ஆணைக் கால் குவளை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 6,127 
 
 

என்னங்க! அத்தை சரியாக சாப்பிடல,என்னான்னு தெரியலே,முகமே வாடிக் கிடக்கு, போய் என்னன்னு கேளுங்க| என்றாள்,சரோஜா ,

சரோஜா, கனகம்மாவின் இளைய மகன் சரவணனின் மனைவி, கனகம்மாளுக்கு சரோஜா மூன்றாவது மருமகள். கனகம்மா வயது 85 , கணவனை இழந்து கடைக் குட்டி மகனுடன் கூட்டு குடும்பமாக வாழ்கை நடத்துபவள். கனகம்மாவிற்கோ மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் அனைவரும் நன்கு வீடு மற்றும் வாசல் என வேறு வேறு ஊர்களில் வாழ்கின்றனர். பண்டிகை நாட்களில் மற்ற இரு மகன்களும் தங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளோடு வந்து அனைவரும் ஒன்று கூடி சொந்த ஊரான வடகரை வந்து கொண்டடுவார்கள், இப்படி தீபாவளி பண்டிகைக்கு இரு மகன்களும்,மருமகள்களும்,தங்கள் பிள்ளைகளோடு வந்துவிட்டனர் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில் கனகம்மாவிர்க்கு சாப்பாடு இறங்கவில்லை,சோர்வாகவும், ஏதோ சிந்தனையுமாக, முகம் வாடி இருந்தாள். அதை சரோஜா கவனித்து கூற, அனைவரும் விசாரித்தனர். யாருக்கும் சரியாக பதில் அளிக்காமல் ஒன்றும் இல்லை நன்றாகதான் உள்ளேன் எனக் கூறி அனுப்பி வைத்தாள். யாரிடமும் சரியாக பேசவில்லை, இவர்களும், எல்லாம், தானாக சரியாகிவிடுவார், எனக் கூறி மற்ற பண்டிகை ஏற்பாடுகளை கவனிக்க சென்றுவிட்டனர்.

மறுநாள் காலையில் விவேக் வீட்டுக்கு வந்தான், சரவணன் மற்றும் சரோஜாவின் ஒரே செல்லமகன், சென்னையில் சுமாரான வேலை ,கனகம்மாவின் செல்ல பேரன் ,இவனிடம் மட்டும் நன்கு பேசுவாள், விவேக்கும் பாட்டியிடம் ஆசையாக இருப்பான், வந்ததும் பாட்டியிடம் போய் படுத்து தூங்கினான்., காலை எழுந்ததும் என்ன பாட்டி உடம்புக்கு? அப்பா சொன்னங்க சரியாய் சாப்பிடலையாம், யார் கூடவும் சரியாய் பேசலையம்,என்ன ஆச்சு என்றான்.

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் பண்ணும் போது ,பரணில் உள்ள பழைய ஆனைக்கால் குவளையை எடுக்கும் போது உங்க அம்மாவை தேள் கொட்டியதனால்,அதை உதவாத பாத்திரம் என முடிவு செய்து நேற்று எடைக்கு போட்டுவிட்டான் உங்க அப்பன்,

உன் அம்மா மேலே உள்ள பாசத்தால்தான் போட்டு இருப்பான், அதை குத்தம் சொல்லேலே ஆன என்னை ஒருவார்த்தை கூட கேட்கலையே என வருத்தம்தான்.

இவ்ளோதானா? நான் கூட என்னமோ ஏதோ நினைச்சிட்டேன், இதோ இப்பவே எல்லார் கிட்டேயும் சொல்லி விடுகிறேன். அவங்களும் ரொம்ப கவலையா இருகாங்க , என்றான்.

அம்மா இந்த பழைய அண்டாவிற்கா இவ்வளவு வருத்த படறே? என மூத்த மகன் கேட்க மற்ற அனைவரும் சிரித்தபடி ,என்ன அம்மா இது, நாளும் கிழமையுமா , நாங்களும் பயந்து விட்டோம், என களைய முற்பட்டனர்.

உங்களை பொறுத்தவரை அது ஒரு பழைய உதவாத பாத்திரம், ஆன உங்க அப்பாவுக்கும் எனக்கும் ஏன் நம்ம குடும்பத்துக்கும் அது உயிரோட்டமுள்ள ஒரு கதா பாத்திரம்.

அந்த குவளை என்னோட கல்யாணத்தின் போது எனக்கு எங்க அம்மா செய்த வரிசை சீர், அதிலே என்னோட பெயர் எழுதி இருக்கும், எங்க அம்மா இறந்து போன பின்னே அதை பார்த்துதான் ஆறுதல் அடைவேன்.

நீங்க, மற்றும் உங்க கூட பிறந்தவங்க, உங்கள் குழந்தைகள் என நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதில் போடப்படும் சுடுநீரில் தான் சனி கிழமைகளில் குளிக்க வேண்டும், கண்டிப்பாக அன்று கறி எடுத்து கொடுத்து சமைக்கச் சொல்வார் உங்கள் தாத்தா. அவ்வளவு அக்கறை உங்கள் ஆரோக்கயத்தின் மேல் அவருக்கு.

இப்பதானே 150 நாள் வேலை, அப்ப எல்லாம் அது கிடையாது, சாகுபடி, விவசாய வேலைகள் இல்லாத காலத்தில், மற்றும் மழை காலத்திலும் இந்த அண்டாதான், தான் அடகு போய் நமக்கு சோறு போடும்,

நம்ம வசதியான இந்த நிலை, பெரியவன் வேலைக்கு போய்த் தானே, வந்தது. அது வரை நம்ம விருந்தினார்களிடமும், சொந்த பந்தங்களிடமும் நமது நிலை, தடுமாறாமல் இருக்க இந்த அண்டா எத்தனைமுறை நம்ம வீட்டிலிருந்து செட்டியார் கடைக்கும், சேட்டு கடைக்கும் அடகு போகும் தெரியுமா?

இந்த அண்டா அடகு போய் கடையிலே கவிழ்ந்தாதான் நம்ம வீட்லே சமையல் பாத்திரம் தலை நிமிரும். அதில் உள்ள கீறல்களும், நசுங்கள்களுக்கும் என்ன காரணம் என்பது எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்தவைகள், அதில் ஏற்பட்ட கீறல்களுக்காக உங்கள் அப்பா அந்த சேட்டிடம் சண்டை போட்டதும், ஒரு முறை அதை அடகு வைத்து குடித்து, அதற்காக நான் அவரிடம் போட்ட சண்டையில் ஏற்பட்ட நசுங்கள்களும் , இப்படி பல சங்கதிகள் அதில் உண்டு.

ஆனா, உங்க தாத்தா என்ன ஆனாலும் தீபாவளி போது இந்த அன்டாவை மீட்டு, அதில்தான் உங்கள் அனைவரையும் நீராட்டுவார், அதுவும் தளைக்க தளைக்க சுடு நீரும் ,அது கொதிக்கும் போது பிடி காதுகள் இரண்டும் தாளம் போடுவதே அழகு அதை ரசித்து ஆ, “தண்ணீ கொதிச்சிடுச்சு” எனக் கூப்பிட்டு ஒவ்வொருவரையும் ரசிச்சு குளிப்பாட்டுவார், இப்போதான் இரு வருடமாக அதில் ஓட்டை விழுந்ததால் அதை நாமும் பயன் படுத்துவதில்லை. அதுவும் என்னை போல உதவாத பாத்திரமாய் ஓரம் கட்டி வைக்கப்பட்டு விட்டது .

மற்றவர்கள் புரிந்துகொண்டு செயலுக்கு வருத்தம் தெரிவித்து கலைந்து சென்றனர்.

விடிந்தால் தீபாவளி , விவேக் தன் நண்பனுடன் வெளியே புறப்பட்டான் ,

மதியம் சாப்பிட கூட வரவிலலை, ஒரு போன் கூட செய்யவில்லை, அனைவரும் கவலையாக சாப்பிடாமல் அவனுக்காகக் காத்து இருந்தனர்.

பாட்டி, பாட்டி…., என கத்திக் கொண்டே விவேக் ஒரு அண்டாவுடன் உள்ளே வந்தான்.

இது என்னடா புதுசா? எதுக்குடா இப்போ? என்றார் விவேக் அப்பா .

அப்பா இது புதுசு இல்லை, நீங்க வேண்டாம் என்று நினைத்து எடைக்கு போட்டிங்களே அதே அண்டா, காலை முதல் சுற்றி அதை கண்டுபிடித்து மேற்கொண்டு பணம் கொடுத்து வாங்கி வந்தேன் என்றான்.

போடா லூசு, அதுக்கு நீ புதிதாகவே ஒன்று வாங்கி இருக்கலாம், நீ கொடுத்த காசுக்கு, என்றனர் அனைவரும்.

பழசாகி விட்டதாலும், உபயோகம் இல்லாததாலும் ஒரு பொருளை வேண்டாம் என்று ஒதுக்குவதை பார்த்து நாளை நமக்கும் இதே நிலைதானோ? என மனசு சஞ்சலமடைந்ததுதான் பாட்டிகு ஏற்பட்ட ஒரே வருத்தம், அதை புரிந்து கொள்ளுங்கள் முதலில்.

எல்லா பொருளும் அதன் மதிப்பும், பயனும் சார்ந்து மட்டும் இல்லை, சில பொருள்கள் உணர்வும் சம்பந்தப் பட்டது. எனக் கூறி,

நாளைக்கு நாம எல்லோரும் இந்த அண்டாவில் சுடு நீர் போட்டுத்தான் குளிக்க போகிறோம், அதற்கான ஏற்பாடுகளை நான் கவனிக்கிறேன் ,நீங்க எல்லோரும் போய் மற்ற வேலைகளை கவனிங்க என்றான், விவேக்.

பாட்டி சந்தோஷமடைந்தாள், ஆணை கால் குவளை யின் ஒடுக்கு ஒன்று கனகம்மாவை பார்த்து சிரித்தது போல் இருந்தது .

தாத்தாவுக்கு ஏற்ற பேரன் என கன்னம் வழித்து திருஷ்டி கழித்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “ஆணைக் கால் குவளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *