“சார்.. உங்க நண்பர் விஜயன் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலை நடந்த அன்று நீங்க அவர் வீட்டுக்குப் போயிருக்கீங்க உண்மைதானே?’ என்றார் இன்ஸ்பெக்டர் குமரன்.
“சார், நான் அவரைப் பார்க்கப் போனது செவ்வாய் கிழமை. அன்று அவரும் வீட்டில் இல்லை. வராண்டாவில் கிடந்த நாற்காலியில் கொஞ்சநேரம் குமுதம் படிச்சிட்டு வந்துட்டேன்… சார். மறுநாள்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அன்று நான் ஊரில் இல்லை…’ என்றா சதீஷ்.
“குமுதம் அங்கேயே கிடந்ததா?’
“இல்ல சார்.. வர்ற வழியில் ஹன்சிகா சிம்பு காதலா?ன்னு குமுதம் போஸ்டர் பார்த்தேன். அப்படியே வாங்கிட்டு வந்தேன் சார்.’
“அப்ப கொலை நடந்த நேரத்துல அங்கு இல்லங்கறீங்க..‘
“ஆமா சார்.’
“நான் சொல்றேன். நீங்க இருந்திருக்கீங்க. ஏன்னா, நம்ம ஊர்ல புதன்கிழமைதான் குமுதம் விற்பனைக்கு வருது. நீங்க புதுக் குமுதத்தை வாங்கி இருக்கீங்க. அப்ப செவ்வாய்க்கிழமைதான் வந்தேன்கறது திட்டமிட்ட பொய்!’ இன்ஸ்பெக்டர் குரலை உயர்த்தினார்.
அடுத்த நிமிடம் சதீஷின் கையில் விலங்கு ஏறியது.
– வசீகரன் (ஜனவரி 2014)