யார் தான் கொலையாளி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 22,905 
 
 

என் பேரு ஹரி.நான் தான் சென்னை சிட்டியோட நியூ கமிஸ்னர் என்றதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் சரமாரியாக கேள்விகள் கேட்க அதற்கு ஹரி பதில் கூறும் போதே முகத்தில் சட்டென தண்ணீர்துளிகள் பட்டன.

உடனே ஹரி, அம்மா…நா எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இப்படி என்ன எழுப்பாதனு என்றான்.

ஹரியின் அம்மா வேணியோ,இப்பிடியே கனவு கண்டுடே இரு, நீ இன்ஸ்பெக்டர் ஆயி ரெண்டு வருஷம் ஆச்சு,முதல்ல ஒரு கல்யாணம் பன்னு அப்புறம் கமிஷனர் ஆகலாம் என்றாள்.

அவனோ என் கனவு தான் முதல்ல அப்புறம் தான் கல்யாணம் என்றான்.

அப்படினா உனக்கு அறுவது வயசுல தான் கல்யாணம் நடக்கும் என நக்கலாக கூறினார் ஹரியின் தந்தை ஆறுமுகம். ஹரி அதனை கண்டுகொள்ளவில்லை.

ஹரியின் செல்போன் மணி ஒலித்ததும் அவன் எடுத்து,சொல்லுங்க எஸ்.ஐ. முரளி என்றதும், அவரோ சார் இங்க ஆர்ட்ஸ் காலேஜ் ஹாஸ்டெல் மாடி மேல இருந்து ஒரு பொண்ணு குதிச்சு இறந்துடா, நீங்க உடனே வாங்க என்றான்.

ஹரியும் ஹாஸ்டெலுக்கு போனான். அங்கு இருந்த முரளி,சார் நா விசாரிக்க வரைக்கும் அந்த பொண்ணு சத்யாக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு தான் அவ நண்பர்கள் சொல்லுறாங்க,,அப்பறம் ஏன் அவ மாடி மேல இருந்து குதிச்சானு தெரியல என்றார்.

ஹரியோ அவளுக்கு நெருங்கிய தோழி யாராவது இருக்காங்கலா, என்று கேட்க, முரளியும் ஆமா சார் ஒரு பொண்ணு இருக்கா,அவ பேரு திவ்யா,பெரிய தொழிலதிபர் கரண் சார்ரோட பொண்ணு,அவ கிட்டையும் விசாரிச்சேன்,

இறந்த சத்யா வந்து ஒரு வாரமா ஏதோ டென்ஷன் இருந்தாலாம், என்னனு தெரியல அப்பிடினு சொன்னாங்க. அந்த திவ்யாவும் சத்தியாவும் ரொம்ப குலோஸ் சார் நா விசாரித்த வரைக்கும்,உடனே ஹரி அவ கிட்ட கூட சொல்லனா ஏதோ ஒரு பெரிய பிரச்சனை இருக்கு,இல்லனா திவ்யா நம்ம கிட்ட ஏதோ மறைக்குறா என்றான்.

சார், மே பி இது தற்கொலையா கூட இருக்கலாம் அவ அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த பொண்ணு, அவ யார் கிட்டயும் அவ்வளவா பேச மாட்டலாம் திவ்யா கூட மட்டும் தான் பேசுவாலாம்,சோ ஏதோ மனஅழுத்தம் இருந்து இருக்கலாம் என்றார் முரளி.இருக்கலாம்,மே பி கொலை யா கூட இருக்கலாம் என்றார் ஹரி.

ஹரியின் போனுக்கு அழைப்பு வர அதை எடுத்ததும் அதிர்ந்தான்.

உடனே முரளியிடம் இது கொலை என்றான் ஹரி.சார் என்ன சொல்ரீங்க, ஆமா முரளி, சத்யா உடம்பு முழுக்க விஷம் பரவி இருக்காம்,சார் சாகனும்னு முடிவு பண்ணவ, விஷம் குடிச்ச அப்புறம் ஏன் மாடி மேல இருந்து குதிக்கணும் என்றார் முரளி, ஹரியோ இது கொலை, அவளா குதிச்சலா இல்ல மாடிமேல இருந்து யாராவது தள்ளி விட்டாங்கலானு தெரியணும் என்றார்.

சார் வாட்ச்மேன் தான் சத்யா மாடிமேல இருந்து குதிச்சத பார்த்து இருக்காரு, அவர் கிட்ட நா விசாரிச்சப்ப மாடிமேல சத்யா மட்டும் தான் இருந்தானு சொன்னாரு,இது வீக் எண்ட் நால ஹாஸ்டெல்ல பாதி பேரு தான் இருக்காங்க, இங்க இருக்க பொண்ணுகளும் அப்பாவி மாரி தான் தெரியுது, யார் தான் சார் சத்யாவ தள்ளிவிட்டு இருப்பாங்க என்றார். உடனே ஹரி வாச்மேனிடம் சென்று சத்யா எப்ப குதிச்சாங்க அப்ப டைம் என்ன இருக்கும் என்றார். அவரோ ஒரு 9.45 இருக்கும் சார், நா கூட சும்மா தான் அந்த பொண்ணு நிக்குதுன்னு நினைச்சேன், திடீர்னு குதிச்சுருச்சுறுச்சு, அவங்க அன்னைக்கு வெளிய என்கையாவது போனங்கலா என்றதும், ஆமா சார் 9 மணிக்கு எங்கயோ வேகமா கிளம்பி போனாங்க என்றான் வாட்ச்மேன்.சரி நீ போயி சத்யா குதிக்கும் போது எப்பிடி நின்னானு போயி நில்லு என்றார். அவரும் போயி நின்றார்.ஹரியும் ஹாஸ்டெல்ல எல்லா பொண்ணுங்க கிட்ட விசாரனை நடத்ததுனா ல சத்யா ரெம்ப தைரியமான பொண்ணுன்னு அவருக்கு தெரிச்சது.

உடனே ஹரி கொலையாளி சிக்கிட்டான் முரளி என்றார்… அவ அந்த டைம் ல யாரையோ பாத்து பேசி இருக்கா அவங்க தான் விஷம் குடுத்து இருக்காங்க,,,,என்றார்.

உடனே முரளி அவ யாரை தான் பாக்க போயி இருப்பா சார்.வேர யாரை,,,திவ்யாவ தான் என்றார் ஹரி.எப்பிடி சார் சொல்ரீங்க,,,அவ அதிகம் பேசுறது திவ்யாகூட தான்.ஏன் திவ்யா நம்ம கிட்ட பொய் கூட சொல்லி இருக்க கூடாதா என்றார் ஹரி.நீ போயி அந்த டைம்ல திவ்யா வீட்டுல இருக்காலனு அவங்க வீட்டு சிசிடிவி பாரு நா சத்யா வளர்ந்த அனாதை ஆசிரமம் போயி சில தகவல் ல சேத்து சேகரிக்கிறேன், சத்யா எப்பிடி பட்ட பொண்ணுன்னு என்றார் ஹரி.

முரளியோ சிசிடிவி பாத்துவிட்டு ஹரிக்கு போன் பண்ணி அனைத்தையும் கூற,உடனே ஹரியோ இங்க எனக்கும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கிடச்சு இருக்கு என்றார்.மேலும் பத்திரிகையாளர்களை திவ்யா வீட்டிற்கு வர வைத்தார்,உடனே ஹரி இந்த சத்யா கொலை வழக்கில் ஒரு பெரிய சதி உள்ளது என்றார்.அனைத்து பத்திரிகையாளர்களும் சார் அப்ப இது தற்கொலை இல்லயா,,என்றனர் ஹரியோ இது திட்ட மிட்ட கொலை என்றார்.அப்ப யார் தான் சார் கொலையாளி என்றதும், ஹரி அது வந்து, திவ்யா, அப்பா என்றார்.அனைவரும் அதிர்ந்தனர்.சார் உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு என்றதும் ஹரியோ அவரோட சட்ட விரோதமான செயல் ஒண்ணு சத்யாக்கு தெரிய வர, அவரு சத்யாவ கரெக்ட்டா 9.15 மணிக்கு காபி ஷாப் வர வைச்சு அதில் விஷம் குடுத்து கொன்னு இருக்காரு.

அதுக்கான சாட்சி அவங்க காபி ஷாப் ல மீட் பண்ணப்போ அவர் விஷம் கலக்குரத கேமரா நல்லா கவனிச்சு இருக்கு.அவர் சத்யா வ மிரட்டி இருக்காரு,நா சட்டவிரோதமா போதைப்பொருள் விக்கிற விஷயத்தை வெளிய சொன்ன உன் நெருங்கிய தோழி திவ்யாவை கொன்னுடுவேணு மிரட்டி இருக்காரு.

அங்கு இருந்தவர்கள் சார் பெத்த பொண்ண யாராவது கொல்லுவாங்களா என்றதும்,

ஹரியோ திவ்யா தத்து பொண்ணு, சத்யா வளந்த அதே ஆசிரமத்தில் இருந்து தான் தத்து எடுத்து இருக்காங்க என்றார்.மேலும்

சத்தியாவும் திவ்யாவும் டுவின்ஸ், கரண் திவ்யாவ மட்டும் தத்து எடுத்து வளத்து இருக்காரு, இது யாருக்கும் தெரியாது.ஏன் திவ்யாக்கு கூட இப்ப வரை தெரியாது.சத்யா கிட்ட நீ என்ன பத்தி சொன்ன நா உன் தங்கச்சிய கொன்னுடுவேணு சொல்லி இருக்காரு. சோ இதை சொல்லி சத்யா வாய அடைச்சு டாரு எங்க அவ வெளிய சொல்லுவாலோனு பயந்து விஷம் வச்சு கொல்ல முடிவு பண்ணி காபி ல விஷம் கலக்கி குடுத்துடாரு,நாங்க திவ்யா மேல சந்தேகப்பட்டு அவங்க வீட்டு சிசிடிவி பாத்த போது தான் சரியா 9 மணிக்கு கரண் வெளிய போனது தெரிய வந்தது.அவர் கார் ட்ரைவர் மூலம் அவர் எப்பவும் 10 மணிக்கு தான் ஆஃபீஸ் போவாரு தெரிய வந்துச்சு,அன்னைக்கு மட்டும் 9 மணிக்கு, காபி ஷாப் போனாரு னு டிரைவர் சொன்னான்.சோ அந்த காபி போயி செக் பண்ணோம்,குற்றவாளி சிக்கிட்டான்.

அப்புறம் ஏன் சார் அவங்க மாடி மேல இருந்து குதிக்கணும் என்றனர்.

ஹரியோ, கரண் கொல்ல முயற்சி பண்ணல நாளும் அவங்க செத்து இருப்பாங்க என்றார்.ஏன்னா அவங்க திவ்யாட்டா கரண்னோட சட்டவிரோத செயல் பத்தி சொல்ல திவ்யாவுக்கு மெயில் பண்ண போயி அதை சென்ட் பண்ண மனசு வராம அவங்க டிராவ்ட் ல சேவ் பண்ணி வச்சுட்டு, நம்மனால திவ்யாக்கு ஏதும் ஆக கூடாதுன்னு தற்கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்காங்க.திவ்யா மூலம் தெரிய வந்தது சத்யா மெயில் மூலம் தான் எல்லா விஷயத்தையும் கன்வே பண்ணுவாங்கன்னு சோ திவ்யா மூலம் சத்யா மெயில் ஐ டி வாங்கி செக் பண்ண போது ட்ராவ்ட் ல இருந்த மெசேஜ் படிச்சோம்.

திவ்யா மாடி மேல இருந்து குதிப்பானு கரண் யோசிச்சு கூட பாக்கலா,திவ்யாக்கும் அவ விஷம் சாப்பிட்டு இருக்கானு தெரியல. நீங்க நல்லா மாட்டிக்கிட்டிங்க கரண் என்று கூறி, ஹரி கரணை கைது செய்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *