காற்று, கடல், கண்மணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 14,946 
 
 

மகாலட்சுமி கோயில் மும்பை .மெயின் ரோடு வரைதான் கார் போனது.சற்றே குறுகலான இரு பக்கம் கடைகளும் கூட்டமும் மிகுந்த அந்த வழியில் சென்றோம். அர்ச்சனை தட்டுடன் கடைகளில் வரவேற்றார்கள்.கூட்டம் நெரிசலால்

“ஆன்டி! எனக்கு ஒரு தட்டு வாங்குங்கள் ”

சற்றே திரும்பினேன்.

நல்ல லக்ஷணமான தமிழ் பெண்! பார்த்தாலே பேசத் தோணும் முக பாவம் !

நான் வாங்கிய தட்டை அவளிடம் நீட்டினேன்.அவள் கொடுத்த ரூபாய்க்கு சில்லறை வாங்கித் திரும்பினால் அவள் இல்லை !

கோவிலுக்குள் போய் விட்டாள் போல !

கணேசு ! அந்தப் பொண்ணு சில்லறை வாங்காமல் போயிட்டாளே !

சரி அம்மா ! உள்ளேதான் இருப்பாள். கொடுத்துக்கலாம். என்றான் என் பையன்.

மழைத் தூறல் இருந்ததால் என் பேத்தியும் பேரனும் வெறும் காலில் நடக்க தடுமாறினார்கள்.

இவர்களை சமாளித்து கோவிலுக்குள் போனால் அந்தப் பெண்ணைக் காணோம்.

முன்பின் தெரியாத பெண்.!அதுவும் மகாலஷ்மி கோவிலில் எனக்கு ஒரு பாரத்தைக் கொடுத்து விட்டாளே என்ற ஆதங்கம் வேறு!

பாக்கிக் காசை உண்டியலில் போட்டுடு அம்மா ! அது நமக்கு வேண்டாம் .

எனக்குள் வேறு மாதிரி எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அம்மன் சன்னதியில் என்னிடம் பணத்தைக் கொடுத்து ஒரு பந்தம் ஏற்படுத்திய அந்தப் பெண் மறுபடியும் என்னிடம் வருவாள்..எனக்கும் அவளுக்கும் எதோ ஒரு முடிச்சு அந்த இறைவன் போட்டிருப்பார். அதுவும் இந்த மஹாலக்ஷ்மி சன்னதியில் அவளுடைய அருளுடன் மறுபடியும் ஆரம்பிக்கிறது என என் உள்ளம் சொல்லியது !.

அந்த ஆரம்பம்தான் என் கையில் உள்ள இந்தப் பணம் !.

அதற்குள் என் கணவர் வந்துவிட்டார். மெயின் ரோடில் கார் நிறுத்த இவ்வளவு நேரம் !.டிரைவர் திண்டாடிப் போய்ட்டார்.!.என வேர்க்க விருக்க பேசினார் !.

சரி ! சரி !நீங்க போய் சீக்கிரம் தரிசனம் பண்ணிட்டு வாங்க !.நாங்க வெய்ட் பண்ணறோம் .

அதுக்குள்ளே பேரனும் பேத்தியும் “வீ கெனொட் வெய்ட்! கோயிங் டு த கார் ! என ஆரம்பித்தனர்.

என்ன சரஸ்வதி ! கையிலே ரூபா நோட்டும் சில்லரையும் ! கொண்டா! உண்டியல்லே போடணுமா !

இல்ல ! நீங்க சீக்கிரம் போயிட்டு வாங்க ! இவங்களைக் கூட்டிகிட்டு காருக்குப் போறேன்!

மும்பையில் மழை காலம் இன்னம் முடியவில்லை .அப்பபோ மழை பெய்து கொண்டுதான் இருந்தது.

அடுத்து சர்ச் கேட் போற வழியில் சாலையில் ஒரு ஷாபிங் இடத்தில் நின்றோம்.காருக்குள் உட்கார்ந்திருந்தேன்..

திரும்பி சாலையில் ஓடும் ஒரு காரில் அவள் உட்கார்ந்திருந்தாள்.

பார்க்கத்தான் முடியும் !.அவள் பேர் தெரியாது !. மூடிய கையில் உள்ள பணத்துடன் கையை ஆட்டினேன் !

யாரு போறாங்க !.கையை இவ்வளவு வேகமாக ஆட்டுகிறாய்! என்றார் என் கணவர்.

அந்தப் பொண்ணு ! மகாலட்சுமி கோயில் பொண்ணு !

அதற்குள் கார் போய்விட்டது !.

அதற்குள் குழந்தைகளும் பையனும் வந்து விட்டார்கள். நாரிமன் பாய்ன்ட் போனோம்.

கணேசு! அந்தப் பொண்ணைப் பார்த்தேன் மறுபடியும்.

அம்மா !.காரிலே போறவங்க எல்லாம் உனக்கு அவளை மாதிரி தெரியறாங்க! இன்னும் அந்த பணத்தைக் கையில்தான் வச்சுருக்கியா !

எப்படியும் அவளை நீ பார்திருவே !அவளும் வாங்கிப்பா ! இப்போதைக்கு அந்தப் பணத்தை பைக்குள் போடு!

சரிடா ! என்று அரை மனதுடன் பையில் வைத்துக் கொண்டேன்.

மறு நாள்.

ஏர்போர்ட் போக வேண்டும் .ஏற்கெனவே ஹோட்டல் இடம் எல்லாம் புக் பண்ணி இருந்தது. என் மருமகள் சுமதி அவள் ஆபீஸ் நண்பர்களுடன்

அமெரிக்காவில் இருந்து நேரா அங்கே வந்துவிடுவாள்.நாங்கள் சவுத் மும்பையிலிருந்து கிளம்பினாலும் மழை,டிராபிக் நெரிசலினால் சீக்கிரமே கிளம்பணும்.பதினோரு மணி பிளைட்டுக்கு ஏழு அரைக்கே கிளம்பிட்டோம்.

கார் போய்க் கொண்டிருந்தது.

மெய்ன் சாலையில் எங்கள் முன்னாள் போன டாக்சி சற்று தாறுமாறாக ஓடி ஓரமா நின்றது. டயர் பஞ்சர்.

ஆச்சர்யம்! அந்தப் பெண் அதிலிருந்து இறங்கினாள், டாக்சி காரரிடம் பதட்டமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

கணேசு! காரை நிறுத்து! அந்தப் பொண்ணிடம் போய் என்னான்னு கேளு!

அம்மா! ஏற்கெனவே நேரமாச்சு! இதிலே இவளுக்கு பஞ்சாயத்து பண்ணச் சொல்றே !

சரிடா!

அப்புறம் எங்க டிரைவரிடம் போய்க் கேட்கச் சொன்னேன்.

அவளிடம் பேசி காருக்கு வரவழைத்தேன் .

ஆன்டி! நீங்களா! ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு நான் ஏர்போர்ட் போகிறேன். வேற கார் நீயே பாத்துக்கோ ! எனக்கு டயர் பஞ்சர் ஒட்டனும்னு சொல்றான்.

பரவாஇல்லை ! ஏர்போர்ட் தான் போறோம். இதிலே ஏறிக்கோ!

இதிலேயா! என்று இழுத்தாள்

அட! இது செவன் சீட்டர் வான் ! இடம் இருக்கு.வா ! என் பக்கத்திலே உட்காரு.

ஆமாம்! உன் பேர் என்ன சொன்னே !

ஆன்டி! என் பேர் கண்மணி !

கணேசுக்கும் குழந்தைகளுக்கும் சங்கடம்! அம்மா சொன்னா கேட்க மாட்டா! என்று முணுமுணுத்துக் கொண்டே அவள் லக்கேஜ் எடுக்கப் போனப்போ சீட் அட்ஜஸ் செய்தான்.

கண்மணி காரில் ஏறிக்கொண்டு என் அருகில் உட்கார்ந்தாள்.

கண்மணி! இது என் பையன் ,பேரக் குழந்தைகள் , என் கணவர் என்று எல்லாரையும் அறிமுகம் செய்தேன்.

கண்மணி சிரித்தாள்.

அப்புறம் கண்மணி! ஒரு முக்கியமான விஷயம்! இந்தா உன்னுடைய பாக்கிக் காசு! நேத்திக்கி நீ வாங்கிக்காம காணாப் போயிட்டே !

கண்மணிக்குப் பேச வரவில்லை!

குறுகுறுப்பான அந்த அழகிய முகம் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது .!

ஆன்டி! அவளுக்குப் பேச்சு வரவில்லை!

அம்மா! என்று என்னைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்! விசும்பி விசும்பி அழுதாள்.

கண்மணி ! என்ன ஆச்சு! நான் ஏதாகிலும் தப்பாச் சொல்லிட்டேனா?

ஐயோ ! அம்மா! அதெல்லாம் இல்லை!

மகாலட்சுமி அம்மன் சன்னதியில் உங்களிடம் காசு கொடுத்துப் பூஜை தட்டு வாங்கும்போது உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் அப்படியே என் அம்மா போல இருந்தீர்கள். இப்பவும் இருக்கிறீர்கள்.!

அம்மாவிடம் அதுவும் அம்மன் சன்னதியில் பூவும் பழமும் வாங்கும்போது பாக்கிக் காசு எப்படி வாங்குவேன்!

நீங்க அன்னக்கி தேடியதும் எனக்குத் தெரியும். வேகமா வெளியே போய் வெகு நேரம் அழுதேன்!

ஆனா உங்களை மறுபடியும் சந்திப்பேன் என்ற ஆசையும் ஆர்வமும் நிறைய இருந்தது.

அங்கேயே எல்லார் முன்னாலேயும் உங்களை அம்மான்னு கூப்பிட்டால் ரொம்பத் தப்பாய் விடும்.அதனாலேயே துக்கத்தையும் ஆசையும் அடக்கிக் கொண்டு போயிட்டேன்.!

நான் அவளையும் அந்த களங்கமில்லா கண்ணீர் பெருகும் முகத்தையும் பார்த்தேன். கேட்கத் துணிவு இல்லை! ஆனாலும் கேட்டு விட்டேன்!

கண்மணி! உன் அம்மா எங்கே?

அம்மாவா! அம்மா அந்த தெய்வத்திடம் போய் ஏழு வருஷம் ஆகிறது.!

என்னுள் முகத்தைப் புதைத்தவள் விசும்பலும் வேதனைக் கண்ணீரும் பெருகி ஓட குலுங்கி அழுதாள்

திடீரென்று முகத்தைத் தூக்கி ” என் வேதனை தாங்காமல் என்னவோ அந்த மகாலட்சுமி என் அம்மாவை திரும்ப காட்டி விட்டாள்.

அந்த வார்த்தைகள், ஒரு மகவின் தூய அன்பின் வேகம் ஒரு தாயான என்னை மிகவும் உருக்கி விட்டது!

ஐயோ கண்மணி! என் செல்லக் கண்மணி! என்று நான் என்னையும் மீறி அவளை இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் பெருக ஆரம்பித்தேன்.

என் கணவரும் பையனும் முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள்.

டாட் ! பாட்டியும் அந்த கேர்ளும் ஏன் அழறாங்க ! சம்திங் ராங் என்று பேரனும் பேத்தியும் கேட்டார்கள்.

நோ! பாட்டி லைக்ஸ் ஹர் வித் லவ் ! என்று ஏன் பையன் சொன்னான்.

சற்று நிசப்தம்! கார் போய்க் கொண்டிருந்தது!

கண்மணி! உன்னைப் பற்றிச் சொல்லு!

ஏன் மீது சாய்ந்தவள் அந்த இறுக்கத்தை விடவே இல்லை!

ஒரு தாயின் உணர்வை நான் பெறாத அந்த செல்ல மகளிடம் முற்றிலும் உணர்ந்தேன்!

எனக்கு மகள் இல்லை!

மகளின் இனிய சுகத்தை முதன் முறையாக என்னால் மனமாரப் புரிந்து கொள்ள முடிந்தது. தெய்வத்திற்கு நன்றி சொன்னேன்.

கண்மணி பேசவே இல்லை!

ஏர்போர்ட் வந்து விட்டது

கண்மணி ! எழுந்திரு! ஏர்போர்ட் வந்தாச்சு!

லகேஜ் இறக்கி டிராலி பார்க்க என் கணவரும் பையனும் போய் விட்டார்கள்.

சரி! நீ எந்த பிளைட்லே போறே ! உன் லக்கேஜ் எடுத்திண்டயா?

அம்மா! நான் கோவுக்குப் போகணும்.நீங்க!

அவள் சொல்லும்போதே என் கணவரும் மகனும் வந்து விட்டார்கள்.

எல்லாருக்கும் ஆச்சர்யம்!

என்ன! கோவாவுக்கா!

ஆமாம் அம்மா! அங்கேதான் போறேன் ! நீங்க!

ஐயோ! நாங்களும் அங்கேதான் போறோம்!

கண்மணிக்கு ஒரே வியப்பாகி விட்டது!

ஹையா! எங்க அம்மாவோட பிளட்லே போறேன்! எனக்கு என்ன செய்யணும்னே தெரியல்லே!

இந்தப் பொண் இவ்வளவு எக்ஸ் சைட் ஆகிறாளே என்று எங்களுக்கு அவள் மேல் வியப்பாக இருந்தது.

செக்கின் பண்ணி சீட் போட்டாச்சு! எனக்கு அடுத்த கார்னர் சீட் அவளுக்கு!

பேரனையும் பேத்தியையும் கூட்டிக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிடப் போயிட்டாள்.

என் பையனுக்கும் கணவருக்கும் ஒரு பக்கம் சோர்வு! ஒரு பக்கம் ஆர்வம்!

என்ன அம்மா !உனக்கு புதுசா ஒரு மகள் கிடைச்சிருக்கா ! என்று என் பையன் சொன்னான்.

கணேஷ் ! தப்பா நினைக்காதே! இது தற்செயலா நடந்தது அல்ல.! இது தெய்வச் செயல். எப்போதோ உள்ள ஒரு பந்தம் எனக்கு கடவுள் இப்போ காமிக்கிறார்.இதிலே என்ன கஷ்டம்!

மகள் இல்லாத எனக்கு அந்த கடவுள் ஒரு மகளைக் காண்பிக்கிறார்.

தயவு செய்து இந்த டூர் முடிஞ்சு நாம் யுஎஸ் போற வரை பொறுத்துக்குங்கோ! நாளை சுமதி வந்தாலும் அவளை கன்வின்ஸ் பண்ணு!

ஒரு வேளை அவளுக்கே இவளைப் பிடித்துப் போகலாம்.

இது எதோ தெய்வச் செயல்.!

பேரன் பேத்தியோடு சிரிச்சிண்டே வந்தாள்.

பாட்டி!தட் கேர்ல் கண்மணி ஈஸ் வெரி சுவீட்! வீ லைக் ஹர்!

பிளைட்லே ஏறி உட்கார்ந்தோம்.

கண்மணி! இப்போ சொல்லு! உன்னைப் பத்தி !

என் கைக்குள் தன கையைப் பிணைத்துக் கொண்டாள்.

இத்தனை வருடம் இல்லாத தாயின் சுகத்தை அவள் காட்டிய ஆர்வமும் அன்பும் ஒரு தாயான எனக்கு இதமாக இருந்தது.

அம்மா! இந்த ஏழு வருஷத்தில் நடந்தது சொல்லறேன்.என் அம்மா போய் கொஞ்ச நாள்லேயே என் சித்தி வந்து விட்டாள்.அப்பாவுக்கு செகண்ட்

மனைவி. அவர்களுக்கு அயிந்து வயதில் ஒரு பையன் இருக்கிறான்.அதாவது எனக்கு தம்பி. என் அம்மாவுக்கு நான் ஒருத்திதான். என் அப்பா குடும்பம்

டெல்லியில் இருக்கிறது. என் அப்பாவும் சரி ,சித்தியும் சரி பாசம் உறவு எல்லாம் இருக்கும்.ரொம்ப இருக்காது.

நல்லவங்க. எதோ இருப்பாங்க.!

நான் நன்றாகப் படித்தேன். என் அம்மாவுக்கு என் மேல ரொம்ப உயிரு ! நானும் நல்லாப் படிச்சேன். டெல்லியிலேயே வேலை கிடைச்சுது.

இப்போ சென்னைக்கு டிரான்ஸ்பர். நடுவில் மும்பை ,கோவாவுக்கு டூர் வந்தேன்.

நீ தனியாகவா வந்தே!

இல்லை! ஒரு குரூப்போடு தான். அவர்கள் நேற்றே போய் விட்டார்கள். நான் என் சித்தப்பாவைப் பார்த்துட்டு வரேன்.

இருபத்து ஐந்து வயது பெண் இவள். பெயருக்குத் தகுந்த அமைதியான அழகு! பேச்சும் குறுகுறுப்பும் இன்னும் கொஞ்சம் பேசத் தோணும்.

அவள் என்னிடம் காட்டிய பாசத்தைப் பார்க்கும் போது அம்மாவிடம் கொள்ளை ஆசை எனத் தெளிவாகத் தெரிந்தது.

கோவா ஏர்போர்ட் வந்து விட்டது

நாங்கள் வெளியில் வந்ததும் அந்தந்த நட்சத்திர விடுதி வான்களும் சொகுசு பஸ்களும் நிரம்பி ,லிஸ்டில் பெயர் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஹோட்டல் அங்கிருந்து அறுபது கிமீ தூரத்தில் உள்ளது. போவதற்கு ஒன்னேகால் மணி நேரமாவது ஆகும்.

என் மருமகள் சுமதியிடம் இருந்து போன்.

பத்திரமாக வந்தீர்களா! நானும் என் ஆபீஸ் பிரன்சும் ஏற்கெனவே வந்துவிட்டோம். ரொம்ப அழகான சோலைகளும் கடலுக்கு முன்னால்

நம்முடைய விடுதிகள் இருக்கு.!.பக்கத்தில் நீச்சல் குளம் அழகா இருக்கு! சீக்கிரம் வாங்க!

கண்மணி! நீ எங்கே போறே!

என்னம்மா இப்படிக் கேட்டுட்டீங்க! நீங்க போகும் இடத்திற்குத் தான்! ஆனால் கொஞ்சம் வேறு இடத்தில ரூம்கள் இருக்கும். இவர்களுக்கு நான்கு வெவேறு இடங்களில் அமைத்திருக்கிறார்கள்.

அம்மா! என்று என்னைப் பார்த்தாள்.

ஹை! கண்மணி கமிங் வித் அஸ்! என்று குஷியுடன் குழந்தைகள் சொல்ல,

எஸ்!லெட் அஸ் கோ ! என்று அவர்களுடன் வானில் ஏறிக் கொண்டாள்.

அப்பொழுதுதான் ஒரு ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது!

கண்மணி ! என்று ஒரு பையன் குரல்.

இந்தக் கால நாகரீகமும் தோற்றமும்,படிப்புடன் நல்ல வேலையில் இருப்பதால் தோன்றும் பளபளப்பும் ! அதற்கேற்ற நடை உடை ! உயர்தர கலோன் சென்ட் வாசனை ! நன்றாகவே இருந்தான்.

ஹேய் கண்மணி! சம்படி வாண்ட்ஸ் யு ! என்றான் என் பேரன்.

ஹல்லோ கிரிஷ் ! சுர்ப்ரைசா வந்திருக்கே ! உள்ளே வா !

என்ன விளையாடறயா கண்மணி ! நாலு வாட்டி போன் பண்ணி மெசஜ் கொடுத்தேன் !நீ எடுக்கவே இல்லை !

இல்லை கிரிஷ் ! டிராவல் அவசரத்திலே மறந்துட்டேன் !சாரி !

இவள் அம்மா கிடைத்த சந்தோஷத்தில் போன் பையிலே இருந்து எடுக்கவே இல்லை!

வா !உள்ளே வந்து உட்கார்ந்துக்கோ !

அவனுக்கு அது ரசிக்கவில்லை! வெளியிலேயே நின்று கொண்டான்.

அங்கேயிருந்து இவளைப் பார்க்க வந்து இந்த மாதிரி குழந்தைகள் குடும்பத்துடன் உட்கார இஷ்டமில்லை!

நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் .எனக்குப் புரிந்து விட்டது !

அவள் பக்கத்தில் போய் ” அவன் உன் பிரண்டா !மெனக்கெட்டு உன்னை ரீசிவ் பண்ண வந்திருக்கான்.

இல்லை அம்மா !நல்ல பிரண்டு தான் !இங்கேயே வந்து உட்காந்தா என்ன! நம்ம கூடப் போகலாமே !

அட பெண்ணே ! நீ இந்தக் காலத்து பொண்ணுதானே ! அதெல்லாம் சரியா வராது ! நீ இறங்கிப் போ !

இல்லேம்மா ! அவனை அறிமுகம் செய்யலையே !

இப்ப வேண்டாம் ! அப்புறம் பார்த்துக்கலாம்

கண்மணி போக மனமில்லாமல் போனாள்.

உண்மையான ஒரு தாயின் உள் மனது என்னை உறுத்தியது! பெற்ற பெண்ணைவிடப் பாசம்

காட்டும் அவள் என் முன்னாலேயே நண்பன் அழைக்கிறான் என்று போகச் சொன்னேன்.

பெற்றவள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள். என் மனம் மறுபடியும் உறுத்தியது!

இன்றைய நாகரீகம் எனக்கு வரைகோடு போடுகிறது !

இருந்த போதிலும் இவள் வாழ்க்கைக்கு அம்மா என்ற நான் பொறுப்பு என்ற உணர்வு உறுதியாக என்னை அழுத்தியது

அந்தக் களங்கம் இல்லாப் பெண்ணுக்காக கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

பாட்டி! யு வீப் எகைன் ! கண்மணி போய்ட்டா அழறையா ! நாங்களும் அழுகை வரது !

குழந்தைகளை அணைத்துக் கொண்டேன். நான் அழுதேன்.

கடற்கரை ஓரமான அந்த அழகான ஐந்து நக்ஷத்திர விடுதி வந்தது.

அழகாக மாலைபோட்டு வரவேற்றார்கள்.

என் மருமகள் சுமதியும் அவள் ஆபீஸ் குழுவினரும் எங்களை வரவேற்றனர். அதனை பேரும்

அமெரிக்கா சேர்ந்தவர்கள் நாங்கள் உள்பட !

அழகான சோலைகள் ஒருபுறம் !பரந்த கடற்கரை ஒருபுறம்!நாகரீகத்தின் எல்லையில் உள்ள நக்ஷத்திர விடுதி ! அதற்கேற்ற மனித சமுதாயம் !இது ஒரு தனி உலகமாக திகழ்ந்தது !

எங்களுக்கு அழகான பாமிலி ரூமும் அடுத்து ஒரு பெரிய ரூமும் கொடுத்திருந்தார்கள்.

உணவு வகைகள் மிக அதிகம்.! எது கேட்டாலும் கிடைக்கும் !

பாட்டி !அங்கே பாரு கண்மணி !

பார்த்தேன். பையன்களும் பெண்களும் ஒரு குழுவாக இருந்தனர்.

ஏதோ அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள்.ஆனால் கண்மணி கலகலப்பாகவே இல்லை.

மாலை வந்தது.

இயற்கை அழகும் இப்படியும் மனத்தைக் கொள்ளை கொள்ளுமா என்று கடற்கரையும் காற்றும் சந்தோஷமான மனிதர்களும் அருகில் அரண்மனைபோல அழகா அமைந்த ஐந்து நக்ஷத்திர விடுதிகளும் வாழ்க்கையின் அருமையான நேரங்கள்.!

குடும்பத்துடன் சந்தோஷமும் ,இள வட்டங்களின் இனிமை கலந்த நேரங்களும் யாவருமே மகிழ்ச்சியுடன் மாலை நேரத்தை வரவேற்றனர்.

என் மகனும் மருமகளும் குழந்தைகளோடு கடற்கரை காற்று வாங்கப் போய் விட்டனர்.

நானும் கணவரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கடலின் அழகும் அமைதியும் ரசித்து மகிழும்

அங்குள்ள வர்களோடு நாங்களும் இருந்தோம்.

இரவு வர ஆரம்பித்தது. முழு நிலவு வேறு.அலைகள் நிலவை நோக்கி பாடிக் கொண்டிருந்தன.!

வரைந்த வண்ண ஓவியமாக அந்த இடம் முழுக்கக் காட்சி அளித்தது.

குழந்தைகளுடன் பையனும் மருமகளும் வந்து விட்டனர்.

மருமகள் என்னைச் செல்லமாக குழந்தைகள் கூப்பிடுவது போல ‘பாட்டி’ என்றுதான் கூப்பிடுவாள்.

என் மேல் அவளுக்கு உயிர் ! எந்த விஷயமானாலும் என்னோடு பகிர்ந்து கொள்ளுவாள்!

பாட்டி !வீ சா கண்மணி அட் தி பீச் ஷி லுக்ஸ் சாட் ! என்றார்கள் பேரனும் பேத்தியும்.

என்ன சுமதி! என்ன நடந்தது.?

பாட்டி! உங்க அருமை மகளைப் பார்த்தேன்.பேசினேன்! ரொம்ப நல்ல பொண்ணாக இருக்கிறாள்.என்கிட்டே நல்லாத்தான் ஆசையாகப் பேசினாள்

ஆனாலும் ஏதோ ஒரு சோகம் அவ கிட்டே தெரிந்தது.

குழந்தைகளிடம் விளையாடும்போது கூட கலகலப்பு இல்லை!

அவ பிரண்ட்ஸ் நல்ல அரட்டை அடிச்சு கொண்டு இருந்தார்கள். இவ மட்டும் கடலைப் பார்த்துக்

கொண்டு உட்கார்ந்திருந்தாள்

இதைக் கேட்டதும் எனக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு !

அம்மான்னு ஒரு பொண்ணு கலகலப்பா வந்தா !அதுவும் கோவா ஒரு அழகான அமைதியான கலகலப்பான இடம்!

இங்கு வந்து இவ்வளவு சோகமா இருக்காளே.!

கடவுளே ! இதுக்குதான் என்னை அவளுக்குக் காண்பிச் சாயா ! ஒரு அம்மாவின் பொறுப்பு ஏற்கும் நேரம் வந்து விட்டது.!

என் மனது இதை தெளிவாகக் காண்பித்தது !

கடவளே !இந்தப் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை கொடு.! மனதார ஒரு தாயாக வேண்டினேன்.

இரவு டின்னர் நடந்து கொண்டிருந்தது.எங்கள் ஹாலில் அவளைக் காண வில்லை!

டின்னர் முடிந்ததும் குழந்தைகளோடு அவர்கள் வாக்கிங் போய் விட்டார்கள்.

நாங்கள் மறு படியும் வந்து சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தோம்.

என் நாற்காலியில் ஒரு கை உறுத்தியது!

அம்மா! உங்க கிட்டே பேசணும்.

என்ன கண்மணி ! ஏன் டல்லா இருக்கே!பஸ்லே பார்த்ததுக்குப் பிறகு இப்பதான் பார்க்கிறேன்.

அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.

ஒரு குஞ்சு தாய்ப் பறவைக்குள் ஒடுங்குவது போல என்னை இறுக்கிக் கொண்டாள்.

அம்மா எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். செய்வீர்களா?

கண்மணி ! நான் உன் அம்மா ! தயங்காமக் கேளு !

நான் உங்க கூட ராத்திரி தங்கணும்.!

இவ்வளவுதானே !அரேஞ் பண்ணறேன்..

ஆனா உன் பிரண்ட்ஸ் விட்டு என்னுடன் இருப்பாயா ?அவங்க என்ன சொல்லுவாங்க ?

அந்தப் பையன் கிரிஷ் உன் பிரண்டா அல்லது உங்களுக்குள் ஏதாகிலும் காதல் உண்டா?

அறுபது கிமீ உனக்காக வந்தானே!.

அம்மா! அதெல்லாம் அப்படி ஒன்னும் இல்லை! ஆபீஸ் பிரண்ட்ஷிப் வேறு ! வெளியில் இருக்கும்போது பழகும் பிரண்ட்ஷிப் வேறு என்பது எனக்கு இப்பதான் புரிகிறது !

கண்மணி ! அவளை அணைத்துக் கொண்டேன் !

கண்மணி !நான் இருக்கும் வரை நான்தான் உனக்கு அம்மா !உன் சுக நலன்கள் ,துக்கங்கள் எல்லா ம்

எனக்கு முழு பங்கு உண்டு !இது அந்தக் கடவுள் எனக்கும் உனக்கும் ஏற்படுத்திய புனித உறவு !

இந்த அன்பும் பாசமும் உலக நடை முறைக்கு அப்பாற்பட்டு பிணைக்கப் பட்டது.இது சொல்லியோ

செயற்பட்டோ வருவதில்லை! இயற்கையின் இனிய பிணைப்பு!

இந்த அன்புக்கும் பாசத்திற்கும் என்றுமே தனி இடம் உண்டு!

தயங்காமச் சொல்லு!நான் உனக்கு என்ன செய்யணும்?

சரி !அந்தப் பையன் கிரிஷ் உன் பிரண்டா அல்லது உன் காதலனா?உனக்கு இருபத்து ஐந்து வயதாகிறது.இதன் பாகுபாடு உனக்கு நன்றாகத் தெரியும்.நீ படித்த புத்திசாலிப் பெண்!

இந்தக் கேள்வியின் பதிலில்தான் என்னுடைய முடிவுகள் எல்லாம் இருக்கு !

சொல்லு ! நான் சொல்லும்போதே சுமதியும் சேர்ந்து கொண்டாள்.

அம்மா !என்னைப் பொறுத்தவரை அவன் எனக்கு ஒரு நல்ல பிரண்ட்.!அதற்குமேல் அவனிடம் எனக்கு எதுவும் இல்லை !

இந்த ஏழு வருஷத்தில் என்னை நானே வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறேன்.கல்லூரியிலும் சரி காரியாலயத்திலும் சரி எனக்குள் உள்ள ஒரு வட்டத்தில் இருந்து நான் வெளியே வருவதில்லை!

இந்த கலகலப்பு ,கிண்டல்,கேலி எல்லாம் எனக்கும் உண்டு !

அதற்க்கு மேல் நெருங்குபவர்கள் சுயநலம் எந்த அளவில் என்பது பற்றி ரொம்பவும் யோசிப்பேன்.

நீங்கள் கேட்டீர்களே !இந்தப் பையன் கிரீஷ் ரொம்ப நல்லவன்தான்.ஆனாலும் எதையும் ஈசியாக எடுத்துக்கிறான்.லைப் அனுபவிக்கணும்.அதற்க்கு அப்புறம் கல்யாணம் ,குடும்பம் எல்லாம் என்று சொல்லறான்.அது அவனுடைய விருப்பம்.ஆனால் அந்த மாதிரி சூழ்நிலைக்கு நான் தயார் இல்லை !

இவள் பேசப் பேச சுமதிக்கு அவளை ரொம்பப்பிடித்து விட்டது !

கண்மணி !உன்னுடைய வில்பவர்,தீர்மானங்கள் ,பேச்சு எல்லாம் எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது !

யு அர் ய ஸெல்ப் மேடு கேர்ல் ! என்று அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

என் மாமியாருக்கு ஏற்ற நல்ல பெண் நீ !

என்னிடம் பாட்டி ! உங்க பொண்ணு ரொம்ப புத்திசாலி !

இந்த சம்பாஷணையில் சுமதியின் ஆபீஸ் குழுவும் சேர்ந்து கொண்டது.

கண்மணியிடம் பேசப் பேச

ஹேய்! கண்மணி யு ஆர் மச் டாலண்ட் டட் கேர்ல் ! யு ஆர் எ ஸ்டிராங் மைண்டட் பர்சன் !

ஏன் எங்கள் இந்தியன் ஆபீசில் சேரக் கூடாது? நாங்கள் ரெகமண்ட் பண்றோம். கொஞ்ச நாள் கழித்து

எங்கள் ஊருக்கு வரலாம்.என்ன சொல்லறே?

நாங்கள் வந்ததே உன்னைப் போல இருப்பவர்களை இன்டர்வியு பண்ணத்தான்.

சிறிது நேரத்தில் அவளுடைய எல்லா விவரமும் படிப்பு அனுபவம் எல்லாம் ஆராய்ந்தார்கள்.

ஒகே !உன்னைப் பற்றி எல்லா விவரமும் மெயிலில் அனுப்பு. ஒரு நல்ல முடிவு சொல்லறோம்

அவர்கள் போய் விட்டனர் ..

கண்மணிக்கு பிரமிப்பு தாங்கலே!

ஐயோ !என் செல்ல அண்ணி ! என்று சுமதியையும் செல்ல அம்மா ! என்று என்னையும் மாறி மாறி

கட்டி அணைத்து முத்தம் கொடுத்துக் கண்ணீர் பெருக்கினாள்.

எங்களுக்கே நடந்தது நிஜம் என்று உணர சிறிது நேரம் பிடித்தது.

அந்த பரந்த விசாலமான மாடியில் விளிம்பில் முழு நிலவில் கடலின் மெது வான அலைகள் குளிர்ந்த காற்றுடன் வீசியது.

மாடியின் ஓரத்தில் நின்று என் செல்ல மகள் கண்மணியுடன் அந்த இளம் காற்றை முழு நிலவில் அனுபவித்துக் கொண்டிருந்தேன் .

அம்மா!எல்லாம் நல்லபடியா நடந்தா உங்க கூட அங்கே வந்து இருக்கலாம் இல்லியா !

நிச்சயமாக கண்மணி !

ஆனா கண்மணி! நீ இவ்வளவு தீர்மானமா இருக்கியே ! உனக்குன்னு ஒரு பையன் எப்போ வருவான்? எனக்கு உன் கல்யாணம் பார்க்க வேண்டாமா?

அம்மா ! என் மனதுக்கு ஏற்ற மாதிரி என்னுடைய அம்மா ,அண்ணி, அண்ணன்,அப்பா,குழந்தைகள்

நேற்று அந்த அம்மன் காண்பித்து அவர்களிடம் என்னைச் சேர்த்தாள்.

அதே போல எனக்குப் பொருத்தமான ஒருவனை காண்பிப்பாள். அதுவும் உங்கள் மூலமாக !

எனக்கு அந்த நம்பிக்கை நிறைய இருக்கு இந்த ரெண்டு நாளில் என் வாழ்க்கை யே மாறி விட்டடது!

அது போல என் மனதிற்குப் பிடித்தவனும் வருவான் !

ஐயோ !என் அருமை செல்ல மகளே! என் கண்மணி ! என்று உச்சி முகர்ந்து கண்ணீர் பெருக்கினேன்.

அந்த செல்ல மகளின் கண்ணீரும் என்னை நனைத்தது !

தளிர் நிலவில் அலைகள் ஓசையுடன் வந்த இளம் காற்று தாய்க்கும் மகளுக்கும் தாலாட்டுப் பாடியது.

உறவு என்பது பிறப்பில் மட்டும் வருவதில்லை !

இறைவன் நினைத்தால் எங்கிருந்தாலும் இணைக்க முடியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *