உன்னாட்டும் ஒரு ‘ஞான சூன்யமா’…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 3,697 
 
 

வேத பாடசாலையிலே பதினைந்து வருடம் வேதம் படித்து விட்டு சென்னைக்கு வந்தார் சிவராம கணபாடிகள்.சென்னைக்கு வந்து கணபதி குருக்கள் இடம் ஒர் ‘அஸிஸ்டெண்டாக’ உபாத் யாய வேலையை செய்து வந்தார்.

அவருக்கு வயது இருபத்தி மூன்று ஆகும் போது கணபதி குருக்களின் ஒறே பெண்ணான ராஜத்தைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்.

கல்யாணம் ஆன ரெண்டாவது வருஷமே சிவராமன் தம்பதிகளுக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்தான்.ஒரு குழந்தைக்கு ராமன் என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள்.

ராமனை நல்ல பள்ளிகூடத்தில் சேர்த்து படிக்க வைதார் சிவராமன்.ராமன் படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்தான்.பதினோறு வயது ஆனதும் சிவராமன் தம்பதிகள் ராமனுக்கு ‘கிரமமா’ ‘உபநயனம்’ போட்டு சந்தியாவந்தன மந்திரங்களை எல்லாம் கற்றுக் கொடுத்தார்.

ராமன் ‘டெந்த்தில்’ மில நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணினான்.

‘நமக்கு இந்த ஜென்மத்திலே இன்னொரு குழந்தைக்கு ‘ப்ராப்தம்’இல்லை போல இருக்கு’ என்று நினைத்து வந்த சிவராமன் தம்பதிகளுக்கு அந்த வருஷமே ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

“ராஜம்,எனக்கு நாப்பத்தி நாலு வயசு ஆகப் போறது,இந்த வயசிலே அந்த ஈஸ்வரன் நமக்கு ஒரு பிள்ளை குழந்தையே குடுத்து இருக்கானே.பொறந்து இருக்கும் ஒரு புருஷக் குழந்தையே போதும்ன்னு நான் நினைச்சுண்டு இருந்து வந்தேன்.இந்த வயசுக்கு அப்புறமா பொறந்து இருக்கும் இந்தப் பையனை நன்னா படிக்க வச்சி,அவனை கடைத் தேத்தணுமே.நான் பண்ணீ வரதோ ஒரு வாத்தியார் வேலே.எனக்கு மாச சம்பளமா இருக்கு.ஒரு இடத்துக்கு ‘உபாத்யாயத்துக்கு’ போனா தானே ரெண்டு காசு வரும்” என்று வருததப் பட்டு மனைவி இடம் புலம்பினார் சிவராமன்.

உடனே ராஜம் “அலுத்துக்காதீங்கோ,குழந்தே பொறந்துடுத்து.நம்ம ‘அஜாக்கிறதையாலே’ தானே குழந்தே பொறந்து இருக்கு.எல்லாம் பகவான் சங்கல்பம.குழந்தையை குடுத்த பகவான் ஏதா வது ஒரு வழி நிச்சியமா பண்ணுவார்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அந்த குழந்தைக்கு ரகுராமன் என்று பேர் வைத்து வளர்த்து வந்தார்கள் சிவராமன் தம்பதிகள்.

ராமன் மிக நன்றாகப் படித்து ‘ப்லஸ் டூ’வில் மிக நல்ல மார்க் வாங்கி,சென்னையிலே ஒரு நல்ல காலேஜ்லே B.E. சேர்ந்தான்.நாலு வருடம் ஆனதும் B.E.’பஸ்ட் க்லாஸ்லே பாஸ்’ பண்ணீனான்.

ரகுராமனுக்கு நாலு வயது ஆனதும் ஒரு பள்ளி கூடத்தில் சேர்த்தார் சிவராமன்.

ராமன் B.Eயில் மிக நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணீ இருந்ததால்,அவனுக்கு அமெரிக்காவில் ஒரு நல்ல காலேஜில் இருந்து MS படிப்புக்கு ‘அட்மிஷன்’ குடுத்து,முழு ‘ஸ்கார்லஷிப்பையும்’ கொடு த்தார்கள்.சிவராமன் தம்பதிகள் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

வெறுமனே அமெரிக்கா போக விமான ‘டிக்கட்’மட்டும் வாங்க வேண்டி இருந்ததால் சிவராமன் தன்னிடம் இருந்த பணத்தில் ராமனுக்கு விமான ‘டிக்கட்’ வாங்கினார்.ஒரு நல்ல நாள் பார்த்து சிவராமன் தம்பதிகள் ரகுராமனையும் கூட அழைத்துக் கொண்டு,சென்னை ‘ஏர் போர்ட்டு’க்குப் போய், ராமனை அமெரிக்காவுக்கு ‘ப்லேன்’ ஏற்றி விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

ரெண்டு வருடம் MS படிப்பை நல்ல விதமாக படித்து ‘பாஸ்’ பண்ணி விட்டு,ஒரு நல்ல IT கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தான்.

ரகுராமன் மிகவும் சுமாராகத் தான் படித்து வந்தான்.பா¢¨க்ஷகள் இல்லாததால் ரகுராமன் எல்லாம் வகுப்பையும் மெல்ல தாண்டி ஆறாவது படிக்க ஆரம்பித்தான்.ரகுராமனுக்கு பதினோறு வயது ஆகும் போது சிவராமன தம்பதிகள் ரகுராமனுக்கு ‘உபநயனம்’ போட்டார்கள்.ரகுராமனும் மிகவும் ‘சிரத்தையாக’ ரெண்டு வேளை சந்தியாவதனம் பண்ணிக் கொண்டு வந்தான்.

வேலையில் சேர்ந்து மூன்று வருஷம் ஆனதும்,சிவராமன் தம்பதிகள் நல்ல குடும்பத்திலே இரு ந்து வந்த ஒரு பெண்ணின் ஜாதகப் பொருத்தம் பார்த்து ஒரு நல்ல முஹூர்த்தத்திலே ‘ஜாம்’’ஜாம்’ என்று கல்யாணம் செய்து வைத்தார்கள்.

கல்யாணம் ஆன அடுத்த வாரமே ராமன் அப்பா,அம்மா,தம்பி ரகுராமன் மூன்று பேர்களிடம் சொல்லிக் கொண்டு,தன் மணைவியை அழைத்துக் கொண்டு அமெரிக்கா போய் விட்டான்.

அந்த வருடம் ரகுராமன் எட்டாவதிலே ‘பெயில்’ ஆகி விட்டான்.

உடனே சிவராமன் “டே ரகுராமா, உன் அண்ணா ராமன் எவ்வளவு புத்திசாலியா இருந்து எல்லா ‘க்லாஸ்’லேயும் நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி, BE, MS எல்லாம் பாஸ் பண்ணிட்டு, இப்போ ரொம்ப நல்ல வேலேலே இருந்துண்டு வறான்.உன்னாலே இந்த எட்டாம் ‘க்லாஸ்ஸையே’ ‘பாஸ்’ பண்ண முடியலையே. நான் எத்தனை வருஷமா கஷ்டப் பட்டு வேதம் படிச்சு இன்னைக்கு ஒரு பிரபல கண்பாடிகளா இருந்துண்டு வறேன்.எப்படிடா இத்தனை வருஷம் கழிச்சு எங்க வயத்லே பொற ந்த நீ ஒரு ‘ஞான சூன்யமா’ இருக்கே” என்று கத்தினார்.

ரகுராமன் அப்பாவைப் பார்த்து “அப்பா,அண்ணா அம்மா வயத்லே இருந்தப்ப,உங்க ‘சரஸ்வதி கடாக்ஷத்தை’ எல்லாம் எடுத்துண்டு போயிட்டார்.எனக்குன்னு அண்ணா கொஞ்சம் கூட விட்டு வக்க லே.அதுக்கு நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ” என்று சொன்ன போது சிவராமனுக்கு கோவம் தான் வந்தது.ரகுராமனை அடிக்க கையை ஓங்கினார்.
உடனே ராஜம் “அவனை அடிக்காதீங்கோ. அவன் உண்மையைத் தான் சொல்றான்.பொறக்கற எல்லா குழந்தைகளுக்கும் அந்த ‘சரஸ்வதி கடாக்ஷம்’ இருக்கறது இல்லே” என்று ரகுராமனுக்கு ஆத றவாகப் பேசினாள்.

உடனே சிவராமன்” ராஜம்,நீ அவனுக்கு பா¢ஞ்சு எல்லாம் பேசாதே.நான் நம்ப ராமன் BE, MS எல்லாம் படிச்சுட்டு,அமெரிக்காவிலே ஒரு நல்ல உத்யோகத்லே இருக்கிறா மாதிரி, இந்த ரகுராமனும் இருந்துண்டு வருவான்னு எத்தனை நாள் கனவு கண்டுண்டு வந்து இருத்தேன் தொ¢யுமா.என் கனவு எல்லாத்தையும்,மண்ணோடு மண்ணா ஆழப் புதைச்சுட்டானே, இந்த ‘ஞான சூன்யம்’அருமந்தப் பிள்ளை” என்று கத்தி விட்டு தன் ‘ஜோலி’க்கு கிளம்பினார்.

அடுத்த நாள் சிவராமன் ‘போனி’ல் ராமனைக் கூப்பிட்டு “நீ எவ்வளவு புத்திசாலியா இருந்து ண்டு BE, MS, எல்லா ம்பாஸ் பண்ணீட்டு,அமெரிக்காவிலே ஒரு நல்ல வேலைலே இருந்துண்டு வறே. இந்த ரகுராமன் ஒரு ‘ஞான சூன்யமா’இருக்கான்.அவன் எட்டாவதே ‘பாஸ்’ பண்ணலே தொ¢யு மோ. ’பெயிலா’யி விட்டு என் எதிரே நிக்கறான்.இவனே இனி மேலே படிக்க வக்கறதிலே ஒரு பிரயோ ஜனும் இல்லே.பேசாம நான் ‘உபாத்யாயம்’ பண்ற ஆத்துக்கு எல்லாம் ரகுராமனை என் கூட அழைச்சு ண்டுப் போய்,நான் செஞ்சிண்டு வர வாத்தியார் வேலேயே சொல்லிக் குடுக்கலாம்ன்னு இருக்கேன்” என்று கோவத்துடன் சொன்னார்.அப்பா சொன்னதைக் கேட்ட ராமன் மிகவும் வருத்தப் பட்டான்.

உடனே ராஜம் “ஏன்னா,இது என்ன தலேப் போற ரொம்ப முக்கியமான சமாச்சாரமா என்ன. நீங்கோ உடனே ராமனுக்கு ‘போன்’ பண்ணி சொல்லி இருக்கேள்.எனக்குப் பிடிக்கவே இல்லே, நீங்கோ பண்ணது” என்று தன் கணவரைக் கோவித்துக் கொண்டாள்.

அப்பா சொன்னதை நினைத்து ரகுராமன் கவலைப் படவே இல்லை.

அவன் அப்பாவைப் பாத்து “எனக்கு படிப்பு ஏறலே.அதுக்கு நான் என்ன பண்றது சொல்லுங் கோ.அப்பா,நீங்க பண்ணீண்டு வற வாத்தியார் வேலை ஒரு கேவலமான வேலே ஒன்னும் இல்லை யே.நீங்கோ என்னே உங்களோட அழைச்சுண்டு போய், அந்த வாத்தியார் வேலேயே சொல்லிக் குடுங்க. நான் அந்த வாத்தியார் வேலேயே சந்தோஷமா செஞ்சிண்டு வருவேன்” என்று நிதானமாகச் அடுத்த நாளே ரகுராமன் ‘சலூனு’க்குப் போய் தன் ‘கிராப்’ தலை மயிரை வெட்டிண்டு ஒரு சின்ன குடுமியை வைத்துக் கொண்டு,வீட்டுக்கு வந்து குளித்து விட்டு வந்து சுவாமிக்கு தனக்குத் தொ¢ந்த சில மந்திரங்களை எல்லாம் சொல்லி விட்டு நமஸ்காரம் பண்ணி விட்டு வந்தான்.

சிவரமனும்,ராஜமும் ரகுராமன் குடுமி வைத்துக் கொண்டு வந்து இருப்பதையும்,அவன் குளித்து விட்டு,சுவாமிக்கு அவனுக்குத் தொ¢ந்த சில மந்திரங்களை எல்லாம் சொல்லி விட்டு நமஸ் காரம் பண்ணி விட்டு வந்ததையும் பார்த்து ஆச்சரியப் பட்டார்கள்.

ராமன் அமெரிக்கா போனவுடனே,ஒரு பொ¢ய வீடாகப் பார்த்து வாங்கிக் கொண்டு விட்டு, அம்மா அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி,அந்த சந்தோஷ சமாசாரத்தை சொன்னன்.சிவராமன் தம்பதிகள் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ரகுராமனை அழைத்துக் கொண்டு சிவராமன் அவர் ‘உபாத்யாயம்’ பண்ணும் வீடுகளுக்கு எல் லாம் போய் அவர் செய்து வந்த வாத்தியார் தொழிலை மெல்ல மெல்ல கற்றுக் கொடுத்துக் கொண்டு வந்தார்.

ரகுராமனுக்கு இருபத்தி ஐந்து வயது ஆகும் போது, தன்னுடைய சக வாத்தியார் பெண்ணைக் ரகுராமனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்.ராமன்,அவன் மணைவியையும் அவர்கள் ரெண்டு குழந் தைகளையும் அழைத்துக்கொண்டு,சென்னைக்கு வந்து ரகுராமன் கல்யாணத்தை ‘அடெண்ட்’ பண்ணி விட்டு,அமெரிக்கா திரும்பிப் போனார்கள்.

சிவராமன் தம்பதிகள் ரகுராமனுடனும்,மாட்டுப் பொண்ணுடனும் சந்தோஷமாக இருந்து வந்தார்கள்.

சென்னையில் அக்டோபர் மாசம் நல்ல மழை பெய்து எல்லா இடங்களிலும் மழை நீர் தேங்கி இருந்தது.மழை நீர் தேக்கத்தால் சென்னையிலே கொசுக்கள் தொல்லை அதிகமாக ஆகி வந்துக் கொண்டு இருந்தது.

வீட்டில் கொசு வலை இல்லாமல் சிவராமன் தம்பதிகள் தூங்கி வந்ததார்கள்.

சிவராமன் தம்பதிகள் அதிகாலையிலே எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்து வந்தார்கள்.

ஒரு வாரம் ஆனதும் இருவருக்கும் நல்ல ஜுரம் வந்ததது.சிவராமன் ஜுரத்தை பொருட்படுத் தாமல் ரகுராமனை அழைத்துக் கொண்டு ‘உபாத்யாயத்துக்கு’ போய் வந்துக் கொண்டு இருந்தார்.

ரெண்டு நாள் ஆனதும் இருவா¢ன் ஜுரமும் மிக அதிகம் ஆகவே ரகுராமன் ரெண்டு பேரையும் அருகில் இருந்த ஒரு ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’அழைத்துப் போய் காட்டினான்.

‘நர்ஸிங்க் ஹோமில்’ சிவராமன் தம்பதிகளின் ரத்தத்தை பா¢சோதனைப் பண்ணீன டாக்டர், அவர்கள் ரெண்டு பேருக்கும் ‘மலேரியா ஜுரம்’ வந்து இருக்கு என்று சொல்லி,இருவரையும் ‘அட்மிட்’ பண்ணி விட்டார்கள்.

உடனே ரகுராமன் அண்ணா ராமனுக்கு ‘போன்’ பண்ணீஅப்பா அம்மா ரெண்டு பேருக்கும் ‘மலேரியா ஜுரம்’ வந்து இருக்கும் சமாசாரத்தே சொன்னான்.ராமன் மிகவும் பயந்துப் போனான்.

உடனே ரகுராமனுக்கு ‘போன்’ பண்ணி “ரகு,இந்த ‘மலேரியா ஜுரம்’ ரொம்ப மோசமான ஜுரம் அம்மா அப்பாவை ரொம்ப ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வா” என்று சொன்னார்கள்.

ரகுராமன் ”நான் அம்மா,அப்பாவை ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வறேன்.நீங்கோ கவலைப் படாதீங்கோ” என்று சொன்னான்.
ஒரு வாரம் கூட ஆகி இருக்காது.

இந்தியாவில் ‘கரோனா வைரஸ்’ அதிகமாக பரவி வந்ததால்,இந்திய அரசாங்கம் எல்லா வெளி ஊர்களில் வரும் எல்லா ‘ப்ளைட்டையும்’ நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்து விட்டது.

ஒரு வார வைத்தியத்திற்கு பிறகு டாக்டர் ரகுராமனை அழைத்து “உங்க அம்மாவுக்கும்,அப்பா வுக்கும்,எவ்வளவு மலேரியா மாத்திரைக் குடுத்தும் அவங்க ஜுரம்105 டிகிரீக்கு குறையாம இருந்து வருது.அவங்க ரெண்டு பேர் நுரையிரலிலும் நிறைய சளி கட்டிக்கிட்டு இருக்கு.ஜுரம் குறையாம இருந்து,அவங்க சளியும் கரையாம இருந்து வந்தா,அவங்க பிழைக்கறது ரொம்ப கஷ்டம்.அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வயசாடிச்சி” என்று சொன்னார்.

உடனே ரகுராமன் டாக்டர் சொன்ன சாமாசாரத்தை அண்ணாவுக்கு ‘போன்’ பண்ணிச் சொன்னான்.

உடனே ராமன் “ரகு,இப்போ எங்களாலே சென்னைக்கு வர முடியாதேடா.இந்த ‘கரோனா வைரஸ்’ அமக்களத்லே எல்லா ‘ப்லைட்டையும்’ நிறுத்தி வச்சு இருக்காளேடா” என்று கண்களில் கண்ணீர் மலக சொன்னார்கள்.

ராமன் சொன்ன சமாசாரத்தை ரகுராமன் அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லி அழுதான்.

உடனே சிவராமன் “ரகு, டீ.வீயிலே …சொன்னதே..நாங்க ..ரெண்டு ..பேரும் …கேட்டோம் எங்களுக்கு… ஏதாச்சும்… ஆயிட்டா ..நீ தாண்டா..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவர் மூச்சு விட மிகவும் கஷ்டப் பட்டார்.

சிவராமனும் ராஜமும் மூச்சு விட மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.அதனால் டாக்டர் ரெண்டு பேருக்கும் ‘ஆக்ஸிஜன்’ கொடுக்க ஆரம்பித்தார்கள்.அப்பவும் அவர்கள் இருவரும் மூச்சு விட மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்ததைப் பார்த்த டாக்டர் இருவருக்கும் ‘வெண்டி லேட்டரை’வைத்தார்.

ரகு அழுதுக் கொண்டே ராமனுக்கு ‘போன் பண்ணி “அண்ணா,அப்பாவும், அம்மாவும் மூச்சு விட கஷ்டப் பட்டுண்டு வந்தா.டாக்டர் ரெண்டு பேருக்கும் ‘வெண்டிலேட்டரை’ வச்சு இருக்கா”என்று சொன்னான்.

ரகுராமன் சொன்னதைக் கேட்ட ராமன் அழுதுக் கொண்டு இருந்தான்.

மூன்று மணி கழித்து ‘வெண்டிலேட்டரை’ எடுத்ததும் சிவராமனும் ராஜனும் இறந்து விட்டார் கள். ரகுராமன் அழுதுக் கொண்டே அம்மா அப்பா இறந்துப் போன சமாசாரத்தை அண்ணாவுக்கு ‘போனி’ல் சொன்னான்.

ராமன் உடனே அமெரிக்க தூதர் ‘ஆபீஸ்’க்கு ‘போன்’ பண்ணி, “சார்,எங்க அப்பாவும், அம்மாவும் இறந்துப் போயிட்டா.நான் சென்னைக்கு உடனே போயாகணும்.ஏதாவது வழி பண்ணுங்க” என்று அழுதுக் கொன்டே கேட்டான்.அந்த ஆபீஸில் இருந்த ஒருவர் “ நான் நிச்சியமா ‘ட்ரை’ பண்றேன்” என்று உறுதி அளித்தார்.

‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ஆன வைத்திய செலவைக் கட்டி விட்டு அப்பா அம்மா ரெண்டு பேரு டைய ‘பாடிகளை’யும் வீட்டுக்குக் கொண்டு வந்தான்.

வாத்தியாரை வைத்துக் கொண்டு அம்மா அப்பா ரெண்டு பேரையும் “தகனம்” பண்ணீனான் ரகுராமன்.பிறகு வீட்டுக்கு வந்து குளித்து விட்டு ராமனுக்கு ‘போன்’ பண்ணி அழுதுக் கொண்டே “நான் அம்மா அப்பாவை ‘தகனம்’ பண்ணிட்டு ஆத்துக்கு வந்தேன்” என்று சொன்னான்.

“ரகு,இந்த பாழாப் போன ‘கரோனா வைரஸ்’ இப்பத் தான் வரணுமா.என்னால் அப்பா அம்மா ‘உடம்பே கூட’ கண்ணாலே பாக்க முடியலையே.நான் ‘இண்டெலிஜண்டா இருந்து வந்து, BE, MS எல்லாம் படிச்சுட்டு, அமெரிக்காலே ஒரு நல்ல உத்யோகத்லே இருந்துண்டு வந்து என்னடா பிரயோ ஜனம்.அப்பா ‘ரகுராமன் ‘ஒரு ஞான சூன்யமா’ இருக்கான்’ன்னு சொன்னாளே.நான் அப்பா,அம்மா வுக்கு ஒரு மூத்தப் பீள்ளையா இருந்து என்னடா பிரயோஜனம் ரகு.உனக்குக் கிடைச்ச ‘பாக்கியம்’ மூத்த பிள்ளையான எனக்குக் கிடைக்கலேயேடா ரகு.நானும் உன்னாட்டும் ஒரு ‘ஞான சூன்யமா’ இருந்து வந்து இருக்கக் கூடாதா.அந்த பகவான் ஏன் என்னே ‘இண்டெலிஜெண்டா’ படைச்சார்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான் ராமன்.

பன்னிரண்டு நாள் ‘காரியங்களையு’ம் மிகவும் சிரத்தையாக செய்து முடித்தார்கள் ரகுராமன தம்பதிகள்.

பதி மூன்றாம் நாள் வீட்டை ‘புன்யாவசனம்’ பண்ணார்கள் ரகுராமன் தம்பதிகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *