கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2022
பார்வையிட்டோர்: 2,426 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எப்படியும் இந்த வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்ற மன உறு தியுடனும், தன் னம் பிக்கையுடனும் புறப்பட்டாள் புனிதா.

நேர்முகத்தேர்வுக்காக அவள் வரவேண்டிய அந்த தனியார் நிறுவனத்துக்குள் புனிதா நுழையும் போது பிற்பகல் மணி ஒன்று. நவீன கைத்தொலைபேசிகள் விற்கும் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அது. சற்று எடுப்பாகத் தெரியும் வெள்ளை நிற லாங் ஸ்கர்ட்டும்,நீல நிற சட்டையும் அணிந்திருந்தாள்.

புனிதா இயற்கையான அழகுடன் இருந்ததால் அவளுக்கு அதிக முக ஒப்பனை தேவைப்படவில்லை. லேசான முக ஒப்பனையுடன், குட்டையான தலை முடியை கிளிப் போட்டிருந்தாள். அவளுக்கு வயது முப்பத்தாறு என்று யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு உடல்கட்டாக இளவயதாக காணப்பட்டாள்.

வரவேற்பறையில் பொறுமையுடன் காத்திருந்தாள். அவளிடம் கொடுக்கப்பட்ட ‘அப்ளிகேஷன் பார்மை’ பூர்த்தி செய்து கொடுத்தாள். சற்று நேரத்தில் ஒரு சீன பெண்மணி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அது பெரிய அலுவலகமாக இருந்தது. உள்ளே மேஜை, நாற்காலிகள், பல கணிணிகள் சுத்தமாக இருந்தன. விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன.

குளிர்சாதன வசதி கொண்ட அந்த பெரிய அறைக்குள் அழைத்துச் சென்ற அந்த சீனப் பெண்மணிக்கு வயது சுமார் முப்புதுதான் இருக்கும். தன் பெயர் ஜெனிஃபர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சை ஆரம்பித்தாள்.

புன்னகையுடன் ‘குட் ஆப்டர்நூன்’ என்று முகம் மலர கூறி எதிர் இருக்கையில் பணிவுடன் அமர்ந்தாள் புனிதா. கையில் எடுத்து வந்திருந்த ‘ஒ’ நிலை சான்றிதழுடன், தான் பயிற்சி பெற்ற தட்டெழுத்து சான்றிதழ், கணிணி பயிற்சி பெற்ற சான்றிதழையும் எடுத்துக் காட்டினாள்.

ஜெனிஃபர் வாங்கி பார்த்து விட்டு, வழக்கமான நேர்முகத்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை கேட்டாள். சளைக்காமல் புன்னகையுடன் பதில் சொன்னாள் புனித். ‘கஸ்டமர் சர்வீஸ் ரிஸப்சனிஸ்ட்’ என்ற வேலைக்காகத்தான் புனிதா வந்திருந்தாள்.

“இந்த வேலைக்குத் தாங்கள் வர முக்கிய காரணம்” என்று ஜெனிஃபர் கேட்ட போது நவீன கைத்தொலைபேசி மீது தனக்கு மிகுந்த ஈடுபாடு என்றும், அதைப்பற்றி ஓரளவுக்கு நன்றாக தெரியும் என்றும், இந்த துறையில் வேலை செய்ய தான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் கம்பெனியின் முன்னேற்றத்தில் தன் பங்கு கட்டாயம் இருக்கும், அதற்காக தன் கடமையை நிறைவாகச் செய்வேன் என்றும் கூறினாள் புனிதா.

அலுவலகத்தின் எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன் என்றும் உறுதியளித்தாள்.

தான் கையோடு எடுத்து வந்திருந்த கார் ஓட்டும் லைசன்ஸ்ஸையும் எடுத்து ஜெனிஃபரிடம் காட்டினாள் புனிதா.

லைசன்ஸ்ஸை கையில் வாங்கி பார்த்தாள் ஜெனிஃபர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கார் ஒட்டும் லைசன்ஸ் எடுத்திருந்தாள்.

“கார் ஓட்டிய அனுபவம் ஏதாவது உண்டா” என்று ஜெனிஃபர் கேட்க,

‘ஒராண்டு அனுபவ்ம் இருக்கிறது ‘ என்றாள் புனிதா. சரி உன் டைப்பிங் வேகத்தை சோதிக்க வேண்டும் என்று கூறி, புனிதாவிடம் அலுவலகத்தில் ஒரு பக்க செய்தியுள்ள பேப்பரைக் கொடுத்து டைப் செய்யச் சொன்னாள் ஜெனிஃபர்.

புனிதா விரைவாக டைப் அடித்துக் கொடுத்தாள். ஜெனிஃபர் வாங்கி பார்த்து விட்டு இரண்டு இடத்தில் தவறு இருப்பதை சுட்டிக்காட்டினாள். புனிதா ‘சாரி’ என்று கூறி திம்ரென்று தாங்கள் கொடுத்ததும் சற்று பதற்றமாக இருந்ததால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது. ஆனால் எனக்கு வேலை கிடைத்த பிறகு மிக கவனமாக செய்வேன் என்றாள்.

புனிதா பணிவுடன் பதில் சொல்லும் பாங்கு ஜெனிஃபரை திருப்தி கொள்ள வைத்தது. புனிதாவின் அடையாள அட்டையை கேட்டு வாங்கி பார்த்தாள். பின்பு சரி நாளை தொலைபேசியில் அழைக்கிறேன் என்று கூறி புனிதாவை வரவேற்பறையின் வெளி வாயில் வரை வந்து வழி அனுப்பினாள் ஜெனிஃபர்.

வெளியே வந்த புனிதாவுக்கு மனதில் ஆயிரம் கேள்விகள். ஏற்கனவே, இதைப்போன்று எட்டு இண்டர்வியூவுக்கு போய் வந்து விட்டாள் இதுவரை யாரும் அழைக்கவில்லை. இதுவும் ஒரு ‘கண் துடைப்பு‘ நாடகம் போன்ற தேர்வுதானா, அல்லது உண்மையிலேயே தனக்கு வேலை கிடைத்து விட்டால், வீட்டையும், பிள்ளைகளையும், தான் இதுவரை கண்ணின் கருமணியைப் பாதுகாப்பது போல கவனிக்க முடியுமா?

தனக்கு இரண்டு பிள்ளகள் உயர்நிலையில் படித்துக் கொண்டிருப்பதையும், புனிதாவின் கணவன் முரளி தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மானேஜராக பணியாற்றுவதையும் ஜெனிஃபரிடம் மறைக்காமல் உண்மையை கூறியிருந்தாள்.

சரி, எல்லாம் இறைவன் விட்ட வழி என்று நம்பிக்கையுடன் இருந்தாள் புனிதா.

வீட்டில் தற்போது அவள் கணவன் முரளி கொண்டு வரும் ஆயிரத்து லூறு வெள்ளி வருமானம் பற்றாக்குறையாக இருந்தது. வீட்டுச் செலவு, பிள்ளைகளின் கல்விச் செலவு நாளுக்கு நாள் உயர்ந்தது. என்ன செய்வது என்று அவளும் எவ்வளவோ சிக்கனமாக செலவு செய்தாலும் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ கதையாகத்தான் இருந்தது. புனிதா வேலைக்குச் செல்ல முரளியும் விரும்பினான்.

ஆடம்பரம் புனிதாவின் அகராதியிலேயே கிடையாது. அப்படி இருந்தும் அவள் நிர்வாகத் திறமை தோற்றுப்போனது. இப்படி இருந்தால் எங்கே போய் முடியுமோ என்று நினைத்த புனிதா, இதற்கு தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று கருதி கடந்த ஆறுமாதமாக பத்திரிக்கையை புரட்டிப் பார்த்து ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கினாள்.

குடும்ப நிர்வாகத்திற்காக தான் ஏதாவது வேலைக்குச் சென்று சம்பாதிப்பது தனது கடமை என எண்ணினாள் புலிதா. காலம் அவள் வாழ்வில் ஒளியை ஏற்றுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மறுநாள் காலை பத்து மணி. டெலிபோன் மணி ‘கிரிங் கிரிங் ‘ என ஒலித்தது. புனிதா தொலைபேசியை எடுத்து மென்மையாக “ஹலோ !” என்றாள்.

எதிர்முனையில் ஒரு சீனபெண்மணி “ஹலோ, நான் ‘எம் ஒன்’ கம்பெனியிலிருந்து ஜெனிஃபர் பேககிறேன்”. என்றதும் புனிதாவின் மனம் அலைபாய்ந்தது.

போனில் ஜெனிஃபர், உங்களுக்கு மாதம் ஆயிரத்து இருநூறு வெள்ளி சம்பளம் தருகிறோம். உடனே வந்து வேலையில் சேரவும் என்று ஆங்கிலத்தில் கூறியதைக் கேட்க புனிதா மகிழ்ச்சிக் கடலில் இருந்தாள். அவள் கால் பூமியில் இல்லாமல் ஏதோ வானத்தில் பறப்பது போல உணர்ந்தாள்.

உண்மைதான் புனிதாவுக்கு வேலை கிடைத்து விட்டது. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு புனிதாவின் தாய் செல்லம்மாள் தன் மகள் வேலைக்குச் சென்று மதிப்புடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு பிரார்த்தனை பண்ணியது இன்று புனிதாவுக்கு பலித்தது. இதுநாள் வரை திருமணம், பிள்ளை பேரு, பிள்ளை வளர்ப்பு, வீட்டு வேலை என்று அவள் அறிவுத்திறன் குடும்ப வட்டத்துக்குள் இருந்தது.

புனிதா தன் தாயை நினைத்துப் பார்த்தாள். அம்மாவுக்கு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என தன் மனதிற்குள் உறுதி பூண்டாள்.

மறுநரள், புதன்கிழமையிலிருந்து வேலைக்கு வருவதாக ஜெனிஃபரிடம் கூறினாள.

கணவன் முரளிக்கு வேலை கிடைத்து விட்ட செய்தியை தெரிவித்தாள் முரளியும் மகிழ்ச்சியுடன் புனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தான்.

மறுநாள் வேலைக்குச் செல்ல தன்னை தயார் படுத்தினாள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பியதும் தனக்கு வேலை கிடைத்த செய்தியைக் கூறி, உயர்நிலை ஒன்றில் பயிலும் மகள் பானுவிடமும், உயர்நிலை மூன்ல் பயிலும் மகன் சங்கரிடமும் அறிவுரை கூறி வீட்டில் பத்திரமாக இருகக ஆலோசனை சொன்னார். வார இறுதி நாட்களில் பிள்?ளகளோடு இருப்பதாகவும், ஜந்து நாள் வேலை. காலை ஒன்பது முதல மாலை ஆறு மணி வரை வேலை என்பதையும் விளக்கிச் சொன்னாள். பிள்ளைகளும் மகிழ்ச்சியுடன் ஆதரவாகப் பேசி புனிதாவுக்கு ஆர்வம் கொடுத்தார்கள்.

கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறிவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தாள் புனிதா.

புதன்கிழமை காலை ஆறு மணிக்கு எழுந்து வழக்கம் போல் பிள்ளைகளை காலை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டு வேலைகளை முடித்தாள். கணவன் முரளி யை ஏழு மணி க்கு எழுப்பி அவனுக்கு தேநீர் கலந்து ரொட்டியுடன் கொடுத்து முரளி வேலைக்கு புறப்படும் நேரத்தில் தானும் குளித்து, தன்னை தயார் படுத்திக் கொண்டு மிக எளிமையான ஆனால் மேற்கத்திய ஆடையில் புன்னகையோடு புறப்பட்டு பஸ்ஸை பிடித்து அலுவலகம் வந்து சேர சரியாக மணி ஒன்பது.

முதல் நாள் என்பதால் அலுவலகத்தின் மூத்த நிர்வாகி ஜெனிஃபர் புனிதா என்னென்ன செய்யவேண்டும் என பட்டியலிட்டாள் ரிஸப்சனில்தான் வுலை. டெலிபோன் கால், பதில் கூற வேண்டும் அதுபோக ஃபாக்ஸ் அனுப்புதல், கம்ப்யூட்டரில் தகவல் சரி பார்த்தல், இ மெய்ல் அனுப்ப வேண்டும், கஸ்டமர்ஸ் நேரில் வரும்போது அவர்கள் தேவையை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

தேவை ஏற்பட்டால் சில சமயங்களில் காரில் சென்று கைத் தொலைபேசிகளை, மற்ற பிரான்ச்சுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஜெனிஃபர் கூறினாள். கண்ணால் பார்ப்பதை கையால் செய்யும் திறமை படைத்த புனிதா மன உற்சாகத்துடனும், புன்னகையுடனும் வேலையை ஆரம்பித்தாள்.

அவள் இருக்கையின் மேஜையில் ஒரு கணிணி இருந்தது அதை ள திறந்து உள்ளை சென்று கம்பெனியின் தகவல்களைப் பார்த்தாள்.

டெலிபோன் ஒலித்தது போனை எடுத்து கனிவுடன் ‘குட் மார்னிங்’ என்று ஒவ்ஒவாரு முறையும் கூறி கஸ்டமர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்தாள்.

அங்கேயே ‘எம் ஒன்’ கஸ்டமர்கள் மட்டும் எடுத்து வரும் கைத் தொலைபேசி ரிப்பேர் சர்வீஸும் இருந்ததால் கஸ்டமர்கள் கொண்டு வரும் போனை வாங்கி பத்திரப்படுத்தி குறிப்பு எடுத்துக்கொண்டு உள்ளே வேலை செய்யும் மெக்கானிக் பேட்ரிக் என்பவரிடம் ஒப்படைத்தாள் இப்படி பல வேலைகளையும் செல்வனே செய்தாள். கஸ்டமர்களை புன்னகையுடன் பேசி கனிவுடன் அனுப்பி வைத்தாள் மதியம் ஒரு மணி க்கு 6 லஞ்ச் ு சாப்பிட கொடுத்த நேரத்தில் விரைவாக சாப்பிட்டு முன்கூட்டியே தன் இருக்கையில் வந்து பணியைத் தொடர்ந்தாள்.

அந்த அலுவலகத்தில் சுமார் முப்பது பேர் பணியாற்றினர். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு தயங்காமல் பதில் கூறினாள். அவர்கள் கொடுக்கும் சில கணிணி வேலைகளையும செயது முடிததாள.

அந்த அலுவலகத்தில் புனிதாவைத் தவிர மற்ற எல்லோருமே சீனர்கள். எல்லோரிட மும் புனிதா இனிமையுடன் பேசினாள் . எல்லோரும் புனிதாவிடம் மரியானாதயுடன் பழகினார்கள் தன் வேலையை மிக கவனத்துடனும், உற்சாகத்துடனும் செய்து முடித்தாள்.

மாலை ஆறு மணிக்கு அலுவலகம் முடியும் நேரம், புனிதா தன் மேஜையை சரி செய்து கோப்புகளை அழகாக அடுக்கி வைத்தள் கண்ணாடி அலமாரிகளில் அழகாக அடுக்கி வைத்திருக்கும் போன்களை பூட்டி சாவியை ஜெனிஃபரிடம் ஒப்படைத்தாள். எல்லோரும் வெளியேரும் போது புனிதாவும் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

பஸ்ஸை பிடித்து வீடு வந்து சேர இரவு மணி ஏழு. பிள்ளைகள் அவள் எதிர்பார்த்தபடி வீட்டில் வந்து ஒழுங்காக படித்துக் கொண்டிருந்தார்கள் உட்கார நேரமில்லை. இரவு உணவை தயாரிக்க வேண்டும் வேலையிடத்தில் பம்பரமாக கற்றி வேலை செய்தது, வீட்டுக்கு வந்தவுடன் கால்வலி தெரிய ஆரம்பித்தது.

மனதில் வலி வராமல் காக்க வேண்டுமானால் இந்த உடம்பு வலியை அவள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என தனக்குத்தானே கூறிக் கொண்டாள். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால் சில தியாகங்களை செய்தால்தான் வெற்றி கிட்டும்.

இரவு ஒன்பது மணிக்கு வீடு திரும்பிய முரளியிடம் புனிதா தன் வேலை அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இரவு உணவை எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு, படுப்பதற்கு இரவு மணி பதினொன்று.

நாட்கள் ஓடின. புனிதா நினைத்தது போல் வேலையிடத்தில் அவளை எல்லோரும் பாராட்டினர் தன் பணியை புன்னகையுடன் நிறைவாகச் செய்தாள். கஸ்டமர்கள் ‘ புனிதாவை தேடும் அளவுக்கு ஆனது பொறுப்புடன் தன் கடமையில் கண்ணாக இருந்தாள் புனிதா.

அன்று அவளுக்கு சம்பள நாள். முதல் மாத சம்பளத்தை ஆவலுடன் பார்க்க இருந்தாள்.

வங்ரியின் மூலம் எடுத்த பணத்தை பார்த்தபோது , புனிதாவுக்கு தானும் உழைத்து சம்பாதித்து பணத்தை பார்த்து விட்ட மகிழ்ச்சி ஒரு புறம் இந்த பணத்திலிருந்து மாதா மாதம் ஐம்பது வெள்ளியை நல்ல காரியத்திற்காக செலவு செய்ய உறுதி பூண்டாள். மத்திய சேமநிதியில் அவளுக்கு மாதம் நாஞூறு வெள்ளி போடப்பட்டது. தன் வாழ்க்கையின் லட்சியத்தைத் தொட ஆரம்பித்தாள் புனிதா.

டெண்நள் தங்கள் திறமைகளை வெளி உலகுக்கு கொண்டு வரவுவணடும. பயனாக வாழ வேண்டும் என்ற அவளின் ஆவல் பூததியானது.

தன் குடும்பத்தை செவ்வனே பார்த்துக்கொண்டு வேலையிடத்திலும் நல்ல பெயர் எடுத்தாள் புனிதா.

ஞயிற்றுக்கிழமைகளில் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கி வைத்தாள். வீட்டை சுத்தம் செய்தாள் பிள்ளைகளும் அவளுக்கு உதவியாக இருந்தனர். திட்டமிட்டு செலவு செய்து பணத்தை சேமித்தாள்.

மாதங்கள் உருண்டோடின. அவள் நினைத்தபடி அவள் தாயார் செல்லம்மாவுக்கு உதவி செய்தார். நல்ல மனம் படைத்தோருக்கு எந்த தீஙகும வராது என்பது நியதி.

அலுவலகத்தில் புனிதா தன் கடமைகளை சரிவரச் செய்ததுடன், மற்ற சக செகரட்டரி கொடுக்கும் டைப்பிங் வேலையையும் தயங்காமல் செய்து கொடுத்தாள். இதனால் அந்த அலுவலகத்தில் புனிதாவை எல்லோரும் விரும்பினர். பிற ருக்கு உதவி செய்வத தன் கடமைகளில் ஒன்றாகவே கருதினாள் புனிதா.

இப்படி கலகலப்பாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று வேலையிடத்தில் ஒரு புது மாற்றம் ஏற்பட்டது .இதுவரை வாரத்தில் ஐந்து நாள் வேலையாக இருந்தது . ஆனால் இனிமேல் வாரத்தில் ஆறுநாள் வேலை என்று அறிவிப்பு வந்தது.

ஐந்துநாள் வேலை என்றுதான் புனிதா வேலையில் சேர்ந்தாள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் லீவு என்றால் பிள்ளைகளோடு அவள் செலவழிக்கும் நேரம் குறையும். வீட்டு வேலைக்கு ஆள் வைக்கலாம் என்றால் இவள் எடுக்கும் சம்பளத்தில் எந்த (மீதமும்) லாபமும் இல்லை. என்ன செய்வது? வேலையை விடவும் அவளுக்கு மனம் இல்லை நல்ல வேலை நல்ல பெயர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடக் கூடாது புரிந்துணர்வுடன் அவள் பிள்ளைகளும் நடந்து கொண்டனர் இன்னும் கூடுதலாக உழைத்தாள். புனிதாவின் கணவர் முரளியும் குடும்பத்தில் ஒத்துழைத்தான்.

அன்று வெள்ளிக்கிழமை. அலுவலகத்திலிருந்து கைத்தொலைபேசிகள், உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு எடுத்துச் செல்லும் டிரைவர் விடுப்பில் இருந்ததால், அவசரமாக கைத்தொலைபேசிகளை உடனே கொண்டு சேர்க்க ஆள் இல்லாததால் அந்த வேலை புனிதாவிடம் ஒப்படைக்கப்பட்து இதற்கு முன்பு சில முறை அவள் இப்படி காரில் சென்று கொடுத்து வந்திருக்கிறாள்.

ஜெனிஃபரிடமிருந்து கார் சாவியை வாங்கிக் கொண்டு, புனிதா ஆர்ச்சட் சாலையிலுள்ள அவர்களி ன் ‘எம் ஒன் ‘ கடைக்கு கைத்தொலைபேசி பெட்டிகளை எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றாள். அப்போது பிற்பகல் மணி சுமார் நான்கு.

போன் பார்சல்களை ஆர்ச்சட் சாலையின் கடைத் தொகுதியில் இருக்கும் சரியான விலாசத்தில் கொடுத்து விட்டு திரும்பும் போது, மத்திய விரைவுச் சாலையில் வலது தளத்தில் சுமார் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் புனிதா காரில் வரும் போது திடீரென்று அவளது கைத்தொலைபேசி மணி அடித்தது. எடுத்து பேச இயலவில்லை காரை இடது சாலைக்கு மாற்றி காரின் வேகத்தை குறைத்து தியோங் பாரு வழியில் உள்ளே சென்று பிரேக் போட்டு காரை நிறுத்திவிட்டு அவளின் நோக்கியா கைத்தொலைபேசியை எடுத்து பேசினாள். எதிர்முனையில் புனிதாவின் தம்பி சரண் அவசரமாக பேசினான்.

“அக்கா, நம் அம்மாவுக்கு ‘ஹார்ட் அட்டாக்’ சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்த்துள்ளேன்” என்ற செய்தியைக் கேட்டதும் புனிதாவின் மனம் உடனே சென்று அவள் அம்மாவைக் காண ஆவல் கொண்டதால், இப்போது இங்கிருந்து புறப்பட்டு காரில் சென்றால் ஐந்து நிமிடத்தில் அம்மாவைப் பார்த்து விடலாம் என்ற எண்ணம் தோன்ற,

காரை மீண்டும் ‘ஸ்டார்ட்’ பண்ணி அவள் நினைத்தபடி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு வந்து புளோக் ஐந்தின் , கீழ்தளத்தில் காரை பத்திரமாக பார்க் பண்ணி கதவை பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு ஆறாவது மாடிக்கு லிப்டு வழியாகச் சென்று ஆவலுடன் பார்த்தபோது அங்கே அவள் தம்பி சரண் நின்றுக் கொண்டிருந்தான்.

அவளின் அம்மா அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளே சிகிச்சை நடைபெற்றதால் பார்க்க இயலவில்லை.

சரி, வேலை முடிந்து இரவில் வந்து பார்ப்பதாக அவள் தம்பியிடம் கூறிவிட்டு வெளியில் வேகமாக வந்து தான் வந்த காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் திரும்பும்போது பயலேபர் முக்கிய சாலையில் டிராஃபிக்கில் மாட்டிக் கெரண்டாள்.

அவள் மனவேகத்திற்கு ஈடாக கார் செல்ல இயலவில்லை. ஒரு வழியாக அவள் அலுவலகத்திற்கு திரும்பும் போது, ரிஸப்சன் வாயிலில் ஜெனிஃபரும், மேனேஜிங் டைரக்டரும் இவளுக்காக எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போது மாலை மணி ஜந்து நாற்பது ஆகிவிட்டது.

அவர்கள் புனிதாவை பார்த்த பார்வையில் அவள் மனம் படக், படக் என அடித்தது. தவறு செய்து விட்டோமோ? காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றது யூவறுதானே?

ஜெனிஃபர் புனிதாவைப் பார்த்து ஏன் இவ்வளவு தாமதம் எனக் கேட்க, “சாரி” என்றாள் புனிதா. பின்பு மறைக்காமல் நடந்தவற்றை உண்மையுடன் கூறினாள்.

அனுமதி இல்லாமல் காரை எடுத்து தவறாக பயன்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம், “யு ஆர் டிஸ்மிஸ்டு” என்று சத்தம் போட்டார் எம்.டி.

மேனேஜிங் டைரக்டர் வெளியே செல்ல அவசரமாக தேவைப்பட்ட நேரத்தில் கார் அங்கே இல்லை என்பதால் அவர் ஆத்திரத்தில் புனிதாவை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்தார்.

புனிதா தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்டாள். தாய்ப்பாசம் ஒரு நிமிடம் கண்ணை மறைக்க இப்படி நடந்துவிட்டதே என்று வருத்தப்பட்டாள்.

பின்பு ஜெனிஃபர் மேனேஜிங் டைரக்டரிடம் புனிதாவின் திறமையான தொழில் வேகத்தை பாராட்டிக்கூறி எடுத்துச் சொல்லி ஒரு முறை மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். அதன்படி எம்.டி.யும் புனிதாவை மன்னித்தார். புனிதா, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று, இனி தன் கடமையிலிருந்து சிறிதளவும் பிசகக் கூடாது என உறுதி பூண்டாள்.

– தமிழ் முரசு 26.06.2002, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *