கண்டிப்பு..!! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 18,954 
 
 

கைபேசி அலறியது. எடுத்துப் பார்த்த சேகர் முகத்தில் பிரகாசம்.

மாலதி.! தலைப் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் சென்றவள்.

வீட்டை விட்டு வெளியே வந்து….

”சொல்லு மாலதி ? ” குசுகுசுத்தான்.

”உன் பிள்ளை வயித்தை விட்டு சீக்கிரம் வெளியே வர பாடாய்ப் படுத்துது.”

”சந்தோசம். உன் புருசன் வந்து பார்த்தாரா ? ”

”அவருக்கென்ன…அஞ்சு வருசமா தவமாய் தவமிருந்து கண்ட சொத்து. கட்டின பெண்டாட்டி நல்லவிதமா பெத்து எடுக்கனும்ன்னு கவலை. வாராவாரம் வந்து பார்த்துப் போறார். அப்புறம் ஒரு முக்கியமான விசயம்.? ”

”சொல்லு ? ”

”நான் ஊர்ல இல்லேங்குற தைரியத்துல அக்கம் பக்கம் பாயாமல் நான் பிரசவம் முடிச்சு திரும்புறவரை என்னையே நினைச்சு ஒழுங்கா இருக்கனும். என்ன ? ” என்றாள் கறாராய்.

”ச….ரி.” சேகர் பவ்வியமாய் தலையசைத்தான்.

”அது!!” அவள் கைபேசியை அணைத்தாள்.

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *