அந்த இரவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 19,850 
 
 

மூன்று வருடங்களாக அதுல்யாவும், ஹரிஸ்யும் சிறந்த காதலர்கள். வீட்டிற்க்கு தெரியாமல் தான் காதலிக்கிறார்கள். இருப்பினும் இரு குடும்பமும் நன்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் போல் பழகுபவர்கள். இதனால் வீட்டில் இவர்களின் காதல் தெரிந்தாலும் கல்யாணத்திற்கு அவ்வளவுவாக பிரச்சனைகள் ஏதும் வராது. அதனால் பயமில்லை.

ஒருநாள் அதுல்யாவுக்கு கல்லூரி முடிந்தது, அவளை வீட்டிற்க்கு அழைத்து வர கல்லூரிக்கு வந்து இருந்தான் ஹரிஸ்.

4 மணி முதல் 5மணி வரை காத்திருந்து அதுல்யா வெளியே வந்தாள்.

ஹரிஸ், “ஏ இவ்வளவு நேரம்”?

அதுல்யா, “அட ஒன்னுமில்ல பா, லேப் கிளாஸ் அதா, சாரி லேட் ஆயிருச்சு”.

ஹரிஸ், “சரி போலாம்”. என்று கூறி பைக்கை முறுக்கி ஓட்ட ஆரம்பித்தான்.

அவர்கள் இருவரும் சாப்பிடுவதற்கு ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.

அதுல்யா, “என்ன ஆச்சு ஏ மூஞ்சிய இப்படி வச்சு இருக்க ஏதாது கோவமா? என்று கேட்டாள்.

ஹரிஸ், “அப்படி எல்லா ஒன்னு இல்ல”,

அதுல்யா, “அத உன் மூஞ்சியப் பாத்தலே தெரியுது, கோவமா இருக்கன்னு, ஏ என்ன ஆச்சு,நா லேட்டா வந்தநாலையா?

ஹரிஸ், “அத லேட் ஆகும்ன்னு தெரியுமல்ல, போன் பன்னி சொல்ல வேண்டியது தான? நா லேட்டாவது வந்து இருப்ப, என் ஒர்க்க முடிச்சுட்டு,”

அதுல்யா, “சாரி பா, நீ எப்பவும்மே லேட்டாதான வருவ அத நினைச்சு ஒன்னுமே சொல்லல”

ஹரிஸ், “ஓ நா எப்பவும் லேட்டா தா வரல்ல” சரி விடு, இனி அதும் வரல”.

இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் சண்டைப் போட்டுக்கொண்டு, பாதி சாப்பிட்டு கோபத்தில் பாதி சாப்பிடமால் கிளம்பினர்.

இரவு 8 ஆகி விட்டது. அதுல்யா ஊர்க்கு பாதி தூரம் வந்தனர்.

அப்போது தீடிரென்று பைக் நின்று விட்டது. ஹரிஸ் என்னவென்று பார்த்தான், பைக்கில் பெட்ரோல் இல்லை, இவர்கள் சண்டையில் பெட்ரோல் அடிக்க மறந்து விட்டான்.

ஹரிஸ், “போச்சு இப்ப உன்கூட சண்ட போட்டு பெட்ரோல் அடிக்கல, இனி எப்படி வீட்டுக்கு போக” என்று அதுல்யாவை கத்தினான்.

அதுல்யா, “ஓ என்னால தா எல்லாம்மா, சரி நா போய்க்கற விடு” இந்த நைட்ல யாருமில்லா காட்டுக்குள்ள வந்து வண்டிய நிறுத்தி இருக்க, இங்க வந்து சொல்லற பெட்ரோல் அடிக்கலன்னு, விடிஞ்சா நியூ இயர் அதுநால உனக்கு நா கிப்ட் வாங்க போன ஓகே வா, இந்தா ன்னு சொல்லி, தன் பேக்கில் இருந்த கிப்டை எடுத்து தந்தாள்.

ஹரிஸ், அத பிரிச்சு பார்த்தான். அது அவன் முகம் போட்ட ஒரு டீ கப், அழகாக இருந்தது.

ஹரிஸ், “ஐய்யோ சாரி டீ செல்லம், லவ் யூ டீ” ன்னு சொல்லி அவள் பக்கம் வருகிறான்.

அப்போது தீடிரென அங்கிருந்த புதருக்கு பின்னால் குடித்து கொண்டு இருந்த இருவர் வெளியே வந்தனர். அவர்கள் போதையில் இருந்தார்கள்.

ஹரிஸ்யும் அதுல்யாவும் பயந்தனர்.

ஒருவன், “டேய் யாரு நீங்க இங்க என்ன பன்னிரீங்க”?

ஹரிஸ், “வண்டில பெட்ரோல் இல்ல, அதா இங்க நின்னோம்”, என்று தைரியாம பதில் சொன்னான்.

ஒருவன், “எந்த ஊரு நீங்க? உங்க பேரு என்ன?

ஹரிஸ், நா இங்க தா பக்கத்து ஊரு,

மற்றொருவன், இவ யாரு உன் ஆள? வயசு என்ன? என்று கேட்டு அவள் முகத்தை பார்க்கிறான்.

ஹரிஸ், ஆமா என்னோட ஆளு தா, நாங்க லவ் பன்றோம், எங்க வீட்டுக்கு எல்லா தெரியும்.

ஒருவன், “ஓ அப்படியா” என்று கூறி, ஹரிஸ் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி விட்டனர்.

அதுல்யாவை இருவரும் பிடித்து அவளை கற்பழிக்கப் பார்த்தனர்.

அதுல்யா, “ஹரிஸ், ஹரிஸ், டேய் என்ன விடுங்க டா” என்று கத்துகிறாள்.

ஹரிஸ் கீழே இருந்த கல்லை எடுத்து ஒருவன் தலையில் போட்டு கீழே தள்ளி விட்டான்.

மற்றொருவன், அதுல்யா வயிற்றைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருந்தான், அவன் கை, கண்ட இடங்களில் அவளைத் தொட முயற்ச்சித்தான். அவள் அவனைத் தடுத்துக்கொண்டே இருந்தாள்.

ஹரிஸ் அவன் பின்னாடி இருந்து கழுத்தை பிடித்து தொண்டை நசுக்கினான்,

ஒருபக்கம் அதுல்யா, அவனைத் தடுத்துக்கொண்டு இருக்க, ஒருபக்கம் ஹரிஸ் அவன் கழுத்தை நெறித்து கொண்டு இருந்தான்.

சிறிது நேர போராட்டதிற்க்கு, பிறகு மூவரும் நின்றனர்.

அதுல்யா “நீ எல்லா மனுசனா” என்று அவனைப் பார்த்துக் கேட்க அவன் மறுபடியும் அவளைத் தொட வந்தான்.

ஹரிஸ் அங்கு இருந்த கட்டை எடுத்து அடித்து அதுல்யாவைக் கூட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினார்கள்.

கொஞ்ச தூரத்திற்க்கு சென்று, ஒருவரிடம் போன் வாங்கி, அவன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து, அவன் பைக் இருக்கும் இடத்திற்க்கு வரச் சொன்னான். “ஒருவன் என்னிடம் வம்பு பன்றான்” என்று மாற்றி சொன்னான்.

அதுல்யாவை ஒரு தெரிந்த ஆட்டோவில் வைத்து அவளை வீட்டுக்கு அனுப்பினான்.

அவன் நண்பர்கள் வந்ததும், அங்கு சென்றுப் பார்த்தனர், அங்கு யாருமில்லை, நல்லா தேடிப்பார்த்தனர். அவனைக் காணவில்லை. அவன் யாரு என்று கூட ஹரிஸ்க்கு தெரியாது. ஹரிஸ்யும், அவன் நண்பர்களும் சிறிது நேரத்தில் அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டனர்.

சில மாதங்கள் கழித்து, ஹரிஸ்யும் அதுல்யாவும் திருமணம் செய்துக் கொண்டார்கள்.

ஆனால் அந்த இரவு யாரிடமும் சொல்ல முடியாத இரவாக மாறி விட்டது. இப்போதும் கூட அதுல்யாவுக்கு இரவில் ஹரிஸ்யுடன் சென்றால், அவளுக்கு அந்த இரவு ஞாபகம் வருகிறது.

கரு. பெண்கள் என்றுமே பாதுக்காக்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *