நரகத்தில் சந்திப்போம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 9,783 
 
 

கூலிக்கு ஆட்களை கொலை செய்யும் இரண்டு நண்பர்கள் ஒருவனை கொலை செய்வதற்காக. பல மாடிகட்டிடத்தின் உச்சியில் படுத்திருந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் வெகு சில தடவைகள் மட்டுமே சந்தித்து கொண்டனர். இப்படி என்றாவது ஒரு நாள் சந்தித்துக் கொண்டால் தான் உண்டு. அதிகாலையிலேயே வந்து படுத்து விட்டார்கள். சரியாக 10:00 மணிக்கு அந்த வழியாக செல்லும் காரில் உள்ள பெரிய மனிதரை சுட்டுக் கொள்ள வேண்டும். மணி 9:59. தூரத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. ஒருவனுடைய பைனா குலரில் தெரிந்தது. நெருங்கி வந்தது. டிரிகரை அழுத்தினான். கார் ஒரு யு டர்ன் அடித்து நின்றது

சிறிது நேரத்துக்கு முன் அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடால்

ராகவன் : எத்தன வருஷமா இந்த தொழில்ல இருக்க

சிவா : 7

ராகவன் : நான் 10 வருஷமா இருக்கேன். யாரையாவது காதலிச்சுருக்கியா

சிவா : (புரியாத சிரிப்பு + லுக் )

ராகவன் : நான் மொதல்ல யார கொன்னேன் தெரியுமா. நான் காதலிச்ச பொண்னோட புருஷன……,,அதுக்கப்புறம் இதுவே தொழிலா போயிடுச்சு. நீ எப்படி?

சுpவா : எனக்கு குறி பாத்து சுடுறுதுன்னா ரொம்ப புடிக்கும்

ரகவன் : (ஆச்சர்யப் பார்வை)

சிவா : எத்தனை நாளைக்கு பறவைகளையே சுடுறது. மனிதர்கள சுடம்; போது தான் ஜாலியா இருக்கும்.

ராகவன் : (மிரட்சியான சிரிப்பு) சிரிது நேர மௌணம்

கார் வருகிறது சிவா டிரிகரை அழுத்துகிறான்.

சில மாதங்களுக்கு பிறகு

அதே போன்றதொரு உயரமாக கட்டிடத்தில் இருவரும் குறிபார்த்தபடி படுத்திருந்ததார்கள். ராகவன் எதையோ கேட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தான்.

ராகவன் : இது என்னோட நூறாவது அட்டம்ட்…,, உனக்கு

சிவா : 1432

ராகவன் : (ஆச்சர்யமாக பார்த்தான்) இன்னைக்கு நான் சுடுறேன்

சிவா : சரி

சிறிது நேரம் குறிபார்த்து கொண்டிருந்தார்கள். கார் தூரத்தில் வந்து கொண்டிருந்தது, ராகவனை முந்தி கொண்டு சிவா சுட்டு விட்டான். வானத்தை பார்த்தவாறு மல்லாந்து படுத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தான். ராகவன் சிறிது நேரம் கோபமாக பார்த்தான். சிவாவின் சிரிப்பு அடங்கி ராகவனை கவனித்தான் உன்னிப்பாக. …, ராகவன் இப்பொழுது மென்மையாக சிரித்தான் . அதே அழுத்தமான பார்வையுடன்.

2 மாதங்களுக்குப் பிறகு

மற்றுமொரு மாடியின் உச்சி இருவரும் சிக்கலான ஒரு இடத்தில் தொங்கி கொண்டு குறிபார்த்து கொண்டிருந்தார்கள்.

சிவா : இந்த முறை உனக்கு நான் வாய்ப்பு தர்றேன்

ராகவன் : (உள்முக சிந்தனையுடன் தீர்க்கமாக பார்த்தான்)

நேரம் நெருங்கியது . கார் தூரத்தில் வந்தது . ராகவன் சுடவில்லை. சிவா குறிபார்த்து கொண்டே சொன்னான்

சுpவா : ஐ ஆம் சாரி

கூறிவிட்டு சுட்டான். சுட்ட வேகத்தில் தடுமாறி விழுந்தான். எக்குத்தப்பாக எதியுலோ தொங்கியபடி ராகவனை உதவி வேண்டி நோக்கினான்.

ராகவன் உள்முக யோசனையுடன். தொங்கிக் கொண்டிருக்கும் சிவா முன் குத்துகாலிட்டு அமர்ந்து. கூறலானான்.

ராகவன் : போன வாரம் என்னோட பழைய காதலிய பாத்தேன்… ஒரு பிராஸ்டியூட் பிளேஸ்ல…… எல்லாரும் கைவிட்டாங்க அவள… காரணம் நான் தான்……. தொன்னூத்தி ஒன்பதோட நிறுத்திரலாம்னு பாக்குறேன்.

சிவா கதறினான் . துடித்தான் . தொங்கிக் கொண்டிருந்த இடத்தின் பிடி தளர்ந்தது

ராகவன் : நாம ரெண்டு பேரும் நரகத்துல சந்திப்போம்.

எழுந்து திரும்பி பார்க்காமல் நடந்து சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *