அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 4,157 
 
 

அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21

“நான் நிச்சியமா உங்காத்துக்கு காத்தாலேயும்,சா¡யங்காலமும் ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தி யாரே அனுப்பறேன்” என்று சொல்லி விட்டுப் போனார் வாத்தியார்.

ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தியார் காலையிலும்,மாலையிலும் ராகவன் வீட்டுக்கு வந்து பரம சிவத்திற்கு ‘சந்தியாவந்தனம்’ பண்ணும் மந்திரங்களையும், ‘அபிவாதயே’ மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார்.

பரமசிவம் ‘சந்தியாவந்தன’ மந்திரங்களையும் ‘அபிவாதயே’ மந்திரத்தையும் இரண்டு நாளிலே யே நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டான்.

பரமசிவம் பள்ளீக் கூட நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் சந்தியாவந்த னம் பண்ணிக் கொண்டு வந்தான்.ஞாயிற்று கிழமைகளிலும்,லீவு நாட்களிலும்’ மாத்தாயான்னிகமும் பண்ணி வந்தான்.

பரமசிவம் சிதமபரத்தில் அவன் அப்பாவோடு இருந்த போது,ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பையன் சிவா அவர்கள் வீட்டுக்கு வந்து “மாமா,காத்தாலே பண்ற சந்தியாவந்தனத்தையும், மத்தி யானம் பண்ற மாத்தியான்னிகத்தையும்,சாயங்காலம் பணற சந்தியாவந்தனத்தையும் எப்போ பணறது ரொம்ப ‘ஸ்ரேஷ்டம்” என்று கேட்டான்.

”சிவா,காத்தாலே பண்ற சந்தியாவந்தனத்தை சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடியும், மத்தியானம் பண்ற மாத்தியான்னிகத்தை சூரியன் தலைக்கு நேரே இருக்கும் போதும்,சாயங்கால பண்ற சந்தியாவந்தனத்தை சூரியன் ‘அஸ்தமனம்’ஆறத்துக்கு முன்னாடியும்,பண்ணீண் டு வறது தான் ‘ஸ்ரேஷ்டம்”என்று சொல்லி விட்டு,கூடவே “நீ இதே ஞாபகம் வச்சுக்க ஒரு சின்ன வழியே சொல்றேன்.சந்தியாவந்தனத்தை சூரியன் ‘காணாமல்’’கோனாமல்’ ‘சாயாமல்’ இருக்கும் போது பண்ணணும்” என்று சொன்னார் சாம்பசிவன்.

பரமசிவத்திற்கு அப்பா அன்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

உடனே அவன் “நாம சந்தியாவந்தனம் பண்ணும் போது அப்பா நம்ம கூட இருக்க மாட்டார்ன் னு தெரிஞ்சு முன் கூட்டியே ‘சிவா’வுக்கு சொன்னார் போல இருக்கே.அன்னைக்கு அவர் சிவாவுக்கு சொன்னது,இப்போ நமக்கு உபயோகமா இருக்கே’ என்று நினைத்து சந்தோஷப் பட்டான்.

மிகவும் புத்திசாலியாக இருந்த பரமசிவம் ‘ப்ளஸ் டூவில்’ வகுப்பில் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ் செய்தான்.

அவனுக்கு அடுத்து வந்த மாணவிக்கும் முப்பது ‘மார்க’ வித்தி யாசம் இருந்தது.’பிரின்ஸிபால்’ பரமசிவத்தை தன் ரூமுக்குக் கூப்பிட்டு “’வெல் டண்’ பரமசிவம்.நீ இந்த பள்ளிக் கூட பேரை இந்த சென்னை மாநிலத்துக்கே தெரிய வச்சு,நம பள்ளீக் கூட கொடியை உயர பறக்க வச்சு இருக்கே.’ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ப்ரவுட் ஆப் யூ’ என்று சொன்னார்.

உடனே பரமசிவம் பவ்யமாக அவருக்குத் தன் நன்றியை சொல்லி விட்டு ‘பிரின்ஸிபால்’ ரூமை விட்டு வெளீயே வந்தான்.

பரமசிவத்திற்கு பாடங்கள் எடுத்த எல்லா வாத்தியார்களும் பரமசிவத்தைப் பார்த்து “பரமசிவம், நீ இந்த மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்து எங்களுக்கு எல்லாம் பெருமையைத் தேடிக் குடுத்து இருக்கே.நாங்க தான் உனக்கு ரொம்ப ‘தாங்ஸ்’ சொல்லணும்.’கங்கிராஜுலேஷன்ஸ்’ பரமசிவம்“ என்று சொல்லி தங்கள் கையைக் குலுக்கினார்கள்.

பரமசிவம் அவர்களை எல்லாம் பார்த்து “நீங்கோ எல்லாம் எனக்கு எல்லா பாடங்களையும் ரொம்ப நன்னா சொல்லிக் குடுத்ததாலே தான்,என்னால் நல்ல மார்க் வாங்க முடிஞ்சது.என்னை சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனா பாஸ்’ பண்ண வச்சதுக்கு,நான் தான் உங்க எல்லா ருக்கும் என் நன்றியைச் சொல்லணும்” என்று தன் கையைக் கூப்பி சொன்னான்.

பரமசிவனுடன் கூடப் படித்த வந்த எல்லா மாணவர்களும்,மாணவிகளும் ‘கன்கிராஜுலேஷன் ஸ்’ பரமசிவம்.நீ‘ப்ளஸ் டூ’ பரி¨க்ஷயிலே சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’ பண்ணி இருக்கே.எங்களுக்கு எல்லாம் ரொம்ப பெருமையா இருக்கு” என்று அவன் கையைக் குலுக்கிச் சொன்னார்கள்.

பரமசிவம் வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் “நான் ‘ப்ளஸ் டூ’ பரி¨க்ஷயிலே சென்னை மாநிலத் திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’ பண்ணி இருக்கேன். ‘பிரின்ஸிபாலும்’, எனக்கு பாடங்கள் சொல்லிக் குடுத்த எல்லா வாத்தியார்களும்,என் கூட படிச்ச எல்லோரும் என்னே ‘கங்கிராஜுலேட்’ பண்ணா” என்று சந்தோஷமாகச் சொன்னான்.
எல்லோரும் பரமசிவத்தை மிகவும் பாராட்டினார்கள்.

ராகவன் சந்தோஷப் பட்டு பரமசிவத்தைப் பார்த்து “பரமு,நீ இவ்வளவு புத்திசாலியா இருக்கே உன் புத்திசாலிதனத்தை பாக்க உன் அம்மா குடுத்து வக்கலே.உன் அப்பா காசிக்குப் போயிட்டா.நீ சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’ இருக்கே.எங்களுக்கே இவ்வளவு சந்தோஷமா இருக்கும் போது,உன் அம்மா உயிரோடு இருந்தா அவளுக்கும்,உன் அப்பா இப்போ நம்மோடு இருந் தா அவருக்கும் இன்னும் எவ்வளவு சந்தோஷமா இருக்கும்” என்று சொல்லி சந்தோஷத்தில் தன் கண் களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

மீரா பரமசிவத்தை கட்டிக் கொண்டு “நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா பரமு.நீ இன்னும் நிறைய படிச்சு வாழ்கைலே முன்னுக்கு வரணும்” என்று சொல்லி அவளும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சரோஜா மிகவும் நன்றாகப் படித்து வந்து வந்தாள்.அவள் ஒரு தடவை ‘டபுள் பிரமோஷன்’ வாங்கி,அந்த வருஷம் ஏழாவது வகுப்பிலே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணினள்..

ஆனால் வரதன் ஐந்தாவது வகுப்பில் ரொம்ப சுமாரான மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணினான்.

வரதன் படிப்பிலே கொஞ்சம் கூட நாட்டம் இல்லாமல் இருந்து வந்தான்.பள்ளீக் கூடம் விட்ட தும்,வீட்டுக்கு வந்து ‘காபி டிபன்’ சாப்பிட்டு விட்டு,அவன் வீட்டுக்கு எதிரே இருந்த ‘கார்பரேஷன்’ மைதானதில் கிரிகெட் ஆடிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான்.

வரதன் படிப்பில் நாட்டம் இல்லாமல்,சதா விளையாடி வந்ததைப் பார்த்த ராகவனும்,மீராவும் அவனை நிறைய தடவைக் கண்டித்து “வரதா,நீ படிப்பிலே கொஞ்சம் கூட நாட்டம் இல்லாம,சதா விளையாடிண்டு வறே.இது நல்லதே இல்லே.நீ ஒரு புருஷப் பையன்.நீ நன்னா படிச்சு ஒரு நல்ல உத்யோகத்துக்குப் போய் வரணும்.அதே சரோஜாவேப் பாரு.அவ ‘க்ளாஸ்லே’எல்லா ‘சப்ஜெக்ட்டிலும்’ முதல் மார்க் வாங்கிண்டு வறா” என்று சொல்லி வந்தார்கள்.

ஆனால் வரதன் அம்மா அப்பா சொன்னதைக் கேட்காமல்,நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த ‘கார்பரேஷன்’ மைதானத்துக்குப் போய் கிரிக்கெட் விளையாடி வந்தான்.

பரமசிவம் ‘ப்ளஸ் டூ’ பரி¨க்ஷயிலே சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’ பண்ணி இருக்கும் செய்தியை அன்றைய தினசா¢ பேப்பரில் பார்த்த ‘லயோலா கல்லூரி பிரின்ஸிபால்’ பரமசிவம் படித்து வந்த பள்ளீக் கூடத்திற்கு ‘போன்’ பண்ணி,பரமசிவத்தின் விலசத்தைக் கண்டு பிடித்து,அவனை ‘லயோலா கல்லூரிக்கு’ வந்து தன்னைப் பார்க்கும் படி ஒரு கடிதம் அனுப்பினார்.

அந்த ‘லெட்டார்’ கிடைத்ததும் பரமசிவம்,எல்லோர் இடமும் அந்த ‘லெட்டரை’க் காட்டினான். எல்லோரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

அடுத்த நாள் குளித்து விட்டு,நெற்றியிலே விபூதியை இட்டுக் கொண்டு சந்தியாவந்தனத்தைப் பண்ணிவிட்டு,’டிரஸ்’ பண்ணிக் கொண்டு,தன்னுடைய ‘ப்ளஸ் டூ’ பரி¨க்ஷ மார்க் ‘ஷீட்டின் ஜெராக்ஸ்’ பிரதியை எடுத்துக் கொண்டு,எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு,’பஸ்ஸை’ப் பிடித்து ‘லயோலா’க் கல்லூரிக்கு வந்து,’பிரின்ஸிபால் ரூம்’வாசலில் நின்றுக் கொண்டு இருந்த ‘பியூனிடம்’ ‘பிரின்ஸிபால்’ தனக்கு அனுப்பி இருந்த ‘லெட்டரை’க் காட்டினான் பரமசிவம்.

”இந்த காலேஜ் ‘பிரின்ஸிபால்’ அவரே வந்து பாக்க சொல்லி,எனக்கு இந்த ‘லெட் டரை’ எனக்கு அனுப்பி இருக்கார்.நான் உள்ளேப் போகட்டுமா” என்று பரமசிவம் கேட்டதும், அந்த ‘பியூன்’ பரமசிவ வத்தை ஏற இறங்கப் பார்த்து விட்டு “உன் பேர் என்ன.நீ ஒரு ஐயர் பையனா”என்று கேட்டதும், “என் பேர் பரமசிவம்.நான் ஒரு ஐயர் வீட்டுப் பையன் தான்” என்று சொன்னான் பரமசிவம்.

அந்த ‘பியூன்’ பரமசிவத்தை பார்த்து” நீங்க இங்கேயே இருங்க.நான் நீங்க குடுத்த ‘லெட்டரை’ ‘பிரின்ஸிபால்’ ஐயா கிட்டேத் தறேன்.அவர் உங்களே உள்ளே வரச் சொன்னா,நான் உங்களே அவர் ‘ரூமு’க்கு அனுப்பறேன்” என்று சொல்லி விட்டு,லெட்டரை எடுத்துக் கொண்டு ‘பிரின்ஸிபால் ரூமு’க் குள்ளே போனார்.

உள்ளே போன ‘பியூனிடம்’ ‘பிரின்ஸிபால்’ வேறே ஏதோ ஒரு அவசர வேலைக் கொடுத்து அனுப்பினார்.’பியூன்’ ‘பிரின்ஸிபால்’ ரூமை விட்டு வெளியே வந்து பரமசிவத்திடம் ஒன்றும் சொல்லா மல் போனான்.அந்தப் ‘பியூன்’ அப்படி போனதும்,பரமசிவதிற்கு கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது.

‘பிரின்ஸிபால்’சொன்ன வேலையை முடித்து விட்டு,அந்த ,பியூன்,மறுபடியும் ‘பிரின்ஸிபால்’ ‘ரூமு’க்குளே போனான்.

‘பிரின்ஸிபால்’’ பியூன்’ கொண்டு வந்துக் கொடுத்த ‘லெட்டரை’ வாங்கிப் பார்த்து விட்டு பியூனைப் பார்த்து “அந்தப் பையனை உள்ளே அனுப்பு” என்று சொன்னதும் “சா¢ சார்,நான் அவரே உங்க ‘ரூமு’க்கு உள்ளே அனுப்பறேன்”என்று சொல்லி விட்டு,அவர் ‘ரூமை’ விட்டு வெளீயே வந்து பரமசிவத்தைப் பார்த்து “ ‘பிரின்ஸிபால்’ உங்களே உள்ளே அனுப்பச் சொன்னார்.நீங்க உள்ளே போங்க” என்று சொன்னார்.

பரமசிவம் அந்த பியூனைத் ‘தாங்க’ பண்ணி விட்டு,அவன் தினமும் வேண்டி வரும் வினாயக ரை நன்றாக வேண்டிக் கொண்டு,பிரின்ஸிபால் ‘ரூமு’க்குள் போய் “குட் மார்னிங் சார்” என்று சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தான்.

பரமசிவத்தை பார்த்ததும் அந்த பிரின்ஸிபால் எழுந்து நின்றுக் கொண்டு “கங்கிராஜுலேஷன்ஸ் பரமசிவம்.நீ ‘ப்லஸ் டூ’ பரி¨க்ஷயிலே சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’ பண்ணி இருக்கே.நான் இந்த ‘நியூஸைப் பேப்பர்லே’ படிச்சேன்.உன்னை மாதிரி ஒரு ‘இண்டெலிஜெண்ட்’ பையன் எங்க காலேஜ்லே படிக்கணும்னு நான் ரொம்ப ஆசைப் படறேன்.நான் உனக்கு எங்க காலேஜ் லே BA படிக்க ஒரு சீட்டு கொடுத்து,இலவசமாக படிக்க வைக்கலாம்ன்னு முடிவு பண்ணீ இருக்கேன். உனக்கு எங்க காலேஜ்லே BA படிக்க ஆசையா” என்று கேட்டார்.

“எனக்கு உங்க காலேஜ்லே சேந்து BA படிக்க ரொம்ப ஆசையா இருக்கு சார்” என்று மிகவும் சந்தோஷத்துடன் சொன்னான் பரமசிவம்.

சந்தோஷப் பட்டு அந்த பிரின்ஸிபால் ”நீ வெளீயே காத்து கிட்டு இரு.நான் காலேஜ் நிர்வாகத் திடம் பேசி ‘பர்மிஷன்’ வாங்கி உனக்கு BA சேர ஒரு ‘அட்மிஷன்’ லெட்டரைத் தறேன்” என்று சொன் னதும் பரமசிவம் கண்களில் கண்ணீர் மல்க தன் கைகளைக் கூப்பி “உங்களுக்கு ரொம்ப நன்றி சார். இந்த பொ¢ய உதவியே என் வாழ் நாள் பூராவும் நான் மறக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டு தன் கண்க¨ளைத் துடைத்துக் கொண்டு, ’பிரின்ஸிபால் ரூமை’ விட்டு வெளியே வந்து உட்கார்ந்துக் கொண்டு,அவன் தினமும் வேண்டிக் கொண்டு வரும் விநாயகரை வேண்டிக் கொண்டு இருந்தான்.

அரை மணி நேரம் ஆனதும் ‘பிரின்சிபால்’ பரமசிவத்தை தன் ரூமுக்குக் கூப்பிட்டு,அவனுக்கு அந்த கலேஜ்லே BA சேர ஒரு ‘அட்மிஷன் லெட்டரை’க் கொடுத்தார்.பரமசிவம் அவரைப் பார்த்து “ரொம்ப தாங்ஸ் சார்.நான் கஷ்டப் பட்டு படிச்சு வந்து BA விலும் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனா வர முயற்சி பண்றேன்” என்று சொன்னான்.

உடனே அந்த ‘பிரின்ஸிபால்’ “பரமசிவம்,நீ சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனா ‘பாஸ்’ பண்ணா, என்னை விட சந்தோஷப் படப் போறவங்க யாரும் இருக்க முடியாது.’பெஸ்ட் ஆப் லக்’” என்று சொல்லி எழுந்து நின்றுக் கொண்டு,பரமசிவத்தின் கைகளைப் பிடித்து குலுக்கினார்.

பரமசிவம் அந்தக் கல்லூரியை நன்றாகச் சுற்றீப் பர்த்தான்.

அவனுக்கு மிகவும் ஆச்சா¢யமாக இருந்தது.’நாம இவ்வளவு பொ¢ய கல்லூரியிலா படிச்சுண்டு வரப் போறோம்’ என்று தன் மனதில் சொல்லி,ஆச்சா¢யப்பட்டுக் கொண்டே,அவன் தினமும் வேண்டி வரும் வினாயகருக்கு தன் நன்றியை சொன்னான் பரமசிவம்.

அன்று சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும்,பரமசிவம் எல்லோர் இடமும் ‘லயோலா’ கல்லூரி ‘பிரின்ஸிபால்’ கொடுத்த ‘அட்மிஷன் லெட்டரை’க் காட்டினான் பரமசிவம்.

எல்லோரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ராகவன் “பரமு,நீ எங்களுக்கு எந்த சிரமும் வக்காம BA படிக்க ஒரு ‘அட்மிஷன்’ லெட்டரை ‘லயோலா’ கல்லூரி ‘பிரின்ஸிபால் கிட்டே இருந்து வாங்கிண்டு வந்து இருக்கே.நீ கஷ்டப் பட்டு படிச்சு வந்து BA விலும் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனா வர முயற்சி பண்ணு” என்று சொன்னார்.மீரா தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “பரமு,அத்திம்பேர் சொன்னா மாதிரி,நீ பண்ணிக் காட்டணும்”என்று சொல்லி பரமசிவத்தின் தலையை செல்லமாக வருடி விட்டாள்.

“அத்திம்பேர்,அக்கா நான் கஷ்டப் பட்டு படிச்சு வந்து, BA விலும் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனா வர முயற்சி பண்ணப் போறேன்” என்று சொன்னான் பரமசிவம்.

பரமசிவம் சந்தோஷமாக அந்தக் கல்லூரிக்குப் போய் படித்துக் கொண்டு வந்தான்.சரோஜா மிக நன்றாக படித்து வந்துக் கொண்டு இருந்தாள்.வரதன் ரொம்ப சுமாராகத் தான் படித்து வந்துக் கொண்டு இருந்தான்.அவன் கவனம் எல்லாம் ‘கிரிக்கெட்’ஆட்டத்தில் தான் இருந்தது.

வரதனுக்கு வயது பதினொன்று ஆகவே,அந்த வருடத்தில் வந்த மாசி மாதத்திலே ஐந்து வாத்தியார்களை வீட்டுக்கு வரச் சொல்லி வரதனுக்கு ‘கிரமமாக’ ‘உபநயனம்’ போட்டார்கள் ராகவன் தம்பதிகள்.எல்லா வாத்தியார்களும் சமையல் கார மாமி பண்ணீ இருந்த கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டார்கள்.ராகவனிடம் இருந்த எல்லா வாத்தியார்களுக்கும் சேர்த்து ‘தக்ஷணை’யை வாங்கிக் கொண்டார் ஆத்து வாத்தியார்.

வாத்தியார் கிளம்பும் போது ராகவனைப் பார்த்து “ராகவா,நான் தினம் உங்க ஆத்துக்கு ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தியாரே அனுப்பி வரதனுக்கு சந்தியாவந்தன மந்திரத்தைச் சொல்லி குடுக்கச் சொல்லட்டுமா”என்று கேட்டதும்,”வேணாம் வாத்தியார்.நான் காத்தாலேயும்,சாயங்காலத்திலேயும் சந்தியாவந்தனம் பண்ணிண்டு வரும் போது வரதனுக்கு சந்தியாவந்தன மந்திரத்தை எல்லாம் சொல்லித் தறேன்” என்று சொன்னான் பரமசிவம்.

“அப்படின்னா சா¢” என்று சொல்லி விட்டு ஆத்து வாத்தியார்,அவர் சக வாத்தியார்களை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

உபநயனம் நடந்த அன்று சாயங்காலம் மட்டும் வரதன்,பரமசிவத்துடன் உட்கார்ந்துக் கொண்டு ‘சந்தியாவந்தனத்தை’ ப்’பண்ணீனான்.அடுத்த நாள் சாயங்காலம் பரமசிவம் காலேஜில் இருந்து இருந்து சீக்கிரமாக ஒரு ‘பஸ்ஸை’ப் படித்து வீட்டுக்கு வந்தான்.

வரதன் வீட்டில் இல்லே.சமையல் கார மாமியை ப் பார்த்து பரமசிவம் “மாமி,வரதன் எங்கே காணோம்”என்று கேட்டதும் அந்த சமையல் கார மாமி “அவன் பள்ளீக் கூடம் விட்டதும் ஆத்துக்கு வந்து ‘காபி டிபன்’ சாப்ட்டுட்டு,கிரிகெட் மட்டையை எடுத்துண்டு ‘நான் விளைடாப் போறேன்’ ன்னு கத்தி சொல்லிட்டு விளையாடப் போய்ட்டான்” என்று சொன்னதும் பரமசிவத்துக்கு கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது.

பரமசிவம் தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு ‘சந்தியாவந்தனைத்தை’ தனியாகப் பண்ணீனார்.அக்காவும்,அத்திம்பேர் வீட்டுக்கு வந்ததும் “நான் ஆத்துக்கு வருபோது வரதன் ஆத்லே இல்லே.அவன் சாயங்கால சந்தியாவந்தனம் பண்ணாம கிரிக்கெட் விளையாடப் போய் இருக்கான்” என்று வருத்ததுடன் சொன்னான் பரமசிவம்.

சுந்தரமும்,ராதாவும் வரதன் சந்தியாவந்தனம் பண்ணாமல் கிரிக்கெட் விளையாடப் போனதை நினைத்து மிகவும் வருத்தப் பட்டார்கள்.

ராகவனுக்கும்,மீராவுக்கும் வரதனை எப்படி திருத்துவது என்று தெரியாமல் தவித்தார்கள்.

ராகவன் அன்று ஒரு நாள் லீவு போட்டு இருந்தார்.

அவர் காலையிலே எழுந்தவுடன் சமையல் கார மாமி கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு, தன் அம்மா அப்பாவிடம்”உங்க ரெண்டு பேருக்கும் வயசாறது.நான் உங்க ரெண்டு பேரையும் ஒரு ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ அழைச்சுண்டுப் போய் ஒரு ‘மாஸ்டர் செக் அப்’ பண்ணீண்டு வரலாம்ன்னு ரொம்ப ஆசைப் படறேன்” என்று சொன்னார்.

உடனே சுந்தரம் “அதெல்லாம் வேணாம்ப்பா.எதுக்கு வீண் செலவு.உடம்புக்கு வந்தா நிச்சியமா ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’போய்த் தான் ஆகணும்.அப்போ இந்த ‘செக் அப்பே’ பண்ணிக்கலாமே” என்று சொன்னதும் மீரா “நீங்கோ அப்படி சொல்லக் கூடாதுப்பா.நாங்க ரெண்டு பேரும் நேத்தி ராத்திரி தான் இதேப் பத்தி யோஜனைப் பண்ணினோம். நீங்கோ ரெண்டு பேரும் சிவபுரிலே இருந்து வந்தப்ப,எந்த ‘செக் அப்’ பும் பண்ணீண்டு இருக்க மாட்டேள்.அவர் உங்க ரெண்டு பேரையும் காரணமாத் தான் கூப்பிடறார்.நீங்கோ ரெண்டு பேரும் அவரோட போய் வாங்கோ.இந்த வயசிலே உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ‘மாஸ்டர் செக் அப்’ ரொம்ப முக்கியம்”என்று சொன்னாள்.

“சா¢,ராகவா நாங்கோ வறோம்” என்று சொல்லி விட்டு,சுந்தரமும்,ராதாவும் ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு,பிள்ளையோடு ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போனார்கள்.

‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போன ராகவன் ரெண்டு பேருக்கும் ‘ஒரு மாஸ்டர் செக் அப்’ புக்கு பணம் கட்டி விட்டு அம்மா அப்பாவுடன் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.

முதலில் ராதா ‘மாஸ்டர் செக் அப்’ புக்கு ஒரு லேடி டாக்டா¢டம் போனாள்.ஐந்து நிமிடங்கள் ஆனதும் சுந்தரம் ஒரு ஆண் டக்டா¢டம் ‘மாஸ்டர் செக் அப்’ புக்குப் போனார்.
ராதாவுக்கு எடுத்த ‘மாமோகிராம் டெஸ்ட்லே’ அவளுக்கு ரெண்டு ‘ப்ரெஸ்ட்டிலும்’ ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது. உடனே அந்த லேடி டாகடர் ராகவனைப் பார்த்து “சார்,நாங்க ‘பயாப்ஸி’ பண்ணி,அந்த கட்டி சாதாரண கட்டியா,இல்லை அது ‘கான்சர்’ கட்டியா என்று கண்டு பிடிக்கணும்” என்று கண்டிப்பாகச் சொன்னார்.

ரெண்டு பேருக்கும் எடுத்த ‘மாஸ்டர் செக் அப் ரிஸல்ட்டை’ப் பார்த்த டாக்டர் ராகவனைப் பார்த்து “சார்,ரெண்டு பேருக் கும் BP கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு.கூடவே இவங்க ‘சக்கரை லெவலும்’அதிகமா இருக்கு.இவங்க ரெண்டு பேருக்கும்,சக்கரையை கண்லே காட்டாதீங்க.அரிசி சாதம் ஒரு வேளே மட்டும் தான் சாப்பி ட்டு கிட்டு வரணும்.ராத்திரி கோதுமை சாதமோ,சப்பாத்தியோ தான் குடுக்கணும்” என்று கண்டிப்பாகச் சொன்னார்.

டாக்டர் சொன்னதைக் கேட்ட சுந்தரத்துக்கும்,ராதாவுக்கும் தூக்கி வாரிப் போட்டது.

ராகவன் டாக்டரைப் பார்த்து “டாக்டர்,நான் எங்க அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் நீங்க சொன்ன சாப்பாட்டேத் தறேன்” என்று சொல்லி விட்டு,லேடி டாக்டரைப் பார்த்து “நீங்க என் அம்மாவுக்கு ‘பயாப்ஸி’ப் பண்ணீப் பாருங்க” என்று சொன்னதும்,ஒரு ‘நர்ஸ்’ ராதாவை ‘பயாப்ஸி ‘பண்ணும் இடத் துக்கு அழைத்துப் போனாள்.

சுந்தரமும்,ராகவனும் ராதா கூடவேப் போய்,அந்த ‘ரூம்’ வாசலில் போட்டு இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.

அங்கே இருந்த டாக்டர் ராதாவை ‘ஆபரேஷன் தியேட்டருக்கு’ அழைத்துக் கொண்டு போய் ராதாவுக்கு மயக்க மருத்துக் கொடுத்து விட்டு ப்ரெஸ்ட்டில்’ இருந்து கொஞ்சம் சதையை எடுத்து ‘பயாப்ஸி டெஸ்டுக்கு’ அனுப்பினார்.

ராதாவுக்கு மூன்று மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்ததும்,அவளை வெளியெ கொண்டு வந்து விட்டார்கள்.அங்கே இருந்த ‘நர்ஸ்’ ராதாவுக்கு குடிக்க கொஞ்சம் ‘ஜூஸ்’ கொடுத்தாள்.அந்த ‘ஜூஸை’ ராதா குடித்ததும் அவளுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.

அந்த லேடி டாக்டர் ராகவனைப் பார்த்து “இவங்க கட்டியின் கொஞ்ச சதையை ‘பயாப்ஸி டெஸ்டுக்கு’ அனுப்பி இருக்கோம்.’ரிஸல்ட்’ வர ஒரு நாள் பிடிக்கும்.நீங்க நாளைக்கு மறுபடியும் இவங்களே இங்கே இட்டுக் கிட்டு வாங்க” என்று சொன்னார்.

‘மாஸ்டர் செக் அப்’ பண்ணீன டாக்டர் “உங்க அப்பாவுக்கும்,அப்பாவுக்கும் ரத்த அழுத்த மாத்திரையும் சக்கரை மாத்திரையும் நான் எழுதித் தறேன்” என்று சொல்லி விட்டு மாத்திரைகளை பேரையும்,ஒரு நாளைக்கு எத்தனை தடவைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதையும் எழுதிக் கொடுத்து விட்டு “இந்த மாத்திரைங்க எல்லாம் இவர் உடம்ப்லே ஒழுங்கா வேலே செய்யணும்ன்னா, இவங்க சாப்பாட்டே நான் சொன்னா மாதிரி தான் சாப்பிடணும்.இல்லேன்னா மருந்து இவங்க உடம்ப் லே வேலேயே செய்யாது.நல்லா ஞாபகம் இருக்கட்டும்“என்று கண்டிப்பாக சொன்னார்.

ராகவன் “சா¢ சார்” என்று சொல்லி விட்டு,டாக்டர் சொன்ன ‘பீஸை’ ‘நர்ஸிங்க் ஹோமில்’ கட்டி விட்டு,அப்பாவையும்,அம்மாவையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு,வரும் வழியில் ரெண்டு பேருக்கும் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அழைத் துக் கொண்டு வந்தார்.

வீட்டுக்கு உள்ளே வந்ததும் ராகவன் சமையல் கார மாமியை கூப்பிட்டு “மாமி. இவா ரெண்டு பேருக்கும் சக்கரையே இல்லாத ‘காபி’யே ரெண்டு வேளையும் குடுங்கோ.ரெண்டு பேருக்கும் ஒரு வேளை தான் சாதம் போடுங்கோ.ராத்திரி வேளேலே கோதுமை சாதமோ,இல்லே சப்பாத்தியோப் பண்ணிக் குடுங்கோ”என்று சொன்னார்.

“சா¢,நீங்கோ சொன்னா மாதிரியே நான் பண்றேன்” என்று சொன்னாள் சமையல் கார மாமி.

ராகவன் அம்மா அப்பாவைப் பார்த்து “அப்பா,நீங்கோ ரெண்டு பேரும் எப்போ உங்க BPயையும் ‘சக்கரை லெவலையும்’ ‘செக் அப்’ பண்ணீண்டேள்” என்று கேட்டதும் சுந்தரம் “நாங்கோ BPயையும் ‘சக்கரை லெவலையும்’ ‘செக் அப்’ பண்ணிக்கவே இல்லே.இது தான் முதல் தடவையா நாங்க பண்ணீக்கறது” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

அப்பா சொன்னததைக் கேட்ட ராகவன் மிகவும் வருத்தப் பட்டான்.

“அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஐம்பது வயசு ஆனதும்,நீங்கோ ரெண்டு பேரும் உங்க ‘BP யையும் ‘சக்கரை லெவலையும்’ ‘செக் அப்’ பண்ணிண்டு வந்து இருக்கணும்.அப்படி பண்ணீண்டு வந்து இருந்தா, ‘BPம் ‘சக்கரை லெவலும்’ தெரிஞ்சு இருக்கும்.அந்த ரெண்டும் கம்மியா இருத்தப்ப, நீங்கோ ரெண்டு பேரும் மருந்து சாப்பிட்டுண்டு வந்து இருந்தா,உங்க ரெண்டு பேரோட ‘BPம்,’ சக்கரை ‘லெவலும்’ ‘கன்ட்ரோல்லே’ இருந்து இருக்கும்.ஆனா இப்போ அந்த ரெண்டும் ரொம்ப ஜாஸ்தியா இருக்கவே டாக்டர் உங்க ரெண்டு பேருக்கும்,அதிக ‘ஸ்ட்ரெண்த்தான’ மாத்திரைகளை எழுதிக் குடுத்து இருக்கார்” என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார் ராகவன்.

சாயங்காலம் மீராவும் பரமசிவமும் வீட்டுக்கு வந்ததும் ராகவன் ‘நர்ஸிங்க் ஹோமில்’’மாஸ்டர் செக் அப்’ பற்றின எல்லா விவரங்களை வருத்தத்துடன் சொன்னார்.மீராவும்,பரமசிவமும்,சரோஜாவும் வருத்தப் பட்டார்கள்.

அடுத்த நாள் காலையிலே சமையல் கார மாமி சுந்தரத்துக்கும்,ராதாவுக்கும் சக்கரையே இல்லா த ‘காபி’யைக் கொண்டு வந்து கொடுத்தாள்.இருவரும் அந்த ‘காபி’யை ஒரு வாய் குடித்து விட்டு ”இந்த காபியே யார் குடிப்பா.ஒரு வாய் குடிச்சதுக்கே அடி நாக்கு வரை கசப்பான கசப்பு இருந்துண்டு இருக்கு” என்று ‘கோரஸாக’ச் சொல்லி விட்டு அந்த ‘காபி’யை குடிக்கவில்லை.

அந்த காலத்தில் தஞ்சாவூர் பக்கத்தில் வாழ்ந்த பிராமண குடும்பங்கள் எல்லாம் ‘காபி’ப் பொடியின் ‘டிக்காக்ஷனை’ ‘ஸ்ட்ராங்காக’ இறக்கி,அதன் கசப்புப் போக நிறைய சக்கரையைப் போட்டு குடிப்பதைத் தான் வழக்கமாக வைத்துக் கொண்டு வந்தார்கள்.அந்த மாதிரி ‘காபியை’ மூன்று வேளையோ,இல்லை நான்கு வேளையோ குடித்து வந்து சதோஷப் பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அந்த ‘காபி’க்கு ‘கும்பகோணம் டிகி¡£ காபி’ என்றும் பெயர் வைத்து வைத்து இருந்தார்கள்.

தஞ்சாவூர் ஜில்லா பூராவும் நிறைய நெல் சாகுபடி அதிகமாக ஆகி வந்ததால் அவர்கள் வாழ் நாள் பூராவும் இரண்டு வேளையும் அரிசியால் ஆன சாப்பாட்டைத் தான் சாப்பீட்டு வந்தார்கள். அவர்கள் கோதுமையை கண்ணாலே கூட பார்த்தது இல்லை.

வாழ் நாளின் முக்கால் வாசி காலத்தை அப்படியே வாழ்ந்து வந்த சுந்தரத்தையும்,ராதாவையும் பார்த்து இன்று ராகவன்’ ‘காபி’யே சக்கரை இல்லாம் குடியுங்கோ’,’ஒரு வேளை மட்டும் சாதம் சாப்பி டுங்கோ’ என்று சொன்னால் அவர்கள் கேட்கவா போகிறார்கள்.அவர்கள் ராகவன் சொன்னதைக் கேட்காமல் சமையல் கார மாமியைக் கேட்டு ‘காபி’க்கு சக்கரையைப் போட்டுக் கொண்டு தான் வந்தார்கள்இரவில் சாதம் தான் சாப்பிட்டுக் கொண்டு வந்தார்கள்.

அடுத்த நாள் ராகவன் லீவு போட்டு விட்டு,பகவானை நன்றாக வேண்டிக் கொண்டு,அப்பா வைப் பார்த்து “அப்பா நீங்கோ ஆத்லேயே இருங்கோ.நான் அம்மாவை ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ அழை ச்சுண்டு போறேன்” என்று சொன்னதும் ”ராகவா,நானும் வறேன்” என்று பிடிவாதம் பிடித்து ராகவன் கூட ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’க் கிளம்பினார்.ராதா சமையல் கார மாமி இடம் சொல்லி விட்டு விட்டு, பிள்ளையுடன் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போனாள்.

ராகவனைப் பார்த்த அந்த லேடி டாக்டர் “ரொம்ப சாரி சார்.உங்க அம்மாவுக்கு ரெண்டு ‘ப்ரெஸ்ட்டிலும்’ ’கான்ஸர்’ வந்து இருக்கு.இவங்களுக்கு உடனே ‘கெமியோ தெராபி’ குடுக்க ஆரம்பி ச்சே ஆகணும்” என்று சொன்னதும் ராகவனும்,சுந்தரமும்,ராதாவும் ஆடிப் போய் விட்டார்கள்.

ராகவன் தன் மனதை கொஞ்சம் தேற்றிக் கொண்டு “டாக்டர்,நீங்கோ அம்மாவுக்கு உடனே ‘கெமியோ தெராபி’க் குடுக்க ஆரம்பியுகோ” என்று சொன்னதும்,அந்த லேடி டாக்டர் ராதாவை ‘கெமியோ தெராபி’ கொடுக்கும் அறைக்கு அழைத்துப் போய் ‘கெமியோ தெராபி’ வைத்தியத்தை பண்ணி விட்டு ராதாவை வெளியே கொண்டு வந்து விட்டாள்.
அந்த லேடி டாக்டர் ராகவனைப் பார்த்து ”இவங்ளுக்கு ‘கான்ஸர்’ அதிகமா இருக்கு.நீங்க இவங்களேதவறாம வாரத்துக்கு மூனு நாள் இங்கே இட்டுக் கிட்டு வந்து ‘கெமியோ தெராபி’ குடுத்துக் கிட்டுப் போங்க.இந்த வைத்தியம் இவங்களுக்கு ரொம்ப முக்கியம்” என்று சொன்னாள்.

உடனே ராகவன் “சா¢ டாக்டர் நான் என் அம்மாவை வாரத்லே மூனு நாள் இங்கே அழைச்சு ண்டு வறேன்“ என்று சொன்னார் ராகவன்.

டாக்டர் கிளம்பிப் போனதும் “என்ன வைத்தியம் இது.என் உடம்பு பூராவும் ஒரே எரிச்சல். கூடவே வலியும் அதிகமா இருந்தது.நான் எல்லாத்தையும் நான் பொறுத்துக் கொண்டு இருந்தேன்” என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னாள் ராதா.ராதா சொன்னதை கேட்ட சுந்தரமும்,ராகவனும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

ராகவன் அப்பாவையும். அம்மாவையும் ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தான்.

வீட்டுக்கு வந்து சமையல் கார மாமி ராதாவைப் பார்த்து “என்ன மாமி,அவா உங்களுக்கு வைத் தியம் பண்ணாளோ”என்று கேட்டதும்,“அதே ஏன் கேக்கறேள் மாமி.அந்த டாக்டர் குடுத்த வைத்தியம் என் உடம்பு பூராவும் எரிச்சலே குடுத்துது.கூடவே ரொம்ப வலியும் இருந்தது.நான் பொறுத்துண்டு இருந்தேன்” என்று சொல்லும் போது அவள் கண்களில் கன்ணீர்ர் வழிந்தது.தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் ராதா.

“அப்படியா கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே. என்ன வைத்தியமோ போங்கோ” என்று அலுத்துக் கொண்டாள் அந்த சமையல் கார மாமி.“இன்னிக்கு போறாதுண்னு,வாரத்லே மூனு நாளை க்கு இந்த எரிச்சலை நான் பட்டுண்டு வரணும்.அந்த டாக்டர் என் பிள்ளேக் கிட்டே ‘இவங்ளுக்கு ‘கான்ஸர்’ அதிகமா இருக்கு.இந்த வைத்தியம் ரொம்ப முக்கியம்’ன்னு வேறே சொல்லி இருக்கார். இந்த மாதிரி இன்னும் எத்தனை வாரத்துக்கு இந்த வைத்தியத்துக்குப் போயிண்டு வரணுமோ” என்று வெறுப்புடன் சொன்னாள் ராதா.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *