேசாமல் மானம் கெளரவம் பார்க்காமல் பிச்சையெடுக்கலாம் ஊருக்கு போகும் அளவுக்கு பணம் கிடைத்தாலே போதும் என்ற எண்ணத்துடனே முனுசாமி பிச்சையெடுக்க ஆரம்பித்தான்….

முனுசாமி எதிர் பார்த்தளவிற்கு காசை போடவில்லை சரி என்ன செய்வது என தெரியாமல் விழித்தான்…

பின் வேறு இடம் சென்று பிச்சையெடுத்தார்.. அவரின் கைககளுக்கு 50ரூவாய் நாணயங்களாக இருந்தது..

முதலில் சாந்திக்கு சாப்பாடு வாங்கி தரலாம் அப்பறம் வந்து யார் கையில் காலில் விழுந்தாவது சொந்த ஊர் பக்கம் போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டே சென்றான்.

கையில் சாப்பாடு வாங்கிக் கொண்டு போனான் சாந்தி ரோட்டில் ஒரமாய் அதுவும் வெயிலில் படுத்துக்கிடந்தாள்…

சாந்தியின் நிலையை பார்த்ததுமே முனுசாமிக்கு வேதனை தாங்க முடியவில்லை ஆனாலும் வேதனையை மறைத்துக் கொண்டு மனைவி சாந்திக்கு தான் வாங்கி வந்த உணவை கொடுத்து சாப்பிட சொன்னான்..

சாந்திக்கும் பசி உணவை பிரித்து சாப்பிட்டாள் சாப்பாடு எப்படி கிடைத்தது என்று கூட கேக்கவில்லை வேகமாக பாதி சாப்பிட்டாள் மீதம் கணவன் முனுசாமியிடம் கொடுத்துவிட்டாலள் அதை முனுசாமியும் சாப்பிட்டார்…

சாந்தி சாப்பிட்ட சற்று நேரத்திலேயே வலிப்பு வந்துவிட்டது முனுசாமிக்கு என்ன செய்வதென்பதே தெரியாமல் கத்தினான் அருகில் இருப்பவர்கள் உதவி செய்தார்கள்…

அவர்களின் உதவியோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்..

மருத்துவமனை மருத்துவர்கள் முனுசாமியை அழைத்து உங்கள் மனைவிக்கு முடக்கு வாதம் ஏற்பட்டுள்ளது இனி அவரால் நடக்கவோ பேசவோமுடியாது..

இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையிலேயே இருக்கட்டும் அதன் பின் நீங்கள் உங்கள் மனைவியை அழைத்துச் செல்லலாம் என்றார்கள் மருத்துவர்கள்.

இரண்டு நாட்களுக்கு சாந்திக்கு தேவையான வற்றை வாங்க பணம் தேவை என்பதால் முனுசாமி மீண்டும் பிச்சையெடுக்க சென்றான்.

சாந்தியை பார்க்க செல்லாமல் ஒரு நாள் முழுவதமாக பிச்சையெடுத்தார் முனுசாமி..

ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயமாக எடுத்துக் கொண்டு சாந்தியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார் முனுசாமி…

சாந்திக்கு நினைவு திரும்பிருந்தது அவளின் இந்த நிலைமையை பார்க்க முடியாமல் தவித்தார் முனிசாமி.. அவருடன் சாந்தியும் அழுதாள் எதையோ பேச வாய் துடிக்கிறது ஆனால் சாந்தியால் அதை சொல்ல முடியவில்லை…

சாந்திக்கு ஆறுதல் சொல்லி அழுதார் முனுசாமி பிறகு மறுநாள் மருத்துவமனையில் இருந்து சாந்தியை அனுப்பினார்கள் இந்த நிலையில் எங்கே செல்வது என்றும் மகனின் இழிவான பேச்சுகலாம் வேறுத்துப் போன மனநிலையுடன் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார்கள்…

அன்றிரவு மருத்துவமனை வெளியவே தங்கினார்கள் காலையில் இருவரும் தூங்கிக் கொண்டே இருந்தார்கள் அவர்களை எத்தனையோ நபர்கள் எழுப்பியும் எழுந்தறிங்கவில்லை..

மகள் மகனை பிரிந்து வாழ நினைத்தார்கள் ஆனால் வாழ முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார்கள்.

பிச்சையெடுத்து சாந்தியை காப்பாற்ற நினைத்தாலும் மகன் மகளிடம் தஞ்சமடைந்தாலும் சாந்தியை நன்றாக பார்த்துக் கொண்டாலும் இறுதியில் என் மகன் சொன்னதைப் போல் தான் நடந்தது ரோட்டில் நாய்களுக்கு உணவை போடுவதை போல் தான் நான் அவளுக்கு பிச்சையெடுத்து உணவை கொடுத்தேன்…

அவள் மற்றவரிடம் பிச்சைக் கேட்டுவிடுக்கூடாது என்பற்காகவே இந்த முடிவை நான் தேர்வு செய்தேன்…. என்றாலும் அவளின் கடைசி முடிவும்இதுவாக தான் இருக்கும் என்பதை அவளின்கண்ணீரீலேயே புரிந்துக் கொண்டேன்…

பிள்ளைகளுக்கு இனி நாங்கள் செல்லாக்காசு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *