உயிர் உருகும் சத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2021
பார்வையிட்டோர்: 3,288 
 
 

‘வானத்தில் முழுநிலவு ஓளிர்ந்திருக்க…
நட்சத்திரங்கள் ‘மிளிச்” ‘மிளிச்” என கண்சிமிட்ட…
தென்றல் காற்று தவழ்ந்து வந்து மேனியை
குளிர்விக்க”…

மாடியில் வானத்தை அண்ணார்ந்து பார்த்து கொண்டு ஒய்யாரமாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான் ராஜா. ராஜா ஓரு நடுந்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். தனது அத்தை மகளையே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன். இவருக்கு இரு மகள்கள். இருவரும் ஆங்கில வழி மொழியில் படித்து வருகின்றனர். பெரியவள் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டு எம்.பி.பி.எஸ் படித்த ‘நீட்” தேர்வுக்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருந்தாள். இளையவள் எட்டாம் வகுப்பு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் துவங்கியவுடன் சுட்டியாய் இருந்தவள் தனது அக்காளின் யூனிபார்மை தூக்கிப்போட்டுக் கொண்டு தனது பள்ளிப்படிப்பை துவங்குகின்றாள். ராஜாவின் மனைவி ஜெசி. இவளுக்கு உலகமே இவளது வீடும் கணவனும்இ இருபிள்ளைகளும் தான். தான் 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பில் சிறந்த மாணவி ஏன் கல்லூரியிலும் மாவட்ட அளவில் சிறந்த மாணவியாக சிறந்து விளங்கியவள். தனது குடும்பைத்தையும் கணவனையும் இருபிள்ளைகளையும் நன்கு கவனிக்க வேண்டும் என்பதற்காக தனக்கு கிடைத்த நல்ல வேலை வாய்ப்பை எல்லாம் துச்சமென தூக்கி எரிந்தவள். அவ்வப்போது தனது பள்ளிப்பருவ தோழிகள் வேலைக்கு செல்வதைப் பார்க்கும் போது தானும் வேலைக்கு செல்ல முடியவில்லையே! என்ற ஏக்கம் தலைதூக்கும். அப்போதெல்லாம் தனது குடும்ப சூழ்நிலையை எண்ணி தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொள்வாள். இருந்தாலும் தான் கற்ற கல்வி வீண்போய்விடக் கூடாது என்பதற்காக பனிரெண்டாம் வகுப்பு வரை ஸ்டேட் போர்டு சென்ட்ரல் போர்டுஇ ஆங்கிலோ இண்டியன் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு வீட்டிலேயே ‘டியூசன்” சொல்லிக் கொடுத்து வந்தாள். தான் கற்ற கல்வியைக் கொண்டு தனது இருபிள்ளைகளுக்கும் ஏன் தனது கணவர் அஞ்சல் வழியில் கல்லூhயில் கற்றுத் தேறவும் உறுதுணையாய் இருந்தாள். ஜெசியின் அத்தை வீட்டில் அதாவது அவரது மாமியார் வீட்டில் எந்த ஓத்துழைப்பும் இல்லை. இதனால் அவ்வப்போது தனது கணவனிடம் செல்லமாக சண்டையிட்டுக் கொள்வாள். ஏங்க… உங்க அம்மா என்னையும் என் இரு பிள்ளைகளையும் ஏன் கண்டு கொள்ளவே மாட்டேங்கறாங்க. நாங்க என்ன அவுங்களுக்கு ஆகாதவங்களா? என் எங்களைக் கண்டால் அவுங்களுக்கு துளி கூட பிடிக்காதா? நாங்க அவுங்களுக்கு என்ன துரோகம் செய்தோம். நான் உங்களை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இதைத் தவிர நான் என்ன பாவம் செய்தேன். என்னை கண்டால் எரிந்தெழுந்து விழுகிறார் என்று கண்கள் கலங்க கூறுவாள். ராஜாவுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அமைதியாகவே இருந்து விடுவான். அதற்கும் அவள் ஏங்க… நான் உங்க அம்மாவைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் காது கேட்காதது போல் இருக்கறீங்க… என்பாள் மீண்டுமாக. அதற்கு ராஜா அவர்கள் போக்கு தான் தெரியுமே? அப்புறம் ஏன்? அவுங்க அப்படித்தான். அவுங்களப்பத்தி பேசறதை விடறியா கொஞ்சம். வேறு வேலை இருந்தாப் போய்ப் பாரு ! என்பான். மனைவி ஓவ்வொரு முறை புலம்பும் போதும் சமாதனப்படுத்துவான் ராஜா. மனதிற்குள் மிகுந்த வேதனையுடன்.

சாய்வு நாற்காலியில் சாய்ந்த படி படிந்திருந்த ராஜா சற்றே தன் கடந்த காலத்தைப் பின்நோக்கிப் பார்க்கிறான். அம்மா இரு சகோதரிகள் அப்பா. மிகவும் பின்தங்கிய நடுந்தர குடும்பம். அரசாங்கத்தில் ‘குமாஸ்தா”வாகப் பணிபுரிந்தவர் அப்பா அந்தோணி. தனது சொற்ப வருமானத்தில் தான் தனது மூன்று பிள்ளைகளையும் அரசாங்க பள்ளியில் படிக்க வைத்துஇ வாடகை வீட்டில் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தவர். ஓய்வறியாமல் உழைப்பவர். அவரது ஓருவரது வருமானத்தில் தான் குடும்பமே. இவர் ஓருவர் வருமானம் இல்லையென்றால் குடும்பத்தின் நிலை அந்தோ பரிதாபம் தான்!
அந்தோணியின் இருமகள்கள் நல்ல முறையில் படித்தாலும் ராஜா மட்டும் சற்று நடுந்தரமாகவே படிப்பான். முதல் ரேங்க் என்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது அவனிடம். ஐம்பது சதவீதம் மார்க் எடுக்கும் சராசரி மாணவன். அம்மா மேரி இவன் இப்படி படித்து எப்படி பெரிய வேலைக்கெல்லாம் போக முடியும். எங்காவது மெக்கானிக்கில் வேலைக்கு அனுப்ப வேண்டியது தான் என்பார். இவனொன்னும் உருப்பட மாட்டான் என்பார் அம்மா மேரி. அப்பா அந்தோணியோ ஏண்டி… அவன அப்படி சொல்றே… என் பையன் பத்தாவது பாஸ் பண்ணிட்டா போதும். அரசாங்கப் பணி கண்டிப்பா கிடைக்கும் என்பார். அதற்கு அம்மா மேரி ஆமா கவர்மெண்ட்டை நடத்தறது உங்க அப்பா பாருங்க . நாளைக்கே இவனுக்கு கலெக்டரா அப்பாய்மெண்ட் போட்டுக் கொடுத்துருவாங்க…. என்றார் கோபத்துடன். இது ஓருமுறை அல்ல. ஓவ்வொரு முறையும் ராஜா மார்க் சீட் வாங்கி வரும் போதெல்லாம் இது தொடர்கதை தான். ஆனால் அம்மா மேரி தனது மகன் ராஜாவைப் பற்றி என்ன சொன்னாலும் கோபப்படாமல் அவன் படிச்சுக்கு வாண்டிஇ விளையாட்டுப்பிள்ளை எல்லாம் காலப்போக்கில் அவனுக்கு பொறுப்பு வந்தா எல்லாம் சரியாகிவிடும் என்பார் அந்தோணி தன் மகனை விட்டுக் கொடுக்காமல்.
இந்நிலையில் ஓரு நாள் அந்தோணி தான் வேலை பாhக்கும் இடத்தில் ‘நெஞ்சுவலி” வர முதன் முறையாக நெஞ்சைப் பிடித்து கொண்டு சரிகிறார். அனைத்து பணியாளர்களின் உதவியால் அவருக்கு முதலுதவி செய்யப்பட விழித்தெழுகிறார்.

தன்னுடன் பணிபுரிவர்கள் ஏம்ப்பா… அந்தோணி வேலை வேலைண்ணு ஓயாமா அலையறயே…! வேலா வேலைக்கு சரியா சாப்பிடறது கூட இல்ல.இப்படி இருந்தா.. என்ன பண்றது. உனக்கு எதாவது ஆகிபோச்சுன்னா. உன் குடும்பத்தின் கதி என்னவாகிறது? என்றெல்லாம் அந்தோணியை திட்ட ஆரம்பிக்கின்றனர். பின்னர் அந்தோணியை அசுவாசப்பட வெச்சு நல்ல சூடாக காபியும் பண்ணும் வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லுகின்றனர். பத்து நிமிட ஓய்விக்குப்பின்னர் அந்தோணி காபியும் பண்ணும் சாப்பிட்டு விட்டு அலுவலக நண்பர்களிடம் இங்கு நடந்ததை பற்றி எனது வீட்டில் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று தாழ்மையாய் கேட்டுக்கொண்டார். இது வீட்டிற்க்கு தெரிந்தால் அனைவரும் மிகுந்த வேதனையடைவார்கள் என்றும் அதிலும் என் மகன் மனசொடிஞ்சு போயிடுவான் என்று சொல்லி அவர்களிடம் சொல்லி விட்டுஇ எப்பவும் போல் வீட்டுக்கு வந்து தன்னிடம் இருந்த 100 ரூபாய்க்கு பிள்ளைகளுக்கு ‘ஸ்நேக்ஸ்’ வாங்கி வந்து கொடுத்து விட்டு படுக்கச்சென்று விடுகிறார்.
அப்பொழுது ராஜா விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தவன் தனது தந்தை வாங்கி வந்த ‘ ஸ்நேக்ஸ்” எல்லாம் பெண் பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி வாங்கிட்டு வந்திருக்கீங்க… எனக்கு பிடிச்ச மாதிரி ஓண்ணும் வாங்கிட்டு வரலையா.. என்று தனது தந்தையிடம் கோபப்பட்டுக் கொண்டு சாப்பிடாமலே படுத்து விடுகிறான்.

சில நாட்கள் சென்ற பிறகு அந்தோணியின் உடல் நிலை மிக மோசமாக ஆரம்பித்தது! வேலை பார்க்கவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் அந்தோணியின் உடல்நிலை மிகவும் மோசமாகவே உள்ளுரில் உள்ள மருத்துவமனையில் வைத்தியம் பார்த்த மருத்துவர் இவர் உடல்நிலை இவ்வளவு மோசமாகும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கோபத்துடன் கூறிவிட்டு இவர் உடம்பில் ‘இரத்தம்” கெட்டு விட்டது. இவர் பிழைப்பது மிகவும் கஷ்டம் எனக்கூறி பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சொல்லுங்கள் என்று மருத்துவர் கூறி அந்தோணியின் உடல்நிலை குறித்து விரிவான குறிப்புடன் கடிதம் ஒன்றை கொடுத்து பெரிய ஆஸ்பத்திரி மருத்துவரைச் சந்தித்து கொடுக்க சொல்லி கொடுத்தனுப்புகிறார். தாயார் மேரியோ தன்னிடம் இருந்த பணம்இ நகைகளையெல்லாம் அடமானம் வைத்து ரூ.50இ000ஃ- சரி பண்ணி அந்தோணியை பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்கிறார். ராஜாவும் உடன் செல்கிறான். டவுனில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி தனியார் மருத்துமனையில் பணம் கட்டி அந்தோணியை அட்மிட் செய்கின்றனர். ஆனால் அவர் நிலைமை முன்பை விட இன்னும் மோசமடைகிறது. தாயார் மருந்து வாங்கி வர மருந்துக்கடைக்கு சென்று வருவதற்குள் அந்தோணியின் உடல்நிலை மிகவும் மோசமாகிறது. அந்த தருவாயிலும் அந்தோணி தனது அருமை மகன் ராஜாவைப் பார்த்து ஏம்ப்பா நீ சாப்பிட்டயா? எனக்கொன்னும் இல்லைப்பா… நீ போய் சாப்பிடு என்கிறார். பரவாயில்லப்பா… எனக்கு பசிக்கல….. நீங்க முதல்ல உங்க உடம்பை கவனிச்சுங்க என்கிறான் ராஜா…

அப்பொழுது அந்தோணிக்கு இரண்டாவது முறையாக நெஞ்சுவலி வருகிறது முன்பை விட சற்று சிவியராக… இந்த முறை தப்பிக்க முடியவில்லை அந்தோணியால்!! அவரது உயிர் பிரிகிறது. இது அவரை மருத்துவமனையில் சேர்ந்த அரைமணி நேரத்திற்குள் அனைத்தும் முடிந்து விடுகிறது.

அந்தோணியின் மறைவிற்குப்பிறகு அவர் அரசு பணியில் இருக்கும் போதே இறந்ததால் அவரது மகனான ராஜாவுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்கிறது. இந்த நிலையில் தான் ராஜாவுக்கு தனது தந்தையின் போட்டோவை பெரிதுபடுத்துவதற்க்கு தனது மாமாவின் (போட்டோகிராபர்) வீட்டிற்கு செல்ல நேரிடுகிறது. தனது மாமாவின் மகளை பார்க்க நேரிடுகிறது. ராஜாவிற்க்கு தனது மாமா மகள் மீது ஒரு இனம் புரியாத பற்றுஇ பாசம் நேசம் ஏற்படுகிறது. அதுவே பிற்காலத்தில் காதலாக மாறுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள எண்ணுகையில் ராஜாவின் வீட்டில் இவர்கள் இருவரது திருமணத்திற்கு தடை ஏற்படுகிறது. ராஜாவின் தாயார் முதலில் சரி என்றவர் பின்னாளில் ராஜா அரசுப்பணி என்றாலும் ‘ஜெசி’யை கட்டி வைக்க முட்டுக்கட்டை போடுகிறார்.

இந்நிலையில் ஜெசி வீட்டில் அவரது தந்தையாரும் இறக்க நேரிடுகிறது. அவர்களது வீட்டில் ஆண் வாரிசு இல்லாததால் அந்தக் குடும்பத்தை கவனிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது . ராஜாவிக்கு!

இந்த நிலையில் தான் ராஜாவின் வீட்டில் ராஜாவின் தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் என மூவருக்கும் இவன் மீது வெறுப்பு வருகிறது. ராஜா எதை செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து அவனை திட்டுவதும் வீட்டை விட்டுக் கிளம்பு என்பதுமாக வசைபாட ஆரம்பித்தனர். ராஜா எவ்வளவு தான் உண்மையாய் இருந்தாலும் அவன் செய்கின்ற ஓவ்வொன்றிலும் குறை கண்டுபிடித்து அவனை தூசிக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் ராஜாவின் தாயார் மற்றும் சகோதரிகள் ஒன்னு சேர்ந்து ராஜாவை வீட்டை விட்டு துரத்துகின்ற நிலை வருகின்றது.

இந்நிலையில் ராஜா செய்வறியாது வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறுகிறான். சிறிது காலத்திற்க்கு பிறகு ராஜாவின் மூத்த சகோதரிக்கு திருமணம் நடக்கிறது. ராஜாவிற்க்கு எந்த மரியாதையும் அவனது வீட்டாரிடமிருந்து கிடைக்க வில்லை. இருப்பினும் ராஜா இதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திருமணம் முடிந்து சில காலம் கழிந்து ராஜா தனது திருமணத்தை பற்றி பேசும் பொழுதெல்லாம் அவனது தாயார் பிடிகொடுக்காமல் தட்டிக்கழித்துக் கொண்டே வந்தார்.

ஒரு கட்டத்தில் ஜெசி வீட்டிலிருந்து அவளது தாயார் மற்றும் அவர்களது உறவினர்கள் ராஜாவின் தாயாரிடம் வந்து நீங்கள் ஏற்கனவே பேசி முடிவெடுத்த பெண் தானே. பிறகு ஏன் தட்டிக் கழிக்கின்றீர்கள் எனக் கேட்க. எம் பையனுக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும். நீங்க முதல்ல கிளம்புங்க. எனக்கு இன்னும் ஒரு பிள்ளை கல்யாணத்து க்கு காத்திட்டு இருக்கு. அவளுக்கு முதல்ல முடியட்டும். அப்புறம் பார்க்கலாம் என்கிறார் ராஜாவின் தாயார் மேரி.

ஜெசி வீட்டில் எவ்வளவு எடுத்துக் கூறியும் ஒப்புக் கொள்ளாத ராஜாவின் தாயார் மேரி. இந்த கல்யாணம் நடக்காது! நடக்கவும் விடமாட்டேன!! என்னை மீறி எப்படி கல்யாணம் நடக்கும் என்று நானும் பார்க்கிறேன். என்று சவால் விடுகிறார் ராஜாவின் தாயார் மேரி . ராஜா எவ்வளவு எடுத்துக் கூறியும் தாயார் ஓத்துக் கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் ராஜாவிற்கு கோபம் வருகிறது. தாயார் மேரியிடம் நீங்கள் ஒத்துக் கொண்டாலும்இ ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை! எனக்கும்இ ஜெசிக்கும் திருமணம் நடந்தே தீரும் இது யார் தடுத்தாலும் நிற்காது என்று சொல்லி விட்டு கோபத்துடன் எழுந்து அவர்களுடனே சென்று விடுகிறான் ராஜா! அப்பொழுது ராஜாவின் தாயார் ரோட்டில் வந்து நீங்க நாசமாத்தான் போவீங்கஇ நீங்க எப்படி நல்லாயிருக்கீங்கன்னு பார்த்திடலாம் என்று கூறி மண்ணை வாரி தூற்றுகிறார்.

இந்த நிலையில் வீட்டை எதிர்த்து ராஜா ஜெசியை திருமணம் செய்து கொள்கிறான். இதனால் ராஜாவின் வீட்டாரின் எதிர்ப்பு உறவினர் மத்தியில் எதிர்ப்பு ஜெசியின் உறவினர் வீட்டிலும் எதிர்ப்பு என எங்கு சென்றாலும் எதிர்ப்பு. ஜெசி வீட்டு சொந்தக்காரங்க எல்லாரும் இப்படி ‘கிளியை வளர்த்து குரங்கு கையில் பிடித்து கொடுத்திட்டியே “ என்ற ஏளனமாய் பேசி விட்டு செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அனைவராலும் நிராகரிக்கப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டு மன வேதனையோடு ராஜாவும் ஜெசியும் மன நிம்மதியின்றி தவிப்பதைப் பார்த்து ராஜாவின் மறைந்த தந்தையின் ஆன்மா! கல்லறைக்குள் அழுது புலம்புகின்றது. இப்படி எல்லாரும் நல்லாயிருக்கணும்னு நெனெச்சு பார்த்து பார்த்து ஒவ்வொண்ணும் செய்கிறவனை இப்படி எல்லாரும் கேவலப்படுத்துறாங்களே! இப்படி இவங்கள புறக்கணிக்கறாங்களே! என்று மனம் வெதும்பி அழுகின்றது.

அடக்கடவுளே நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்.இப்படி அற்ப ஆயுசில என்னை எடுத்துட்டியே! இப்படி என் பையனை எல்லாரும் வேதனைப்படுத்துறாங்களே ! என் மருமகப்பிள்ளை என்ன தப்பு பண்ணினா! இவங்கள எல்லாரும் இப்படி பாடாய் படுத்துறாங்களே! என்று அந்தோணியின் ஆன்மா கலங்கி அழுகின்றது.

கல்லறைக்குள் அந்தோணியின் ஆன்மாவின் ‘உயிர் உருகும் சத்தம்’ கதறலாக ராஜாவின் காதில் கேட்டுக் கொண்டே ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. கனவின் வழியாக…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *