அத்தியாயம் 9 | அத்தியாயம் 10 | அத்தியாயம் 11
“ஒரு நிமிஷம் இரு”
நந்தினிக்கு ஃபோன் பண்ணேன்
நந்தினி:
“ஹலோ”
நந்தா:
“என்னை பெரிய வம்புல மாட்டிவிட்ருவ போல”
நந்தினி:
“என்ன வம்பு. சும்மா உளறாம சொல்றத செய்ங்க”
நந்தா:
“இது எதோ பைத்தியம் போலருக்கு”
ரேவதி பலமாக சிரிக்கிறாள்
நந்தா:
“பாரு. கத்திய காட்டுனா பயப்படாம சிரிக்குது. நீ நினைக்கிற மாதிரி இது தானா எல்லாம் சாகாது”
நந்தினி:
“கத்திய காட்டி பயப்படாம இருந்தா வீடியோவ காட்டு. அப்புறம் அவ பெர்ஃபார்மன்ஸ நிறுத்திட்டு கெஞ்ச ஆரம்பிச்சிடுவா”
நந்தா:
“ஒரு நிமிஷம் லைன்லயே இரு”
அவளுக்கு நான் கொண்டு வந்த வீடியோவை போட்டு காட்டுனேன். அதில் ராஜேஷ் நந்தினி வீட்டுல அவ பெட்ல தூங்கிட்டு இருக்குறத நந்தினி வீடியோ எடுத்து வெச்சு இருந்தாங்க. அதப் பார்த்ததும் ரேவதி முகம் மாறிடுச்சு
ரேவதி:
“ஏய் யார் நீங்க? என் புருஷன என்ன பண்ணி வெச்சு இருக்கீங்க? ப்ளீஸ் அவர ஒண்ணும் பண்ணிடாதிங்க. நீங்க என்ன கேட்டாலும் தர்றேன். அவர விட்டுருங்க”
நந்தா;
“அப்படி வா வழிக்கு. (ஃபோனில்) நீ சொன்னது தான் கரைக்ட். வீடியோவ பார்த்ததும் இந்த பொண்ணு பயந்து நடுங்குது”
நந்தினி:
“சரி. ஃபோன லவுட் ஸ்பீக்கர்ல போடுங்க”
ஃபோனை லவுட் ஸ்பீக்கர்ல போட்டேன்
நந்தினி:
“ஹலோ ரேவதி. உன் புருஷனால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு. அதனால உன் புருஷன கொல்றது என் நோக்கம் இல்ல. ஆனா இப்ப பிரச்சினை வேற மாதிரி போய்டுச்சு. இன்னைக்கே நீ சாகலன்னா நான் நினைச்சது நடக்காது. என்னோட நோக்கம் நிறைவேறாதுன்ற நிலைமை வரும்னா உன் புருஷன் உயிர் எனக்கு முக்கியம் இல்ல. இன்னைக்கு ராத்திரியே மூச்ச நிறுத்திடுவேன்”
ரேவதி:
“அய்யய்யோ அப்படி எதுவும் செஞ்சிடாதிங்க. நீங்க என்னை மிரட்டணும்னு கூட அவசியம் இல்ல. ஏற்கனவே நான் சாக முடிவு பண்ணி 12 மாத்திரைகள சாப்பிட்டுட்டேன். உங்க லட்சியத்துக்கு நாள் இடைஞ்சலா இருக்க வாய்ப்பே இல்ல. ப்ளீஸ் என் புருஷன விட்டுருங்க”
நந்தினி:
“நீ செத்துட்டா உன் புருஷனுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அதுக்கு நான் கேரண்டி. ஆனா உயிர் வாழ நினைச்சோ எங்கள போலீஸ் கிட்ட மாட்டி விட நினைச்சோ எதாவது பண்ண நீ மட்டும் தான் உயிரோட இருப்ப. ராத்திரி பூரா உன் புருஷன் பக்கத்துல தான் இருப்பேன். என் வீட்டுல யாராவது நுழையுறாங்கனு எனக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் சரி ராஜேஷ் பொணம் ஆயிடுவான். ஜாக்கிரதை. அண்ணா நீங்க கெளம்புங்க. இனி சாகுறதும் சாகாததும் அவ இஷ்டம்”
அப்புறம் நானும் அங்க இருந்து கெளம்பிட்டேன்.
கவிதா:
“அங்க போகும் போது முகத்துல மாஸ்க் எதுவும் போட்டுட்டு போனியா?”
நந்தா:
“ஆமா மேடம். எங்கயாவது சொதப்பி மாட்டிக்கிட்டா என்ன பண்றதுன்ற பயத்துல மாஸ்க், க்ளவுஸ் எல்லாமே போட்டுட்டு போய் இருந்தேன்”
இதைக் கேட்டு இன்ஸ்பெக்டர் கவிதா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.
கவிதா:
“ங்கொப்பம்மவனே எங்கள எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது. இவரு கொல்ல போனாராம். அதுக்கு முன்னாடியே ரேவதி தற்கொலை பண்ணிக்க பில்ஸ் எடுத்துக்கிட்டாளாம். எங்களுக்கு கிடைச்ச எவிடென்ஸுக்கும் நீ சொல்ற கதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. ஒழுங்கு மரியாதையா என்ன நடந்ததோ அதச் சொல்லு”
நந்தா:
“மேடம் நீங்க நம்புனாலும் சரி நம்புலனாலும் சரி நடந்தது இதுதான். நான் எதையும் மறைக்கல”
கவிதா:
“அந்த எவிடென்ஸ் ஃபைல் எடுத்துட்டு வா மணி”
நந்தினி:
“அவர் சொல்றது தான் மேடம் உண்மை. ரேவதி அப்படித்தான் சொன்னாங்க”
கவிதா:
“ரேவதி சொன்னப்ப நீ அவ பக்கத்துல இருந்தியா?”
நந்தினி:
“இல்ல மேடம். ஃபோன்ல தான் கேட்டேன்”
கவிதா:
“அப்ப வாய மூடிட்டு அமைதியா இரு”
மணிகண்டன் ஃபைல் எடுத்து வந்து தருகிறான். அதில் உள்ள லெட்டரை எடுத்து காண்பித்து
கவிதா:
“ஃபோன கட் பண்ணிட்டு உடனே கிளம்பிட்டேன்னு சொன்னல்ல. அப்ப இந்த தற்கொலை லெட்டர யாருடா எழுதுனா?”
நந்தா:
“லெட்டரா அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அந்த ரேவதி பொண்ணே சாகுறதுக்கு முன்ன எழுதுச்சோ என்னவோ?”
கவிதா:
“அவ எழுதினதா இருந்தா இந்த கேஸ சூசைட்னு 20ஆம் தேதியே க்ளோஸ் பண்ணி இருப்போம்”
நந்தா:
“அதுக்கு. நான் தான் கெடச்சனா. உங்களால கண்டுபிடிக்க முடியாதத எல்லாம் என் தலைல போடாதிங்க”
ராஜேஷ்:
“மேடம் இங்க என்ன நடக்குது? கொஞ்சம் புரியும்படி சொல்றீங்களா?”
கவிதா:
“ராஜேஷ் இந்த லெட்டர் தான் க்ரைம் சீன்ல எங்களுக்கு கிடைச்ச ஒரே க்ளூ. உங்க மனைவி எழுதுற மாதிரி அப்படியே எழுதி இருக்காங்க. இது ரேவதி எழுதினது இல்லன்னு கையெழுத்து நிபுணர்கள் வெச்சு கண்டுபிடிச்சிட்டோம். அதைவிட முக்கியமா இந்த லெட்டர்ல எந்த ஒரு ஃபிங்கர் பிரிண்ட்ஸும் இல்ல. ஃபிங்கர் பிரிண்ட்ஸ் இல்லாம எழுத வேண்டிய அவசியம் இவனுக்கு தான் இருக்கு. ரேவதிக்கு இல்ல”
நந்தா:
“ஏன் இல்ல? தோ இப்ப இப்படி தொக்க கோர்த்து விட்டுருச்சே என்னை. லூசு மாதிரி பேசி எல்லாரையும் லூசாகிட்டு போய்டுச்சு”
கவிதா:
“மணி இவன கூப்பிட்டு போய் போலீஸ் விசாரணைனா என்னன்னு காட்டு”
நந்தா:
“இது வேறயா? சொன்னா கேளுங்க. ஒண்ணும் தேறாதுங்க”
மணிகண்டன் நந்தாவை இழுத்து செல்கிறான்
ராஜேஷ்:
“கண்டிப்பா அவன் தான் ரே’வ கொலை பண்ணி இருப்பானா?”
கவிதா:
“ஆமா ராஜேஷ். இந்த பொண்ணு ரேவதிய கொல்ல சொல்றதுக்கு முன்னவே அவன் அந்த ஐடியால தான் இருந்து இருக்கான். மினிஸ்டர் கிட்ட மாட்டாம இருக்க அவனுக்கு உடனடியா பணம் தேவை. ரேவதி கர்ப்பமா இருந்ததால மட்டும் தான் நந்தினி அவள கொல்ல நெனச்சு இருக்கா. ரேவதி எழுதாத அந்த லெட்டர்ல தான் கர்ப்பமா இல்லனு தெளிவா எழுதி இருக்கு. ஆனா அவன் சொன்ன வாக்குமூலத்துல ரேவதி கர்ப்பம் இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டதா எதுவும் சொல்லல. So நந்தினிக்கு இந்த விஷயம் தெரியாது. தெரிஞ்சா அவ பின் வாங்குவா. மறுபடியும் அவனுக்கு பணப்பிரச்சினை வரும். அதனால அவளுக்கு ஃபோன் பண்றதுக்கு முன்னாடியே ரேவதிய மிரட்டி பில்ஸ் எடுத்துக்க வெச்சு இருப்பான். அந்த லெட்டர எழுதி இருப்பான். அதுக்கு அப்புறம் வேற யாரையோ ரேவதி போல ஃபோன்ல பேச வெச்சு இருப்பான். எனக்கு தெரிஞ்சு இப்படித்தான் நடந்து இருக்கும்”
ராஜேஷ்:
“ஆனா ரே கர்ப்பம் இல்லன்னு அவனுக்கு மட்டும் எப்படி தெரியும்?”
கவிதா:
“ரேவதி தன்னை ஏன் சாகடிக்கணும்னு கேட்டு இருக்கலாம். காரணத்த கேட்டு ரேவதி தான் கர்ப்பமா இல்லனு சொல்லி இருக்கலாம். அப்படித்தான் தெரிஞ்சு இருக்கும். அடிக்குற அடியில அவனே சொல்லிடுவான். நீங்க கெளம்புங்க. நான் ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்”
ராஜேஷ்:
“மினிஸ்டர் சொல்றாருனு அவன விட்டுற மாட்டீங்கள்ல”
கவிதா:
“அதெல்லாம் பிரச்சினை இல்ல. அவன் தன்னோட அசிஸ்டன்ட் கூட மினிஸ்டர் பணத்த அவருக்கே தெரியாம மச்சான் பேர்ல எதோ காம்ப்ளக்ஸ் கட்ட செலவழிச்சிட்டான். உங்க பணம் வந்ததும் சரி பண்ணிடலாம்’னு பார்த்து இருக்கான். ஆனா கொலை கேஸ் விசாரணைனு வந்ததும் அவன் அசிஸ்டன்ட் எங்கே தன்னையும் இந்த கேஸ்ல இழுத்து விட்டுருவானோனு பயந்து மினிஸ்டர் கிட்ட சரண்டர் ஆகிட்டான். இப்ப அவன் ஒரு சைபர். கவலைப்படாம போய்ட்டு வாங்க”
ராஜேஷ்:
“மேடம். இன்னொரு ரிக்வெஸ்ட்”
கவிதா:
“சொல்லுங்க”
ராஜேஷ்:
“நந்தினியோட அந்த வீடியோ பத்தி கேஸ்ல எழுதிடாதிங்க”
கவிதா:
“ஏன் தப்பு பண்ணது உங்க அப்பா’ன்றதாலயா? எழுதாம விட்டா மோடிவ் ரொம்ப வீக் ஆகிடும். கோர்ட்ல எனக்கு தான் ப்ளாக் மார்க் விழும்”
ராஜேஷ்:
“அப்படின்னா ரேவதிக்கு குழந்தை இல்லாததாலயும் நான் பழைய காதலியை கல்யாணம் பண்ணிக்க ரேவதி தடையா இருந்ததாலயும் உடனடியா குழந்தை பெத்துக்கிட்டு ஆம்பிளைனு காட்டிக்குறதுக்காகவும் நானே ரே’வ கொலை பண்ணிட்டதா எழுதிக்கங்க. யார எல்லாம் சரிகட்ட சொல்றீங்களோ அத்தனை பேரையும் என்னோட பணத்த வெச்சு சரிகட்ட முடியும்”
நந்தினி கேவி கேவி அழுகிறாள்
கவிதா:
“Are you mad? உங்க வைஃப சாகடிச்சு இருக்காங்க. இவங்களுக்காக ஜெயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க”
ராஜேஷ்:
“என் மனைவியை சாகடிச்சது அவங்க இல்ல. என் அப்பாவும் நானும் தான். என் அப்பா நல்லவரா இருந்து இருந்தா என் காதலியோட வாழ்க்கை சீரழிஞ்சு இருக்காது. அன்னைக்கு என் மனைவி சொல்ல வந்தத நான் பொறுமையா கேட்டு இருந்தா அவளும் உயிரோட இருந்து இருப்பா?”
கவிதா:
“ராஜேஷ் ப்ளீஸ். இதுல உங்க தப்பு எதுவும் இல்ல. குழப்பத்துல இப்படி தப்பு தப்பா தான் தோணும். அதனால இப்போதைக்கு எதுவும் யோசிக்காதிங்க. போய் நல்லா ரெஸ்ட் எடுங்க. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்”
ராஜேஷ்:
“அப்ப எனக்காக ஒரு நாள் வெயிட் பண்ணுங்க. மேற்கொண்டு எதுவும் ப்ரொசீட் பண்ணிடாதிங்க”
கவிதா:
“ஓகே. நோ ப்ராப்ளம். நாளைக்கே பார்த்துக்கலாம்”
ராஜேஷ் வீட்டிற்கு வருகிறான். மாணிக்கத்திடம் இருந்து ஃபோன் கால் வருகிறது
“மகனே, கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா?”
“ஹ்ம்ம்”
“யார்டா அது?”
“நீதான்டா”
“என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு. பேசுறது உன்ன பெத்த அப்பன்றது ஞாபகத்துல இருக்கட்டும்”
“எல்லா பசங்களும் இவர் தான் என் அப்பானு பெருமையா மத்தவங்க கிட்ட சொல்லிக்குவாங்க. எனக்கு அப்படி பெருமைப்பட தான் எதுவும் இல்ல. ச்சீ இவன் மகனா நீ’னு கேட்க விடாமலாவது இருந்து இருக்கலாம்ல. அநியாயமா என் ரேவதிய கொன்னுட்டியேடா”
“பைத்தியக்காரன் மாதிரி பேசாதடா. குடும்ப வாரிச சுமக்குறன்னு சொல்ற புள்ளைய நான் ஏன்டா கொல்ல போறேன். குல விருத்தியாகப் போகுதுன்னு சந்தோஷத்துல இருந்தன்டா நான். உன் பொண்டாட்டி தான் இல்லாத கர்ப்பத்த இருக்குன்னு சொல்லி எங்கள ஏமாத்திட்டா. அதுவும் கூட அவ செத்ததுக்கு அப்புறம் தான் உன் அம்மாவுக்கும் எனக்கும் தெரியும்”
“நீ நந்தினிக்கு என்னடா பண்ண?”
“இதுல அவ எங்கடா வந்தா?”
“நீ அவளுக்கு பண்ண கொடுமை தான்டா இப்ப ரேவதி சாவுல வந்து நிற்குது. நீ மட்டும் அந்த வீடியோவ வெளிய விட்ட அவள நான் ஊரறிய கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்பேன். ஒருவேளை அவ உயிருக்கு எதாவது ஆபத்து வந்துச்சு. உனக்கு கொள்ளி போட நான் இருக்க மாட்டேன். இனிமே அப்பா அம்மானு சொல்லிகிட்டு என் முன்னால வந்து நின்றாதிங்க”
பதிலுக்கு காத்திருக்காமல் ஃபோனை கட் செய்து விடுகிறான் ராஜேஷ்.
மார்ச் 26 செவ்வாய்க்கிழமை காலை 9½ மணி. கவிதா, கதிரவன் மற்றும் மணிகண்டன் மூவரும் ஸ்டேஷனில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
கவிதா:
“என்ன இவன் எவ்வளவு அடிச்சாலும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றான்”
மணிகண்டன்:
“மேடம். அவன் குழந்தை மேல எல்லாம் சத்தியம் பண்றான். விசாரிச்ச வரை அவனுக்கு குடும்பத்து மேல் பாசம் அதிகம். அவன் பொய் சொல்லலனு தான் தோணுது”
கதிரவன்:
“அப்ப இவனுக்கு முன்னாடியே வேற யாரும் வந்து இருப்பாங்களா?”
தொடரும்…
சிறப்பு. நைஸ்ஸ் கதையாக்கம்.