ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 5,114 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

பிறகு தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு “‘ஹெட் ஆபீஸி’ல் இருந்து விசாரண குழு விசாரித்து,அந்த குழு ‘ரிப்போர்ட்’ வந்த பிறகு தான்,எல்லாம் தெரியும்.அது வரைக்கும் நாங்க மூனு பேரும் ‘சஸ்பென்ஷனில்’ தான் இருந்து வரணும்.எங்களுக்கு அது வரைக்கும் அரை மாச சம்பளம் தான் மாசா மாசம் வரும்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.

மங்களம் சொன்னததைக் கேட்டு விமலா மிகவும் வருத்தப் பட்டாள்.

“அடப் பாவமே,அப்படி அயிடுத்தா.நீ ‘ஆபீஸ்’ போறதுக்கு முன்னாடி,நான் உன் கிட்டே சொ ல்லி அனுப்பினேனே.இந்த பத்தாயிரம் ரூபாய் ‘ஷார்ட்’ விஷயம் மேலிடத்துக்கு தெரிஞ்சா ஆபத்தா முடியும்ன்னு.நீ என்ன பண்ணுவே பாவம்.மத்த ரெண்டு பேர்லே எவனோ ஒருத்தன் தான் தப்பிச்சிக் க நினைச்சு அந்த பத்தாயிரம் ரூபாய் ‘ஷார்ட்’ விஷயத்தே ‘சீப் மானேஜர்’ கிட்டே சொல்லி இருக்கான் இப்படி ஆகும்ன்னு அவனுக்கு தெரியலே.’நாம தப்பிச்சுக்குவோம்’ன்னு நினைச்சு சொல்லி இருக்கா ன்.இப்ப அவனும் மாட்டிண்டுட்டான்” என்று சொன்னதும் மங்களம் ”ஆமாம்ப்பா. மத்த ரெண்டு பேர் லே யாரோ ஒருத்தன் ‘சீப் மானேஜர் ‘கிட்டே நாம சொல்லிட்டா தப்பிச்சுக்கலாம்ன்னு நினைச்சு நேத் தி சாயங்காலம் நான் ஆத்துக்கு கிளம்பி வந்தப்புறம் ‘அவர் கிட்டே ‘போட்டு’ குடுத்துட்டு இருக்கான். இப்போ அவனும் ‘சஸ்பெண்ட் ஆகி இருக்கான்” என்று அழுதுக் கொண்டே சொன்னாள் மங்களம்.

விமலா உடனே “மங்களம் இப்ப வேலைலே இருந்து ‘சஸ்பெண்ட்’ ஆயி இருக்கா.என்ன பண் ணா அவளுக்கு மறுபடியும் அந்த வேலை கிடைக்கும் என்கிறதே யோஜனை பண்ணாம,ரெண்டு பேரும் அவ வேலையிலே இருந்து ‘சஸ்பெண்ட்’ ஆன காரணத்தே சொல்லி பேசிண்டு இருக்கேளே. அவ மறுபடியும் அந்த வேலைக்குப் போய் வர நாம என்ன பண்ணலாம்.அதை சொல்லுங்கோ.இன் னும் எத்தனை மாசத்துக்கு மங்களத்துக்கு அரை மாச சம்பளம் வரும்.அது வரைக்கும் அவ ஆத்லே தான் இருந்து வரணுமா” என்று கோவமாய் கத்தினாள் விமலா.

உடனே ராமசாமி “விமலா,நாம ஒன்னும் இப்போ பண்ண முடியாது.மங்களத்துக்கு அரை மாச சம்பளம் தான் இப்போதைக்கு வரும்.நாம வெறுமனே பகவானைத் தான் வேண்டிண்டு வரணும்.அவா ‘ஹெட் ஆபீஸி’ல் இருந்து அந்த ‘விசாரணை குழு’ இவா மூனு பேரையும் தனி தனியா கூப்பிட்டு விசாரிச்சு,அப்புறமா அவா ஒரு ‘ரிப்போர்ட்’ குடுப்பா.அந்த ‘ரிப்போர்ட்’ வந்து அதிலே யார் அந்த பத் தாயிரம் ரூபாய் ‘ஷார்ட்டு’க்குக் காரணம்னு சொல்லி இருந்தா,அவாளை மட்டும் வேலை நீக்கம் பண்ணிட்டு,மத்த ரெண்டு பேரை வேலைக்கு மறுபடியும் வர ‘ஆர்டர்’ குடுப்பா.அது வரைக்கும் நாம ரொம்ப பொறுமையா இருந்துண்டு வரணும்” என்று ஒரு பொ¢ய ‘லெக்சரே’ கொடுத்தார்.
“அப்படியா,அப்ப அது வரைக்கும் மங்களம் வெறுமனே ஆத்லே இருந்துண்டு வர வேண்டியது தானா.அந்த விசாரணைக் குழு ‘ஹெட் ஆபீஸில் ‘இருந்து எப்போ வந்து விசாரிக்கப் போறாளோ. எப்ப அவா அந்த ‘ரிப்போட்டை’ தரப் போறாளோ.எல்லாம் போறாத வேளை நமக்கு. மரகதத்தை கஷ் டப் படுத்திண்டு வறது.அந்த பகவான் தான் சீக்கிரமா கண்ணை தொறந்துப் பாத்து மங்களத்துக்கு அவ வேலையே அவளுக்கு சீக்கிரமா தர அனுக்கிரஹம் பண்ணனும்” என்று அங்கலாய்த்துக் கொ ண்டு சொல்லி விட்டு,மீண்டும் சமைக்கப் போனாள் விமலா.

சுவாமி ரூமுக்குப் போய் தான் விட்ட இடத்தில் இருந்து மீதி சுவாமி மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார் ராமசாமி. மங்களம் தன் ‘பெட் ரூமுக்கு’ப் போய் தன் புடவையை மாற்றிக் கொண்டு வந்து,அழுத கண்ககளுடன் மாமியாருக்கு சமையல் கட்டிலே உதவி பண்ணப் போனாள்.

உடனே விமலா “நேக்கு எல்லா சமையலும் முடிஞ்சிடுத்து,வெறுமனே ரசத்துக்கு தாளிச்சு கொ ட்டற வேலை தான் பாக்கி இருக்கு.நீயும் அவர் கூட போய் அந்த பகவானை வேண்டிண்டு வா. காத்தாலேயே நீ மனசு ரொம்ப கலக்கமா இருந்தே.சுவாமி மந்திரங்களே சரியா சொல்லி இருக்க மாட்டயே” என்று கரிசனப் பட்டு மாட்டுப் பெண்ணை சுவாமி ரூமுக்கு அனுப்பினாள் விமலா. உடனே மங்களமும் சுவாமி ரூமுக்குப் போய் தன் மாமனார் பின்னாலே நின்றுக் கொண்டு சுவாமி மந்திரங்களை மெல்ல சொன்னாள்.
அவள் மனம் எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி வந்தது.

மணி பண்ணண்டு அடித்ததும் மங்களம் “அப்பா,நீங்கோ இன்னிக்கு ரமாவை ஸ்கூலில் இரு ந்து அழைச்சுண்டு வர போக வேணாம்.நான் போய் ரமாவை ஸ்கூலில் இருந்து அழைச்சுண்டு வறே ன்” என்று சொல்லி விட்டு தன் செருப்பைப் போட்டுக் கொண்டு ரமாவை அவ ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

ராமசாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு வந்த பிறகு விமலா,தன் கணவருக்கும்,மாட்டுப் பெண்ணுக்கும், ரமாவுக்கும் தட்டைப் போட்டு தான் செய்து இருந்த சமையலை பறிமாறினாள். மூவ ரும் சாப்பிட்டு முடிந்த பிறகு,விமலா தானும் தட்டைப் போட்டு சாப்பிட்டு விட்டு,மீதி இருந்த சிலவற் றை மட்டும் வைத்துக் கொண்டு,மற்ற எல்லா பாத்திரங்களையும் நன்றாக ‘ஒழிச்சு’ விட்டு தேய்க்கப் போட்டாள்

சாப்பிட்டு முடிந்ததும் ராமசாமி மறுபடியும் காலையிலே வைத்து விட்டுப் போன ‘ஹிண்டு’ பேப்பரை சந்தோஷமாக படிக்க உட்கார்ந்தார்.

விமலா தினமும் வழக்கமாக தான் சாப்பீட்டு விட்டு எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வந்த பிறகு படித்து வரும் திருப்புகழ் புத்தகத்தை வைத்துக் கொண்டு தன் கண்ணாடியையும் போட் டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.சாப்பிட்டடு கொஞ்ச நேரம் ஆனதும் ரமா படுக்கப் போய் விட்டா ள்.மங்களமும் ரமா பக்கத்தில் படுத்துக் கொண்டு யோஜனைப் பண்ணீ வந்தாள்.

அவளுக்கு மனசே சரி இல்லை.

’இந்த மாதிரி நம்மை ‘ஆபீஸ்’லே ‘சஸ்பெண்ட்’ பண்ணி இருக்காளே.’ஹெட் ஆபீஸில்’ இரு ந்து அந்த விசாரணைக் குழு,நம்ம ஆபீஸ்க்கு வந்து,எங்க மூனு பேரையும் விசாரணைப் பண்ணின அப்புறமா,அந்தக் குழு யார் பேர்லே ‘தப்பு’ இருக்குன்னு அவா ‘ரிப்போட்டிலே’ சொன்னப்புறம் தானே, நம்ம சீப் மானேஜர் நம்ம ‘சஸ்பென்ஷனை’ ‘கான்ஸல்’ பண்ணி விட்டு நம்மை மறுபடியும் வேலை க்கு வரச் சொல்லப் போறார்.இந்த “மொத்த பிராஸஸ்” எத்தனை மாசம் ஆகுமோ.அந்த ‘விசாரணை குழு ‘எங்க மூனு பேர்லே யார் மேலேயும் ‘தப்பு’ இருக்குன்னு சொல்லிட்டா,என்ன ஆகும்.எங்க மூனு பேருக்கும் வேலை போயிடுமே.பகவானே அப்படி ஆகாம ‘யார்’ உண்மையிலே இந்த பத்தாயிர ரூபா யை குடுக்காம மறைச்சுட்டான்னு அந்த ‘விசாரணை குழு’ கண்டு பிடிக்கணுமே.அதுக்கு நீ தய வு செஞ்சு அந்த ‘விசாரணைக் குழு’ மெம்பர்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணுப்பா’ என்று மனம் உருகி பகவானை வேண்டிக் கொண்டு,இந்த பக்கமும் அந்த பக்கமும் புரண்டு புரண்டுப் படுத்துக் கொண்டு இருந்தாள் மங்களம்.

‘மத்த ரெண்டு பேரும் கிராஜுவேட் ஆச்சே.நாம வெறுமனே ‘ஹை டென்ந்த பஸ்ட் க்ளாஸ்’ தானே.தவிர அவா ரெண்டு பேரும் என்னை விட ‘சீனியர்களாச்சே.நான் அவர்களை விட ரொம்ப ஜுனியர் ஆச்சே.ஒரு வேளை யாராவது ஒருவரை இந்த ‘தப்புக்காக’ டிஸ்மிஸ் பண்ண வேணும்ன்னு அந்த ‘ரிப்போர்ட்டில்’ அந்த ‘விசரணைக் குழு’ ‘ரெகமண்ட்’ பண்ணி இருந்தா,என் வேலை நிச்சியமா போயிடுமே’ என்று எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி வந்தாள் மங்களம்.

கொஞ்ச நேரம் ஆனதும் மணியைப் பார்த்தாள் மங்களம்.மணி மூனறை காட்டியது.

சாயங்காலம் ஐந்து மணிக்கு சுதா பள்ளி கூடத்தில் இருந்து வந்ததும்,தன் ‘ஷூ சாக்சை’யும் கழட்டி வைத்து விட்டு,பள்ளிகூட பையை வைத்து விட்டு,கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு பாட்டி கொடுத்த ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு,’காபி’யையும் குடித்து விட்டு,தன் ‘டிரஸ்சை ‘மாற்றிக் கொண்டு ரமாவை கூட்டிக் கொண்டு விளையாட கிளம்பினாள்.

உடனே விமலா “இதோ பார் சுதா,உனக்கு நிறைய ‘ஹோம் வர்க்’ இருந்தா,சீக்கிரமா விளையா டிட்டு,ஆத்துக்கு சீக்கிரமா அந்த ‘ஹோம் வர்க்கை’ப் போடு.இன்னிக் காட்டும் அடுத்த நாள் காத்தா லே வரைக்கும் அந்த ‘ஹோம் வர்க்கை’ வச்சுண்டு வறாதே” என்று சொன்னாள்.அதற்கு சுதா “சரி பாட்டி,நான் விளையாடிட்டு சீக்கிரமா ஆத்துக்கு வந்து பள்ளிகூட ‘ஹோம் வர்க்கை’ போட்டு முடிக்கறேன்” என்று சொல்லி விட்டு,ரமாவுடன் சிட்டாய் பறந்து போனாள்.

தன் கணவர் வீட்டுக்கு வந்ததும் மங்களம் தன் ‘ஆபீஸில்’ நடந்த எல்லா விவரத்தையும் சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள்.உடனே ராமநாதன் “அழாதே மங்களம். பாக்கலாம்.அந்த ‘விசார ணை குழு’ உங்க மூனு பேரையும் கூப்பிட்டு விசாரிப்பா.நீ நடந்த எல்லா சமாசாரத்தையும் நடந்தது நடந்த படி சொல்லு.மத்த ரெண்டு பேரும் சொல்லட்டும்.அந்த ‘விசாரணைக் குழு’ உண்மையை கண்டுப் பிடிச்சி அவா குடுக்கற ‘ரிப்போர்ட்லே’ சொல்லி விடுவா.அது வரைக்கும் நாம அந்த பகவா னைத் தான் வேண்டிண்டு வரணும்.அது வரைக்கும் நீ ‘சஸ்பென்ஷன்லே’ தான் இருந்து வரணும். இப்போ வேறே வழி ஒன்னும் இல்லே.நாம இப்ப ஒன்னும் பண்ண முடியாது”என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார்.

ராமநாதன் தன் கால் கைகளை கழுவிக் கொண்டு சுவாமி ரூமுக்குப் போய் விபூதியை இட்டுக் கொண்டு சுவாமி மந்திரங்களை எல்லாம் சொல்லி விட்டு ஹாலுக்கு வந்தார்.தன் பையன் ‘ப்ரீயாக’ இருந்ததைப் பார்த்து ராமசாமி அன்று ‘ஹிண்டு பேப்பர்லே’ வந்து இருந்த சுவாரஸ்யமான விஷயங் களை சொல்லிக் கொன்டு இருந்தார்.
மனி எட்டு அடிக்கவே விமலா தன் கணவர்,பிள்ளை, மாட்டுப் பெண்,ரெண்டு பேத்திகள் எல்லாருக்கும் தட்டைப் போட்டு தான் பண்ணி இருந்த அடை அவியலையும்,அரிசி உப்புமா கத்திரி க்காய் கொத்சையும் பறிமாறினாள்.மங்களத்திற்கு மனசு சரி இல்லாது இருந்ததால் அவள் அதிகமாக ஒன்றும் சாப்பிட வில்லை.எல்லோரும் சாப்பிட்ட பிறகு விமலா ‘டிபனை’ சாப்பிட உட்கார்ந்தாள்.

மங்களம் தன் மாமியாருக்கு அவள் கேட்ட ‘டிபனை’ பறி மாறினாள்.சாப்பிட்டுக் கொண்டே விமலா மங்களத்தைப் பார்த்து “கவலைப் படாதே மங்களம்.நாம வேண்டி வரும் பகவான் நமக்கு ஒரு கஷ்டமும் தர மாட்டார்.எல்லாம் நல்லபடியா முடிஞ்சு,நீ சீக்கிரமா மறுபடியும் வேலைக்குப் போய் வருவே” என்று சொன்னதும் மங்களம்” உங்க வாய் முஹூர்த்தம் பலிச்சு,எல்லாம் நல்ல படியா முடிஞ்சு நான் சீக்கிரமா அந்த வேலைக்கு மறுபடியும் போய் வரணும்.எத்தனை நாளைக்கு நான் இந்த அரை மாச சம்பளத்தே வாங்கிண்டு வறது” என்று தன் கண்களில் கண்ணீர் மல்க சொன்னாள் மங்களம்.

ராமநாதன் அம்மா போட்ட ‘ஹெவி டிபனை’ சாப்பிட்டு விட்டு, அவர் வழக்கமாக பார்க்கும் ‘டீ.வீ’ சானல்களை அப்பாவோடு உட்கார்ந்துக் கொண்டு பார்க்க ஆரம்பித்தார்.சுதா தன் பள்ளிக் கூட ‘ஹோம் வர்க்கை’ப் போட ஆரம்பித்தாள்.ரமா படுத்து கொள்ளப் போய் விட்டாள்.

மாமியார் சாப்பிட்ட பிறகு மங்களம், மாமியார் கூட எல்லா பாத்திரங்களையும் ‘ஒழிச்சு’ப் போட் டு விட்டு தன் கணவரைப் பார்த்து “நான் ‘பெட் ரூமிலே’ கொஞ்சம் ‘ரெஸ்ட்’ எடுத்தக்கறேன். எனக்கு மனசு ரொம்ப சரி இல்லே.நீங்க ‘டீ.வீ’ பாத்துட்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு ‘பெட் ரூமு’க்குப் போனாள்.

பெட்டில் படுத்துக் கொண்டே மங்களம் ‘நாம ‘சஸ்பென்ஷன்லே’ இருக்கோம்,நமக்கு அரை மாச சம்பளம் தான் வறது’ என்கிற விஷயத்தே எப்படி நம்ப அப்பா, அம்மா கிட்டே சொல்றது. அவா ளே பாவம் ரகுராமனை சமையல் வேலைக்கு அனுப்பிட்டு,அவன் அந்த சமையல் வேலையை எப்ப முழுக்கக் கத்துண்டு காலை ஊனிண்டு வருவான்ன்னு தானே யோஜனை பண்ணிண்டு இருப்பா. ரகுராமன் அவன் காலை ஊனிண்டு வற வரைக்கும்,நாம அவாளுக்கு உபகாரமா இருக்க கொஞ்சம் பணம் அனுப்பலாம்ன்னா,நமக்கே இப்போ அரை மாச சம்பளம் தானே வந்துண்டு இருக்கு’ என்று நினைக்கும் போது அவளுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.

திருவண்ணாமலையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த சின் ன கிராமம்.அந்த கிராமத்தில் ஒரு பொ¢ய ஏரி இருந்தது.அந்த ஏரி கால்வாய் போகும் வழியில் வரும் நீர் பாய்ச்சலில் நஞ்சை விவசாயமும்,மற்ற பகுதியில் இருந்த நிலங்களில் புஞ்சை விவசயம் செய்து வந்தார்கள் அந்த ஊர் மக்கள்.

அந்த கிராமத்தில் ஒரு அக்கிரஹாரமும்,நான்கு தெருக்களும் இருந்தது.அந்த அக்கிரஹாரத் தில் இருந்த இரு பக்கத்திலும் மொத்தம் முப்பது பிராமண குடும்பங்கள் வசித்து வந்தார்கள்.பலர் பிராமண குடும்பங்கள் விவசாயம் செய்து வந்து தங்கள் குடும்ப செலவுக்கு பணம் சம்பதித்து வந்தார்கள் ஒரு சில வேதம் படிச்ச ‘வாத்தியார்கள்’ எல்லா பிராமண குடும்பங்களுக்கும் ‘உபாத்யாயம்’ பண்ணி பணம் சம்பாத்தித்து குடும்பத்தை நடத்தி வந்தார்கள்.இருவர் அந்த கிராமத்தில் எல்லா விசேஷங்களு க்கும் சமையல் வேலை பண்ணி பிழைத்து வந்தார்.

அதில் ஒருவர் பேர் பாலு ஐயர்.

அந்த கிராமத்தில் ஒரு கோடியில் ஒரு சிவன் கோவிலும்,அதில் கோடியில் ஒரு பெருமாள் கோ விலும் இருந்தது.அந்த பிராமண குடும்பங்களில் வசித்து வந்த ஐயங்கார்கள் தினமும் பெருமாள் கோ விலுக்கும்.மற்ற ஐயர் ஜாதியை சேர்ந்தவர்கள் சிவன் கோவிலுக்கும் போய் வருவது வழக்கம்.மற்ற ஜாதியினர் அவர்கள் விருப்பப் படி அவர்களுக்கு பிடித்த கோவில்களுக்கு போய் வந்துக் கொண்டு இருந் தார்கள்.கூடவே அந்த கிராமத்தில் ஒரு ‘ஐயனார் சாமி’ கோவிலும் இருந்தது.

சிவனுக்கு விசேஷமான திங்கட் கிழமை,பிரதோஷம், சிவ ராத்திரி போன்ற விசேஷ நாட்களில் சிவன் கோவிலில் சிவனுக்கு பூஜையும்,கந்த சஷ்டி,தை பூசம்,போன்ற விசேஷமான நாட்களில் முருக னுக்கு பூஜையும்,அந்த சிவன் கோனிலில் செய்வார்கள்.அதே போல பெருமாளுக்கு, புரட்டாசி மாசம், வைகுண்ட ஏகாதசி,கிருஷண ஜயந்தி போன்ற விசேஷமான நாட்களில் பொ¢மாள் கோவிலில் விசேஷமான பூஜைகள் நடக்கும்.

அந்த கிராமத்தில் இருந்த மற்ற தெருக்களில் வசித்து வந்தவர்களில் வசதி உள்ள இருவர் மளி கைக் கடைகளும்,இரண்டு பேர்கள் துணிக் கடைகளும்,ஒருவர் ஒரு மருந்து ஷாப்பும்,ஒருவர் ஒரு சலூனும் ஒருவர் ஒரு ‘ஜெனரல் ஷாப்பும்’ நடத்தி வந்து குடும்ப செலவை செய்து வந்தார்கள்.ஒரு பிராமணர் ஒரு சின்ன ஐயர் ஹோட்டல் நடத்தி வந்தார். அந்த ஹோட்டலில் காலை,மாலை வேளைகளில் ‘டிபனும் மதியம் “சிம்பிளா’ சாப்பாடும் செய்து வந்தார்.

பாலு ஐயர் செய்யும் சமையல் அந்த ஊரில் இருப்பவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.ஏதாவது ‘விசே ஷம்’என்றால் அவர் அவர்கள் வீட்டுக்கு தன் ‘சகாக்களை’ அழைத்து வந்து சமையல் செய்து வந்தார் தன்னிடம் இருந்த நஞ்சை,புஞ்சை நிலங்களிலும் விவசாயம் பார்த்து வந்தார்.

ஒரு சிலர் தங்கள் பையன்கள் பொ¢ய ஊர்களில் வேலை செய்து வந்து அனுப்பும் பணத்திலும் விவசாயத்தில் வரும் வருமானத்தில் குடும்ப வாழக்கை நடத்தி வந்தார்கள்.ஒரு சிலர் ஒரு சின்ன ‘மெடிக்கல் ஷாப்பு’ம்,ஒன்னொருவர் ஒரு ‘பான்சி’ கடையையும்,இன்னொருவர் ஒரு மளிகை சாமான் கள் கடையை நடத்தி வந்தார்.ஊர் கோடியில் ஒரு மயானம் இருந்தது.

அந்த கிராமத்தில் எட்டாவது வரை ஒரு நடு நிலைப் பள்ளிக் கூடமும், ஒரு கார்பரேஷன் மரு த்துவ மணையும் இருந்தது.கிராமத்தில் இருந்த எல்லா படிக்கும் மாணவர்களும் அந்த நடு நிலைப் பள்ளியில் படித்து வந்தார்கள்.அதற்கு மேல் படிக்க அவர்கள் திருவண்ணாமலைக்குப் போய் படித்து வந்தார்கள்.

திருவண்ணாமலையில் இருந்து சுற்று வட்டாரத்தில் இருந்த எட்டு கிராமங்களுக்கும் ஒரு தனியார் ‘மினி பஸ்’ காலையில் 6, 8, 10, 12மணிக்கும்,மாலையில் 4, 6, 8,10மணிக்கும் வந்து பய ணிகளை ஏற்றி போய் கொண்டு வந்தது.அவசியம் என்றால் அந்த ஊர் மக்கள் அந்த ‘மினி பஸ்ஸில்’ ஏறி திருவண்ணாமலைக்குப் போய் தங்களுக்கு வேண்டிய சாமாங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வருவார்கள்.இந்த கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை ‘ஹை ஸ்கூலில்’ படிக்கப் போ கும் மாண வர்களும்,மாணவிகளும் அந்த ‘மினி பஸ்ஸை’ உபயோகப்படுத்தி வந்துக் கொண்டு இருந்தார்கள்.

மற்ற எல்லா ஏழை குடும்பங்கள் அக்கிரஹாரத்து ஐயர்களின் நிலங்களில் விவசாயம் பண்ணீ வந்து அவர்கள் கொடுக்கும் தானியம்,பணம் இவற்றை வைத்துக் கொண்டு ஜீவனம் செய்து வந்தார் கள்.மழை நன்றாக பெய்யும் நாட்களில் அந்த ஏரியில் நிறைய தண்ணீர் வரும்.அப்போது கால்வாய் பாய்ச்சலில் அந்த ஐயர் குடும்பங்கள் நஞ்சை விவசாயம் பண்ணி வந்து,தங்கள் நிலங்களில் வேலை செய்து வந்த ஆட்களுக்கும் நெல்லும்,பணமும்,கூலியாக கொடுத்து வந்தார்கள்.அந்த ஐயர்கள் கொ டுத்த பணத்தில் அந்த கூலி குடும்பங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.

பரமசிவமும்,அவர் மணைவி ராதாவும்,அந்த கிராமத்திலே ரெண்டு வீடுகளுடன், நிறைய நஞ்சை புஞ்சை நிலங்களுடன் வசதியாக வாழ்ந்து வந்துக் கொண்டு இருந்தார்.
அவர்களுக்கு விமலா என்கிற ஒரு பெண்ணும்,குப்புசாமி என்கிற ஒரு பையனும் பிறந்தார்கள்.

விமலாவை மூன்றாவது வகுப்பு முடித்த பிறகு பள்ளிக்கு அனுப்பவில்லை பரமசிவம் தம்பதிகள் குப்புசாமி எட்டாவது வரை படிக்க வைத்து இருந்தார்கள்.

ஒரு தரகர் சொன்னதின் போ¢ல் பககத்து ஊரில் வசித்து வந்த,மார்க்கபந்து,சுசீலா தம்பதிகளின் மூன்றாவது வரை படித்து இருந்த மரகதத்தை,தங்கள் பையன் குப்புசாமி கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள் பரமசிவமும் ராதாவும்.அந்த கால வழக்கப்படி,அந்த தரகர் மூலமாக மார்க்கபந்துவும்,சுசீலாவும் அவர்கள் பையன் ராமசாமிக்கு பரமசிவம் ராதா தம்பதிகளின் பெண் விம லாவை கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள்.

இரு குடும்பத்தாருக்கும் இந்த இரண்டு சம்பந்தமும் ரொம்ப பிடித்து இருக்கவே,ஜாதகப் பா¢வத் தணை பண்ணிக் கொண்டார்கள்.

ரெண்டு குடும்ப வாத்தியார்களும் ஜாதகங்களை நன்றாகப் பார்த்து ரெண்டு ஜாதங்ககளும் ‘ஒத்துக் கொண்டு இருக்கு’ என்று சொன்னார்கள்.

ஒரு நல்ல முஹ¥ர்த்ததில் ரெண்டு கல்யாணங்களையும் சொற்ப நகைகள்,கூரைப் புடவை, அவசியமான வெள்ளி,பித்தளைப் பாத்திரங்கங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து ‘ஜாம்’ ‘ஜாம்’ என்று ஐந்து நாள் விழாவாக இரு குடும்பத்தாரும் செய்து முடித்து சந்தோஷப் பட்டார்கள்.

பரமசிவம் தன்னுடைய இன்னொரு வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தார்.அந்த வீட்டிலே வாடகைக்கு இருந்த வரை காலி பண்ணச் சொல்லி விட்டு,தன் மாப்பிள்ளை பெண்ணை அந்த வீட் டிலே குடி வைத்தார் பரமசிவம்.

ஒரு நாலு நாள் ‘டூர்லே’ குப்புசாமியும்,மாட்டுப் பெண் மரகதமும் வெளி ஊர் போய் இருந்தார்கள்.

பரமசிவம் நெடு நாட்களாக தன் மனதில் வைத்து இருந்த ஐடியாவை தன் மணைவி இடம் சொல்லலாம் என்று நினைத்தார்,

மணைவியை அழைத்து “ராதா,என் மனசிலே ரொம்ப நாளா ஒரு ஐடியா இருக்கு.நாம பைய னுக்கும் பொண்ணுக்கும் நல்ல விதமா கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்.நாம ரெண்டு பேரும் இன்னு ம் இருந்த நாள் இருக்கப் போவது இல்லே.எனக்கோ ,உனக்கோ ஏதாவது உடம்புன்னு வந்தா,இந்த ஊர்லே இருக்கிற மருத்துவ வசதி ரொம்ப சுமாரா இருக்கிறதாலே,நாம திருவண்னாமலைக்குப் போய் தான் வைத்தியம் பாத்து வறணும்.நம்ம ரெண்டு பேருக்கும் திடீர்ன்னு என்னவான்னாலும் ஆகலாம்..” என்று சொல்லி முடிக்க வில்லை உடனே ராதா “ஏன்னா இப்படி ‘அசுபமா’ பேசறேள். உங்களுக்கு இப்ப என்ன ஆடியிடுத்து.இல்லே நம்ம ரெண்டு பேருக்கும் ஏதாவது தீராத வியாதி தான் வந்து இருக் கா என்ன.நாம் ரெண்டு பேரும் ‘குத்துக் கல்லு’ மாதிரியா தானே நன்னா இருந்துண்டு வரோம்.என்ன மோ ரெண்டு பேரும் நாளைக்கே ‘போயிடப் போறா’ மாதிரி பேசறேளே.அப்படி எல்லாம் நீங்கோ பேசாதேள் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.நல்லதே கேளுங்கோ.நல்லதை மட்டும் பேசுங்கோ” என்று சற்று கோவத்துடன் சொன்னாள்.
‘ஆத்துக்காரர் தன் ஐடியாவை சொல்ல வந்ததை முழுக்கக் கேக்காம அவரை இப்படி பாதியிலே யே நிறுத்திட்டோமே.அவரை முழுக்கப் பேச சொல்லி இருக்கலாமே” என்று நினைத்து வருத்தப் பட்டாள் ராதா.

உடனே “அடி அசடே,’நெருப்பு’ன்னா வாய் வெந்து விடப் போறதா என்ன.ஒரு பேச்சுக்கு நான் சொன்னேன்.நான் சொல்ல வந்த விஷயதே நேரிடையாவே சொல்றேன்.நமக்கு இருக்கிற நஞ்சை, புஞ்சை நிலங்களையும், ரெண்டு வீட்டையும் நம்ப பையனுக்கும்,பொண்ணுக்கும் சரி பாதியா பிரிச்சு ஒரு உயில் எழுதி வச்சுட்டா,பின்னிட்டு ரெண்டு குடும்பங்களும் சண்டை சச்சரவு இல்லாம இருந்து வருவாளே.ரெண்டு குடும்பங்களும் நல்ல ஒத்துமையா இருந்துண்டு வருவாளே.நாம அப்படி பண்ண லாமான்னு கேகக்கறதுக்கு தான் நான் இந்த பேச்சை ஆரம்பிச்சேன்.அதுக்குள்ளே நீ பயந்துப் போய் என்ன வெல்லாமோ பேச ஆரம்பிச்சுட்டயே,நீ நான் சொல்றதே முழுக்கவே இன்னும் கேக்கலையே” என்று சொல்லி நிறுத்தினார் பரமசிவம்.

“இதே சொலறதுக்கா நீங்க பேச்சை ஆரம்பிச்சேள்.இதை இப்ப சொன்னாப் போல நோ¢டையா சொல்லக் கூடாதோ.என்னமோ வேணாததே எல்லாம் பேசிண்டு இருக்கேளே” என்று தன் கணவனை கேட்டு விட்டு,யோஜனையில் ஆழ்ந்தாள் ராதா.

வாசலில் யாரோ ஒரு கூலிக்காரன் வரவே பரம்சிவம் எழுந்து போய் அவனிடம் கொஞ்ச நேரம் பேசி விட்டு வீட்டுக்கு உள்ளே வந்தார்.

“நான் நன்னா யோஜனைப் பண்ணீனேன்.நம்ப மாப்பிள்ளை அவா குடும்பத்திலே ஒரே பை யன்.அப்பா சொத்து பூராவும் அவருக்குத் தான் கிடைக்கப் போறது.நீங்க சொன்ன ‘ப்லாண்’ படி பண்ணினா,அவருக்கு அவர் அப்பா சொத்து பூராவும், நம்ம சொத்திலே பாதியும் கிடைக்கும்.ஆனா நம்ம குப்புவுக்கு வெறுமனே நம்ம சொத்திலே பாதி தான் கிடைக்கப் போறது இல்லையா.இதே நீங்க யோஜ னை பண்ணவே இல்லையா. அப்படி நீங்க யோஜனை பண்ணி இருந்தேள்னா,இதே நீங்க சொல்லி இருக்க மாட்டேள்ன்னு நேக்குத் தோன்றது.இந்த ‘ப்லான்’ கொஞ்சம் கூட சரின்னே நேக்குப் படலே” என்று சொல்லி விட்டு,தன் கணவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் வாயையே பார்த்து நின்றுக் கொண்டு இருந்தாள் ராதா.

“ராதா,நீ யோஜனை பண்ணினா மாதிரி நானும் யோஜனைப் பண்ணினேண்.நாம வேறு வித மா நம்ப சொத்தை பிரிச்சா, பின்னிட்டு அவ ரெண்டு பேருக்குள் வீணா சண்டை வர வழி பண்ணக் கூடாது. நாம உயிரோடு இருக்கும் போதே எல்லாத்தையும் பகவானுக்கு பொதுவா சரி பாதியா பிரிச்சு வக்கறது தான் புத்திசாலித்தனம்.அது தான் “தர்மமும் கூட”” என்று சொல்லி ஒரு வழியாக தன் மணைவி ராதாவை ஒத்துக் கொள்ள வைத்தார் பரமசிவம்.

“சரி நீங்கோ இவ்வளவு சொன்னப்பபுறமா,நான் சம்மதிக்கனேன்னா அது என் தப்பு.நாம எந்த காரியத்தையும் ‘தர்மத்துக்கு’ விரோதமா பண்ணவே கூடாது.நீங்க சொல்றது ரொம்ப சரி” என்று சொல்லி ஒத்துக் கொண்டாள் ராதா.

பரமசிவம் திருவண்ணாமையில் இருந்த தன் உறவுக்கார வக்கீலைக் கூப்பிட்டு அவர் ஆசைப் பட்டது போல தன் ரெண்டு வீட்டையும்,நஞ்சை,புஞ்சை நிலங்களையும் பையனுக்கும்,பெண்ணுக்கும் சரி பாதியாக எழுதி ஒரு உயிலை தயார் பண்ணினார்.

’நாம தர்மத்துக்கு விரோதமா நம்ப சொத்தே பிரிச்சுக் குடுக்கலே.நம்ப காலத்துக்கு அப்புறமா பையனும் சரி,பொண்ணும் சரி நம்மை வீணா பழிக்க மாட்டா” என்று நினைத்து பரமசிவமும் ராதாவும் சந்தோஷப் பட்டார்கள்.

ஒரு வருஷம் தான் ஆகி இருக்கும்.

அந்த ஊரில் வந்த விஷ காய்ச்சலில் படுத்த படுக்கையாய் ஆகி விட்டார்கள் பரமசிவம் தம்பதி கள்.அந்த ஊரில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் பையனும், மாப்பிள்ளையும் யோஜனைப் பண்ணி பரமசிவம் தம்பதிகளை திருவண்ணாமலைக்கு அழைத்துப் போய் மருத்துவம் பார்த்தார்கள்.

ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு பலன் இல்லாமல் பரமசிவமும்,ராதாவும்,ஒரு மணி நேர வித்தியாசத்தில் இறந்துப் போனார்கள்.

அந்த ஊர் வாத்தியரை அழைத்து,அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பையன் குப்புசாமியும் அவன் மணைவி மரகதமும் எல்லா ‘அந்திம காரியங்களையும்’ நல்ல விதமாக செய்து முடித்தார்கள். ராமசாமியும் விமலாவும் வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

மார்க்கபந்துவும்,சுசீலாவும், அந்த ஊர் பிராமணர்களும் குப்புசமியின் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்தார்கள்.பரமசிவத்தின் உறவுக்கார வக்கீலும்,அந்த கிராமத்துக்கு வந்து இருந்து குப்புசாமியை யும்,மரகத்தையும் துக்கம் விசாரித்தார்.சமையல் கார மாமா பாலுவும் வந்து குப்புசாமியையும், மரகதத்தையும் துக்கம் விசாரித்தார்.பதி மூன்று நாள் காரியங்கள் ஆனதும் வாத்தியார் ரெண்டு வீட்டுக்கும் ‘புண்யாவசனம்’ செய்து வைத்தார்.வக்கீல் பரமசிவம் ‘உயிலி’ல் எழுதி இருந்தது போல,சொத்தை குப்புசாமிக்கும், விமலாவுக்கும் சரி பாதியாய் பிரித்துக் கொடுத்து விட்டு திருவண்ணாமலைக்குப் போனார்.

‘நம்ப அம்மா அப்பா ரெண்டு பேரும் இப்படி திடீரென்று ஒரு மணி வித்தியாசத்லே செத்துப் போயிட்டாளே.அவா ரெண்டு பேரும் ஒரு பேரனையோ,பேத்தியையோ பாக்காமலே இப்படி அநியா யமா பர லோகம் போய் சேந்துட்டளே.அவா ரெண்டு பேரும் உயிரோடு இருந்தப்ப,சொத்துப் பிரிக்கும் போது அக்கா தம்பிக்குள்ளே எந்த சண்டையும் வரக்கூடாதுன்னு நினைச்சு,மொத்த சொத்தையும் சமமா ரெண்டு பேரும் பிரிச்சுக்கணும்ன்னு எழுதி வச்சு இருக்காளே”என்று நினைத்து,அக்கா விமலா வும்,தம்பி குப்புசாமியும் தங்கள் பேற்றோர்களுக்கு மானசீகமாக தங்கள் நன்றியை சொன்னார்கள்.

மாப்பிள்ளை ராமசாமியும்,அவனது பெற்றோர்களும் மறைந்த பரம்சிவம் ராதா தம்பதிகளின் “தார்மிக மனப்பான்மையை” நினைத்து ஆச்சரியப்பட்டார்கள்.

சுசீலா தன் கணவா¢டம் ரகசியமா “நம்ப பையனுக்கு நம்ம சொத்து பூரா இருந்தும்,அந்த மாமா வும் மாமாவும் அவா சொத்லே,பொண்ணுக்கு பாதியும்,பிள்ளைக்கு பாதியும் சரி பாதியா கிடைக்கணு ம்ன்னு ஒரு உயிலை எழுதி வச்சு இருந்தாளே.எவ்வளவு நல்ல மனசு அவா ரெண்டு பேருக்கும்” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.

உடனே மார்க்கபந்து “நீ சொல்றது ரொம்ப சரி,சுசீலா.எல்லாருக்கும் அந்த மாமா மாமிக்கு இருந்த பெருந்தனமை இருக்காது.ரொம்ப சுய நலமா இருப்பா.’சொத்து எல்லாம் பிள்ளைக்கு தான் சேரணும்,வேறே ஆத்துக்கு போற பொண்ணுக்கு ஒன்னும் தர வேணா¡ம்’ன்னு தான் நினைச்சுண்டு வந்து இருப்பா” என்று தன் மணைவி சொன்னதை ஆமோதித்தார்.

அக்கா விமலாவும்,தம்பி குப்புசாமியும் அப்பா அம்மா ஒரே சமயத்திலே இறந்துப் போனதை நினைத்து ஒரு ஆறு மாசம் துக்கமாய் இருந்து வந்தார்கள்.

”உப்பும் தண்ணியும் உடம்பிலே ஊற ஊற எல்லா துக்கமும் கொஞ்சம் கொஞ்சமா மறையும்” என்கிற பழமொழிக்கு ஏற்ப குப்புசாமியும்,விமலாவும் அப்பா,அம்மா இறந்துப் போன சமாசாரத்தை கொஞ்சம் கொஞ்சமா மறந்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.

ராமசாமிக்கு அவர் அப்பா செய்தது வந்தது போல விவசாயம் பண்ணிக் கொண்டு வாழக்கை நடத்தி வருவது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

’கல்யாணம் ஆகும் வரை நாம அப்பா கூட விவசாயம் பண்ணிண்டு வந்தோம்.நமக்கோ இப் போ கல்யாணம் ஆயிடுத்து.நாம ஏன் நாம் ஏன் மாமனார் குடுத்த நிலங்களை எல்லாம் வித்துட்டு, அந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் திருவண்ணாமலையிலே ஏதாவது ஒரு ‘பிஸினஸ்’ பண்ணக் கூடாது’ என்று யோஜனை பண்ணினார்.

தன் யோஜனையை முதலில் தன் மணைவியிடம் சொன்னார்.தன் கணவர் சொன்ன யோஜ னை விமலாவுக்கு மிகவும் பிடித்து இருக்கவே அவள் உடனே ராமசாமி சொன்னதை ஆமோதித்து “எனக்கும் நீங்க சொன்ன ‘ஐடியா’ ரொம்ப பிடிச்சு இருக்கு.நீங்க சொன்னா மாதிரியே செய்யலாம்” என்று சந்தோஷமாக சொன்னாள்.தான் சொன்ன ‘ஐடியா’ விமலாவுக்கு ‘ரொமப பிடிச்சு இருக்கு’ என்று சொன்னதை கேட்டு ராமசாமி சந்தோஷப் பட்டு,தன் ‘ஐடியா’வை அப்பாவிடமும்,அம்மாவிட மும்,சொல்ல ஆசைப் பட்டார்.அதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *