கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2023
பார்வையிட்டோர்: 13,760 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

What lips my lips have kissed, and where and why
I have forgotten and what arms have lain
Under my head till morning, but the rain
Is full of Ghosts tonight, that tap and sigh
Upon the glass and listen for reply
-Edna St Vincent Millay 1892-1950.

ராஜீவ் குமார் கை கால்களை நீட்டிக் கொண்டபடி, விசாலமான படுக்கையில், மிருதுவான மெத்தையின் மீது ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

அரண்மனை போன்ற அவனது மாளிகையின் முக்கிய படுக்கை அறையின் பெரும் பகுதியை இந்தப் படுக்கையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

ஏ.ஸி யின் இதம், பட்டு படுக்கை விரிப்புகளின் மென்மை, சுகமான தூக்கம். இந்த இன்ப நிலையைக் கலைத்து திடீரென்று படுக்கைப் பக்கத்தில் உள்ள மேஜையின் மீதிருந்த வீட்டுத் தொலைபேசி மணி அடித்தது.

திடுக்கிட்டு ராஜீவ் குமார் விழித்துக்கொண்டான், மணி ஓயாமல் அடித்துக்கொண்டே இருந்தது. சட்டென்று இண்டர்காம் பொத்தானை அழுத்தி, எரிச்சலூட்டும் அந்த சப்தத்தை நிறுத்தி ராஜீவ் ரிசிவரைத் தனது காதோடு இணைத்துக் கொண்டான். “குட் மார்னிங் சார்! மணி ஆறாயிடுச்சு”. பேசியவன் சுரேஷ், ராஜீவுக்கு செக்ரட்டரி, சிக்கல்களைத் தீர்ப்பவன். பொது மேற்பார்வையாளன் – சகலமும் சுரேஷ்தான். ராஜீவுக்கு அவன் தான் வலது கை மாதிரி, அவன் வீட்டிலேயே வசித்து வந்தான்.

“குட் மார்னிங்” என்றான் ராஜீவ், கொஞ்சம் சலிப்புடன்.

“இன்னிக்கு ஏழு மணி கால்ஷீட் சார்! ஏழரை மணிக்கு நீங்க செட்டிலே இருக்கணும்” என்று சுரேஷ் ஞாபகப்படுத்தினான்.

*ஓ…. காட்…..!” ராஜீவ் ஒரு முனகல் சத்தத்தை எழுப்பினான். தலைவலி மண்டையைப் பிளந்துவிடும்போல் இருந்தது. “சுரேஷ்: ஸ்டூடியோவுக்கு போன் பண்ணி ஒன்பது மணிக்கு முன்னாலே என்னை எதிர்பார்க்க வேண்டாம். என்று சொல்லிவிடு.”

”இப்பவே சொல்லிடறேன் சார்.”

ராஜீல் இன்டர்காமின் வேறொரு பித்தானை அழுத்தினான். சமையற்கட்டில் மணி அடித்தவுடன் சமையற்காரன் கேசவன் அங்கே போனை எடுத்தான்.

“ஐயா”.

”காப்பி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கட்டும்.”

“இதோ அனுப்புறேங்க ஐயா”

ராஜீவ் போனைக் கீழே வைத்தான். படுக்கையில் புரண்டு திரும்பினான். அப்பொழுதுதான் எட்டடி சதுர வடிவில் இருந்த பெரிய படுக்கையின் மறுபுறத்தில் ஓரமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணைக் கவனித்தான். ராஜீவின் கருத்த புருவங்கள் கோபத்தில் சுருங்கின. தனக்குத்தானே ராஜீவ் சில சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். அவற்றின்படி, இது தனது விதிமுறைக்குப் புறம்பான செயல்.

இரவில் ராஜீவ் தனது படுக்கை அறைக்கு எந்தப் பெண்ணை அழைத்து வந்தாலும் அவள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி விடக் கூடாது என்பது ராஜீவின் உத்தரவு, எழுதப்படாத கட்டளை. அழைத்து வந்த பெண்ணைப் பூரணமாக அனுபவித்து, திகட்டிப்போன நிலை ஏற்பட்டு ராஜீவ் தூங்கிவிட்ட பிறகு அவள் எழுந்து, ஆடைகளை உடுத்திக் கொண்டு, நிசப்தமாக, ராஜீவுடைய அமைதியான உறக்கத்தைக் களைக்காமல் போய்விட வேண்டும். வீட்டின் முன் நுழைவாசலுக்குப் போகாமல், அவள் ஒரு பக்கத்து வராந்தா வழியாகப் போக வேண்டும். அங்கே அவளுக்காக டிரைவரோடு ஒரு கார் தயாராக நிற்கும். அவளை வீடு கொண்டு போய்ச் சேர்த்துவிட. எந்தப் பெண்ணுமே இரவு முழுவதும் ராஜீவுடன் இருக்கக் கூடாது. இதுதான் அவனுடைய வழக்கம்.

தன்னுடன் தொடர்பு கொண்ட எல்லாப் பெண்களுக்குமே இது நன்றாகத் தெரிந்த விஷயம். இவளுக்கும் தெரியும், பின்பு ஏன் விடியும்வரை இங்கேயே தங்கி விட்டாள்? ஒருவேளை வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படிச் செய்திருப்பாளோ என்ற சந்தேகம் ராஜீவ் மனத்தில் தோன்றியது. இப்படிச் செய்வதன் மூலமாக ராஜீவுடைய சாசுவதமில்லாத அன்பில், நிரந்தரமான இடத்தைப் பிடிக்க அவள் ஆசைப் படுவதைச் சூசகமாகத் தெரிவிக்கிறாளா?

ராஜீவ் தனக்குள் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டாள். தன்னுடன் ஏற்பட்ட தற்காலிகமான உறவை நிரந்தரமானதாக ஆக்கிக்கொள்ள இந்த தாரா, மீரா… ரீட்டா சே! – இவள் பெயரே ஞாபகத்துக்கு வரவில்லையே! நினைத்தால், கடைசியில் அவளுக்குப் பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சும்.

ராஜீவ் தனது வாழ்க்கையில் அனுபவித்த பெண்களின் எண்ணிக்கையே மறந்துவிட்டிருந்தான், எத்தனையோ பேர் வந்து போய் விட்டார்கள். யார் எண்ணுவது? அவர்களில் எத்தப் பெண்ணுக்குமே, நான்கு ஐந்து வாரங்களுக்கு மேல் தனது வாழ்க்கையில் அவன் இடம் அளித்ததும் கிடையாது. அதற்கு மேல் எந்தப் பெண்ணையும் தன்னுடன் இருக்க அனுமதிப்பதாகவும் ராஜிவுக்கு உத்தேசம் இல்லை.

இந்த வாழ்க்கை முறையே அவனுக்குப் பிடித்திருந்தது. சௌகரியமாக இருந்தது. எந்த விதமான பத்தங்களும் இல்லை, கட்டுப்பாடுகளும் இல்லை. உறவு என்னும் பெயரால் எந்த விலங்குகளையும் மாட்டிக் கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை. சுதந்திரப் பறவையாக வாழ்ந்து வந்தான்.

ராஜீவைச் சுற்றிச் சுற்றி வட்டமிடும் இளம் பெண்களுக்கும் பஞ்சம் இல்லை. ஏன் அவனைத் தேன் ஜாடியைச் சுற்றி ஈக்கள் மொய்ப்பது போல் குழ்ந்து கொள்ள மாட்டார்கள்? ராஜீவ் குமார்தான் தமிழ்த் திரைப்பட உலகின் நம்பர் ஓங் சூப்பர் ஸ்டார் ஆயிற்றே! மற்ற எல்லாத் தென்னிந்திய நடிகர்களையும் விட அதிகப் பணம், அதிக டிமாண்ட், அதிக செல்வாக்கு – எல்லாம் ராஜீவுக்கே. புகழேணியின் உச்சியில் தனது ஸ்தானத்தையும் அந்தஸ்தையும் பதினைந்து ஆண்டுகளாக வீட்டுக் கொடுக்காமல் காப்பாற்றி வந்திருந்தான். எத்தனையோ புதிய நடிகர்கள் சமீப காலத்தில் தமிழ்த் திரையுலயில் புகுந்திருந்தாலும், ராஜீவ்குமாரை யாராலும் அசைக்க முடியவில்லை. அவனிடத்தை எவராலும் பிடிக்க முடியவில்லை. கிட்டக் கூட நெருங்க முடியவில்லை என்றால் மிகையாகாது.

தமிழ்த் திரையுலகில் தனிக்காட்டு ராஜாவாக, கோடிக்கணக்கான ரசிகர்களால் பூஜிக்கப்பட்டு வந்தான். ராஜீவிடம் யாரையும் கவர்ந்து, வசீகரித்து, தனக்கு அடிமையாக்கிக் கொள்ளக்கூடிய பிரத்தியேகமான சிறப்பியல்பும் இருந்தது. மறைந்த ஜான் கென்னடி, ஜவாஹர்லால் நேரு போன்ற பெரிய அரசியல் தலைவர்களிடம் காணப்பட்ட மக்களை ஈர்க்கும் தனிப்பட்ட காரிஸ்மா, ராஜீவிடம் பெருமளவில் இருந்தது.

தான் விரும்பிய பெண்ணை அடைய இதுவரை ராஜீவ் தவறியதே இல்லை. அவனுடன் உறவு கொள்ளும் பெரும்பாலான பெண்களுக்குத் தாங்கள் எவ்வளவு தூரம் போகலாம்; தங்களுடைய எல்லை எதுவரை என்பது நன்றாகப் புரியும். ராஜீவுடன் சிநேகம் என்றால் அது ரொம்பக் காலம் நீடிக்காது என்பதை உணர்ந்து காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள அப்பெண்கள் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டு, நாடப்பட்ட அதே வேகத்துடன் தூக்கு எறியப்படுவோம் என்று அறிந்து, அதற்குத் தயாராகவே இருந்தார்கள். ஒரு பெண்ணிடம் ராஜீவுக்குச் சலிப்புத் தட்டிவிட அவளுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வரும்பொழுது அவளுக்கு ஒரு ஜதை வைரத் தோடுகளையோ, வைர வளையல் களையோ தந்து வழியனுப்புவது ராஜிவுடைய வழக்கம். பொதுவாக அப்பெண்களைச் சமாதானப்படுத்த, தூக்கி எறியப்படுவதால் உண்டாகும் வருத்தத்தை ஓரளவு போக்க அதுவே போதுமானதாக இருக்கும். கிடைத்தவரை லாபம் என்று நினைத்துக் கொண்டு அவள் போய் விடுவான்.

சில சமயங்களில் யாராவது ஒரு பெண் வாயை மூடிக் கொண்டு போகாமல் ஏதாவது உபத்திரவம் செய்தால் அவளை கழற்றி விடும் பொறுப்பினை சுரேஷிடம் ஒப்படைத்து விட்டால் பிரச்னை தீர்ந்து விடும். ராஜீவ் விவரங்களைக் கேட்டறிய மாட்டான். அதைப் பற்றிக் கவலையும் பட மாட்டான். தொந்தரவு கொடுக்கும் பெண்களைச் சரிக்கட்டிச் சமாளிக்க சுரேஷ் என்ன வழிமுறைகளை, என்ன தந்திரங்களைக் கையாண்டான் என்பதை யெல்லாம் ராஜீவ் தெரிந்துகொள்ள விரும்ப மாட்டான். தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்று கருதினான். ராஜீவைப் பொறுத்த வரையில் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இல்வளவு தான்: “இந்தப் பெண்ணு தகராறு பண்று இவளைக் கவனிச்சுக்கோ” என்று சுரேஷிடம் ஒரு முறை சொல்லி விட்டால் போதும். மறுபடியும் அந்தப் டெண் ராஜீவின் வம்புக்கே வராதபடி, மறுபடியும் அவளைப் பற்றி ராஜீல் எதுவுமே கேள்விப்படாதபடி சுரேஷ் அவரை அவ்வளவு பக்குவமாகக் கவனித்து விடுவான்.

வரவேற்பு காலத்தை மீறி, வேஸ்டாத விருந்தாளியாகப் படுக்கையில் படுத்திருந்த அழகியின் பின்னழகின்மீது ராஜீல் ஓங்கி ஒரு அறை கொடுத்தான்,

”ஆ…..”, திகைப்புடன் திடுக்கிட்டு அந்தப் பெண் விழித்துக் கொண்டான். “நிஜமாகவே வலிக்கிறது. இவ்வளவு பலமா அடிக்கணுமா?” அடிபட்ட இடத்தைத் தனது கையால் தேய்த்துக் கொண்டே சினுங்கினாள் அவள்.

ராஜீல் பதில் எதுவும் சொல்லாமல் அவள் பக்கம் தனது பார்வையைக் கூடத் திருப்பாமல் கட்டிலை விட்டு இறங்கினான். தரை முழுவதும் விரிக்கப்பட்டிருந்த நடிப் பால. மிருதுவான் கார்பெட் மீது நடந்து பாத்ரூமை நோக்கிச் சென்றான். பாத்ரூம் கதவைத் திறந்து. கதவு பிடியீன் மீது ஒரு கையை வைத்து, ஒரே ஒரு கணம் திரும்பி அவளைப் பார்த்தான். இன்னொரு கையின் கட்டை விரலால் வார்த்தைக்குத் தக்கபடி சைகை செய்து, ”கெட் அவுட்” என்றான், ரத்தினச் சுருக்கமாக.

“ராஜீவ்….!”

”ஐ ஷெட் கெட் அவுட்!”

“ப்ளீஸ் ராஜீவ், டோன்ட் பீ ஸோ மீன்….” என்று ஆரம்பித்தாள், மறுபடி யும் அதே சிணுங்குகின்ற குரலில்.

ராஜீவ் அவளை மேலும் பேச விடவில்லை. “என்னைப் பத்தி உனக்குத் தெரியும் இல்லை? அஞ்சே நிமிஷம். அவ்லளவுதான் உனக்கு டைம் கொடுப்பேன். நான் பாத்ருமிலிருந்து வெளியே வரும்போது மறுபடியும் உன்னை இங்கே பார்க்கக் கூடாது! அண்டர் ஸ்டாண்ட் நெள ஸ்க்ராம்!” அத்தோடு பாத்ரூம் உள்ளே மறைந்து கதவைத் தனக்குப் பின்னால் ஓங்கி அடித்து மூடிக் கொண்டான்.

மூடிய கதவைப் பார்த்து, அவள் முகத்தை நெளித்து அழகு காட்டினாள். அவள் உலகத்தை நன்றாகப் புரிந்து கொண்டவள். ராஜீவுக்குத் தன் மீதிருந்த மோகம் தீர்ந்து விட்டதன் அறிகுறிகள் தெரிவதாக அவளுக்குத் தோன்றியது. “ஹும்? இங்கே இவ்வளவு தான் போலிருக்கு. எல்லாம் முடிஞ்சு போச்சு, பரவாயில்லை! அப்படி ஒண்ணும் நான் ஏமாந்து போயிடலை. ஒரு வைர நெக்லஸ். ஒரு புது ஃபியட் கார், இரண்டையும் சாமர்த்தியமாக் கரந்துட்டேன். நாட் பேட் அட் ஆல்!”

ராஜீவைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும், அவனுடைய கவர்ச்சி வலையில் எத்தனை இளம் பெண் மான்கள் வழி தவறி சிக்கி விட்டன என்பதும் அவளுக்குத் தெரியும். மற்றவர்கள் எல்லாம் நாலைந்து வாரங்களோடு சரி. இவள் எப்படியோ பத்து வாரங்கள் வரை விடாப் பிடியாக ஒட்டிக் கொண்டு ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தி இருந்தாள். இதுவே அவளுடைய தனி அதிர்ஷ்டம் என்பதையும் உணர்ந்தாள்.

“எப்படியோ பத்து வாரங்கள் வரை வெற்றிகரமாகப் பற்றிக் கொண்டு இருந்து விட்டேனே! அப்படியானால் என் மீது அவருக்குக் கொஞ்சம் ஸ்பெஷல் ஆசை இருக்கும் என்றுதானே அர்த்தம்? இல்லை யென்றால் இந்நேரம் இன்னொருத்தியைப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டாரா? ஆனால் ராத்திரி பூராவும் இங்கேயே தூங்கிவிட்டேன் என்று இப்படிக் கோபப்படுகிறாரே! இரவு தங்கியதால் தானே காரியத்தைக் கெடுத்து விட்டேனோ? ஒருவேளை நான் அப்படிச் செய்யவில்லை என்றால், உறவு இன்னும் சில நாட்கள் நீடித்து இருக்குமோ என்னவோ? அவர் வெளியே வரும்வரை இருந்து பார்க்கலாமா? கொஞ்சம் தாஜா பண்ணி அவர் மனத்தை இரங்க வைக்க முடியுமா என்று பார்த்தால் என்ன?” – ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு. விஷப் பரீட்சை வேண்டாமென்ற முடிவுக்கு வந்தாள், ராஜீவுக்கு ஆத்திரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதை முன்பே சில சந்தர்ப்பங்களில் பார்த்திருந்தாள். அப்போது, அவனுடைய கோபத்துக்கு ஆளான அதிருஷ்டசாலிகள் வேறு யாரோ. அவனுடைய பயங்கரக் கோபத்துக்கு இப்போது அவள் பாத்திரமாக விரும்பவில்லை. அதைச் சமாளிக்கப் போதுமான தைரியமும் அவளுக்கு இல்லை. அவசரமாகத் தனது ஆடைகளை மாற்றிக் கொண்டு வெளியேறிவிட்டாள்.

ராஜீவ் மீண்டும் அறைக்குள்ளே நுழையும்போது, அந்தப் பெண்ணைக் காணவில்லை, ”அப்பாடா! பிழைத்தேன்” போல் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். அதிகாலையில் எழுத்தவுடன் முதலைக் கண்ணீரையும், சோகம் மிகுந்த பார்வையையும், ”அய்யோ! நாதா! உங்களையே நம்பியிருந்தேனே! என்னை ஏமாற்றிவிடாதீர்கள்! என்னைக் கைவிட்டு விடாதீர்கள்” என்றெல்லாம் நாடக பாணி வசனங்களையும் எங்கே சந்திக்க வேண்டி யிருக்குமோ என்று பயந்து கொண்டே குளியல் அறையை விட்டு வெளியே வந்த அவனுக்கு அந்தப் பெண் (இன்னும் அவள் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை) தொந்தரவு கொடுக்காமல் போய்விட்டது ‘பெரிய’ பளுவை இறக்கி விட்ட மாதிரி ஓர் உணர்வை ஏற்படுத்தியது. வழக்கம் போல் இனிக்கும் வார்த்தைகளைப் பேசி அவளைச் சமாதானப்படுத்தி அனுப்பும் அளவுக்கு இன்றைக்கு அவனுக்குப் பொறுமை இல்லை. தலைவலி பிராணனையே வாங்கிவிடும் போலிருந்தது, தொண தொண வென்று அவள் ஏதாவது வாதாடிப் பேசியிருந்தால், முதலில் கைக்கு எட்டிய பொருளைத் தூக்கி அவள் மீது வீசி எறிந்திருப்பான்.

காப்பியும் காலை தினசரிகளும் தயாராக மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. மெதுவாகக் காப்பியை உறிஞ்சிக் கொண்டே ராஜீவ் மடமடவென்று முக்கிய தலைப்புச் செய்திகளைப் படித்தான்.

பல விஷயங்களில் திரை உலகில் ராஜீவ் ஒரு வித்தியாசமான மனிதனாக இருந்தான். மற்ற எத்தனையோ நடிகர்களைப் போல் இல்லாமல் ராஜீவ் பெரிய படிப்புப் படித்தவன், எம்.பி. ஏ. பட்டம் வாங்கியவன், அறிவு சம்பந்தமான விஷயங்களில் அதிக ஈடுபாடு உள்ளவன். உலகத்தில் என்ன நடக்கிறது. உலகஅரசியலில் புதிதாக என்ன திருப்பங்கள் எற்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமுள்ளவன், அதே சமயத்தில் சிற்றின்பங்களிலும் சுக போகங்களிலும் அதிக சபலம் உள்ளவள்.

ராஜீவ் பல முரண்பாடான குணாதிசயங்களை கொண்டவன், சொந்த இன்பங்களுக்காகவும், ஆசை நாயகிகளுக்காகவும் பணத்தைத் தண்ணீர் போல இறைப்பான். அதே நேரத்தில், அதே தாராள அளவில் எத்தனை எத்தனையோ நல்ல காரியங்களுக்கும், அனாதை விடுதிகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் வாரி வழங்கித் தான தர்மம் செய்வான்.

அவனுக்கு மனைவி, மக்கள். குடும்பம் என்று யாரும் கிடையாது. மனம் போன போக்கில் தினமும் ஒரு புதிய மலரை நாடுவான். கசக்கிப் பிழிவான். மறு நாள் வேறொன்றைத் தேடுவாள். அப்படி இருந்தும் தனக்குக் கீழ் வேலை செய்பவர்கள் மட்டும் நடத்தையில் மிகவும் கண்ணியமானவர்களாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான், அப்படிப்பட்டவர்களைத் தான் தன்னிடம் வேலைக்குச் சேர்த்துக் கொள்வான்.

ராஜீல் வெறும் நடிகன் மட்டுமல்ல. அவன் திரைப்படம் விநியோகம் செய்யும் ஒரு கம்பெனிக்கு முதலாளி, பழங்களை டப்பாக்களில் அடைக்கும் தொழிற்சாலை ஒன்றுக்கு உரிமையாளன். ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஓன்றுக்கும் சொத்தக்காரன். இத்துடன் பல முக்கிய தொழில் நிறுவனங்களில் பிரதம பங்குதாரனாகவும் இருந்தான். ஒரு படத்துக்கு ராஜீவ் வாங்கும்தொகை ஏழு லட்சம். இதுவரை எந்தத் தமிழ் நடிகனும் அத்தத் தொகையை எட்டியிருக்கவில்லை, வருவுத் துக்குக் குறைந்தபட்சம் பத்துப் படங்களை யாவது முடிப்பான், நடிப்புத் தொழில் மூலம் மட்டும் ராஜீவுக்கு ஆண்டுக்கு எழுபது லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைக்கும். விநியோகக் கம்பெனி, தொழிற்சாலைகள் மூலம் அதை விட அதிகமான வருமானம் வந்துகொண்டிருந்தது. சுருக்கமாகச் சொல்லப் போனால் பணம் ராஜீவுக்கு ஒரு பிரச்னையாக இருக்க வில்லை. தனது ஆசை நாயகிகளிடத்தில் இதயமே இல்லாதவன் போல் நடந்து கொள்வான். அதே சமயத்தில் தனது வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரர்களிடத்திலும், தனது தொழிற்சாலைகளில் உழைக்கும் ஊழியர்களிடத்திலும் ஒரு கருணா மூர்த்தியைப் போல் உண்மையான பாசத்துடன், அக்கறை மிக்க தகப்பனைப் போல் நடந்து கொள்வான். வியக்கத்தக்க முரண்பாடுகள் கொண்ட சுபாவம் படைத்தவன் தான் ராஜீவ்.

தினசரிகளை ஒரு பக்கம் போட்டுவிட்டு, எழுந்து நிலைக்கண்ணாடியின் முன்னால் போய் நின்றான். படுக்கை அறையின் ஒரு முழுச் சுவரை, மேலிருந்து தரைவரை, அந்தக் கண்ணாடியே சுவாதீனப்படுத்திக் கொண்டிருந்தது.

ராஜீவுக்கு வயது 45. ஆனால், அந்த விவரம் தெரியாதவர்கள் அவனைப் பார்த்தால், அவனுக்கு முப்பது வயதுக்கு மேல் ஒரு நாள் கூட ஆகியிருக்கும் என்று நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு முகத்தையும், உடம்பையும் கச்சிதமாகப் பாதுகாத்து வைத்திருந்தான். உணவில் கட்டுப்பாடு, கடுமையான தேகப்பயிற்சி – இந்த வழக்கங்களைத் தவறாமல் பின்பற்றி வந்திருந்தான்.

கண்ணடி பிரதிபலித்த அழகிய முகத்தில் ஒரு சுருக்கம்கூட இல்லை. கண்ணுக்கு அடியில் மட்டும் லேசாகக் குழி விழுந்தாற் போல் தெரிந்தது. கடந்த இரவின் மிகையான அலட்டலின் விளைவு. “டேய் ராஜீவ். ஜாக்கிரதை! இந்த முகம். இப்படியே இருக்கணும்னா, இன்னும் ஒரு வாரத்துக்காவது எந்தப் பெண்ணைப் பத்தியும் நினைச்சுக்கூடப் பார்க்காதே!” என்று தன்னைத் தானே எச்சரிக்கை செய்துகொண்டான்.

தனது உருவத்தைக் கண்ணாடியில் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டான். ஆறடி உயரம். உயரத்துக்கு ஏற்ற உடல் அமைப்பு; வாட்டசாட்டமான தோள்கள்; நீரலைகளைப் போல் உருளும் பைஸப்ஸ்: அகன்ற மார்பு நிறைய சுருட்டையான கருத்த முடி; இஸ்திரி செய்தது போல் சப்பையான வயிறு; தேக்கு மரங்கள் போன்ற கெட்டியான துடைகளும், கால்களும்.

“தலைவலி தாங்க முடியவில்லையே! இன்னிக்கு எக்ஸர்சைஸ் பண்ணலாமா விட்டு விடலாமா?” என்று ஒரு வினாடி யோசித்தான். பின்பு விட வேண்டாம். செய்தே முடித்து விடலாம் என்று நினைத்தான்.

குனிந்து ஒன் – டூ – த்ரீ – ஃபோர்! ஒன் டூ – த்ரீ – ஃபோர்! என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டே கசரத்து செய்ய ஆரம்பித்தான். நாற்பதாவது பஸ்கி எடுத்து முடிப்பதற்குள் மூடப்படாத அவனது முதுகும் தோள்களும் வியர்வையால் பளபளத்தன. டர்கிஷ் டவல் ஒன்றினால் வியர்வையைத் துடைத்துக் கொண்டு, பதினைத்து நிமிஷங்களுக்கு வியர்வை நிற்கும்வரை காத்திருந்து, பின்பு குளிக்கச் சென்றான்.

குளித்த பிறகு இடுப்பைச் சுற்றி நீல சிறப் பட்டு லுங்கியைக் கட்டிக்கொண்டான். தோள்களைச் சுற்றி ஒரு பெரிய பாத் டலலைப் போர்த்திக் கொண்டு வீட்டி லேயே கட்டப்பட்டிருந்த தனி மேக்-அப் அறைக்குச் சென்றான்.

அந்த மேக்-அப் அறை விசேஷமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியின் மேற்புறம் அதிக வெளிச்சம் தரக் கூடிய பல்புகள் பொருத்தப்பட்டு இருந்தன. அறையின் சுவர்களுக்குள்ளேயே பில்ட் இன் வார்ட் ரோப்கள் அமைக்கப்பட்டிருந்தன- தன்னுடைய பல்வேறு படங்களின் உடைகளை வைப்பதற்காக, புத்தி நுட்பமுள்ள முறையில் அறையில் ஆங்காங்கே பல முழு நீள நிலைக்கண்ணாடிகள் மாட்டப்பட்டிருந்தன. எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமாஏதும் ராஜீவ் தன்னைப் பாரித்துக் கொள்ள வசதியாக.

ராஜீவுடைய மேக்-அப் நிபுணன் மாணிக்கம் தயாராக இருந்தான். ராஜீவ் அதிக மேக்-அப் போட மாட்டான், கொஞ்சம் பேன் கேக் அவ்வளவுதான். பத்தே நிமிடங்களில் மேக்-அப் முடிந்து விட்டது. மாணிக்கம் ஒரு விக்கை எடுத்து ராஜீவுக்குக் காண்பித்தான், ”விக்கா? இது எதுக்கு?” என்று ராஜீவ் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஒரு சேஞ்ச் இருக்கட்டுமேன்னு நினைச்சேன் சார்,” தமிழ்த் திரை உலகத்தின் வழக்கப்படி எல்லோரும் எல்லோரையும் ”அண்ணே’ போட்டுக் கூப்பிடுவது ராஜீவுக்குப் பிடிக்காத சமாசாரம். அவனை எல்லோரும் ‘சார்’ என்றே அழைக்க வேண்டும் என்று பழக்கப்படுத்தி யிருந்தான்.

“எல்லாப் படங்களிலேயும் உங்க சொந்த தலை முடியையே உபயோகப்படுத்தி யிருக்கீங்க”

“இனிமேலும் தொடர்த்து அப்படியே தான் செய்யப் போறேன். நீ கொண்டுவர விக்கை யெல்லாம் பயன்படுத்தியிருந்தா, இந்நேரம் என் தலை வழுக்கையாகி இருக்கும்” என்றான் ராஜீல், சிரித்துக்கொண்டே. வாஸ்தவம்தான், தேவைப் பட்டாலும் தேவை யில்லா விட்டாலும் பெரும்பாலான தென்னிந்திய நடிகர்கள் டோப்பாக்களை வழக்கமாக உப்யோகப்படுத்தி வந்தார்கள். அதன் விளைவாக அவர்களில் பலரின் தலை அகாலமாக வழுக்கை ஆகிவிட்டிருந்தது.

ராஜீல் இதற்கு விதி விலக்கு. அவன் தலை முடி அடர்த்தியாக நல்ல கறுப்பு நிறத்தில் இருந்தது. இப்பொழுதுதான் காதோரத்தில் இலேசாக நரை தெரிய ஆரம்பித்திருந்தது. கறுப்பு ஐ-ப்ரோ பென்சிலால் கொஞ்சம் டச்-அப் செய்தவுடன் நரை மறைந்துவிட்டது.

”அந்த விக் வேண்டாம்.”

“சரி, சார்.”

“காசி!”

காஸ்டியூமர் காசி அன்று ராஜீவ் அணிய வேண்டிய வெள்ளை நிற சூட்டைத் தயாராகப் பிடித்துக் கொண்டு நின்றான், பின்னால் இரண்டு உதவியாளர்கள் நின்றார்கள். ஒருவன் கையில் ராஜீவ் அணிய வேண்டிய ஷூக்கள். இன்னொருவன் கையில் ராஜீவுடைய பெல்ட், மோதிரங்கள், கைக் கடிகாரம். ஒருவன் டிரௌசரை அணிய உதவி செய்ய, இன்னொருவன் கோட்டை மாட்டி விட மூன்றாமவன் பூட் லேஸ்களைக் கட்டி விட.. கண் இமைக்கும் நேரத்தில் ராஜீவ் அன்றைய படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டான்.

வெள்ளை வெளேர் என்று பளிச்சிட்ட கோட்டின் மீது இல்லாத தூசு புள்ளிகளைத் தட்டி விட்டுக் கொண்டு காசி ராஜீவைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டான். ஏற்கனவே நன்றாகப் படிந்து வாரப்பட்ட ராஜீவின் தலையை மாணிக்கம் மீண்டும் மீண்டும் சீப்பால் வருடி விட்டான். ராஜீவ் தனது கையை நீட்டினான். அவனுடைய பர்ஸனல் அஸிஸ்டெண்ட் முத்து அவன் கையில் ஒரு பாட்டில் ‘நீநா ரிஸ்ஸி’ சென்டைக் கொடுத்தான். விலை உயர்ந்த அந்த ஃபிரெஞ்சு செண்டை ராஜீவ் தன் மீது தாராளமாக ஸ்ப்ரே செய்துகொண்டான். தன்னுடைய ரோலக்ஸ் சப்மரீனர் வாட்சைப் பார்த்தான். மணி 8.30 -ஆகி விட்டிருந்தது.

“டிஃபன் சாப்பிடறீங்களா சார்?” என்று முத்து விசாரித்தான்.

“வேண்டாம்.இப்போ டைம் இல்லை.”

மேக்-அப் அறையை விட்டு வெளியேறப் போகும்போது சுரேஷ் திடீரென்று உள்ளே வந்தான்.

“சார்…”

“என்ன?”

“உங்களைப் பார்க்கச் சில கல்லூரி மாணவிகள் வந்திருக்காங்க சார். உங்களுக்காக அரை மணி நேரமா கீழே காத்துக்கிட்டு இருக்காங்க” என்று சுரேஷ் சொன்னான்.

அத்தியாயம்-2

Sigh no more, ladies, sigh no more
Men were deceivers ever,
One foot in Sea and one on shore
To one thing constant never
-Shakespeare 1564-1616 in “Much Ado About Nothing.”

ராஜீவ் முகத்தில் சலிப்பும் கோபமும் தோன்றியது. ”இப்பவே லேட் ஆயிடுச்சு சுரேஷ், எதுக்காக அவங்களை உள்ளே விட்டே? ஏதாவது சொல்லி அவங்களை அனுப்பியிருக்கக் கூடாது? இதெல்லாம் நான் உனக்குச் சொல்லியா தரணும்?”

மன்னிப்புக் கோரும் வகையில் சுரேஷ் அவனைப் பார்த்தான்,

“ரொம்ப சாரி சார். எப்படியாவது அவங்களைத் தட்டிக் கழிச்சு அனுப்பிடணும்னு எவ்வளவோ ட்ரை பண்ணேன் சார், என்னை நம்புங்க, ஆனா இந்தக் காலத்து காலேஜ் பெண்கள் – அப்பப்பா! அவங்க கிட்டே ஒண்ணும் நடக்காது சார்! உங்களைப் பார்க்காமே போகவே மாட்டேனுட்டாங்க! ஒரே ரகளை, ஒரே தகராறு. என்னையே தள்ளிக்கிட்டு உள்ளே வந்துட்டாங்க. அவங்க செய்யற அட்டகாசத்தைப் பார்த்துக் கேட்கிட்டே பெரிய கூட்டமே சேர ஆரம்பிச்சுட்டது. அதுக்கு மேலே உள்ளே விடலைன்னா ரொம்ப அசிங்கமாப் போயிருக்கும் சார்..”

“உம், உம் – சரி சரி” ராஜீவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. “காலையிலிருந்து சரியான கழுத்தறுப்பு: ஏற்கனவே நான் லேட், இப்ப இது வேறையா? சரி போற வழியிலே பார்த்துப் பேசித் தொலைச்சிக்கிறேன், தலையெழுத்து! எங்கே உட்கார வச்சிருக்கே?”

“ட்ராயிங் ரூமிலே சார். எல்லாருக்கும் காப்பியும் கொடுக்கச் சொன்னேன்,”

“குட்! நல்ல காரியம் செய்தாய்!” என்று சொல்கின்ற வகையில் ராஜீல் சுரேஷைத் தட்டிக் கொடுத்தான். இந்த மாதிரி விஷயங்களை யெல்லாம் சுரேஷக்குச் சொல்லித் தர வேண்டுமா என்ன? அவன்தான் பப்ளிக் ரிலேஷன்ஸ் விஷயத்தில் புலி ஆயிற்றே! வந்திருக்கும் மாணவிகளை ட்ராயிங் ரூமில் அமரச் செய்வதும் காப்பி கொடுத்து உபசரிப்பதும் சிறு விவரங்கள் போலத் தோன்றலாம். மிக மிக சாதாரண விஷயங்கள். ஆனால் இந்தச் சிறிய விஷயங்களை மிக நுணுக்கமாகக் கவனித்து வந்ததால்தான் ராஜீவுக்குப் பொதுமக்களிடையே அத்தனை பெரிய இமேஜ் இருந்தது. சிறு துளிகள் சேர்ந்தால்தான் பெரும் வெள்ளமாகும். பணக்காரனே, ஏழையோ: படித்தவனே படிக்காதவனே; வயதில் பெரியவர்களோ, சிறியவர்களோ; அனைவரிடமும் இனிமையாகப் பழகும் விதத்திலும், அவர்களை அணுகும் முறையின் மூலமாகவும், ராஜீவ் நான் ஒரு ‘பர்ஃபக்ட் ஜென்டில்மேன்” என்று பெயர் எடுத்திருந்தான். ராஜீவ் குமார் பண்புள்ளவன், மரியாதை தெரிந்தவன்.வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை அன்புடன் உபசரிப்பவன், வாரி வழங்கும் வள்ளல் என்றெல்லாம் பொது ஜனங்கள் மத்தியில் ராஜீவைப் பற்றி ஒரு மிக உயர்வான அபிப்பிராயம் நிலவியது. அந்த இமேஜ் கெடாமல் இருக்க, அதை மேன்மேலும் வளர்க்க, ராஜீவும் அவனைச் சுற்றி இருந்தவர்களும் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

ராஜில் மடமடவென்று மாடிப் படிகளில் இறங்கிக் கீழே சென்றான். சாதாரண மாடிப் படிகள் இல்லை. பளிங்கினால் செய்யப்பட்டவை. படிகளுக்கு ஆதரவாக இரும்பில் அழகிய வேலைப்பாடமைந்த சிறு தூண்களோடு கூடிய கைப்பிடிச் சுவர், பளபளக்கும் தேக்கு மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கைப்பிடிச் சுவர் மீது கையே வைக்காமல் ராஜீவ் கிடுகிடுவென்று வாலிப வேகத்தோடு படிகளில் இறங்கி, ட்ராயிங் ரூமுக்கு வெளியே ஒரு விநாடி நின்றான்.

அந்த ஒரு விநாடிக்குள் முகத்தின் மீதிருந்த சலிப்பைத் துடைத்துவிட்டு, அதற்குப் பதிலாக வசீகரிக்கும் புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டான். ராஜீவ் ட்ராயிங் ரூமுக்குள் பிரவேசிக்கவே. அங்கே வெவ்வேறு சோஃபாக்களில் அமர்ந்திருந்த ஒன்பது பெண்களும் எழுந்து நின்று வணக்கம் கூறினார்கள். எல்லோரையும் அன்பாக ராஜீவ் வரவேற்றன்.

“ரூட் மார்னிங், குட் மார்னிங்! ஏன் நிக்கிறீங்க? ப்ளீஸ் ஸிட் டவுன்!” என்றான் மிகையான புன்னகையோடு. அவன் சிரிப்பையும். அவர்களை வரவேற்கும் தோரணையையும் கண்டு, வந்திருந்த கல்லூரி மாணவியர் அனைவருமே மயங்கிச் சொக்கி விட்டனர். அவர்கள் வந்திருப்பதை அறிந்து, ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாகத்தான், மாடியில் அவன் எப்படிச் சலித்துக் கொண்டான் என்பதை அப்பெண்களில் ஒருவர்கூட யூகித்துப் பார்த்திருக்க முடியாது. ஏதோ வெகு நாட்களாகக் காணாமல் போன நண்பர்களை மீண்டும் காணும்போது எவ்வளவு குதூகலம் உள்ளத்தில் உண்டாகுமோ. இந்த மாணவியரைக் கண்டதும் அந்த அளவு மகிழ்ச்சி தனக்கு உண்டானது போல் நடித்தான் ராஜீவ். ஆளுக்குத் தகுந்த மாதிரி பேசுவதும், சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்வதும், ராஜீவுக்குத்தான் கைவந்த கலையாயிற்றே? யாரிடம் என்ன கூற வேண்டும்? எப்படிக் கூற வேண்டும். எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகள்கூட அவனிடம் சமயோஜித புத்தியில் பாடம் கற்றுக் கொள்ளலாம். அந்த அளவுக்குப் புத்தி கூர்மையும் வாக்கு சாதுரியமும் கொண்டவன் அவன்.

“வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?” என்று ராஜீவ் கேட்டான். வந்திருந்த ஒன்பது பெண்களில் யாருக்கும் உடனே பேச்சு வர வில்லை. அவனையே பார்த்துக் கொண்டு வாயைப் பிளந்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.

டிராயிங் ரூமுக்குள் காலடி எடுத்து வைத்ததும்.அந்த ஒன்பது பெண்களுக்குமே நாவைக் கட்டிப் போட்டது போல் ஆகிவிட்டிருந்தது. அந்த அறைக்கு “டிராயிங் ரும்” என்று பெயர் பொருந்தாது. பழைய காலத்து மகாரஜா அரண்மனையின் “தர்பார் ஹால்” என்றால் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்குக் கம்பீரமாகவும், படாடோபமாகவும் இருந்தது.

கூரையின் நடுவிலிருந்து ஒரு பிரும்மாண்டமான அலங்காரக்கண்ணாடி லஸ்தர் விளக்கு தொங்கிற்று. அதனைச் சுற்றி நான்கு சிறிய லஸ்தர்கள் தொங்கின. இவை யெல்லாம் ஃபிரான்ஸி லிருந்து வரவழைக்கப்பட்டவை. தங்க ஃபிரேம்கள் மாட்டப்பட்ட பெரிய பெரிய ஓவியங்கள் சுவர்களை அலங்கரித்தன. தரை முழுவதும் பெர்ஷியன் கார்பெட்கள் விரிக்கப் பட்டிருந்தன. ஹாலில் இருந்த சோஃபாக்கள் அனைத்துமே தங்க, பழுப்பு நிறத்தில் ப்ரொசேட் துணியால் மூடப் பட்டிருந்தன. மேல் சுவரிலிருந்து தரை வரையில் இருந்த கண்ணாடி ஜன்னல்களுக்கு முன், அதே தங்க மஞ்சள் நிறத்தில் லேஸ் துணியில் திரைகள் தொங்கில. ஆங்காங்கே ரோஸ்வுட்டில் பல சிறிய காஃபி மேஜைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் மீதும் கிரிஸ்டல் கண்ணாடியில் அழகான் வேலைப்பாடுள்ள மேஜை விளக்கு களோ ஆஷ்ட்ரேக்களோ வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டவுடன் ஒன்பது பெண்களும் ஸ்தம்பித்து நின்று விட்டார்கள். அவர்கள் எல்லோருமே ஓரளவு வசதியுள்ள குடும்பங்களைச் சேர்த்த பெண்கள்தான் என்றாலும் இந்த அளவு டாம்பீகமான மாளிகையை அவர்கள் இதுவரை சினிமாப்படங்களில் தான் பார்த்திருந்தார்கள். நிஜ வாழ்க்கையிலும் பிரமிப்பூட்டும் சுகபோகங்களுடன் இப்படியும் சிலர் இந்தக் காலத்திலும் வாழ்த்து வருகிறார்கள் என்று ராஜீவுடைய மாளிகைக்குள் புகும்வரை அவர்கள் எண்ணிக்கூடப் பார்த்தது கிடையாது.

அப்பெண்கள் எல்லோருமே பதினேழு, பதினெட்டு வயதுக்குள் இருப்பவர்கள். உலகத்தைப் பற்றி இன்னும் புரியாத வயது. சாதாரணமாக இளமை வேகத்தில் வளவளவென்று பேசக் கூடியவர்கள். இந்தக் காலத்துக் கல்லூரி மாணவிகளுக்கே இயல்பான துணிச்சலும், வாய்த்துடுக்கும் நிறைய பெற்றிருப்பவர்கள்.

கேட்டில் கூர்க்காக்களையும், சுரேஷையும் மடக்கி திக்குமுக்காட வைத்து, அவர்களையே ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இளமை ததும்பும் ஆவவோடு உள்ளே நுழைந்த பெண்கள், அந்த ஹாலுக்குள் காலடி வைத்ததும், வியப்பில் வாய் அடைத்துப் போய் மௌனமாகி விட்டார்கள்.

நிசப்தமாக, பேச்சு மூச்சில்லாமல் உட்கார்ந்த அவர்களைப் பார்க்கும்போது “இந்தப் பூனைக் குட்டிகளும் பால் குடிக்குமா?” என்று வியக்கும்படி காட்சி அளித்தார்கள்.

வெள்ளைச் சீருடை அணிந்த இரண்டு வேலைக்காரர்கள் வெள்ளி டிரேர்களில் விலை உயர்ந்த வெளி நாட்டுப் பீங்கான் கப்-சாஸர்களில் காப்பி கொண்டு வந்தபோது, அப்பெண்கள் இன்னும் அதிகமாக அசந்து போய்விட்டார்கள். காப்பியைக் குடித்து விட்டு பேசலாமோ, பேசக் கூடாதோ. பேசினால் தப்பாகுமோ என்று பயந்தவாறே சப்த நாடியும் அடங்கிப் போன மாதிரி உட்கார்ந்திருந்தார்கள்.

ராஜீவ் உள்ளே வந்ததும் எல்லோரும். சடாரென்று துள்ளி எழுந்து அட்டென்ஷனில் நின்றார்கள். ராஜிவ் அவர்களை அன்புடன் வரவேற்றதும், உட்காரச் சொன்னதும் அவர்களுக்குக் கொஞ்சம் தெம்பூட்டுவதாக இருந்தாலும். இன்னும் பழைய உற்சாகமும் வேகமும் முழுமையாகத் திரும்பியிருக்க வில்லை.

“வெல் வாட் கேன் ஐ டூ ஃபார் யூ” என்று ராஜீவ் மறுபடியும் கேட்டான், உள்ளுக்குள் பொறுமையை இழந்து புகைந்து கொண்டிருந்தான். ‘காலையில் ஷூட்டிங்குக்குப் புறப்படும்போது நல்ல கழுத்தறுப்பு இது’ என்று நினைத்தாலும் வெளியே மட்டும் அந்தப் புன்சிரிப்பு ஒட்டி வைத்தாற்போல் அவன் முகத்தை விட்டு அகலவே இல்லை.

மற்ற பெண்கள் எல்லோரும் இன்னும் தங்கள் நாவைக் காக்கை கொத்திக்கொண்டு போய்விட்டதா, குருவி திருடிக் கொண்டு பறந்துவிட்டதா என்று தேடிக் கொண்டிருந்த வேலையில் உஷா தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். ‘சே! எல்லோரும் பேசாமல் இப்படியே மக்குகள் மாதிரி உட்கார்ந்திருந்தால் அவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்’ என்று நினைத்து, துணிச்சலோடு முந்திக் கொண்டாள்.

”சார், நாங்க எல்லாரும் கல்லூரி மாணவிகள். இன்னும் இரண்டு வாரம் கழிச்சு எங்க கல்லூரி ஆண்டு விழாவைக் கொண்டாடப் போறோம். ஸ்டூடண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து நாடகம் நடத்தப் போறோம். அந்த நிகழ்ச்சிக்கு நீங்கதான் தலைமை வகிக்கணும்கறது எங்க கல்லூரி மாணவியர் எல்லாருடைய ஆசை. அதைப் பத்தி உங்க கிட்டே கேக்கறதுக்காகத்தான் வந்திருக்கோம்” என்றாள்.

ராஜீவ் உஷாவைப் பார்த்தான், அதுவரை அவன் அங்கே இருந்த பெண்கள் ஒருவரையும் உற்றுக் கவனிக்கவில்லை. சீக்கிரமாக இரண்டொரு வார்த்தைகளைப் பேசிவிட்டு ஹூட்டிங்குக்குப் புறப்பட வேண்டுமே என்பதிலேயே அவன் சிந்தனை இருந்ததால், அவர்களில் யாருடைய முகத்தையும் அவன் சரியாகப் பார்க்கவில்லை.

உஷா பேசியதும், தன் பார்வையை அவள் பக்கம் திருப்பினான். உஷா உடனேயே அவன் கவனத்தை முழுமையாக ஈர்த்தாள்.

– தொடரும்

– உறவின் கைதிகள், கல்கி வார இதழில் (22-06-1980 – 26-10-1980) வெளியான தொடர்கதை.


கதை கதையாம் காரணமாம்! – ஜெயல்லிதா

எனக்கு வயது பன்னிரண்டு இருக்கும். என் தாயார் எங்களை யெல்லாம் மாமல்லபுரத்துக்கு ‘பிக்-நிக்’ அழைத்துக்கொண்டு போனார். என்னுடன் என் பள்ளித் தோழி நளினியும் வந்திருந்தாள்.

மாமல்லபுரத்தில் இப்போது இருப்பது போல் அப்பொழுது பலவிதமான ஓட்டல்கள் கிடையாது. ஒரே பெரிய கெஸ்ட் ஹவுஸ் தான் இருந்தது. கீழ்ப் பகுதியை என் தாயார் ‘புக்’ செய்திருந்தார், மாடியில் வேறு யாரோ நிறையப் பேர் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

மதிய உணவுக்குப் பின் நளினியும் கானும் கெஸ்ட் ஹவுஸ் முன்னாலேயே இருந்த கடற்கரைக்குச் சென்றோம். அங்கே மணலில் உருண்டு, புரண்டு, கிளிஞ்சல்களைப் பொறுக்கி எடுத்து, உரக்கக் கத்தி, சிரித்து, லூட்டி அடித்துக் கொண்டிருந்தோம்.

“ஏய் பாப்பா!” திடீரென்று ஒரு கனத்த ஆண் குரல் கூப்பிடுவது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கெஸ்ட் ஹவுஸ் மாடி பால்கனியில் சிவாஜி கணேசன் நின்று கொண்டிருந்தார். அவர்தான் என்னைக் கூப்பிட்டிருந்தார்.

சில மாதங்கள் முன்பாகத்தான் எனது பரத நாட்டிய அரங்கேற்றத்துச்குத் தலைமை வகித்திருந்தார். எனவே என்னை உடனே அடையாளம் கண்டு கொண்டார்.

“நீயும் உன் ஃபிரெண்டும் இங்கே வறீங்களா?” என்று அழைத்தார் சிவாஜி.

”ஓ! வறோம்” என்று நானும் என் தோழியும் மேலே மாடிக்குச் சென்றோம். நன்றாக நினைவிருக்கிறது. அங்கே சிவாஜயைத் தவிர மறைந்த டைரக்டர் பீம் சிங், இன்னும் ஏராளமானவர்கள் இருந்தார்கள். எல்லாரும் கதை டிஸ்கஷனுக்காக வந்திருந்தார்கள்.

சில நிமிஷங்கள் என் படிப்பைப் பற்றியும் நாட்டியப் பயிற்சியைப் பற்றியும் என் தாயார் நலமா என்றும் சிவாஜி என்னிடம் விசாரித்தார். பிறகு மற்றவர்களுடன் கதை டிஸ்கஷனில் மும்முரமாக இறங்கி விட்டார். அவர்கள் பேசுவதை ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தோம். அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த கதையில் வரும் ஒரு பெண்ணின் பெயரும் நளினி.

சுமார் ஓராண்டு கழித்து, ”பாலும் பழமும்” படம் வெளிவந்ததும், அதைப் பார்க்க சாந்தி தியேட்டருக்குப் போயிருந்தேன். அப்பொழுதுதான் சட்டென்று புரிந்தது. அன்றைக்கு மாமல்லபுரத்தில் நான் உட்கார்ந்து கேட்ட கதை டிஸ்கஷன், இந்தப் படத்தின் கதைதான் என்று!

அதுவரையில் சினிமாப் படம் என்றால் ஏதோ வேடிக்கையான பொழுதுபோக்கு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பது ஏற்கனவே எனக்குத் தெரியும். என் தாயார் நடிகை ஆனதால் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருந்தேன். ஆனால், ஒரு படத்தின் படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன் எவ்வளவு வேலை செய்ய வேண்டியது இருக்கிறது என்பது அன்றுதான் ஓரளவுக்கு எனக்குப் புரிந்தது.

படம் பிடிப்பது என்பது படத் தயாரிப்பின் ஓர் அம்சமே. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன், சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்; வீட்டுக்குப் பிளான் போட வேண்டும். பலமான அஸ்திவாரம் போட வேண்டும். திரைப் படத்தில் அஸ்திவாரமே கதைதான் – பிறகு திரைக்கதை, வசனம், இவையே படத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்கள்.

திறமைசாலிகளான இயக்குனர்கள் பெரிய கதை ஒன்றும் இல்லாவிட்டாலும். அவர்களுடைய தனிப்பட்ட ட்ரீட்மெண்ட் மூலம் படத்தைச் சிறப்பாக, ரசிக்கும்படி யாக அமைத்து விடுவார்கள். ஆனால், எங்கோ நூற்றில் ஒரு படம்தான் அப்படி அமையும்.

நல்ல சிறந்த கதை கிடைத்தும், குரங்கு கையில் பூமாலை கிடைத்த கதையாக அதை உருத் தெரியாமல் குட்டிச்சுவர் ஆக்கிய இயக்குனர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஒரு தயாரிப்பாளர் தம் படத்தில் நடிக்கும்படி சில ஆண்டுகளுக்கு முன் என்னைக் கேட்டார். ஒரு பிரபல டைரக்டர் பெயரைச் சொல்லி அவர்தான் டைரக்ட் செய்யப் போவதாக என்னிடம் கூறினார். அதனால் ஒப்புக் கொண்டேன். சில நாட்கள் கழித்துத் தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட, அந்த டைரக்டர் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

தயாரிப்பாளர் என்னிடம் என்ன செய்யலாம் என்று கேட்டார். படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எப்படியும் அதில் நடிக்க விரும்பினேன். வேறொரு நல்ல டைரக்டரை ஒப்பந்தம் செய்வது தானே என்றேன். சில நாட்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் என்னிடம் மூன்று நான்கு பிரபல டைரக்டர்களுடைய பெயர்களைச் சொல்லி, அவர்கள் எல்லோரையும் கேட்டு விட்ட தாகவும். ஏதோ காரணங்களினால் அவர்களில் ஒருவருடனும் சரிப்பட்டு வரவில்லை என்றும் கூறினார். அவர் சொன்னதை நம்பி விட்டேன்.

”இதை நானே டைரக்ட் செய்கிறேனே ” என்றார் தயாரிப்பாளர். இவர் டைரக்ட் செய்தால் எப்படி இருக்கும்? இவருக்கு டைரக்ஷனில் அனுபவம் ஏது, என்று முதவில் தயங்கினேன். “அனுபவ மிக்க கேமராமேனை ஒப்பந்தம் செய்கிறேன். எல்லாம் சரியா வந்திடும். தயங்காமல் சம்மதியுங்கள்” என்று வற்புறுத்தினார் தயாரிப்பாளர், நானும். அந்த வேடத்தின் மீதிருந்த ஆசையால் ஒப்புக் கொண்டேன். “கதை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் சுமாராக எடுத்தால் கூட கதை படத்தைக் காப்பாற்றி விடும்” என்ற மன நம்பிக்கையில் ஒப்புதல் தெரிவித்தேன்.

படப்பிடிப்பு ஆரம்பமாயிற்று. ஆரம்பக் காட்சிகள் நன்றாகவே அமைந்தன. “கதை, வசனம், டைரக்ஷன்” என்று தயாரிப்பாளர் தம் பெயரையே விளம்பரங்களில் போட்டுக் கொண்டாலும், உண்ளமயாகப் படத்தை இயக்கி, ஆலோசனைகள் கூறி, எல்லாவற்றையும் செய்தது ஓர் அனுபவம் வாய்ந்த எடிட்டர்தான். அவர் உண்மையிலேயே திறமைசாலி. ஆனால் வாயில்லாப் பச்சி, மிக மிக சாது. டைரக்ட் செய்வதும், ஷாட்களைப் பிரிப்பதும், கேமரா கோணங்களைத் தேர்ந்தெடுப்பதும் அவர்தான். தயாரிப்பாளர் வெறுமனே அவர் பக்கத்தில் நின்று கொண்டு எப்போது “ஸ்டார்ட்”, “கட்” என்று சொல்ல வேண்டும் என்று கூடத் தெரியாமல் விழிப்பார்.

இது என்ன அநியாயம் என்று நினைத்தேன். சரி, சம்பந்தப்பட்ட எடிட்டரே வாயைத் திறக்காதபோது நான் ஏன் தலையிட வேண்டும் என்று இருந்து விட்டேன். படம் ஒழுங்காக வந்தால் சரி என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஏழாயிரம் அடி வரை வளர்ந்திருந்தது. என்னைத் தவிர அதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் யாருக்குமே அந்தத் தயாரிப்பாளர் ஒழுங்காகப் பணம் கொடுக்கவில்லை. படம் பாதிக்கு மேல் வளர்ந்துவிட்ட நிலையில் பணம் கொடுத்தால் ஒழிய மேற்கொண்டு நடிக்க வரமாட்டோம் என்று அவர்கள் எல்லோரும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

இந்தத் தயாரிப்பாளருக்கு ஒரு யோசனை பிறந்தது. எந்த எந்த நடிகர் வரவில்லையோ, நடிகை வரவில்லையோ, அவர்களுடைய கதாபாத்திரங்களை அத்தோடு ‘க்லோஸ்’ பண்ணி விட்டார். ஒரு அம்மா வேடத்தில் தோன்றிய நடிகை நடிக்க மறுத்ததால் அவர் கேரக்டரைச் சாகடித்து விட்டார்! அதற்குப் பதிலாகச் சம்பந்தமில்லாமல் திடீரென்று ஒரு பாட்டி வேடத்தை உருவாக்கி அதில் வேறொரு நடிகையை நடிக்க வைத்தார்.

கதைக்கு முக்கியமான நகைச்சுவை நடிகரைப் பாதிக்கு மேல் ‘அம்போ’ வென்று விட்டு விட்டார். அப்பாவுக்குப் பதிலாகத் திடீரென்று பெரியப்பா தோன்றினார்.

நான் வேறு வழியின்றிப் பல்லைக் கடித்துக் கொண்டு பட.த்தை முடித்துக் கொடுத்தேன்.

நான் எதிர்பார்த்தபடியே அந்தப் படம் வெளி வந்ததும் படுதோல்வி அடைந்தது. ஆரம்பத்தில் கதையின் மேல் உண்டான மோகத்தின் காரணமாகத்தான் அதில் நடிக்கவே சம்மதித்தேன். அந்த அருமையான கதையை அப்படியே எடுத்திருந்தால் படம் நிச்சயம் வெற்றிகரமாக ஓடியிருக்கும். ஆனால் கன்னா, பின்னா என்று மாற்றி, அதை உருத் தெரியாமல் அடித்தது எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

ஒரு நல்ல இயக்குனர் அந்தப் படத்தை டைரக்ட் செய்திருந்தால், நிச்சயம் அப்படியெல்லாம் நடக்க அனுமதித்திருக்க மாட்டார்.

அப்புறம்தான் எனக்கு உண்மை தெரிந்தது. ஆரம்பத்திலிருந்தே தானே அந்தப் படத்தை டைரக்ட் செய்யவேண்டு மென்று தயாரிப்பாளர் திட்டம் போட்டிருந்தார். முதலில் நான் வற்புறுத்தியதற்காக ஒரு பிரபல டைரக்டரை ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு வேண்டுமென்றே அவர் அதிலிருந்து விலக வேண்டுமென்று அவருடன் தகராறு செய்திருக்கிறார். அதன் பிறகு மூன்று நான்கு டைரக்டர்களை அவர் கேட்டதாகச் சொன்னதும் அப்பட்டமான பொய் என்பது படம் முடிந்த பின் எனக்குத் தெரிய வந்தது.

அதே தயாரிப்பாளர் சென்ற ஆண்டு எனக்கு போன் செய்தார். “மீண்டும் தடிக்கப் போகிறீர்களாமே? உங்களை வைத்து ஒரு படம் எடுக்க விரும்புகிறேன், அது சம்பந்தமாக நான் உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும்” என்றார். ”அய்யோ! வேண்டாம்! உங்களுக்குக் கோடி நமஸ்காரம். என்னை விட்டுவிடுங்கள்” என்று போனை வைத்து விட்டேன்.

– கல்கி (22-06-1980)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *