இதுதான் சான்ஸ்..விடாதே!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2022
பார்வையிட்டோர்: 4,054 
 
 

“என்னது புள்ளெ சொணங்கிப் போய் இருக்கான்..!. ஒடம்புக்கு சரியில்லையா..? என்று பார்க்க வந்தவர்கள், குடித்த காபிக்காக நலம் விசாரித்தார்கள்.

“பேத்திக்கு ஒண்ணுமில்லெ..” என்ற சொன்ன மாலதி “பொறந்ததிலே இருந்து அந்தப்பையன் அப்டித் தானே கெடக்கான். என்ன பண்றதுன்னு தெரியலேக்கா…”

“உள்ளெ என்னமோ தெரியலெ.. வெளியெ பாக்கும்போது லட்சணக்கட்டியா இருப்பாளே அந்தப் பயலோட ஆத்தா.. அவளுக்கு பொறந்த புள்ளையா இப்டிக் கெடக்கான்…”

“இவனோட அப்பன் லட்சணமா இல்லாட்டாலும் நல்ல பொழி எருது மாதிரி இருப்பானே… அந்த உடம்பு கூட இவனுக்கு இல்லையே…”

“அடி மாலதி நீ நிறுத்துடீ… உனக்கிட்டெ போயி கேக்குறம்பாரு நா…அந்தப் பயலோட ஆத்தாட்டே கேக்கலாம்”.

“அடியே பிரியா… இங்கெ வாடி…புள்ளெக்கு என்னடி… புருஷென் ஏதாவது பணம்கிணம் அனுப்புறானாடி. நல்லாப் பாத்துக்கிறானா…?”

“பாத்துக்கிறாரு.. பாத்துக்கிறாரு… பொழி எருது மாரி இருந்தா பாத்துக்கிட்டுத்தான் இருக்கோணும்… வயசாயிப் போச்சுதுல்லெ… பாவம் என்ன செய்ய செய்வாரு…பாத்துக்கிட்டுத்தான் இருக்காரு…”

“நாங்க ஒண்ணும் செய்யச் சொல்லடி,, பணமாவது அனுப்புறானா..அதுக்காகத்தானே அவனை ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்கிட்டே…?”

“அடியே ரெண்டாங்கல்யாணம் மொறைப்படியா பண்ணே…? இல்லேல. சரி விடு, ஒரு எளவட்டமா பாத்து பண்ணக்குடாது..?கெழட்டுப் பயலைப்போயி பண்ணிருக்கே. அவனாலே ஒனக்கு என்ன சொகத்தடி கொடுக்க முடியும்டி..”

“யாரு வேண்டான்னு சொன்னா..?நா சொன்ன்னா வீட்லெ கேப்பாங்களா…?”

“தம்பி உயிரோட இருக்கும்போதே நாங்கள் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா ஆயிட்டோம்…. தம்பி செத்துப் போனதும் அவன் விட்டாலும், அவனோட ஆத்தாளும், அப்பனுமா விடுற மாதிரியா இருந்தாங்க…”.

“என்னடி பண்ணாங்க..?”

“நா ஒத்தைப் புள்ளைனு நெனைச்சுட்டாங்க போல…. வளைச்சுப் போட்டுக்கிட்டா ஏதாவது தேரும்னு நெனச்சு, என்னோட அப்பென் ஆத்தாட்டே பொண்ணு கேட்டுட்டாங்க…” என்றாள் பிரியா.

“இதுக்கு இந்த ஜீவங்கெ என்ன சொன்னுச்சு…இவங்கெ அப்டியே பண்ணிடலாம்னு சொல்லிட்டாங்க…”

“நீ இந்த எருமையைவேண்டான்னு சொல்ல வேண்டியதுதானே…ஒனக்கு எங்கெடி போச்சு புத்தி…”

“அதுமட்டுமா, அந்தப்பயலுக்கு ஏற்கனவே கல்லாணமாகி ரெண்டு புள்ளைங்க இருக்கு. அதெ எப்புடி ஏத்துக்குவாங்க.. நீந்தான் வேண்டாம்னு அடிச்சு சொல்லிருக்கணும்…”

“நா சொல்லத்தான் செஞ்சன். கேட்கலெ… இந்த வயசுலெ எவனோடவாவது ஒடிருவே இவனையே கட்டிக்கெ, ஒண்ணுக்குமண்ணா இருந்துக்கோ…ஒம்புருசன் இருக்கும்போதே நீ அப்டி இப்டினு அவனோட பொழங்கிக்கிட்டுத்தான் இருந்தே… எங்களுக்கு தெரியாதுன்னு நெனைக்கிறியா…?”

“நாங்க கேட்டமா, இப்ப நாங்க கேக்குறோம். நீ அந்தப் பயலெத்தான் கல்லாணம் பண்ணிக்கோனும்..ஓகேவாண்ணு கேட்டாங்க.. ஒத்துக்கிட்டேன்..”

“அப்புறமா பக்கத்து வீட்லெ உள்ளவங்க கிட்ட இதுபத்தி கேட்டேன்..ஒங்க அம்மா சொன்னா கரெக்டாத்தான் இருக்கும். அந்தப் போம்பளையும் கல்யாணத்துக்கு முன்னேயும் பின்னேயும், குசுக்கோலி மயனோடதான் குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தான்னு சொன்னாங்க.. இப்டி இருக்கும்போது கேட்டுத்தானக்கா ஆகணும் சரி சரி கொழந்தையை பாத்துக்கோ..!.”

“அந்தப் பயலெ ஒழுங்கா கண்காணிச்சுக்கோ…”

“இன்னொருத்தி காசு பணம் இருக்கு வாடான்னா..போயிடுவான்போல..”

“நீதான் உன்னோட வாழ்க்கையை காப்பாத்திக்கணும் சரியா..?” என்று புறப்பட்டார்கள்.

புதிய தாம்பத்ய உறவுக்காக தெருவோரத்தில் கட்டப்பட் கசாலையில் மல்லாக்க படுத்துக் கண்ணை மூடினாள் ப்ரியா.

“மத்தவங்க எதுக்கு கூப்புடுறாங்க, ஏற்கனவே அரைக்கெழவனாயிட்டான்…எனக்கு என்ன பயம்னா அம்மா மேலதான். அம்மா ஏற்கனவே ‘..குசுக்கோலி மயனோட அவிசாரி ஆடிருக்கா.. இவனையும் புடிச்சுக்கிட்டானா..’ என்று மனசை அங்கும் இங்கும் அலைய விட்டுக் கொண்டிருந்தாள்…

“ரெண்டு பேருக்கும் 2 வயசு வித்தியாசந்தான் இருக்கும். இப்படி மனம்போன போக்கில் பலவாறு யோசித்தாள். இப்போது அம்மா மாலதி மீது அவளுக்கு சந்தேகம் வலுத்தது.

போஸ்ட் ஆபீஸில் வேலை பார்த்தானா இல்லையா என்று தெரியவில்லை. மடங்காத சட்டையும் பேண்டுமாக வீட்டுக்கு வந்தான் கார்மேகம். மால்தி காப்பி கொண்டா எங்கெ ஒண்ணோட பொண்ணு…? வேற யாரோடவாவது போய்ட்டாளா…காணோமே, வானம் வேற கருக்க ஆரம்பிச்சிருக்சு என்றான் கார்மேகம்..உள்ளெ தான் படுத்துக் கெடக்கா… கூப்புடவா..?

“வேண்டா வேண்டா கழுதெ அங்கேயே கெடக்கட்டும்.. என்றான் கார்மேகம்

எங்கேயோ பக்கத்தில் உள்ள நகரத்தக்குச் சென்று விட்டு, இரண்டு பிஸ்கட் பாக்கெட், ஒரு அச்சுமுறுக்கு பாக்கெட்டுடன் ப்ரியா வீட்டுக்கு அவளது மாமியார் ஜான்சு வந்தாள்.

“மருமகள் பேரனிடம் எப்டி இருக்கீங்க, சௌக்கியமா… சந்தோஷமா..என்று நலம் விசாரிக்கத் தொடங்கினாள்.

“எங்கெ போய்ட்டு வர்றீங்க அத்தெ.. என்ன இந்த நேரத்துலெ உங்களெ பாக்கணும்னு வரலெ…. லேட்டாயிடுச்சு பஸ் இல்லெ. அதனாலெ நைட்டு… கஞ்சியெ குடிச்சுட்டு காலையிலெ போலாம்னு வந்தேன் என்றாள்.

“சரி மருமகளுக்கு என்ன கொண்டாந்தீங்க.? இதுதான் கோண்டாந்தீங்களா…. என்றாள் மாலதி…பிறகு என்னெத்தெ கொண்டாரச் சொல்றே…

“அவளுக்கு ஏதாவது கொடுக்குற உத்தேசம இருக்கா…? ஏதாவது பேரனுக்கு சேத்து வச்சிருக்கீங்களா..? அவனுக்குத்தான் அதிகமா கொடுக்கணும்… என்று மாலதி சொன்னாள்.

“முதலுக்கே மோசம் வந்துவிட்டது என்பது போல விழித்த ஜான்சு, ரெண்டாவது கல்யாணந்தானே. இதுக்குப் பொறந்த புள்ளைக்க செஞ்சா பகை வந்துடாதா… அவனோட போறந்தவங்கெ..இன்னும் ரெண்டுபேரு உயிரோடதான் இருக்காங்கே…..அவங்கெ முடிஞ்ச அளவுக்கு நாலஞ்சு குட்டிகளெ போட்ருக்காங்கெ…என்ன செய்ய முடியும்… பாத்துக்கலாம்… என்றாள்.

“என்ன இப்டிச் சொல்லிட்டீங்க…?” என்றாள் மாலதி

“நாம இவட்டெ ஆட்டெயெப் போடனும்னு ரெண்டாங்கல்லாணம் பண்ணா… இவ நம்மட்டே போட்டுடுவா போல… என்று மூக்கைத் துடைத்துவாறே நினைத்துக் கொண்டு, மூக்குமடி பறக்க ஆவேசமாக பேச்சைத் தொடங்கினாள்.

“என்னடி வேடிக்கை காட்றியா, இவ ஒரு புள்ளெயாச்சே.. இவளோட சொத்தெல்லாம் என்னோட பயலுக்குத்தானேன்னு ரெண்டாங்கல்யாணம் பண்ணுனா…நீ எனக்கிட்டே புடுங்கப் பாக்குறே என்றாள் ஜான்சு.

“ய..இதை அவனுக்கிட்டேயும், அந்தப் பயலோட நாதியத்த அப்பனுக்கிட்டேயும் சொல்றேனா இல்லையானு பாரு..” என்று,தலையில் கையை தலையணையாக மடித்து வைத்துக் கொண்டு படுத்து விட்டாள் ஜான்சு.

காலையில் புறப்பட்ட ஜான்சு முகத்தில் ஈயாடவில்லை. அதேபோல மாலதியும் அவளை நினைத்து, உள்ளேயே வறுத்துக் கொண்டு… பாத்துப் போங்க அத்தாட்சி.. என்றாள்

ஒரு வார்த்தை கூட பேசாமல் புறப்பட்டு விட்டாள் ஜான்சு

“ஏம்மா நீ அவங்கட்டெ போயி இப்டிலாம் கேக்குறே… என்னெ ரெண்டாவதா ஏத்துக்கிட்டதுக்கே..நம்மக்கிட்ட உள்ள பதினைஞ்சு இருபது ஏக்கரு சொத்தெ நம்பித்தான். நீ மறுபடியும் அவங்கட்ட கேட்டா என்ன பண்ணுவாங்க…”

“என்னடி பண்ணுவாங்க…?”

“அவனுக்கு இன்னொரு கல்லாணம் கூட பண்ணுவாங்க. கேட்டா ஒங்கள மாரி ஆளுகளுக்கு புரட்சித் திருமணம்னு அவனோட அப்பன் பேஸ்புக்லெ எழுதுவான்.

“சரி போனா போகட்டும்டி, உனக்கு இன்னோன்னைப் பாத்து கட்டிக் கொடுத்துட வேண்டியதுதான்… என்றாள் மாலதி..நீங்களும் இப்படித்தானா என்று நினைத்துக் கொண்டு, சரி எப்டியோ போங்க…” என்றாள்

மறுநாள் காலையிலிருந்து இருட்டும் வரை ஒவ்வொரு வீட்டிலும், கூட்டம் கூட்டமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த வழியாக குழாயடிக்குச் சென்ற மாலதி என்ன என்று விசாரித்தாள்.

“உன்னோட பொண்ணுக்கு ரெண்டாவது கல்லாண்ம பண்ணிருக்கேல்ல…அவனோட தம்பி எங்கேயோ இருந்தானாம்… இப்ப அங்கேயே ரெண்டாவது கல்லாணம் பண்ணிக்கிட்டானாம்”.

“என்னடி சொல்றே…?”

“ஆமா. உனக்கு ஏன் அதிர்ச்சியா இருக்கு… நீந்தான் போட்டுப்பாக்கலாம்ணு போயி உன்னோட பொண்ணுக்கு ரெண்டாவது கல்லாணத்தை முடிச்சிட்டியே…கேக்க வந்துட்டா கேக்க… என்று குடத்தை தூக்கிக கொண்டு அவள் புறப்பட்டு விட்டாள்.

இதனால் அதிர்ச்சியான மாலதி, வீட்டில் உள்ளவர்களிடம் இந்த விசயத்தை சொன்னாள்.

அவளுடைய அம்மா தொடர்ந்தாள். ”… இப்பத்தான் உனக்கு இது தெரியும்ங்கிறது மாதிரி பேசுறே…அந்தக் குடும்பத்துக்கு இதானடி வேலை.

“கணக்கு மகள்ன்னா சும்மாவா. இதையே தொழிலாப் பண்ணிட்டு இருக்காடி..அதுக்கு அவ புருசனும் ஒடந்தையா இருக்கான். ஒரு வேளைக் கஞ்சிக்கு லாயக்கு இல்லாத உலுத்த பய அவன், அதுனாலெ தான் தட்டிக் கேடக வழியில்லாம, பக்கத்து ஊர்லெ உள்ள மீனா மெஸ்ல சாப்பிட்டுக்கிட்டுத் திரியுறான்…”

“அந்தப் பய ஏதோ சங்கத்துக்கு பொதுச் செயலாளர்னு சொல்றான்…ஆனா அந்த சங்கத்துக்கு இன்னொருத்தன் பொதுச் செயலாளராம் மோகன் சொன்னான்.

“அவன் சங்கத்தை வச்சு சம்பாதிக்காறான்னா… இவ ஆம்பளப் பசங்கள வித்து சம்பாதிக்கிறா…. இவ ஜான்சு இல்லே. கணக்கு பண்றவ… ஏன்னா இவ ஆத்தா கணக்குல்லெ. அந்தப் பேரை இப்டிக் காப்பாத்துற போல…

“ஆமாடி மாலதி…. அவளுக்கு ஒன்னை மாதிரித்தாண்டி, மூத்தரம் பேயக் கூட நேரமில்லைடி…எவ குடும்பத்தை கெடுக்கலாம்னு திரியுறாடி ஜான்சு…உங்களுக்கு எதிரியெச் சாக்கிறதுக்கு கத்தி கம்பெல்லாம் தேவையில்லைடி… உங்க மனசு போதும்டி…” என்றான் கார்மேகம்.

நீங்க மட்டும் எப்டியாம் என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று அடுக்களைக்கு நடந்து விட்டாள் மாலதி…

Print Friendly, PDF & Email

1 thought on “இதுதான் சான்ஸ்..விடாதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *