அம்மாகிட்ட உண்மையே சொல்லிடலாம்ப்பா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 6,130 
 
 

அம்மா!,நான் காலேஜுக்கு கிளம்பறேன், ரொம்ப லேட்டாயிடுச்சி” என்று கத்திக் கொண்டே காலேஜுக்கு கிளம்பினாள் சுதா. “ஜாக்கிறதையா போய் வா,ஸ்கூட்டரை கவனிச்சு ஓட்டு” என்று சொல்லி விட்டு தன் மகள் சுதாவுக்கு ‘டா’ ‘டா’ காட்டி விட்டு வீட்டுக்கு உள்ளே வந்தாள் மரகதம்.

உள்ளே வந்து சமையல் ரூமுக்குப் போய் கணவனுக்கு நாஷ்டாவை எடுத்து வந்து கணவன் உட்கார்ந்து இருக்கும் ‘டைனிங்க் டேபிள்’ மேல் வைத்து விட்டு,தனக்கு கொண்டு வந்து இருக்கும் நாஷ்டாவையும் வைத்துக் கொண்டு அவர் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டாள் மரகதம்.நாஷ்டாவை சாப்பிட்டுக் கிட்டே மரகதம் “ஏங்க,சுதா அடுத்த வாரம் அவங்க காலேஜ் ‘ப்ரென்ட்ஸ்களுடன்’ ஊட்டிக்கு நாலு நாள் ‘டூர்’ போகப் போறாளே,பயப் பட ஒன்னும் இல்லையேங்க” என்று கவலையோடு கேட்டாள்.“ஏன் மரகதம், நீ பயப்படறே.நம்ப சுதா கூடவே படிக்கிற,உன் தம்பிப் பையன் சுரேஷூம் தான் போய் வரப் போறான்.அவன் நம்ப சுதாவுக்கு முறை மாமன் இல்லையா?படிப்பு முடிஞ்சதும் ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல வேலை கிடைச்சதும்,நாம பாக்கு வெத்திலை மாத்திக்கிறதா இல்லை முடிவு பண்ணி இருக்கோம். அவன் நம்ப சுதா கூட இருக்கும் போது நீ வீணா ஏன் கவலைப் படறே” என்று சொல்லி விட்டு எழுந்துப் போய் தன் கைகளை கழுவப் போனார்.”அவ கழுத்திலே ஊர் அறிய ஒரு தாலி ஏற வரைக்கும் என் பயம் போவாதுங்க.வயசு பசங்க.இப்போ வர ‘சீரியல்’ எல்லாம் பாக்க, பாக்க,என் பயம் அதிகம் தான் ஆவுதுங்க.நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க”என்று அந்த காலத்து பழக்க பழக்கங்களிலே ஊறிப் போன மரகதம் சொன்னாள்.“பேசாம அந்த மாதிரி ‘சீரியல்’ எல்லாம் பாக்காம இருந்து வா”என்று சிரித்துக் கொண்டெ சொல்லி விட்டு பாங்குக்கு கிளம்பிப் போனார் ராமசாமி.

சமையல் ரூமில் ‘காஸ் ஸ்டவை’ சா¢யாக ‘ஆப்’ பண்ணி இருக்குமா, என்று ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பார்த்து விட்டு மீதம் இருந்த நாஷ்டாவை மூடி வைத்து வைத்து விட்டு தான் வே லை செய்யும் பாங்குக்குக் கிளம்பிப் போனாள் மரகதம்.“உன் செலவுக்கு இந்த பத்தாயிரம் ரூபாயை வச்சுக்க.ஜாக்கிறதையா போய் வா.‘டூரை’ நல்லா ‘எஞ்சாய்’ பண்ணு” என்று சொல்லி தன் மணைவி யுடன் தன் செல்லப் பொண்ணை ஊட்டிக்கு வழி அனுப்பினார் ராமசாமி.கண்ணில் கண்ணீருடன் நின்றுக் கொண்டு இருந்த மரகத்ததை “எதுக்கு மரகதம் கண்லெ தண்ணி விடறே,சின்ன குழந்தை மாதிரி.உள்ளே வா”என்று சொல்லி மரகத்ததை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தார் ராமசாமி.

சந்தோஷமாக ஊட்டி ‘டூரை’ முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் சுதா..

ரெண்டு வாரத்திற்கு எல்லாம் வருடாந்திர பா¢¨க்ஷ ஆரம்பிக்க இருக்கவே சுதா தன் பாடங்க ளை மிகவும் கவனமாக படித்து வந்தாள்.வருடாந்திர பா¢¨க்ஷகளை எல்லாம் மிகவும் நன்றாக எழுதி முடித்தாள் சுதா.“மரகதம், இன்னும் ரெண்டு மாசத்திலே நம்ப சுதா ‘பஸ்ட் க்லாஸிலே’ MBBS பாஸ் பண்ணீன ஒரு டாக்டர் ஆகி விடுவா” என்று சந்தோஷத்தில் சொன்னாள்.”ஆமாங்க, எனக்கும் ரொம் பவே சந்தோஷமா இருக்குங்க”என்று கணவன் சொன்னதை ஆமோதித்தாள் மரகதம்.

ஒரு நாள் காலையில் எழுந்த சுதாவுக்கு லேசாக தலை சுத்தியது.சீக்கிரமா பல்லை தேய்த்து விட்டு காபி குடிக்கலாம் என்று நினைத்து ‘பாத் ரூமுக்கு’ வேகமாகப் போனாள்.அவளுக்கு வாந்தி முட்டிக் கொண்டு வந்தது.அவளால் அதை அடக்க முடியாமல் வாந்தி எடுத்தாள்.சுதா வாந்தி எடுப்ப தைப் பார்த்த மரகதம் மிகவும் பயந்துப் போய் ஓடி வந்து சுதாவின் தலையைப் பிடித்துக் கொண்டு “என்ன சுதா,ஏம்மா வாந்தி எடுக்கறே.ராத்திரி சாப்பிட்டது ஏதாச்சும் ஜீரணம் ஆவலையாம்மா “என்று பயந்து கொண்டே கேட்டாள்.சுதா வாந்தி எடுத்து விட்டு தன் வாயை துடைத்துக் கொண்டு “எனக்கு ஒன்னும் புரியலேம்மா.தலையை வேறே சுத்துதும்மா” என்று சொல்லி தன் தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள்.

மரகதம் போட்ட சத்தத்தில் விழித்துக் கொண்ட ராமசாமி மெல்ல தன் படுக்கை விட்டு மெல்ல எழுந்து கடவுளை வேண்டிக் கொண்டு ஹாலுக்கு வந்தார்.கணவனை பார்த்ததும் மரகதம் ”என்னங்க, சுதா காலையிலே எழுந்ததில் இருந்து வாந்தி எடுத்துக் கிட்டு இருக்காங்க.தலையை வேறே சுத்துன்னு சொல்றாங்க” என்று கவலையோடு சொன்னாள். சுதாவின் நெத்தியை தொட்டுப் பார்த்தார்.“நல்ல வேளை ஜுரம் இல்லே”என்று சொல்லி விட்டு “நான் இப்போ வே நம்ப “பாமிலி டாக்டரை வீட்டுக்கு வரச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு தன் செல் போனை எடுத்து ‘பாமிலி’ டாக்டரை வீட்டுக்கு வரச் சொன்னார் ராமசாமி.

அடுத்த அரை மணி நேரத்திலே ‘பாமிலி டாக்டர்’ ரமா டாக்டர் வீட்டுக்கு வந்தாள். டாகடர் சுதாவை நன்றாக பா¢சோதனைப் பண்ணி விட்டு அவள் நாடியைப் பிடித்துப் பார்த்தாள் பிறகு மகதகத்தைப் பார்த்து “கவலைப் படும்படி ஒன்னும் இல்லீங்க. எதுக்கும் பத்து மணிக்கு மேலே என் நர்ஸிங்க் ஹோமுக்கு கூட்டிக் கிட்டு வாங்க.நான் ‘டெஸ்ட்’ பண்ணி விட்டு சொல்றேன்” என்று மொட்டையாக சொல்லி விட்டுப் போனாள்.பத்தரை மணிக்கு சுதாவை அழைத்துக் கொண்டு ‘நர்ஸிங்க் ஹோமுக்’குப் போய் டாக்டரிடம் காட்டினார்கள் ராமசாமியும் மரகதமும்.டாக்டர் ரமா சுதாவுக்கு எல்லா ‘டெஸ்ட்டுகளும்’ பண்ணிப் பார்த்து விட்டு “சுதா கர்ப்பமாக இருக்காங்க” என்கிற ‘பூகம்ப’ சமா சாரத்தை சொன்னாள்.டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் மூவரும்.சுதா தன் தலையைத் தொங்கப் போட்டு கொண்டு விக்கி விக்கி அழுதுக் கொண்டு இருந்தாள்.“பாத்தீங்களா,நான் பயந்தா போலவே ஆயிடிச்சிங்களேங்க.இப்ப என்னங்க செய்யப் போறீங்க”என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள் மரகதம்.

“மரகதம் இது பொது இடம்.சத்தம் போட்டு எல்லாம் இப்படி அமக்களம் பண்ணாதே. எழுந்திரு வீட்டுக்குப் போய் யோஜனை பண்ணலாம்” என்று சொல்லி மூவரையும் அழைத்து கொண்டு வீட்டு க்கு வந்தார் ராமசாமி.”மரகதம்,அவளே விக்கி விக்கி அழுதுக் கிட்டு இருக்கா.கொஞ்சம் பொறுமையா இரு.நாம விசாரிக்கலாம்.அப்புறமா யோஜனை பண்ணலாம்”என்று நிதானமாக சொன்னார் ராமசாமி.

அழுது கொண்டே சுதா “அப்பா, எனக்கு ஒன்னுமே தெரியாதுப்பா. டாகடர் சொன்னப்ப தான் எனக்கு ‘இந்த’ விஷயம் தெரிய வந்திச்சிப்பா” என்று சொல்லி முடிக்கவில்லை உடனே மரகதம் “யார் கிட்டே காது குத்தறே சுதா.உனக்கு தெரியாம எப்படி இது நடந்து இருக்கும்.சும்மா நடிக்கிறயா. நீ சொல்ற இந்த கதையை யாருடீ நமபுவாங்க”என்று மறுபடியும் கத்தினாள்.”கொஞ்சம் சும்மா இரு மர கதம்”என்று சொல்லி விட்டு “ஏம்மா,டாக்டர் ரமா சொல்றது உண்மையா இருக்குமாம்மா” என்று ராமசாமி கேட்டது ம் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே“அப்பா,இப்ப தான் எனக்கு ஞாபகம் வருது. நான் ஊட்டி ‘டூர்’ போனப்ப எனக்குத் தெரியாம இப்படி நடந்து இருக்கு.நான்,சுரேஷ் மத்த ‘ப்ரெண்ட்ஸ்’ எல்லாம் ஒரு ராத்திரி சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்து விட்டு சாப்பிடப் போனோம். .என் கூட இருந்த எந்த அயோக்கிய பயலோ என் சாப்பாட்டிலே மயக்க மருந்தை கலந்துட்டு இருக்கான்.சாப்பிட்டவுடன் எனக்கு ரொம்ப தூக்கம் வந்திச்சிப்பா.நான் என் ரூமுக்கு தூங்கப் போயிட்டேன். காலையிலே எழுதரிச்சப்ப எனக்கு ‘இந்த மாதிரி’ நடந்து இருக்குமோன்னு ரொம்ப பயந்தேன். ’கடவுளே எனக்கு ஒன்னும் ஆகி இருக்கக் கூடாது’ன்னு நான் கடவுளை வேண்டிகிட்டேன். அப்படி ஒன்னும் ஆகாம இருந்து விட்டா இந்த நிகழ்ச்சியை யார் கிட்டேயும் சொல்லாம மறைச்சி விடலாம்ன்னு இருந்தேன். ஆனா,அந்த கடவுள் என்னை ஏமாத்திட்டா. நான் பயந்தபடியே ஆயிடிச்சேப்பா” என்று சொல்லி மறுபடியும் விக்கி விக்கி அழுதாள் சுதா.

“அப்படியா. இது எல்லாம் நடந்தப்ப சுரேஷ் எங்கே இருந்தான்.அவனும் உன் கூட தானே இருந்தான்ம்மா“என்று கேட்டார் ராமசாமி. “ஆமாம்ப்பா.அவனும் எங்கக் கூடத் தான் இருந்தான்ப்பா” என்று அழுது கொண்டே சொன்னாள். ”சரி இரு.நான் இப்ப போன் பண்ணி சுரேஷை நம்ப வீட்டுக்கு வர சொல்றேன்.அவனை விசாரிச்சா அந்த ‘அயோக்கிய பயன்னு’ யாரா இருக்கலாம்ன்னு கண்டு பிடிக்க லாம்” என்று சொல்லி சுரேஷூக்கு போன் பண்ணி உடனே தன் வீட்டுக்கு வரச் சொன்னார் ராமசாமி. பதினைஞ்சு நிமிஷத்துக்கு எல்லாம் சுரேஷ் மாமா வீட்டுக்கு வந்தான்.சுரேஷிடம் ராமசாமி டாக்டர் ரமா சுதாவைப் பத்தி சொன்ன சமாசாரத்தை சொல்லி “சுரேஷ்,’டூர்லே’ என்ன நடந்தது.யாரா இருக்கு ம் அந்த ‘அந்த அயோக்கிய’ பய.அன்னைக்கு ராத்திரி நீ சுதா கூடத் தானே இருந்தே.உனக்கு தெரி யாம எப்படிப்பா ‘இந்த’ மாதிரி நடந்து இருக்கும்” என்று மிகவும் கவலையோடு கேட்டார்.

மாமா சொன்னதை கேட்டு திடுக்கிட்டுப் போனான் சுரேஷ்.”என்ன மாமா சொல்றீங்க நீங்க. என்னால் நமப முடியலையே.யார் சுதா உன்னை ‘அப்படி’ பண்ணவன் சொல்லு.நான் இப்பவே அவன் தலையை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போறேன்”என்று கத்தினான் சுரேஷ்.”தலையை வெட்டறது அப்பு றமா செய்யலாம்.எப்படி சுதாவுக்கு இப்படி நடந்தது” என்று ஆத்திரம் பொங்க கேட்டார் ராமசாமி. “என க்கு தெரியலையே மாமா.அன்னைக்கு ராத்திரி நான் கொஞ்ச அதிகமா ‘தண்ணி’ போட்டு இருந்தே ன்.சாப்பிட்டவுடன் நான தூங்கப் போயிட்டேன்.அப்புறமா காலைலே தான் நான் எழுந்தரிச்சேன். எனக்கு என்னவோ அந்த குரு மேலே தான் சந்தேகம் வருது.அவன் தான் அடிக்கடி என் கிட்டே ‘மச்சி நீ ரொம்ப குடுத்து வச்சவன்டா.அழகு பொட்டலம்டா சுதா.அவ மாதிரி ஒரு அழகு பொம்மை கிடைக்க நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும்டா’ ன்னு அடிக்கடி சொல்லுவான்.அப்போ அவ னுக்கு சுதா மேலே இந்த மாதிரி ஒரு ‘கெட்ட ஆசை’ இருக்கும்ன்னு எனக்கு தெரியாம போச்சு மாமா. அயோக்கிய பய.நான் இப்பவே போய் அந்த கயவாளிப் பயலை கேகககறேன்” என்று கிளம்பினான் சுரேஷ்.

“உனக்கு பயத்தியமா என்ன சுரேஷ்.இப்ப நீ போய் கேட்டவுடனே அவன் ஒத்துக்கப் போறானா என்ன.அப்படி அவன் ஒத்து கிட்டா மட்டும் என்ன ஆவப் போவுது.நீ ஒரு கொலைகாரனா மாறப் போறே.அவ்வளவு தானே.சுதா வாழக்கை கெட்டது கெட்டது தானே”என்று சொல்லும் போது அவரு க்கு தன்னையும் மீறி துக்கம் வரவே அவர் குலுங்கு குலுங்கி அழ ஆரம்பித்தார்.சற்று நேரத்திற்கெல் லாம் சுரேஷின் அப்பா பரமசிவம்,அம்மா ரேவதி,பெண் உமா மூனு பேரும் ராமசாமி வீட்டுக்கு வந்தார் கள்.நடந்த சமாசாரம் பூராவையும் கேள்வி பட்ட அவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள்.மரகததற்கும் ராமசாமிக்கும் ஆறுதல் சொன்னார்கள்.கொஞ்ச நேரம அவர்கள் வீட்டில் இருந்து வீட்டுக்கு தங்கள் விட்டுக்கு வந்து விட்டார்கள் பரமசிவமும்,ரேவதியும் உமாவும்.

வீட்டுக்கு வரும் போது யோஜனைப் பண்ணிக் கொண்டு வந்த ரேவதி அவள் கணவனிடம் “நான் ரொம்ப யோஜனைப் பண்ணேங்க.நமக்கு உமாவை ஒரு நல்ல இடத்லே கல்யாணம் கட்டி குடுக் கணும் என்கிறதே மறந்திடாதீங்க. சுதா உங்க அக்கா பொண்ணாக இருக்கலாங்க.’கெட்டுப் போன’ அவங்க பொண்ணை நான் என் மருமவளா ஏத்துக்க என் மனசு சம்மதிக்கலேங்க. நிதானமா உங்க அக்கா கிட்டே இந்த முடிவைச் சொல்லிடுங்க.உமாவை சம்மந்தம் பேச வருவங்களுக்கு ‘இந்த விஷயம்’ தெரிஞ்சா அவங்க சம்மந்தம் பேச வரவே மாட்டாங்க”என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள். உடனே பரசிவம் “என்ன ரேவதி,இப்ப இப்படி சொல்றே. சுரேஷூக்கு சுதாவை கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு நம்ப ரெண்டு குடும்பமும் இத்தனை வருஷமா பேசி கிட்டு வந்து இருக்கோம். இப்ப திடீர்ன்னு ‘நாங்க சுதாவை சுரேஷூக்கு கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்’ன்னு எப்படி சொல்றது. அவங்க நம்மைப் பத்தி என்ன நினைச்சுக்குவாங்க? ரேவதி!” என்று கண்ணீர் மூட்ட கேட்டார்.

“எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க.நான் ‘கெட்டுப் போன’ அந்த சுதாவை இந்த வீட்டுக்குள்ளே வர விடமாட்டேங்க”என்று தீர்மானமாக சொல்லி விட்டாள் ரேவதி.“அம்மா,சுதாவை என்னால் மறக்க முடியாதேம்மா!.இத்தனை வருஷமா நான் சுதா தான் எனக்குன்னு சந்தோஷமா இருந்து வந் தேனேம்மா.இப்ப திடீர்னு அவளை எப்படிம்மா நான் மறப் பேன்?.சுதாவுக்கு தெரியாம தான் இந்த ‘கெட்ட நிகழச்சி’ நடந்து இருக்கும்மா”என்று சொல்லி அழுதான் சுரேஷ்.“நீ என்ன சொன்னாலும் நான் கேக்கப் போறது இல்லே!.நான் சொன்னது சொன்னது தான்.நான் அந்தப் பொண்ணை இந்த வீட்டிலே கால் வைக்க விடமாட்டேன்.இனிமே இந்த விஷயத்தை என் கிட்டே பேசாதே!” என்று திட்டவட்டமாக சொல்லி விட்டு சமையல் ரூமுக்குப் போய் விட்டாள் ரேவதி.

அடுத்த நாளே பரமசிவம் மிகவும் மனம் கஷ்டப் பட்டுக் கொண்டு தன் அக்காவுக்கு ரேவதி செய்த தீர்மானத்தை சொல்லி விட்டார்.மரகதம் சுதாவை வெறுக்க ஆரம்பித்தாள்.அவளுக்கு சுதாவை தன் பொண்ணு என்று சொல்லிக் கொள்ளவே மனம் இடம் கொடுக்கவில்லை.அடுத்த நாளே மரகதம் தன் கணவனிடம் “எனக்கு இந்த வீட்லே இருக்கவே பிடிக்கலீங்க.நீங்க உங்க பொண்ணோடு இந்த வீட்லெ இருந்து வாங்க!.நான் என் அம்மா வீட்டுக்குப் போறேங்க”என்று சொல்லி விட்டு அடுத்த ரெண்டாவது மணி நேரத்திலே தன் துணிமணிகள்,நகைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு அம்மா வீட் டுக்கு கிளம்பினாள்.பரமசிவமும் சுதாவும் எவ்வளவு கெஞ்சியும் மரகதம் கேட்காமல் அவள் அம்மா வீட்டுக்கு கிளம்பிப் போய் விட்டாள்.

இடிந்து போய் விட்டார் பரமசிவம்.சுதா அழுதுக் கொண்டு இருந்தாள்.தன் மனதுகுள்ளே அழுது கொண்டு இருந்தார் ராமசாமி.”அப்பா! என்னப்பா இது,அம்மா இப்படி நம்மை விட்டுட்டு திடீ ர்ன்னு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க,இனிமே நாம என்ன செய்யப் போறோம்ப்பா?” என்று சொல்லி விட்டு விக்கி விக்கி அழுது கொண்டு இருந்தாள்.’நடந்தது என்னமோ நடந்து போச்சு. இரு பத்தி மூனு வருஷமா செல்லமா வளத்த என் பெண்ணை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வந்து அவளை இந்த உலகத்திலே ஒரு சிறந்த குடிமகளா வாழ வைக்கணும்.இனிமே இது தான் என் வாழ்க்கையின் ஒரே குறிக் கோள்’என்று தன மனதிற்குள் முடிவு பண்ணினார் ராமசாமி.

ஒரு வாரம் போனதும் “சுதா நீ’அபார்ஷனை’ பண்ணி கிட்டு,கொஞ்ச மாசம் ஆன பிறகு வேறே ஒரு நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருந்து வாயேன்”என்று கரிசன மாக சொன்னார் ராமசாமி.சுதாவுக்கு அப்பா சொன்னது பிடிக்கவில்லை.அவள் தீர்மானமாக “அப்பா, நான் இந்த குழந்தையே ‘அபார்ஷன்’ பண்ண மாட்டேன்.நான் ஒரு டாக்டர்ப்பா.இந்த ‘சிசு’ என்ன பாவம் பண்ணிச்சுப்பா.இந்த குழந்தையே நான் பெத்து கிட்டு,அதை நல்லா வளத்து,நல்லா படிக்க வச்சு,என்னைப் போல ஒரு டாக்டராக்காப் போறேன்.எனக்கு கல்யாணமே வேணாம்ப்பா” என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னாள்.உடனே ராமசாமி “இதோ பார் சுதா.அப்பா பேர் தெரியாத குழ ந்தையே இந்த உலகத்திலே வளப்பது அவ்வளவு சுலபம் இல்லேம்மா.உனக்கு தெரியாதது ஒன்னும் இல்லேம்மா”என்று பெண்ணின் கையைப் பிடித்து கெஞ்சினார்.

ஆனால் சுதா தன் தீர்மானத்தில் பிடிவாதவாக இருந்தாள்.கொஞ்ச நேரம் ஆனதும் சுதா “அப்பா,நான் வீட்டில் இருந்துக் கிட்டே என் ‘மெடிக்கல்’ புஸ்தகங்களை எல்லாம் மறக்காம இருக்க படிச்சு வந்து குழந்தை பொறந்த பிறகு,மறுபடியும் என் உடம்பில் தெம்பு வந்ததும் நான் அருகில் இரு க்கும் ‘சர்சுக்கு’ போய் என் பேரை ‘மேரி’ன்னு மாத்தி கிட்டு,அப்புறமா நான் MD கேர்ஸில் சேர்ந்து ஒரு MDஆகி,ஒரு பெரிய ‘நர்ஸிங்க் ஹோமை’த் திறந்து நிறைய ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து வர ஆசைபடறேன்ப்பா.நீங்க எனக்கு ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்’ திறக்க எனக்கு பண உதவி பண்ணுவீங்களா ப்பா” என்று அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.உடனே ராமசாமி தன் கண்களில் கண்ணீர் மல்க “நீ அப்படி தான் வாழ்ந்து இருந்து வர ஆசைப் படறேன்னா,நான் உன் ஆசையை நிச்சியம் பூர்த்தி பண்றேன்ம்மா.நீ கவலைப் படாம இருந்து வாம்மா” என்று சொன்னார்.சுதா அவள் மெடிக்கல்’ புஸ்தங்களை எல்லாம் படித்து வந்து தன் பொழுதை கழித்து வந்தாள்.

சுதா ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள்.பத்து நாள் ஆனதும் பிறந்த குழந் தையை அருகில் இருக்கிற ‘சர்ச்சு’க்கு எடுத்துக் கொண்டு போய் ‘பாதரைப்’ பார்த்து தன் குழந் தைக்கு ‘ஜான்’ என்கிற பேரை வைத்து விட்டு,தன் பேரையும் ‘மேரி’ என்று மாற்றிக் கொண்டாள் சுதா.அன்றில் இருந்து மேரி கால் கணுக்கால் வரைக்கும் மறைகும் ஒரு நீள வெள்ளை உடையை அணிந்து வந்தாள்.அவள் எப்போதும் கழுத்தில் பள பளக்கும் வெள்ளி சிலுவை மாட்டிக் கொண்டு இருந்தாள்.மேரி MD கோர்ஸில் சேர்ந்து படித்து ‘பஸ்ட் க்லாஸில்’ பாஸ் பண்ணினாள்.

ராமசாமி தான் வேலை செய்து வரும் ‘பாங்க்¢ல்’ லோன் போட்டு,அவர் கைக்கு பணம் வந்ததும் ‘நர்ஸிங்க் ஹோம்’ ஒன்றை கட்ட ஒரு நல்ல இடத்தை விலைக்கு வாங்கி கட்டிடம் கட்ட ஏற்பாடு பண் ணினார்.‘நர்ஸிக் ஹோம்’ ரெடி ஆகும் வரை மேரி ஒரு பெரிய ‘ஹாஸ்பிடலி’ல் டாக்டராக வேலை செய் து வந்தாள்.ரெண்டு வருஷம் ஆனதும் ‘நர்சிங்க் ஹோம்’ ரெடி ஆயிற்று.மேரி அந்த ‘நர்சிங்க் ஹோமுக் கு ‘மேரி நர்ஸிங்க் ஹோம்’ என்று பேர் வைத்தாள்.ரெண்டு வருஷத்துக்குள்ளே ‘மேரி நர்ஸிங்க் ஹோம்’ மிகவும் பிரபலம் அடைந்து மிக நன்றாக நடந்து வந்துக் கொண்டு இருந்தது.ராமசாமி ‘பாங்க்’ வேலை யி¢ல் இருந்து ‘ரிடையர்’ஆனதும்,மகள்’ நர்ஸிங்க் ஹோமிலிலேயே’ ஒரு மானேஜராக வேலை பார்த்து வந்தார்.

தன் கூட வேலை செய்து வரும் டாக்டர் பெண்ணுக்கு பெங்களூரில் நடந்த ஒரு கல்யாணததை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்கள் மேரியும் ராமசாமியும்.அவர்கள் கண் எதிரே எதிர் வாடையில் வந்துக் கொண்டு இருந்த ‘இண்ணோவ’¡ கார் மீது ஒரு தண்ணி லாரி மோதி ‘இன்னோவா’ கார் அப்பளம் போல நொறுங்கிப் போய் இருந்தது.இதை பார்த்த மேரி தன் டிரை வரைப் பார்த்து “டிரைவர் காரை கொஞ்ச ஓரமா நிறுத்து” என்று உரக்க கத்தவே அந்த டிரைவரும் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்.மேரியும்,அவள் அப்பாவும் வேகமாக கார் கதவைத் திறந்து கொ ண்டு வெளியே வந்து ‘ஆக்ஸிடெண்ட்’ நடந்த இடத்திற்கு ஓடி வந்தார்கள்.காரில் இருந்த மூனு பே ரும் மூச்சு பேச்சு இல்லாம ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு இருந்தார்கள்.அவர்களைப் பார்த்த மேரிக்கும்,அவள் அப்பாவுக்கும் தூக்கி வாரிப் போட்டது.மேரி உடனே ‘ஹைவே ஆம்புலன்ஸ்க்கு’ ‘போன் பண்ணி ‘ஆக்ஸிடெண்ட்’ நடந்த கிலோ மீட்டர் நம்பரை சொல்லி உடனே வர சொன்னாள். மேரி “அப்பா ‘ஹைவே ஆம்புலன்ஸ்’ வந்தவுடன் நான் இவங்க மூனு பேரையும் ஏத்திக் கிட்டு ‘அப் போலோ ஹாஸ்பிடலுக்கு ’ப் போய் இவங்களுக்கு அவசர வைத்திய சிகிச்சை தர ஏற்பாடு பண்றேன். நீங்க வீட்டுக்கு போய் காரை விட்டுட்டு,வயத்துக்கு ஏதாவது சாப்பிட்டு விட்டு அப்புறமா ‘அப்போ லோ ஹாஸ்பிடலுக்கு’ வாங்க.மனசே தேத்தறவு பண்ணிக்குங்க.நடந்தது நடந்து போச்சு”என்று சொ ன்னாள்.மேரி சொன்னது போல ராமசாமி அவர்கள் வந்த காரில் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தார். வழி நெடுக ‘அநியாயமா மரகதமும்,அவ அப்பா,அம்மாவும்,இப்படி அடிப் பட்டு இருக்காங்களே.கடவு ளே அவங்களே எப்படியாச்சும் தயவு செஞ்சு பிழைக்க வைப்பா’ என்று வேண்டிக் கொண்டே போய் கொண்டு இருந்தார்.

‘அப்போலோ ஹாஸ்பிடலுக்’குள் போய் தன்னை அறிமுகம் பண்ணிக் கொண்டு மூவரையும் ‘அட்மிட்’ பண்ணி அவசர சிகிச்சை அளிக்க ஏற்பாடு பண்ணினாள் மேரி.அங்கு இருந்த டாக்டர்கள் மூவரையும் I.C.U.க்குள் அழைத்துப் போனார்கள்.வீட்டிற்கு போய் காரை விட்டு விட்டு, ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு,ராமசாமி ‘அப்போலோ ஹாஸ்பிடல்’ I.C.U.க்கு வந்தார்.ஒரு மணி நேரம் கழித்து I.C.U.க்குள் இருந்து வெளியே வந்த டாக்டர் ஒருவர் “சாரி மேடம், பெரியவங்க ரெண்டு பேரும் இங்கே வரும் போதே இறந்துப் போய் விட்டு இருக்காங்க.எங்களாலே ஒன்னும் செய்ய முடியலே. ஆனா கூட வந்த அந்த அம்மா இன்னும் மயக்கம் தெளியாம படுத்துகிட்டு இருக்காங்க”என்று சொல்லி விட்டு I.C.U.க்குள் போய் விட்டார்.மேரி இறந்துப் போன பெரியவங்களுக்கு வைத்திய செலவுக்கு கட்ட வேண்டிய பணத்தை ‘ஹாஸ்பிடலு’க்கு கட்டி விட்டு ‘மார்ச்சுவா¢’ ’யில் இறந்து போன வர்களின் ‘பாடியை’ வெளியே வாங்கினாள்.தன் மாமனார் மாமியார் இருவருக்கும் ‘அந்திம’ கிரியை களை எல்லாம் செய்து முடித்து விட்டு வீட்டுக்கு வந்து குளித்து விட்டு ராத்திரி பத்து மணிக்கு மறு படியும் அப்போலோ ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள் ராமசாமியும்,மேரியும்.மணி பத்தரை இருக்கும். I.C.U வில் இருந்து ஒரு டாக்டர் வெளியே வந்து “அவங்க இன்னும் மயக்கமா தான் இருக்காங்க.நீங்க வீட்டுக்குப் போய் விட்டு,காலையிலே வாங்க.அதுள்ளார அவங்க கண் முழிச்சிடுவாங்க”என்று சொல்லி விட்டு மறுபடியும் I.C.Uக்குள் போய் விட்டார்.

மேரியும் ராமசாமியும் வருத்தத்துடன் ‘ஹாஸ்பிடலு’க்கு வெளியே வந்து ஒரு ‘டாக்ஸியில்’ ஏறி க் கொண்டார்கள்.காரில் வரும் வழியில் மேரி தன் அப்பாவிடம் “அப்பா,நாளைக்கு காலையிலே அம் மா கண் முழிச்சதும் அவங்களை நீங்க பாக்கும் போது உங்களை நிச்சியமா அடையாளம் கண்டு பிடிச் சிடுவாங்க.உங்களை பார்த்து எல்லா விவரமும் கேப்பாங்க.’ஹாஸ்பிடல்’ வைத்திய செலவு யார் பண் ணாங்கன்னும்’ கேப்பாங்க.அவங்க கிட்டே நீங்க தயவு செஞ்சி என்னை பத்தின எந்த விவரமும் சொ ல்லாதீங்க.எல்லா வைத்திய செலவையும் நீங்க தான் பண்ணீங்கன்னு ஒரு பொய்யை சொல்லுங்க.நீ ங்க வேலைலே இருந்து ரிடையர் ஆன பிறகு ‘மேரி நர்ஸிங்க் ஹோமில்’ ஒரு மானேஜராக வேலை செ ஞ்சி வருவதாக சொல்லி,என்னை அந்த ‘மேரி நர்ஸிங்க் ஹோமின் ஓனர்’ன்னும் இன்னொரு பொய் யையும் சொல்லுங்கப்பா.அம்மாவுக்கு இப்போ என்னைப் பத்தி ஒரு விவரமும் சொல்லாதிங்கப்பா” என் று அப்பாவின் கைகயைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் “சரிம்மா, நீ சொன்னபடியே நான் சொல்றேம்மா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அடுத்த நாள் மத்தியானம் ரெண்டு மணிக்கு லேசாக கண் முழித்தாள் மரகதம்.‘டியூட்டி நர்ஸ்’ ஓடி வந்து ‘ட்யூட்டி டாக்டர்’ கிட்டே“டாக்டர் ,அவங்க கண்ணை முழிச்சு கிட்டாங்க”என்று சொன்னதும் டாக்டர் ICUக்குள் போனார்.‘ட்யூட்டி’ டாக்டரை பார்த்து,மரகதம் “என் கூட என அம்மாவும், அப்பாவும்,வந்தாங்களே.அவங்க இப்போ எங்கே இருக்காங்க டாக்டர்” என்று முனகிக் கொண்டே கேட்டாள். “அவங்க ரெண்டு பேரும் ‘ஹைவே ஆம்புலன்ஸ்’ கொண்டு வரும் போதே வழியிலேயே இறந்து விட்டாங்க” என்று சொன்னதும் மரகதம் “‘ஓ மை காட்’” என்று சொல்லி தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.ரெண்டு நிமிஷம் ஆனதும் அந்த ‘டியூட்டி’ டாக்டர் “மேடம், ஒரு பெரியவர் ஒருத்தர் உங்க அம்மா அப்பாவுடைய மருமகன் நான்னு சொல்லி கிட்டு வந்து,உங்க அம்மா அப்பா ‘பாடியை’ நேத்து வாங்கி கிட்டுப் போய் அவங்களுக்கு எல்லா ‘ஈமக் கிரியைகளையும்’ செஞ்சு இருக்காருங்க.அவர் வெளியே காத்து கிட்டு இருக்காரு.நான் அவரை உங்களைப் பாக்க வரச் சொல்லட்டுமா”என்று கேட்டவுடன் மரகதம் “அவரை தயவு செஞ்சி உள்ளே அனுப்புங்க டாகடர்” என்று சொன்னவுடன் டாக்டர் அருகில் இருந்த நர்ஸி டம் “நர்ஸ் வெளியே உக்காந்து இருக்கும் பெரி யவர் கிட்டே சொல்லி அவரை ஒரு நிமிஷம் ICUக்கு வந்து இவங்களை பாத்து விட்டு போக சொல் லுங்க”என்று சொல்லி அனுப்பினார்.ஐஞ்சு நிமிஷம் கழிச்சு ராமசாமி I.C.U க்குள் வந்து மரகதத்தை பார்த்தார்.தன் கணவரைப் பார்ததும் மரகதம் “நீங்களா,எப்படிங்க நீங்க இங்கே வந்து இருக்கீங்க …” என்று கேட்டதும் ராமசாமி நிதானமாக தன் கண்க ளில் கண்ணீர் முட்ட எல்லா விவரத்தையும் சொன்னார்.

மரகத்துக்கு எடுத்த MRI ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவ ரெண்டு கால்களும் முட்டிக்கு கீழே மிக வும் நசுங்கி முட்டிக்கு கீழே ரத்தம் ஓட்டமே இல்லாமல் இருந்தது. ரிப்போட்டைப் பார்த்த டாக்டர் “MRI ‘ஸ்கேன்’ ‘ரிப்போர்ட்டில்’ உங்க ரெண்டு கால்லேயும் முட்டிக்கு கீழே ரத்த குழாய்கள் நசுங்கி ரத்த ஓட்டம் தடைப்பட்டு இருக்கு. உங்க உயிரை காப்பாத்த நாங்க ரெண்டு கால்களையும் முட்டிக்கு க் கீழே அறுவை சிகிச்சை செஞ்சு,அவைகளை எடுத்தே ஆகணும்” என்று சொல்லி விட்டு மரகதத்தின் ரெண்டு கால்களீன் முட்டிக்கு கீழே அறுவை சிகிச்சை செய்து மறுபடியும் அவளை ICU க்குள் கொண்டு வந்து விட்டார்கள்.மரகதத்தை ICU க்குள் கொண்டு வந்து விட்ட பிறகு ‘டியூட்டி நர்ஸ்’ வெளியெ காத்து இருந்த ராமசாமியிடம் எல்லா விஷயத்தையும் விவரமாக சொன்னார்.கொஞ்ச நேறம் ஆனதும் “அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சு விட்டதுங்க.நீங்க அவங் களை வந்து பார்க்கலாங்க” என்று சொன்னதும் ராமசாமி ICUக்குள் வந்து மரகத்ததைப் பார்த்தார்.அவருக்கு அழுகை முட்டியது. மெல்ல பொறுத்து கொண்டார்.மரகதம் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டு இருந்தாள்.

கொஞ்ச நேரம் ICU வில் இருந்து விட்டு ராமசாமி வீட்டுக்கு வந்து விட்டார்.மேரி ‘நர்ஸிங்க் ஹோமி’ல் இருந்து திரும்பி வந்ததும், ராமசாமி அழுதுக் கொண்டே மேரியைப் பார்த்து “அம்மா ரெண் டு கால்களின் முட்டிக்கு கீழே அறுவை சிகிச்சைப் பண்ணீ எடுத்து விட்டு இருக்காங்கம்மா” என்று சொல்லி விட்டு குலுங்கி குலுங்கி அழுதார்.மேரி மெல்ல அப்பாவை சமாதானப் படுத்தி சாப்பிட வைத் தாள்.அடுத்த நாள் டாக்டர்கள் மரகத்தை ஒரு தனி ரூமில் கொண்டு வந்து விட்டார்கள்.ராமசாமி மரகதத்தை பார்க்க ‘அப்போலோ ஹாஸ்பிடலு’க்கு வந்தார்.ராமசாமி ‘ரிசப்ஷனில்’ விசாரித்துக் கொண் டு,மரகதம் படுத்து இருந்த தனி ரூமுக்கு வந்து மரகதத்தை பார்த்தார். தன் கணவரைப் பார்த்ததும் மரகதம் பொங்கி வரும் தன் அழுகையை மெல்ல அடக்கிக் கொண்டு,அவரைப் பார்த்து “கர்வத்தாலே உங்களையும் சுதாவையும் வேணாம்ன்னு நான் சொல்லிட்டுப் போன எனக்கு அந்த கடவுள் என் ரெ ண்டு கால்களையும் எடுக்க வச்சு நீங்களே கதின்னு உங்க கிட்டே கொ ண்டு வந்து சேத்துட்டார் பாருங்க.நான் பட்ட கர்வத்துக்கு எனக்கு கடவுள் நல்ல தண்டனையை கொடுத்துட்டாருங்க”என்று சொல்லி விட்டு மறுபடியும் குலுங்கி குலுங்கி அழுதாள்.“அழாதே மரகதம்.அது நடந்து போன பழங் கதை.இப்ப அதை ஏம்மா ஞாபகப் படுத்தி மனசை கஷ்டப் படுத்திக்கறே. அழாதே” என்று சொல்லி மரகத்திற்கு தேத்தறவு சொன்னார்.ஒரு பத்து நிமிஷம் ஆனதும் மரகதம் “ஏங்க நான் சுதாவை வேணா ம்ன்னு சொல்லி வீட்டை விட்டு கிளம்பிப் போன பிறகு என்ன நடந்தது ங்க”என்று கேட்டாள்.

மேரி சொன்னது ஞாபகம் வரவே ராமசாமி ”நீ போன பிறவு ரெண்டு நாள் கழிச்சு சுதா என் னைப் பாத்து ‘அப்பா,நான் இந்த வீட்டை விட்டு வெளீயே போறேம்ப்பா. என்னை நீங்களும் அம் மாவும் MBBS படிக்க வச்சு இருக்கீங்க.என் போறாத காலம் என்னை எவனோ ‘கெடுத்துட்டான்’. இனிமே என் வாழ்க்கையை நான் பாத்துக்கறேம்ப்பா”ன்னு சொல்லிட்டு தன் சூட் கேசை எடுத்துக் கிட்டு வீட்டை விட்டே போய்ட்டா. அதுக்கு அப்புறமா எனக்கு அவளைப் பத்தி ஒன்னும் தெரியாது மரகதம்.நான் ‘ரிடையர்’ ஆனதும் பொழுது போறதுக்கு ‘மேரி நர்ஸிங்க் ஹோம்’ என்கிற ‘ஹாஸ்பிடல் லே’ மானேஜரா வேலை செஞ்சு வரேன் என்று சொன்னார்.“சுதா எங்கே போனாளோ,என்ன ஆனாளோ. நான் சுதாவைப் பாத்து அப்படி சொல்லி வீட்டை விட்டு எங்க அம்மா வீட்டுக்கு வந்து இருக்க கூடாதுங்க.நான் நிதானமா யோஜனைப் பண்ணி அவளுக்கு ஆதறவா இருந்து இருந்து உங்க கூட வே இருந்து வந்து இருக்கணும்ங்க.நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேங்க”என்று சொல்லி மறு படியும் அழ ஆரம்பித்தாள் மரகதம்.

சிறிது நேரம் ஆனதும் மரகதம் தன் கணவரைப் பார்த்து “ஏங்க,என் வைத்தியத்துக்கும், என் அம்மா அப்பா வைத்தியத்துக்கும் இந்த ‘ஹாஸ்பிடல்லே’ என்ன சார்ஜ் பண்ணாங்க”என்று கேட்டதும் ராமசாமி உடனே “உன் ஆபரேஷனுக்கு ஐஞ்சு லக்ஷம் ரூபா ஆச்சு மரகதம்.இன்னும் இந்த ரூம் வாடகை மருந்து மாத்திரை எல்லாம் இனிமே தான் தரணும்.உங்க அம்மா அப்பா வைத்தியத்துக்கு ஒரு லக்ஷ ரூபாய் ஆச்சு.மொத்த பணமும் டாக்டர் மேரி டாக்டர் தான் தன் ‘க்ரெடிட் கார்ட்டிலெ’ ‘பே’ பண் ணி இருகாங்க”என்று சொன்னார். “அப்படியாங்க”என்று ஆச்சரியமாக கேட்டாள் மரகதம்.“அந்த மேரி அவ்வளவு நல்ல டாக்டராங்க.ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தோணுதுங்க”என்று சொல்லி தன் கண் களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் மரகதம்.

வீட்டுக்கு வந்ததும் ராமசாமி மேரியிடம் மரகதம் கேட்டதையும் அதற்கு அவர் சொன்ன பொய்யான பதிலையும் சொல்லி விட்டு,அம்மா “அந்த மேரி அவ்வளவு நல்ல டாக்டராங்க. ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தோணுதுங்க” ன்னு சொல்லி விட்டு கண்ணீர் விட்டாங்க என்று சொன்னார்.”அப்படி யாப்பா.அம்மா என்னே நினைச்சி ரொம்ப அழுதாங்களாப்பா” என்று கேட்டு தன் கண்ணில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் மேரி. கொஞ்ச நேரம் ஆனதும் ராமசாமி சுதாவிடம் “’ஹாஸ்பிட ல்லே’ இருந்தப்ப அம்மா என் கிட்டே’நான் சுதாவைப் பாத்து அப்படி சொல்லி வீட்டை விட்டு எங்க அம்மா வீட்டுக்கு வந்து இருக்க கூடாதுங்க.நான் நிதானமா யோஜனைப் பண்ணி அவளுக்கு ஆத றவா இருந்து இருந்து உங்க கூடவே இருந்து வந்து இருக்கணும்ங்க.நான் ரொம்ப பெரிய தப்பு பண் ணிட்டேங்க’ன்னு சொல்லி அழுதா”என்று வருத்ததுடன் சொன்னார்.

ராமசாமி மரகத்ததை ‘ஹாஸ்பிடலில்’ இரு ந்து அழைத்து கொண்டு வரும் முந்தின நாள் மேரி ஜானை அழைத்துக் கொண்டு அவள் ‘நர்ஸிங்க் ஹோம்’ பக்கத்திலே இருக்கிற ஒரு சின்ன ‘ப்லாட் டுக்கு’ குடி வந்து விட்டாள்.ராமசாமி மரகத்தை ‘ஆம்புலன்ஸ்ஸில்’ ‘வீல் சோ¢’ல் வீட்டுக்கு அழைத்து வந்தார்.வீட்டுக்குள் நுழைந்ததும் மரகதம் “இது உங்க வீடாங்க”என்று கேட்டத ற்கு ராமசாமி “ஆமாம் மரகதம்.இது என் வீடு தான்.நான் ’ரிடையர்’ ஆனதும் எனக்கு வந்த பணத்லே இந்த வீட்டை வாங்கி இருக்கேன்”என்று இன்னொரு பொய்யை சொன்னார் ராமசாமி.மேரி அப்பாவிடம் தினமும் போனில் பேசி எல்லா விஷயங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்டு வந்தாள்.மேரி மாசா மாசம் தவறாமல் ஒரு ‘நர்ஸ்’ மூலமாக அப்பாவுக்கு இருபத்தி ஐஞ்சு ஆயிரம் செலவுக்குக் கொடுத்து வந்தாள்.அந்த ‘நர்ஸ்’ பணம் கொடுத்து விட்டு போனவுடன் மரகதம் “ஏங்க,அந்த மேரி நம் செலவுக்கு இப்படி மாசா மாசம் பணம் தறாளேங்க.அவளுக்கு எவ்வளவு நல்ல மனசுங்க”என்று கேட்டவுடன் ராமசாமி “ஆமாம் மரகதம்,அவ ரொம்ப நல்ல பொண்ணு” என்று சொன்னார்.

ஒரு மாசம் ஆனதும் மரகத்தின் உடம்பில் இருந்து வந்த சக்கரை வியாதி அதிகமாகி விடவே அவளை ராமசாமி ‘மேரி நர்ஸிங்க் ஹோமில்’ கொண்டு போய் சேர்த்தார்.உடனே மேரி அங்கே ‘டியூட் டியில்’ இருந்த டாக்டரைக் கூப்பிட்டு மரகத்திற்கு வைத்தியம் பார்க்க சொன்னாள்.அப்பாவை மட்டும் தன் ரூமுக்குக் கூப்பிட்டு அம்மாவைப் பற்றி கவலைப் பட்டு பேசி வந்தாள்.”அப்பா ‘டியூட்டி’ டாக்டர் சொலவதைப் பாத்தா,அம்மா உடம்ப்லே சக்க்ரை வியாதி அதிகமாகி அவங்க சிறு நீரகம் மிகவும் பாதி க்கப் பட்டு இருக்காம்.அவங்க ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டாங்க போல இருக்கேப்பா” என்று சொல்லி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.”அப்படியாம்மா கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கேம்மா” என்று சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டார் ராமசாமி.
மரகதத்தின் உடல் நிலை ரொம்ப மோசமாகி விட்டது.மரகதம் தன் கணவரைப் பார்த்து “ஏங்க, நான் இன்னும் ரொம்ப நேரம் உயிரோடு இருக்க போவதுல்லேங்க. என் உயிர் போவதற்கு முன்னாலே சுதாவை பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்குங்க ஆனா. அது….. முடியாதேங்க. அவ இப்போ எங்கே போனாளோ,எப்படி இருக்காளோ” என்று சொல்லி தன் கண்களை மூடிக் கொண்டாள்.

ராமசாமி ருமுக்கு வெளியே போய் மேரி இடம் மரகதம் சொன்னதைச் சொல்லி அழுதார் உட னே மேரி “அப்பா இனிமெ ‘டிலெ’ பண்ணக் கூடாதுப்பா.நான் உயிரோடு இருக்கும் போது என்னை பத்தின ஏக்கத்திலே அம்மா இறந்து போவ கூடாதுப்பா.அது காலத்துக்குக்கும் என்னை வருத்தப் பட வைக்கும்ப்பா.என்னால் அதை தாங்கிகிட்டு வாழ்ந்து வர முடியாதுப்பா. வாங்கப்பா.நாம இப்போவே அம்மா ரூமுக்குப் போய் எல்லா உண்மையையும் சொல்லி அவங்களை சந்தோஷமா கண்ணை மூட வைக்கலாம்ப்பா”என்று சொல்லி விட்டு அப்பாவை அழைத்துக் கொண்டு மரகதம் படுத்துக் கொண்டு இருந்த ‘பெட்’ க்குப் போனாள்.உள்ளே போனதும் மேரி மரகதத்தை பார்த்து “அம்மா,நான் சுதா வந்து இருக்கேன்ம்மா. உங்க கண்ணைத் திறந்து பாருங்கம்மா”என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.

மகள் சுதா குரல் கேக்கவே தன் கண்களை மெல்ல திறந்து பார்த்தாள் மரகதம்.தன் எதிரே கழு த்தில் இருந்து கால் வரைக்கும் போட்டு இருக்கும் வெள்ளை கவுனுடனும்,கழுத்திலே ஒரு பெரிய வெள்ளி சிலுவையுடன் நின்றுக் கொண்டு இருந்த மேரியைப் பார்த்து “நீ.. என்… சுதாவா. என்னால் .. நம்பவே… முடிய…. லையே” என்று திக்கி திக்கி சொல்லிக் கொண்டு இருக்கும் போது ராமசாமி “ஆமாம் மரகதம், இவ நம்ப சுதாவே தான்.நான் இது நாள் வரைக்கும் உன் கிட்டே நிறைய பொய் சொ ல்லி வந்து இருக்கேன்.இப்ப எல்லா உண்மையையும் உன் கிட்டே சொல்றேன் கேளு.சுதா என்னை விட்டு எங்கும் போகலே”என்று சொல்லி விட்டு அப்புறமா நடந்தஎல்லா விவரத்தையும் அழுதுக் கொ ண்டே சொன்னார்.கொஞ்ச நேரம் ஆனதும் ராமசாமி “நானும் சுதாவும் ஒரு கல்யாணத்துக்காக பெங்க ளுர் போய் திரும்பி வந்து கிட்டு இருக்கும் போது தான் உங்க விபத்தை வழியிலே பாத்தோம் எல்லா ‘ஹாஸ்பிடல்’ செலவையும் நம்ம சுதா தான் குடுத்தா.நீஅதை வேணான்னு சொல்லிடுவேன்னு பயந் து சுதா அவளைப் பத்தின ஒரு சமாசாரத்தையும் சொல்லக் கூடாதுன்னு என் வாயை கட்டிப் போட் டுட்டா மரகதம்” என்று சொன்னார்.

“அப்படியாங்க,இவ நம்ப சுதாவாங்க.சுதா என் கிட்டே வாம்மா.என்னை மன்னிச்சிடும்மா.நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பும்மா.நான் என் கர்வத்தாலேயும், பிடிவாதத்தாலேயும் உன்னையும், அப்பாவையும் தனியா தவிக்க விட்டுட்டு,நான் எங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கக் கூடாதும்மா. நான் பண்ணது ரொம்ப தப்பும்மா”என்று மரகதம் சொல்லும் போது மேரி உடனே “அம்மா,உங்க பேர் லே எனக்கு ஒரு கோவமும் இல்லேம்மா.நீங்க நிம்மதியா இருந்து வாங்க.அது போதும் எனக்கு” என்று சொல்லும் போது மரகதத்தின் தலை சாய்ந்து விட்டது.இருவரும் மரகதத்தின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்தனை பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

ராமசாமி “அம்மா சுதா,அன்னைக்கு மட்டும் அம்மாவுக்கு நடந்த விபத்தை நாம பாக்காம இருந்து இருந்தா,என் மாமனாரும், மாமியாரும்,மரகதமும் ‘அனாதைகளா’ செத்து போய் இருப்பா ங்க.அந்த கடவுளுக்கு நாம நன்றியை சொல்லணும்ம்மா”என்று தன் கண்களை மூடிக் கொண்டு சொன்னதும் “ஆமாம்ப்பா, நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நிஜம்” என்று சொல்லி தன் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த வெள்ளி சிலுவையை எடுத்து கண்ணில் ஒத்திக் கொண்டு மனதில் ஏசு நாதருக்கு தன் நன்றியை சொன்னாள் மேரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *