இரவு மணி 11.00.
‘ஆம்பளை அஞ்சு மடங்கு வீராப்புன்னா பொம்பளை பத்து மடங்குங்குறதுதான் நடைமுறை வழக்கம், கேள்வி. இவர் மாறாய் இருக்கார். சண்டை…. ரெண்டு நாள்ல சரணாகதி அடைவார்ன்னு நெனைச்சா… ஆள் பத்து நாட்களாகியும் திரும்பாம இருக்கார்.! அஞ்சு நாட்கள்தான் புருசன்கிட்ட முகம் தூக்கி இருக்கனும். அதைத் தாண்டினால் ஆபத்து. ஆம்பளை மனசு அடுத்த இடத்தைத் தேடும். ஜாக்கிரதை!’ பெற்ற தாயிலிருந்து அத்தனைப் பெண்களும் அறிவுரை வழங்கியது இவளுக்கு இடித்தது.
காயத்ரி மெல்ல எழுந்து….அடுத்த அறைக்குள் நுழைந்தாள்.
கட்டிலில் படுத்து படித்துக் கொண்டிருந்தவனின் அருகில் அமர்ந்து…”.தினம் உங்க தொல்லை. ரெண்டு நாள் நிம்மதியாய் தூங்கனும்ன்னுதான் வலிய சண்டை போட்டு தள்ளிப்படுத்தேன். மன்னிச்சுக்கோங்க.” தொட்டாள்.
”ச்சூ! இனி எனக்கு மனைவியே தேவை இல்லே. சாமியாராகப் போறேன். !” கமலேஷ் அவள் கையை விளக்கினான்.
”மன்னிப்பே கிடையாதா ? ”
”கெடையாது! தினம் மாத்திரைப் போட்டு கட்டுப்படுத்திக்கிறேன். இன்னைக்குப் போடலை. போட்டுக்கிறன்!” சொன்னவன் தாமதிக்காமல் மெத்தைக்கடியில் இருந்த மாத்திரையை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தான்.
ஒரு விநாடி ஸ்தம்பித்த காயத்ரி, ”சரி. அப்படியே போங்க.” எழுந்தாள்.
”பாவி! நீ வலிய வரனும்ன்னுதான் கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்தி வர்றன்னைக்கு விட்டதெல்லாம் பிடிக்கலாம்ன்னு திட்டம்போட்டு வயக்காரா மாத்திரை வாங்கி வைச்சி விழுங்கி இருக்கேன். காப்பாத்து, போகாதே!” கதறி…மோகன் சடாரென்று காயத்ரி காலைப் பிடித்தான்.!
மவனே…!!