கினிம்மா – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 17,757 
 
 

விக்னேஷ், என்ற ஒரு சிறு வயது சுட்டிப் பையன் ஒருவன் இருந்தான். அவனை எல்லோரும் விக்கி என்று அழைப்பார்கள். அவனுக்கு செல்லப் பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நாய் பூனை எதுவாக இருந்தாலும் எடுத்து வளர்த்துவான். அவனுக்கு வீட்டிலும் தடை இல்லை.

ஒருநாள், விடுமுறை அன்று அவன் நண்பன் வீட்டிற்க்கு சென்றான். அங்கு இருந்தப் பனைமரத்தில் ஒரு கிளி இருந்தது. அந்த கிளியின் சத்தம் கேட்டு மேலேப் பார்த்தான்.

அங்கு மரத்தின் மேல் ஒரு பச்சைக்கிளி, பார்ப்பதற்க்கு அவ்வளவு அழகாக இருந்தது. அவன் விளையாடி விட்டு வீட்டிற்க்கு செல்லும் போதும் கூட , அந்த கிளி அவன் கண்னை விட்டு பிரியவே இல்லை.

அடுத்தநாள் அந்த கிளியைப் பார்க்க வந்தான், விளையாடுவதை விட அந்த கிளியைப் பார்ப்பதிலே அவன் நோட்டம் இருந்தது. இப்படி தினமும் அவன் அங்கு வந்து அந்த கிளியைப் பார்த்தான்.

அவனுக்கும் கிளி வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்தது.

அவன் பாட்டியிடம் போய் கேட்டான்.

“பாட்டி பாட்டி, கிளி எங்க கிடைக்கும்” நா வளர்க்கணும்” என்று சிறுபிள்ளைப் போல் கேள்விக் கேட்டான்.

பாட்டி, “ டேய் கண்ணா, கிளி ஆலமரத்துல, தென்னமரம், பனைமரம் ன்னு மரத்துல இருக்கும். ஆல மர கிளி நல்ல பேசும். பனைமர கிளி அவ்வளவாக பேசாது, கிளிகளுக்கு குஞ்சுல இருந்து பேச சொல்லி தரணும் டா”, இப்படி கிளிப் பற்றி ஒவ்வொன்றாக கூறிகிறாள் பாட்டி.

விக்கி, அவன் பக்கத்து வீட்டு பெரிய அண்ணை கூப்பிட்டுக் கொண்டு காட்டிற்க்குள் கிளி பிடிக்கச் சென்றான். அவன் பார்த்த கிளிகள் அனைத்துமே அவனுக்கு பிடிக்கவில்லை.

இறுதியாக அவன் நண்பன் வீட்டுக்கு சென்றான். அங்கு இருந்த மரத்தில் கிளியைப் பார்த்தான். ஆனால் அது அங்கு இல்லை. வருத்ததுடன் இருந்தான்.

அப்போது திடீரென்று பலமாக காற்று வீசியது.

அங்கு மரத்தில் இருந்த கிளியின் குஞ்சு கீழே விழுந்தது. அவன் ஓடிப் போய் அதை எடுத்துக்கொண்டு பார்த்தான். மகிழ்ச்சியில் மூழ்கினான். அதை அந்த மரத்தில் விடுவதற்க்கு மனம் இல்லை அவனுக்கு.

சிறிது நேரத்தில் மழைப் பெய்யத் தொடங்க ஆரம்பித்தது.

உடனே அவன் அந்த கிளியை வீட்டுக்கு எடுத்து வந்தான்.

பாட்டி, சொன்னப்படியே அந்த கிளிக்கு மிளகாய், கொய்ய பழம் என்று நிறைய தந்தான். ஆசையாக வளர்த்து வந்தான்.

விக்கி பாட்டியிடம் சென்று,“பாட்டி இந்த கிளிக்கு பேர் வை ன்னு” சொல்லி நச்சரித்தான்.

பாட்டி, “கினிம்மா”ன்னு பெயர் வைன்னு சொல்லி விடுகிறாள் பாட்டி.

அவனும் “கினிம்மான்னு சொல்லி பெயர் வைத்து, அந்த கிளியை வளர்த்தினான்.

சில மாதங்கள் வரை அந்த கிளி பேசவே இல்லை. அவனுக்கு ஒரே வருத்தம். எல்லோரும் ஆலமர கிளி தா பேசும், இது பேசாது என்று அவனைப் பயமுறுத்தினார்கள்.

அவன் அந்த கிளியிடம் சென்று, “கினிம்மா, விக்கி சொல்லு, விக்கின்னு சொல்லு கினிம்மா” என்று அழுகிறான்

அப்போது, “விக்கி விக்கி” என்று சொல்லியது.

அன்று முதல் அவனும் அந்த கிளியும் அண்ணன் தம்பிப் போல பழக ஆரம்பித்தனர். இப்படியே சில மாதங்கள் சென்றது.

ஒருநாள் விக்கி கூண்டைத் திறந்து விட்டு அருகில் உள்ள மரத்தில் விட்டு விட்டு அவனும் அக்காவுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது, கிளி விக்கி விக்கின்னு சும்மா கத்திக்கொண்டு இருந்தது. அவன் விளையாட்டு ஆர்வத்தால் கவனிக்காமல் போய் விட்டான்.

திரும்பி வந்து பார்த்தான் கிளி கிழே விழுந்து இறந்து கிடந்தது. அதன் இறக்கை கிழே சிதறி இருந்தது. அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

அந்த கிளி கரண்ட் வயர்யில் கால் மாட்டிக் கொண்டிருந்தது. ஒருநிமிடம் வந்து இருந்தால் அதைக் காப்பாற்றி இருக்கலாம், என்று அழுது கொண்டே இருந்தான். இரண்டு நாள் சாப்பிடவும் இல்லை.

அவன் அப்பா வேறு ஒரு கிளியைப் பிடித்துக்கொண்டு வந்தார். ஆனால் அது அவனுக்கு பிடிக்கவில்லை.

“கினிம்மா மாறி, நா இந்த கிளியையும் சாக அடிக்கல அப்பா வேண்டா, காட்டுலே விட்டு விடுங்க, நா சாப்பிடற” என்று சொல்லி அவன் சாப்பிட்டான்

“என்றுமே அவன் கினிம்மா மாறி வேறு கிளி வராது”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *