கல்லூரி வளாகம்… பட்டம்பூசிகளாய் மாணவ மாணவியரின் கூட்டம்…யமஹாவில் வேகமாய் வந்து அரை வட்டம் அடித்து நிறுத்தினான் திலிப். கண்களில் கூலிங் கிளாஸ் கண்ணாடியும், வாயில் பபுள் கம் மென்று கொண்டு ஸ்டைலாய் இறங்கியவனை ரசனையுடன் பார்த்தது ஒரு பெண்கள் கூட்டம். அலட்சிய சிரிப்பொன்றை சிதரியவாறு நடந்தான் அவன்.
பேரழகுடன் ஜீன்ஸ் ஷார்ட் டாப்சுமாய் கவர்ச்சியுடன் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்ததும் கால்கள் சடன் பிரேக் போடா நின்றான் திலிப்.
‘வாவ் என்ன ஒரு அழகு… இப்படி ஒரு அழகை நான் இது வரை பார்த்ததில்லை….’ என்றவனை,
‘ரியல்லி…..’ என அழகுடன் நிமிர்ந்தாள் அவள்.
‘ஹாய் ஏஞ்சல் ….. ஐ எம் திலிப்’
‘ஐ எம் நிஷா’ என குயில் கூவியது’
‘என்ன ஒரு அழகான குரல்’ என பாராட்டினான் அவன்.
இப்படித்தான் அறிமுகமாகி காதலை வளர்த்தது அந்த ஜோடி.
ஒரு நாள்,
‘ஏஞ்சல் … போர் அடிக்குதுமா… வா மூவி போகலாம்’
‘என்ன மூவி டியர்?’
‘ஓடாத படம் தான்’
கலகலவென சிரித்தவாறு நகர்ந்தனர்.
படம் பார்த்து வெளி வந்ததும்,
‘ஹேய்… நீ ரொம்ப நாட்டி…’ என்று செல்லமாய் சிணுங்கினாள் நிஷா.
‘யூ ஆர் மை பியுட்டி’ என வழிந்தான் அவன்.
ஒரு வாரம் இனிதே ஓட,
‘நாளைக்கு நைட் என்ன ப்ரோக்ராம்?’ என்றவளிடம்,
‘பப் போகலாம்’
‘சோ நைஸ் …’ என அவனை கட்டி முத்தமிட்டாள் அவள்.
குடி என்ன? கும்மாளம் என்ன? ஸ்வீட் ஹர்ட்டும், ஏஞ்சலும் தண்ணீர் பட்ட பாடுதான்.
‘ஹேய் ஏஞ்சல், நாம மீட் பண்ணி ஒரு மாசம் ஆகுது’ குதூகலித்தான் திலிப்.
‘ம்ம்…’ சுரத்தில்லாமல் சொன்னாள் நிஷா.
‘ஹேய் என்ன ஆச்சு டா?’ பதரியவனிடம்,
‘வீட்ல மாப்ள பார்க்கறாங்க… என்னை மறந்திடு’
‘ ஒ நோ’
‘சாரி திலிப்…. குட் பய்’
அவள் சென்று விட … அவள் சென்ற பாதையை வெரித்திருந்தான் திலிப்.
ஒரு வாரம் சென்றிருக்கும்…..
நிஷாவை கோபமாய் முறைத்தாள் அவளது தோழி சைனி,
‘ஏண்டி பொய் சொன்ன?’
‘பின்ன என்னடி? இந்த மூஞ்சிய எத்தன நாள் தான் பார்க்கறது… போர் அடிச்சது … ஆள மாத்திட்டேன்’ கூலாய் சொன்னாள் நிஷா.
‘பாவம்டி…திலிப் தாடியோட தேவதாசா சுத்துறான்’
‘நீ வேனா கம்பெனி குடேன்’ சிரித்தவாறே சொன்னவள் பார்வை மறுபுறம் ஓட,
‘ஹேய் நிதின் நின்னுடா நானும் வரேன்…’ ஓடிய தோழியை வெறுப்புடன் பார்த்தாள் சைனி.
மேலும் ஒரு வாரம் ஓட…..
அதே கல்லூரி வளாகம்…
‘வாவ் என்ன ஒரு அழகு… இப்படி ஒரு அழகை நான் இது வரை பார்த்ததில்லை….’ என்றவனை,
‘ரியல்லி…..’ என அழகுடன் நிமிர்ந்தாள் அவள்.
‘ஹாய் ஏஞ்சல் ….. ஐ எம் திலிப்’
‘ஐ எம் ரேணு’ என குயில் கூவியது’